DAJ-Full

டாம் அண்ட் ஜெர்ரி

 

நாமக்கல் மாவட்டத்துக்கு பல சிறப்புகள் இருக்கு…கி.பி 996 ல் கட்டப்பட்ட மிகபழமையான 6.7மீட்டர் உயரம் கொண்ட பிரசித்தி பெற்ற ஆஞ்சினேயர் கோவில் உள்ளது. கோழிபண்ணை அதிகம் உள்ளதால் இதற்கு கோழிகள் நகரம் எனவும்  இங்கிருந்துதான் எல்லா மாநிலங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதால் முட்டை நகரம் எனவும் அழைக்கப்படுகிறது… இங்கு லாரி கூடுகட்டும் தொழில், பட்டறைகள் அதனை சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளதால் தொழில் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது..கல்வியிலும்  வருடம்தோறும்  தொடர்ந்து மூன்று இடங்களை தக்கவைத்து வருகிறது….நாமக்கல் ராமலிங்கம் நினைவாக இராமலிங்கம் மகளீர் கலை அறிவியல் கல்லூரி அரசால் நடத்தப்படுகிறது…நமக்கல் மாவட்டத்தின் பிரதான அருவிகளாக காவேரி ஆறு,ஐய்யாறு,கரிப்போட்டான் ஆறு, திருமணிமுத்தாறு ஆகியவை ஓடுகின்றன…

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் வட்டத்தில் நெசவுதொழில் முதன்மை வைகிக்கிறது.இங்கு அதிக அளவில்  ஜவ்வரசி,மரவள்ளிக்கிழங்கு மாவு அரைக்கும் ஆலைகள்   உள்ளது.இங்க தயாரிக்கபடுகின்ற ஜவ்வரிசி,மரவள்ளிக்கிழங்கு மாவு  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு நெய் உற்பத்தியும் அதிகம்.. .

 

நாமக்கலில் உள்ள பரமத்தி வேலூர் வட்டத்தில் காவேறி ஆறு ஓடுவதால்  விவசாயம் செழித்தோங்கிறது..இங்கு அரசால் நடத்தப்படுகின்ற மோகனூர் சர்க்கரை ஆலை புகழ்பெற்றது…

 

திருச்செங்கோடு வட்டம் இங்கு மிகவும் பழமையான அர்த்தநாதீஸ்வரர் கோவில்  உள்ளது. இக்கோவில் புனித யாத்திரை இடமும் கூட..கைத்தறி,விசைத்தறி,நூற்பாலை அதிகம் உள்ளன..இங்கிருந்துதான் அதிக அளவில் ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள்  இந்தியால் எல்லா இடங்களுக்கும் அதிகம் செல்கின்றன…

 

இப்போ ஏன் நாமக்கல் மாவட்டத்தை பத்தி சொல்லிப்போட்டு இருக்கேனு பாத்திங்ளா??அது ஒன்னுமில்லைங் என்ற ஊர் நாமக்கல்ங்ளா அதானுங்க கொஞ்சம் பெருமையா சொல்லலாம்னு ஆரம்பிச்சேனுங்…அதுவுமில்லாம இந்த கதைக்களமும் நாமக்கல்லதானுங் ஆரம்பம் அதானுங்க கொஞ்சம் அதிகமாவே புகழ்ந்துட்டேனுங்…சரிங் வாங்க கதைக்குள்ள போகலாமுங்கோ…

 

நாமக்கல்லில் இருந்து சுமார் பத்துகிலோமீட்டர் தொலைவில் தும்மங்குறிச்சி என்ற ஊர் உள்ளது..இந்தவூரில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர்தான்  திருப்பதி இவரோட மனைவி (நம்ம ஹிரோயினுக்கு வில்லி இவங்கதான்)ரெங்கநாயகி. இவர்கள் இருவருக்கும் இரண்டு  குழந்தைகள் ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என இரண்டு பிள்ளைகள் கிருஷ்ணன்,சிவகாமி..

 

கிருஷ்ணன் தன் தங்கையின் மேல் கொள்ளைபாசம் வைத்திருந்தார்.தன் தங்கையை வெளிய கட்டிக்குடுக்க பிடக்காம தன் வூரிலே சொந்தத்தில் உள்ள தன் உயிர் நன்பன் சந்திரனுக்கே கண்ணாலம் கட்டிக்குடுத்துவிட்டார்… இருகுடும்பங்களும் பக்கத்து பக்கத்து தோட்டத்தில் வீடுகட்டி குடியிருக்கினறனர்…கிருஷ்ணன் ருக்மணிக்கு இரு ஆண்குழந்தை மூத்தவன் பார்த்திபன்(இவன்தான் ஹிரோ)இளையவன் பாலா…சந்திரன் சிவகாமிக்கு ஒரு பெண்குழந்தை ஜனனி(நமக்கு ஹிரோயின் ஹிரோவுக்கு இம்சை)  பிறந்தனர்…

 

திருப்பதி இவருடைய பரம்பரை தொழில் விவசாயம்(இவர் இப்போ இல்லை)… கிருஷ்ணன் தலையெடுத்ததுக்கப்பரம்  கிருஷணனும் சந்திரனும் சேர்ந்து  சிறிய அளவில்  கோழிபண்ணை,லாரி கூடுகட்டும் தொழில் ஆரம்பித்தனர்.. நாளடைவில் வளர்ந்து  இன்று பத்துக்கும்மேற்பட்ட கோழிபண்ணைகளும்,லாரி ட்ரேன்ஸ்போர்ட்டும் பெரிய அளவில் நடந்துக்கொண்டிருக்கிறது…

 

சரி இன்ட்ரோ முடிஞ்சிருச்சி இனி கதைக்குள்ளப்போவோம் வாங்க…

 

முதல்ல நம்ம ஹிரோயின்ல இருந்தே ஆரம்பிப்போம் வாங்க அவ என்ன பண்றானு பாக்கலாம்…

 

பொழுதுவிடிந்து பலமணி நேரம் ஆகியும் எழாமல்  மெத்ததையில் போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் ஜனனி… இவள் தன்வீட்டில் இருப்பதை விட தன்மாமன் வீட்டில் இருப்பதுதான் அதிகம்…கிருஷ்ணன் தன் ஒரே செல்லதங்கையோட மகளின்மேல் தன்மகன்களைவிட அதிகம் பாசம் வைத்திருந்தார்…அதனாலையே தன் மருமகளுக்கும் தன்வீட்டிலையே தனியாக அவளுக்கு பிடித்தமாதிரி அறை கட்டிக்கொடுத்திருந்தார்…நம் நாயகி இப்போ அங்கதா தூங்கிட்டு இருக்காங்க…

 

அவளின் அறையில் மெதுவாக உள்நுலைந்த பார்த்திபன் அங்கு வைத்திருந்த தண்ணி ஜக்கை எடுத்து அவளின் மேலே கவிழ்த்தான்…

 

ஐயோ மழை ஐயோ மழை என கத்திக்கொண்டு எழுந்தவள் கட்டிலின் அருகில் தண்ணீர் ஜக்குடன் சிரித்துக்கொண்டு நின்ற பார்த்திபனை பார்த்ததும் அங்கு என்ன நடந்திருக்கும் என யூகித்தவள் டேய் எருமை எதுக்குடா என்றமேல தண்ணி ஊத்துன???இருடா இன்னைக்கு உன்ன கொல்லாம விடமாட்டேன் அவனை துரத்திக்கொண்டு ஓடினாள்…

 

டேய் நில்லுடா…

 

நிக்கமாட்டேன் போடி…

 

இருவரும் வூட்டையே சுற்றி வந்து ரணகலபடுத்திக் கொண்டிருந்தனர்….

 

சத்தம் கேட்டு வெளிவந்த ருக்மணி இருவரும் ஓடிபுடிச்சி விளையாடுவதை பார்த்தவர்  இதுங்களுக்கு வேர வேலையே இல்லை என தலையில் அடித்துக்கொண்டு திரும்ப சமயல் அறைக்கே தன் வேலைய பார்க்க சென்றுவிட்டார்…

 

வராண்டாவில் உட்கோர்ந்திருந்த ரெங்கநாயகி இந்த கூத்தைபார்த்தவர் என்டி கூறுகெட்டவளே உன்னவிட என்ற பேரன் வயசுல மூத்தவன்தானே அவனப்போய் வாடா போடாங்ர??

 

உன்ற பேரனுக்கெல்லாம் என்னால மரியாதை குடுக்கமுடியாதுங் போங்க அம்மத்தா…

 

பார்த்திபன் ரெங்கநாயிகியிடம்  ஓடியவன் அவரின் அருகில் உட்கோர்ந்தவாரு பாருங்க அப்பத்தா இவ என்ன அடிக்கவரா…

 

நீ இரு பேராண்டி அவள நா பாத்துக்குறேன்…

 

ஏன்டி நீ என்னைக்காவது ஒருநாள் பொட்டப்புள்ளையா அடக்க ஒடுக்கமா இருந்துருக்கியா எப்பப்பாரு ஆம்பள பசங்கக்கூட எசிலிபோட்டுட்டே நிக்கர…

 

ஏனுங் அம்மத்தா பொட்டப்புள்ளை நாங்கமட்டும்தா அடக்க ஒடுக்கமா இருக்கனுமா ஏ உன்றபேரன் இருக்கக்கூடாதா???

 

ஏய் அவன் ஆம்பளை சிங்கம்டி…அவன் எதுக்குடி அப்படி இருக்கோனும்…

 

அம்மத்தா நா ஒன்னும் அவங்கிட்ட ஒரண்டை இழுக்கல அவந்தான் நா தூங்கிட்டு இருக்கப்ப தண்ணிய என்றமேல ஊத்திப்போட்டான் அத கேக்காம என்னமட்டும் வஞ்சிப்போட்டு இருக்கிங்க…

 

வெளியே சென்றுவிட்டு வந்த கிருஷ்ணனும்,சந்திரனும் உள்ளே நுலைந்தவுடனே வீடு இருந்த நிலமையை பார்த்ததும் அங்கு நடந்த கலவரத்தை இருவரும் புரிந்துக்கொண்டர்… சந்திரன் தன் மகளையும் மருமகன் செய்யும் சேட்டையை நினைத்து சமனதில் சிரித்துக்கொடே சோபாவில் உட்கோர்ந்தார்…

 

ஜனனி தன் மாமனை பார்த்ததும் ஓடிவந்து அவரை பிடித்தவாரு சினுங்கிக்கொண்டே  பாருங் மாமா இவன் என்றமேல தண்ணி ஊத்திப்போட்டான்…

 

டேய் அறிவுகெட்டவனே  எழுகழுதை வயசாகுது இன்னும் என்ன சின்னபுள்ளைக்கிட்ட ஒரண்டை இழுத்துப்போட்டு திரியர…

 

ஆரு சின்னபுள்ளைங்ப்பா இவ சின்னபுள்ளைமாதிரியா நடந்துக்ரா…

 

அவ இவனா பல்லதட்டி கைல குடுத்துப்போடுவேன் ராஸ்கல் முதல்ல பொட்டப்புள்ளைங்களுக்கு மரியாதைகுடுத்து பழகுடா…

 

மாமான் திட்டியதும் மாமனின் தோழில் ஒய்யாரமாக சாய்ந்துக்கொண்டு பார்த்திபனிடம் அளவம் காட்டினாள்…

 

இருடி வெளிய வருவல அப்ப இருக்கு உனக்கு ஜனனிக்கு மட்டும் கேக்குமாறு சாடையில் பேசினான்…

 

ஏனுங்ப்பா  நா மட்டும்தா மரியாதை குடுக்கோனுமாக்கும் ஏன் இவகுடுக்கக்கூடாதுங்ளா???

 

இப்போதானேடா அவ இவனு பேசாதேனு சொன்னேன்…என்ற அம்மணி சின்னபுள்ளை அம்மணியும் நீயும் ஒன்னாடா???

 

டேய் கிருஷ்ணா இப்போ எதுக்கு என்றபேரன திட்ர நாந்தே பொழுதுவிடிஞ்சி இம்புட்டு நேரமாகுதேனு பார்த்திய போய் இவள  எழுப்ப சொன்னேன்.ஒரு பொட்டப்புள்ள இம்புட்டு நேரம் தூங்குனா குடும்பம் உருப்புடுமா??

 

 

அம்மணி சின்னபுள்ளைதானேங்ம்மா..இன்னும் கொஞ்சநேரம் தூங்கரதுல என்ன தப்பிருக்கு…

 

இவள சின்னப்புள்ளைனு  தூக்கிவச்சி கொஞ்சிட்டே இரு நாளைக்கு கட்டிக்குடுத்தா போர இடத்துல பொட்டப்புள்ளைய வளத்துவச்சிருக்க லெட்சனத்தப்பாருனு எங்களதா சொல்லுவாங்க…

 

அதலா போரஇடத்துல என்ற அம்மணி நல்லப்பேரு வாங்குடுவாங்க ஏனுங் அம்மணி செய்விங்கத்தானே…

 

கண்டிப்பாங் மாமா…

 

அப்போது ருக்மணி டீப்போட்டு எடுத்துவந்தவர் அனைவருக்கும் கொடுத்தார்…

 

டீக்குடித்துக்கொண்டே மூவரும் தொழிலைபற்றி பேச ஆரம்பித்துவிட்டனர்…

 

ஏனுங் அத்தான் நம்ம பாலாவுக்கு இன்னைக்குதானே கடைசி எக்ஸ்சாம் அவன எப்ப போய்  கூட்டிட்டிப்போட்டு வரப்போறிங்க என்றார் ருக்மணி…

 

அட ஆமால அத நா மறந்தே போயிட்டேனே எனக்கும் சந்திரனும் இன்னைக்கு லாரி அசோசியென் மீட்டிங் இருக்கு நா போகமுடியாதே இப்போ என்னபண்றது…

 

கிருஷ் நீ மட்டும்போய் மீட்டிங் அட்டன்பண்ணு நானும் பார்த்தியும் போய் பாலாவ கூட்டிப்போட்டு வாறோம்…சந்திரன்.

 

சரிடா அப்படித்தா பண்ணுங்க…

 

என்ற பேரன பாத்து எம்புட்டு நாள் ஆகிப்போச்சு எல்லாம் இந்த சிறுக்கியால படிக்கரப்பையன படிக்கவுடாம கூட்டு சேத்து விளையாட கூட்டிட்டுப்போய் மார்க் வாங்கவிடாம பண்ணி கடைசில இங்க இருக்க பள்ளிக்கூடுத்துக்கூட ஹாஸ்ட்டல்ல சேர்க்கவச்சிப்போட்டாளே என புலம்ப ஆரம்பித்தார் ரெங்கநாயகி…

 

கிருஷ்ணனின் பக்கத்தில் உட்கோர்ந்திருந்த ஜனனி பாருங் மாமா அம்மத்தா என்ன எப்பபாத்தாலும் வஞ்சிப்போட்டே இருக்காங்க…

 

நாந்தா பாலாவ ஹாஸ்ட்டல்ல சேர்த்தேன்ம்மா…இந்த வருசம் பன்னிரன்டாவதுல நல்லமார்க் வாங்குனாதானே நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கும் அதே இந்த ஒருவருசம் ஹாஸ்ட்டல்ல இருந்து படிக்கட்டும்னு சேர்த்தேன்.அதுக்கு எதுக்கு என்ற அம்மணி வையரிங்க அம்மா…

 

ஆரும் உன்ற மருமகள எதும் சொல்லிடக்கூடாதே மொத ஆளா வரிஞ்சிக்கட்டிப்போட்டு வந்துருவியே…

 

அம்மாவும் மகனும்  உங்க பஞ்சாயத்த திரும்பவும் ஆரம்பிக்காதிங்க என்றார் ருக்மணி…

 

மாமா நானும் பாலாவ கூட்டிட்டு வர போகட்டுமா???

 

இங்கப்பாருங்ப்பா இவளலா என்னால கூட்டிட்டு போகமுடியாது இப்பவே சொல்லிப்போட்டேன்…

 

டேய் அம்மணிதா ஆசையா கேக்குதுல கூட்டிட்டுபோனா என்ன குறைஞ்சாப்போயிடுவ…

 

இல்லை கிருஷ் ஜனனி வேணாம் இவங்க ரெண்டுபேரையும் ஒன்னா கூட கூட்டிட்டுபேனேனா  ரெண்டுப்பேரோட சண்டைய தீக்கவே நேரம் சரியா இருக்கும்..அதனால ஜனனி வூட்லையே இருக்கட்டும் நானும் பார்த்தி மட்டும் போறோம்..

 

 

பார்த்தி சந்திரனை கட்டிப்பிடித்து மாமானா மாமாதா ரொம்ப தேங்ஸ் மாமா எங்க இந்த லூசையும் கூட்டிட்டு போலாம்னு சொல்லிடுவிங்ளோனு நினச்சிப்போட்டேன்…

 

போங்ப்பா எப்பபாத்தாலும் நீங்க இவனுக்கேத்தா சப்போர்ட்பண்ணுவிங்க..இன்னைக்கு நா உங்கக்கூட பேசமாட்டேன் போங்க முகத்தை திருப்பிக்கிட்டு எழுந்து சென்றாள்…

 

அம்மணி நில்லும்மா…

 

ஜனனி கண்ணு நில்லுடா அவள் பின்னாடியே சந்திரனும்,கிருஷ்ணனும் அவளை சமாதானப்படுத்த எழுந்துசென்றனர்…

 

இவள கெடுக்கரத உன்ற அப்பனும் மாமனும்தான் பேராண்டி…

 

நீங்க விடுங் அப்பத்தா அப்பாவும் மாமாவும் இல்லாதப்ப அவள பழிவாங்கிப்போடலாம்…

 

நீ சொல்ரதும் சரிதான் பேராண்டி உன்ற அப்பனும் உன்ற மாமானும் இல்லாதப்பத்தா எதாவது பண்ணோனும் இல்லைனா நீலிக்கண்ணீர்வ. வடிச்சி அவங்கல ஏமாத்தி நம்பல அவங்ககிட்ட கோத்துவிட்ருவா…

 

ஜனனியின் அறையில் மூஞ்சியை தூக்கிவைத்துக்கொண்டு உட்கோர்ந்திருந்த ஜனனியை கிருஷ்ணனும்,சந்திரனும் சமாதான படுத்திக்கொண்டிருந்தனர்…

 

அம்மணி மாமாவ பாரேன் கோவிச்சிக்காதடாம்மா உனக்கு என்ன வேணும்னு சொல்லு மாமா உடனே வாங்கித்தறேன்…

 

வாங்கித்தருவிங்ளா மாமா??

 

கண்டிப்பா அம்மணி என்னவேணும்னு சொல்லு??

 

மாமா இன்னைக்கு சாயிந்தரம் பாலா வந்தவுடனே நாம எல்லாரும் படத்துக்குபோலாமா???

 

படத்துக்குத்தானே போலாமே அம்மணி மாமா உடனே எல்லாருக்கும் டிக்கெட் போட்டுடறேன் என்ன சரியா??

 

அப்பத்தாவும் பார்த்தியும் வேணாம்ங்க மாமா அவங்கள விட்டுப்போட்டு நாம மட்டும் போவோம்…

 

இல்லைடா அம்மணி அப்பத்தாவும் பார்த்தியும் பாவம்ல அவங்கள விட்டுப்போட்டுபோனா பொக்குனுபோயிடுவாங்க  நாம அவங்களையும் கூட்டிட்டுபோலாம் அம்மணி…

 

உங்களுக்காக மட்டும்தா அவங்கவர ஒத்துக்கறேனுங்  மாமா…

 

என்ற அம்மணிணா அம்மணிதான்…

 

அப்பா நீங்க என்ன கூட்டிட்டுபோகமாட்டேனு சொல்லிப்போட்டிங்கல அதுக்கு பனிஷ்மென்ட்டா வரப்போ எனக்கு ஐஸ்கிரிம் வாங்கிப்போட்டு வறோனும் சரிங்ளா??

 

சரிடாக்கண்ணு…

 

சந்திரனும் பார்த்தியும் பாலாவை கூட்டிவர பாலா படிக்கும் பள்ளிகூடத்திற்கு வந்திருந்தனர்…மாமா நீங்கப்போய் பிரின்சிபல பாத்துப்போட்டு   பார்மாலிட்டிஸ்ச முடிச்சிப்போட்டு வாங்க நா இங்கனையே  நிக்கறேன்…

 

சரிங் மாப்பிள்ளை சந்திரன் சென்று சிறிதுநேரம் கழித்து பாலாவையும் கூட்டிவந்தார்…

 

பாலா எப்படி இருக்க??எக்ஸ்சாம்லா எப்படி பண்ணிருக்க???

 

நல்லாருக்கேனுங்ண்ணா…எக்ஸ்சாம் நல்லா எழுதிருக்கேனுங் அண்ணா…

 

பார்த்தி அண்ணா நீங்க எப்படி இருக்கிங்க??வூட்ல அல்லாரும் நல்லாருக்காங்ளா???

 

எல்லாரும் நல்லாருக்காங்கடா அப்பத்தாத்தா உன்னபத்தி அடிக்கடி பேசிட்டே இருந்தாங்க…

 

ஏனுங் மாமா ஜனனிய கூட்டிட்டு வரல??ஜனனியையும் உங்கக்கூட கூட்டிட்டு வந்துருக்கலாம்ல??

 

அதா வூட்டுக்கு போரம்தானேங் மாப்பிள்ளை அங்கப்போய் ஜனனிய பாருங்க…

 

சரி வண்டில ஏறுங்க நேரமாகுது வூட்டுக்கு போலாம்…

 

டாம் அண்ட் ஜெர்ரி.2

 

நம்ம ஹிரோவபத்தி ஒரு அறிமுகம்… பனைமரத்துல பாதி உசரம்னு சொல்லுவாங்கல அந்தமாதிரி அப்பத்தா வூட்டி வூட்டி வளர்த்ததுல ஆறடி உசரத்துக்கு வளர்ந்து வளர்ச்சிக்கு ஏத்த உடம்புடன் வேட்டி சட்டை போட்டு மீசைய முறுக்கிவிட்டு  அப்படியே நடந்துவந்தா   சும்மா கெத்தா இருப்பான். எப்பவுமே வூட்ல தலைச்சம்புள்ளை அதுவும் பையனா இருந்தா வூட்ல உள்ள பெரியவங்களுக்கு சந்தோசத்த சொல்லவா வேணும் அந்தமாதிரிதான் ரெங்கநாயகிக்கும் முதல் பேரன் ஆண்வாரிசுங்ரதால பார்த்திமேல ஓவர்பாசம் வச்சிருக்காங்க..பார்த்திக்கும் அப்பத்தானா உசுரு அவங்க என்ன சொன்னாலும் செய்வான்.பெரியவங்க சொன்னா அது நம்ம நல்லதுக்குதானே சொல்ராங்கனு அத அப்படியே ஏத்துக்குர பையன்.குறிப்பா பெரியவங்களுக்கு மரியாதை குடுக்குர பையன்.குடும்பத்துமேல ரொம்ப பாசம் வச்சிருக்குர பாசக்கார பையன் (நம்ம ஹிரோயியின தவிர) இன்சினியரிங் முடிச்சிப்போட்டு தன்னோட அப்பாக்கூடவும் மாமாக்கூடவும் சேர்ந்து தொழில பாத்துக்கறானுங்க…

 

 

சந்திரனும் பார்த்தியும் பாலாவை கூட்டிவர பாலா படிக்கும் பள்ளிகூடத்திற்கு வந்திருந்தனர்…மாமா நீங்கப்போய் பிரின்சிபல பாத்துப்போட்டு   பார்மாலிட்டிஸ்ச முடிச்சிப்போட்டு வாங்க நா இங்கனையே  நிக்கறேன்…

 

சரிங் மாப்பிள்ளை சந்திரன் சென்று சிறிதுநேரம் கழித்து பாலாவையும் கூட்டிவந்தார்…

 

பாலா எப்படி இருக்க??எக்ஸ்சாம்லா எப்படி பண்ணிருக்க???

 

நல்லாருக்கேனுங்ண்ணா…எக்ஸ்சாம் நல்லா எழுதிருக்கேனுங் அண்ணா…

 

பார்த்தி அண்ணா நீங்க எப்படி இருக்கிங்க??வூட்ல அல்லாரும் நல்லாருக்காங்ளா???

 

அல்லாரும் நல்லாருக்காங்கடா அப்பத்தாத்தாத்தா உன்னபத்தி அடிக்கடி பேசிட்டே இருந்தாங்க…

 

ஏனுங் மாமா ஜனனிய கூட்டிட்டு வரல??ஜனனியையும் உங்கக்கூட கூட்டிட்டு வந்துருக்கலாம்ல??

 

அதா வூட்டுக்கு போரம்தானேங் மாப்பிள்ளை அங்கப்போய் ஜனனிய பாருங்க…

 

சரி வண்டில ஏறுங்க நேரமாகுது வூட்டுக்கு போலாம்…

 

கார் சத்தம்கேட்டு வெளியவந்து பார்த்த அப்பத்தா காரிலிருந்து இறங்கிய பாலாவை பார்த்ததும் அவனிடம் சென்று அவனுடைய கையை பிடித்துக்கொண்டு  தங்கோ வந்துட்டியா ராசா வா வா என்றா தங்கம் இப்படி  எழும்பும் தோலுமா வந்துக்கர நல்லா சாப்ட்டியாயா?? இல்லையா??உன்ற அப்பேங்கிட்ட அன்னைக்கே சொன்னேன் பையன ஹாஸ்ட்டலுக்குலாம் அனுப்பாத பையன் நல்லது பொல்லாது சாப்டாம ஏங்கிப்போயிருவானு கேட்டானா உன்ற அப்பன் இப்பப்பாரு இப்படி ஒட்டடைக்குச்சிக்கு சொக்கா போட்டமாதிரி வந்து நிக்கரையே தங்கோ…

 

அப்பத்தாவின் பொழம்பல் சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த  ருக்மணியும் ஜனனியும் பாலாவை பார்த்ததும் பாலாகண்ணு நல்லாருக்கியா என்றா கண்ணு இம்புட்டு எளச்சிபோய் வந்து நிக்கர???

 

டேய் பாலா வாடா எப்படிடா இருக்க???

 

அவனை சுற்றி நின்று மொத்த குடும்பமும் பாசமழையை பொழிந்தனர்…

 

அம்மா முதல்ல அவன  உள்ளக்கூட்டி போங்க இப்படி வாசல்லையே நிக்கவச்சி அவனபேசவே விடாம நீங்கபாட்டுக்கு பேசிட்டே இருக்குரிங்க என்றான் பார்த்தி…

 

நீ வா பாலா நாம வூட்டுக்குள்ளப்போய் பேசிக்கலாம் இங்க சிலபேருத்துக்கு பொறாமைல வயிறு எரியுது..

 

ஆமா எரியுது அத நீ வந்து பாத்த ச்சி போடி குட்டச்சி..

 

நீ போடா நெட்டையா…

 

என்ற பேரன வாடா போடான செவுனிலே ரெண்டு குடுத்து போடுவேன் போடி அங்குட்டு உன்னாலதா என்ற தங்கோ ஒருவருசமா ஹாஸ்டல்ல கெடந்தான்…நீ வாடா தங்கோ பாலா கையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றார் அப்பத்தா…

 

நானேன்ன பண்ணேனுங்க அம்மத்தா  எப்பபாத்தாலும் என்னையவே வஞ்சிப்போட்டு இருக்கிங்க இருங்க என்ற மாமா வந்தவுடனே சொல்லிவைக்றேன் கண்ணை கசக்கி கொண்டே வேக வேகமாக உள்ளே  தனதறைக்குள் சென்று கதைவடைத்து கொண்டாள்…

 

போய் சொல்லு உன்ற மாமனையும் பாத்தவ உன்ற தாத்தனையும் பாத்தவடி நானு ஏங்கிட்டையேவா போடி பொசக்கெட்டவளே…நீ வா ராசா நாம போவோம் அவ கெடக்கரா…

 

அக்கா பாவம்ங்க  அப்பத்தா.. அப்பாதா என்ன ஹாஸ்ட்ல்ல சேர்த்தாங்க அதுக்கு அக்கா என்னபண்ணுவாங்க அவங்கள எதுக்கு வையரிங்க பாருங்க அக்கா கோவிச்சிப்போட்டு போயிட்டாங்க…

 

அவளா பாவம் உன்ற அப்பன் வந்தவுடனே எப்படி அழுது நடிக்கரானு நீ வேனா பாரு தங்கம்…

 

ஏபுள்ள ருக்கு என்ன மசமனு நின்னுட்டு என்ற வாயபாத்துட்டுருக்க போ போய் என்ற பேராண்டிக்கு சாப்பாடு போட்டு எடுத்துப்போட்டு வா…

 

சரிங்கத்தை

 

 

பார்த்தியும் சந்திரனும் லக்கேஜ்ஜை எடுத்துட்டுவந்து உள்ளே வைத்தவர்கள் சரி  மாப்பிள்ளை  மீட்டிங் இன்னும் முடிஞ்சிருக்காது அப்படியே நாம்போய் உன்ற அப்பாக்கூட ஜாயின் பண்ணிக்குறேன் நீ பண்ணைக்குப்போய் இன்னைக்கு அனுப்பவேண்டிய லோடு எல்லாம் அனுப்பிட்டாங்ளானு பாத்துப்போட்டு வா…

 

சரிங்மாமா…

 

 

பாலாவுக்கு தட்டில் சாப்பாடை எடுத்துவந்த ருக்மணியிடம் தங்கச்சி இந்தாம்மா இத ஜனனிக்கிட்ட கொடுத்துப்போடு அவர் கையிலிருந்த ஐஸ்கிரிம்பார்சலை கொடுத்தார்…

 

நீங்கள் கொண்டுப்போய் குடுங்களேன் அண்ணா ஜனனிகண்ணு கோவிச்சிப்போட்டு போய் உட்கோர்ந்துருக்கு நீங்க கொண்டுப்போய் குடுத்திங்னா சமாதானம் ஆயிடும்ல…

 

இல்லைம்மா இப்போ போய் ஜனனிக்கிட்ட பேசுனா நேரமாகிடும் நா போயிட்டு வந்து பேசிக்குறேன்…

 

சரிங்ண்ணா அந்த டேபில்ல வச்சிப்போட்டு போங்க நா குடுத்துப்போடறேன்…

 

சரிம்மா நா போயிட்டு வாறேன்…

 

அண்ணா சாப்புட்டு போங்க…

 

சாப்பாடு வேணாம்மா நா மீட்டிங்க முடிச்சிப்போட்டு வரப்ப அங்கையே எதாவது ஹோட்டல்ல சாப்புட்டுக்கறேன்…

 

அம்மா நானும் போயிட்டுவாறேன்…

 

டேய் பார்த்தி நீயாவது சாப்புட்டு போடா…

 

இல்லைம்மா எனக்கு பசிக்கல நா போயிட்டுவந்து சாப்புட்டுக்கறேன் என்றவன் தனது ராயல் என்பீல்டு பைக்கை எடுத்துக்கொண்டு சென்றான்…

 

 

இந்த வூட்டுல மூனு ஆம்பளைங்களுமே நேரா நேரத்துக்கு சாப்டாமையே வேலைவேலைனு சுத்தராங்க இப்படியே  சாப்டாம இருந்தா உடம்பு என்னத்துக்குத்தா ஆகரதுனு தெரியலை என பொழம்பிக்கொண்டே வந்தவர் பாலாவின் அருகில் உட்கோர்ந்து அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தார்…

 

அம்மா என்ன இம்புட்டு சோறு போட்டுவந்துருக்கிங்க என்னாலலா இவ்வளவையும் சாப்டமுடியாது…

 

கொஞ்சம்தா தங்கம் போட்டுவந்தேன் சாப்புடு தங்கம்…இந்தசோறுக்கூட சாப்டலைனா எப்படிதங்கம்…

 

வளரபசங்க நல்லா சாப்ட்டாதானே வேலை செய்யமுடியும் நீ வூட்டு புள்ள அதலா என்ற தங்கம் சாப்புட்டுபோடுவான் என்றார் அப்பத்தா…

 

இருவரும் கெஞ்சி கொஞ்சி சாப்பாட்டை வூட்டிவிட்டனர்…

 

சாப்பிட்டு முடித்த பாலாவும் ருக்மணியும்  ஜனனியின் அறைக்கு சென்றார்கள்… அங்கு கட்டிலில் படுத்தவாரு  போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த ஜனனியை பார்த்ததும் ருக்மணியும்,பாலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு அவளின் அருகில் உட்கோர்ந்தனர்..

 

ஜனனிக்கண்ணு எந்திச்சி வா ஒருசாப்புட்டுப்போட்டு வந்து கேம்விளையாடு கண்ணு…

 

எனக்கு இப்போ பசிக்கலைங் அத்தை நீங்க போங்க நா கொஞ்சநேரம் கழிச்சி வாறேனுங்…

 

அக்கா என்ன இது நீங்க அப்பத்தா திட்டுனதுல அழுதுப்போட்டு இருப்பிங்க உங்கள சமாதானபடுத்தோனும்னு நினச்சி வந்தா நீங்க என்னடானா ஜாலியா கேம்விளையாடிக்கிட்டு இருக்கிங்க…

 

ஏ கோபமா இருந்தா கேம்விளையாடக்கூடாதா பாலா???

 

நீ கோபமா இரு ஆனா ஒருவா சாப்புட்டுபோட்டு வந்துருடா கண்ணு…

 

போங்கத்தை நீங்களும் அம்மத்தா திட்ரப்ப எதுவும்பேசாமதானே இருந்திங்க…

 

உனக்குதா அத்தையபத்தி தெரியும்ல கண்ணு அவங்களுக்கு பொட்டபுள்ளைங்கனா வூட்டுவேலையெல்லாம் செஞ்சிப்போட்டு பெரியவங்கள எதிர்த்துப்பேசாம அடக்கஒடுக்கமா இருக்கோனும்னு நினைக்கராங்கடா அதா நீ வேலை செய்யாம இருக்கனு உன்ன திட்டிட்டு இருக்காங்க..

 

பொட்டப்புள்ளைனா இப்படித்தா இருக்கோனும்னு சொன்னதெல்லாம் அந்தக்காலம் அத்தை இப்போலா எல்லா பெண்களும் ஆம்பளைங்க செய்யரதக்கூட சர்வசாதாரனமா செய்யராங்க தெரியும்ங்ளா???

 

அது அப்படி இல்லைக்கண்ணு   உங்களோட சாதனைகாளையும் நாங்க பாராட்றோம்  அதேசமயம் நாம குடும்ம பெண்கள் நாமபண்ற ஒரு சின்ன தப்புக்கூட நம்மலோட குடும்பத்தையே பாதிக்கும்ங்ரதையும் மறந்துரக்கூடாது.இந்த உலகத்துல நாம மட்டும் தனியா இல்லை புரியுதாக்கண்ணு…

 

உனக்கு போட்ஸ்னா ரொம்ப புடிக்கும் நீ காலேஜ் டைம்ல எங்க விளையாட்டுபோட்டி நடந்தாலும் உன்ற  மாமாவும் உன்ற அப்பவும் பொம்பளைபுள்ளைய அவ்வளவுதூரம் எப்படி அனுப்பரதுனு தயங்குனப்ப உன்ற அம்மத்தா உனக்காக பேசி அனுப்பிவச்சாங்கதானே.அத்தைக்கு தெரியும்டா பொட்டபுள்ளைங்க வூட்டுக்குள்ளையே முடிங்கிப்போககூடாதுனு அதேசமயம் நம்ம பாரம்பரியம்,குடும்ப கௌரவத்தையும் நீ காப்பாத்தோனும்னு நினைக்கராங்கடா…

 

ஐயோ அத்தை போதும் போதும் உங்க மாமியாரோட புராணம்.எனக்கும் அப்பத்தாவபத்தி தெரியும் இருந்தாலும் அவங்கட்ட ஒரண்டை இழுக்கரது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..

 

அவளின் காதை வலிக்காமல் பிடித்து திருகியவர் வாலு உன்ன என்னத்தா பண்றதுனே தெரியலை சரி இந்தா  எந்திருச்சி  ஐஸ்கிரிம் சாப்புடு அண்ணா வாங்கிட்டு வந்து குடுத்துப்போட்டு போனாங்க…

 

ரொம்ப தேங்ஸ் அத்தை…

 

 

அடிப்பாவி அக்கா உன்ன போய் பாவம்னு அப்பாத்தாக்கிட்ட பேசுனேன்பாரு என்ன சொல்லோனும்…

 

 

சரி சீக்கரம் சாப்புட்டுபோட்டு வா அத்தைய பாத்துப்போட்டு வரலாம்…

 

ஐயோ நா வரலைப்பா அங்கவந்தா அம்மா அம்மத்தா திட்டுனதவிட இன்னும் அதிகமா திட்டுவாங்க..நீ மட்டும் போயிட்டு வா…

 

உங்கல வந்து கூப்பிட்டேன் பாருங்க என்ன சொல்லனும் உங்கலைலா அப்பத்தா திட்டரதுல தப்பே இல்லை என்றவன் எழுந்து சென்றான்…

 

அப்பத்தா நா அத்தைவூட்டுக்கு போயிட்டு வாறேனுங்க…

 

உன்ற அத்தை இன்னைக்கு குச்சிகாட்டுக்கு களைவெட்ட ஆள்வந்துருக்குனு அங்கதா இருப்பா போய் பாரு…

 

சரிங் அப்பத்தா…பைக்கை அத்தைவூட்டு வாசலில் நிறுத்திவிட்டு வூட்டிற்கு பின்னாள் இருந்த தோட்டத்திற்கு வரப்பில் நடந்துக்கொண்டே வயல்லைகளை சுற்றிப்பார்த்தவாறு நடந்து சென்றான்…

 

ஒருகாலத்தில் முப்போகமும் நெல்விளைந்தவயலின் இன்னு தண்ணீர் பற்றாக்குறையால் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளிக்கிழங்கு செடியும் ஒருபக்கம் எழுமிச்சை தோப்பும் மாடுகளுக்கு தீவனப்பயிரும் காய்ச்செடிகளும் தோட்டத்தில் விளைந்துக்கொண்டிருந்தன…அதை பார்ப்பதற்கே பச்சைபசேல் என கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்தது…

 

குச்சிக்காடு(மரவள்ளிக்கிழங்கு)ட்டில் ஆட்களுடன் சிவகாமியும்  ஊர்க்கதைகளை பேசிக்கொண்டே வேலை செய்துக்கொண்டிருந்ததார்.…

 

சிவகாமி அங்கப்பாரு உன்ற அண்ணன் மகன் வறான்…

 

ஆரு பார்த்தியா அவன் எதுக்கு இங்க வரான் என சொல்லிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தவர் வரப்பில் நடந்து வந்துக் கொண்டிருந்த பாலாவை பார்த்ததும் பாலாக்கண்ணு எப்போ வந்த??

 

இப்போதா கொஞ்சநேரத்துக்கு முன்னாடிங்கத்தை ஏனுங் அத்தை நீங்க களைவெட்ரிங்க??

 

ஏங்கண்ணு நம்மகாட்ல நாம வெட்டாம ஆருவெட்டுவாங்க?? இப்போதா இம்புட்டு வசதி வாய்ப்பெல்லாம் நாங்க சின்னபுள்ளைங்ளா இருந்தப்ப என்ற அப்பா விவசாயம்தா பண்ணாங்க அப்போ நானும் என்ற அண்ணனும் ஆள்க்கூட லீவுநாட்கள் வேலை செய்வோம் தெரியுமா???

 

அதுக்கில்லைங் அத்தை இன்னும் ரெண்டு ஆள்வர சொல்லிருக்கலாம்லனு சொல்லவந்தேன்…

 

ஆள் கூப்பிட்டேன் கண்ணு எல்லாரும் குட்டைவேலைக்கு போயிக்கிட்டு காட்டுவேலைக்கு வரமாட்ராங்க அதா நானும் செத்த கூட வெட்டுனா காடு மூயும்ல அதே வெட்டிப்போட்டு இருக்கேன்…

 

நீ வூட்ல போய் உட்கோர்ந்துருகண்ணு இன்னும் கொஞ்சநேரத்துல ஆள வூட்டுக்கு வுட்டுப்போட்டு வாறேன்…

 

இன்னும் கொஞ்சநேரம்தானேங் அத்தை நானும் உங்கக்கூட செத்த வெட்றேன் களக்கொத்து எங்க இருக்குங் அத்தை…

 

நீ எதுக்குக் கண்ணு வெயில்ல வேலை செய்யோனும் நீ வூட்டுக்குப்போ நா வாறேன்…

 

வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு அம்மா ஏய் சிவாகாமி அதா பையன் வெட்டேங்ரான்ல அப்பரமென்ன செத்த வெட்டித்தா பாக்கட்டுமே எலேய் தம்பி கொத்துப்பாரு அங்க வரப்புல இருக்கு போய் எடுத்துப்போட்டுவந்து வெட்டு…

 

வரப்பில் கிடந்த கொத்தை எடுத்துவந்து பாலாவும் ஆட்களுடன் களைவெட்டியதை பார்த்த பெண்கள் பாரவாலை பாலா நல்லாதா களவெட்ர…

 

இது என்ன பெரியவிசயமுங் அக்கா கண்பாத்தா கை வேலைசெய்யுது..நாம என்ன எல்லாவேலையும் பொறந்தப்பையே கத்துக்குட்டா வந்தோமுங் அக்கா…

 

 

சிவகாமி உன்ற அண்ணன் பையன் காட்டுவேலைக்கூட நல்லாத்தா செய்யரான்..கண்டிப்பா உன்ற மருமகன் எந்தவேலை செஞ்சாலும் பொழச்சிக்குவான்…

 

அக்கா இது என்ற அண்ணனோட வாரிசாச்சே சோடைபோகுமா என்ன??என்ற அண்ணன் பசங்க ரெண்டுமே தங்கம்…

 

அதுவேனா உண்மைத்தா சிவகாமி வூட்டுக்கு போனவுடனே உன்ற மருமகனுக்கு சுத்திப்போடு எங்க கண்ணே பட்ருக்கும்…

 

பாலாவும் அவர்களுடன்  பேசிக்கொண்டே வேலை செய்தான்…

 

ஏங்கண்ணு இம்புட்டு எழச்சிப்போயிட்ட. ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாலையா???

 

ஆமாங்த்தை பசிக்கு சாப்டலாம் அம்புட்டுதே…

 

ஏ பாலா உன்ற அப்பா உன்ன நாமக்கல்லையே பெரிய ஸ்கூல்லதானே படிக்கவச்சாரு அங்கக்கூடவா சாப்பாடு நல்லால???

 

இங்க வூட்ல அம்மா சமச்சி பாசத்தோட வூட்ரதும் அங்க பத்தோடு பதினொன்னா போட்டத சாப்டரதுக்கும் வித்தியாசம் இருக்குதானேங் அக்கா…

 

பாலாக்கண்ணு ஜனனி என்ன பண்றா அவளையும் உங்கூடவே கூட்டிப்போட்டு வரவேண்டியதுதானே??

 

அக்கா அம்மாக்கூட எதோ வேலைசெஞ்சிட்டு இருந்தாங்க அதா நாமட்டும் வந்தேனுங் அத்தை…

 

ஆரு என்ற மகளா வேலை செஞ்சா இத நா நம்பனுமா கண்ணு…

 

நெசமாத்தானுங் அத்தை நீங்க அம்மாக்கிட்டையே கேளுங்களேன்…

 

ம்க்கும் என்ற அண்ணிக்கிட்டதானே அவளுக்கு செல்லங்குடுத்து கெடுக்கரதே என்ற அண்ணனும் அண்ணியும்தான்…

 

சரி விடுங்க அத்தை நம்ம வூட்ல இருக்கவரைக்கும்தானே அக்காவால ஜாலியா இருக்கமுடியும்…

 

இதசொல்லி சொல்லியே அண்ணனும் அண்ணியும் ஏவாய அடைக்கராங்கனா இப்போ நீயுமா கண்ணு…

 

அக்கா மணி ரெண்டரை ஆகிப்போச்சு நீங்க அல்லாரும்  வூட்டுக்குபோங்க…நாளைக்கு இன்னும் ஆள்வந்தா கூட்டிட்டு வாங்க…

 

சரி சிவகாமி ஆள்கூப்புட்டு பாக்கறோன் வந்தா கூட்டிப்போட்டு வாறோம்…

 

வேலைமுடித்து ஆட்களை வூட்டிற்கு போகசொல்லிவிட்டு இருவரும் வூட்டிற்கு வந்தனர்…

 

 

டாம் அண்ட் ஜெர்ரி 3

 

மாலைநேர பொழுதில் வூட்டின் கொள்ளைப்புரத்தில் உள்ள மாமர நிழலில் உட்கோர்ந்து டீ குடித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தனர் கிருஷ்ணன் குடும்பத்தினர்…

 

அப்போது சிவகாமி கையில் பாத்திரத்துடன் வந்தவர் அல்லாரும் இங்கனதா இருக்கிங்ளா?? என கேட்டுக்கொண்டே வந்தவர் அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் தன் அன்னையின்  அருகில் உட்கோர்ந்தவர் கையில் வைத்திருந்த பாத்திரத்தை ருக்மணியிடம் கொடுத்து  அண்ணி இதுல எள்ளுருண்டை இருக்கு பார்த்திக்கும் பாலாவுக்கும் புடிக்குமேனு இப்போதா செஞ்சி எடுத்துப்போட்டு வந்தேன் எல்லாருக்கும் எடுத்துக்குடுங்க அண்ணி…

 

 

காலைல இருந்து ஆள்க்கூட களை வெட்டிப்போட்டு வந்து கஷ்டப்பட்டு உடனே செஞ்சிக் கொண்டுவராட்டி என்னங்க்கா..

 

இதுல என்னங் அண்ணி கஷ்டம் நானும் ஒருவாரமா நம்ம தோட்டத்துல எள்ளு அடிச்சதுல இருந்து பார்த்திக்கு செஞ்சி கொண்டு வரலாம்னு நினச்சிட்டே இந்தேன் இன்னைக்கு பாலாவும் வந்துருக்கரதால ரெண்டுபேருக்கும் புடிக்குமேனு செஞ்சி எடுத்துப்போட்டு வந்தேன்..

 

ஏனுங்ம்மா இப்படி என்னைக்காவது ஒருநாள் எனக்கு புடிச்சத செஞ்சிக் குடுத்துருக்கிங்ளா??

 

உனக்கு அது ஒன்னுத்தா குறைச்சல் ஏன்டி ஒருநாளாவது கூடமாட எதாவது ஒருவேலை செஞ்சிகுடுத்துருக்கியா?? எப்பப்பாரு செஞ்சிக்குடுத்தா நல்லா உட்கோர்ந்து திங்கமட்டும் தெரியுது…

 

பாருங் மாமா உங்க தங்கச்சி என்ன வையராங்க…

 

விடு சிவா அம்மணி சின்னபுள்ளைத்தானே அதப்போய் வஞ்சிக்கிட்டு இருக்க…

 

ஆமாடா இப்படியே அவள செல்லங்குடுத்து தலைல தூக்கிவச்சிட்டு ஆடு போர இடத்துல என்னபுள்ள வளர்த்து வச்சிருக்காங்கனு நம்ம குடும்பத்தத்தா திட்டபோறாங்க..

 

அப்படிலா எதுவும் ஆகாதுங்ம்மா அம்மணி இடத்துக்கு தகுந்தமாரி தன்ன மாத்திக்குவா அம்மா…

 

அதையும் பாக்கத்தானே போறோம்…

 

அண்ணி எங்க பார்த்திய காணாம் இன்னும் வரலையா??

 

பண்ணைக்குதா போயிருக்கானுங் அக்கா இப்ப வந்துருவானு நினைக்குறேன்…

 

அப்போது வாசலில் புல்லட்டை நிறுத்திவிட்டு வந்த பார்த்தி என்ன ஏம்பேர் அடிபடுது எனக்கேட்டுக்கொண்டே பாலாவின் அருகில் உட்கோர்ந்தான்…

 

நாந்தா உன்னை காணோமேனு கேட்டேன் பார்த்தி…

 

பண்ணைக்கு போயிருந்தேனுங் அத்தை அதா வர கொஞ்சம் லேட்டாயிடுச்சுங்…

 

அம்மா கையெலென்ன பாத்திரம்???

 

அக்கா உங்களுக்கு புடிக்குமேனு எள்ளுருண்டை செஞ்சி கொண்டு வந்தாங்க பார்த்தி…

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கிருஷ்ணன் போன் அடித்ததும் அதை எடுத்துக்கொண்டு தனியாக பேச சென்றார்…

 

சரி அத ஏன் கையில் வச்சிப்போட்டே இருக்கிங்க இங்க குடுங்க அதை வாங்கியவன் பாலாவுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான்…

 

டேய் பாலா அவன் எதுக்கு என்ற அம்மா செஞ்சிக் கொண்டுவந்தத  சாப்பிடரான் அவங்கிட்ட சொல்லு சோத்துக்கு உப்புப்போட்டு திங்கர ரோசம் உள்ளவனா இருந்தா என்ற அம்மா கொண்டுவந்தத அவன சாப்டவேணாம்னு…

 

ஜனனியின் இந்தவர்த்தையை கேட்டு அனைவரும் அதிர்ந்துபோய் பார்த்தனர்..சிவகாமி கோபமாக எழுந்து ஜனனியை அடித்தே விட்டார்…

 

ஏய் சிவா…

 

அத்தை என்ன பண்ணிப்போட்டிங்க…

 

அக்கா..

 

அனைவரும் அதிர்ச்சிலிருந்து மீண்டு சிவகாமியை தடுத்தனர்…

 

அல்லாரும் கொஞ்சம் பேசாம இருக்கிங்ளா??இதுல ஆரும் தலையிடவேணாம்…

 

என்னடி நானும் பாத்துட்டே இருக்கேன் வாய் ரொம்ப நீளுது   பொட்டப்புள்ளையா லட்சனமா இல்லைனா செவுனிய பேத்துப்போடுவேன் பாத்துக்க…

 

இன்னும் ரெண்டு போடு சிவகாமி வரவர பெரியவங்க சின்னவங்கனு மட்டுமரியாதை இல்லாம பேசிட்டு திரியரா…

 

நீங்க வேர ஏனுங் அத்தை செத்த சும்மா இருங்க.. அக்கா வுடுங்க அம்மணி சின்னபுள்ளைத்தானே எதோ தெரியாம பேசிருக்கும் எடுத்து சொன்னா புரிஞ்சிக்கும்…

 

இன்னும் என்னங் அண்ணி சின்னபுள்ளை 24 வயசாகுது எங்க எப்படி பேசோனும்னு தெரியவேணாம்…

 

ஜனனி கன்னத்தை பிடித்தவாறு அழுதுக்கொண்டே என்ற அம்மாக்கிட்ட அடிவாங்கி வச்சிப்போட்டல  இதுக்கு பதிலுக்கு பதில் உனக்கு நா திருப்பிதருவேன் பாருடா பார்த்தியை பார்த்து கோபமாக பேசிவிட்டு உள்ளே சென்றாள்…

 

பாத்திங்ளா அண்ணி இவ அடிவாங்கியும் திருந்தல அடியேய் நீ இப்படியே பேசிப்போட்டு திரிஞ்சேனு வச்சுக்க தோல உச்சிப்போடுவேன்…

 

விடுங் அண்ணி அவ கோபத்துல பேசிட்டுப்போறா..எல்லாம் இவனால வந்தது ஏ பார்த்தி அவதா கேட்டால அவக்கிட்ட ரெண்டு குடுத்துருந்தா இந்த சண்டையே வந்துருக்காதுல…

 

சாரிம்மா அத்தை ஜனனிய அடிப்பாங்கனு நா நினைக்கல…

 

ஓ சாரிய கொண்டுப்போய் குப்பைல தூக்கிப்போடு…

 

அண்ணி இப்போ எதுக்கு பார்த்திய ஏசுரிங்க…

 

சாரி மாப்பிள்ளை  ஜனனி அப்படி பேசுனதுக்கு நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்…

 

ஐயோ மாமா நீங்கப்போய் ஏங்கிட்ட மன்னிப்பு கேட்டுப்போட்டு இருக்கிங்க நா ஜனனி பேசுனத தப்பாவே எடுத்துக்கல…

 

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே போன் பேச சென்ற கிருஷ்ணன் திரும்ப வந்தவர் எல்லாரும் அமைதியாக இருப்பதை பார்த்து ஏ அல்லாரும் அமைதியா இருக்கிங்க??அம்மணிய எங்க காணாம்?? நா போரப்ப இருந்துச்சே??

 

நடந்ததை பாலா சொன்னதும் கிருஷ்ணன் பார்த்தியை கோபமாக ஏன்டா அறிவுக்கெட்டவனே இன்னும் நீ என்ன சின்னபையனா ஏழுகழுதை வயசாகுது இன்னும் பொட்டப்புள்ளைக்கிட்ட எசிலிபோட்டே திரியர…

 

சாரிங்ப்பா நா இப்படி ஆகும்னு நினைக்கல…

 

அண்ணா பார்த்திமேல எந்த தப்புமில்லை எல்லாம் அவ பேசுனதுதான் பார்த்திய வையாதிங்க…

 

சிவகாமி இனி அம்மணிய அடிக்காதம்மா அம்மணிக்கு எடுத்துசொன்னா புரிஞ்சிக்கும்…

 

டேய் பாலா போய் நா கூப்பிட்டேனு அம்மணிய கூட்டிப்போட்டு வா…

 

சரிங்ப்பா பாலா சென்று ஜனனியை கூட்டிவந்ததும் அம்மணி இங்க வந்து உட்கோருங்க…

 

மாமா உன்ற  அம்மாவ திட்டிப்போட்டேன் போதுமா இப்போ கோபம் போயிடுச்சா…

 

நீ கேட்டதால மாமா இன்னைக்கு அல்லாருக்கும் அவரேஞ்சர்ஸ்க்கு டிக்கெட் போட்டுட்டு வந்துட்டேன்…

 

ஐ சூப்பர் மாமா…ரோம்ப தேங்ஸ் மாமா அப்ப நாம்போய் ரெடியாகட்டுமா???

 

சரி அம்மணி நீ போய் ரெடியாகு என்ன அல்லாரும் அப்படியே உட்கோர்ந்துருக்கிங்க நீங்களும் போய் ரெடியாகுங்க…

 

அப்பா நா வரல இன்னைக்கு என்னோட ப்ரெண்ட் சந்ருக்கு பர்த்டே அவன் என்னையும் பார்ட்டிக்கு கூப்புட்ருக்கான்…

 

சரி நீ போ ஆனா நைட் ரொம்ப நேரம் பண்ணிடாத நேரமா வந்துரு…

 

சரிங்ப்பா…

 

படம் பாத்துவிட்டு ஹோட்டல்ல சாப்புட்டுபோட்டு அனைவரும் வூட்டிற்கு வந்தனர்…

 

காரிலிருந்த இறங்கிய ஜனனி பார்த்தி பைக் இல்லைததை பார்த்ததும் மாமா இன்னும் பார்த்தி வூட்டுக்கு வரல பாத்திங்ளா?? போட்டுக்கொடுத்தாள்…

 

நா அவங்கிட்ட  சாயிந்தரமே நேரமா வூட்டுக்கு வந்துருனு சொல்லிவிட்டும் மணி பதினோன்னு ஆகுது இன்னும் வூட்டுக்கு வராம  என்னபண்றான்…

 

அண்ணா பார்த்தி என்ன சின்னப்பையனா ப்ரென்ட்ஸ்க்கூட பேசிட்டு இருந்துருப்பான் கொஞ்சநேரம் ஆகிருக்கும் வந்துருவான் நீங்க போங்க…

 

ஏன்டி உனக்கு என்ற பேரன போட்டுக் குடுக்கலைனா தூக்கமே வராதா???

 

நானெங்கிங் அப்பத்தா போட்டு குடுத்தேன் பார்த்தி வூட்டுக்கு வரலைனு மட்டும்தானே சொன்னேன்…

 

அடியேய் உன்னபத்தி எனக்கு தெரியும்டி ஏங்கிட்டையே உன்ற நடிப்ப காட்ரியாக்கும்..

 

அம்மா இப்ப எதுக்கு அம்மணிய திட்ரிங்க அம்மணி சொல்லலைனா எனக்கு தெரியாதா??

 

என்ற பேரன் கூடபடிச்ச பசங்கள பாக்கத்தானே போயிருக்கான் அவங்கக்கூட பேசிப்போட்டு வாரதுக்கு கொஞ்சம் முன்னபின்னத்தா ஆகும் அதுக்கு நீ ஏசுவியாடா…

 

நீங்கதான்ம்மா அவன செல்லங்குடுத்து கெடுக்கரிங்க எப்படியோ போங்க நீங்களாச்சு அவனாச்சு கிருஷ்ணன் கோபமா உள்ளே சென்றார்…அவர்க்கூடவே ருக்மணியும் பாலாவும் உள்ளே சென்றனர்

 

ஏய் ஜனனி வா வூட்டுக்கு போலாம்…

 

நா அங்கவந்தா காலைல வெள்ளன எழுப்பிவுட்டு வேலை செய்ய சொல்லுவிங்க நா வரமட்டேன் போங்ம்மா…

 

நீ திருந்தவே மாட்ட எப்படியோ போ ஏங்க நீங்க வாங்க போலாம் சிவகாமியும் சந்திரனும் கிளம்பிச்சென்றனர்…

 

நீ எதுக்கு உன்ற அம்மாக்கூட போகலைனு எனக்கு தெரியும்டி என்ற பேரன் வரவரைக்கும் முழிச்சிட்டு இருந்து காலைல என்ற மகங்கிட்ட போட்டு குடுக்கத்தானே இங்க இருக்க…

 

கண்டுபுடிச்சிட்டிங்ளே அம்மத்தா சாயிந்தரம் என்ன என்ற அம்மாக்கிட்ட அடிவாங்க வச்சான்ல அதுக்கு பழிதீக்கவேணாம் அதுக்குத்தா இங்கையே தூங்கப்போறேன்  அம்மத்தா…

 

நா இருக்கும்போது என்ற பேரன நீ பழிதீக்கப்போறியா அதையும் பாக்கலாம் போடி…

 

ம்ம் பாருங்க ஆரு வேணானாங்க அம்மத்தா…

 

இவ எதோ ப்ளான் பண்றா போலையே இத பார்த்தி வந்தவுடனே சொல்லனுமே யோசித்துக்கொண்டே அங்கிருந்த சோபாவில்  உட்கோர்ந்திருந்தவர் அப்படியே தூங்கி விட்டார்…

 

அவர் தூங்கியதை பார்த்தவள் சிரித்துக்கொண்டே ஏங்கிட்ட இருந்து பேரன  காப்பாத்தரேனு இப்படி தூங்கிட்டிங்ளே அம்மத்தா…

 

சிறிது நேரம் கழித்து தனது பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே வந்த பார்த்தியின் நடையில் உள்ள தடுமாற்றத்தை பார்த்தவள் டேய் நீ குடிச்சிருக்கியா?? இரு மாமாக்கிட்ட சொல்றேன் மாமா…என  கத்தப்போனவளின் வாயை தன் கைகளால் பொத்தினான்…

 

ப்ளீஸ் ஜானு அப்பாக்கிட்ட சொல்லிடாத நா வேணும்னா குடிக்கலடி என்னோட ப்ரண்ட்ஸ்லாம் சேர்ந்து ஜுஸ்ல கலக்கி குடுத்துப்போட்டானுவ நானும் தெரியாம குடிச்சிப்போட்டேன்…

 

அவனின் கையை எடுத்துவிட்டவள் சரி நா மாமாக்கிட்ட சொல்லாம இருக்கோனும்னா நா சொல்ரதெல்லாம் நீ பண்ணோனும் சரியா??

 

சரி பண்றேன் ஆனா அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிப்போடாதடி…

 

உண்மையாவா நா என்ன சொன்னாலும் பண்ணுவியாடா??

 

உன்றமேல சத்தியமா பண்றேன்டி…

 

என்ற மேல சத்தியம் பண்ணி என்ன பரலோகம் அனுப்பலாம்னு பாக்கரையா அந்த கதைதான் என்றக்கிட்ட நடக்காது ஒழுங்க ஓம்மேல சத்தியம் பண்ணு…

 

சரி பண்ணித் தொலையறேன் ஏம்மேல சத்தியமா நீ சொல்ரத நா செய்யறேன் போதுமா…

 

இது போதும் நீ சாயிந்தரம் என்ற அம்மாக்கிட்ட அடிவாங்கிவச்சல அது தப்புனு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு நா மாமாக்கிட்ட சொல்லாம இருக்கேன்…

 

நா சத்தியமா அத்தை உன்ன அடிப்பாங்கனு எதிர்பாக்கவே இல்லைடி என்னநம்பு..

 

அதலா எனக்கு தெரியாது நீ இப்போ ஏங்கால்லல விழுந்து மன்னிப்பு கேக்கனும் அப்போதா நா மாமாக்கிட்ட சொல்லாம இருப்பேன்..

 

ஜானு நா உன்னவிட வயசுல மூத்தவன்டி என்னப்போய் உங்கால்ல விழசொல்ர…

 

இப்போ நீ விழப்போரியா?? இல்லையா?? சரி நா மாமாவ கூப்பிடறேன்…

 

ஐயோ வேணாம் அதமட்டும் பண்ணிடாதடி இரு விழுந்து தொலைக்கறேன்…ஆனா இதமட்டும் வெளிய சொல்லிடாதடி அல்லாரும் சிரிப்பாங்க…

 

பாக்கலாம் பாக்கலாம் நீ மொதல்ல கால்ல விழு…

 

பார்த்தி ஜனனியின் காலில் விழுந்து என்ன மன்னிச்சிரு ஜானு அவன் சொல்லும்போதே ஜனனி அதை போட்டோ எடுத்துவிட்டாள்…

 

ஏய் இப்போ எதுக்கு போட்டோ எடுத்த அத டெலிட்பண்ணுடி…

 

முடியாது போடா என சொல்லிக்கொண்டே தனது அறைக்கு ஓடிப்போய் கதவடைத்துக்கொண்டாள்…

 

எருமை இருடி உன்ன காலைல பாத்துக்கறேன்…

 

 

டாம் அண்ட் ஜெர்ரி 3.1

 

காலையில் பார்த்தி நைட் குடித்த சரக்கினால் வந்த தலைவிலியை சாமாளிக்க விரல்களால் தலையை அழுத்தி பிடித்தவாறு சோபாவில் உட்கோர்ந்திருந்தான்…

 

அப்பத்தா அவனருகில் உட்கோர்ந்தவாரு நியூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்…

 

வெள்ளனவே எழுந்து தோட்டத்திற்கு சென்றுவிட்டு வந்த கிருஷ்ணன் பார்த்தி உட்கோர்ந்திருப்பதை பார்த்து டேய் பார்த்தி மணி ஒன்பதாச்சு  இன்னும் பண்ணைக்கு போகாம இங்க உட்கோர்ந்துருக்க???

 

கொஞ்சம் தலைவலிக்குது அதானுங்ப்பா போகலை…

 

ஏ என்னாச்சு உடம்பு சரியில்லையா?? அதுக்குத்தா நேரத்துக்கு வூட்டுக்கு வந்து சாப்புட்டு தூங்கனும்ங்ரது பாதிசாமம் வரைலும்  தூக்கத்த கெடுத்துப்போட்டு ஊரசுத்திப்போட்டு வந்தா இப்படித்தான் ஆகும் சரி கிளம்பு ஹாஸ்பிட்டல் போலாம்…

 

ஹாஸ்பிட்டல்லா தேவையில்லைங்ப்பா டேப்லெட் போட்டா சரியாகிடும்…

 

அப்போது தூங்கி எழுந்து வந்த ஜனனி மாமா ஹாஸ்பிட்டல்லாம் தேவவையில்லை அத்தைய ஒரு எழுமிச்சம் பழத்த புழிஞ்சி ஜீஸ்போட்டு கொண்டுவந்து கொடுக்க சொல்லுங்க இதுதா ஹேங்ஓவர்க்கு நல்ல மருந்து நா நைட்டுதா நெட்ல பாத்தேன்…பார்த்தியை பார்த்து பழிப்புகாட்டி வெறுப்பேத்தினாள்…

 

அடியே பாதகத்தி இப்படி போட்டுக்குடுத்துட்டியேடி இரு உன்ன அப்பரம் கவனிச்சிக்குறேன் சைகையால் மிரட்டினான்…

 

அத அப்பரம் பாத்துக்கலாம் இப்போ மாமாக்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க போற??இவளும் சைகையால் பேசினாள்…

 

ஹேங்ஓவரா?? டேய் என்னடா  அம்மணி சொல்லுது ஒழுங்க உண்மைய சொல்லு??

 

அது ஒன்னும் இல்லைங்ப்பா அவ சும்மா சொல்ரா…

 

நா உண்மையத்தானுங் மாமா சொல்றேன் நைட்டு இவன் குடிச்சிப்போட்டு நடக்கமுடியாம வந்தான் மாமா என்னவேர உங்கக்கிட்ட சொல்லவேணாம்னு மெரட்டுனான்…

 

கிருஷ்ணன் கோபமாக பார்த்தியை அறைந்தவர் என்னடா பெரியாளா ஆயிட்டோம் தொழில பாத்துக்கறோம் இனி நம்மல ஆரு கேக்க போராங்கங்ர திமிரா தொலச்சிப்போடுவேன் தொலச்சி…

 

அடிக்கர சத்தம்கேட்டு சமயலறையிலிருந்து வெளிவந்த ருக்மணியும் கார்டனில் இருந்து வந்த பாலாவும் கிருஷ்ணனை தடுத்தனர்..

 

அப்பத்தா கிருஷ்ணனை தடுக்காமல் வேடிக்கைபார்த்தார்…

 

ஏனுங்க என்னபண்றிங்க இப்போ எதுக்கு பையன அடிச்சிங்க…

 

ஏனுங்ப்பா அண்ணாவ அடிச்சிங்க??

 

உன்ற மகன் என்ன பண்ணிப்போட்டு வந்துருக்கானு நீயே அவங்கிட்ட கேளு ருக்கு…

 

பார்த்தி என்னடா பண்ணிப்போட்டு வந்த அப்பா எதுக்கு உன்ன அடிக்கராரு??

 

டேய் அதா உன்ற அம்மா கேக்கரால பதில் சொல்லு??

 

எலேய் பேராண்டி உங்கிட்ட இருந்து இதநா எதிர்பாக்கல உன்ற அப்பன் நாந்தா உனக்கு செல்லங்குடுக்கறேனு திட்டிட்டே இருக்கப்பலா நா கவலைப்படல ஆனா இன்னைக்கு  உன்ற அப்பன் சொன்னது சரியாப்போச்சு நா வளர்த்த வளர்ப்பு தப்புனு இப்போதா தெரியுது…

 

ஐயோ அப்பத்தா நீங்களும் நா குடிச்சிருப்பேனு நம்பரிங்ளா??

 

என்ற மகன் குடிச்சிருக்கமாட்டான் அப்படியே குடிச்சிருந்தாலும் அது பார்த்திக்கு தெரியாம நடந்துருக்கும் எனக்கு தெரியும் என்ன பார்த்தியபத்தி…

 

நீங்களாவது என்ன நம்புனிங்ளேம்மா ரொம்ப தேங்ஸ் அம்மா

 

அப்போது பார்த்தியின் போன் அடித்தது அதில் வந்த பேரைபார்த்ததும் ஸ்பீக்கரில் போட்டவன் நீங்களே கேளுங்க என்றான்…

 

சாரி மச்சா அப்பவும் நா வேணானுத சொன்னேன் பசங்கதா கேக்காம ஜுஸ்ல கலந்து குடுத்துப்போட்டாங்க நீயும் கொஞ்சம் குடிச்சவுடனே கண்டுபுடிச்சி கோபத்துல திட்டிப்போட்டு வந்துட்ட அப்போ இருந்து ஊங்காட்ட சாரி கேக்கோனும்னு கால்பண்ணிட்டே இருந்தேன் நீ கால்ல அட்டென் பண்ணவே இல்லை சாரிடா மச்சா இனி அந்தமாதிரி நடக்காதுடா…

 

டேய் மாப்பிள்ளை நா பேசரத கேக்குதா பிளீஸ்டா மச்சா ஏங்கிட்ட பேசுடா…

 

போனை கட்பண்ணியவன் இப்போ அல்லாரும் கேட்டிங்கல நா தெரிஞ்சி குடிக்கல என்ன நீங்க அப்படி வளர்க்கவும் இல்லை என்னோட ப்ரண்ட்ஸ்தா எதோ விளையாட்டுக்காக பண்ணிப்போட்டானுங்க அதா நா கொஞ்சம் குடிச்சவுடனே கண்டுபுடிச்சி அவனுங்ல நல்லா திட்டிவிட்டுத்தா வந்தேன்… எனக்கே தெரியாம கொஞ்சம் குடிச்சதாலதான் இப்போ இந்த ஹேங்ஓவர் இப்போ நம்பரிங்ளா??நா தப்பு பண்ணலைனு…

 

பேராண்டி இந்த அப்பத்தாவ மன்னிச்சிருடா??

 

அப்பா அடிச்சதுக்கூட வலிக்கல அப்பத்தா நீங்க என்ன நம்பாம இருந்ததுதான் வலிக்குது..நா உங்க வளர்ப்பு அப்பத்தா நா எப்படி தப்பு பண்ணுவேனு நீங்க நினச்சிங்க???

 

 

 

கிருஷ்ணன் பார்த்தியின் கையை பிடித்துக்கொண்டு இந்த அப்பாவ மன்னிச்சிருடா ஏம்பையன் தப்பான வழில போயிட்டானோனு ஒருபயத்துலதான் அடிச்சிப்போட்டேன்…

 

நீங்க என்னோட நல்லதுக்குத்தானே அடிச்சிங்க அது எனக்கு வலிக்கலங்ப்பா…

 

அடிக்கரதையும் அடிச்சிப்போட்டு இப்போ மன்னிப்பு கேட்டா சரியாயிடுமாக்கும் நீ வா பார்த்தி அம்மா உனக்கு தைலம்போட்டு நீவிவிடறேன் பார்த்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்…

 

டாம் அண்ட் ஜெர்ரி.4

 

ருக்மணி பார்த்தியை கூட்டிசென்றதும் கிருஷ்ணன் தனது அறைக்கு சென்றுவிட்டார்..

 

அப்பத்தா கோபமாக அல்லாம் உண்ணாலத்தாண்டி என்ற பேரன் நானே சந்தேகபடரமாதிரி  பண்ணிப்போட்டல அப்பரமா உனௌன கவனிச்சிப்போடறேன் என  கோபமாக ஏசிப்போட்டு சென்றார்…

 

ஜனனி அக்கா நா உங்ககிட்ட இருந்து இத எதிர்பாக்கவே இல்லை என்னதா அண்ணாமேல கோபம் இருந்தாலும் அதுக்காக இப்படியா அப்பாகிட்ட அடிவாங்க வைப்பிங்க…

 

டேய் பாலா நா பொய் ஒன்னும் சொல்லலடா நைட் நடந்தததானே சொன்னேன் இதுல என்றமேல என்ன தப்பிருக்கு…

 

நீங்க உண்மைய சொன்னிங்ளோ பொய் சொன்னிங்ளோ அது எனக்கு தேவையில்லை… உங்களால என்ற அண்ணா அப்பாக்கிட்ட அடிவாங்கிட்டார் இப்போ உங்களுக்கு சந்தோசமா இருக்கும்ல…

 

டேய் பாலா…

 

தயவுசெய்து இப்போ என்றக்கிட்ட பேசாதிங்க்கா நா உங்கமேல செம்ம கோபமா இருக்கேன்  எதாவது பேசிப்புடபோறேன் கோபமாக பேசிப்போட்டு அவனும் தனதறைக்கு சென்றுவிட்டான்…

 

அல்லாரும் போங்க ஆரு வேணாம்னது நேத்து என்ன என்ற அம்மாக்கிட்ட அடிவாங்கிவச்சான்ல அதுக்குதா மாமாக்கிட்ட அவனமாட்டிவிட்டேன்…

 

பார்த்தி டைனிங் டேபிலில் தனியாக உட்கோர்ந்திருப்பதை பார்த்தவள் அவனருகில் சென்று அமர்ந்தாள்…

 

கிச்சனில் பார்த்திக்கு தோசை சுட்டுக்கொண்டிருந்த ருக்மணியிடம் அத்தை அப்படியே எனக்கும் ரெண்டு தோசை …

 

முதல்ல நீப்போய் பல்வெளக்கிட்டு வா கண்ணு தோசை எடுத்துப்போட்டு வாறேன்…

 

அதலா அப்பவே வெளிக்கிட்டேனுங் அத்தை நீங்க சீக்கரமா கொண்டுவாங்க ரொம்ப பசிக்குது…

 

சரி கத்தாத வாறேன் என்றவர் இரண்டு தட்டுகளிலும் தோசையை சுட்டு எடுத்துக்கொண்டு வந்தவர் பார்த்திக்கும் ஜனனிக்கு கொடுத்துவிட்டு ரெண்டுபேரும் சாப்புட்டுட்டு இருங்க ஆம்லெட் போட்டு கொண்டுவறேன்…

 

அம்மா எனக்கு வேணாம் இதுவே போதும்…

 

அடிவாங்குவ பார்த்தி ஒழுங்கா சாப்பிடு வேலை வேலைனு ஓடி எலச்சிப்போய் கிடக்கர…

 

ருக்மணி சென்றதும் சாப்பிட்டு கொண்டிருந்த பார்த்தியை பார்த்தவள் அவனை வம்பிழுப்பதற்காக டேய் பார்த்தி மாமாக்கிட்ட செம்ம அடி வாங்குனபோல…

 

ஏய் ஒழுங்கா போயிடு நானே செம்ம கோபத்துல இருக்கேன் அடிச்சாலும் அடிச்சிப்போடுவேன்…

 

நீ சொன்னவுடானேலா போக முடியாது போடா…

 

எய் நேத்து உங்கிட்ட என்னடி சொன்னேன் அப்பாக்கிட்ட சொல்லாதனுதானே சொன்னேன் அப்பரம் ஏன்டி சொன்ன??

 

அதுவா நானும் நைட்டுதூங்கப்போறப்ப சொல்ல வேண்டாம்னுதா நினச்சேன் ஆனா காலைல எழுந்தவுடனே உன்னால என்ற அம்மா அடிச்சது நியாபகம் வந்துச்சா அதா நீயும் அடிவாங்கனும்னு மாமாக்கிட்ட போட்டுக்குடுத்தேன் எப்புடி…

 

நீ அத்தைக்கிட்ட அடிவாங்குனதுக்கு உன்ற பேச்சுத்தான் காரணம் அதுக்கு நா எப்படி பொருப்பாக முடியும்..

 

நா அப்படி பேசுனதுக்கு நீதானேன்டா காரணம்…

 

ச்சீ..போடி உங்கிட்ட என்ன பேசுனாலும் அது வீண்தான்…

 

அதுதா தெரியுதுல்லடா அப்பரம் எதுக்கு பேசிட்டு இருக்க…

 

அப்போது ருக்மணி அம்லெட் போட்டு எடுத்துவந்தவர் இருவரும் சாப்டாமல் வழக்கடித்துக் கொண்டிருப்பதை பார்த்தவர் ரெண்டுபேரும் பேசாம சாப்டமாட்டிங்ளா??

 

நா இல்லைங்ம்மா இவதான் ஏங்கிட்ட ஒரண்டை இழுக்கரா…

 

நா ஒரண்டையிலாம் இழுக்கலைங்த்தை சும்மா பேசிப்போட்டு இருந்தேனுங்…

 

ஆருகண்ணு  நீ சும்மா பேசிப்போட்டு இருந்த இத நா நம்பனுமா கண்ணு…

 

நம்பிக்கைத்தானே வாழ்க்கைங்த்தை…

 

இந்த தத்துவமெல்லாம் எங்களுக்கும் தெரியும் பேசாம சாப்புடு கண்ணு…

 

பார்த்தி நீ சாப்புட்டுபோட்டு போய் கொஞ்சநேரம் படுத்து தூங்கு அப்போதா தலைவலி சரியாகும்…

 

சரிங்ம்மா…

 

ருக்கமணி போனதும் டேய் பார்த்தி எனக்கு ஒரு பத்தாயிரம் காசு வேணும்டா…

 

பத்தாயிரமா உனக்கு  இப்போ எதுக்குடி வேணும்??

 

புது போன் வாங்கதான்…

 

என்னோடது வாங்கியே ஒருவருசம்தா ஆகுது நீ அதுக்கப்பரம்தானேடி வாங்குன அதுக்குள்ள இப்ப எதுக்கு புதுப்போன்??

 

இது பழசாயிடுச்சுடா அதா புதுசு வாங்கப்போறேன்…

 

அடிங்க அப்படியே ஓடிப்போயிடு வூட்ல வெட்டியா உட்கோர்ந்துக்கிட்டு இருக்க உனக்கு புதுபோன் வேணுமாக்கும் காசு தரமாட்டேன் போடி…

 

அப்போ  காசு தரமாட்ட ???

 

அதா சொல்லிப்போட்டேன்ல தரமுடியாதுனு பேசாம போடி…

 

தன் அருகில் இருந்த போனை கைலெடுத்து பார்த்துக்கொண்டே அப்போ சரி நானும் நேத்து நைட் எடுத போட்டோவை நம்ம பேமிலி வாட்ஸ்அப் குருப்லையும் உன்னோட ப்ரண்ட்ஸ்க்கும் அனுப்பிவிட்டுடறேன்…

 

நீ இன்னும் அந்த போட்டோவ டெலிட் பண்ணலையாடி…

 

ம்கும் இந்த போட்டோதா எனக்கு நா கேட்டதெல்லாம் கிடைக்க உதப்போகுது அப்படி இருக்கப்ப அத  டெலிட்பண்ண நா என்ன லூசாடா …

 

ப்ளீஸ்டி அதமட்டும் டெலிட் பண்ணிடுடி என்னோட ப்ரண்ட்ஸ் அத பாத்தானுங்ண்ணா அதவச்சே என்ன ரொம்ப ஓட்டுவாங்கடி…

 

அப்போ புதுபோன் வாங்கிக்குடு நா டெலிட்பண்றேன்…

 

இந்தமாசம் அப்பாக்குடுத்த சம்பளம் என்னோட ப்ரண்ட் பர்த்டெவுக்கு ஹிப்ட்வாங்கி குடுத்துட்டேன்டி இனி அடுத்தமாசம் சம்பளம் வந்தாத்தான் வாங்கித்தரமுடியும்…

 

உன்றக்கிட்ட இல்லைனா  மாமாக்கிட்ட இருந்து பணம் வாங்கி அப்பரமா போன்வாங்கிக்குடு…

 

நீ என்ன லூசாடி அப்பாக்கிட்ட இப்போ நாம்போய் பணம்கேட்டா  எதுக்குனு கேக்கமாட்டாரா???

 

அதலா எனக்குத்தெரியாது நீ புது போன் வாங்கிக் குடுக்கலைனா நா இந்த போட்டோவ வாட்ஸ்அப்ல போட்டுடுவேன்…

 

ஏன்டி  இப்படி உயிர வாங்குர சரி எப்படியாவது நாளைக்குள்ள வாங்கிதந்துடறேன் போனவாங்கிட்டு போட்டோவ டெலிட்பண்ணாம ஏமத்திடமாட்டியே…

 

அப்படிலா பண்ணமாட்டேன்டா…

 

உன்ன நம்பறேன் சாப்பிட்டு முடித்ததும்   கை கழுவிக்கொண்டு சென்றான்…

 

பார்த்தி போனதும் ஜனனி டேய் பார்த்தி நீ இம்புட்டு வெள்ளந்தியா நா சொல்ரதெல்லாம் நம்பரையேடா உன்ன நினச்சா எனக்கு பாவமாத்தா இருக்கு ஆனா பாவத்த பாத்தா நா ஆசைப்பட்டதெல்லாம் எப்படி வாங்கரது…

 

பார்த்தி தனதறையில் குறுக்கும் நெறுக்குமாக நடந்துக்கொண்டே யோசித்துக்கொண்டிருந்தான்…

 

இம்புட்டு பணத்த ஆருக்கிட்டப்போய் கேக்கரது அம்மாக்கிட்ட கேட்டா அம்மா அப்பாக்கிட்டத்தா வாங்கித்தருவாங்க அப்பா எதுக்குனு கேப்பாங்களே அதுக்கு என்னசொல்ரது???ம்கும் அம்மாக்கிட்டையும் அப்பாக்கிட்டையும் வாங்கக்கூடாது வேர ஆருக்கிட்டையாவதுதான் கடனா வாங்கோனும்…ப்ரண்ட்ஸ்கிட்ட கேட்டு பாக்கலாமா??ஐயோ அவனுங்ககிட்ட வேணாம் அவனுங்க கேள்வியாகேட்டு என்னையவே  உண்மைய சொல்லவச்சிப்போடுவானுங்க…வேர ஆருக்கிட்ட கேக்கலாம் பார்த்தி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே பாலா உள்ளே வந்தான்…

 

பார்த்தி தான் வந்ததைக்கூட கவனிக்காமல் எதோ சிந்தனையில் இருப்பதை பார்த்தவன்  அவனை தொட்டு சுயநினைவுக்கு கொண்டுவந்தவன் அண்ணா என்ன நா வந்ததுக்கூட தெரியாம அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கிங்க???

 

ஒன்னும்மில்லைடா அவசரமா பத்தாயிரம் தேவைப்படுது அதா ஆருக்கிட்ட கேக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்…

 

பத்தாயிரமா எதுக்குங்ண்ணா??

 

எல்லாம் நம்ம வூட்ல அத்தைக்கு பொண்ணா பொறந்துருக்கே அந்த இம்சைக்குதான்…

 

ஜனனி அக்காவுக்கா அவங்களுக்கு எதுக்கு இம்புட்டு பணம் அப்படியே தேவைபட்டாலும் அப்பாக்கிட்ட போய் கேட்டாவே தருவாங்களே அப்படி இருக்கப்போ உங்ககிட்ட எதுக்கு கேக்கராங்ண்ணா…

 

அதையேன்டா கேக்கர நடந்தது அனைத்தையும் பாலாவிடம் சொன்னவன் இப்போ நா மட்டும் வாங்கிக் குடுக்கலைனா போட்டோவ வாட்ஸ்அப்ல போட்ருவேனு மிரட்ராடா…

 

ஹா ஹா ஹா அண்ணா போயும் போயும் ஜனனி அக்கா சொன்னத நம்பி  அவங்க கால்ல விழுந்துருக்கிங்ளே  சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டிருந்தான்…

 

டேய் பாலா நீயுமாடா ப்ளீஸ்டா எதாவது ஐடியாக்குடுடா…

 

இப்போதைக்கு ஒரே ஐடியாதான் அண்ணா இருக்கு…

 

என்னனு சொல்லு பாலா??

 

மாமாக்கிட்ட கேளுங்க மாமாதா காரணம் கேக்காம பணம் தருவாங்க அண்ணா…

 

மாமாக்கிட்டையா அப்பாவுக்கு தெரிஞ்சிட்டா என்னடா பண்றது

 

அப்பாக்கிட்ட சொல்லாதிங்கனு மாமாக்கிட்ட சொல்லிடுங்க…

 

அப்படியா சொல்ர சரி மாமாக்கிட்ட இப்பவே கேட்டுபாக்கறேன் அதவிட்டா வேர வழியே இல்லை…

 

பார்த்தி சந்திரனுக்கு போன்பண்ணினான்…சந்திரன் எடுத்ததும் சொல்லுங் மாப்பிள்ளை காலைல கிருஷ் உங்களுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னான் இப்போ எப்படி இருக்குங் மாப்பிள்ளை……

 

இப்போ நல்லாருக்கேனுங் மாமா…மாமா இப்போ எங்க இருக்கிங்க??? அப்பா உங்கக்கூடவா இருக்காங்க??

 

அதகேக்கவா கூப்பிட்டிங் மாப்பிள்ளை…

 

சொல்லுங் மாமா…

 

நா ஆபிஸ்ல இருக்கேன் உன்ற அப்பா பண்ணைக்கு போயிருக்கான் மாப்பிள்ளை…

 

 

மாமா எனக்கு ஒரு பத்தாயிரம் பணம் வேணும்ங்க மாமா..

 

உங்ககிட்டையே இந்தமாச சம்பளம் இருக்கும்ங்களே மாப்பிள்ளை…

 

அது செலவாயிடுச்சுங் மாமா இப்போ அவசரமா பத்தாயிரம் தேவைப்படுது அடுத்தமாசம் அப்பா சம்பளம் குடுத்தவுடனே உங்களுக்கு தந்துடறேன்..…

 

சரிங் மாப்பிள்ளை தறேன் ஆனா கடனா இல்லை சும்மாவே வாங்கிக்கோங்க…

 

ரொம்ப தேங்ஸ்ங் மாமா நா பணம் வாங்குனத அப்பாக்கிட்ட சொல்லிப்போடாதிங்க அப்பா திட்டுவாரு…

 

சரி சொல்லலைங் மாப்பிள்ளை ஆனா நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டிங்ளே மாப்பிள்ளை…

 

ஐயோ மாமா என்ன இது இப்படிலா கேட்டுப்போட்டு இருக்கிங்க எதுவா இருந்தாலும் நீங்க ஏங்கிட்ட சொல்லலாம்…

 

நாம வசதியானவங்கதான் இல்லைங்ல ஆனா பணம் இருக்குங்ரதுக்காக நாம பண்ற தேவையில்லாத ஆடம்பர செலவுகள் நம்மலையே ஒருநாள் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துரும்ங்க மாப்பிள்ளை எதுவும் நிறந்தரம் கிடையாது நாம சம்பாதிக்ர ஒவ்வொரு பணமும் நம்மளோட உழைப்பு அத நமக்கு எந்தவித்தத்துலையும் தேவைப்படாத ஆடம்பர விசயங்களுக்கு பண்ணவேண்டாம் புரியுதுங்ளாங் மாப்பிள்ளை…

 

புரியுதுங் மாமா உங்களுக்குத்தா தெரியுமே நா தேவையில்லாத எதையும் பண்ணமாட்டேனு இது எனக்கில்லைங் மாமா…

 

அப்போ சரிங் மாப்பிள்ளை மதியம் வூட்டுக்கு வரப்ப வாங்கிக்ரிங்ளாங் மாப்பிள்ளை…

 

சரிங் மாமா…

 

போனை வைத்துவிட்டு பாலா மாமா பணம் தறேனு சொல்லிப்போட்டாங்க அதவாங்கிப்போட்டுப்போய் ஒருபோன வாங்கிட்டு வந்து இந்த இம்சைக்கிட்ட குடுத்துப்போட்டு அந்த போட்டோவ டெலிட் பண்ணவைக்கோனும்…

 

மதியம் வூட்டிற்கு  கிருஷ்ணனும்,சந்திரனும் சாப்பிட வந்தனர்…சாப்புட்டுபோட்டு போறப்ப சந்திரன் கிருஷ்ணன்க்கு தெரியாமல் பார்த்தியிடம் பணத்தை கொடுத்துப்போட்டு சென்றார்…அதைவாங்கியவன் கடைக்கு சென்று அவள்கேட்ட அந்த மொபைலை வாங்கிட்டு வூட்டிற்கு வந்தவன் ஜனனியை தேடினான்…

 

அங்கு உட்கோர்ந்திருந்த அப்பத்தாவை பார்த்ததும் அப்பத்தா எங்க அந்த இம்சை??

 

அவள இப்போ நீ எதுக்கு தேடர கண்ணு…

 

அத நா அப்பரமா சொல்றேன் நீங்க அந்த லூசு எங்க இருக்குனு சொல்லுங்க அப்பத்தா…

 

எப்பவும்போல அவளோட அறைல போன் நோண்டிப்போட்டுதா படுத்துருப்பா போய்பாருகண்ணு…

 

 

சரிங் அப்பத்தா… அவன் சென்றதும் இப்போ இவன் எதுக்கு அந்த அடங்காப்பிடாரியே தேடரான்  அப்போ இதுல ஏதோ இருக்கு வரட்டும் முதல்ல அதகேக்கோனும்…

 

பார்த்தி ஜனனியின் ரூம்கதைவை தட்டிப்பார்த்தும் அவள் ரொம்ப நேரம் ஆகியும் கதவை திறக்காததைக்கண்டு ஒருவேலை துங்கராளோ சரி அப்பரமா வந்து குடுத்துப்போம் திரும்பியவன் இப்போ அந்த லூசு தூங்கிட்டு இருக்கப்பையே போன எடுத்து அந்த போட்டோவ எடுத்து நாமலே டெலிட் பண்ணிப்போட்டா என்ன என யோசித்தவன்   கதைவை திறந்தவன் உள்ளே அவள் படுத்திருந்த இருந்த கோலத்தைப் பார்த்தும் அதிர்ந்துப்போய் வேகமாக உள்ளே சென்று அவள் தலையில் நங்கென்று கொட்டினான்…

 

தலையில் கொட்டு விழுந்ததும் வலியில் தலையை தேய்த்துக்கொண்டே எழுந்து உட்கோர்ந்தவள் காதிலிருந்த கெட்போனை  கழட்டியவள்  ஏன்டா எருமை தலைல கொட்டுன…

 

டாம் அண்ட் ஜெர்ரி.4.1

 

ம்ம் கொட்டாம உன்ன கொஞ்சுவாங்ளாக்கும்…

 

இப்ப நானென்ன பண்ணேன்டா??

 

என்ன பண்ணியா ஏய் எருமை முதல்ல குனிஞ்சி உன்ன பாருடி…

 

நா நல்லாத்தானே இருக்….சொல்லிக்கொண்டே தன்னை பார்த்தவள் அதிர்ந்துப்போய் வேகமாக எழுந்து நின்று விலகிருந்த நைட்டியை சரி செய்தவள் கோபமாக ஏன்டா எருமை ஒரு பொம்பள புள்ளையோட ரூம்க்கு வரும்போது கதவை தட்டிட்டு வரோனும்னு உனக்கு அறிவில்லையாடா…

 

அடிங் ஆருக்குடி அறிவில்லைங்ர நா எம்புட்டு நேரமா கதவ தட்டுனேன் தெரியுமா??நீ இந்த எழவ காதுல மாட்டிக்கிட்டு படுத்துருந்தா அதுக்கு ந என்ன பண்றது…

 

உன்ன அத்தை திட்டரதுல தப்பே இல்லடி…

 

இந்தமாதிரி நீங்க உங்களுக்கே தெரியாம பண்ற சின்னவிசயங்கள் கூட பாக்கர ஆண்கள் உங்கள தப்பா பாக்க வைக்கும் அதுவே தவறுக்கு ஆரம்பமாகுது..இந்த உலகத்துல ரெண்டே விதமான ஆண்கள்தான் இருக்காங்க ஒருத்தன் வாயிப்பு கிடைக்காததால நல்லவனா இருக்கான் இன்னொருத்தன் வாயிப்பு கிடைச்சதாதல அயாக்கியனா இருக்கான்…அந்த வாயிப்ப நாமலே எதுக்கு உருவாக்கித்தரனும்…

 

டேய் பார்த்தி அப்போ நீயும் என்ன தப்பாதா பாத்தியா??

 

உண்மைய சொல்லனுமா??இல்லை பொய் சொல்லனுமாடி???

 

ம்ம் உண்மையவே சொல்லுடா??

 

ஒருவேலை இந்த இடத்துல வேர ஒருபொண்ணு இருந்துருந்தா எனக்கும் தப்பா தோனிருக்கலாம் என்னோட வளர்ப்பு சரியா இருந்ததால அந்த சலனத்த வெளியத்தெரியாம மறச்சிருப்பேன்.ஆனா துளிக்கூட சலனமே படாம இருந்துருக்கமாட்டேன் எல்லா ஆண்களும் சலனப்படதா செய்வாங்க அத தன்னோட வூட்டு வளர்ப்ப நினச்சி சிலர் மறைப்பாங்க பலர் எதபத்தியும் கவலைப்படாம தப்புனு தெரிஞ்சிம் அத செய்வாங்க …

 

நீ நா குழந்தையில இருந்து தூக்கி விளையாடுன குட்டி பொம்மைதான்.. அதனால ஏ முன்னாடி நீ எப்படி வந்தாலும் எனக்கு அது தப்பா தெரியாது…

ஒருவேலை நீ என்னோட மனைவியா ஆகரப்ப அது மாறலாம் அதுவரைலும் நீ நா தூக்கிவச்சி விளையாடுன குட்டியூன்டு பர்பிடால்தான்…

 

சரி இந்தா நீ கேட்ட போன்…அவளிடம் போன் பாக்ஸ்சை கொடுத்தவன் ஏய் அந்த போட்டோவ டெலிட் பண்ணிடுவலடி…

 

எதுவுப் பேசாமல் எதோ சிந்தனையில் இருந்தவளை உழுக்கியவன் ஜனனி நா பேசரது கேக்குதா இல்லையா???

 

ஆஹான்…சுயநினைவுக்கு வந்தவள் சாரிடா நா கவனிக்கல  என்ன சொன்னடா??

 

சுத்தம் அப்போ இம்புட்டு நேரம் பேசுனது வீண்தானா??  என்னோட போட்டோவ டெலிட் பண்ண சொன்னேன் இப்போ புரியுதா??

 

நா போன் வாங்கிக் குடுத்தாத்தா டெலிட்பண்ணுவேனு சொன்னேன் மறந்துட்டியாடா…

 

ஏய் நீ என்ன லூசா உன்னோட கையப்பாரு…

 

கையை பார்த்தவள் அதில் போன் இருந்ததை பார்த்ததும் அசடு வழிந்துக்கொண்டே சாரிடா நா கவனிக்கல நீப்போ நா டெலிட் பண்ணிடறேன்…

 

நீ இப்ப கொஞ்சநேரமா சரியே இல்லடி மறக்காம டெலிட் பண்ணிடு நா போறேன்…

 

அவன் சென்றதும் கதவை அடைத்தவள் சந்தோசத்தில் குதித்துக்கொண்டே  டேய் பார்த்தி மாமா எப்படிடா இப்படி ஒருவார்த்தைல உண்மைய சொல்லி என்ன உன்றமேல  லவ்ல விழவச்சி போட்டியேடா…டேய் பார்த்தி மாமா எனக்கே தெரியாம இத்தனைநாளா நீ என்ற மனசுக்குள்ள இருந்துருக்கியாடா.. இத இப்பவே அத்தை மாமாக்கிட்ட சொன்னா உன்ன எனக்கு கட்டிவைப்பாங்கதான் ஆனா அப்படி நீ எனக்கு வேண்டாம்..உன்னையும் என்ன லவ்பண்ணவச்சி நீயும் நானும் திகட்ட திகட்ட லவ் பண்ணிப்போட்டு அப்பரமா எல்லார்க்கிட்டையும் சொல்லி கண்ணாலம் பண்ணிக்கோனும்….

 

டாம் அண்ட் ஜெர்ரி.5

 

பார்த்திபனும் பாலாவும் சோபாவில் உட்கோர்ந்து டிவியில் கிரிக்கெட்  பாத்துக் கொண்டிருந்தனர்…அப்போது அங்கு வந்த ஜனனி சோபாவில் பார்த்தியின் அருகில் உட்கோர்ந்தவாரு பார்த்திபனின் கையில் இருந்த ரிமோட்டை புடிங்கி மியூசிக் சேனலை வைத்தாள்…

 

ஏய் எருமை ரிமோட்ட குடுடி….

 

அதலா முடியாது போடா இந்த கிரிக்கெட்ல அப்படி என்னத்தான்டா இருக்கு நீங்க ரெண்டு பேரும் மணிகணக்கா இதையே பாத்துப்போட்டு இருக்கிங்க???

 

அதுல என்ன இருந்தா உனக்கென்னடி எங்களுக்கு புடிச்சிருக்கு நாங்க பாக்கறோம் நீ உன்ற வேலையப்பாரு…

 

அக்கா குடுங்க  மேட்ஜ்  முடிஞ்சவுடனே குடுத்தப்போடறோம்  அதுக்கப்பரம் நீங்க எதுவேணாலும் பாருங்க நாங்க கேக்கவே மாட்டோம்…

 

நா ரிமோட்ட தரனும்னா ஒரு கண்டிசன் இருக்கு அதுக்கு பார்த்தி ஓகே சொன்னா நா தறேன் பாலா…

 

அதலா என்னால உன்னோட கன்டிசன்லாம் ஒத்துக்க முடியாது  போடி…

 

முடியாதுனா போடா நானும் ரிமோட்ட தரமாட்டேன்…

 

அண்ணா பிளீஸ்ண்ணா இன்னும் அஞ்சே ஓவர் தானுங்ண்ணா இருக்கு ஆரு ஜெயிக்கராங்கனு பாக்கோனும் அக்கா சொல்லரதுக்கு ஒத்துப்போட்டு ரிமோட்ட வாங்குங்ண்ணா….

 

பாலா இவளபத்தி உனக்கு தெரியாதாடா??எதாவது ஏடாகூடமாத்தான்டா செய்ய சொல்லுவா???

 

 

அண்ணா எனக்காக ஓகே சொல்லுங்ண்ணா..

 

சரி ஒத்துக்கறேன் நீ மொத ரிமோட்டக் குடுடி…

 

அஸ்க்கு புஸ்க்கு ரிமோட்ட வாங்கிப்போட்டு என்ன ஏமாத்திப் போடலாம்னு பாக்கரியா அதலா முடியாது. நா சொல்ரத செய்யறேனு சொல்லு அப்போதா தருவேன்….

 

உன்ற இம்சை தாங்கலடி சரி என்ன செய்யோனும்னு சொல்லு செஞ்சி தொலைக்குறேன்???

 

அவன் கையை பிடித்து இழுத்துச்சென்று பாலாவுக்கு கேக்காதவாறு சிறிது தூரம் சென்று நின்னுக்கொண்டு ராத்திரி ஒரு மணிக்கு நீ ஏங்கூட  வழுவுக்குள்ள  இருக்க உன்றக்கூட படிச்ச ரஞ்சித் வூட்டுக்கு வறோணும்???

 

ஒரு மணிக்கா அந்த நேரத்துல அவங்கவூட்ல  உனக்கென்னடி வேலை??

 

நா கார் ஓட்டிக் கத்துக்ரதுக்கு ட்ரைவிங் கிளாஸ் போறேன்ல அங்க அவனோட தம்பியும் வரான்…

 

அதுக்கென்ன??

 

மொத சொல்ரதக்கேளுடா…

 

நேத்து அவனோட தம்பிய கூட்டிப்போவ அவன் வந்துருந்தான் அப்ப அவங்கார்ல தெரியாம என்னோட வண்டிய மோதிப்போட்டேன் அதுக்குப்போய் என்ற வண்டிசாவிய புடிங்கி வச்சிப்போட்டான்டா…

 

 

இரு இரு அவனே புடிங்கி வச்சிப்போட்டானா இல்லை நீ சாவிய எடுத்து வைக்கர அளவுக்கு பேசுனியா???

 

ஹி ஹி கண்டுபுடிச்சிட்டாயாடா???

 

உன்னபத்தி  எனக்கு தெரியாதாடி…

 

அவன் என்னப்போய் சாரி சொல்ல சொல்ராண்டா அதுதா முடியாது போடானே கொஞ்சமே கொஞ்சம் திட்டினேன் அதுக்குப்போய் சாவிய எடுத்து வச்சிப்போட்டான் நா சாரி சொன்னாத்தா சாவி தருவானாம்???

 

ஆரு நீ கொஞ்சம் பேசுன இத நாங்க நம்போனுமாக்கும்…

 

சரி அதுக்கு அன்னேரத்துல போய் சாரி சொல்ல போறியாடி??

 

லூசாடா நீ?? சாரி சொல்ரமாதிரி இருந்துருந்தா நா மதியமே கேட்ருக்கமாட்டேனா?? சாரி கேட்டா என்னோட தான்மானம் என்னாகரது??

 

பொடலங்கா தன்மானம்  வாயில எதாவது வந்தரப்போகுது ஏன்டி தப்பு பண்ணது நீ அப்போ சாரி கேக்கரதுல எம்புட்டு குறஞ்சிப்போகப்போற???

 

சாரிலா என்னால கேக்கமுடியாது போடா??

 

சரி அப்போ எதுக்குதான் போகப்போறேனு சொல்லித் தொலை??

 

என்ற வண்டி சாவிய நாம ரெண்டுப்பேரும் திருட போறோம்…

 

என்னாது சாவிய திருடப்போறோமா???அடிங்க…ஓடிப்பொயிடு என்னபாத்தா உனக்கு திருடன் மாதிரியா தெரியுது???

 

பிளீஸ்டா நாவேர வண்டி பஞ்சர் கடைல வுட்ருக்கேனு மாமாக்கிட்ட பொய் சொல்லிப்போட்டேன் டா நாளைக்கு வண்டி எடுத்துப்போட்டு வரலைனா மாமா கேப்பாங்க…

 

அது உன்னோட பிரச்சனை அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை???

 

பார்த்தி மாமா எனக்காக இதக்கூட செய்யமாட்டிங்ளா???

 

இம்புட்டு நேரம் வாடா போடான இப்போ எப்படி மாமா வருது??நீ எம்புட்டுத்தா மரியாதை குடுத்தாலும் நா வரமாட்டேன் போடி….

 

என்ற மாமன் மகனே நா இன்னும் போட்டோவ டெலிட்பண்ணல…

 

என்னடி சொல்ர அதா நேத்தே நீ கேட்ட போன் வாங்கிப்போட்டு வந்து குடுத்தனே???

 

ஆமா ஆரு இல்லைனு சொன்னாங்க…ஏன்டா நீ இம்புட்டு மக்கா இருக்க நா எத சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா??….

 

ஒழுங்கு மரியாதையா அத டெலிட் பண்ணுடி இல்லைனா நா என்ன பண்ணுவேனே தெரியாது…

 

நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ ஆனா நைட் ஒரு மணிக்கு ரெடியா இரு…

 

பாலா இந்தா கேட்ஜ்   கையிலிருந்த ரிமோட்டை பாலாவை பார்த்து தூக்கிப் போட்டுவிட்டு  சென்றாள்…

 

அவள் சென்றதும் பார்த்திபன் பாலாவின் அருகில் வந்து உட்கோர்ந்தான்…

 

அண்ணா அக்கா என்ன சொன்னாங்க???

 

சொரக்காயிக்கு உப்பில்லைனு சொன்னா போடா நீ வேர கடுப்பேத்திட்டு இருக்க??

 

என்னாச்சுங்ண்ணா இம்புட்டு கோபமா இருக்கிங்க??

 

இன்னைக்கு நைட் ஒரு மணிக்கு நா அவக்கூட திருட போவோனுமாம்…

 

திருடவா எதுக்குங்ண்ணா???

 

ஏங்கூட படிச்சான்ல ரஞ்சித் அவங்கார இடிச்சது மட்டுமில்லாம அவங்கிட்டையே சண்டைக்கு போயிருக்கா அவன் பதிலுக்கு இவளோட வண்டி சாவிய புடுங்கி வச்சிப்போட்டான் போல அதுதா இப்ப போய் திருடிட்டு வறோனுமாம்…

 

அதுதா அப்பா கேட்டதுக்கு  பஞ்சர்னு பொய் சொன்னாங்லா??

 

ஹா ஹா அண்ணா அப்போ திருடப்போறோம்னு சொல்லுங்க?? …

 

ஏன்டா நீவே வயித்தெரிச்சல்ல கிளப்பர…

 

ஏனுங்ண்ணா வர முடியாதுனு சொல்ல வேண்டியது தானேங்ண்ணா…

 

நா அப்படித்தா சொன்னேன் அதுக்கு அவ அந்த போட்டோவ வச்சி மெரட்ரா பாலா…

 

நேத்து போன குடுத்துட்டு போட்டோவ டெலிட் பண்ணிப்போட்டு வரலைங்ளா?.

 

இல்லை பாலா அவளே பண்ணிப்போடறேனு சொன்னாலா அதா நானும் வந்துட்டேன்…

 

அட போங்கண்ணா நீங்க இம்புட்டு ஏமாளியா இருக்கிங்ளே உங்களுக்கு அக்காவ பத்தி தெரியாதுங்ளா??கையோட போனவாங்கி டெலிட் பண்ணிப்போட்டு வரத விட்டுப்போட்டு…

 

அவ இப்படி ஏமாத்துவானு நானென்ன கனவாக் கண்டேன் பாலா???

 

சரி அத விடுங்ண்ணா இப்போ நீங்க ரஞ்சித்த அண்ணா வூட்டுக்கு போகப்போறிங்ளா???

 

போவாம வேர என்ன பண்றதுடா போய்த்தா ஆவோனும்…

 

பாத்துங்ண்ணா மாட்டிக்காதிங்க இதுமட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சது உங்களுக்குதா திட்டுவிழும்…

 

ஆமாடா அதுவேர பயமா இருக்கு…

 

ராத்திரி ஒருமணி…

 

போர்வையை போர்த்தி முகம் தெரியாமல் பேய்முகம் வரைந்த மாஸ்க் போட்டு மறைத்தவாரு  ஒரு பெரிய உருவம் பார்த்திபனின் ரூமிற்குல் சென்றது…

 

அந்த உருவம் பார்த்திபன் தூக்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அங்கிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து அவன் மேலே ஊற்றியது….

 

தண்ணீர் பட்டதும் அலறியடித்துக் கொண்டு எழுந்த பார்த்திபன் அங்கு நின்றுக் கொண்டிருந்த உருவத்தை பார்த்து கத்தினான் ஐயோ பேய் பேய்… அவன் கத்தியாதும்   அந்த உருவம் அவன் வாயை மூடியவாரு ஏன்டா  இப்படி கத்ர போர்வையை விலக்கியவாரு  நாந்தான் என்றாள்…

 

ஏய் இம்சை இப்போ எதுக்குடி என்ற மேல தண்ணிய ஊத்தி நல்லா தூங்கிட்டு இருந்தவன எழுப்பின??

 

உன்றக்கிட்ட என்னடா சொன்னேன்???

 

அத கேக்கத்தா இப்படி நடுராத்திரில பேய்மாதிரி வந்து  எழுப்பினியாடி???

 

நா பேய் மாதிரியா இருக்கேன்??

 

சனியனே உன்ற உருவத்த கண்ணாடிலப்போய் பாரு…

 

அங்கிருந்த கண்ணாடியில் போய் தன்னைப்பார்த்தவள் ஆ ஆஆ.. என கத்தினாள்…

 

அடியே லூசு இப்போ எதுக்குடி கத்தி ஊரையே கூட்ர??? மொத இந்த வேசத்த எல்லாம் கலை பாக்க சகிக்கல??

 

போர்வையை எடுத்துப்போட்டு நைட்டியை  கழுட்ட போனவளை பார்த்ததும் அடியே எருமை என்னடி பண்ற… உன்ற ரூம்ல போய் ட்ரெஸ்ச மாத்திட்டு வா…

 

அட ச்சீ செத்த அமைதியா இருடா என்றவள் தான் போட்ருந்த ஒவ்வொரு நைட்டியாக கழுட்டினாள்…

 

அடப்பாவி என்னடி இது இத்தன நைட்டி போட்ருக்க???

 

எல்லாம் ஒரு சேப்டிக்காகத்தான் ஒருவேலை மாட்டிக்கிட்டோம்னா அடிபின்னிப் போடுவாங்கல அதுக்குத்தா இத்தானை நைட்டி…

 

அடி லேசா படும்னு என்னோட நைட்டிய போட்டு அதுக்குமேல அத்தையோட நைட்டியெல்லாத்தையும் எடுத்து வந்து போட்டுக்கிட்டேன்…

 

அடிப்பாவி உன்ன நம்பி வரதுக்கு எனக்கு தர்ம அடி வாங்கிவைக்காம விடமாட்ட  ….

 

இப்போ பேசலாம் நேரமில்ல  சீக்கரம் வாடா…

 

சரி போ வந்து தொலையறேன்…

 

இருவரும் ரஞ்சித் வூட்டுக்கு கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்திப்போட்டு வந்தனர்…

 

கேட் பூட்டிருக்கு எப்படி உள்ளப்போறதுடி…

 

திருடப்போறவங்க ஆராவது முன்வாசல் வழியா போவாங்கலாடா லூசு பேசாம வா…

 

ஏன்டி நானென்ன  திருடரதுக்கு ட்ரெயினிங்லாமா போயிருக்கேன்…

 

ப்போ பேசாம வரப்போறியா இல்லையாடா…

 

வந்த தொலையறேன் எல்லாம் என்ற தலையெழுத்து…

 

பின்புறம் வந்தவர்கள் காம்பௌன்ட் சுவர் அருகில் சென்றவள் பார்த்தி இங்க வந்து கொஞ்சம் குனியேன்…

 

எதுக்குடி??

 

சொல்ரத செய்டா…

 

பார்த்தி குனிந்ததும் அவன் மேல் ஏறி காம்பௌன்ட் சுவரின் மேல் உட்கோர்ந்தவாரு பார்த்தி சீக்கரமா மேல ஏறிவாடா சொல்லிக்கொண்டே அந்தபக்கம் குதித்தாள் …

 

இதுக்குத்தா என்ன குனிய சொன்னியாடி உன்ன வூட்டுக்குப்போய் வச்சிக்குறேன் என்றவன் அவனும் சுவரின் மேல் ஏறி  அந்தபக்கம் குத்தித்தான்…

 

பார்த்தி ரஞ்சித் வூட்டுக்கு நீ வந்துருக்கத்தானே அவன் ரூம் எதுனு சொல்லு??

 

நாம அவனோட ரூம்க்கு நேராதா கீழதா நின்னுப்போட்டு இருக்கோம்…

 

 

சரி அப்போ என்ற பின்னாடியே வா என்றவாரு முன்னாள் சென்றவள்  அங்கிருந்த வேப்பமரத்தின் அருகில் வந்ததும்  இந்த மரத்துமேல ஏறுனா அவனோட ரூம் பால்கனி வரைலும் கிளைப்போகுது அதுல இருந்து பால்கனிக்கு தாவிடலாம்…

 

ஏய் ஜானு ஆராவது பாத்தாங்க கட்டிவச்சி தோல உரிச்சிப்போடுவாங்க வேணாம் ஜானு வா நாம திரும்ப வூட்டுக்கே போயிடுவோம் காலைல நானே ரஞ்சித்துக்கிட்ட மன்னிப்புக்கேட்டு உன்ற சாவிய வாங்கித்தறேன்…

 

பார்த்தி பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கும்போதே ஜானு மரத்தில் ஏறி கிளையிலிருந்து பால்கனியின்   சுவற்றை தாவி பிடித்தவாரு திரும்பி பார்த்தவள் பார்த்தி மேலேறாமல் கீழையே நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் டேய் அங்க என்னடா தனியா நின்னு பொழம்பிட்டு இருக்க மேல ஏறிவாடா…

 

அடியே எரும நா இங்க பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு மேல ஏறிப்போர…

 

 

 

எல்லாம் என்ற அப்பாவ சொல்லனும் பொட்டப்புள்ளை மாதிரியா வளர்த்து வச்சிருக்கராரு கொரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவுது..எல்லாம் ஏங்கெரகம்  என அவளை திட்டிக்கொண்டே மரத்தில் ஏறினான்…

 

 

பார்த்தியும் ஜனனியின் பின்னாள்  மரித்திலிருந்து பால்கனியில் குதித்த்தான்…

 

ஜானு அங்க பாத்தியா ரஞ்சித்தோட  ரூம் பால்கனிக் கதவு திறந்துருக்கு அவன் முழிச்சிருந்தாலும் இருக்கலாம் வா போயிடலாம்…

 

அடிச்சீ எதுக்குடா இப்படி பயந்து சாகர நடுசாமத்துல ஆராவது தூங்காம இருப்பாங்கலாடா..அவன் தூக்கத்துல

கதவை மூட மறந்துருப்பான்…இப்ப இதுவும் நமக்கு நல்லதா போச்சி ஈசியா உள்ளபோய் சாவிய எடுத்துப்போட்டு வந்தரலாம்…

 

ஏ நடுசாமத்துல நாம ரெண்டுபேரும் தூங்காம பேய்மாதிரி ஒலாத்துலையா?? அந்தமாதிரி ஒருவேலை தூக்கம்வராம அவனும் முழிச்சிருந்தா என்னபண்ணுவடி???

 

 

டாம் அண்ட் ஜெர்ரி.5.1

 

பார்த்தியும்,ஜனனியும் மெதுவாக ரஞ்சித்தின் ரூம்க்குள் காலெடுத்து வைத்து உள்ளே சென்றனர்…

 

இவர்கள் உள்ளே சென்றதும் ரூம் கதவு தாழிடப் படும் சத்தம் கேட்டு பயந்துப்போய் அப்படியே நிற்கும்போதே   லைட் ஆன் ஆனதும் போச்சி மாட்டிக்கிட்டோம்டி நாளைக்கு காலல நாம ரெண்டு பேரும்தா முக்கிய செய்தியே…

 

பாத்துக்கலாம் விடுடா??

 

அடியேய் நாம இருக்க நிலமை நியாபகம் இருக்கா இல்லையா??பயமே இல்லாம பேசர…

 

பார்த்தி பொழம்பிக் கொண்டிருக்கும் போதே வாங்க நீங்க வருவிங்கனு எம்புட்டு நேரம்தா முழிச்சிருக்கரது சரி இனி வரமாட்டிங்க போலனு  நினச்சி தூங்கவே போயிட்டேன்… வா பார்த்தி..வா ஜானு என்றவாரு அவர்கள் முன்னாள் போய் நின்றான் ரஞ்சித்…

 

அந்த வூரில் கிருஷ்ணன்,சந்திரன் குடும்பத்தைப் போன்றே மிகவும் செல்வாக்கான குடும்பத்து மூத்த வாரிசு ரஞ்சித்தின் அப்பாவும் ட்ரான்ஸ்போர்ட்,விவசாயமும் செய்துக் கொண்டிருக்கிறார்…அவருடைய தொழிலை இப்போது ரஞ்சித் பார்த்துக் கொண்டிருக்கிறான்…எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத நம்ம பார்த்தி மாதிரியே நல்லபையன்…

 

 

சாரிடா ரஞ்சி இவதா நா சொல்ரத கேக்காம என்ன இழுத்துப்போட்டு வந்துட்டா…

 

எனக்கு தெரியாதாடா ஜானுவ பத்தி ஸ்கூல் படிக்கரப்பல இருந்து பாத்துட்டுத்தானே இருக்கேன்…

 

சரி நின்னுட்டே இருக்கிங்க ரெண்டுபேரும் வந்து உட்காருங்க…

 

நாங்க ஒன்னும் உன்ற வூட்ல உட்கோர வாரல என்ற சாவியக்குடு நாங்க போயிட்டே இருக்கோம்…

 

நீ சாரிகேட்டு சாவிய வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம் ஜானு…

 

அதலா முடியாது போடா…

 

ஜனனி ரஞ்சித்த மரியாதையா பேசு உன்னவிட வயசு மூத்தவன் முதல்ல சாரிக்கேளு…

 

விடு பார்த்தி ஜானு சின்ன பொண்ணுதானே அவளுக்கு எப்படி கூப்டனுமோ அப்படியே கூப்டட்டும் அதுல எனக்கொன்னும் பிரச்சனை இல்லை…

 

நீங்க ஒன்னும் விட்டுத்தரவேனாம்… சாரி இது நா மரியாதை இல்லாம பேசுனதுக்கு… வாங்க மாமா போலாம் பார்த்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்…

 

ஏய் ஜானு இரு சாவிய வாங்கிப்போட்டு போலாம்…

 

ஒன்னும் வேணாம் வாங்க மாமா…

 

ஏன் ஜானுவுக்கு ரஞ்சித் மேல இம்புட்டு கோபம்னு யோசிக்குரிங்ளா?? பார்த்தியும்,ரஞ்சித்தும் படிச்ச ஸ்கூல்லதான் ஜனனியும் படிச்சா அப்போ பார்த்திய பாக்கப் போரப்ப எல்லாம் ரஞ்சித்து அந்த வயசுக்கே உண்டானா குரும்புதனுத்துல அவள சீண்டிவிட்டு அழுகவச்சி போடுவான் அதனாலையே ஜானுவுக்கு ரஞ்சித்த கண்டாவே ஆகாது அதுதா மேடம் ரஞ்சித்த எங்க கண்டாலும் வேணும்னே வம்பிழுப்பா நேத்தும் அவன் கார்னு தெரிஞ்சே வண்டியக் கொண்டுப்போய் இடிச்சிட்டா..அவன் சாரி கேக்க சொன்னதுக்கும் கேக்காம வந்துட்டா…

டாம் அண்ட் ஜெர்ரி.6

 

ஜனனி பார்த்தி கையை பிடித்து இழுத்துக்கொண்டு பால்கனி பக்கம் போவதை பார்த்த ரஞ்சித் டேய் பார்த்தி ஏங்கூட வாங்க  முன்வாசல் வாசல் கதவ திறந்து விடறேன் என்றான்…

 

உங்க உதவிக்கு ரொம்ப தேங்ஸ்  நாங்க வந்த வழியாவே போயிடறோம் வா பார்த்தி…

 

ஏய் லூசு அவன்ந்தா சொல்ரான்ல அப்பரம் எதுக்கு வீம்பு புடிக்கர என்னால திரும்ப கொரங்குமாதிரி மரத்துல அல்லாம் தாவமுடியாது ஒழுங்கா வா நாம முன்வாசல் வழியாவே போயிடுவோம்…

 

ரஞ்சி வந்து கதவ திறந்து விடுடா…

 

சரி வாங்க இருவரையும் வாசல் வரையும் கொண்டுவந்து விட்டவன் பார்த்தி வண்டில வந்திங்களா??இல்லை நடந்து வந்திங்ளா??

 

நாங்க பைக்லதான்டா வந்தோம் பைக் தெருமொனைல நிக்குது….சரி நாங்க போயிட்டு வறோம்டா…

 

பாத்து போங்கடா…

 

இப்படி என்ன பாதி ராத்திரில கூட்டியாந்து என்ற நண்பன் முன்னாடி அசிங்கபடுத்திட்டியேடி லூசு…

 

நானே சாவிய எடுக்க முடியலைனு செம்ம கோபத்துல இருக்கேன் என்ற வாயக் புடுங்காம ஒழுங்க வாடா…

 

தப்பு பண்ணது நீ இப்போ என்ன ஏன்டி திட்ர???

 

பார்த்திபனும் ஜனனியும் வழக்கடித்துக்கொண்டு செல்வதை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போ இருந்து நீ மாறவே இல்லை ஜானுமா உன்றமேல தப்பே இருந்தாலும் அத தப்புனு நீ ஏத்துக்கவே மாட்டல ஆனா அந்த புடிவாத குணம்தா உன்றக்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஜானுமா…ஐ லவ் யூ ஜானுமா சீக்கரமா உன்ற வூட்டுக்கு இந்த மாமன் பொண்ணுகேக்க வறேன் ஜானுமா…

 

ஜானு ஆசைப்பட்டது நடக்குமா??இல்லை ரஞ்சித் ஆசைப்பட்டது நடக்குமானு பொறுத்திருந்து பார்ப்போம்…

 

விடியற்காலையில் காலையில் வெளித்தின்னையில்(ஸ்லெப்கல்லால் போடப்பட்டது)உட்கோர்ந்திருந்த அப்பத்தாவின் அருகில் வந்து உட்கோர்ந்த பார்த்திபன் அவரின் மடியில் தலைவைத்து படுத்தான்…

 

அப்பத்தா பார்த்திபனின் தலையை தடவி கொடுத்தவாறு என்றாக்கண்ணு ராத்திரி சரியா தூங்கலையா கண்ணு சிவந்துப்போய் கிடக்குது??

 

ஆமாங்க அப்பத்தா அல்லாம் அந்த குட்டிபிசாசு பண்ண வேலையால வந்தது…

 

நானும் உன்றக்கிட்ட கேக்கோணும்னே இருந்தேன் கண்ணு இப்ப கொஞ்சநாளா அந்த அடங்காப்பிடாரிக்கூடயே சுத்திட்டு திரியரையே??

 

நானெங்கிங் அப்பத்தா சுத்தறேன் அந்த லூசுதா என்ன சுத்த வைக்குது…

 

என்றாகண்ணு சொல்ர??

 

ஆரம்பத்தில் இருந்து நடந்தது அனைத்தையும் சொன்னவான் அந்த ஒரு போட்டோவ வச்சிப்போட்டு என்னையும் அவசெய்யர களவாணி தனம் அத்தனைக்கும் கூட்டுசேர்த்துக்ரா அப்பத்தா…இதுமட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சது அவள ஒன்னும் சொல்லமாட்டாரு என்னத்தா ஏசுவாரு அதநினச்சாத்தா பயமா இருக்குங் அப்பத்தா…

 

கூறுகெட்ட சிறுக்கி என்ற பேரனையே ஆட்டிவைக்கராளா?? நீ கவலைப்படாத கண்ணு இந்த அப்பத்தாக்கிட்ட சொல்லிப்போட்டல இனி நா பாத்துக்கறேன் நீ அந்த போட்டோவ மட்டும் எப்படி அழிக்கரதுனு சொல்லிக்குடு கண்ணு…

 

உங்க போனகுடுங்க அப்பத்தா…

 

இந்தாக்கண்ணு…அப்பத்தாவின் போனை வாங்கியவன் போட்டோவை எப்படி அழிக்கரதுனு அப்பத்தாவுக்கு சொல்லிக்குடுத்தவன் அப்பத்தா நா சொல்லிக்குடுத்தமாதிரியே செஞ்சிப்போடுவிங்கல???மறந்தரமாட்டிங்ளே??

 

என்றாக்கண்ணு உன்ற அப்பாத்தாவ பாத்து இப்படி சொல்லிப்போட்ட அந்த காலத்துலையே உன்ற அப்பத்தா பத்தாவது படிச்சவ அது தெரியும்தானே கண்ணு…

 

நீ கவலைப்படாத கண்ணு இன்னைக்குள்ள எப்படியாவது அந்தபோன எடுத்து அழிச்சிப்போடறேன்…

 

சரிங் அப்பத்தா கொஞ்சநேரம் துங்கறேன்  அப்பா வரதுக்குள்ள  எழுப்பிவிடுங்க…அப்பா ராத்திரியே நேரமா வசூலுக்கு போகசொனார்…நா போகலைனா திட்டுவாரு…

 

சரிகண்ணு நீ தூங்கு…

 

இன்னைக்கு எப்படியாவது அடங்காப்பிடாரிட்ட இருந்து போன எடுக்கனுமே என யோசித்துக்கொண்டிருந்தார்…

 

சிறிது நேரம் கழித்து வயலுக்கு சென்றிருந்த கிருஷ்ணன் வூட்டிற்கு வந்தவர் பார்த்தி தன் அம்மாவின் மடியில் படுத்து தூங்குவதை பார்த்து கோபமாக என்னம்மா இது நா அவன நேரமா வசுலுக்கு போகசொன்னா நீங்க அவன குழந்தையாட்டும் மடியில படுக்கவச்சி தலாட்டிட்டு இருக்கிங்க…

 

நீதா எப்பப்பாரு வேலைவேலைனு  ஓடரினா கடைசில என்ற பேரனையும் அப்படியே மாத்திப்போட்ட நீ சொல்ரதுக்கெல்லாம் எதிர்த்து பேசாம வேலை செய்யரான்ல அதுதா அவனக்கண்டா உனக்கு எலக்காரமாபோச்சு..வெளிலப்போய் போய் பாரு இவன் வயசுல உள்ள பசங்க எப்படி ஜாலியா ஊர்சுத்தராங்கனு… என்ற பேரன் அப்படியா இருக்கான் காலைல  சோறுக்கோட திங்காம வேலைவேலைனு ஓடரான் திரும்பி வர ஒவ்வொருநாளைக்கு ராத்திரி ஆயிடுது.பாவம் பையன ஒருநாளைக்கு செத்த நேரம் தூங்கக்கூட விடமா வேலை வாங்கரடா…

 

அவன கெடுக்கரதே நீங்கதானுங்ம்மா எப்படியோ போங்க நா எதும் சொல்லல கோபமா பேசிப்போட்டு உள்ளே சென்றார்…

 

மதியம் ஜனனி சோபாவில் உட்கோர்ந்து போனில் கேம் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த அப்பத்தா அடியேய் எப்பபாத்தாலும் அந்த டப்பாவ வச்சிட்டு அப்படி என்னத்தான்டி தடவுவ அதவச்சிப்போட்டுப் போய் உன்ற ஆத்தாக்காரிய நா வர சொன்னேனு சொல்லிப்போட்டு வா…

 

முடியாதுங் அம்மத்தா நா கேம் விளையாடிட்டு இருக்கேன் இப்ப நிறுத்துனா தோத்துப்போயிருவேன் உங்களுக்கு உங்க மகள பாக்கோணும்னா நீங்களே போய் பார்த்துக்கோங்க என்னாலலாம் போய் கூட்டிட்டு வரமுடியாது…

 

எடு அந்த சீவக்கட்டைய நானும் பாத்துப்போட்டே இருக்கேன் ரொம்பத்தா வாய்நீலுது.. ஒழுங்கு மரியாதையா போனவச்சிப்போட்டு போகல உன்ற ஆத்தாக்காரிக்கிட்ட சொன்னேனா நல்லா நாலு சாத்து சாத்துவா???

 

போய்த் தொலையறேனுங் அம்மத்தா உன்ற மகக்கிட்ட மட்டும் சொல்லிப்போடாதிங்க என்றவள் போனை எடுத்துக்கொண்டே சென்றான்…

 

ஏய் நில்லுடி அந்த போன இங்கையே  வச்சிட்டுப்போட்டு போ…அப்படியே போன எடுத்துட்டுப்போய் வெளிய உட்கோர்ந்து நோண்டலாம்னு பாக்கரையா பிச்சிப்போடுவேன் பிச்சு…

 

ஹி ஹி கண்டுபுடிச்சிட்டிங்ளா அம்மத்தா…

 

அடியேய் உன்ன தூக்கி வளர்த்தவளே நாந்தான்டி ஏங்கிட்டையே உன்றவேலைய காட்ரியாக்கும்…

 

சரி வச்சிப்போட்டே போறேனுங் அம்மத்தா ஆமா எதுக்கு அம்மாவ வரசொல்ரிங்க..

 

அது தெரிஞ்சிப்போட்டு நீ என்னபண்ணப்போற போடி போய் நா வர சொன்னேனு சொல்லிப்போட்டு வா….

 

ம்க்கும் ரொம்பத்தா பண்றிங்க அம்மத்தா இருங்க என்ற மாமா வரட்டும் அப்பவச்சிக்குறேன் உங்கல என மொனகிக்கொண்டே சென்றாள்…

 

அடியேய் அங்க என்னடி மொனகிக்கிட்ட போர…

 

அது ஒன்னுமில்லைங் அம்மத்தா சும்மா பேசிட்டுபோறேன்…

 

ஏய் பாத்துடி ரோட்ல போறவன் லூசுனு நினச்சிரபோறான்…

 

அவள் சென்றதும் அங்கிருந்த போனை எடுத்து கேலரிக்குள்போய் அந்தபோட்டோவை பார்த்தவர் இதவச்சிப்போட்டுதா இம்புட்டு நாளா என்றபேரன அலையவிட்டியாடி இத நா இப்போ அழிக்கறேன் அப்பரமா என்ன பண்ணபோறேனு பாக்கறேன்டி…அந்த போட்டோவை அழித்தவர் அதை சொல்வதற்காக  பார்த்திபனுக்கு போன்போட்டார்…

 

சொல்லுங் அப்பத்தா??எதுக்கு இந்த நேரத்துல கூப்புட்ருக்கிங்க எதாவது உடம்பு சரியில்லையா???

 

அதலா ஒன்னுமில்லை கண்ணு நா நல்லாத்தா இருக்கேன் நா எதுக்கு போன் பண்ணேனா அந்த அடங்காபிடாரியோட போன்ல இருந்த போட்டோவ அழிச்சிப்போட்டேன் கண்ணு…

 

 

ஐயோ சூப்பருங் அப்பத்தா ஆமா நீங்க எப்படிங் அப்பத்தா எடுத்திங்க அவதா போன ஒருநிமிசம் கீழ வைக்கமாட்டாளே???

 

எப்படியோ எடுத்தேன் அது எதுக்கு உனக்கு நீ சொன்னமாதிரி அவபோன்ல இருந்த போட்டோவ அழிச்சிட்டேன் இப்போ சந்தோசமாக்கண்ணு..

 

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேனுங் அப்பத்தா அந்த ஒருபோட்டோவ வச்சிட்டு என்ன எப்படிலாம் ஆட்டிவச்சா இன்னைக்கு அவளுக்கு அதுக்கெல்லாம் மொத்தமா திருப்பி செய்யப்போறேன்…

 

சரிகண்ணு சாப்புட்டு வேலையப்பாரு நா போனவைக்கறேன்…

 

ஏனுங்ம்மா என்ன வரசொன்னிங்க எனக்கேட்டுக்கொண்டே உள்ளே ஜனனியுடன் வந்த சிவகாமி ரெங்கநாயகியின் அருகில் உட்கோர்ந்தார்…

 

அது ஒன்னுமில்லை கண்ணு இன்னைக்கு பிரதோசம் அதா சிவன் கோவிலுக்கு நீயும் வரியானு கேக்கரதுக்காக   வரசொன்னேன் கண்ணு…

 

சரி வறேனுங்ம்மா…

 

இத உங்க மகக்கிட்ட கேக்கரதுக்காகத்தா கேம்வெளாடிட்டு இருந்த என்ன இத்தனை வெயில்ல போயிகூட்டிட்டு வர சொன்னிங்ளா அம்மத்தா…

 

ஜனனி தலையில் நங்கென்று  கொட்டிய சிவகாமி பெரியவங்ககிட்ட இப்படித்தா எதிர்த்து பேசிப்போட்டு இருப்பியாடி…

 

தலையை தேய்த்துக்கொண்டே எழுந்தவள் போங்ம்மா எப்பபாத்தாலும் என்ன அடிச்சிட்டே இருக்கிங்க இருங்க மாமா வந்தவுடனே உங்கல சொல்லிவைக்குறேன் கோவிச்சிக்கிட்டு தனது அறைக்கு சென்றாள்…

 

 

அண்ணியும் பாலாவும் எங்கிங்ம்மா காணாம்??

 

உன்ற அண்ணி தோட்டத்துல களைவெட்ட ஆள்  வந்துருக்காங்க அவங்கக்கூட வேலைசெஞ்சிப்போட்டு இருக்கா கண்ணு…பாலா அவனோட ப்ரண்ட்ட பாத்துப்போட்டு வாறேனு போயிருக்கான்…

 

சரிங்ம்மா நாம்போய் வேலைய செஞ்சிப்போட்டு பொழுதோட வந்து உங்கல கூட்டிட்டு போறேன் நீங்க கிளம்பி இருங்க…

 

பார்த்திபன் கோழிபண்ணையில் ஆட்கள்  முட்டையை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தவர்களிடம் அண்ணா சீக்கரம் ஏத்துங்க நேரமாயிடுச்சு இன்னைக்கு ராத்திரிக்குள்ள லோடு போயி சேரனும்…

 

சரிங்தம்பி அதலா நீங்க சொன்ன டைம்க்குள்ள போயிடும்..

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ரஞ்சித்  தனது காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்…

 

ரஞ்சித்தை பார்த்த பார்த்திபன் வா ரஞ்சித் என வரவேற்றான்…

 

வறேன் பார்த்தி என்ன பிசியா இருக்கியா??

 

ஆமாடா இன்னைக்குள்ள நாலுலோடு முட்டை அனுப்பியாகனும் சரி நீ வா ஆபிஸ்ரூம்ல உட்கோர்ந்து பேசுவோம்…

 

அங்கிருந்த வாட்ஜ்மேனை கூப்பிட்டு மூர்த்தி அண்ணா இங்கவாங்க தனது வாலட்டில் இருந்து காசு எடுத்து கொடுத்தவன் அண்ணா  சீக்கரம்போய் எங்களுக்கு ரெண்டு ஆப்பில் ஜுஸ் வாங்கிட்டு இங்க வேலை செய்யரவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு அவங்களுக்கும்  வாங்கிட்டு சேர்த்து வாங்கிப்போட்டு வாங்க…

 

சரிங் தம்பி அவர் சென்றதும் பார்த்திபனும் ரஞ்சித்தும் ஆபிஸ்ரூமிற்கு சென்றனர்…

 

ம்ம் உட்கோருடா என்ன அதிசியமா இந்தபக்கம் வந்துருக்க??அப்பா அம்மா,தம்பி அல்லாரும் எப்படி இருக்காங்க??பிஸ்னஸ்  எப்படிப்போகுதுடா??

 

எல்லாரும் நல்லாருக்காங்க பார்த்தி…பிஸ்னஸ் நல்லாப்போகுதுடா…

 

இந்தா ஜனனியோட வண்டி சாவி நேத்து சும்மா அவக்கிட்ட எப்பவும்போல கொஞ்சம் ஒரண்டை இத்தேன் அதுல மேடத்துக்கு கோபம் வந்து போயிட்டாங்க நா சாரி கேட்டேனு சொல்லிடுடா…

 

தப்பு அவ பக்கம்தா இருக்கு நீ எதுக்குடா சாரி கேக்கர??

 

தப்பு ஜானு மேலையே இருந்தாலும் அவ அப்படி பண்ணதுக்கு நானும் ஒரு காரணம்தான்டா…

 

பார்த்தி நா ஊங்கிட்ட ஒன்னு கேக்கனும்டா அதுக்காகதா நா இங்க வந்தேன்…

 

ம்ம் கேளுடா???

 

பார்த்தி உனக்கு ஜானுமேல எதாவது விருப்பம் இருக்காடா???

 

விருப்பம்னா புரியலை இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம கேக்கர ரஞ்சித்…

 

அல்லாம் சம்பந்தம் இருக்கு நீ சொல்லுடா உனக்கு ஜானுமேல லவ் இருக்கா???

 

ஹா ஹா ஹா அந்த அடங்காபிடாரிமேல எனக்கு லவ்வா ஏன்டா டேய் ஆராவது வேலில போரத தூக்கி வேட்டிக்குள்ள போட்டுக்குவாங்களா??அந்தமாதிரிதான் அவள லவ் பண்றதும்…

 

அப்போ உண்மையாவே உனக்கு ஜானுமேல எந்த இன்ரஸ்ட்டும் இல்லையாடா???

 

அததானே இம்புட்டு நேரமா சொல்லிப்போட்டு இருக்கேன்…

 

நா ஜானுவ லவ் பண்றேன் பார்த்தி…

 

சிரித்துக்கொண்டிருந்தவன் ரஞ்சித்தின் பதிலில் ஒருநிமிசம் அதிர்ச்சியாகி மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்…

 

ஏன்டா டேய் உனக்கு லவ்பண்றதுக்கு வேர பொண்ணே கிடைக்கலையா போயும் போயும் இந்த அராத்துதான் கிடச்சதா…

 

எனிவே நல்லாருடா…

டாம் அண்ட் ஜெர்ரி.6.1

 

நீ லவ் பண்றத ஜனனிக்கிட்ட சொல்லிபோட்டியா ரஞ்சித்…

 

இன்னும் இல்லடா அதுக்குதான் உன்னப் பாக்கவந்தேன்…

 

இதுக்கு நா என்ன பண்ணமுடியும்டா???

 

என்ற  அப்பாவ உன்ற அப்பாக்கிட்டையும் மாமாக்கிட்டையும் பேச வரசொல்றேன் நீ அதூக்குள்ள உங்கவூட்ல இதபத்தி சொல்லிடரையா??

 

நானா நா எப்படி சொல்ரதுடா???

 

ப்ளீஸ்டா எனக்காக உங்க வூட்ல பேசுடா…

 

சரி சரி பேசறேன்…

 

ரொம்ப தேங்ஸ் பார்த்தி…நா வரப்ப பயந்துட்டே வந்தேன் எங்க நீ ஜானுவ நீ லவ்பண்றேனு சொல்லிடுவியோனு இப்போதா நிம்மதியா இருக்கு…

 

அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த மூர்த்தி ஜீஸை கொண்டுவந்து வைத்துவிட்டு சென்றார்…

 

அண்ணா வேலைசெய்யரவங்களுக்கு குடுத்துட்டிங்கல??

 

குடுத்துட்டுடேன் தம்பி…

 

சரி நீங்க போங்க அண்ணா அவர் சென்றதும் ஜீஸ் எடுத்துக்கோ ரஞ்சித்…

 

ஏன்டா என்னையும் ஜனனியையும் பாத்தா லவ்பண்றமாதிரியா தெரியுது??

 

நீங்க ரெண்டுபேரும் மாமம் பையன் அத்தைப்பொண்ணு அதா ஒருவேலை லவ்பண்ணிங்களோனு சந்தேகப்பட்டு கேட்டுப்போட்டேன் பார்த்தி…

 

இப்பவே அவளோட இம்சை தாங்கல இதுல வாழ்க்கை முழுசும்னா சத்தியமா என்னால முடியாதுடா…

 

 

சரிடா நா அப்பாக்கிட்டையும் மாமாக்கிட்டையும் பேசறேன் எனக்கு உன்னோட ஜாதகம் வேணும் ஜாதகம் சரியா இருந்தா அப்பாவும் மாமாவும் கண்டிப்பா ஒத்துக்குவாங்க …

 

நாளைக்கு கொண்டுவந்து தறேன்…சரிடா நா கிளம்பறேன் நேரமாயிடுச்சு…

 

ம்ம் போயிட்டு வாடா…

 

டாம் அண்ட் ஜெர்ரி.7

 

ரஞ்சித் கிளம்பி சென்றதும் பார்த்திபன் தனது தந்தைக்கு போன் பண்ணினான்…

 

போனை எடுத்த கிருஷ்ணன் ம்ம் சொல்லு பார்த்தி லோடு அனுப்பிப்போட்டியா???

 

இன்னும் இல்லைங்ப்பா இப்போத்தா ஏத்திப்போட்டு இருக்கராங்க…

 

வெரசா முடிங்க பார்த்தி சொன்ன டைம்க்கு கொண்டுப்போய் குடுக்கோணும்…

 

அதலாம் அனுப்பிடலாம்ங் அப்பா…அப்பா இப்போ நீங்களும் மாமாவும்  எங்க இருக்கிங்க??

 

நம்ம ஆபிஸ்லதான் இந்தமாச வராவு செலவு கணக்கு  பாத்துப்போட்டு இருக்கோம்…ஏன்டா கேக்கர??

 

மாமாவும் நீங்களும் கொஞ்சம் நம்ம கோழிபண்ணை வரைலும் வரமுடியும்ங்ளா??

 

ஏன் பார்த்தி எதாவது பிரச்சனையா??

 

அதலா ஒன்னுமில்லைங் அப்பா உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசோணும் அதானுங் கூப்பிட்டுப்போட்டேனுங் அப்பா…

 

சரி வறோம் நீ வேலையப்பாரு…

 

சிறுது நேரம் கழித்து கிருஷ்ணனும்,சந்திரனும் கோழிபண்ணை வந்தவர்கள்  அங்கு வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்த  பார்த்திபனிடம் சென்றார்கள்…

 

 

பார்த்தி ஏன்டா எங்கல அவசரமா வர சொன்ன???

 

வாங்கப்பா உள்ளப்போய் பேசலாம் என இருவரையும் உள்ளே அழைத்து சென்று உட்கோரவைத்தவன் அப்பா இன்னைக்கு என்றக்கூட ஸ்கூல் படிச்ச   ரஞ்சித் இங்க வந்துருந்தான்…அவனுக்கு நம்ம ஜனனிய புடிச்சிருக்காம் அதா உங்ககிட்ட என்ன பேச சொல்லிப்போட்டு போனான்…

 

வழுவுக்குள்ள இருக்க முருகேசன் மச்சானோட பையனா மாப்பிள்ளை??

 

ஆமாங் மாமா அவனேத்தான்…

 

கிருஷ்ணன் கோபமாக ஏன்டா பார்த்தி நானும் உன்ற அம்மாவும் நம்ம அம்மணிய உனக்கே கட்டிவைச்சிப்போடலாம்னு இருந்தா நீ என்னடானா வேர ஒருத்தன மாப்பிள்ளையா காட்ர???

 

அது எனக்கும் தெரியும்ங் அப்பா ஆனா என்னவிட ரஞ்சித் ரொம்ப நல்லப்பையன் நம்ம ஜனனிய லவ் பண்றான் அவனுக்கு கட்டிக்குடுத்தா ஜனனிய நல்லா பாத்துப்பான் அப்பா…

 

 

நா என்ன சொல்லிப்போட்டு இருக்கேன் நீ என்றா பேசிப்போட்டு இருக்க நா என்ற அம்மணி எப்பவும் என்றவூட்லையே இருக்கோணும்னு ஆசைப்பட்டா நீ அவள வெளியகுடுக்க மாப்பிள்ளை பாத்துப்போட்டு இருக்க..

 

சந்திரன் கிருஷ்ணன் கையை பிடித்து தடுத்தவாரு கிருஷ் நீ எதுக்கு இப்போ கோபப்படர மாப்பிள்ளைக்கு ஜனனிய புடிக்காதப்போ நாம கட்டாயபடுத்தி கட்டிவச்சா அது நல்லாருக்காது…

 

ஐயோ மாமா  நா ஜனனிக்கு வேர இடத்துல மாப்பிள்ளை பாக்கரதுக்காக அவள எனக்கு புடிக்காதுனு ஆயிடும்ங்ளா??

 

உனக்கு புடிச்ச லட்சனம்தா தெரியுதே இங்கப்பாரு என்னால எல்லாம் என்ற அம்மணிய வேர இடத்துக்கு கட்டிக் குடுக்க முடியாது அவ என்ற வூட்ல ராணி மாதிரி வாழோணும் அதுக்கு நீதா என்ற அம்மணிய கட்டிக்கோணும் முடியாது கிடியாதுன நா என்ன பண்ணுவேனே எனக்குத்தெரியாது..

 

டேய் கிருஷ் நீ கொஞ்சநேரம் அமைதியா இரேன்டா மனசுக்கு புடிக்காத பொண்ண கட்டிவச்சா எப்படி சந்தோசமா மாப்பிள்ளையால  வாழ முடியும் அது புரியாம பேசிட்டு இருக்கடா…

 

மாப்பிள்ளை அந்த தம்பியோட ஜாதகம் எனக்கு வேணும் அப்பரம் அந்த தம்பியோட நம்பர்க்குடுங்க நா பேசிக்குறேன்…

 

நீயும் இவங்கூட சேர்ந்துட்டல மச்சான் பாக்கறேன் என்ற அம்மணி ஒத்துக்காம எப்படி கண்ணாலம் பண்றிங்கனு கோபமாக பேசிவிட்டு வெளியே எழுந்து சென்றுவிட்டார்…

 

என்னங் மாமா  அப்பா இம்புட்டு கோபமா பேசிப்போட்டு போறாரு???

 

அவனுக்கு ஜனனி மேல ரொம்ப பாசம் மாப்பிள்ளை அதா இம்புட்டு கோபமா பேசிப்போட்டு போறான்..நா அப்பரமா எடுத்து சொன்னா புரிஞ்சிப்பான் நீங்க எதும் யோசிக்காதிங்க…

 

ஏனுங் மாமா நானே அப்பா ஆசைப்பட்டமாதிரி ஜனனிய கல்யாணம் பண்ணிக்கட்டும்ங்ளா???

 

எங்க ஆசைக்காக உங்களுக்கு புடிக்காத கல்யாணத்த நீங்க பண்ணிக்கவேண்டாம்ங்க மாப்பிள்ளை…எனக்கு நீங்களும் பாலாவும் ஜனனியும் ஒன்னுதான் உங்களோட சந்தோசம்தா எனக்கு முக்கியம் அதனால இதபத்தி யோசிக்காம அந்த தம்பிக்கிட்ட ஜாதகம் வாங்கிட்டு வாங்க பொருத்தம் பாப்போம் நல்லாருந்தா அவருக்கே கட்டிவச்சிருவோம் மாப்பிள்ளை…

 

 

நாளைக்கு வாங்கிட்டுவந்து தறேனுங் மாமா …

 

சரிங் மாப்பிள்ளை நீங்க வேலையப்பாருங்க நானும் கிளம்பறேன்…

 

வெளியே வந்த கிருஷ்ணன் கோபமாக காரின் அருகில் நின்றுக் கொண்டிருந்தார்…

 

அவரின் தோளைதொட்ட சந்திரன் ஏன்டா உனக்கு இம்புட்டு கோபம்???

 

அவன் பண்றவேலைக்கு கோபபடாம கொஞ்சசொல்ரியா மச்சான்??அவன்தா எதோ கிருக்குதனமா பண்றானா நீயும் அவங்கூட சேர்ந்துக்கிட்ட…ஏன் மச்சான் நானும் தெரியாமத்தா கேக்கறேன் என்ற அம்மணிக்கு என்ன குறைச்சல் அவளப்போய் வேணாம்ங்ரான்.அதுவும் இவனவிட இவனோட ப்ரண்ட் நல்லவனாம்  ஏங்கிட்டையே இன்னொருத்தன நல்லவங்ரான்….

 

கிருஷ் மொதல்ல கோபப்படாம நா சொல்ரதக்கேளு…

 

ம்ம் கேக்கறேன் சொல்லு மச்சான்…

 

வா போயிட்டே பேசலாம் காரை ஓட்டிக்கொண்டே இங்கப்பார் கிருஷ் இப்போ நீ கோபப்படரதால எந்த பிரையோஜனனும் இல்லை இப்போ நீ வற்புருத்தினா மாப்பிள்ளை ஜனனிய கட்டிக்குவார் ஏ இப்பக்கூட அதத்தா சொன்னார் அப்பா ஆசைப்படர மாதிரியே ஜனனிய கட்டிக்கட்டுமானு??நாம சொல்லி அவர் ஜனனிய கட்டிக்கக்கூடாது அவரே விருப்பப்பட்டு ஜனனிய கட்டிக்கறேனு சொல்லுவார் அதுவரைலும் நீ கோபப்படாம அவரோட போக்குலையே விடு மிச்சத்த நா பாத்துக்கறேன்…

 

என்ன மச்சான் சொல்ர அவனுக்குதா ஜனனிய புடிக்கலையாமே அப்பரம் எப்படி அவனே விருப்பபட்டு கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லுவான்???

 

சிம்புள் லாஜிக் கிருஷ் ஒருத்தவங்க நம்ம பக்கத்துலையே இருக்கும்போது அதோட அருமை நமக்கு தெரியாது அதுவே நம்மலவிட்டு தூரப்போகப்போறாங்கனு தெரிஞ்சா அப்போதா அவங்கமேல நாம வச்சிருந்த பாசம் நமக்கே புரிய ஆரம்பிக்கும்.அதுவும் மாப்பிள்ளை சின்னவயசுல இருந்தே எம்புட்டுதா ஜனனிக்கூட சண்டைப்போட்டாலும் அவள ஒருநாள்க்கூட பிரிஞ்சி இருக்கமாட்டாரு அப்படியே ஜனனி தொடர்ந்தாப்ல ரெண்டுமூனுநாள் வெளியூர்போனாவே மாப்பிள்ளையால அவள வுட்டு பிரிஞ்சி இருக்கமுடியாம இருந்துருக்காரு ஜனனிமேல இம்புட்டு பாசம் வச்சிருக்கரவரு எப்படி வாழ்நாள் முழுசும் பிரிஞ்சி இருப்பார்…

 

அதலா சரி மச்சான் ஆனா அதுதா இந்த மரமண்டைக்கு புரியமாட்டைங்குதே??

 

அத புரியவைப்போம் கிருஷ் அதுக்காகதா அவரோட வழிலையேப்போய் அவர புரியவைக்கனும்ங்றேன்…

 

நீ என்ன வேணாலும் பண்ணு மச்சான் ஆனா என்ற அம்மணிய அவன்தா கட்டிக்கோணும் அது எப்படியா இருந்தாலும் எனக்கு ஓகே…

 

இது ஒரு முயற்சித்தான் மச்சான் ஆனா கடைசிவரைலும் மாப்பிள்ளைக்கு ஜனனிய புடிக்கலைனா அதுக்குமேல நீ கட்டாயபடுத்தக்கூடாது…அதுவும் என்றமகள மாப்பிள்ளை கட்டிக்கிட்டா நல்லா வாழுவானு ஒரு ஆசைனாலதான் இதுவும் பண்றேன்..நீ புரிஞ்சிப்பேனு நினைக்குறேன்…

 

ஒரு அப்பாவா என்னோட மகள் சந்தோசமா வாழோணும் அதுதா எனக்கு வேணும்…

 

எனக்கு தெரியும் மச்சான் என்ற அம்மணிக்கு ஆரபுடிக்கும்னு அவளுக்கு புடிச்சத என்ற பையனே ஒத்துக்கலைனாலும் என்ற உசுரக்குடுத்தாவது நா நடத்துவேன் மச்சான் என மனதில் பேசியவர் வெளியே சரி மச்சான் உன்விருப்பம் என்றார்…

 

இரவு நேரமாக வூட்டிற்கு வந்த பார்த்திபன் ஹாலில் டீவி பார்த்தவாரு உட்கோர்ந்திருந்த ஜனனியை பார்த்ததும் ஒருபோட்டோவ வச்சிப்போட்டு என்ன எப்படிலாம் ஆட்டிவச்ச இனிமே நா உன்ன வச்சி செய்யப்போறேன்டி என மனதில் பேசிக்கொண்டே அவளை உரசிக்கொண்டே உட்கோர்ந்தவாறு அவளின் தோல்மேல் கைப்போட்டவன் மேடம் என்ன பண்றிங்க???

 

ம்ம் பாத்தா தெரியலை மொத மேல இருந்து கைய எடுத்துப்போட்டு தள்ளி உட்காருடா

 

பாசமா என்ற அத்தைமக பக்கத்துல  உட்கோர்ந்து கை போட்டா ரொம்பத்தா பிகு பண்ற போடி நா கைய எடுக்கமாட்டேன் என்ன பண்ணுவடி??

 

ஐயோ இந்த மக்கு மாமா நம்ம பீலிங்ஸ் புரியாம கடுப்பேத்தரானே இத்தனைநாள் தெரியாத பீலிங்ஸ் லவ் வந்ததுக்கப்பரம் என்னன்னமோ பண்ணுதே இத இந்த லூசுக்கு நா எப்படி புரியவைப்பேன் என மனதில் அழுத்துக்கொண்டே பிளீஸ் மாமா கொஞ்சம் தள்ளி உட்கோரரிங்ளா???

 

ஆனாலும் நீ என்ன இப்படி மாமானு எப்பையாவது ஒருமுறை சொல்லும்போது  கேக்க நல்லாருக்குடி…

 

மாமானுதானே அது கல்யாணத்தக்கப்பரம் கூப்படறேன் இப்போ கைய எடுடா…

 

மாமானு கூப்பிடரதுக்கும் உன்ற கண்ணாலத்துக்கும் என்னடி சம்பந்தம்??

 

அடேய் லூசு மாமா நா இம்புட்டு தெளிவா சொல்லியும் உனக்கு புரியமாட்டைங்குதேடா உனக்கு எப்ப புரிஞ்சி எப்ப லவ் சொல்லி அப்பப்பா நினச்சிப்பாத்தாவே கண்ணக்கட்டுதே மனதில் பேசிக்கொண்டே சத்தமாக கடவுளே இதுக்குமேல என்னால முடியாது என்ன காப்பாத்து என மேலே பார்த்தாவாறு வேண்டினாள்…

 

இப்போ எதுக்குடி அவர கூப்புடர???

 

நா எதுக்கோ கூப்பிட்டேன் நீ உன்ற வேலைய பாத்துட்டு போடா…

 

இப்போ அந்த வேலைய பாக்கத்தான்டி வந்துருக்கேன் ஆமா இத்தனை நாளா என்ன எப்படிலா ஒரு போட்டோவ வச்சிப்போட்டு  வெறுப்பேத்துன அதுக்கு பழிதீக்கவேணாம்…

 

இன்னமும் அந்த போட்டோ எங்கிட்ட இருக்குங்ரத மறந்துட்டியாடா???

 

ஹா ஹா ஹா பயங்கராக சிரித்துக்கொண்டே நீ இம்புட்டு டியூப்லைட்டா இருப்பேனு நா நினைக்கவே இல்லடி சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்…

 

ஆரு நானு டியூப்லைட் அத நீ சொல்ர எல்லாம் என்ற நேரம்டா…

 

அந்த போட்டோ டெலிட்ஆகி மூனுமணி நேரம் ஆகுதுடி

 

என்னடா சொல்ர எப்படி எனக்குத் தெரியாம என்ற போன நீ எடுத்த பேசிக்கொண்டே போனை எடுத்து பார்த்தவள் போட்டோ இல்லாததை பார்த்ததும் ஏன்டா எருமை மத்தவங்க போன எடுக்கக்கூடாதுனு ஒரு பேசிக் மேனஸ் கூட உனக்கு தெரியாதாடா என திட்ட ஆரம்பித்தாள்..

 

எய் லூசு உன்ற போன நா எடுக்கவே இல்லடி…

 

நீ எடுக்கலைனா வேர ஆரு இந்த போட்டோவ டெலிட்பண்ணா??பாலாவா??ச்சீ அவன் அப்படிலா பண்ணமாட்டானே வேர ஆருனு சொல்லுடா??

 

அது சொல்லமாட்டேன் நீயே கண்டுப்பிடி…

 

வேர ஆரு எல்லாம் என்ற அம்மத்தாத்தானே  ??? கோவிலுக்குதானே போயிருக்காங்க வரட்டும் அப்பரமா கவனிச்சிக்குறேன்…

 

வர வர அம்மத்தாவோட கிரிமினல் வேலை அதிகமாயிட்டே போகுது…

 

ஏய் ஜானு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் ஏங்கிட்ட இருக்கு அது என்னனு சொல்லு பாப்போம்

 

தெரியலைடா நீயே சொல்லு???

 

தன் பேன்பாக்கெட்டில் இருந்து ரஞ்சித் குடுத்த சாவியை எடுத்து அவளின் முன்னால் ஆட்டியவாரு இதுதான் அது…

 

டேய் எப்படிடா அவன்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்த??

 

அது சஸ்பென்ஸ்…

 

ரொம்ப தேங்ஸ்டா நா பயந்துட்டே இருந்தேன் மாமா வண்டியக்கேட்டா என்ன பதில் சொல்ரதுனு  சரி குடு நா நாளைக்குப்போய் வண்டிய எடுத்துட்டு வந்துடறேன்…

 

ஆசையப்பாரு உன்றக்கிட்ட குடுக்கத்த நா சாவிய வாங்கிட்டு வந்தேனு நினச்சிட்டியாக்கும் சொல்லிக்கொண்டே எழுந்து நின்றவன் இந்த சாவியாலதான் உன்ன அப்பாக்கிட்ட திட்டுவாங்கிவைக்கரதுக்கு எனக்கு கிடைச்சிருக்க சான்ஸ் அப்படி இருக்கப்போ நீ கேட்டவுடனே குடுத்துருவேனாடி…

 

அவன் கையிலிருந்த சாவியை பறிப்பதற்காக அவளும் பின்னாலையே எழுந்து  டேய் விளையாடாத குடுத்தூருடா…

 

ஜனனி சாவி பறிப்பதற்காக ஓடி வந்ததை பார்த்ததும் பார்த்தியும் அங்கிருந்த சோபாவை சுற்றிக்கொண்டே குடுக்க முடியாது போடி என்றான்…

 

 

 

இருவரும் ஓடிப்புடிச்சி விளையாடும் சத்தம்கேட்டு சமயலறையிலிருந்து வெளிவந்த ருக்மணி ரெண்டுபேரும் அடிக்கும் கூத்தைப்பார்த்து தாலையில் அடித்துக்கொண்டு திரும்பவும் உள்ளே சென்றுவிட்டார்…

 

 

அப்போது கிருஷ்ணனும் சந்திரனும் வரும் கார்சத்தம் கேட்டதும் ஓடிபுடிச்சி விளையாடிக்கொண்டிருந்த பார்த்திபன் வேகமாக தனது ரூமிற்கு சென்று கதவடைத்துக்கொண்டான்…ஜனனியும் அமைதியாக வந்து உட்கோர்ந்து கொண்டாள்…

 

உள்ளே வந்த கிருஷ்ணன்

அங்கு உட்கோர்ந்திருந்த ஜனனியிடம் அம்மணி ஒரு சொம்பு தண்ணிக்கொண்டுவாடாம்மா என சொல்லிக்கொண்டே சோபாவில் அமர்ந்தார்…

 

ஐனனி தண்ணி கொண்டு வந்து குடுத்ததும் வாங்கி குடித்தவர் அம்மணி அம்மா எங்கடாம்மா??

 

அம்மத்தாவும் அம்மாவும் சிவன் கோவிலுக்கு போயிருக்காங் மாமா…

 

அவள் சொல்லி கொண்டிருக்கும்போதே கோவிலுக்கு சென்றுவிட்டு  ரெங்கநாயகியும் சிவகாமியும் வந்தனர்…

 

 

சிவகாமி கொண்டுவந்த திருநீரை கிருஷ்ணனுக்கும், சந்திரனுக்கும் கொடுத்துவிட்டு  ஜனனிக்கு வைத்துவிட்டார்…

 

என்னம்மா விசேசம் இன்னைக்கு கோவிலுக்கு போனிங்க??

 

சனிபிரதோஷம்டா கிருஷ்ணா…

 

 

அப்போது சமயலையிலிருந்து வெளிவந்த ருக்மணி சாப்பாடு ரெடியாயிடுச்சு அல்லாரும் எழுந்து வாங்க சாப்பாடு எடுத்து வைக்கறேன்  சாப்புட்டுபோட்டு பேசுங்க என்றவர் ஜனனிக்கண்ணு பார்த்தியையும் பாலாவையும் சாப்ட வர சொல்லுடா…

 

சரிங்கத்தை என்றவள் பாலாவையும் பார்த்தியையும் கூட்டிவரசென்றாள்…

 

சிவகாமி அண்ணி இருங்க நா வந்து எடுத்துவைக்கறேன் என்றவர் எழுந்தார்…

 

சிவகாமி கொஞ்சநேரம் உட்காரு இன்னும் கொஞ்சநேரம் கழிச்சி சாப்ட்டுக்கலாம்…தங்கச்சி நீயும் வாம்மா உன்றக்கிட்டையும்தான் சொல்லோணும்…

 

சொல்லுங்ண்ணா??

 

 

நீ மொதல்ல உட்கோரு தங்கச்சி…

 

சந்திரான் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜனனி பாலாவை கூட்டிவந்தாள்…

 

நீயும் உட்கோருடா கண்ணு என்றவர் அத்தை இன்னைக்கு நம்ம ஜனனிக்கண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை வந்தது என்றார்…

 

ஆருங் மாப்பிள்ளை??

 

நம்ம முருகேசன் மச்சானோட பையன் ரஞ்சித் நம்ம ஜனனிய புடிச்சிருக்குனு பொண்ணுக்கேட்டு நம்ம பார்த்தி மாப்பிள்ளைக்கிட்ட வந்துருந்தாருங் அத்தை…

 

முருகேசன் குடும்பம்  நல்ல குடும்பம்தான் வசதியும் நம்ம அளவுக்கு இருக்கும்  ஜாதகம் நல்லாருந்தா குடுக்கலாம் மாப்பிள்ளை…

 

ஆமாங்க. ஜாதகம் சரியா இருந்தா குடுக்கலாம் கோமதி அண்ணி ரொம்ப நல்ல குணம் உள்ளவங்க நம்ம புள்ளைய நல்லாபாத்துப்பாங்க…

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜனனி அமைதியாக எழுந்து சென்றாள்…

 

 

அப்போது வந்த பார்த்திபன் ஜனனி முகம்வாடிப்போய் போவதை பார்தவாறு வந்து பாலாவின் அருகில் உட்கோர்ந்தான்…

 

 

ருக்மணி ஒருவேலை ஜனனிகண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை போல எதுக்கும் அவக்கிட்ட கேட்டு புடிச்சிருந்தா மிச்சத்த பேசலாம்ங்க அண்ணா…

 

நாம என்ன உடனவா கண்ணாலம் பண்ணப்போறோம் மாப்பிள்ளை மொத ஜாதகம் சரியா இருந்தாத்தானே அதனால ஜாதகத்த பாருங்க நல்லாருந்தா ஜனனிக்கிட்ட பேசிக்கலாம் … ஜாதகம் எப்படி இருக்குனு தெரியாம புள்ள மனசுல ஆசைய வளர்க்கவேண்டாம்…

 

அம்மா சொல்ரதும் சரிதானுங் அண்ணி…அவசரப்பட்டு நாமலே எதும் சொல்லவேண்டாம்…

 

 

சரி போய் நீங்க ரெண்டுபேரும் சாப்பாட்ட எடுத்துவைங்க சாப்டலாம் என்றார் ரெங்கநாயகி…

 

அல்லாரும் சாப்பிட எழுந்து சென்றதும் கிருஷ்ணன் ஜனனியின் ரூம்க்கு  சென்றவர் ஐனனி ரூமில் அழுதுக்கொண்டு படுத்திருப்பதை பார்த்ததும் அவளின் அருகில் உட்கோர்ந்தவர் அவளின் தலையை தடவிக்கொடுத்தார்…

 

கிருஷ்ணன் தலையை தடவிக்குடுத்ததில் சுயநினைவுக்கு வந்தவள் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து உட்கோர்ந்தாள்…

 

உன்ற மாமன் இருக்கும்போது நீ எதுக்கு அம்மணி அழுகரிங்க நீ ஆசைப்பட்டமாதிரி பார்த்திய  உனக்கு கட்டிவைக்கவேண்டியது இந்த மாமனோட பொறுப்பு…

 

உங்களுக்கு எப்படிங் மாமா தெரியும்??

 

என்ற அம்மணி கேக்காமையே புடிச்சது அத்தனையும் வாங்கித்தர தெரிஞ்ச எனக்கு உன்ற மனசுல இருக்க காதல் மட்டும் தெரியாம போயிடுமா அம்மணி…

 

உன்ற மாமன் இருக்கேன் அதனால எதையும் மனசுலபோட்டு குழப்பிக்காம எழுந்து வெளிய வாடாம்மா சாப்டலாம்…

 

சரிங் மாமா நீங்க போங்க வறேன்…

 

அவர் சென்றதும் தன்போனில் ஸ்கிரின் சேவராக பார்த்தியும் அவளும் இருந்த போட்டோவை பார்த்தவாறு அடேய் மக்கு மாமா எனக்கு மாப்பிள்ளையா பாக்கர இருடா நீயேப்போய் என்ற அப்பாக்கிட்ட ஜனனிய எனக்கே கட்டிக் குடுத்துப்போடுங்க மாமானு கேக்கவைக்கறேன்டா…

 

 

டாம் அண்ட் ஜெர்ரி.8

 

 

சாப்புட்டு முடிச்சிப்போட்டு ரூமிற்கு வந்த பாலாவும் பார்த்திபனும் தூங்காமல் லேப்டாப்பில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்…

 

அப்போது பார்த்தியின் ரூமிற்கு வந்த ஜனனி இருவரும்  படம் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் என்ன நிம்மதியில்லாம பண்ணிப்போட்டு நீ மட்டும் சந்தோசமா படம் பாத்துப்போட்டு இருக்கையாடா உன்ன எதாவது பண்ணனுமே என யோசித்தவள் அவர்களின் முன்னாள்  சென்று நின்றவாரு காலின் பெருவிரலால் தரையை கோளம்போட்டுக்கொண்டே தலையை குனிந்து வாயில் சுண்டுவிரலின் நகைத்தை கடித்தவாறு வெட்கப்பட்டுக்கொண்டே மாமா என அழைத்தாள்…

 

படம் பார்த்துக்கொண்டிருந்த இருவரும்  ஜனனியின் அழைப்பில் நிமிர்ந்து  பார்த்தவர்கள் அவளின் இந்த செய்கையைப் பார்த்து சிரித்தனர்…

 

ஏய் லூசு என்னடி பண்ற??

 

ம்ம் பாத்தா தெரியலையாக்கும் பொண்ணுங்க கண்ணாலணம்னா இப்படித்தா வெட்கப்படுவாங்கடா அதுதா நானும் வெட்கப்படறேன்…

 

அது பொண்ணுங்கதானேடி பண்ணுவாங்க நீ ஏன்டி பண்ற???

 

ச்சீசீ போடா லூசு உன்ற முன்னாடிப் போய் வெட்கப்பட்டேன் பாரு என்ன சொல்லோணும் நா என்ற அத்தான்கிட்டையே வெட்கப்பட்டுக்கறேன்…

 

ஏய் எனக்கு தெரியாம ஆருடி உனக்கு அத்தான்…

 

என்ன கட்டிக்கப்போரவர் எனக்கு அத்தான்தானேடா அததா சொன்னேன்…

 

சரி சரி உன்றக்கிட்ட எனக்கு என்ன வெட்டிப்பேச்சு மொத எனக்கு என்ற அத்தான் நம்பர் குடுடா நாம்போய் பேசோணும்…

 

குடுக்க முடியாது போடி…

 

அக்கா உங்களுக்கு வருத்தமாவே இல்லையா??எங்கல அல்லாம் வுட்டுப்போட்டு கண்ணாலம் பண்ணிப்போட்டு போரதுக்கு??

 

நா எதுக்கு வருத்தபடோணும் பாலா எனக்கு லவ்பண்ணி கண்ணாலம் பண்ணிக்கோணும்னு ஆசை  அதுக்கு பதிலா என்ன  விரும்பி வந்து ஒருத்தன் பொண்ணு கேக்கறான்.இந்த மாதிரி ஒரு நல்ல சான்ஸ் தானா கிடைக்கரப்போ விடமுடியுமா??

 

 

அப்ப ஏனுங்க்கா நீங்க என்ற அண்ணாவ லவ் பண்ணல??

 

அட போ பாலா இவனப்போய் ஆரு லவ் பண்ணுவாங்க பொண்ணுங்க லவ் பண்றதுக்கும் ஒரு தகுதி வேணும்டா அது இவன்கிட்ட துளிக்கூட இல்லை…

 

ஏய் ச்சீசி போடி உன்னமாதிரி ஒரு பொண்ண லவ் பண்றதுக்கு நா காலம்பூரா சன்னியாசியாவே வாழ்ந்துப்போடுவேன்…

 

 

மக்கு மாமா நீ இப்படி தத்தியாவே இருந்தினா அதுதா நடக்கப்போகுது என முனகியவள்  பார்த்தி அசந்த நேரம் பார்த்து அவனுடைய போனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடியவள் நீ தராட்டி என்னால நம்பர் எடுக்க முடியாதாக்கும் இப்போ உன்ற போனே என்றக்கிட்டதா போடா என சொல்லிவிட்டு பழித்துக்காட்டியவாரு   அவள் ரூமிற்கு சென்றாள்…

 

ஜனனி தன்னோட போனை எடுத்துக்கொண்டு ஓடியதைக்கூட கவனிக்காமல் பார்த்திபன் ஒருமாதிரி உட்கோர்ந்திருப்பதைப் பார்த்த பாலா அவனை தொட்டு  அண்ணா அக்கா பேசிப்போட்டு போனதுல வருத்தமாயிட்டிங்ளா??அவங்க எதோ விளையாட்டுக்கு சொல்லிப்போட்டு போராங்க நீங்க பீல்பண்ணாதிங்க…

 

உங்கல கண்ணாலம் பண்ணிக்கப்போரப் பொண்ணு குடுத்துவச்சவங்க…

 

அப்போ ஏன் பாலா ஜானுவுக்கு என்ன புடிக்கலை??

 

அண்ணா என்ன சொல்ரிங்க??அக்காவ நீங்க லவ் பண்றிங்ளா??

 

தெரியலை பாலா…ரஞ்சித் என்றட்ட வந்து பேசுனதுல இருந்தே மனசுல எதோ இழக்க போறேங்ரமாதிரியே தோணுது…அதுவும் இப்போ ஜானு பேசுனத கேட்டவுடனே மனசு ரொம்ப வலிக்குது பாலா…  எனக்குதா அவள புடிக்காதே அப்போ நா சந்தோசம்தானே படோணும் ஆனா சந்தோசபட முடியலையேடா…

 

 

லூசுங்ளா அண்ணா நீங்க இதப்போய் இம்புட்டு லேட்டா சொல்ரிங்க

 

ஏன்டா அப்படி சொல்ர???

 

பின்ன என்னங்ண்ணா அக்காமேல இம்புட்டு லவ்வ வச்சிப்போட்டு நீங்கலே அவங்களுக்கு மாப்பிள்ளை பாத்துப்போட்டு வந்து நிக்கரிங்ளே??

 

நா எப்ப பாலா ஜானுவ லவ் பண்ணேன்??

 

எதாவது சொல்லிப்போடபோறேன் அண்ணா…இப்போ அவங்கல விட்டு குடுக்க முடியாம பொழம்பரதுக்கு பேர் என்ன??

 

டேய் பாலா அப்போ நா ஜானுவ லவ் பண்றேனாடா???

 

தலையில் அடித்துக்கொண்ட பாலா அததானே இம்புட்டு நேரமா சொல்லிப்போட்டு இருக்கேனுங் அண்ணா…

 

 

உங்கல இம்புட்டு வெள்ளந்தியா வளர்த்த நம்ம அம்மா அப்பாவ சொல்லோணும்…

 

சிறிதுநேரம் யோசித்த பார்த்திபன் டேய் பாலா நீ சொன்னது உண்மைத்தான்டா நா ஜானுவ லவ் பண்றேன் உற்சாகமாக பேசிக்கொண்டே வந்தவன் இப்போ இது தெரிஞ்சி என்ன பிரையோஜனம் என்னோட அவசரப்புத்தியினால என்ற வாழ்க்கையவே தொலைச்சிப்போட்டேனேடா என கண்கலங்கினான்…

 

ஐயோ அண்ணா என்ன இது சின்னபுள்ளதனமா அழுதுப்போட்டு இருக்கரிங்க முதல்ல கண்ணத்துடைங்க எல்லாத்தையும் சரி பண்ணிப்போடலாம்…

 

இனி எப்படி பாலா சரி பண்ணமுடியும் அதுதா அல்லாம் முடிஞ்சிப்போச்சே…

 

கொஞ்சநேரம் இப்படி உளரத நிறுத்துங்ண்ணா இன்னும் எதும் முடியலை…

 

என்னடா சொல்ர???

 

ஆமாங்ண்ணா நீங்களே யோசிங்ளேன் நம்ம வூட்ல எதுபண்ணாலும் ஜாதகம் பாக்காம பண்ணமாட்டாங்க??சாதாரன விசயத்துக்கே இப்படினா ஜனனி அக்காவோட வாழ்க்கைங்ரப்ப இன்னும் பொருமையாதா பண்ணணுவாங்க அப்பவும் ஜாதகத்தோட நிக்காது நம்ம குல தெய்வ கோவில்ல பூ போட்டு பாக்கரது தடவழி பாக்கரதுனு ஏகப்பட்ட வேலை இருக்கு அதுக்குள்ள நாம எதாவது பண்ணி இந்த சம்பந்தத்த நிறுத்திப்போடலாம் நீங்க தைரியமா இருங்கண்ணா…

 

ஒருவேலை ஜாதகம் சரியா இருந்தா என்னடா பண்றது??

 

அதுக்கு நாம உண்மையான ஜாதகம் குடுத்தாத்தானே அண்ணா எப்படியும் ஜாதகம் நீங்கதா வாங்கிப்போட்டு வரப்போறிங்க அது நம்ம ஜனனி அக்காவோட ஜாதகத்துக்கு சரியா இருந்ததுனா நாமளே ஜாதகத்த மாத்திப்போடுவோம் அதுவும் முடியலைனா எதாவது சகுணத்தடை ஆகரமாதிரி பண்ணிப்போடுவோம் அப்போ இது நின்றும்ல…

 

சூப்பர் ஐடியா பாலா…ரொம்ப தேங்ஸ்டா…

 

இதுக்கு போய் எதுக்குங்ண்ணா தேங்ஸ் சொல்லிரிங்க…

 

என்ற வாழ்க்கையவே காப்பாத்திருக்கடா…

 

ஜனனி பார்த்தியின் போனை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வந்தவள் பார்த்தியின் போனிலிருந்து ரஞ்சித்துக்கு அழைத்தாள்…

 

போனை எடுத்த ரஞ்சித் சொல்லு பார்த்தி உன்ற மாமாகிட்டையும் அப்பாக்கிட்டையும் பேசிப்போட்டியா??என்ன சொன்னாங்க??

 

நா ஜனனி பேசறேன் என்றாள்…

 

ஒருசெகன்ட் அதிர்ச்சியாகி போனை எடுத்து நம்பரை பார்த்தவன் திரும்பவும் காதில் வைத்து ஹலோ?? என்றான்

 

நா உங்ககிட்ட பேசோணும்ங்ரதுக்காகத்தான் பார்த்தி மாமாவோட போன்ல கூப்பிட்டேன்…

 

ம்ம் பேசு ஜானு…

 

நீங்க மாமாக்கிட்ட சொன்னிங்கலாம் என்ன லவ்பண்றிங்கனு சாரிங்க என்னால உங்கல லவ்பண்ண முடியாது…

 

ஏன் ஜானு??சின்னவயசுல நடந்ததையே நினச்சிப்போட்டு இப்போ என்ன வேணாம்னு சொல்ரியா??

 

அதுவும் ஒரு காரணம்தான் ஆனா அதுமட்டும் கிடையாது…

 

புரியலை ஜானு??

 

என்னால உங்கல லவ் பண்ணமுடியாதுங்க நா ஏற்கனவே என்ற பார்த்தி மாமாவ லவ் பண்றேன்…

 

பார்தியவா??அவன்கிட்ட கேட்டுப்போட்டுதானே என்னோட லவ்வையே சொன்னேன் அவனும் இல்லைனு சொன்னானே??

 

அது உண்மைத்தானுங்க என்ற மாமா என்ன விரும்பல ஆனா நா அவர மட்டும்தான் லவ் பண்றேன் பண்ணுவேன்…

 

ரஞ்சித்திடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் ஹலோ இருக்கிங்ளா??

 

ம்ம் இருக்கேன் சொல்லுங்க??

 

நா ஏன் இப்பவே சொன்னேனா நீங்க இதுக்குமேலையும் ஆசைய வளர்த்துக்கக்கூடாதுனு மட்டும்தான் உங்கல கஷ்டபடுத்தோணும்னு இல்லை…

 

நீங்களே இவ்வளவுதூரம் சொல்லும்போது நா ஏத்துக்கறேனுங்க எனக்கு உங்கல புடிச்சதுக்குக்காரணமே உங்களோட குறும்புத்தனம்,தைரியம் அப்பரம் நீங்களும் பார்த்தியும் மாமான் பையன் அத்தை பொண்ணா இருந்தாலும் ஒரு ப்ரண்ட்மாதிரி பழகுனத பாத்துத்தான் நானும் உங்களோட சேர்ந்துக்கோணும்ங்ர ஆசைலதான் உங்கல விரும்ப ஆரம்பிச்சேன் அப்பவே பார்த்தியும் நீங்களும்   லவ் பண்ணா நா லவ்பண்ணத மாறச்சிடனும்னுதான் யோசிச்சி வச்சிருந்தேன் இப்ப நீங்க சொன்னதால நா விலகிடறேன்..ஆனா உங்க ப்ரண்ட்ஸ்சிப் வேணும் எப்பவும்போல சாதாரனமா பேசோணும் அம்புட்டுதான்…

 

ரொம்ப தேங்ஸ்ங்க நா உங்களுக்கு கால்பண்றப்பக்கூட  எப்படி புரியவைக்கரதுனுதான் பயந்தேன் ஆனா நீங்க நா சொன்னதும் டக்குனு புரிஞ்சிக்கிட்டு பேசுனது ரொம்ப புடிச்சிருக்கு இத்தனைநாளா உங்கல எனக்கு புடிக்காது ஆனா இன்னைக்கு  உங்கமேல ஒரு நல்ல எண்ணம் வந்துருக்கு…

 

ரொம்ப தேங்ஸ் ஜானு…அப்படி சொல்லலாம்தானே??

 

தாராளமா நானும் உங்கல எப்பவும்போல ரஞ்சித்துனே கூப்டலாம்தானே??

 

வாடா போடானு சொன்னாக்கூட எனக்கு ஓகேதான் ஜானு…

 

சரி குட்நைட் ரஞ்சித் போன வைக்கறேன்…

 

குட்நைட் ஜானு உனக்கு எந்த உதவி தேவைனாலும் தயங்காம எனக்கு கால்பண்ணு நா உதவி பண்றேன் ஜானு…உன்ற லவ் சக்சஸ் ஆக வாழ்த்துகள்…

 

தேங்ஸ் ரஞ்சித்…

 

காலையில் அப்பத்தாவும்,பாலாவும் சோபாவில் உட்கோர்ந்தவாரு ருக்மணிக்கு சமையலுக்கு உதவுவதற்காக கீரையை பாத்திரத்தில்  ஆயிந்து போட்டுக்கொண்டிருந்தனர்…அப்போது  தூங்கி எழுந்து ஹாலுக்கு வந்த ஜனனி கிச்சனிலிருந்த ருக்மணியிடம் அத்தை எனக்கு ஒரு கப் காபி என சொல்லிக்கொண்டே சோபாவில் பாலாவின் அருகில் உட்கோர்ந்தாள்….

 

மஹாராணி தூங்கி எந்திருச்சி கலச்சிப்போய் வந்துருக்கா நீ காபி கொண்டுவந்து குடு மருமகளே…

 

அப்பாத்தா கோபமாக ஜனனியிடம் ஏன்டி கூறுகெட்டவளே பொழைக்கர குடியானச்சி எந்திரிக்கர நேரமாடி இது…பாரு ஆம்பளப்பையன் என்றபேரன் காலைல வெள்ளென எந்திருச்சிப்போட்டு வயலுக்குப்பொய் கீரை பறிச்சிப்போட்டு வந்து அம்மா தனியா வேலை செய்யராங்களேனு கூட செஞ்சிப்போட்டு இருக்கான் நீயும்தான்டி இருக்கியேடி… இப்படி ஒருநாளாவது என்ற மகளுக்கு ஒத்தாசை பண்ணிருப்பியாடி??

 

ஏனுங் அம்மத்தா பொழைக்கர குடியானச்சி எந்திரிக்க எதாவது ஸ்பெசலா நேரமிருக்கா என்ன??சொல்லுங்க நாளைல இருந்து கரெக்ட்டா அந்த டைம்க்கே எந்திருச்சிப்போடறேன்….

 

இப்படியே எது சொன்னாலும் ஏட்டிக்கு பொட்டியாவே பேசிப்போட்டு இரு போர இடத்துல மாமியாக்காரிக்கிட்ட நல்லா வாங்குவடி….

 

என்ற அத்தைமாதிரியே ரொம்ப நல்லவங்கதா  எனக்கு மாமியாரா வருவாங்க அம்மத்தா நீங்க கவலை படாதிங்க…

 

அதையும் பாக்கத்தானேடி போறேன் எல்லா மாமியாரும் மருமகனு ஒருத்தி வந்துட்டா மாறிடுவாளுங்க நா பாக்காததாடி…

 

ரெங்கநாயகி பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த பார்த்திபன் ஜனனியிடம் ஏய் எங்கடி என்றப்போன் நேத்து எடுத்துப்போட்டு போனல??

 

அதுவா என்ற ரூம்லதான்  கிடக்கும் போய்  எடுத்துக்கோடா…

 

எருமை ஒழுங்கா எடுத்தாந்துக்குடுடி…

 

சரி கத்தாத இருடா எடுத்துதறேன் என்றவள் தனது ரூமிற்கு சென்று எடுத்துவந்து கொடுக்கும்போது  பார்த்தியின் போன்க்கு ரஞ்சித் அழைத்திருந்தான் அதைபார்த்தவள் இந்தா என்ற அத்தான்தா போன்பண்ணிருக்காங்க திரும்ப போன்பண்ணி பேசு என சொல்லி கொடுத்தாள்…

 

 

நீ ரொம்ப ஓவராத்தான்டி போர இன்னும் ஜாதகமே பாக்கல அதுக்குள்ள என்ற அத்தானாக்கும்…

 

உனக்கு பொறாமைடா என்ன இம்புட்டு அழகான பையன் லவ்பண்றானு…

 

ஆமா கண்டுபுடிச்சிப்போட்ட போடி என்றவன் தனது ரூமிற்கு சென்றான் திரும்பவும் ரஞ்சித் அழைத்ததும்  அழைப்பை ஏற்று பேசினான்…

 

சொல்லுடா ரஞ்சித் என்ன காலைலயே போன்போட்ருக்க??

 

அது ஒன்னுமில்லை பார்த்தி உன்றக்கிட்ட ஒரு உதவி கேக்கோணும்னுதான் போன்பண்ணேன் இப்போ நீ ப்ரியா இருக்கியாடா??

 

ம்ம் இருக்கேன் சொல்லுடா???

 

 

நேத்து நானும் ஜானுவும் ரொம்ப நேரம் பேசுணோம் அதுல அவ என்றமேல விருப்பம் இருக்குனு சொல்லிப்போட்டா அதா இன்னைக்கு நானும் ஜானும் கொஞ்சநேரம் தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு இருக்கோம்…

 

நா சொல்றேனு தப்பா எடுத்துக்காத ரஞ்சித் இன்னும் எதுவும் முடிவாகாதப்போ இந்தமாதிரி தனியா மீட்பண்றது ஜனனிக்கு நல்லதில்லை…

 

பார்த்தி நா ஜானுவ விட்ருவேனு நினைக்குரியா??எப்போ நேத்து என்றக்கிட்ட அவளோட விருப்பத்த சொன்னாளோ அப்பவே நா முடிவு பண்ணிப்போட்டேன் அவதா என்ற லைப்னு..

 

நா அப்படி சொல்லலடா எனக்கு தெரியாதா உன்னபத்தி…என்ற வூட்ல இதுக்கு ஒத்துக்கமாட்டாங்கடா

 

உன்றவூட்ல இருக்கரவங்கல ஜானு சமாளிச்சிப்போடுவா நீ அவளுக்கு தொனைக்கு வந்தா மட்டும் போதும் உன்ற வூட்ல நீ ஜானுக்கூட போரதால ஆரும் கேள்வி கேக்கமாட்டாங்க…

 

அதா அல்லாமே நீங்களே முடிவு பண்ணிப்போட்டிங்ளே அப்பரம் எதுக்கு என்ன கூப்படரிங்க??

 

இல்லைடா நானும் ஜானுவும் தனியா வெளியப்போனா ஆராவது பார்த்தாங்கனா அது நல்லாருக்காதுல அதா கூட நீ இருந்தினா ஆருக்கும் சந்தேகம் வராது

 

ஓஓஓ… என்ன பாடிகார்டுஆ ஆக்க முடிவுபண்ணது ஆரு ரஞ்சித்??

 

வேர ஆரு அல்லாம் ஜானுதான் இந்த ப்ளான போட்டதே ஜானுதான் பார்த்தி அவளே இது உன்றக்கிட்ட சொல்லிருப்பா ஆனா நீ ஒத்துக்கமாட்டேனுதா என்ன பேசசொன்னாடா….

 

சரி பார்த்தி நா போன வைக்குறேன் நீங்க வந்துருங்க உங்க ரெண்டு பேர்த்துக்காகவும் நா வெயிட் பண்ணிப்போட்டு இருப்பேன்…

 

 

ரஞ்சித் போனை வைத்ததும் பார்த்திபன் கோபத்தில் போனைதூக்கி எறிந்தவன் …கீழே விழுந்த போன் தனிதனிபாகங்களாக சிதறியது

 

அப்போது உள்ளே வந்த பாலா போன் உடைந்துகிடந்ததை பார்த்து ஏனுங்ண்ணா என்ன ஆச்சு உங்களுக்கு எதுக்கு இப்போ போன்ன உடச்சிப்போட்டு வச்சிருக்கிங்க??என்றவன் குனிந்து கீழே சிதறிக்கிடந்த போன் பாகங்களை எடுத்து அதை சரிபண்ணி அதை ஆன்பண்ணி பார்த்தான்… கண்ணாடி மட்டும் உடைந்திருந்தது…

 

 

என்னால முடியலை பாலா ரொம்ப வலிக்குதுடா அப்படியே செத்தரலாம்போல இருக்குடா…

 

இப்போ என்ன ஆச்சுனு இந்த மாதிரி பேசிப்போட்டு இருக்கிங்க அண்ணா…

 

இனி என்ன ஆகோணும் பாலா

 

எதாவது புரியரமாதிரி சொல்லுங்ண்ணா…

 

ஜானுவுக்கு என்ன மாமாவேலை பாக்கசொல்ராண்டா…

 

ஆருங்ண்ணா??

 

ரஞ்சித்…

 

அண்ணா மொத தெளிவா சொல்லுங்க??

 

அவனுக்கு ஜானுக்கூட டைம்ஸ்பெண்ட் பண்ணோணுமாம் அதுக்கு நா வூட்ல பொய்சொல்லி ஜானுவ கூட்டிப்போட்டு வரசொல்ரான்டா என்னபாத்தா அவனுக்கு எப்படி தெரியுது பாலா??

 

 

ஐயோ அண்ணா இதுதா விசயமா??

 

உனக்கு இது சாதாரன விசயமா பாலா நா லவ்பண்ற பொண்ணக்கூட  இன்னொருத்தன் பழக நா கூடபோவோணுமாம்…

 

அண்ணா நா சொல்றேனு தப்பா எடுத்துக்காதிங்க இதுக்கு முழுகாரணமும் நீங்கதான் இப்போ பொழம்பி எந்த பிரையோஜனமும் இல்லை அதனால கோபபடாம கிளம்பி போங்க…அல்லாம் நல்லதாவே நடக்கும்…

 

அதுவும் சரிதான் பாலா என்ற பக்கம் தப்ப வச்சிப்போட்டு அவன்மேல கோபபட்டு என்னவாகப்போகுது

 

 

டாம் அண்ட் ஜெர்ரி.9

 

காலையில் டைனிங்டேபிலில் அனைவரும் உட்கோர்ந்து சாப்புட்டுக் கொண்டிருக்கும்போது ஜனனி கிருஷ்ணனிடம் மாமா எனக்கு வூட்லையே இருக்கரது என்னமோ மாதிரி இருக்கு அதனால  ஆஞ்சிநேயர் கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஷாப்பிங்கும் போயிட்டு வரட்டுமா??

 

ம்ம் போயிட்டு வா அம்மணி எம்புட்டு பணம் வேணும்னு சொல்லு தறேன் வாங்கிப்போட்டு போயிட்டு வா அம்மணி…

 

அப்பத்தா இடையில் வூட்ல ஒருவேலையும் செய்யாம திண்ணுப்போட்டு தூங்கி தூங்கி எந்திருச்சா அப்படித்தா இருக்கும்டா அவளப்போய் நாலு நாளைக்கு  வயல்ல வேலை செய்ய சொல்லு உடம்பும் குறையும் கொழுப்பும் குறையும்…

 

பாருங் மாமா அம்மத்தா என்ன  சொல்ராங்கனு…

 

 

என்ற அம்மணி வயல்ல வேலை செய்யோணும்னு என்ன தலையெழுத்தாங் அம்மா…

 

ஏன்டா கிருஷ்ணா உன்ற மருமக எந்த தேசத்துக்கு இராஜகுமாரி??

 

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் என்ற அம்மணி இந்த வூட்டுக்கு ராஜகுமாரிதானுங் அம்மா…

 

ம்க்கும் இப்படியே தலைல தூக்கிவச்சி கொண்டாடிப்போட்டே  இருடா போர இடத்துல நல்லா வாங்கப்போரா…

 

அதுக்கு நா விட்டாத்தானேங்ம்மா…

 

ஏ உன்ற மருமகக்கூடையே நீயும் போகப்போரியா கிருஷ்ணா…

 

என்ற அம்மணி சந்தோசமா இருப்பானா அதையும் பண்ணுவேனுங்ம்மா…

 

நீ இவமேல வச்சிருக்க கண்மூடித்தனமான பாசம் உன்ன எங்க கொண்டுப்போய் நிறுத்தப்போகுதோ தெரியலை கிருஷ்ணா…வயசுல மூத்தவங்ரதால நா ஒன்னு சொல்றேன் பொட்டபுள்ளைக்கு இம்புட்டு செல்லங்குடுக்கரது குடும்பத்துக்கும் நல்லதில்லை அவளுக்கும் நல்லதில்லை சொல்லிப்போட்டேன்…

 

 

திரும்பவும் அம்மாவும் மகனும் உங்க பஞ்சாயத்த ஆரம்பிச்சிப்போட்டிங்ளாக்கும்??பேசாம சாப்டமாட்டிங்க என்றார் ருக்மணி…

 

அம்மா சொல்ர பெருசா எடுத்துக்காத அம்மணி உனக்கு என்னவேணும்னாலும் என்றக்கிட்ட சொல்லு அத நிறவேத்தி தரவேண்டியது என்ற பொருப்பு…

 

சரிங் மாமா… மாமா நா மட்டும் தனியா  போரதுக்கு ஒருமாதிரி இருக்குங் மாமா கூட பார்த்தியையும் வரசொல்லுங்க??

 

அப்பா என்னால அல்லாம் போகமுடியாது எனக்கு வேலை இருக்குங்ப்பா…

 

அதலா நா பாத்துக்கறேன் நீ அம்மணிய பாத்து கூட்டிப்போட்டு போயிட்டு வாடா

 

அப்போ பாலாவையும் வரசொல்லுங்ப்பா  இவ கடைக்குள்ள போனா ஒரு கர்ச்சிப் எடுக்கவே ஒரு மணிநேரம் பண்ணுவா என்னால வெளிய தனியா உட்கோர்ந்திருக்க முடியாது…

 

சரி மூனுபேரும் போயிட்டு வாங்க என்றவர் எழுந்து சென்று கை கழுவிப்போட்டு கிளம்பிச்சென்றார்…

 

கிருஷ்ணன் சென்றதும் பாலா பார்த்திபனின் காதில் மெதுவாக ஏனுங்ண்ணா என்னையும் கோத்துவுட்டிங்க??

 

நீயும் வந்தா அவங்க ரெண்டுபேரையும் பிரிக்கரதுக்கு எதாவது ஐடியா குடுப்ப அதான்டா உன்னையும் வரசொன்னேன்…

 

போங்ண்ணா என்னால அல்லாம் வரமுடியாது நீங்களே போங்க??

 

பிளீஸ்டா எனக்காக வாடா…

 

சரி சரி கெஞ்சாதிங்க வறேன்…

 

பார்த்தி,பாலா ரெண்டுபேரும் பேசாம சாப்டமாட்டிங்க எப்பப்பாரு சாப்படரப்பத்தா எதாவது பேசிட்டே இருக்கரது என கடிந்தவர்  ஜனனி கண்ணு உனக்கு இன்னொரு தோசை வைக்கட்டுமாடா?? என கேட்டார்…

 

இல்லை வேணாமுங் அத்தை இதுவே போதும் என்றவள் எழுந்து கை கழுவிக்கொண்டு சென்றாள்…

 

பார்த்தி கிளம்புவதற்காக அலமாரியில்  இருந்த அனைத்து சட்டையையும் கலைத்து போட்டுக்கொண்டிருந்தான்…

 

டேய் பாலா இந்த சட்டைபோட்டா நல்லாருக்குமா??

 

ஐயோ அண்ணா நீங்க அரைமணி நேரமா இருக்குர அல்லா சட்டையும் ஒவ்வொன்னா போட்டு பாத்துப்போட்டிங்க நானும் நீங்க அல்லாத்தையும் நல்லாருக்குனு சொல்லிப்போட்டேன் ஆனா நீங்க இன்னமும் தேடிட்டே இருக்குரிங்க..…

 

அவனவிட நா அழகா தெரியோணும் பாலா அப்போதா ஜனனிக்கு என்ன புடிக்கும்…

 

அண்ணா காமெடி பண்ணாம கிளம்பி வாங்க இத்தனைநாளா வுட்டுப்போட்டு இப்போ மட்டும் உங்கல பாக்கபோறாங்களாக்கும்…

 

அதலா பாப்பா நீவேனா பாரு பாலா

 

ரொம்பத்தா கனவு காண்ட்ரிங்ண்ணா

 

பாலாவிடம் பேசிக்கொண்டே ப்ளாக்கலர் ஜுன்சும்  பேண்டும் நீலக்கலர் சட்டையில் பிளாக்கலரில் சிறு சிறு கட்டங்கள் உள்ள முழுக்கை சட்டையை அனிந்து அதை மொழங்கை வரை மடக்கிவிட்டவாறு முதல் ரெண்டு பட்டனை போடாமல் உள்ளே போட்ருந்த பனியன் தெரிய கழுத்தில் போட்டிருந்த பார்த்திபனின் முதல் எழுந்தான ஆங்கில எழுத்தில் உள்ள  பி இனிசியல் டாலர்  ஜெயின் தெரிய தலையை வாரி அதை கைகளால் லேசாக கலைத்துவிட்டு மீசையை முருக்கிவிட்டவாறு கிளம்பியவனை பார்த்த பாலா அண்ணா உண்பையாவே அழகா இருக்கரிங்க உங்க ஹைட்டுக்கும் உங்க கலர்க்கும் இந்த ட்ரெஸ் செம்மையா இருக்கு…

 

உண்மையாவே சொல்ரியா பாலா??

 

நா எதுக்குங்ண்ணா பொய் சொல்லப்போறேன்…

 

பார்த்திபன் கிளம்பி முடித்ததும் வாட்ஜை குணிந்து கட்டிக்கொண்டிருக்கும்போது பார்த்தியின் ரூமிற்கு வந்த ஜனனி ஒரு செகன்ட் பார்த்திபனின் அழகில் மயங்கியவள் அதை வெளியே தெரியாமல் மறைத்தவாறு டேய் பார்த்தி பொண்ணு நானே கிளம்பி வந்துட்டேன் ஆனா நீங்க ரெண்டுபேரும் இன்னும் கிளம்பாம என்னபண்ணிப்போட்டு இருக்கரிங்க…

 

ஐனனி வந்ததிலிருந்து அவளையே   பார்த்துக்கொண்டிருந்த பாலா ஜனனியின் முகத்தில் ஒரு செகன்ட் வந்துபோன ரசனையை பார்த்தவன் அதை அவள் உடனே மறைத்ததையும் கண்டு குழம்பிப்போய் ஜனனியையே பார்த்தான்…

 

ஜனனியின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன்  ஸ்கைபுழுகலர் காட்டன் சேரியில் தலைமுடியை ஒற்றைபின்னலிட்டு அதை முன்பக்கம் போட்டவாறு  சங்குகழுத்தில் ஒரு டாலர் ஜெயின்மட்டும் அனிந்து புருவ மத்தியில் சிறிய அளவில் வட்ட பொட்டு வைத்து எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அழகு தேவதையாக வந்து நின்ற   ஜானனியின் அழகில் மயங்கிப்போய் அவளையே வச்சக்கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்…

 

அவனிடம் எந்த பதிலும் வராமல் போகவும் டேய் எருமை எம்புட்டு நேரமா கத்தறேன் ஏன்டா பேசாம அப்படியே மரம்மாதிரி நிக்கர சீக்கரம் வா அத்தான் நமக்காக கோவில்ல வெயிட்பண்ணிப்போட்டு இருக்கராங்க…

 

ஜனனியின் அத்தான் என்ற சொல்லில் சுயநினைவுக்கு வந்தவன் கோபமாக ஏ நமக்காக உன்ற அத்தான் கொஞ்சநேரம் வெயிட்பண்ண மாட்டானுக்கும்…

 

என்ற அத்தான உன்னமாதிரி நினச்சிப்போட்டியாக்கும் அஞ்சு நிமிசம் கிளம்ப லேட்டானாலும் கால்ல சுடுதண்ணி ஊத்துனமாதிரி குதிப்பையே அந்தமாதிரி ஒன்னும் என்ற அத்தான் கிடையாது இப்பக்கூட பொருமையா வாங்கனுதா சொன்னார் தெரியுமா??

 

போதும் போதும் உன்ற அத்தான் புராணம் வா போலாம்…

 

திரும்பியன் பாலா எதோ யோசனையில் இருப்பதை பார்த்து டேய் பாலா என்னடா யோசிச்சிப்போட்டு இருக்க???

 

அதலா ஒன்னுமில்லைங்ண்ணா வாங்க போலாம்…

 

காரில் ஏறி உட்கோர்ந்ததும் ஏய் அவன் எங்க வெயிட்பண்றேனு சொன்னான்…

 

ஆஞ்சிநேயர் கோயில்கிட்ட நிக்கராங்ளாம்டா…

 

மூன்று பேரும் மூன்றுவிதமான சிந்தனைகளில் கோவிலுக்கு சென்றனர்…

 

பாலா ஜனனியை பற்றியே யோசித்துக்கொண்டு வந்தான்…அக்கா அண்ணாவ ரசிச்சாங்க ஆனா அத ஏன்  உடனே மறச்சாங்க  என பலகேள்விகளை மனதில் போட்டு யோசித்துக்கொண்டே வந்தான்…

 

 

இத்தனைநாளா எப்படி ஜானு நா  பாக்காம போனேன் இன்னைக்குதா இவளோட அழகே என்ற கண்ணுக்குத்தெரியுது பாலா சொல்ரமாதிரி நா டியூப்லைட்டாத்தா இருந்துருக்கேன் போல இல்லைனா இம்புட்டு அழகானவள பக்கத்துலையே வச்சிப்போட்டு பாக்காம இருந்துருப்பேனா என மனதில் பேசிக்கொண்டே வந்தான்…

 

 

டேய் மாமா இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடா ஐனனி பார்த்தியின் அழகை கண்ணாடியில் பார்த்தாவாறு ரசித்துக்கொண்டே வந்தாள்…

 

கோவில் வந்ததும் அவரவர் சிந்தனையிலிருந்து வெளிவந்தவாரு காரைவிட்டு இரங்கினர்…

 

அங்கு இவர்களுக்காக நின்னுக்கொண்டிருந்த ரஞ்சித்திடம் சென்றனர்…

 

ரஞ்சித் ஹாய் ஜானு, இன்னைக்கு இந்த சேலைல நீ ரொம்ப அழகா இருக்க என்றான்…

 

 

தேங்ஸ் அத்தான்.உங்களுக்கு சேலை கட்டுனா புடிக்கும்னு சொன்னிங்கல அதான் இன்னைக்கு சேலைகட்டிப்போட்டு வந்தேன்…

 

நா சொன்னதுக்காகவா ஜானு நீ சேலை கட்டுன??

 

ஆமா அத்தான் உங்களுக்காக இதக்கூட பண்ணமாட்டேனா அத்தான்

 

இருவரின் காதல் நாடகத்தை பார்த்து காதில் புகைவராத குறையாக நின்றுக்கொண்டிருந்தான் பார்த்தி…

 

அண்ணா நாங்களும் இங்கனதா இருக்கோம் எங்ககிட்டலாம் பேசமாட்டிங்ளா??

 

சாரி பாலா நா ஜானுவ பாத்த சந்தோசத்துல கவனிக்கல… வா பார்த்தி வா பாலா என வரவேற்றான்…

 

சரி வாங்க அத்தான் கோவிலுக்கு போகலாம்

 

ஜானு  நீ  பூ வச்சா இன்னும் அழகா இருப்ப…

 

அப்போ வாங்கிக்குடுங்க அத்தான் நீங்க ஆசையா வாங்கித்தரப்ப வேணாம்னா சொல்லப்போறேன்…

 

பூக்கடைக்கு சென்றதும் ஜனனி ரஞ்சித்தை பார்த்து எதோ சைகை செய்தாள் அதை பாலா கவனித்தான்…ஜனனியின் சைகையை புரிந்துக்கொண்டு

ஜானு நீ பூ வாங்கிப்போட்டு வெயிட் பண்ணு நானும் பாலாவும் போய் சாமிக்கு தேங்காய்,பழம்,மாலை வாங்கிப்போட்டு வறோம்…

 

சரி அத்தான் நீங்க போங்க…

 

பாலா வா நாம போலாம் பாலாவை ரஞ்சித் கூட்டிச்சென்றதும் ஜனனி பூ வாங்கிப்போட்டு டேய் பார்த்தி என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க பூக்கு காசு குடுடா என்றாள்…

 

ஏன்டி இதையும் உன்ற அத்தானையே வாங்கி தரசொல்லவேண்டியதுதானே

 

அதலா கண்ணாலம் ஆனதுக்கப்பரம் என்ற அத்தான் வாங்கித்தாருவாரு இப்போ நீ காசு குடுடா…

 

ரஞ்சித்கூட சென்றாலும் பாலா ஜனனியையே கவனித்துக்கொண்டிருந்தான்…அக்கா ரஞ்சித் அண்ணாக்கிட்ட எதுக்கு சைகைல போக சொன்னாங்க ஒன்னும் புரியலை டேய் பாலா இதுல எதோ இருக்குடா முதல்ல அதகண்டுபுடிக்கோணும்….

 

அர்ச்சனைக்கூடை வாங்கியதும் பாலா வா போலாம் என்றவன் பார்த்திபனும் ஜனனியும் இருந்த இடத்திற்கு சென்றார்கள்…

 

அல்லாம் வாங்கிப்போட்டிங்ளா அத்தான்..

 

ம்ம் வாங்கிப்போட்டேன் வாங்க உள்ள சாமி கும்பிட போகலாம் ரஞ்சித் சொன்னதும் நால்வரும் உள்ளே சென்றனர்

 

ஒரேகல்லிலான சிலையில்  6.7 அடி உயரத்தில் ஆஞ்சிநேயர் நரசிம்மர்,நாமகிரி தாயரின் சன்னிதானத்துக்கு நேர் எதிரே நின்றவாரு திறந்த விழிகளுடன் கைகூப்பி நரசிம்மரை வணங்கியவாறு காட்சித்தருகிறார்…ஆஞ்சிநேயர்க்கு கோபுரம் கிடையாது வெயிலிலும்,மலையிலும்,காற்றிலும் கூட பொழிவுமாறாமல் காட்சி தருகிறார்…நரசிம்மர்க்கு கோபுரம் இல்லாததால் அவருக்கு தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சிநேயர் சொன்னதாக வரலாற்கு தகவலும் உள்ளது…

 

 

ஆஞ்சிநேயரின் இந்த காட்சியை  பார்க்கும்பொழுது  மனதில் உள்ள அத்தனை கவலைகளும் நீங்கி நிம்மதி தோண்றும்…

 

உள்ளே சென்றவர்கள் சாமின் அழகில் மெய்மறந்து நின்று வணங்கினர்…

 

ஐயர் குங்குமம் குடுக்கும் போது ஜனனி கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்ததால் அவளுக்கு மட்டும் பிரசாதம் குடுக்காமல் சென்றுவிட்டார்…சாமியை வணங்கிவிட்டு கண்திறந்தவள் தனக்கு வலதுபக்கம் இருந்த ரஞ்சித் கைக்கில் இருந்த குங்குமத்தை எடுக்காமல் இடது பக்கம் இருந்த பார்த்திபனின் கையிலிருந்த குங்குமத்தை எடுத்து வைத்ததை பார்த்த பாலா அப்போ அக்காவுக்கு அண்ணாவத்தா புடிச்சிருக்கா என யோசிக்க ஆரம்பித்தான்…

 

 

சாமி கும்பிட்டு வெளியே வந்தவர்கள் மலைக்கோட்டைக்கு சென்றவர்கள் மலையில் ஏறியதும் ரஞ்சித் டேய் பார்த்தி நானும் ஜானும் அங்கன கொஞ்சநேரம் தனியா உட்கோர்ந்திருக்கிறோம் என்றான்…

 

எதுக்கு தனியா அதலாம் ஒன்னும் வேணாம் எங்கக்கூடையே இருங்க…

 

நீ புரிஞ்சித்தா பேசரையாடா??நாஜானுவ வரசொன்னதே அவக்கூட கொஞ்சநேரம் தனியா இருக்கரதுக்காகத்தான்…

 

சாரி ரஞ்சித்அண்ணா நீங்க போங்க பார்த்தி அண்ணா வாங்க என்றவன் பார்த்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்…

 

 

டாம் அண்ட் ஜெர்ரி. 10

 

பார்த்திபனை பாலா இழுத்து வந்து  மலையின் மேல் சுற்றி கட்டப்பட்ட சுவற்றின் ஓரம் விட்டுவிட்டு எதுவும் பேசாமல்  திரும்பி வேடிக்கை பார்க்கஆரம்பித்தான்…

 

பார்த்திபன் கோபமாக நடந்துக்கொண்டிருந்தவன் ரஞ்சித்தும் ஜனனியும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன் இன்னும் கோபமாக பாலாவிடம் கத்தினான்…

 

பாலா எதுக்குடா என்ன தனியா கூட்டிவந்த என்னால அவங்க ரெண்டுபேரும் சிரிச்சி பேசரத பாக்க முடியலைடா என்றான்…

 

அண்ணா தயவு செய்து அவங்க ரெண்டுபேரையும் பாக்காதிங்க பாத்திங்னா இப்படித்தான் கோபப்படதோணும்…

 

உன்ன நா கூட கூட்டிவந்ததே அவங்கல எதாவது சொல்லி பிரிப்பேனுதான் நீ என்னடானா அவங்க ரெண்டுபேரையும் தனியாவிட்டு என்னமட்டும் இங்க கூட்டிவந்துட்ட…

 

ப்ளீஸ் பாலா எதாவது பண்ணுடா என்ல அவங்க ரெண்டுபேரையும் சேர்த்து பாக்கமுடியலை…

 

அங்க ஜனனி ரஞ்சித்திடம் ரொம்ப தேங்ஸ் ரஞ்சித் நா கேட்டவுடனே உன்னோட வேலை எல்லாத்தையும் வுட்டுப்போட்டு  எனக்காக வந்ததுக்கு…

 

இதுல என்ன இருக்கு ஜானு நாமதா ப்ரண்ட்ஸ் ஆயிட்டோம்ல ப்ரண்டுக்காக இதக்கூட செய்யமாட்டேனா??

 

அப்படி இல்லை ரஞ்சித் என்னோட சுயநலத்துக்காக உங்கல இதுல இழுத்து விடறேனோனு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு…

 

இதுல எதுக்கு ஜானு குற்றவுணர்ச்சி நா ஆசைப்பட்டதுதான் நடக்கலை அட்லிஸ்ட் நீ ஆசைப்பட்டதாவது நடந்து நீ சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும்.அதனால இதபத்தி எதுவும் யோசிக்காம பார்த்திய உன்னோட வழிக்கு எப்படி கொண்டுவரதுனு யோசி…

 

ஜானு இன்னைக்கு நா கவனிச்சதுல பார்த்திக்கு உன்றமேல லவ் இருக்கு அத இன்னும் உணராம  இருக்கானு நினைக்குறேன்…

 

அவனுக்கு என்றமேலையா காமெடி பண்ணாத ரஞ்சித்…

 

இல்லை ஜானு நா உண்மையத்தா சொல்றேன் நீ என்ற கையில் இருந்த குங்குமத்த எடுக்காம பார்த்தி கைல இருந்து எடுத்து வச்சல அப்ப அனோட கண்ல ஒரு சந்தோசத்த பார்த்தேன் அவன் என்ன நக்கலா பார்த்து சிரிச்சான் அதுக்கு என்ன அர்த்தம் ஜானு…

 

உண்மையாவா ரஞ்சித்..

 

இப்போ நீயே பாரு பார்த்தி நாம ரெண்டுபேரும் பேசரத பார்த்து கோபத்துல நடந்துப்போட்டு இருக்கான்…

 

பார்த்தியை திரும்பி பார்த்த ஜனனி பார்த்திபன் கோபமாக நடந்துக்கொண்டிருப்பதை பார்த்து ஆமா கோபமாத்தா இருக்கான்…

 

ஒன்னு நீ அவனோட லவ்வ சொன்னா ஏத்துக்கமாட்டேனு நினச்சி மறைச்சிருக்கலாம் இல்லைனா அவனுக்கு அவன் உன்ன லவ் பண்றதே தெரியாம இருக்கோணும்….

 

 

அவன் என்ன லவ் பண்றானானு எப்படி கண்டுபுடிக்கரது ரஞ்சித்??

 

அதுக்கு ஒரு வழி இருக்கு நாம இப்போ கடைக்கு போவோம் நா உனக்கு சேலை எடுக்கறேன் அதையும் நீ புடிச்சிருக்குனு சொல்லு அப்போ அவன் என்ன பண்றானு மட்டும் பாரு…நா எடுக்கரத நல்லாலைனு சொல்லிப்போட்டு அவன்ந்தான் உனக்கு எடுத்துதருவான்…

 

ஒருவேலை நீ சொன்னமாதிரி நடக்கலைனா ரஞ்சித்??

 

கண்டிப்பா நடக்கும்…

 

சரி வா போலாம் இன்னும் கொஞ்சநேரம் நாம பேசிப்போட்டு இருந்தோம்னா அவன் இங்கனையே வந்துருவான்…

 

இருவரும் பார்த்தியிடம் சென்றவர்கள்  நால்வரும் மலையை விட்டு இறங்கி வந்தனர்…

 

பார்த்தி நா ஜானுவ என்றக்கூட பைக்ல கூட்டிவறேன் நீங்க ரெண்டுபேரும் கார்ல போங்க…

 

அதலாம் வேணாம் ரஞ்சித் ஜனனி உன்றக்கூட பைக்ல வரத ஆராவது பாத்துப்போட்டா வூட்லப்போய் சொல்லிப்போடுவாங்க ஜனனி நீ வந்து கார்ல ஏறு என்றான்…

 

அதுவும் சரிதான் பார்த்தி… ஜானு நீ கார்லையே வா நா பைக்ல வறேன்…

 

நால்வரும் ஏ.ஆர்.எஸ் கடைக்கு பட்டு செக்சனிற்கு சென்றனர்…

 

ஜானு உனக்கு நா முதன் முதலா வாங்கித்தரப்போறேன் அதனால சேலையே எடுத்துக்கரையா??

 

எதுவா இருந்தாலும் எனக்கு ஓகேதான் அத்தான்…

 

வாங்க மேம் வாங்க சார் என்ற வரவேற்ற சேல்ஸ் மேன் சார் எந்த ரேட்ல சேலை பாக்கரிங்க?? என்றார்…

 

ரேட் முக்கியமில்லை நீங்க எடுத்துபோடுங்க எங்களுக்கு எது புடிக்குதோ அத எடுத்துக்கறோம் என்றான் ரஞ்சித்..,

 

அவர்கள் எடுத்து போட்டதும் சிறிது நேரம் அங்கு உட்கோர்ந்திருந்தவன் எதுவும் பேசாமல் எழுந்து சென்றான்..பார்த்தியின் பின்னாலையே பாலாவும் எழுந்து சென்றதும் ஜனனி முகம் வாடிப்போய் பார்த்தி போரதையே பார்த்துக்கொண்டிருந்தாள்….

 

அவளின் தோளைதொட்ட ரஞ்சித் ஜானு இதுக்கே இப்படி அப்சட் ஆனா எப்படி???

 

ரொம்ப கஷ்டமா இருக்கு ரஞ்சித்…நீதானே சொன்ன அவனுக்கு என்றமேல காதல் இருக்குனு அப்படி இருந்துருந்தா அவன் எதுக்கு நம்மல விட்டு போறான்??

 

சரி வாங்க போலாம் ரஞ்சித்…

 

எய் இப்போ நாம எதுவும் எடுக்காம போனா சந்தேகம் வரும் ஜானு அதனால எதாவது ஒன்னு எடுத்துக்கோ…

 

ம்ம் கடைமைக்கு எதோ ஒன்றை எடுத்தாள்…

 

எழுந்து வந்த பார்த்தி ஜனனிக்கு புடித்த சாப்ட்சில்க் சேலை செக்சனுக்கு வந்தவன் அவளுக்கு புடித்த கலரில் லைட் பிங் கலரில் கொடி டிசைன் போட்ட சேலையை எடுத்தான்…

 

பார்த்தியின் பின்னாலௌ வந்த பாலா அண்ணா இது ஆருக்கு எடுக்கரிங்க??

 

ஜனனிக்கு பாலா??

 

அக்காவுக்குனா அங்கையே எடுத்துருக்கலாமே அண்ணா??

 

ஜனனிக்கு பட்டுசேலை புடிக்காது கட்டுனா வெயிட்டா இருக்குனு பொழம்புவா அதா அவளுக்கு புடிச்ச சாப்ட்சில்க் சேலை எடுக்கலாம்னு வந்தேன்…

 

இதலா மட்டும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க அண்ணா ஆனா அக்காவ லவ் பண்றது மட்டும் தெரியாம விட்ருங்க…

 

எதுவுமே நம்ம பக்கத்துல இருக்கப்போ தெரியாது பாலா நம்மலவிட்டு போயிருமோனு தெரியரப்பதான் நாம அதுமேல வச்சிருக்க பாசமே தெரியும் அந்தமாதிரிதான் இத்தனைநாளா என்ற பக்கத்துலையே இருந்த ஜனனி மேல நா வச்சிருந்த லவ் புரிஞ்சிக்காம இருந்துட்டேன் இப்போ ரஞ்சித் வரவும்தான் புரியுது…

 

சரி பீல் பண்ணாதிங்ண்ணா நீங்க ஆசைப்பட்டது கண்டிப்பா நடக்கும்…

 

நானும் அந்த நம்பிக்கைலதான் பாலா இருக்கேன்…

 

ரஞ்சித்தும் ஜனனியும் பட்டு சேலை எடுத்து முடிச்சதும் பார்த்தியும் பாலாவும் ஜனனிக்கு சேலை எடுத்துப்போட்டு  அவர்களிடம் வந்தனர்…

 

சேலை எடுத்து முடிச்சிப்போட்டிங்ளா ரஞ்சித் ?? போலாமா என்றான் பார்த்தி…

 

சேலை எடுத்துப்போட்டோம் பார்த்தி…ஜானு எனக்கு பேன்ட் சர்ட் செலக்ட்பண்ணி தறேனு சொன்னா அதனால நாங்க அங்க போறோம் நீயும் வரியா பார்த்தி…

 

இல்லை நீங்க போங்க…

 

சரிடா என்றவன் சேல்ஸ்பேனிடம் நீங்க சேலைய பில்கவுண்டர்க்கு கொண்டுபோங்க நாங்க வந்து பில் போட்டுக்கறோம்…

 

பார்த்தி அவன் எடுத்த சேலைக்கு பில்போட்டவன் ஜானு எடுத்த சேலைக்கும் சேர்த்து இந்த சேலைக்கும் சேர்த்து பில்போட்ருங்க என்றான்…

 

பில்போட்டதும் பணத்தை கட்டிவிட்டு பார்சலை வாங்கிக்கொண்டு காருக்கு சென்றான்…

 

அண்ணா நீங்க எதுக்கு ரஞ்சித் அண்ணா எடுத்து குடுத்த சேலைக்கும் சேர்த்து பில் போட்டிங்க??

 

என்னோட பொண்டாட்டிக்கு அவன் எதுக்கு சேலை எடுத்துதரோணும் பாலா??அதா நானே பணத்த கட்டி வாங்கிப்போட்டு வந்துதுட்டேன்…

 

அண்ணா உங்களுக்கு இப்போ இருக்க உரிமை உணர்வு முன்னாடியே இருந்துருந்தா இப்போ நீங்க இம்புட்டு பொழம்ப வேண்டிய அவசியமே இல்லை…

 

ரஞ்சித்துக்கு பேன்ட் சர்ட் எடுத்துப்போட்டு பில்போட்டுவாங்கியவன் அதில் ஜனனி எடுத்த பட்டுபுடவை இல்லாததை பார்த்து அங்கிருந்த செல்ஸ்மேனிடம் நாங்க எடுத்துவச்ச பட்டு சேலை இதுல இல்லையே என்றான்…

 

அத அப்பவே உங்கக்கூட வந்தவர் பில்போட்டு வாங்கிப்போட்டு போயிட்டாருங்ளே…

 

அவர் சொன்னதை கேட்டதும் நா சொன்னேன்ல பார்த்திக்கு உன்றமேல லவ் இருக்குனு அதா நா எடுத்துக்குடுக்ககூடாதுனு அவனே பில்பே பண்ணிவாங்கிட்டு போயிருக்கான்…

 

இது எதார்த்தமாக்கூட அவன் பில்பே பண்ணிருக்கலாம்ல ரஞ்சித்…

 

அவனுக்கு நாந்தா அந்த சேலை எடுத்துக்குடுக்கறேனு நல்லாவே தெரியும் அப்படி இருக்கப்ப அவன் எதுக்காக பில் கட்டுனான் ஜானு??

 

அவன் மனசுல காதல் இருக்கு ஆனா நீ ஏத்துக்கமாட்டையோனு அவன் தயங்கரானு நினைக்குறேன்…அதனால நீ யோசிக்காம போய் உன்னோட லவ்வ சொல்லிப்போடு ஜானு…

 

இல்லை ரஞ்சித் நானாப் போய் சொல்லமாட்டேன் அவனேத்தா வந்து சொல்லோணும்…

 

என்ன ஜானு இது காதல்லப்போய் ஈகோ பார்த்துப்போட்டு இருக்க நீ சொன்னா என்ன??அவன் சொன்னா என்ன ?? அல்லாம் ஒன்னுதானே ஜானு…

 

அப்படி இல்லை ரஞ்சித் இதுவே உன்ன மாப்பிள்ளையா  கொண்டுவராம இருந்துருந்தானா நா சொல்லலாம் ஆனா அப்படியே நடக்கலையே நா வேணாம்னுதானே உன்ன கூட்டிப்போட்டு வந்தான்  உண்மையாவே அவனுக்கு  நா வேணும்னு அவன் நினச்சானா கண்டிப்பா என்றக்கிட்ட வந்து சொல்லுவான்…

 

உன்விருப்பம் ஜானு சரி வா போலாம் …

 

இருவரும் வெளியே நின்றுக்கொண்டிருந்த பார்த்திபன்,பாலாவிடம் வந்தனர்…

 

ரஞ்சித் எடுத்துப்போட்டியா போலாமா என்றான் பார்த்தி…

 

ஏன்டா நா ஜானுவுக்கு ஆசையா எடுத்த சேலைக்கு நீ பில் பே பண்ண??

 

சாரி ரஞ்சித் கோவிச்சிக்காத இன்னும் எதுவுமே உறுதி ஆகாதப்போ எங்க வூட்டு பொண்ணுக்கு நீ எடுத்து தரத நா விரும்பல..

 

டேய் பார்த்தி என்னடா பிரிச்சிபேசர என்னைக்கா இருந்தாலும் ஜானு எங்கவூட்டுக்கு வரப்போரவத்தானே??

 

அது நடக்கரப்போ பாத்தாக்குலாம் ரஞ்சித் என்றவன் ஏய் ஜனனி வந்து கார்ல ஏறு நேரமாச்சு வூட்டுக்கு போலாம் என கோபமாக பேசிப்போட்டு காரில் ஏறினான்…

 

ராத்திரி கால்பண்ணு ரஞ்சித் பை பை என்றவள் காரில் ஏறினாள்…

 

கார் கிளம்பியதும் ரஞ்சித் பை ஜானு கையாட்டினான்…

 

 

கொஞ்சதூரம் கார் சென்றதும் ஜனனி டேய் பார்த்தி இப்போ எதுக்குடா என்ற அத்தான்கிட்ட அப்படி பேசிப்போட்டு வந்த???

 

நா அப்படித்தான் பேசுவேன் நீ ஒன்னும் எனக்கு கிளாஸ் எடுக்கவேண்டாம் என கோபமாக பேசிக்கொண்டே கார் ஓட்டினான்…

 

பாலா என்னடா ஆச்சு இவனுக்கு இப்படி கத்தரான்…

 

அண்ணா எதோ டென்சன்ல இருப்பாங்க போல  அதனால கோபமா பேசராங்கனு நினைக்குறேன் அக்கா…

 

ஓஓஓ…என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக வூடு வந்தாள்…

 

காரை போர்ட்டிகோவில் நிறுத்திப்போட்டு கோபமாக பார்த்தி தனது அறைக்கு சென்றான்…

 

அவன் பின்னாலையே பாலாவும் சென்றதும் ஜனனி வாங்கி வந்த துணிப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்…

 

ஹாலில் உட்கோர்ந்திருந்த அப்பத்தா ஜனனியை பார்த்ததும் என்ற பேரன என்னடி பண்ண அவன் நா கூப்படரதக்கூட காதுல வாங்காம கோபமா போரான்…

 

அத உங்க பேரங்கிட்டதா நீங்க கேக்கோணும் என்றக்கிட்ட கேட்டா எனக்கு எப்படித்தெரியும் அம்மத்தா…

 

நீதான் அவன கோபபடரமாதிரி எதோ பண்ணிருப்படி…

 

போங்க அம்மத்தா உங்களுக்கு எப்பபாத்தாலும் என்ன குறைசொல்லலைனா பொழுதே போகாதே??கடைல அல்லாம் உங்க பேரன் நல்லாத்தா இருந்தான் வரப்போதா கோபமா வந்தான் எனக்கு அம்புட்டுதா தெரியும் வேர எதாவது தெரியோணும்னா நீங்களே அவன்கிட்ட போய் கேட்டுக்கோங்க நா போறேன் என்றவள் அவள் அறைக்கு சென்றாள்…

 

 

பார்த்தி கோபமாக உள்ளே சென்றவன் ரூமில் இருந்த பொருட்களை தூக்கி உடைக்க ஆரம்பித்தான்…

 

பா.த்தியின் பின்னாள் வந்த பாலா பார்த்தியின் செய்கையை பார்த்து வேகமாக கதவை மூடிவிட்டு ஓடிச்சென்று பார்த்தியை தடுத்து பிடித்தவாறு அண்ணா என்ன பண்றிங்க??

 

விடு பாலா நா செம்ம கோபத்துல இருக்கேன்…

 

முடியாதுங்ண்ணா இப்போ நீங்க பண்றது எதுவும் சரியிலை இப்படி அல்லா பொருளையும் உடச்சிப்போட்டிங்னா அம்மா,அப்பா வந்து கேட்டா என்னனு சொல்லுவிங்க???

 

கொஞ்சங்கொஞ்சமாக கோபம் குறைந்ததும் பாலாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதான்…

 

அண்ணா என்ன இது சின்னக்குழந்தைமாதிரி அழுதுப்போட்டு இருக்கிங்க முதல்ல கண்ண துடைங்க…

 

முடியலை பாலா ஜானு மேல அவன் உரிமை எடுக்கர பாக்கரப்ப அப்படியே அவன கொன்னுபோட்டுடலாம் போல தோணுது…

 

அண்ணா நீங்க இப்படி அழுது நா பாத்ததே இல்லைங்ண்ணா என்னால உங்கல இப்படி பாக்கமுடியலை பிளீஸ் அழுகாதிங்ண்ணா…

 

பாலாவை விட்டு தள்ளி நின்று கண்ணை துடைத்துக்கொண்டு பாலா நா கொஞ்சநேரம் தனியா இருக்கோணும்…

 

சரிங்ண்ணா அண்ணா நீங்க மனசொடிஞ்சி இருக்கரத என்னால பாக்கமுடியலை அதனால இன்னைக்கு நா கவனிச்சத உங்ககிட்ட சொல்றேன் என்றவன் இன்னைக்கு பாலா ஜனனியிடம் கவனித்த சில விசயங்களை கூறியவன் அணௌணா எனக்கு என்னமோ அக்கா உங்கல லவ் பண்றாங்க  அத உங்க வாயில இருந்து சொல்லவைக்கோணும்னுதா இந்த ட்ராமாவையே பண்றாங்கனு நினைக்குறேன்…அதனால அக்காகிட்ட நேராவே உங்க லவ் சொல்லிடுங்க என்றவன் வெளியே சென்றான்…

 

பாலா சென்றதும் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்தவன் வெளியே சென்றான்…

 

டாம் அண்ட் ஜெர்ரி 11.

 

வெளியே வந்த பார்த்திபன் வாசலில் போடப்பட்டிருந்த கட்டிலில் உட்கோர்ந்திருந்த அப்பத்தாவின் அருகில் சென்று உட்கோர்ந்தவன் அப்பத்தாவின் மடியில் தலை வைத்து படுத்தான்…

 

அப்பத்தா பார்த்தியின் தலையை தடவிக்கொண்டே என்றா கண்ணு ஏ ஒருமாதிரி இருக்க???எதாவது பிரச்சனையா??எதுவா இருந்தாலும் சரி பண்ணிப்போடலாம் நீ தைரியமா இரு கண்ணு…

 

நா இப்போ ரொம்ப குழப்பத்துல இருக்கேனுங் அப்பத்தா என்னால எதையும் யோசிக்கவே முடியலை…

 

இப்போ உனக்கு என்ன பிரச்சனைனு சொல்லு கண்ணு அப்பத்தா அதுக்கு தீர்வு சொல்றேன்…

 

அப்பத்தா நா ஒரு பொண்ண லவ் பண்றேன் ஆனா அது அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை நானே பாத்துப்போட்டு வந்து வூட்ல சொன்னதுக்கப்பரம்தா எனக்கே அந்த பொண்ணுமேல காதல் இருக்குனு புரிஞ்சது… அந்த பொண்ணுக்கும் அந்த பையன புடிச்சிருக்குனு சொல்ரா??இப்போ நா அந்த பொண்ணுக்கிட்ட என்ற காதல சொன்னா அவ அத ஏத்துப்பாளா மாட்டாளானு ஒரே குழப்பமா இருக்குங் அப்பத்தா…

 

அந்த பொண்ணு நம்ம ஜனனிதானே கண்ணு அப்பத்தா கேட்டதும் பார்த்திபன் அதிர்ச்சியில் அப்பத்தாவின் மடியிலிருந்து எழுந்து உட்கோர்ந்தவாறு அப்பத்தாவை பார்த்து எப்படிங் அப்பத்தா கண்டுபுடிச்சிங்க??

 

நீ படுத்துக்கோ கண்ணு திரும்பவும் பார்த்தியை மடியில் படுக்க வைத்துக்கொண்டே இது என்ன அம்புட்டு பெரிய கஷ்டமா கண்ணு நீ அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துப்போட்டு வந்தேனு சொன்னியே அப்பவே கண்டுபுடிச்சிப்போட்டேன் என்றார்…

 

இப்போ உனக்கு அவகிட்ட காதல சொல்லோணும் அம்புட்டுதானே கண்ணு???

 

காதலை சொன்னா ஜனனி ஏத்துக்குவாளாங் அப்பத்தா?.

 

காதல ஏத்துப்பாளா இல்லையானு எனக்கு தெரியாது கண்ணு ஆனா அவளோட உனக்கு கண்ணாலம் நடக்கோணும்னா நீ முதல்ல ஒன்னு பண்ணோனும்…

 

 

எனக்கு கண்ணாலம்னு ஒன்னு நடந்தா அது அவக்கூடத்தானுங் அப்பத்தா அதனால அது என்னனு சொல்லுங்க???

 

பார்த்திபனும் அப்பத்தாவும் பேசிக்கொண்டிருக்கும்போதே கிருஷ்ணனின் கார் வந்து நின்று  அதிலிருந்து இறங்கி வந்தவர் பார்த்தி அப்பத்தாவின் மடியில் படுத்திருப்பதை பார்த்து ஏம்மா கொள்ளுபேரன மடியில போட்டு தூங்க வைக்கர வயசுல இவன படுக்கவச்சி கொஞ்சிப்போட்டு இருக்கரிங்க???

 

 

என்ற பேரன நா எப்பவேனாலும் மடியில படுக்கப்போட்டு தாலாட்டு பாடுவேன் அதுல உனக்கென்னடா கஷ்டம் போ போய் உன்ற வேலைய மட்டும் நீ பாருடா…

 

ம்க்கும் அப்படியே பேரன ஒரு வார்த்தை சொல்லிப்போட்டா வந்துருவிங்ளே சண்டைக்கு நா காலைல இருந்து பண்ணைக்கும் ஆபிஸ்க்கும் அலைஞ்சி களச்சிப்போய் வந்துருக்கேன் உங்ககிட்ட வாக்குவாதம் பண்ண என்னால முடியாது என்றவர் உள்ளே சென்றுவிட்டார்…

 

அப்பத்தா அது என்னனு சொல்லுங் அப்பத்தா??

 

நீ முதல்லபோய் உன்ற மாமன்கிட்டையும் அத்தைக்கிட்டையும் பேசு அதுக்கப்பரம் பாரு நீ ஆசைப்பட்டதெல்லாம் தானா நடக்கும்…

 

சூப்பர் அப்பத்தா இத நா யோசிக்கவே இல்லையே…

 

அப்பத்தாவிடம் பேசிப்போட்டு தனது ரூம்க்கு சென்ற ஜனனி கடையிலிருந்து வாங்கிப்போட்டு வந்த  துணிப்பையை பிரித்து சேலையே அலமாரியில் வைக்க எடுத்தவள் அதில் இன்னொரு சேலை இருப்பதை பார்த்து நாம ஒன்னுதானே எடுத்தோம் இது எப்படி என யோசித்தவள் அந்த சேலையை பிரித்து பார்த்தாள்… தனக்கு புடிச்ச பிங் கலர்ல சாப்ட்சில்க் சேலையை பார்த்ததும் ரொம்ப புடிச்சிப்போய்  அதை தன்மேல் வைத்து பார்த்தவள் ஆரோ நம்ம டேஸ்ட் உள்ளவங்க எடுத்துருப்பாங்க போல அவங்களுக்கு குடுக்கரதுக்கு பதிலா நம்ம பைல  போட்டு தந்துட்டாங்க சரி  பார்த்திக்கிட்ட நாளைக்கு கொண்டுப்போய் கடைல குடுத்துப்போட்டு வர சொல்லோணும் என நினைத்தவள் அந்த சேலையை திரும்பவும் அந்த கவரில் போட்டு எடுத்துக்கொண்டு பார்த்தியின் அறைக்கு சென்றவள் அவன் இல்லாததைக்கண்டு பாலாவின் அறைக்கு சென்றாள்…

 

டேய் பாலா எங்கடா பார்த்தி??

 

அண்ணா அவங்க ரூம்லதானுங் அக்கா இருந்தாங்க…

 

அங்க இல்லை இப்போதா பார்த்துப்போட்டு வந்தேன்டா…

 

அப்போ எங்கையாச்சும் வெளிய போயிருப்பாங்க அக்கா ஆமா எதுக்கு அண்ணாவ தேடரிங்க??

 

அதுவா நாம கடைக்கு போனோம்ல அங்க வேர ஆரோ எடுத்த சேலைய மறந்தாப்ல நம்ம பைலை போட்டு குடுத்துட்டாங்க அதா பார்த்திய நாளைக்கு கடைல கொண்டுபோய் குடுத்துப்போட்டு வரசொல்லலாம்னு அவன தேடுணேன்டா…

 

ஐயோ லூசு அக்கா அது எப்படி ஆரோ எடுத்தத நம்ம பைல போட்டு குடுப்பாங்க அந்த அளவுக்கு கேர்லெஸ்சாவா கடைக்காரங்க இருப்பாங்க??

 

இது அண்ணா உங்களுக்கு எடுத்தது…

 

என்னடா சொல்ர பார்த்தியா??அதுவும் எனக்கு புடிச்ச கலர்ல சாப்ட்சில்க் சேலை எடுத்துருக்கான் எனக்கு இதுதா புடிக்கும் அவனுக்கு எப்படி தெரியும் பாலா???

 

அது எப்படினு எனக்கு தெரியாதுங் அக்கா ஆனா அண்ணா இந்த சேலைய எடுக்கும்போது உங்களுக்கு பட்டுசேலை கட்டபுடிக்காதுனு சொன்னார் அதுதா எனக்கு தெரியும்…

 

பாலா சொன்னதை கேட்டு ஜனனி சந்தோசத்துடன் தனது ரூம்க்கு சென்றவள் கண்ணாடியின் முன்நின்று  பார்த்திபன் வாங்கிகுடுத்த  சேலையை எடுத்து தன்மேல் போட்டு அதை தடவிக்கொண்டே டேய் மாமா உனக்கு என்ன புடிக்குமாடா??அப்போ ஏன்டா என்றக்கிட்ட வந்து உன்னோட காதல சொல்லமாட்ர ?? கண்ணாடியை பார்த்தவாறு பேசினாள்…

 

மனசுல இம்புட்டு காதல வச்சிட்டு அப்பரம் எதுக்குடா  எனக்கு மாப்பிள்ளை பாத்த???

 

ஆனா நீயா வந்து என்றக்கிட்ட உன்ற காதல சொல்ரவரைக்கும் நா என்னோட காதல சொல்லமாட்டேன் மாமா…

 

ஜனனி கண்ணாடியை பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் ரூம்க்கு வந்த ரெங்கநாயகி ஜனனி தனியாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து என்னடி இது பைத்தியம் மாதிரி தனியா பேசிப்போட்டு இருக்கர???

 

அம்மத்வை பார்த்ததும் அசடு வழிந்துக்கொண்டே அது ஒன்னுமில்லைங் அப்பத்தா  சேலை நல்லாருக்கானு வச்சிப்பாத்து எனக்கு நானே பேசிக்கிட்டேன்…

 

அததான்டி நானும் சொல்றேன் தனக்கு தானே பேசிக்கிட்டா பையத்தியம்னு அர்த்தம்…சரி சரி நீ என்னமோ பண்ணித்தொலை இப்போ நா இங்க வந்தது உன்றக்கிட்ட ஒரு வேலை சொல்ரதுக்காகத்தான்…நீ போய் நா வரசொன்னேனு உன்ற அம்மாவையும் அப்பாவையும் வர சொல்லு நா ஒரு முக்கியமான விசயம் பேசோணும்…

 

 

நா இப்போ பிசியா இருக்கேனுங் அம்மத்தா நீங்க பாலாகிட்ட போய் சொல்லுங்க அவன் போய் கூட்டிப்போட்டு வருவான்…

 

அடிங்க நா ஆருக்கிட்ட சொல்லோணும்னு நீ எனக்கு கிளாஸ் எடுக்காதடி நா சொன்னவேலைய ஒழுங்கா செய்…

 

காலை தரையில் உதைத்துக்கொண்டே எப்பபாரு எனக்கே வேலை வைக்குரிங்க அம்மத்தா என சினுங்கிக்கொண்டே சேலையை கட்டிலில் வைத்துவிட்டு சென்றாள்…

 

அவள் சென்றதும் என்ற குலத்த காக்கும் அருக்காணி தங்கா நீதான்மா என்ற பேரன் ஆசைப்பட்டமாதிரி என்ற பேத்திய என்ற பேரனுக்கு நல்லபடியா கண்ணாலம் பண்ணிவைக்க அருள் புரியோணும் கையேடுத்து கும்பிட்டவாறு வேண்டினார்…

 

பார்த்திபன் சந்திரனிடம் பேசுவதற்காக தனது அத்தை வூட்டிற்கு வந்தான்…

 

ஹாலில் டீவி பார்த்துக்கொண்டிருந்த சந்திரன் பார்த்திபனை பார்த்ததும் வாங்க மாப்பிள்ளை என வரவேற்றார்…

 

ஏனுங் மாப்பிள்ளை இன்னேரத்து வந்துருக்கிங்க???

 

உள்ளே வந்த பார்த்திபன் மாமா நா உங்ககிட்டையும் அத்தைக்கிட்டையும் ஒன்னு கேக்கரதுக்காக வந்தேன்…

 

என்னங் மாப்பிள்ளை சொல்லுங்க???

 

பார்த்திபனின் குரல் கேட்டு கிச்சனிலிருந்து வெளிவந்த சிவகாமி வா பார்த்தி கண்ணு என்றவர் நீ உட்கோரு கண்ணு நா டீப்போட்டு கொண்டு வறேன் என உள்ளே செல்லப்போனார்…

 

அத்தை டீ வேணாம் நீங்களும் வாங்க உங்க ரெண்டுபேர்த்துக்கிட்டையும் நா பேசோணும்…

 

தனது வூட்டிற்கு வந்த ஜனனி உள்ளே பார்த்திபனின் குரல் கேட்டதும் இந்த அம்மத்தா எதுக்கு என்ன இங்க அனுப்புனாங்கனு தெரியலை இதுல  இந்த பார்த்தி அப்பாக்கிட்டையும் அம்மாக்கிட்டையும் என்ன பேசோணும் வந்தானு தெரியலையே ரெண்டு கூட்டுகளவாணிகளும் எனக்கு தெரியாம எதாவது ப்ளான் பண்றாளோ என யோசித்தவள்  சரி ஓரமா நின்னு உள்ள என்ன பேசராங்கனு கேப்போம் ஒட்டு கேக்கரது தப்புதான் இருந்தாலும் பார்த்தி என்ன பேச வந்தானு தெரிஞ்சிக்கோணும் என நினைத்துக்கொண்டு வெளியில் கதவின் ஓரத்திலே நின்றுக்கொண்டாள்

 

என்னங் மாப்பிள்ளை சொல்லுங்க??

 

மாமா,அத்தா நா இப்போ கேக்கப்போரது உங்களுக்கு அதிர்ச்சியாக்கூட இருக்கலாம்.ஏ அன்னைக்கு அப்படி சொன்னான் இன்னைக்கு இப்படி சொல்ரானு குழப்பமாக்கூட இருக்கலாம்…என்னால இதுக்குமே தாங்கமுடியாது அதா உங்ககிட்ட நேராவே கேட்டுப்போடலாம்னு வந்துப்போட்டேன்…

 

டேய் மாமா என்னடா குழப்பர இப்போ என்ற அப்பாக்கிட்டையும் அம்மாக்கிட்டையும் என்ன கேக்கப்போர சீக்கரம் கேளுடா…

 

என்னக் கண்ணு என்ன என்னமோ சொல்ர??எனக்கு புரியலை??

 

மாப்பிள்ளை என்னனு சொல்லுங்க??

 

மாமா எனக்கு ஜனனிய கட்டிக்குடுப்பிங்ளா??

 

இதை கேட்டதும் ஜனனி மயக்க நிலைக்கே சென்றுவிட்டு திரும்பினாள்…

 

சந்திரனும் சிவகாமியும் ஒரு செகன்ட் அதிர்ச்சியாகி பின்னர் முகத்தில் சிரிப்புடன் என்னங் மாப்பிள்ளை இத கேக்காவா இம்புட்டு தயங்குனிங்க??நா என்னமோ ஏதோனு குழம்பிபோயிட்டேன்…

 

ஏங்கண்ணு என்ற மகமேல உனக்கு இல்லாத உரிமையா?? நீ இம்புட்டு தயங்கவேண்டிய அவசியமே இல்லையே கண்ணு….

 

இல்லைங் அத்தை அன்னைக்கு நானே வேர மாப்பிள்ளைய பாத்துப்போட்டு வந்துட்டு இன்னைக்கு நானே கட்டிக்கறேனு எப்படி கேக்காரதுனு தயக்கமா இருந்ததுங் அத்தை…

 

எங்களுக்கும் உனக்கும் ஜனனிக்கும் கண்ணாலம் ஆனா நல்லாருக்கும்னுதா ஆசை இருந்தது ஆனா நீங்க ரெண்டுபேரும்

எப்பபாரு சண்டைபோட்டு இருந்தால நாங்க அந்த ஆசைய விட்டுட்டோம் கண்ணு…இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு கண்ணு சரி நீ உட்கோந்துரு எதாவது இனிப்பு செஞ்சி கொண்டாறேன்….

 

அப்போது உள்ளேவந்த ஜனனி அப்பா, அம்மா உங்க ரெண்டுபேரையும் அம்மத்தா எதோ முக்கியமான விசயம் பேசோணும்னு வரசொன்னாங்க என்றவள் உட்கோர்ந்திருந்த பாத்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தனது ரூம்க்கு சென்றாள்…

 

ஏன்டி நீ பாட்டுக்கு வந்து அவன இழுத்துட்டு போர??

 

அம்மா உன்ற அண்ணன் பையன நா ஒன்னும் பண்ண மாட்டேன் எப்படி கூட்டிட்டு போரேனோ அப்படியே திரும்ப அனுப்பிடறேன்…நீங்க ரெண்டுபேரும் என்ற அத்தை மாமாக்கிட்டப்போய் சீக்கரமா கண்ணால தேதிய குறிக்கசொல்லுங்க..

 

அடிங்க என்ன பேச்சு பேசிப்போட்டு போரா பாருங்க என்றவர் திரும்பி சந்திரனை பார்த்ததும் அவரு சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்தவர் ஏனுங்க அவபாட்டு பேசிப்போட்டு போரா நீங்களும் பல்லகாட்டிட்டு நிக்கரிங்க…

 

இல்லை சிவா கண்ணாலத்துக்கு முன்னாடியே என்ற மாருமகன இப்படி இழுத்துட்டு போகுதே அம்மணி இனி கண்ணாலம் ஆனா என்ற மாப்பிள்ளையோட நிலமைய நினச்சிபாத்தேன் சிரிப்பு வந்துருச்சு…என்ற மக அப்படியே அவ அம்மாவ மாதிரி புருசன தலையாட்டி பொம்மையா மாத்திப்போடுவா போல பாவம் என்ற மாப்பிள்ளை…

 

 

ஆமா அப்படியே நா சொல்ரத அம்புட்டையும் கேட்டுபோட்டுதா வேர வேலை பாக்குரிங்களாக்கும் என சொல்லிப்போட்டு முகத்தை திருப்பிக்கொண்டார்…

 

 

சிவகாமி முகத்தை திருப்பியது சந்திர. அவரின் அருகில் சென்று சிவகாமியின் முகத்தை தன் கைகளால் திருப்பியவாரு நீ இப்படி வெடுக்குனு முகத்த திருப்பரப்பக்கூட அழகாத்தான்மா இருக்க…

 

பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயசுல என்னங்க ரொமென்ஸ் வேண்டி கிடக்குது…

 

என்ன சிவாம்மா இப்படி சொல்லிப்போட்ட  வயசானகலத்துலதான் ரொமேன்ஸ் அதிகமா வருமாம்…

 

அப்படினு ஆரு சொன்னது உங்களுக்கு??

 

ஏ நாந்தா சொல்றேன்…

 

சரி கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க பொண்ணும் மாப்பிள்ளையும் உள்ளத்தா இருக்கராங்க…

 

இருந்துப்போட்டு போராங்க நா என்ற பொண்டாட்டியத்தானேம்மா கொஞ்சறேன்…

 

சந்திரனின் பேச்சில் சிவகாமி வெட்கப்பட்டாளும் அதை கோபம் கொண்டு  மறைத்தவாரு உங்களுக்கு வேர வேலையே இல்லை வாங்க. போலாம் என்றவர் திரும்பி நடந்துக்கொண்டே முகத்தில் சிரிப்புடன் சென்றார்…

 

 

சிவா உன்ற முகத்துல மட்டும்தான் கோபம் தெரியுது கண்ணுல வெட்கம்தான் தெரியுது அத நா பாத்துப்போட்டேன்…

 

இப்போ வரப்போறிங்ளா?? இல்லையா??

 

வந்துட்டேன்மா நீ போ சந்திரனும் சிவகாமியுடன் கிருஷ்ணனின் வூட்டிற்கு சென்றார்…

 

டாம் அண்ட் ஜெர்ரி.12.

 

சந்திரனும் சிவகாமியும் பார்த்திபனின் வூட்டிற்கு வந்தனர்…

 

சிவகாமி வாசலில் கட்டிலில் உட்கோர்ந்திருந்த ரெங்கநாயகியிடம்  அம்மா எங்க ரெண்டு பேர்க்கிட்டையும் எதோ பேசோணும்னு வர சொன்னிங்களாம் ஜனனி வந்து சொன்னா??என கேட்டார்…

 

மொத மாப்பிள்ளைக்கு உட்கோரதுக்கு ஜேர் எடுத்து வந்து போடு கண்ணு மாப்பிள்ளை நின்னுப்போட்டு இருக்கரார்ல…

 

சிவகாமி ஜேரை எடுத்துவந்து போட்டதும் கண்ணு போய் உன்ற அண்ணனையும் அண்ணியையும் வர சொல்லு…

 

சரிங்ம்மா என்றவர் உள்ளே சென்று டீவி பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணனிடம் அண்ணா அம்மா உங்கல வர சொன்னாங்க நீங்க போங்க அண்ணா நா அண்ணிய கூட்டிப்போட்டு வறேன்…

 

எதுக்கும்மா அம்மா வர சொன்னாங்க??

 

அது தெரியலைங்ண்ணா எதோ முக்கியமான விசயம் பேசோணும்னு ஜனனிக்கிட்ட எங்கல வரசொல்லி சொன்னாங்க…

 

ஓஓ சரிம்மா என்றவர் வெளியே சென்று ரெங்கநாயகியின் அருகில் கட்டிலில் உட்கோர்ந்தார்…

 

என்ன விசயம் பேசோணுங்ம்மா??

 

உன்ற பொண்டாட்டியும் வந்துரட்டும் இரு கிருஷ்ணா…

 

சிவகாமி ருக்மணியை கூட்டிவந்ததும் நீங்களும் வந்து உட்கோருங்க….

 

மாப்பிள்ளை உங்ககிட்டையும் சிவகாமிகிட்டையும் பார்த்திபன் பேசிருப்பானு நினைக்குறேன் அதபத்திதா பேச வர சொன்னேன்…

 

ஆமாங் அத்தை இப்போதா மாப்பிள்ளை வந்து பேசுனாரு நாங்களும் அதபத்தி பேசோணும்னு நினச்சோம்…

 

என்னம்மா சொல்ரிங்க எனக்கு ஒன்னும் புரியலை பார்த்தி என்ன பேசுனான்??

 

அது ஒன்னுமில்லை கிருஷ்ணா நம்ம பார்த்திக்கு ஜனனிய புடிச்சிருக்காம் அதா அவங்களுக்கு கண்ணாலம் பண்ணிவைக்கர பத்தி பேசரதுக்காக உங்கல அல்லாம் வரசொன்னேன்…

 

பார்த்திக்காம்மா அவன்தா அன்னைக்கு வேணாம்னு சொன்னானே??

 

இப்போ மாப்பிள்ளை வந்து என்றக்கிட்ட பேசுனார் கிருஷ் நா அன்னைக்கே சொன்னேன்ல மாப்பிள்ளையால ஜானுவ விட்டு இருக்கமுடியாதுனு அது இப்பதா புரிஞ்சிருக்கும்போல அதா என்றக்கிட்டையும் உன்ற தங்கச்சிக்கிட்டையும் வந்து பேசுனாரு நாங்களும் ஒத்துக்கிட்டோம்…

 

எனக்கு தெரியாம இதலா எப்போ நடந்தது மச்சான்??

 

இப்போதா கிருஷ்…

 

கிருஷ்ணா நாம அல்லாரும் நாளைக்கு நம்ம குலதெய்வ கோவிலுக்கு போவோம் போய் பூ போட்டு பாத்துப்போட்டு நல்ல நாளா பாத்து தேதி குறிச்சிப்போடுவோம் என்ன நா சொல்ரது சரியா??

 

ஏனுங் அத்தை ஜாதகம் பாக்க வேண்டாமா??

 

அதலாம் வேண்டாம் மருமகளே புள்ளைங்க ரெண்டும் விரும்பிதா கண்ணாலம் பண்ணப்போறோம் அதனால ஜாதகத்த பாத்து குழப்பிக்க வேண்டாம் நம்ம சாமிக்கிட்ட பூ போட்டு கேட்டா போதும்…

 

அதுவும் சரிதானுங்ம்மா நீங்க சொல்ர மாதிரியே பண்ணிப்போடுவோம்…

 

மருமகளே உனக்கு இதுல சம்மதம் தானே??

 

எனக்கு சம்மதம் தானுங் அத்தை புள்ளைங்க நல்லாருந்தா எனக்கு அதுவே போதும்…

 

சரி நல்லவிசயம் பேசிருக்கோம் எதாவது இனிப்பு செய் மருமகளே

 

அம்மா நாங்களும் போறோம் சட்னி அரச்சி வச்சிப்போட்டு வந்தேன் போய்தா தோசை ஊத்தோணும்…

 

நீ அங்க போய் தோசை ஊத்தாட்டி என்ன சிவா?? இங்கையே சாப்புட்டு போட்டு போங்க காலைல வெள்ளனவே கோவிலுக்கு கிளம்போணும்…

 

ஆமாங் அண்ணி வாங்க நானும் தோசைத்தான் ஊத்தப்போறேன் இங்கையே சாப்புட்டு போட்டு போங்க…

 

பார்த்திபனை  இழுத்து சென்ற ஜனனி ரூம்க்குள்ளே சென்றதும் அவன் மார்பில் அடிக்க ஆரம்பித்தாள்…

 

ஏன்டி அடிக்கர??ஏய் வலிக்குதுடி…விடுடி…என கத்தினான்…

 

நல்லா வலிக்கட்டும் என்ன அழுக வச்சிட்டலடா…

 

அடித்து கொண்டிருந்தவளை பார்த்தி இழுத்து அனைத்துக்கொண்டான்…

 

அவளும் அவனை இருக கட்டிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள்…

 

ஏய் ஜானு இப்போ எதுக்கு அழுகர??இங்க பாருடா என்றவன் அவள் கண்ணத்தை பிடித்து கண்ணீரை துடைத்து விட்டவாரு சமாதான படுத்தினான்…

 

ஏன்டா என்ன இம்புட்டு நாள் காக்கவச்ச நீயா சொல்லுவ சொல்லுவனு எத்தனை நாள் எதிர்பாத்தேன் தெரியுமா??

 

சாரிடாம்மா எனக்கு தெரியலை ரஞ்சித் வந்ததுக்கப்பரம்தான் எனக்கே புரிஞ்சது நா உன்றமேல வச்சிருக்க காதல்…

 

இதுல இப்போ ரஞ்சித்தையும் இழுத்துவிட்டுடேன் அவன எப்படி சமாதான படுத்தரதுனே தெரியலை ஜானு…

 

ரஞ்சித்த சமாதான படுத்தவேண்டி அவசியமில்லைடா??

 

ஏன்டி தப்பு என்ற பக்கம் இருக்குதானே என்னாலத்தானே அவன் ஆசைய வளர்த்துக்கிட்டான்…

 

அது சும்மா நானும் ரஞ்சித்தும் உன்ன வெறுப்பேத்தரதுக்காக போட்ட நாடகம் நா அன்னைக்கே அவன்கிட்ட சொல்லிப்போட்டேன் உன்னதா லவ் பண்றேனு அவனும் ஒத்துக்கிட்டான்…

 

அப்போ ரெண்டுபேரும் நடிச்சிங்ளா??இது தெரியாம ந பயத்தியக்காரன் மாதிரி பாலாக்கிட்ட பொழம்பிட்டு இருந்தேனே…

 

நடிக்காம வேர என்ன பண்றதுடா நீதா எனக்கு மாப்பிள்ளை பாத்துப்பொட்டு வந்து நிக்கரியே…

 

சாரி ஜானு… ஐ லவ் யூ டாம்மா

 

நா ஆசைப்பட்ட மாதிரி என்ற அப்பாக்கிட்ட நீயே வந்து பொண்ணு கேட்டதால  நா உன்ன மன்னிச்சிப்போட்டேன்…

 

இத்தனை நாளா இம்புட்டு அழகான பிகர பக்கத்துலையே வச்சிப்போட்டு கண்டுக்காம இருந்துருக்கேன்டி…

 

அதுதா எனக்கு தெரியுமேடா நீ ஒரு சாம்பார்னு…

 

அடிங்க ஆருடி சாம்பார் நம்ம கண்ணாலத்துக்கு அப்பரம் பாரு நா சாம்பாரா?? இல்லை ரெமோவானு… ரொமேன்ஸ்ல பிண்ணுவோம்ல

 

அதையும் பாக்கத்தானேடா போறேன்…

 

ஜானு… ஜானும்மா…

 

என்னடா??சொல்லு??

 

இன்னும் கொஞ்சநேரம் நாம இப்படியே கட்டிபுடிச்சிட்டு நின்னோம்னா அப்பரம் நடக்கரதுக்கு நா பொருப்பில்லை ஜானுமா…

 

பார்த்தி சொன்னது புரிஞ்சதும் வேகமாக விலகியவள் வெட்கப்பட்டுக்கொண்டே வாசலுக்கு ஓடியவள் நின்று திரும்பி பார்த்திபனை பார்த்து ஐ லவ் யூ மாமா என சொல்லிப்போட்டு ஓடிவிட்டாள்…

 

ஏய் ஜானு நின்னு நானும் வறேன் என்றவன் அவன் அவள் பின்னாளல் ஓடிச்சென்று அவளை பிடித்தவன்  என்ன வுட்டுப்போட்டு ஓட அம்புட்டு சீக்கரம் நா வுட்டுப்போடுவேனா என்றவன் பின்னர் இருவரும் பேசிக்கொண்டே  பார்த்திபனின் வூட்டிற்கு வந்தபோது ஹாலில் உட்கோர்ந்திருந்த அனைவரையும் பார்த்தவள் வெட்கப்பட்டவாரு தனது அறைக்கு ஓடிச்சென்று கதவை மூடிக்கொண்டாள்…

 

 

ரெங்கநாயகி டேய் கிருஷ்ணா இது என்ற பேத்தியா என்ன அதிசயமா இருக்கு?? இம்புட்டு வெட்கப்பட்டுக்கிட்டு ஓடரா??

 

கிருஷ்ணன் ஜனனியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்தவர் பார்த்திபனை தன் அருகே அழைத்து உட்கோரவைத்து பார்த்திபனின் கையை பிடித்துக்கொண்டார்…

 

கிருஷ்ணனின் சந்தோசம் அவரின் ஒற்றை கை பற்றுதலிலே உணர்ந்துக்கொண்ட பார்த்தி தன் தந்தையை அனைத்துக்கொண்டான்…

 

வார்த்தைகளில் சொல்லக்கூடியதை இருவரும் தன் தன் சிறு செய்கையால் உணர்த்தி விட்டனர்…

 

அப்போது சிவகாமி பாசிப்பயிறு பாயாசம் செய்து அதை டம்ளரில் ஊற்றி எடுத்த வந்து அனைவருக்கும் கொடுத்தார்…

 

அத்தை நா அப்பரமா குடிச்சிக்கறேன் என்றவன் எழுந்து பாலாவிடம் சென்றான்…

 

பாலா தனது அறையில் போனை நோண்டி கொண்டிருந்தவனிடம் சென்றவன் பாலாவை கட்டி அனைத்து அவன் கண்ணத்தில் முத்தம் வைத்தான்…

 

கண்ணத்தை தேய்த்துக்கொண்டே அண்ணா நா அவன் இல்லை உங்ககிட்ட ஆரோ தப்பா சொல்லிட்டாங்க போல??

 

பாலாவின் தலையில் கொட்டு வைத்த பார்த்தி என்ற தம்பிடா நீ… இந்த முத்தம் என்ற தம்பிமேல நா வச்சிருக்க காதலோட வெளிப்பாடு…

 

பாலாவும் பார்த்தியை இருக அனைத்துக்கொண்டு தேங்ஸ் அண்ணா நாம எப்பவும் இதே பாசத்தோட இருக்கோணும் …

 

அதுதா என்ற ஆசையும்கூட பாலா கண்டிப்பா இருப்போம்…

 

வாழ்த்துகள் அண்ணா எப்படியோ நீங்க நினச்சமாதிரி அக்காவையே ச்சீசீ இனி அண்ணினுல சொல்லோணும் அண்ணிய கண்ணாலம் பண்ணப்போறிங்க…

 

தேங்ஸ் பாலா இதுவும் நீ ஜானு என்றமேல லவ் வச்சிருக்கானு சொல்லலைனா நா மாமாக்கிட்ட தைரியமா போய் பொண்ணு கேட்ருக்கமாட்டேன் அல்லாம் உண்ணாலத்தான் நடந்தது …

 

என்னால இல்லைங்ண்ணா உங்க காதலால நடந்தது…

 

சரி அண்ணிக்கிட்ட உங்க லவ்வ சொல்லிப்போட்டிங்ளா இல்லை எப்பவும்போல மாமாக்கிட்ட மட்டும் பொண்ணுகேட்டு வந்துப்போட்டிங்ளா??

 

பார்த்தி  வெட்கப்பட்டவாறே ம்ம் சொல்லிப்போட்டேன் பாலா…

 

பார்டா என்ற அண்ணாவுக்கு கூட வெட்கம்லா வருது…

 

டேய் பாலா ரொம்ப ஓட்டாதடா…

 

நா எதிர்பாக்கவே இல்லைடா இம்புட்டு சீக்கரமா என்னோட காதல் வெற்றியடையும்னு… நிறையப்பேர் தன் காதலுக்காக நிறைய இழந்துருக்கேனு சொல்லி கேள்வி பட்ருக்கேன் ஆனா என்ற காதல்ல நா எதையும் இழக்காமையே கை கூடிருச்சு…

 

எந்த பிரச்சனையும் இல்லாம உங்க காதல் கை கூடிருச்சிங்ரதால வருத்தமா அண்ணா?? நா வேனா வூட்ல அல்லார்ட்டையும் போய் பேசி நிறுத்த சொல்லட்டுமா அண்ணா…

 

டே டேய் ஏன்டா ஏன் ஒரு பேச்சுக்கு சொன்னேன் அதுக்குப்போப் எனக்கு ஆப்பு வைக்க பாக்குரியேடா நீ அல்லாம் ஒரு தம்பியாடா??

 

தம்பினா அண்ணா ஆசை படரதெல்லாம் நடத்தி குடுத்தாத்தானுங்ளே அண்ணா நல்லாருக்கும்…

 

நீ ஒரு ஆனியும் புடிங்க வேணாம் போடா உன்றக்கிட்ட பேசவந்தேன் பாரு என்ன சொல்லோணும்…

 

காதல் கை கூடிருச்சுனா ப்ரண்டத்தா கழட்டி விடுவாங்கனு கேள்வி பட்டுக்கேன் ஆனா இங்க கூட பொறந்த தம்பியவே கழட்டி விட்டுடிங்ளே அண்ணா இது உங்களுக்கே நியாயமா தோணுதா??

 

நியாயமா தோணுலதான் அதுக்கு என்ன பண்ணலாம்ங்ர பாலா??

 

சரி சரி இனி நா உங்கல கலாயிக்கல போய் சாப்புட்டுபோட்டு என்ற அண்ணிக்கூட டூயட் பாடுங்க…

 

கிருஷ்ணனும் சந்திரனும் கார்டனில் நடந்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்…

 

இன்னைக்கு நா ரொம்ப சந்தோசமா இருக்கேன் மச்சான் நா ஆசைப்பட்டமாதிரியே என்ற அம்மணிய பார்த்தி கண்ணாலம் பண்ணிக்க போறான்…இன்னைக்கு என்ற அம்மணி முகத்துல  சந்தோசத்த பாத்தேன் மச்சான்…

 

நானும்தா கிருஷ்… நாங்கூட எதிர்பாக்கவே இல்லை மாப்பிள்ளை இம்புட்டு சீக்கரம் மனசு மாறுவார்னு…மாப்பிள்ளை மாதிரி ஒரு பயனுக்கு என்ற மகள கட்டிக்குடுக்கரதுல ரொம்ப சந்தோசப்படறேன்.இனி என்ற மகள பத்தி நா கவலைப்படவே தேவையில்லை என்ற மாப்பிள்ளை என்னவிட என்ற மகள நல்லா பாத்துக்குவார்..பொண்ண பெத்தவனுக்கு இதவிட சந்தோசம் வேர என்ன இருக்கப்போகுது…

 

பொண்ண பெத்தவன் உன்ற வாயால  என்ற பயன பெருமையா பேசரத கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு மச்சான்.…

 

 

விடியற்காலையில் கிருஷ்ணன் குடும்பமும் சந்திரன் குடும்பமும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்…

 

பார்த்திபனும் பாலாவும் வேட்டி சட்டையில் தயாராகி வந்தனர்…

 

ருக்மணி தயாராகி கோவிலுக்கு தேவையான பொருட்களை பையில் எடுத்து வைத்து கொண்டிருந்தவர் பாலாக்கண்ணு நீ போய் அத்தையும் மாமாவும் கிளம்பிப்போட்டாங்ளானு பாத்துப்போட்டு வா நேரமாகுது…

 

ம்ம் சரிங்ம்மா…பாலா சென்றதும் பார்த்தி அந்த டேபில் மேல இருக்க பூவ ஜனனிக்கு கொண்டுபோய் குடுத்துப்போட்டு அவ கிளம்பிட்டாளானு பாத்துப்போட்டு வா…உன்ற அப்பா வந்தா நேரமாச்சுனு கத்துவாரு…

 

பார்த்திபன் பூவை எடுத்துக்கொண்டு ஜனனியின் ரூம்க்கு சென்றவன் கதவை தட்டினான்…

 

உள்ள வாங்க அத்தை கதவு திறந்துதான் இருக்கு என்றாள்…

 

கதவை திறந்துக்கொண்டு உள்ளே போன பார்த்திபன் ட்ரெஸ்சிங் டேபில் முன்னாள் நின்றவாறு பொட்டுவைத்துக்கொண்டிருந்த ஜனனியின் அழகில் மயங்கிப்போய் வாசப்படியிலே சாயிந்தவாறு  அவளை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்…

 

 

அத்தை ஏ பேசாம இருக்குரிங்க என சொல்லிக்கொண்டே திரும்பியவள் பார்த்திபனை பார்த்ததும் மாமா நா இந்த சேலைல எப்படி இருக்கேன்…

 

லைட் கிரின் கலர் சில்க்காட்டன் சேலைக்கட்டி இன்று கோவிலுக்கு செல்வதால் அந்த சேலைக்கு மேட்ஜ்சாக கல்வைத்த நெக்லஸ்சும் ஆரமும் கைக்கு அதே கல்பதித்த வளையலும் காதில் ஜிமிக்கி தோடு போட்டு தலைக்கு குளித்ததால் முடியை தளர்வாக பின்னலிட்டு நெற்றியில் சேலைக்கு மேட்ஜாக போட்டுவைத்து பார்ப்பதற்கே தேவதையாக நின்றுக்கொண்டிருந்தாள்…

 

எதுவும் சொல்லாமல் அவளின் அருகில் சென்றவன் அங்கிருந்து ஊக்கை எடுத்து அவன் கொண்டுவந்த பூவை ஊக்கியால் கோர்த்து தலையில் வைத்து  விட்டவன் அதை இரண்டு தோள்களிலும் எடுத்து போட்டவாறு அவளை கண்ணாடியின் முன்னாள் திருப்பி தேவதை மாதிரி இருக்கடா என்றான்…

 

இருவரின் ஜோடி பொருத்தமும்  பாக்க அழகாக இருந்தது…

 

நீங்களும் செம்ம ஹேன்சம்மா இருக்கரிங்க மாமா…

 

ஏய் என்ன இது புதுசா வாங்க போங்க மாமானு சொல்ர??

 

நேத்து அம்மா இனி உங்கல எப்பவும்போல வாடா போடானு சொல்லக்கூடாதுனு சொல்லிப்போட்டாங்க…

 

ஜானு எனக்கு நீ இப்படி கூப்டரது புடிக்கவே இல்லைடா எப்பவும்போலயே கூப்பிடு…இந்த மாமாக்கூட ஓகே ஆனா ங்க வேணாம்டா…

 

எனக்கும்தான் புடிக்கவே இல்லை அம்மாத்தா இனி மரியாதையாத்தா கூப்பிடோணும்னு சொல்லிப்போட்டாங்க…

 

அத்தைக்கிட்ட நா பேசிக்குறேன்டா…

 

திரும்பி அவன் கண்ணத்தில் முத்தமிட்டவாறு  தேங்ஸ் மாமா என்றாள்…

 

ஜனனி முத்தமிட்டதில் அதிர்ச்சியாகி ஏய் என்னடி பண்ண??

 

புடிச்சிருந்ததா இல்லையாடா??

 

புடிக்கலைனு எப்படி சொல்லுவேன் நீ டக்குனு குடுக்கவும் என்னால அத ரசிக்கமுடியலை…

 

அதனால??

 

அதனால இந்த கண்ணத்துலையும் குடுத்தா நல்லா அனுபவிச்சி ரசிச்சிப்பேன்……

 

ஆசையப்பாரு போடா அவனை தள்ளிவிட்டு வெளியே ஓடிவிட்டாள்…

 

பார்த்திபனும் சந்தோசத்துடன் கோவிலுக்கு கிளம்பினான்…

 

கிருஷ்ணன் பார்த்தியிடம் டேய் நீயும் அம்மணி,பாலா மூனு பேரும் ஒரு கார்ல வந்துருங்க நாங்க இந்த கார்ல வறோம்…

 

சரிங்ப்பா என்றவன் பார்த்திபனும் ஜனனியும் காரில் ஏறியதும் பாலா பார்த்திபனிடம் வந்தவன் அண்ணா நா கூடவரதுல உங்களுக்கு எதும் இடைஞ்சலா இருக்காதே??

 

அடிவாங்கப்போர பாலா வா வந்து வண்டில ஏறு …

 

அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு வந்து இறங்கினர்…

 

அண்ணி குலதெய்வ கோவிலுக்கு வந்தாவே ஒரு நிம்மதி மனசுல வருதுல??

 

ஆமாங் அண்ணி…அண்ணி நீங்க இந்த மாலைப்பைய எடுத்துக்கோங்க நா தாம்புழத்தட்ட எடுத்துக்கறேன்…

 

காரைவிட்ட இறங்கிய ஜனனி பார்த்தியின் கையை பிடித்தவாறு நடந்துக்கொண்டே பார்த்தி பூ போட்டு கேக்கரதுல மாறி வந்துட்டா என்னடா பண்றது???

 

நாம சாமி வேண்டிப்போம் அல்லாம் நல்லதாவே நடக்கும்டா…

 

அனைவரும் கோவிலுக்கு உள்ளே சென்று  கொண்டுவந்த தேங்காய் பழத்தட்டை  பூசாரிடம் கொடுத்தார்…

 

ரெங்கநாயகி பூசாரியிடம்  தம்பி சாமிக்கிட்ட பூ வாக்கு கேக்கோணும் என்றார்…

 

கேட்டுடலாம்ங்க அம்மா என்றவர் உள்ளே சென்று ஒரு பேப்பரில் வெள்ளை பூவும் இன்னொரு பேப்பரில் சிகப்பு அரளிப்பூவையும் வைத்து மடித்து சாமியை வேண்டிக்கொண்டு அங்கு கோவிலுக்கு வந்திருந்த பெண் குழந்தையை கூப்பிட்டு எடுக்க சொன்னார்…

 

 

மூன்று முறையும் சிகப்பு அரளி பூ வந்தது…

 

அம்மா நீங்க நினச்சி வந்த காரியம் நல்லபடியா நடத்தலாம்ங்க அம்மா என்றார் பூசாரி…

 

பார்த்திபனும் ஜனனியும் சந்தோசத்தில் கடவுளுக்கு நன்றி கூறினர்…

 

சாமி கும்பிட்டு முடிச்சிப்போட்டு சிறிது நேரம் கோவிலில் உட்கோர்ந்திருந்து விட்டு வூட்டுக்கு வந்தனர்…

 

 

ரெங்க நாயகி …மாப்பிள்ளை,கிருஷ்ணா   நம்ம வூட்ல நடக்கப்போர முதல் விசேசம் இது அதனால நல்லா பெருசா செஞ்சிப்போடனும் என்றார்…

 

ம்ம் பண்ணிப்போடலாம்ங்க அத்தை…

 

மூன்று மாதம் கழித்து சுபமுகூர்த்த நாளில் ஊரே அதிசையக்கும் வகையில் பார்த்திபனின் திருமணம் நடந்துக்கொண்டிருந்தது…

 

அருமைக்காரர் மாங்கல்யம் எடுத்துக்குடுக்க நாவிதன் மங்கல வாழ்த்துப்பாட  பெரியோர்கள் அட்சதை தூவி ஆசிர்வதிக்க பார்த்திபன் ஜனனியின் கழுத்தில் பொன்தாலியை கட்டினான்…

 

திருமணத்திற்கு  போன் பேசிக்கொண்டே மண்டபத்தினுள்ளே வந்து கொண்டிருந்த ரஞ்சித்தின் மேல் திடிரென்று ஓடிவந்து மோதியவள் டேய் லேம்போஸ்ட் முன்னாடி ஆரு வராங்கனு பாத்து வரமாட்டியா என திட்டிவிட்டு அவள் பாட்டுக்கு முன்னாள் ஒரு குட்டிப்பையனை துரத்திக்கொண்டு ஓடினாள்…

 

ஒரு நிமிசம் ரஞ்சித்துக்கு என்ன நடந்து என்ற புரியாமல் நின்றவன் அவள் மோதியதில் கொண்டுவந்த ஹிப்ட் ஒருபக்கமும் கீழே விழுந்து உடைந்த செல்போனையும் பார்த்தவன் கோபமாகி லூசு வந்து இடிச்சதுமில்லாம என்னையவே திட்டிப்போட்டு போகுது என திட்டிக்கொண்டே கீழே விழுந்த போனை பொருக்கிக்கொண்டு பார்த்திபன் ஜனனியிடம் சென்றான்…

 

 

மேடையில் நின்றுக்கொண்டிருந்த பார்த்திபன் வாடா கண்ணாலத்துக்கு வர உனக்கு இப்போதா நேரம் கிடச்சதா??ஜானுதா உன்றமேல கோபமா இருக்கா…

 

சாரி ஜானு  கொஞ்சம் வேலை அதா அம்மா,அப்பாவ முன்னாடியே அனுப்பி வச்சிருந்தேன்…

 

உன்ற சாரிய தூக்கி குப்பைல போடுடா நா உன்ற மேல கோபமா இருக்கேன்…

 

சாரி ஜானு உனக்குதா தெரியும்ல அப்பாவுக்கு வேர உடம்பு சரியில்லாம போனதால அல்லா வேலையும் நா மட்டுமே பாக்க வேண்டியதா இருக்கு…

 

சரி சரி பொழம்பாதடா நா மன்னிச்சிப்போட்டேன் போ…

 

 

கொண்டுவந்த கிப்ட்டை இருவரிடம் கொடுத்தவன் இருவருக்கும் வாழ்த்துகள்டா

 

ஜனனி ரஞ்சித்தின் வெள்ளை சட்டையில் மார்பில்  ஒட்டியிருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்து என்னடா இது சட்டைல பொட்டு ஆரையாவது கரெக்ட் பண்ணிப்போட்டியாடா??

 

பொட்டா என்றவன் குனிந்து சட்டையை பார்த்தான் அதில் ஒட்டியிருந்த பொட்டை பார்த்ததும் இதுவா கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஒரு லூசு  என்றமேல மோதி போன கீழ போட்டு உடைக்கவச்சிப்போட்டு போச்சு அதோடதா இருக்கும் என்றவன் அந்த பொட்டை கீழே போடாமல் போனில் ஓட்டிவைத்தான்…

 

பாத்துடா மோதல்ல ஆரம்பிக்கரது காதல்லதான் முடியும்…

 

ம்க்கும் அதுக்கு ஒன்னுதான் குறைச்சல்…

 

(நீங்க யோசிக்கரது சரிதான் அந்த பொண்ணுதான் ரஞ்சித்தோட லைப் பாட்னரா வரப்போரவ)

 

 

முற்றும்…