CP 30

CP 30

அத்தியாயம் 30

மீண்டும் அந்த ஒற்றை

புள்ளியிலிருந்து தொடங்கலாம்

அப்புள்ளிக்கு

தனிமை

என பெயரிட்டு!

-டைரியிலிருந்து

மழை விட்டிருந்தது… லேசாக தூறி கொண்டிருந்த வானமும் தெளிவாகியிருக்க சலசலவென ஏதேதோ பெயர் தெரியாத பறவைகளின் ஒலி…

தொடர்ச்சியான பத்து நாள் மழைக்கு பிறகு நீலகிரி சற்றே இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது…

கண்களை பிரிக்க முடியாமல் சிரமமாக பிரித்தவளால் அசைய கூட முடியவில்லை… கௌதம் அவளை கொஞ்சமும் விட்டு தர மாட்டேன் என்றவாறு இறுக்கமாக அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருக்க… வெளிச்சம் மென்மையாக படர்ந்து கொண்டிருந்த அறையில் அவளிருந்த கோலம் ஆதிரைக்கு வெட்கத்தை வர வைத்தது…

அதே வெட்கத்தோடு முகம் சிவக்க… அவனை விட்டு எழ முயல… அவளது அசைவை உறக்கத்திலேயே உணர்ந்தவன்…

“ஹேய் பொண்டாட்டி… தூங்க விடுடி… ” என்று அவளை மேலும் இறுக்கி கொள்ள… அவளது முகம் சிவந்து செங்கொழுந்தாகியது…

“என்ன எப்போ பார்த்தாலும் பொண்டாட்டின்னு சொல்றீங்க மாமா?” அவனது உறக்கத்தை கலைக்க சிணுங்கி கொண்டே ஆதிரை கேட்க…

“பின்ன உன்னை பொண்டாட்டின்னு கூப்பிடாம வப்பாட்டின்னா கூப்பிட முடியும்?” அவளை இறுக்கமாக அணைத்து கொண்டே கேட்டவனை முறைத்தவள் நறுக்கென்று கடித்து வைக்க… கௌதம் வலி தாங்காமல் கத்த… ஆதிரைக்கு சிரிப்பு பீறிட்டது!

“வப்பாட்டியா? பிச்சு பிச்சு… ” குறும்பாக கூறியவளை சிரித்தபடியே பார்த்தவன்…

“சரி வப்பாட்டி வேண்டாம்… ஸ்டெப்னி ஓகே வா?” தலைக்கு கையை கொடுத்தபடி அவன் விளையாட்டாக கேட்க… ஆதிரைக்கு புரியவில்லை…

“அப்படீன்னா என்ன?”

“ம்ம்ம்… இங்கயும் டவுட்டா? எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்தா அடிக்க வருவயே ஸ்டெப்னி… என்ன பண்ணலாம்?” தீவிரமாக யோசிப்பது போல பாவனை செய்தவனை ஆதிரை முறைக்க… கௌதம் சிரித்து கொண்டே…

“கார்ல ஒரு டயர் பஞ்சர் ஆகிட்டா எதை யூஸ் பண்ணுவாங்க?” அவளது மூக்கை பிடித்து ஆட்டியபடி கேட்க…

“ஸ்டெப்னி தான்… ” மூக்கை சுருக்கியவள் ஒன்றும் புரியாமல் கூற…

“அதே தான்டி செல்லம்… ஓய்ப்க்கு சப்ஸ்டிடுட் தான் ஸ்டெப்னி… இப்போ புரிஞ்சுதா?” குறும்பாக கூறிவிட்டு எழுந்து தப்பித்து கொள்ள முயல… ஆதிரை பொய் கோபத்தோடு தலையணையால் அவனை அடிக்க ஆரம்பித்தாள்..

“யூ ஸ்டுபிட்… பிசாசே… எருமை… உனக்கு அவ்வளவு கொழுப்பாடா?” அவனை திட்டியபடியே தலையணையால் அடித்து கொண்டிருந்தவளை பார்த்து சிரித்தவன் அவளது கைகளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டு…

“ஆமா ஸ்டெப்னி… ” என்று சிரித்து கொண்டே அவளது கன்னத்தை மீசையால் உரச… மயங்கி போயிருந்தாள் ஆதிரை… எதையுமே சிந்திக்க முடியாதவாறு!

“ஒரு நல்ல மனைவி தொழிலில் மந்திரியாக, காரியத்தில் வேலைக்காரியாக, பார்வைக்கு லக்ஷ்மியாக, பொறுமையில் பூமி போல, அன்பான தாயாக, படுக்கையில் தாசியாக இருக்கனும்… ”என்று கண்ணடித்து சிரிக்க… ஆதி முறைக்க…

“இதை நான் சொல்லலை ஆதி… நம்ம வேதம் சொல்லுது… ”என்று கிண்டலாக கூற…

“அந்த வேதம் தான் என்னை ஸ்டெப்னின்னு கூப்பிட சொல்லுதா?” கோபமாக கேட்பது போல கேட்டவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்…

“ச்சே ச்சே… அதில் நமக்கு தேவையான மேட்டரை மட்டும் தான் நாம எடுத்துக்கனும் ஸ்டெப்னி… ” என்று கண்ணை சிமிட்டி கொண்டு சிரிக்க… அவள் கூற வந்ததே மறந்து போனது… இல்லை… மறக்க வைத்திருந்தான்… பத்து நாட்களும் பறந்தது இப்படித்தான் எனும் போது என்ன சொல்ல?

செல்பேசி அழைத்து கொண்டிருந்தது!… ஆனால் தொந்தரவாக இருக்குமென்று கௌதம் சைலன்ட் மோடில் வைத்திருந்ததை அழைத்தவர் அறியவே இல்லை!

******

ஆதிரையின் செல்பேசி பத்து நாட்களுக்கு முன்னரே காணமல் போயிருக்க… செல்பேசி தொலைந்ததில் அவள் உண்மையில் மகிழ்ந்து தான் போயிருந்தாள்… இடையூறுக்கு ஆள் எவரும் இல்லாமல் அவனுக்குள் ஆழ்ந்திருந்தாள்… மனதுக்குள் அவளது குடும்பத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தாலும் கௌதமுடைய அண்மை அவளுக்கு மிகுந்த தைரியத்தை கொடுத்திருந்தது… எதுவாக இருந்தாலும் அவன் பார்த்து கொள்வான் என்ற தைரியம்!

“மாமா… ” சோபாவில் அமர்ந்து கொண்டு அவன் மேல் சாய்ந்தபடி மெலிதாக அழைக்க…

“என்ன ஸ்டெப்னி… ” என்று கிண்டலடித்தவனை செல்லமாக முறைத்தாள் ஆதிரை.

“இன்னும் நீங்க ஒரு தடவை கூட ஐ லவ் யூ வே சொல்லலை… ” சிறு பிள்ளையாக சினுங்கியவளை யோசனையாக பார்த்தான்…

“ஒரு கிப்ட் கூட வாங்கி தரலை… ஒரு லெட்டர் கூட கொடுக்கலை… நம்ம தியாவுக்கு அவளோட பாய்ப்ரென்ட் வளைச்சு வளைச்சு லவ் லெட்டர் எழுதுவான்… அதை நாங்கள்லாம் கூட்டா சேர்ந்து எப்படி படிப்போம் தெரியுமா?”

“அடிப்பாவிகளா… உங்க போதைக்கு நான் ஊறுகாயா?” போலியாக அலறியவனை பார்த்து சிரித்தாள்… அவளது சிரிப்பு அவனை மேலும் யோசனையில் ஆழ்த்தியது!

குளிருக்கு சூடாக ரச சாதம் கேட்டவளுக்கு சாதம் வைத்து ரசம் போட்டு ஸ்பூனில் அவளுக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்தான் கௌதம்… அழகு சிற்பமாக முதன் முதலில் அவளை கோவிலில் பார்த்தது நினைவுக்கு வந்தது…

அந்த அழகான மாலை பொழுதில் ,ஆதிரையை மீண்டும் காண நேர்ந்த நாளை நினைத்து பார்த்தான்…

பெரிதாக கடவுள் பக்தி இல்லையென்றாலும் கோவிலேன்பது அவனை பொறுத்தமட்டில் அமைதியை வேண்டும் பொழுதில் நாடும் இடம். அன்றும் மனம் குழப்பத்தில் இருக்க… தனிமையில் சற்று அமைதியை வேண்டி வந்திருந்தான்…

வருணோடு ஒவ்வொரு இடத்திலும் போட்டியிட்டாலும் அதில் வெற்றி பெற்றாலும் மனம் அதில் நிறைவடையவில்லை என்பதே உண்மை! மேலும் விடாப்பிடியாக அவனது வெற்றிகளை தக்க வைக்க வேண்டிய அவசியம் தான் என்ன என்று தோன்றியது… தாய் வேறென்றாலும் தந்தை ஒருவரல்லவா… தனக்கு இளையவன் என்பதும் அவனுடைய மனதில் தோன்றாமல் இல்லை…

ஆனால் அங்கீகாரம் என்பது வெற்றிகளை பொறுத்தது மட்டுமில்லை என்ற உண்மையும் அவனது கன்னத்தில் அறைந்தது ,… தன் தாய்க்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மறுக்கப்படும் இடங்களில் எல்லாம் அவனது கோபமும் அழுத்தமும் அதிகமாகி கொண்டே இருந்தது… முயன்று திறமைகளை வளர்த்தாலும் வெற்றி அடைந்தாலும் சமுதாயம் கூறும் ஒற்றை சொல் அவனது கர்வத்தை எல்லாம் குலைத்து கொண்டிருந்ததே!

மனம் இவ்வாறான குழப்பங்களில் ஆழ்ந்திருக்க… தல விருட்சத்தின் கீழ் அமர்ந்து கண்களை மூடி மூச்சை இழுத்து வெளியே விட்டான்… மனம் சிறிது சிறிதாக அமைதியில் ஆழ துவங்கியது…

“தியா பக்கி… எத்தனை தடவை சொன்னேன்… எனக்கு சாரி கட்ட வராதுன்னு… இப்போ பார்… எப்போ அவிழ்ந்து விழுமோன்னு பயமா இருக்கு… ” தியா என்று அழைக்கப்பட்ட அந்த பெண்ணிடம் சிணுங்கிய அந்த குரலின் இனிமை கௌதமை ஏதோ செய்ய… கண்களை திறந்து பார்த்தான்…

மூன்று இளம்பெண்களும் திரும்பி நின்று வணங்கி கொண்டிருக்க… அதில் ஒருத்தி மட்டும் அவிழ்ந்து விடுமோ என்றவாறு இருந்த சேலையை அவஸ்தையாய் கையில் பிடித்து கொண்டிருந்தாள்… வளைந்து குழைந்த அந்த பின்புறத்தை பார்த்தவனுக்கு முன்புறத்தை பார்க்க முடியுமா என்று தோன்றியது!

ஒரு கையில் பொன் மஞ்சள் நிற புடவையை பிடித்து கொண்டு ஒரு கையில் திருநீரை இட்டு கொண்டு திரும்பிய அந்த பெண்ணை பார்க்கையில் மனம் சில்லென்று இருந்தது… குழந்தைத்தனம் இன்னமும் மாறாத முகம்… குண்டு கன்னங்களும் பெரிய கண்களுமாக இருந்த அந்த பெண்ணிடமிருந்து அவனுடைய கண்களை திருப்ப முடியாமலிருக்க… மாலை சூரியன் அவளது மேனியில் பட்டு பால் நிறத்தில் இருந்தவளை தங்க நிறமாக்கி இருக்க… சிவந்த இதழ்களின் அழகில் முற்றிலுமாக வீழ்ந்தான் அவன்!

சங்கு கழுத்தை அடுத்து பயணித்த பார்வையை கடிவாளமிட்டு அடக்கியவன் தன்னை வெகுவாக கடிந்து கொண்டான்… ஒரு பெண்ணை இப்படியெல்லாமா பார்ப்பது?

ஆனால் அவளோ அன்று தான் முதன்முதலில் உடுத்திய புடவையை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தாள்…

“ஏய் லூசு… நாங்களும் தான் பர்ஸ்ட் டைம் சாரி கட்டறோம்… உன்னை மாதிரி புலம்பிக்கிட்டா இருக்கோம்?” அருகில் இருந்தவள் அந்த பெண்ணை கிண்டலடிக்க… அவள் திரும்பி முறைத்தாள்!

“எனக்கு இடுப்புல நிற்கவே இல்லை… என்னோட அவஸ்தை உனக்கு கிண்டலா இருக்கா? ஆண்டவா… வீடு போய் சேரும் வரை என்னோட புடவையை காப்பாற்றுப்பா… அப்படி மட்டும் காப்பாற்றி விட்டா இந்த தியாவுக்கும் அனிக்கும் மொட்டை போடறேன்… ” சிரித்து கொண்டே கூறிய அந்த பெண்ணை மற்ற இருவரும் அடிக்க வர… மேடையில் அமர்ந்திருந்த கௌதமுக்கு புன்னகை மலர்ந்தது…

மனம் அமைதியில் லயித்தது.தன்னையும் அறியாமல் எழுந்தவன் அவளை பின்பற்றி கொண்டு போக… அவளோ அதை அறியாமல் தோழிகளிடம் வம்பளத்து கொண்டு ஸ்கூட்டியை நோக்கி சென்றாள்…

“ஏய்… ஒழுங்கா வீடு போய் சேர்ந்துடுவியா? இல்ல சாரிய பிடிச்சுகிட்டே நடு ரோடுல வண்டிய பார்க் பண்ணிட்டு இருப்பியா?” அந்த அனி கிண்டலாக கேட்க… அவளை முறைத்தவள்…

“வெவ்வெவ்வே… நாங்கள்லாம் யாரு… டிரைவிங் எக்ஸ்பெர்ட்டாக்கும்… ” தலையை சிலுப்பி கொண்டு கூறியவளை மிகவும் தீவிரமாக ரசிக்க தோன்றியது அவனுக்கு. ஏனோ அந்த முகம் மிகவும் பரிச்சயபட்டது போல… ஆண்டாண்டுகளாக பழகி ஒன்றாக வாழ்ந்தது போன்ற தோற்றம் அவனுள்!

இதுவரை இல்லாத உணர்விது! எத்தனையோ பெண்களை கடந்து வந்திருந்தாலும் இந்த உணர்வு… அதிலும் முதன் முதலில் பார்க்கும் ஒரு பெண்ணிடம் இவன் உணர்வது மிகவும் புதியது!

அன்று உணர்ந்த அந்த உணர்வோடு தன் மேல் சாய்ந்து அமர்ந்து இருந்தவளை பார்த்தான்… இன்று உயிரோடு கலந்து விட்ட மனையாளாக அவனருகே!

ஆம்! மனைவி தானே! கற்பு மட்டுமா அழகு? களவும் அழகுதானே? அவனது மனதில் அதை தவிர வேறு எதுவுமே இல்லை! அவனது மனைவியிடம் அவன் உரிமை எடுத்து கொண்டான் என்பதை தவிர வேறு ஒரு தவறும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை…

ஆனால் அவன் கொண்ட உணர்வுகள் வேறு ,அவள் கொண்ட உணர்வுகள் வேறு என்பதை அந்த அதீத புத்திசாலி உணரும் போது?

ஆனால் இப்போதோ ஆதிரையை பார்க்கும் போதே அவனது நெஞ்சில் இனித்தது… அவளது காதல், அவன் மேல் அவள் கொண்ட நம்பிக்கை என அனைத்தும் அவனை அவள் மேல் பித்து கொள்ள வைத்தது… காதல் ததும்ப அவளை பார்த்து கொண்டிருந்தவனை என்னவென்று பார்வையால் கேட்டாள் அவனது மகாராணி…

கண்ணை சிமிட்டி ஒன்றுமில்லையென கூறிவிட்டு கையில் இருந்த உணவை அவளிடம் கொடுத்தவன்…

“இப்போ எனக்கு பசிக்குது ஆதி… ” அப்பாவியாக கூற…

“ஓகே… உனக்கு நான் கொடுக்கறேன்… ” ஸ்பூனை அவனருகே கொண்டு செல்ல… குறும்பான சிரிப்போடு…

“ம்ஹூம்… இப்படியெல்லாம் ஊட்டிவிட்டா சாப்பிட மாட்டேன்… ” என்று அடம் பிடிக்க…

“வேறே எப்படி மாமா கொடுக்கணும்?” ஒன்றும் அறியாதவள் போல கேட்டாலும் அவனது குறும்பு அவளுக்கு தெரிந்தது தானே… அவனது கள்ளப்பார்வை சிவந்த உதட்டில் படிய… ஆதிரைக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது!

“ச்சீ… போடா… ” என்று எழுந்து கொள்ள முயல அவளை இழுத்து அணைத்தவன், அவன் கேட்டதை பெற்று கொண்டே விடுவித்தான்!

“ஹாத்திராம் கதையெல்லாம் சொல்லி உபன்யாசம் செய்யற சாமியாரா போட்ட வேஷத்தை நான் நிஜமாவே நம்பிட்டேன்… ” உதட்டை வளைத்து கொண்டு அவள் கூற… அந்த உதட்டை சுண்டி விட்ட கௌதம்…

“ஆஹான்… அப்படியா? உன்னை யார் நம்ப சொன்னது?… நான் ரொம்ப ரொம்ப பேட் பாய்ன்னு உனக்கு தெரியாதா என்ன?” கிண்டலாக கேட்க…

“இந்தளவு பேட் பாய்ன்னு எனக்கு தெரியுமா என்ன?” கிறக்கமான குரலில் அவள் கூற…

“தெரிஞ்சுருந்தா லவ் பண்ணிருக்க மாட்டியா?” ஒரு மாதிரியான குரலில் வினவ… திரும்பி அமர்ந்து அவனது மீசையின் இருபுறத்தையும் பிடித்து ஆட்டியவள்…

“இந்த பேட் பாய் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிச்சுத்தானே இருக்கும்… ” சிரித்து கொண்டே கூறியவளை பார்க்கும் போது கௌதமுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது!

இவளது இந்த உறுதி இறுதி வரை நிலைக்க வேண்டுமே என்று மனம் தவித்தது… சற்று நேரம் மெளனமாக இருந்தவனை ஆதி மீண்டும் உலுக்கினாள்!

“மாமா… ” சற்று சப்தமாக அழைத்தவளின் தொனியில் சுயஉணர்வை அடைந்தவன்…

“அட சொல்லுடி… ” சலித்து கொண்டு கூறுபவனை போல கூற…

“இப்போவே இவ்வளவு சலிப்பா? சரி உங்க கேர்ள்ப்ரெண்ட்ஸ் கணக்கை இப்போதாவது சொல்லுங்க..ப்ளீஸ்… ” அவனது சிகையில் விளையாடி கொண்டே அவள் கேட்க… அவளது கேள்வியில் திரும்பி அவளை பார்த்து புன்னகைத்தவன்… குறும்பாக கண்ணை சிமிட்டி…

“உன்னோட சேர்த்து பத்து தான்டி… ”

“வாட்… ” அதிர்ந்து அவனை பார்க்க… அவன் கள்ளச்சிரிப்போடு…

“ஹே… என்னடி இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கற? வேணும்னா உனக்கு சீனியாரிட்டி ப்ரிவிலேட்ஜ் கொடுக்கறேன்… ஓகே வா… ” விளையாட்டுத்தனமாக அவன் செய்த கேலி அவனையே திருப்பி தாக்குமேன்பதை அறியாதவனாக வம்பை வளர்த்து கொண்டிருந்தான்…

“சர் எதுக்கு சர் அந்த சீனியாரிட்டி ப்ரிவிலேட்ஜ்?” ஒன்றும் அறியாதவள் போல அப்பாவியாக அவள் கேட்க…

“நீ இந்த லிஸ்ட்ல ஸ்பெஷல் இல்லையா ஆதி… அதான்… உனக்கு ஆர்ஏசி கோட்டா… ” என்று சிரித்தவனை கொலைவெறியோடு பார்த்தாள்…

“ம்ம்ம்… லிஸ்ட் போட்டு ரெக்ருட் பண்றயா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்… ” கையில் குச்சியை வைத்து கொண்டு அவனை துரத்த அவன் அவளுக்கு அகப்படாமல் தப்பித்து ஓட… இருவருமாக சோபாவில் விழ… அவனையும் அறியாமல் யோசனையில் ஆழ்ந்தான்…

“மாமா… மாமாஆஆஆ… ” காதில் கத்தியவளை முறைத்தான்… செல்லமாகத்தான்!

“ஏன்டி கத்தற?நான் இங்கதானே இருக்கேன்… ”

“நீங்க இங்கவா இருக்கீங்க? ஒரே ட்ரீம்… கொஞ்சமாவது பொறுப்பு இருந்தா இப்படி பதில் சொல்வீங்களா?”கேலி குரலில் அவனை சீண்ட…

“கொஞ்சமாவது பயம் இருக்கா ஆதி உனக்கு? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலைடி… ”என்று இடைவெளி விட்டவன்… “அதை நினைத்து பார்த்தாலே ஷப்பா… உங்க அம்மாவை எப்படி சம்மதிக்க வைத்து… உன்னை கல்யாணம் பண்ணி… நினைச்சு பார்க்க கொஞ்சம் பயமா கூட இருக்குடா… ஆனா உனக்கு எல்லாமே விளையாட்டுதான்… ”அவனது குரலில் இருந்த தீவிரத்தோடு… அதில் உள்ள உண்மையும் அவளுக்கு புரிந்து தான் இருந்தது… அவன் மேல் சாய்ந்து இருந்தவள் அவனது புறம் திரும்பி கொண்டு…

“எங்க அம்மாவெல்லாம் ஜுஜுபி மாமா… அவங்களை எனக்கு சமாளிக்க தெரியும்… நான் கட்டினா உங்களை தான் கட்டுவேன்னு பிடிவாதம் செய்தா போதும்… யூ டோன்ட் ஒர்ரி… ”காலை ஆட்டி கொண்டே பதிலளித்தவள்…

“ஏன் ஆதி… உனக்கு நிஜமாவே பயமே இல்லையா?”அவனுக்கு கேட்க வேண்டும் போல தோன்றியது…

அவன் மேல் சாய்ந்து கொண்டு சோபாவில் படுத்தபடி தொலைகாட்சியை பார்த்து கொண்டே அவன் ஊட்டி விட உணவை உண்டு கொண்டிருந்தவள்… அவன் புறம் திரும்பி…

“பயம் எப்போ வரும்?” வெகு இயல்பாக புன்னகைத்தவாறே கேட்டவளுக்கு என்ன பதில் கூறுவது என யோசித்தான்…

“எப்போ வரும்?”

“ஒருத்தர் மேல நம்பிக்கை குறையும் போது வரும் கௌதம் குட்டி… ” அவனது மூக்கை பிடித்து திருகி கொண்டே கூற… கௌதம் கண்களை மூடி கொண்டு பின்னால் சாய்ந்து கொண்டான்… மனம் தவித்து தள்ளாடியது!

“நம்பிக்கை வெச்சுட்டா கேள்வி கேட்க கூடாது… அவங்க நமக்கு நல்லதுதான் செய்வாங்கன்னு நம்ப வேண்டும்… நம்ம அம்மாவை நம்புவது போல… ”என்று மீண்டும் இடைவெளி விட்டவள்…

“நீங்க எனக்கு அம்மா மாதிரி கௌதம்… ”ஆழ்ந்த குரலில் கூறிவிட்டு அவனை பார்த்தவள்…

“எங்க அம்மா சமைச்சாகூட இப்படித்தான் அழுதுட்டே சாப்பிடுவேன்… உங்களை மாதிரியே கன்னாபின்னான்னு காரம் போட்டுடுவாங்க கௌதம்… ” அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு கூற…

“உனக்கு இருக்க வாய்க்கொழுப்பு இருக்கே… ” கௌதம் சிரித்து கொண்டே அவளது தலையில் கொட்ட…

“ஸ்ஸ்ஸ்… வளர்ற பிள்ளைய கொட்டி கொட்டியே குட்டையாக்கிடுவீங்க… ” உதட்டையும் மூக்கையும்சுளித்து கொண்டு கூற… அவனால் அவளது முகத்திலிருந்து கண்களை எடுக்க முடியாமல் போக… அவனது பார்வை மாற்றம் அவளுக்கும் மனதை தடதடக்க வைக்க…

“எங்க அந்த குழந்தை பிள்ளையோட முகத்தை காட்டு… ” கேலியாக கௌதம் கேட்டான்…

“அதான் நீங்க பார்த்துட்டு இருக்கீங்களே மாம்ஸ்… ”என்று சிரித்து விட்டு…

“நீங்க பக்கத்தில் இருந்தா போதும்… உங்க கைய பிடிச்சுட்டு இருந்தா என்ன டென்ஷனா இருந்தாலும் காணாம போய்டுது… அப்புறம் நான் எதுக்கு கவலைப்பட வேண்டும்?பயப்பட வேண்டும்?” என்று புன்னகையோடு கூற… அவளது கண்களை பார்த்தவனது நெஞ்சம் பிசைந்தது…

“நீ பயப்பட வேண்டியதே எனக்காகத்தான் ஆதி… நீ சிவகாமியின் மகளாகவும் நான் அபிராமியின் மகனாகவும் இல்லாமல் இருந்திருந்தால் நம்மை காட்டிலும் அதிர்ஷ்டசாலி யாருமில்லை… இப்போதோ நம் இருவரை தவிர துரதிர்ஷ்டசாலிகள் வேறு யாருமே இல்லை… ” மனம் குமைந்தது அவனுக்கு!

அவளது நம்பிக்கையும் காதலும் அவனை நாற்சந்தியில் நிறுத்தி கன்னத்தில் அறைவது போல தோன்றியது…

“மாமா… நாம் இங்கேயே இப்படியே இருந்துடலாமா?”ஏக்கமாக அவள் கேட்க… இடக்கையால் ஆதிரையை தனக்குள்ளே வளைத்து அணைத்து கொண்டவனின் மனதில் புயல்!

“தேங்க்ஸ் ஆதி… தேங்க்ஸ் வெரி மச்… ”என்று ஆழ்ந்த குரலில் கூறியவன்… “ஐ மீன் இட்… ” என்று தோளோடு இறுக்கி கொண்டவனின் குரலில் என்றுமில்லாத வலி!

அப்போதுதான் சைலன்ட் மோடில் இருந்த செல்பேசியை கவனித்தவன் எடுத்து பார்த்தான்… எக்கச்சக்க மிஸ்ட் கால்கள்!

வேளை வந்து விட்டதை உணர்ந்தவன்… ஆதிரையின் முகத்தை மென்மையாக பற்றினான்… அந்த பெரிய கண்களும் உருளும் கண்மணிகளும் தன்னை ஈர்த்து தனக்குள்ளே பத்திரப்படுத்தி கொள்வது போன்ற பிரமை! ஆரஞ்சு சுளைகளாய் இருந்த இதழ்களை இனி முத்தமிட முடியுமா என்று தோன்றினாலும் என்றுமே அவள் மட்டுமே தனக்கு என்பதை மட்டும் அவன் மனம் உணர்ந்தது…

அவளது முகத்தை தன்னோடு நெருக்கமாக கொண்டு வந்தவன்… நிதானமாக அவளது இதழ்களை தன் வசம் கொண்டான்… இனி எப்போதுமே தனக்கு கிடைக்காது என்ற அமிழ்தத்தை அவசரமாக பருகும் ராட்சசனாக!

அந்த நீண்ட முத்தம் இருவருக்குள்ளுமே இனம் புரியாத அமைதியை கொண்டு வந்திருந்தது… காமம் கலக்காமல் காதலை மட்டுமே உணர்த்திய… இத்தனை நாட்களில் உணராத காதலை உணர்ந்த, உணர்த்திய முத்தம்!

மீண்டும் செல்பேசி அழைக்க… எடுத்து பார்த்தவன் என்ன பேசுவது என்று யோசித்தான்!ஆதிரையை விட்டு விலகியவன்…

“ஆதி… ஒன் மினிட்… ”என்று கூறிவிட்டு செல்பேசியில் பேசிக்கொண்டே வெளியே விரைந்தவனது முகம் தீவிர யோசனையில் இருந்தது…

error: Content is protected !!