Kse-7

Kse-7

                 அத்தியாயம் – 7
அவன், அவளுக்கு, எதனால் கருகுமணி கொடுத்தான் என்று அவளுக்கு தெரியாது.
ஆனால், அவளுக்கு முதல் முறையாக ஒருவன் தாலி கொடுத்திருக்கிறான். எந்த பெண்ணும் மனதுக்கு பிடிக்காதவனிடம் உரிமையாக தாலி வாங்கமாட்டாள்.
அது மஞ்சள் கயிறாக இருந்தாலும் சரி, கருகுமணியாக இருந்தாலும் சரி.
கட்டாயத்தின் பேரில் தான் அவள் அந்த கருகுமணியை தன் கையில் வாங்கினாள். ஆனால், அது நாளடைவில் அவளையே சுற்றிக் கொண்டது. அவனையே கணவனாக வரித்துக் கொண்டாள்.
எல்லா பெண்களும் அப்படி தான் மிது மட்டும் விதிவிலக்கா என்ன?
மூன்று முடிச்சிட்டால் மட்டும் தான் கணவனாக முடியுமா என்ன?
ஒருத்தியை மனைவியாக எண்ணி அவள் கையில் தாலியை அவன் நினைவாக கொடுத்தாலே, மனதளவில் இருவரும் கணவன் மனைவியே?
இதை உணர்ந்து தான் அரவிந்த் அவளுக்கு தாலியை அளித்தான். எப்படியும் தான் அவள் மனதில் இடம் பிடித்து விடுவோம் என்று, அவன் காதல் அவனுக்கு கொடுத்த நம்பிக்கை.
இப்பொழுது அவள் முகத்தையே பார்த்திருந்தார் பாட்டி.
“ஆ… ஆமா பாட்டி” யோசனையாக மெதுவாக உரைத்தாள்.
“சரி… எதுக்கும் நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு வருவோம்”
“ஏன் பாட்டி?” யோசனையாக கேட்டாள் மிது.
“இங்க என்னை கவனிக்க வந்தவங்க எல்லாம், இங்க இருக்கும் பணத்துக்கும், அவன் மேல் உள்ள ஆசைக்காகவும் தான் வருவாங்க.
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பொண்ணை விரும்புறேன்னு சொன்னான். நானும் அவன் கிட்ட நல்ல பொண்ணான்னு கேட்டேன்.
ரொம்ப நல்ல பொண்ணு பாட்டி. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டவங்க. எதுக்கும் ஆசை படமாட்டா அவ, அப்படி இப்படின்னு ஒரே புகழாரம் தான் அவளை பற்றி” மனம் மெதுவாக வலித்தது மிதுவுக்கு.
“நாளடைவில் எனக்கும் அவளை பார்க்க ரொம்ப ஆசை ஆகிடிச்சி. இப்போ அன்னைக்கு திடீர்னு சொல்லுறான். பாட்டி அவளுக்கு வீட்டுல கொஞ்சம் பிரச்சனை… நான் அவளை நம்ம ஊருக்கு கூட்டிட்டு வரவான்னு கேட்டான்.
நானும் சரின்னு சொல்லிட்டேன். கடைசியில் பார்த்தா உன்னை கல்யாணம் பண்ணிட்டேன்னு வந்து நிக்குறான்?
எனக்கு பயங்கர ஷாக். ஏன்டா இப்படி பண்ணுனேன்னு கேட்டா,
“அவளை என்கூடவே வச்சுக்க வேற வழி இல்லை. அதே போல அப்பா பண்ணுன தப்பை நான் பண்ண விரும்பலை. என் வாழ்க்கையில் ஒரு பொண்ணுக்கு இடம் உண்டுன்னா அது உனக்கு தான்னு சொல்லுறான்.
“ஒரு பொண்ணுக்கு இஷ்டம் இல்லாமல் இப்படி பண்ணுறது தப்புன்னு” நான் அவனுக்கு எடுத்து சொன்னேன்.
“அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் பாட்டி. பிடிக்க வைச்ச பிறகு அவளை முறைப்படி கல்யாணம் பண்ணுவேன்…
நான் திரும்பி வரும் வரை அவளை உன்கிட்ட விட்டுட்டு போறேன். நம்ம பங்களா பழக்க வழக்கம் அவளுக்கு சொல்லி கொடுன்னு” உன்னை இங்க விட்டுட்டு போய்ட்டான்.
அப்போ எதுக்குடா கருகுமணி அவகிட்ட குடுத்தன்னு கேட்டா? அதுக்கும் ஒன்னு சொல்லுறான் “தாலி மேஜிக்காம். நீ இங்கிருந்து போகுறதுக்கு முன்னாடி அவனை காதலிப்பன்னு அவனுக்கு உன் மேல் அபார நம்பிக்கை.
அவளையே நினைச்சுட்டு அவன் குடுத்த கருகுமணி அவளுக்காக இருக்குன்னு எப்பவும் நியாபகப்படுத்த தான் கட்டாயமாக அதை அவளுக்கு கட்டினேன். இங்க இருந்து சென்னைக்கு அவள் போகும் பொழுது என்னை அவள் கணவனா அழைச்சுட்டு போவா” அத்தனை நம்பிக்கையுடன் கூறினான் அன்று.
“அவன் நம்பிக்கை வீண் போகக்கூடாது, அவன் ஒரு பொண்ணுகிட்ட ஏமாந்தும் போகக்கூடாது. அது தான் உன்கிட்ட கேட்கிறேன். நீ அவனை விரும்பி தான் கல்யாணம் பண்ணுனியா?”
அவர் கூற கூற மிது மனது இறக்கை இல்லாமல் பறந்தது. அவன் மனதில் தான் இருக்கிறோமா? அந்த எண்ணமே அவளை வானில் பறக்க வைத்தது.
அவரின் கேள்விக்கு இப்பொழுது “ஆமா… பாட்டி” என தைரியமாக கூறினாள்.
அதே நேரம் போன் அழைக்கவே அதை நோக்கி சென்றாள். மிது, தங்கை தான் அழைத்திருந்தாள்.
“ஹலோ“ என்க,
அந்த பக்கம் மிதுவின் தங்கை அழுகையுடன் பேச்சை தொடர்ந்தாள் “அக்கா நேத்து நைட் அம்மாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியல. அத்தையும் மாமாவும், அவங்க ஊருக்கு போய்ட்டாங்க. அவங்க கூடவே தம்பியும் போய்ட்டான். எனக்கு ஒரே அழுகையா வந்திச்சி” அழுதபடி கூறினாள் தங்கை.
“என்ன சொல்லுற மிரு. அம்மா இப்போ எப்படி இருக்காங்க, இதை ஏன்டி நேத்தே சொல்லல? நான் வேணா வரவா?” பதட்டத்துடன் வினவினாள் மிது.
‘அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நோய் வாய் பட்ட தாயை தனியாக விட்டு  விட்டு  வந்து வந்துவிட்டோமே. அவர்கள் எப்படி பார்த்துக் கொள்வார்கள்’
“இல்ல வேண்டாம்க்கா. மாமா வந்துட்டாங்க… அவங்க தான் அம்மாவை புல்லா பார்த்தது… ஹாஸ்பிடலில் கூட அவங்க தான் இருந்தாங்க… இப்போ தான் கிளம்பி போறாங்க. அம்மா  இப்போ நல்லா இருக்காங்க.”
“அம்மா எங்க, அவங்ககிட்ட குடு”
“இப்போ தான் சாப்ட்டு தூங்குறாங்க”
“கந்து மாமாவை நம்பி தானே விட்டுட்டு வந்தேன். இப்படி பண்ணிருக்காங்க… மாமா அப்புறம் எப்போ வந்தாங்க, அம்மாவை பக்கத்துல இருந்து பாத்துக்க சொல்லு, நான் சீக்கிரம் வருகிறேன்”
“அக்கா கந்து மாமா, நல்லா தான் பாத்துகுறாங்க. நம்ம வீட்டுக்கு வந்தது. கந்து மாமா இல்ல, அரவிந்த் மாமா”
“எ… என்ன?” ரிசீவரை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
“இதுக்கே ஷாக் ஆனா எப்படிக்கா, இந்த போன் கனெக்ஷன் கூட வீட்டு ஓனர் கிட்ட சொல்லி அவங்க தான் ஏற்பாடு பண்ணுனாங்க”
“என்ன சொல்லுற நீ, புரியும் படியா சொல்லி தொலையேன்” மிகவும் டென்சனாக இருந்தது.
“ஆமாக்கா, உன்னை, உங்க முதலாளி பையனுக்கு பொண்ணு கேட்டு போன வாரம் வந்தாங்கக்கா”
“அதை ஏன்டி என்கிட்ட சொல்லல?”
“அவங்க தான் வேண்டாம்னு சொன்னாங்க. நீ வெளியூருல இருக்கல்ல அது தான் வந்த பிறகு சொல்லலாம்னு மாமா சொன்னாங்க”
“அம்மா என்ன சொன்னாங்க?”
“அம்மாக்கு விருப்பம் தான், ஆனாலும் உனக்கு பிடிச்சா மட்டும் தான் மேற்கொண்டு பேசுவேன்னு சொன்னாங்க?”
“ஒ”
“ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்கன்னு போன் கனெக்ஷன் குடுத்துட்டு போனாங்க. அது தான் அன்னைக்கு அவங்களுக்கு போட்டேன்”
மெதுவாக தலையாட்டிக் கொண்டாள். அதன் பிறகு பொதுவாக பேசியவள் அலைபேசியை அணைத்துக் கொண்டாள்.
அவன் இத்தனை தனக்காக செய்கிறானே, அவனை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது.
தன் மேல் அவன் வைத்திருக்கும் காதலை எண்ணி வியந்துப் போனாள்.
அவளையே பாட்டி பார்த்திருக்க, டெலிபோனில் ஏதோ எண்களை வேகமாக அடித்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு மிது” பாட்டி அவள் அருகில் வர,
“உன்னை நான் உடனே பாக்கணும் அரவிந்த். இப்பவே இங்க வா” அவன் மறுவார்த்தை பேசும் முன் அழைப்பை நிறுத்தி இருந்தாள்.
‘டேய் அரவிந்த்… எங்கயாவது சொதப்பி வச்சிருக்கியா?’ யோசனையில் ஆழ்ந்தான் அவன். ‘கோபமா வேற பேசுறா, என்னாச்சு?’
அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். தன் தாய் இல்லா குறையை அவள் தீர்ப்பாள் என்று,  அன்று அவள் குடும்பத்தை நன்கு கவனிக்கும் பொழுதே அறிந்துக் கொண்டான்.
மெதுவாக அவளிடம் பழகி அவளுக்கு தன் மேல் காதல் வரவைக்கலாம் என்று தான் எண்ணினான். ஆனால் எதிர் பாராமல் அவளுக்கு உதவி தேவைப்பட, அந்த வாய்ப்பை நழுவாமல் பிடித்துக் கொண்டான்.
ஆனால் என்ன, அவன் வாய் கொஞ்சம் நீளம் என்றதால் அவளிடம் சொதப்பிக் கொண்டிருந்தான். அவளுக்கு பிடிக்காத இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கொண்டு வந்து, அவன் வாயும் சும்மா இல்லாமல், அவளையும் சும்மா இருக்க விடாமல் மொத்தமா சொதப்பியாச்சு. நாளைக்கு என்ன இருக்கோ ஆண்டவா… நீ தான் என்னையும், என் காதலையும் காப்பாத்தணும்’ வேண்டிக் கொண்டான்.
error: Content is protected !!