cp11

cp11

அத்தியாயம் பதினொன்று

நிலவு ததும்பிய

குளத்தில்

வெடித்து கிடக்கிறது

அதன் ஒளி

படர்ந்து கலைந்த

உன் நினைவை போல!

-டைரியிலிருந்து

அன்று ஐடிசி கிரான்ட் சோழாவில் ஓவிய கண்காட்சி! அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவர் ஓவியங்களில் ஆழ்ந்திருந்தனர்… மங்கிய ஒளியில் குளித்திருந்தது அந்த ஹால்!

ஸ்ருதியோடு வந்திருந்தான் வருண்…

அலுவலக ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் வெளியில் சந்திப்பது… அழைத்து வருவது இது முதன்முறை! ஸ்ருதியின் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தாலும் மனதில் டன் கணக்கான பயம்… தெரிந்தவர்கள் பார்த்து விடுவார்களோ என்று!

வருணோ அந்த பயமே இல்லாமல் அவளை தன் புறம் இழுத்து கொண்டான்… அந்த நெருக்கத்தில் அவள் அணிந்திருந்த சேலை இடையிலிருந்து வழுக்கியது… அவனது கை அவளது வெற்று இடையில் பட… ஸ்ருதிக்கு உள்ளுக்குள் வெட்க குளிரில் உடல் நடுங்கியது…

“சர்… ப்ளீஸ்… கைய எடுங்க… ” இறுக்கமாக படிந்திருந்த அந்த கைகளை விலக்கி விட பார்க்க… இறுக்கம் மேலும் இறுகியது…

“என்ன சரா? நம்ம ரிலேஷன்ஷிப்க்கு அந்த சர் நல்லாவே இல்லையே ஸ்ருதி… ” அவளது கண்களை பார்த்து அவன் கேட்க… கூச்சத்தில் அவளது கண் குடை கவிழ… அந்த சிவந்த கன்னங்களை வருண் கண்ணிமைக்காமல் பார்த்தான்… இத்தனை நாட்களாக ஊன்றி பார்த்திராத அவளது அழகு அவனுக்கு அப்போது வெகுவாக போதையை தந்து கொண்டிருந்தது… அது அவனது கண்களிலும் வெளிப்பட…

நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனது பார்வை இன்னமும் கூச்சத்தை தர…

“ப்ளீஸ்ஸ்ஸ்… ” குரல் வெளிவராமல் ஸ்ருதி கெஞ்ச ஆரம்பிக்க… பார்வையை மனமே இல்லாமல் திருப்பி கொண்டான்… ஆனால் இடையிலிருந்து கைகளை விலக்கவில்லை…

“உஷ்ஷ் ஷப்பா… பார்க்கும் போதே விஸ்கி பிராண்டி எல்லாத்தையும் சேர்த்து அடிச்சா மாதிரி ஒரு பீல்… செம கிக்கா இருக்கே… ”ஹஸ்கியான அவனது குரல் அவளை ஏதோ செய்ய… நெளிந்தாள்!

“ஹய்யோ… ச்சீ… என்ன இப்படியெல்லாம் பேசறீங்க?” கூச்சத்தில் அவளால் முழுமையாக முடிக்க முடியாமல் தவிக்க…

“இவ்வளவு க்ளோஸா உன்னை வெச்சுட்டு இதை கூட பேசலைன்னா என்னாகறது?” அவனது முகம் திருட்டு புன்னகையில் மலர்ந்திருத்து!

“அதுக்காக இப்படியெல்லாமா?”

“பின்ன எதுக்காக இந்த கூட்டமே இல்லாத ஆர்ட் எக்ஸிபிஷனுக்கு அழைச்சுட்டு வந்ததாம்? வேதாந்தம் படிக்கவா?” காதோரம் ரகசியமாக கேட்டவனின் தொனியில் கிறங்கினாள்…

“திஸ் இஸ் டூ மச்… ”ஸ்ருதி சிணுங்க…

“ஹேய் நான் ஒண்ணுமே பண்ணலையே… அதுக்குள்ள டூ மச் ன்னு சொல்ற?”

“நீங்க செம ரொமான்டிக்… நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை… ” ஓவியங்களை பார்வையிட்டு கொண்டே அவள் கூற… அவளை பார்வையிட்டு கொண்டிருந்த வருண் ஒன்றும் கூறாமல் இருக்க… திரும்பி என்னவென பார்த்தாள்…

குறும்பான புன்னகையோடு அவளை பார்த்தவன்… ஒற்றை புருவத்தை ஏற்றி கண்ணைசிமிட்ட… உள்ளுக்குள் அவள் ஹிரோஷிமாவானாள்! அவனது பார்வை அவளுள் அணுகுண்டை வீசிவிட்டு செல்ல… மனம் முந்தைய நாளுக்குள் சென்றது!

கம்பெனி சாவினியருக்கு ஒரு பழைய பைலை தேடி எடுக்க வருண் கூறியிருக்க… கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அந்த பைல் ரூமை தஞ்சமடைந்து இருந்தாள் ஸ்ருதி… அறையெங்கும் தூசியும் ஓட்டடையுமாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது… அந்த பைல் ரூமை தலைகீழாக புரட்டி பார்த்தும் அவன் தேட கூறிய பைல் கிடைக்காமல் நொந்து போயிருந்தாள்…

“ச்சே… இந்த ஐடி ஆளுங்க வெளிய கொடைஞ்சதுக்கு பதிலா இந்த ரூமை கொடைஞ்சு தொலைச்சுருக்கலாம்… அட்லீஸ்ட் க்ளீனாவாச்சும் ஆகி தொலைச்சுருக்கும்… கடங்காரனுங்க… ” திட்டி கொண்டே மேல் ரேக்கில் ஏணி மேல் ஏறி ஒவ்வொரு பைலாக பார்க்க… திரண்டிருந்த தூசி அவளது நாசியை துளைத்து அதன் வேலையை காட்ட… வரிசை கட்டி கொண்டு தும்மல்கள் படையெடுத்தன…

“ஷப்பா… அச்… எந்த மூலைல அந்த பைல் கிடக்கோ? ஆண்டவா… இந்த பாஸ்கடங்காரன் வேற அதே பைல் தான் வேணுங்கறான்… பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? அச்… ” ஒரு பைலை எடுத்து கொண்டு கீழறங்கி அதன் விவரத்தில் பார்வையை ஓட்ட…

“என்ன இந்த கடங்காரன திட்டி முடிச்சாச்சா?” மிக அருகில் அந்த குரல் கேட்க… பதட்டத்தில் தூக்கி வாரி போட்டது ஸ்ருதிக்கு!… கையில் வைத்து கொண்டிருந்த பைலை தவற விட்டு அடித்து பிடித்து திரும்ப… வருண் நின்றிருந்தான் சிறிய புன்னகையோடு!

அவளது அதிர்ச்சி இன்னும் பலமடங்காக…

“சர்… அது வந்து… சும்மா… அது அப்படி இல்ல சர்… ” வார்த்தைகள் தந்தியடிக்க திடீரென அவனை பார்த்த பதட்டத்தில் கைகள் நடுங்கியது… ஏற்கனவே பைல்கள் வைத்திருந்த அறை ஓரளவு இருள் சூழ்ந்ததாக இருக்க… குவிந்திருந்த காகிகதங்கள் இருளை அதிகமாக்கி கொண்டிருந்தது!

அவளது நடுக்கத்தை பார்த்தவன்… வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்… ஸ்ருதிக்கு ஒன்றும் புரியவில்லை…

“சர்… என்னாச்சு?” மிக மெல்லிய குரலில் அவனை பார்த்து கேட்க…

“இல்ல… பன்னீர்ல குளிச்சவங்களை கேள்விப்பட்டு இருக்கேன்… பால்ல குளிச்சவங்களையும் கேள்விப்பட்டு இருக்கேன்… ஆனா ஓட்டடைல குளிச்சதை இப்போதான் பார்க்கறேன் ஸ்ருதி… பட் ஆசம்… ” என்று கூறி மீண்டும் சிரிக்க… அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது… ஆனாலும் அவளது பாஸ் சிரிக்கிறாரா? அதிசயமாகவல்லவா இருக்கிறது? கண்கொட்டாமல் அவனை பார்த்து வைக்க…

“என்ன ஸ்ருதி… என்னமோ பேய பார்க்கறா மாதிரி பார்க்கற? என்ன மேட்டர்?” கண்களை சிமிட்டி கொண்டு கேட்க… நின்று துடித்தது அவளது இதயம்!

“அச்சோ… ஒண்ணுமில்ல சர்… எட்டாவதா ஒரு அதிசயம் நம்ம ஆபீஸ்ல நடந்துட்டு இருக்கறதை பார்த்ததுல ஒரு குட்டி ஷாக்… அவ்வளவுதான்… ” அவளது இயல்பான குறும்பு அவனிடமும்! பளிச்சென்று மின்னல் வெட்டியது அவனது கண்களில்!

“ஆஹா… அப்படியா? ஆனா அந்த அதிசயமே இப்படி ஒரு ஒட்டடை மூட்டைக்குள்ள நிற்குதே… அதுக்கு என்ன பண்ண?” இயல்பாக கேட்டு கொண்டே அவளை நெருங்க… அவளுக்கு வியர்த்தது… தனது வாய்த்துடுக்கை நினைத்து! கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்க்க… மணி இரவு எட்டரை என்று உரைக்க… மனம் ஐயோவென்று அலறியது!

“என்ன மணி எட்டரை ஆச்சா… இந்த புத்தி ஒன்னரை மணி நேரத்துக்கு முன்ன இருந்துதிருக்கணும்… ” என்று கூறிவிட்டு வெகு இயல்பாக அவளது தூசிகளை தட்டி விட்டு அவள் மேல் ஒட்டியிருந்த ஒட்டடைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்! ஸ்ருதிக்கு மிக வேகமாக இதயம் துடிக்க ஆரம்பிக்க… அவனது கைபட்டதில் கூச்சமாக நெளிய ஆரம்பித்தாள்!

“சர்… என்ன பண்ணறீங்க? ஐ ல் டேக் கேர்… ”அவனிடம் இருந்து விலக சொல்லி புத்தி இடித்துரைக்க… வேகமாக விலக பார்த்தாள் ஸ்ருதி!

“ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகற?”என்று கூறி அவன் இடைவெளி விட்டபோதுதான் கவனித்தாள் அவனது பன்மை அழைப்பு மாறி ஒருமைக்கு தாவியிருந்ததை! அவள் வேலையிலிருக்கும் இந்த இரண்டு வருடத்தில் நடக்காதது இது! மனதின் ஓரத்தில் அதிர்வாக இருந்தது!

“நான் என்ன உன்னை இப்படி கைய்ய பிடிச்சு இழுத்தேனா?”என்று கேட்டு கொண்டே அவளது கையை பிடித்து சொல்லி காட்ட… ஸ்ருதியின் இதயம் எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் பறந்தது!

“இல்ல… உன்னோட இடுப்பை பிடிச்சேனா?”என்று கூறி அவளது இடையை பற்ற… ஸ்ருதிக்கு கண்கள் வெளியில் தெறித்து விடும் போல இருந்தது… வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி கொள்ள… சப்தமிடுவதற்கும் தெம்பில்லாமல் உறைந்து நின்றாள்…

“இல்ல… உன்னோட லிப்ஸ்ல… அதுவும் ஸ்வீட் லிப்ஸ்ல கிஸ் பண்ணினேனா?” போதையான குரலில் கூறி கொண்டே அவளை மிக நெருக்கமாக நெருங்க… உணர்வு வர பெற்றவள்… அவசரமாக அவனது கையை விலக்கி… சில அடி பின்னால் தள்ளி நின்றாள்…

சுவர் தட்டியது! சுவரோடு ஒட்டி நின்றவளை பார்க்கும் வருணுக்கு ஏதேதோ தோன்ற… அத்தனைக்கும் கடிவாளமிட்டு கட்டினான்… ஆனாலும் காந்தமென ஈர்த்த அவளது அழகு அவனை பித்தம் கொள்ள செய்தது!

“சர்… உங்க கிட்ட இருந்து இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை… ”

“வேற என்ன எக்ஸ்பெக்ட் பண்ண ஸ்ருதி?” வார்த்தைகளில் குறும்பு கூத்தாடியது!

“நீங்க ஒரு டீசன்ட் பெல்லோன்னு தான் நினைச்சுருந்தேன்… பட் யூ ஆர் மிஸ்பிகேவிங் வித் மீ… ” குரல் நடுங்க… உடல் பதட்டத்தில் தூக்கி வாரி போட… வார்த்தைகள் தந்தியடித்தன!

“மிஸ்பிகேவ்… பண்றேனா?” என்றபடி அவளுக்கு மிக நெருக்கமாக வந்து இருபுறமும் கைகளை ஊன்றி… அவளது முகம் நோக்கி குனிந்தவன்… வியர்வையில் குளித்த நெற்றியில் புரண்ட கற்றை முடியை விலக்கி விட்டான்… அவளது கண்களில் பதட்டம்… இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்கும் போல இருக்க…

“சர்… ப்ளீஸ்… இது ரொம்ப தப்பு… என்னை விட்டுடுங்க… ” நடுக்கத்தில் அழுகை வரும் போல இருந்தது…

“நீ பண்றதும் ரொம்ப தப்பு ஸ்ருதி… ” என்று கூறி இடைவெளி விட… அவனை அதிர்ந்து பார்த்தாள்…

“இவ்வ்வ்வ்வளவு அழகா இருக்கியே… அதை சொல்றேன்… ” அவளது தொங்கட்டானை சுண்டி விட… அவனது மூச்சு காற்று அவளது கழுத்தில் படிய… மூச்சுக்கு திணறினாள்!

“சர்… ப்ளீஸ்… என்னை விடுங்க… ” அவனிடம் இருந்து மீட்டு கொள்ள அவனை தள்ளி விடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை… சற்று பலத்தை கொண்டு சற்று வேகமாக அவனை தள்ளி விட்டு கதவை நோக்கி போக… அவளது கையை இறுக்கமாக பற்றி இழுத்தான் வருண்!

அவனது வேகத்தில் ஸ்ருதி அவன் மேலேயே விழ…

“என்ன தப்பிக்க பார்க்கறியா? நோ வே ஸ்ருதி… ” குரலில் அதே குறும்பு!

“சர் ப்ளீஸ்… எப்பவுமே இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டீங்களே… ஏன் சர்… ?” கிட்டத்தட்ட அழும் நிலைக்கு சென்று விட்டவளை பரிதாப பார்வை பார்த்தான் வருண்…

“ஹே… என்னது இது… என்னை என்னமோ வில்லன் ரேஞ்சுக்கு வெச்சு பேசிட்டு இருக்க… நான் ஹீரோம்மா… ” வருண் சிரிக்க…

“அதை நாங்க சொல்லணும்… ” என்று நினைத்து கொண்டாள் ஸ்ருதி… ஆனால் மனம் என்னவோ அவனிடமே குரங்கை போல தொற்றிக்கொள்ள… அவளை கடிந்து இயல்பை ஆராய சொன்னது மூளை… மூளைக்கும் மனதுக்குமான வாக்குவாதத்தில் மனமே வெற்றி பெற… எதிர்ப்பதை படிப்படியாக கைவிட்டு அவனது அருகாமையை ரசிக்க ஆரம்பித்தாள்…

எதிர்ப்பு காட்டி கொண்டு நடுங்கி கொண்டிருந்தவள் அமைதியாக அவனது கைகளில் இருப்பதை உணர்ந்த வருண்… மென்மையாக அணைத்து கொண்டான்! கிறக்கத்தில் அவளது கண்கள் சொருக… அவன் மேலேயே சாய்ந்து கொண்டு சிரித்து கொண்டான் அவளறியாமல்!

“என்ன மேடம்… நான் மெத்து மெத்துன்னு மெத்தை மாதிரியா இருக்கேன்… என் மேல சாஞ்சுட்டே தூங்கிடுவீங்க போல இருக்கு… ” வார்த்தைகளில் குறும்பு கொப்பளிக்க கூறியவனின் தொனியில் பதறி விழித்தவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது…

காதோர முடியை சரி செய்து கொண்டவள் வெட்க சிரிப்போடு ஓட பார்க்க…

“எங்க ஓடற நீ?” என்றபடி இடையோடு பிடித்து தன்னோடு வைத்து கொண்டவன்… அதே கோலத்தில் கார் நிறுத்தம் வரையிலுமே அழைத்து செல்ல… பார்த்தவர்களின் முகத்தில் வியப்பு!

ஸ்ருதிக்கு லஜ்ஜையாக இருந்தாலும் மனதினுள் ஒரு பாகத்தில் பெருமையாகவும் இருந்தது… இவன் என்னுடையவன் என்ற அந்த பறைசாற்றுதல் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது!

*******

முந்தைய நாளில் ஸ்ருதி மூழ்கி இருக்க… அவளது முகத்துக்கு முன் கையை சொடுக்கியவனை கூச்சமாக பார்த்தாள்…

“என்ன… நின்னுகிட்டே தூங்கீட்டீங்க போல இருக்கே மேடம்?” சிரித்து கொண்டே கேட்க…

“நீங்க அநியாயத்துக்கு ரொமாண்டிக் வருண்… ”

“ஹேய்… நான் இன்னும் ரொமான்ஸ் பண்ணவே ஆரம்பிக்கலை… அதுக்குள்ளே இப்படி ஒரு பழிய தூக்கி …… ” என்று கூற ஆரம்பித்தவன் சட்டென பேச்சை நிறுத்தினான்… கிசுகிசுப்பான குரலில் பேசி கொண்டிருந்த குரல் அவனை வெகுவாக தடுமாற செய்ய… ஊன்றி கவனித்தான்…

“உன்னை பொறுத்தவரைக்கும் இன்னமும் வான்காக்கும் ஜோன்ஸ் வெர்மரும் அதை விட்டா பாப்லோ பிக்காஸோவும் தான் கடவுள்ன்னு சொல்லுவ… இங்க வந்து பாருடா… ஒய் நாட் அக்பர் பதம்சீ, அதுல் டோடியா… ? எம் எப் ஹுசைன விடு ஆயிரம் நொட்டை சொல்லுவ… நம்ம ஜேஎஸ் சுவாமிநாதன், கேஜி சுப்பிரமணியன்… இப்போ நம்ம இளையராஜா? ஆசம்… செம… அப்படியே கடவுளை கிட்டத்துல இருந்து பார்க்கறாப்ல இருக்குடா… கண்ணுல தண்ணி வருது… ” என்று கூறி அந்த குரல் செல்பேசியில் மறுபுறத்தை கவனிக்க… வெகுகாலமாக பழக்கப்பட்டு மனதோடு நெருக்கமாக இருந்த குரலை மீண்டும் ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான்…

“சார்லஸ் வில்மாட்டோட டான்ஸ் பார்ம்ஸ் புல்லரிக்குதுதான்… டேவிட் ஸ்டான்லியோட கலர்ஸ் மேஜிக்தான் இல்லைன்னு சொல்லலை… அதுக்காக வெஸ்டர்ன் தான் பெஸ்ட் ன்னு சொல்லாத… கண்டம்ப்ரரி வெஸ்டர்ன் ஸ்டயில்ஸ தூக்கி சாப்ட்டுடுவாங்க நம்ம ஆளுங்க… ”

செல்பேசியில் கிசுகிசுப்பாக யாரிடமோ விவாதித்து கொண்டிருந்தது அந்த குரல்…

“ப்ச்… யூ கூஸ்… நம்ம பியுஷன் ஆர்ட் மேல உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?… ” என்று அவள் தொடர்ந்து கிசுகிசுத்து கொண்டிருக்க… திரும்பி பார்த்தான் வருண்!

“சௌமினி…… ” அவனையும் அறியாமல் உதடுகள் முனுமுனுக்க…

அதே நேரத்தில் சௌமினியும் இவனை பார்த்து விட… பார்த்த அதிர்வில் புலன்கள் வேலை செய்ய மறுத்துவிட… சிற்பமாக சமைந்தாள்!

வருணோடு ஸ்ருதி இருந்தாலும் அவளது பார்வை வருணை விட்டு அகலாமல் இருக்க… சற்று நேரம் கழித்தே அருகில் இருந்த ஸ்ருதியை பார்த்தாள்… கண்ணோரம் நீர் துளிர்த்தது!

அதே நிலையில் இருந்த வருணின் கைகள் தாமாக ஸ்ருதியின் இடையிலிருந்து விலகியது!

*********

ஜன்னலின் வழியே தெரிந்த இருளை வெறித்து கொண்டிருந்தான் ஜிகே! அறையிலும் இருள்… மனதிலும் இருள்… வெளிச்ச கீற்றை தேடி கொண்டிருந்தவனுக்கு தன் மகனின் நினைவு!

படுக்கையின் மேல் விரிந்திருந்த டைரியில் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்திய கவிதை! சிறு வயது முதலான பழக்கம்… முதலில் ஆசைக்காக எழுதியது போக இன்றோ வலிகளை மறக்க தொடர்ந்த பழக்கம்!

எழுதுவதால் அவனது வலி குறைந்ததா அல்லது அதிகமானதா என்பதை அவனே அறியவில்லை… மறக்க வேண்டும் என்று மனதுக்கு சொல்லி கொடுத்த நினைவுகள் அவனது எழுத்துக்களில் ருத்ர தாண்டவம் ஆடுவதென்னவோ மறுக்க முடியாத உண்மை!

கவிதை ஓவியம் என அனைத்திலும் அவனுக்கு ஈடு கொடுப்பவள் சௌமி ஒருத்தி மட்டுமே… ஆத்மார்த்தமான சிநேகிதம்!எதை பற்றி வேண்டுமானாலும் விவாதிக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் ஒரே ஆத்மா… ஏனென்றால் வலிகள் இருவருக்குமே பொதுவான ஒன்றாயிற்றே!

அவனுக்கோ அவனே வரவழைத்து கொண்ட வலியென்றால் சௌமினிக்கு அவன் வரவழைத்து கொடுத்த வலி… இன்று வரை ஒற்றையாக தன் தோழி நிற்க தானே காரணமாகிவிட்ட கொடுமையை என்னவென்று சொல்ல?… அவளை பார்க்கும் தைரியம் இல்லாமல் அவன் எத்தனையோ நாட்கள் அவளை தவிர்த்து இருக்கிறான்… தோள் சாய யாரும் இல்லாமல் தவித்தும் இருக்கிறான்… ஆனால் அதே நிலையில் தன் தோழியையும் வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு மட்டும் அவனை விட்டு நீங்கியதே இல்லையே!

யாருக்கேனும் கடன் பட்டிருக்கிறோம் என்றால் அது சௌமிக்கு தான் என்று நினைத்து கொண்டான்…

வெளியே மழை வரும் போல இருந்தது… மண்வாசம் கிளம்பியது… அவனுக்கு நெருக்கமானவளை நினைவுப்படுத்தி சென்றது… அவளை நினைவுப்படுத்த மண்வாசம் தேவையா? அவன் மனது அவள் வாசத்தை மறந்தால் தானே?

இறுக்கி அணைத்து அவளது கழுத்தோரம் முகம் புதைத்த போது தன் மேல் ஒட்டி கொண்ட அவளது வாசம் இப்போதும் அவனது நாசியில்! அதே வாசத்தை அவனது மகனிடம் கண்டபோது அவள் ஏற்றி வைத்த விளக்கு சுடர் விட்டு பிரகாசித்தது…

மென்மையான பூக்களை போன்ற அவளது தேகம்… அது அவனுள் பற்ற வைத்த பெரு நெருப்பு… ! வாடை காற்றில் அவனது தேகம் எரிந்தது…

தலையை பிடித்து கொண்டு படுக்கையில் அமர… காற்றில் அவனது டைரியின் பக்கங்கள் படபடவென அடித்து கொண்டு வேகமாக திரும்பியது… அவனது நினைவுகளும்!

சிதிலமடைந்த தேககூட்டில்

சிலந்தியாய் நீயும்

பின்னலிடபட்ட நினைவுகளும்!

-டைரியில் எழுதி கொண்டிருந்தான்!

error: Content is protected !!