Aval throwpathi alla – 28

Aval throwpathi alla – 28

விபரீதங்களுக்கு அடிகோலியது

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை கூட திரும்ப பெறலாம். ஆனால் நாவிலிருந்து வெளிவந்த சொல்லை திரும்ப பெற முடியாது என்பார்கள். ஆதலாலயே எது பேசினாலும் சிந்தித்து பேச வேண்டும். ஆனால் அந்த பழக்கமே அரவிந்திடம் இல்லை போலும்.

அவன் சாரதியிடம் பேசியவற்றையெல்லாம் இப்போது நினைவுகூர்ந்து பதறி போயிருந்தான். தேவையில்லாமல் அவனிடம் வாயை கொடுத்திருக்க கூடாது என்று சிந்தித்து கொண்டிருந்தவனுக்கு அப்போதிருந்த தலைவலி கூட உணர்வற்று மறுத்து போயிருந்தது.

குடிபோதையில் செய்யும் சிற்சில காரியங்கள் அர்த்தமற்றதாய் இருக்கும். போதை தெளிந்து யோசிக்கும் போதுதான் அவர்கள் செய்த செயல் முட்டாளத்தனத்தின் உச்சமென்பது புரியும். ஆனால் அரவிந்த் உதிர்த்த வார்த்தை அவனுக்கும் மட்டுமே எதிர்வினையாய் முடியபோவதில்லையே!
அதன் வீரியம் வேறு சில விபரீதங்களுக்கும் அடிகோலியது.

“போஃனை எடுக்க இவ்வளவு நேரமாடி உனக்கு… என் தூக்கத்தை கெடுத்திட்டு நீ மட்டும் நிம்மதியா தூங்கிற போல”

ஆவேசமாய் அரவிந்த் சீற சாரதி அவன் குரலை கண்டறிந்த மாத்திரத்தில் வீராவை பார்க்க,

அவளோ அயர்ந்த உறக்கத்தில் இருந்தாள். நேரமோ நடுநிசியை தாண்டிவிட்டதை சுவற்றில் தொங்கி கொண்டிருந்த கடிகாரம் உறுதிப்படுத்தியது.

“ஏன்டி ஸைலன்ட்டா இருக்கு ? பேசுடி… என்னை லவ் பன்றதில உனக்கு என்னதான்டி பிரச்சனை?” என்று அரவிந்த் கோபமாய் கத்த,

சாரதிக்கு அவனின் பேச்சை கேட்க கேட்க சிரிப்புதான் வந்தது.

சத்தமில்லாமல் உள்ளூர நகைத்து கொண்டவன் அழைப்பை துண்டித்துவிட எண்ணிய மாத்திரத்தில் அரவிந்த் விடாமல்,

“பேச மாட்டல… இருக்கட்டும்… நேர்ல வந்து உன்னை என்ன பன்றேன்னு பாருடி” என்று மிரட்டலாய சொல்ல,

சாரதியின் குரல் அவனை மீறிகொண்டு வெளிவந்தது வீராவிற்காக!

“என்னடா பண்ணுவ?”

சாரதியின் குரலை கேட்ட மாத்திரத்தில் அரவிந்த் வெலவெலத்து போய் தன் பேசியை எடுத்து ஒரு நொடி எண்ணை சரி பார்த்தான்.

“பேசு தம்பி… ஏன் ஸைலன்ட்டாயிட்ட… என் குரலை உனக்கு அடையாளம் தெரியல” எகத்தாளமாய் சாரதி கேட்கவும் அரவிந்திற்கு மேலும் பதட்டமானது.

“நீ நீ எப்படி வீரா போஃன்ல… இது அவ அவ போ… ன்தானே” தட்டுதடுமாறி அரவிந்த் கேட்கவும்,

“போஃன் அவளுது… ஆனா குரல் என்து… தி ஒன் அன் ஒன்லி சாரதி ஸ்பீக்கிங்” என்று கர்வமாய் சொல்லி சாரதி சிரிக்க,

அரவிந்திற்கு சாரதியின் வார்த்தைகள் சற்றே நாரசமாய் கேட்டது. அப்போது அரவிந்த் ஏற்றியிருந்த போதையெல்லாம் மொத்தமாய் இறங்கிவிட,

“நீ எப்படிறா வீரா போஃன்ல?!” பல்லை கடித்து கொண்டு கேட்டான்.

“ப்ச்… அவ தூங்கிறா… அதான் பாப்பா டிஸ்டர்ப் ஆக வேண்டாம்னு நானே எடுத்தேன்” என்று சாரதி அவனுக்கே உரித்தான கிண்டல் பாணியில் பதிலுரைக்க

அரவிந்தின் மண்டை சூடேறியது.

அவனின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் எங்கங்கோ பயணிக்க,

“அவ எப்படிறா உன் கூட… இல்ல… இல்ல வாய்ப்பே இல்ல… வீரா அந்த மாதிரியான பொண்ணு இல்ல… ஏதோ தப்பு இருக்கு… நீ ஏதோ ப்ளேன் பண்ணிட்டிருக்க” அரவிந்த் பதறி துடிக்க,

சாரதி கலகலவென சிரித்தான்.

“சிரிக்காதே! வீராவோட போஃன் எப்படிறா உன்கிட்ட… அவ எங்கே… நான் அவகிட்ட பேசனும்” என்றான் அரவிந்த் கட்டுக்கடங்கா வெறியோடு!

“நான்தான் சொல்றேன்ல… அவ தூங்கிறான்னு… ஏன்டா நடுராத்திரில போஃன் பண்ணி இப்படி கழுத்து அறுத்துட்டிருக்க… போஃனை வையுடா”

“போஃனை வைக்காதே… எனக்கு வீராகிட்ட பேசனும்… அவ இப்போ எங்க இருக்கா?”

“ஹ்ம்ம்… என் பாக்கெட்ல இருக்க… வந்து எடுத்துக்கோ” என்றான் சாரதி எள்ளிநகைத்தபடி!

அரவிந்தின் டென்ஷன் கூடி கொண்டே போக, “வேண்டாம் சாரதி! என்னை டென்ஷன்படுத்தாதே… வீராவோட போஃன் எப்படி உன் கையில… அவளை உனக்கு எப்படி தெரியும்” என்று அழுத்தமாய் கேட்கவும்

“வீராவோட போஃனா ? நான்ஸென்ஸ்… இது நான் அவளுக்கு தந்த போஃன்… அவ என்கிட்டதான் டிரைவரா வேலை பார்க்கிறா… போதுமா?!” என்று சாரதி சொல்லி முடித்துவிட்டு, “இப்பையாச்சும் போஃனை வைக்கிறியா?!” என்றான்.

உடனே அரவிந்த் மறுபுறத்தில் சிரிக்க தொடங்க சாரதி புரியாமல் குழம்ப அவன் மேலும் சிரித்து கொண்டே,

“ஓ!! அப்ப இத்தனை நாளா அவ உன்னைதான் முட்டாளாக்கிட்டு இருந்தாளா?” என்க,

இப்போது எதிர்புறத்தில் சாரதிக்கு கடுப்பேறியது.

அரவிந்த் மேலும் விடாமல், “அவ பொண்ணுன்னு கூட தெரியாம எப்படிறா இத்தனை நாள் அவளை டிரைவரா வைச்சிருந்த… அவ்வளவு பெரிய முட்டாளாடா நீ… அப்புறம் பெரிய அப்பாடக்கர் மாதிரி பேசுவ… உனக்கு பிஸ்னஸ்லதான் மூளை வேலை செய்யுமா?!.. மத்த விஷயத்தில எல்லாம் டம்மிதானா?” என்று எள்ளலாய் கேட்டு நகைத்தான்.

சாரதி கடுப்பாய்,
“ஏஏ போதும் நிறுத்துடா… உன் மூளை எப்பவுமே டம்மிதான்டா… அதான் நீ பிஸ்ன்ஸ்லயும் வேஸ்ட்டா இருக்கு… லவ் பன்றதுலயும் படு வொர்ஸ்டா இருக்க” என்று பதிலளிக்க,

“நான் லவ் பன்றதுல வொர்ஸ்ட்டுன்னு உனக்கு யாருடா சொன்னது” என்று கேட்டு அரவிந்த் சீற்றமானான்.

“நீ விழுந்து விழுந்து லவ் பன்றியே… உன் காதலி… அவதான் சொன்னா… உன்னை கண்டாலே அவளுக்கு பிடிக்கலயாமே!”

“அவ அப்படியெல்லாம் சொல்லி இருக்க மாட்டா… நீ சும்மா கதை விடாதே”

“ஏ… உங்க அப்பா மேல சத்தியமாடா?!”

“சாரதி” அரவிந்த் கோபமாய் கத்த,

“ஒரு பிஃகரை கூட உன்னால மடிக்க  முடியல… சும்மா கத்த வந்துட்டான்…”

“என் வீராவை பிஃகரு அது இதுன்னே பல்லை  பேத்திருவேன்”

“ஏ!  அவ ப்ஃகருதான்டா…  இப்பதான் நானே அதை கன்பாஃர்ம் பண்ணேன்… ஆனா என்ன? நீ சொன்ன மாறி அவ இத்தனை நாளா என்னை முட்டாளாக்கிட்டா… அதான் அதுக்கெல்லாம் சேர்த்து…  இன்னைக்கு நான் அவளை வைச்சி செஞ்சிட்டேன்… அதான்… பாப்பா… பாவம்… பயந்து போய் டயர்டாகி தூங்கிடுச்சு” சாரதி சொன்ன விதத்தில்

அரவிந்தின் குரல் வெளியே வரவே சில நேரம் பிடித்தது. அவன் மிரட்சியோடு

“டே! என் வீராவை என்னடா பண்ண?” சற்றே அழுகை தொனியில் பதட்டத்தோடு  கேட்க சாரதி சிரித்தபடி,

“சேச்சே! அவளை நான் ஒண்ணும் பண்ணல தம்பி… சும்மா உன்னை கலாய்ச்சேன்… பயந்திட்டியா” என்றான்.

“என்ன மாதிரியான மனிஷன்டா நீ… சே! ஒரு நிமிஷம் என் உயிரே போயிடுச்சு…  உனக்கெல்லாம் பீஃலிங்ஸே இல்லயா… அவளை நான் எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரியுமாடா உனக்கு” அரவிந்த் உணர்ச்சி பொங்க பேச

“சொல்லு… தெரிஞ்சிப்போம்… உன் மொக்க காதல் கதையை” என்றான் சாரதி!

“அதல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது”

“ஓ!!! மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது புனிதாமானது புனிதமானது… ” என்று சாரதி கேலி செய்து நிறுத்தியவன்,

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி

“போங்கடா நீங்களும் உங்க காதலும்… எல்லா சுத்த நான்ஸென்ஸ…உங்க செக்ஷுவல் நீட்காக நீங்க வைச்சுக்கிட்ட டீஸன்ட் பேர்” என்று முடித்தான்.

அரவிந்த் எரிச்சலோடு,

“நீதான்டா சுத்த நான்ஸென்ஸ்… இப்படியெல்லாம் நீ திங் பண்றதாலதான்  பெர்ஸ்ன்ல் லைஃப்ல நீ சுத்த ஜீரோவா இருக்க… ” என்க,

“நான் பெர்ஸன்ல் லைஃப்ல ஜீரோ… நீ எப்படி… அதுல பாஸ் மார்க்கா?” என்றான்.

“ஹ்ம்… எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எனக்கு உறுதுணையா நிற்க என்னை சுத்தி… என்னை உண்மையா நேசிக்கிற நிறைய பேர் இருக்காங்க… உனக்காக அக்கறை படுவும் உன் மேல உண்மையா அன்பு செலுத்தவும் யாராச்சும் ஒருத்தர் இருக்காங்களாடா ? அப்படி இருந்தா சொல்லுடா பார்ப்போம்” என்று அரவிந்த்
சொன்னதை கேட்டு

சாரதியின் மனம் லேசாய் கலக்கமுற்றது. அதே நேரம் அவன் பார்வை நேராய் வீராவின் மீதே சென்று நின்றிருந்தது.

அவள்தான் அவனின் இத்தனை வருடத்தில் எந்தவித பிரதிபலனுமின்றி உண்மையாக அக்கறை செலுத்தியவள் என்று எண்ணம் தோன்ற அரவிந்திடம்,

“ஏன் இல்லாம… எனக்காக வீரா இருக்க… என் மேல அன்பு செலுத்த… அக்கறை காட்ட”  சாரதி உணர்வுபூர்வமாகவே உரைத்தான்.

“என்னடா? என்னை திரும்பியும் வெறுப்பேத்தி பார்க்கிறியா? அப்படியே அவளுக்கு உன் மேல அக்கறை இருந்தாலும் நீ அவ முதலாளிங்கிறதுக்காக வேணா இருக்கலாம்… தட்ஸ் இட்… ஆனா அதுவும் ரொம்ப நாளைக்கு நீடிக்காது… அவ என் வருங்கால மனைவி ஆக போறவ… இதுக்கப்புறமும் அவளை நான் உன்கிட்ட வேலை செய்ய விடமாட்டேன்” என்றான் அரவிந்த் தீர்க்கமாக!

“சாரி அரவிந்த்… அவளை நான் விட்டு கொடுக்கமாட்டேன்” சாரதியை எந்த உணர்வு அப்படி சொல்ல வைத்ததென்று தெரியவில்லை. உள்ளிருந்து அவனை அறியாமலே அவ்விதம் சொல்லிவிட,

“என்னடா விளையாடிறியா? அவ எனக்கு சொந்தமானவ” என்று சினம் கொண்டான் அரவிந்த்.

“இன்னும் சொந்தமாகல இல்ல” சாரதி அலட்சியமாய் சொல்ல,

“கூடி சீக்கிரமே சொந்தமாயிடுவா” என்றான் அரவிந்த்!

“உனக்கு முன்னாடி அவளை  நான் எனக்கு சொந்தமாக்கிட்டா” என்று சாரதி வஞ்சத்தோடு வீராவை பார்த்து புன்னகையித்தான்.

“வேண்டாம் சாரதி”

“சாரதிக்கு வேணுமா வேணாமான்னு நீ டிசைட் பண்ண கூடாது… சாரதிதான் டிசைட் பண்ணுவான்… அக்சுவலி இப்ப நான் டிசைட் பண்ணிட்டேன்… ஐ வான்ட் ஹர்” அவன் தீவிரமாய் சொல்ல அரவிந்த் பதட்டத்தோடு,

“வீரா பத்தி உனக்கு தெரியாது… அவ உன்னை நிச்சயமா ஒத்துக்கமாட்டா” என்றான்.

“இட்ஸ் மை பிராப்ளம் மேன்… நீ விடு… நான் அவளை எப்படி கன்வின்ஸ் பண்ணனுமோ அப்படி கன்வின்ஸ் பண்ணிக்கிறேன்… இப்ப தூக்கம் வருது… போஃனை வைக்கிறியா?!” என்றவன் அவனின் பதிலுரையை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து பேசியை அணைத்து வைத்துவிட்டான்.

அரவிந்தின் தலை மீண்டும் கனத்து வலிக்க, போதையில் எப்போது சுருண்டு விழுந்தான் என்று அவனுக்கு நினைவு
இல்லை.

சாரதி அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறான் என்று யோசிக்கும் போதே அவன் உள்ளம் நடுக்கமுற்றது. வீராவிற்கு இதனால் என்ன என்ன பிரச்சனைகள் வருமோ என்று எண்ணி அஞ்சியவன் உடனடியாய் தன் பேசியிலிருந்து அவளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தான்.

இம்முறை சாரதி எடுத்துவிட கூடாதென்று அவன் பயபக்தியோடு வேண்டி கொண்டிருக்கும் போதே, “ஹலோ யாரு?” என்று வீராவின் குரல் ஒலித்தது.

“நல்ல வேளை நீயே போஃனை எடுத்துட்ட” என்று அரவிந்த் நிம்மதி பெருமூச்சுவிட,

“யாரு பேசிறது?!” என்று கேட்டாள்.

“நான் அரவிந்த் பேசிறேன்” என்றதும் அவள் யோசனையாய், “எந்த அரவிந்த்?” என்றாள்.

“உன்னை கொல்ல போறேன்” என்றவன் பொறுமவும் அவள் அவன் குரலை உணர்ந்து,

“உன்னை யாருடா எனக்கு போஃன் பண்ண சொன்னது… போஃனை வையுடா… ” என்று அவள் சீற்றமாய் குரலை உயர்த்தினாள்.

“கத்தாதே… இரண்டே நிமிஷம் பேசிட்டு வைச்சிடுறேன்”

“நீ இன்ன இழவு பேச போறன்னு எனக்கு தெரியும்… சீ போஃனை வை”

“அவசரப்படாதே வீரா… நான் சொல்றது கேளு… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்றவன் கெஞ்ச,

“செய்றதெல்லாம் செஞ்சிட்டு இன்னாடா சொல்ல போற? உன்னாலதான்டா எனக்கு எல்லாம் பிரச்சனையும்… உன்னை பார்க்காம இருந்த வரைக்கும் நான் நிம்மதியா இருந்திருப்பேன்… இப்படி என்னை சிக்கலில் மாட்டிவிட்டுட்டியே… லூசு” அவள் படபடவென வெடிக்க,

“எனக்கு உன் பிரச்சனை புரியுது… நீ எதை பத்தியும் கவலைபடாதே…நான் இருக்கேன் உனக்கு…  உனக்கும் உன் தங்கச்சிங்களுக்கும் தங்க வீடு மத்த எல்லா வசதியும் நான் செஞ்சி தர்றேன்… நீ முதல்ல வேலையை விடு… நீ அந்த சாரதிகிட்ட வேலை செய்ய வேண்டாம்” என்றவன் பேச பேச வீராவின் கோபம் அளவில்லாமல் பெருகியது.

“இப்படி எத்தனை பேர்தான்டா கிளம்பி இருக்கீங்க… என்னை பார்த்தா எப்படிறா தெரியுது உங்களுக்கெல்லாம்… சே! நிம்மதியா வாழவும் வுட மாட்டீங்க சாகவும் வுட மாட்டீங்களாடா?!” என்று  சொல்லியவள் அந்த கணமே உடைந்தழ ஆரம்பித்தாள்.

“வீரா நான் பேசினதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட… நான் அந்த மாதிரி அர்த்தத்தில” என்று அவன் சொல்லும் போதே இடைமறித்தவள்,

“நீ எந்த மாதிரி அர்த்தத்திலயும் பேச வேண்டாம்… போஃனை வையுடா” என்றபடி அழைப்பை துண்டித்தவள் அந்த நொடியே அலைப்பேசியை தூர வீசியெறிந்தாள்.

இரவெல்லாம் சாரதி சொன்னதை பற்றி யோசித்து யோசித்து அவள் ஏற்கனவே நிலைகுலைந்து போயிருந்தாள். அந்த நிலைமையில் அரவிந்த் பேசியதை கேட்டவளுக்குள் உள்ளூர தேக்கி வைத்திருந்த கோபமெல்லாம் எரிமலையென வெடித்து சிதறியிருந்தது.

தலையை கவிழ்ந்து அழுத மேனிக்கு அமர்ந்திருந்த தன் தமக்கையை பார்த்து  அமலாவும் நதியாவும் பதட்டமடைந்து,

“இன்னா க்கா ஆச்சு… இன்னாத்துக்கு அழுவுற… எதனாச்சும் பெரிய பிரச்சனையா? எதுவாயிருந்தாலும் எங்ககிட்ட சொல்லுக்கா” என்று அமலாவும் நதியாவும் அவள் அருகில் அமர்ந்து தவிப்போடு விசாரித்தனர்.

வீரா அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்த்து யோசித்தவள் பின்னர் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு எழுந்து கொள்ள,

“இன்னா க்கா… எங்க போற?” என்று சகோதிரிகள் இருவரும் கேட்டனர்.

“நான் எல்லாத்தையும் வந்து சொல்றேன்” என்றவள் நேராய் சாரதியை பார்க்க அவன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் முத்து அவளை ஏற இறங்க பார்த்து குழப்பமாய் நெற்றியை தேய்க்க,

“சார் மேலதானே ண்ணா இருக்காரு” என்று வினவ,

முத்துவும் ஆம் என்பது போல் தலையசைத்து ஆமோதித்தான்.

அவள் மேலே அவன் அறை நோக்கி விரைந்தவள் அவன் அறைக்கதவை தட்டவும், “யாரு?” என்று கேட்டான் சாரதி!

“சார்… நான் வீரா” என்றவள் சொல்ல அவன் கதவை திறந்து அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்து,

“உள்ளே வா” என்று அழைத்தவன் தலையை கண்ணாடி முன்பு நின்று சீவி கொண்டே,

“என்ன? கல்யாணத்துக்கு ஓத்துக்க மாட்டேன்னு சொல்ல போறியா?!” என்றான் அலட்சியமாக!

“இல்ல… பண்ணிக்கிறன்னு சொல்ல வந்தேன்” என்றதும் அவளை பார்த்தபடி சாரதி சில நொடிகள் ஸ்தம்பித்துவிட்டான்.

பின் மீண்டும் அவன் சுயநினைவுபெற்று,

“நிஜமாவா?!” என்று ஆச்சர்யமாய்  கேட்டவனின் முகமெல்லாம் பிரகாசித்தது.

ஆனால் அவள் சோர்வான பாணியில், “ஹ்ம்ம்ம்” என்ற ஒற்றை தலையசைப்போடு சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட சாரதி உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. இத்தனை எளிதாய் அவளின் சம்மதமே கிடைத்துவிடுமென்று!

அரவிந்த் சொன்ன வார்த்தையை இப்போது சாரதி நினைவுப்படுத்தி கொண்டான்.

‘பர்ஸ்னல் லைஃப்ல நீ வெறும்” ஜீரோதான்… ‘  அவன் மனதில் சுருக்கென்றது தைத்த
அந்த வார்த்தை உண்டாக்கிய ஆழமான வலிக்கு மருந்தாய் அப்போதைக்கு அவன் கண்முன்னே தெரிந்தது வீராதான்!

அதுவும் இறுதியாய் அரவிந்த் வீராவை சொந்தமாக்கி கொள்ள போவதாக  சொன்னது சாரதியின் மனதை பெரிதுமாய் பாதித்தது.

தன்னை அவள்  முட்டாளாக்கியிருந்தாலும் அவள் காட்டிய அக்கறையிலும் அன்பிலும் கொஞ்சமும் பொய்யில்லை. நடிப்பில்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான். அந்த அன்புதான் அவனை உண்மையிலேயே  அவளிடம் தன்னை முட்டாளாக்கி வைத்திருந்தது என்பதை அறிந்தவனுக்கு அவள் எந்த பாலினம் என்பதெல்லாம் அவசியமில்லை. அப்போதே வீராவின் மீது நன்மதிப்பு உண்டாகியிருந்தது அவனுக்கு!

அதுவும் அவள் மூலமாய் அவன் வாழ்வில் அரிதாய் கிடைத்த அன்பை அவன் இழக்க விரும்பவில்லை.

வீராவை சொந்தமாக்கி கொள்வதன் மூலமாக அரவிந்தையும் பழிதீர்த்து தானும் அதனால் பயன்பெற முடியுமென அவன் வியாபார மூளை அழுத்தமாய் அறிவுறுத்த,

தாமதிக்காமல் அதனை செயல்படுத்திவிட துணிந்தான். எல்லாவற்றையும் வியாபார நோக்கத்திலேயே பார்த்தவனுக்கு,

வீராவின் விருப்பு வெறுப்பு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவில்லை என்பதில் ஒன்றும் வியப்பில்லை.

மொத்தத்தில் சாரதியின் குறி தப்பவில்லை. சரியாய் இலக்கை தாக்கியிருந்தது.

error: Content is protected !!