Dhuruvam-12

துருவம் – 12

          அந்த திருமண வைபவத்தில், அரசரிடம் சொல்லிக் கொண்டு காவ்யஹரிணியும், அவளின் அண்ணனும், அண்ணியும் வெளியே செல்ல எத்தனிக்க, அவரோ இன்னும் சிறிது நேரம் இருந்துவிட்டு செல்லுங்கள் என்றார்.

          அவர் அப்படி கூறியதிலே, தங்களிடம் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொண்டனர். கூட்டமில்லாத இடமாக பார்த்து, அவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

          Faiq, அங்கே அவளை தான் கவனித்துக் கொண்டு இருந்தான். அன்று பார்த்த பிறகு,அவனும் இன்று தான் பார்க்கிறான் அவளை.

           அவளின் அந்த கோபம், மனதில் அவனுக்கு புன்னகையை தருவித்தது. தன்னை தான் அவளும் நினைத்து இருக்கிறாள் என்று, இப்பொழுது சிறிது நேரத்திற்கு முன்னாடி கண்டு கொண்டானே.

             தனக்கு தான் திருமணம் என்று நினைத்து, அவள் வருந்தி இருக்கிறாள். இங்கே வந்த பிறகு, தனக்கு இல்லை என்று தெரிந்த பின் அவள் முகத்தில் தெரிந்த நிம்மதியும், சிரிப்பும் அவன் மனம் அவளின் அன்புக்கு ஏங்கியது.

             இப்பொழுது இருக்கும் கோபம் கூட, இத்தனை நாட்கள் அவளை பாராமல் இருந்தது தான் என்றும் புரிந்தது. அப்பொழுது அவரின் தந்தை அவர்களை நோக்கி செல்வதை கண்டு, இவனும் பின்னே சென்றான்.

            “நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம், உங்கள் தாத்தா எப்படி இருக்கிறார்? குடும்பத்தில் மற்ற எல்லோரும் நலமாக இருக்கிறார்களா?” என்று அவர்களிடம் கேட்டதோடு அல்லாமல், அவர்களை அமர வைத்து, தானும் அமர்ந்து பேச தொடங்கினார்.

        அனிருத் கிஷோர் தான், அவருக்கு எல்லோரும் நலமாக இருப்பதாக பதிலளித்து விட்டு, திருமணம் சிறப்பாக நடந்தது என்று கூறி அவரை வாழ்த்தவும் செய்தான்.

        அவர்களை பின்பற்றி, அவனின் மனைவியும், தங்கையும் அவரை நலம் விசாரித்துவிட்டு, திருமணம் நன்றாக நடந்ததற்கு வாழ்த்துக்களை கூறினர்.

         “எனக்கு ஒரு உதவி வேணும் தம்பி, அதான் உங்களை கொஞ்ச நேரம் இருக்க சொன்னேன். என் மூத்த மகன் faiq உங்களுக்கு தெரியும் இல்லையா, மதுரை பக்கத்தில் அவனுக்கு கொஞ்சம் வேலையாக வேண்டி இருக்கு”.

          “இது பற்றி, உங்க தாத்தா கிட்ட பேசிட்டேன். அவர் தான் இது பத்தி, உங்க கிட்ட பேச சொன்னார். அவரோட பேத்திக்கு தான் இன்னும் நல்லா தெரியும் சொன்னார், நீ கொஞ்சம் அவனுக்கு உதவி செய்ய முடியுமாஎன்று கேட்ட அரசரை பார்த்து திடுகிட்டாள்.

              “ஹையோ! இதை வச்சு தானே பிரச்சனை வந்தது எங்களுக்குள்ள, இவர் திரும்ப அதுக்கு பிள்ளையார் சுழி போடுறார் போலயே!” என்று நொந்து கொண்டாள்.

             இவள் இப்படி நினைக்க, அனிருத்தின் பார்வை முழுவதும் faiq மீது. எப்படி உனக்கும், உங்க அப்பாவுக்கும் சரியானது என்று கண்ணாலே கேட்டுக் கொண்டு இருந்தான்.

            அவனோ, ஒன்னும் சரியாகவில்லை இது வேறு என்பது போல் கண்களால் அவனும் பதில் கூறினான். அனிருத் உடனே அரசரிடம், அவள் உதவி செய்வாள் என்பது போல் வாக்கு கொடுத்தான்.

             அண்ணனை ஒரு பார்வை பார்த்தாள், காவ்யஹரிணி. அவனோ, சளைக்காமல் பதில் பார்வை பார்த்து அவளை அப்பொழுது ஒத்துக் கொள்ள வைத்தான்.

             “ரொம்ப சந்தோஷம், இனி என் மகன் faiq விபரங்கள் கூறுவான்என்று கூறி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.

         அனிருத் தங்கையின் நிலை அறிந்து, அவனை நாளை வீட்டிற்கு வந்து பேசுமாறு கூறிவிட்டு விடை பெற்றான். காவ்யஹரிணி கண்களும், faiqயின் கண்களும் சண்டையிட்டுக் கொண்டது.

            நீ முடியாதுன்னு சொன்ன, எப்படி இப்போ நீயாவே ஒத்து கொள்ளுற மாதிரி செஞ்சிட்டேன் பார்த்தியா என்று faiqயின் கண்களுக்கு பதிலாக, என் கிட்ட நீயா வந்து மாட்டிக்கிட்ட, இனி வச்சு செய்றேன் உன்னை என்று பதில் பார்வை பார்த்தது காவ்யஹரிணியின் கண்கள்.

       கண்ணில் இருந்து அவள் மறையும் வரை, அவளையே பார்த்துக் கொண்டு இருந்த faiq, தந்ததையிடம் சொல்லிக் கொண்டு, உடனே அங்கு இருந்து வெளியேறி அவன் வீட்டிற்கு காரை எடுத்து சென்றான்.

         மனம் முழுவதும், அன்று நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தது. வீட்டில் இருந்து தன்னை பார்க்க கூட செய்யாமல் வெளியேறிய காவ்யஹரிணியின் பின், மனம் செல்ல துடித்தாலும், இங்கே தந்தையை நாலு வார்த்தை கேட்க வேண்டி இருந்தது.

         ஒரு தந்தையாக என்ன செய்தார் அவர் தனக்கு? இப்பொழுது, இந்த திருமணம் கூட தன்னை ஒரு வார்த்தை கேட்காமல், நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கோபமாக வந்தது, அதை அவன் வாய் வார்த்தையாகவும், கேட்டு விட்டான்.

            “என்ன செய்யல உனக்கு? நீ தேர்ந்தெடுத்த படிப்பு, உனக்கு பிடிச்ச கார், உன் ரூம் முதற்கொண்டு உனக்கு பிடிச்ச மாதிரி தான எல்லாம் பண்ணிக் கொடுத்து இருக்கேன்என்றவரை பார்த்து முறைதான்.

          “இது எல்லாம், எல்லோரும் செய்யக் கூடிய கடமை. ஒரு அப்பாவா, என் கிட்ட உட்கார்ந்து அன்பா, ஆறுதலா எப்போவவது பேசி இருக்கீங்களா?”.

            “அதை எல்லாம் விடுங்க, எப்போவவது எங்க அம்மா கிட்ட நீங்க, ஆறுதலா ஒரு நாலு வார்த்தை பேசி இருப்பீங்களா! இல்லை, அம்மாவை இழந்து நிற்கும் பொழுது, உங்களை தேடி வந்த என்னை தான் சமாதானப்படுத்தி இருக்கீங்களா?”.

           “இது எல்லாத்தையும் விட, எனக்கு இந்த கல்யாண ஏற்பாடு பண்ணுறீங்களே, அந்த பொண்ணு யாரு, என்னனு என் கிட்ட சொன்னீங்களா? இல்லை எனக்கு பிடிச்சு இருக்கான்னு தான் கேட்டீங்களா?” என்று ஒவ்வொரு கேள்வியும் சட்டையடியாக, அவனிடம் இருந்து வந்தது.

          எந்த கேள்விக்கும், அவரால் பதில் கொடுக்க முடியவில்லை. எப்படி கொடுக்க முடியும்? எல்லாவற்றையும் அவர் தன் ஆசை மனைவி சொல் பேச்சு கேட்டு அல்லவா, அவர் நடந்து இருக்கிறார் இவன் விஷயத்தில்.

        மக்களுக்கு ஒரு நல்ல அரசராக இருந்த போதிலும், நல்ல தந்தையாக அவர் அவனுக்கு இருந்தது இல்லை என்பது முற்றிலும் உண்மை.

          அவன் இந்த அளவு வளர்ந்து இருக்கிறான் என்றால், அதற்கு ஒரே காரணம் அவன் தாய் அவனுக்கு சிறு வயது முதல், போதித்த நல்ல பழக்க வழக்கங்கள் தான்.

         இதில் மற்றொரு பங்கு, அவனின் நண்பன் ரசாக் குடும்பத்தினரை சேரும். ரசாக் தாய், அவனின் உணர்வுகளை புரிந்து கொண்டு, குரான் படிக்க வைத்து, அல்லா துணை இருப்பார் என்று அவனை ஆறுதல் படுத்துவார்.

            அவன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, அதற்கான படிப்புகளை எல்லாம் படித்ததோடு அல்லாமல், வீர தீர சாகசங்கள் பல செய்து தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டு இருந்ததால் மட்டுமே, இன்று அவனால் இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்க முடிகின்றது.

           அரசர் இந்த திருமண ஏற்பாடு செய்ததற்கு ஒரே காரணம் தான், இதன் மூலம் இன்னும் தன் நாட்டின் வளர்ச்சிக்கு பெண்ணின் தந்தை, நிறைய உதவுவார் என்ற நல்லெண்ணத்தில் மட்டுமே.

           தன் மகனின் வாழ்க்கையை பற்றியும் அவர் யோசிக்கவில்லை, அந்த பெண்ணின் மனதையும் அறிந்து இருக்கவில்லை. இவனின் கேள்வியில், தலை குனிந்தவர் அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நிற்கும் பொழுது, அவனே அதற்கான தீர்வையும் வழங்கினான்.

           “உங்களுக்கு தான் இன்னொரு பையன் இருக்கான் , இந்த நாட்டோட இளவரசர். அவரை கேட்டு, சரி செய்ங்க. இது அவங்களுக்கும் பெருமை பாருங்க, ஏன்னா இப்போ வரை என்னை உங்களால் மகனாக ஏற்றுக் கொள்ள தயக்கம்என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லிவிட்டு மலேசியா சென்றவன் தான், திரும்பி ஒரு வேலையாக மீண்டும் இங்கு வந்த பிறகு, அரசரிடம் மதுரை செல்ல ஏற்பாடு செய்து தரும்படி, அருங்காட்சியம் உரிமையாளன் என்ற முறையில் கேட்டான்.

           ஏனோ, முடியாது என்று சொல்ல அவரால் முடியவில்லை. அவருக்கு என்ன தான் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தாலும், நீர் அடித்து நீர் விளகாது என்பது போல், இதையாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி தான் உடனே அதை செயல்படுத்தினார்.

         இதை எல்லாம் நினைத்தவன், மனதிற்குள் சிறு வலி எழுந்தாலும் அதை எல்லாம் தூர எறிந்துவிட்டு, அவனின் மனதிற்குள் முதல் முதலாக நுழைந்த, காதல் ராட்சசியை தான் நினைத்துக் கொண்டு இருந்தான்.

          “ராட்சசி! அழகான ராட்சசி! இப்போ உன்னால மதுரைக்கு கூட்டிட்டு போக முடியாம, எப்படி இருக்க முடியும்? இனி தான் என்னோட ஆட்டத்தை, உன்னிடம் காட்ட போகிறேன் பெண்ணேஎன்று மனதிற்குள் விசில் அடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.

        அங்கே காவ்யஹரிணி, வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் கைப்பையை சோபா மீது வீசிவிட்டு, அண்ணனை பார்த்து முறைத்தாள்.

         “ஹரி! என்ன பழக்கம் இது? இப்படி எதையும் தூக்கி வீச கூடாதுன்னு, உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்என்று அவளின் செயல் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினான் அனிருத்.

        அதில், அவளின் முகம் சுருங்கி சாரி அண்ணா, என்று கூறினாலும், அவனை பார்த்து முறைப்பதை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை.

          “அப்படி, என்ன கோபம் உனக்கு இப்போ? எல்லாம் நம்ம நன்மைக்கும் சேர்த்து தான், அவர் கேட்ட உடனே ஒத்துகிட்டேன்என்று கூறிய அண்ணனை கேள்வியோடு பார்த்தாள்.

         “முதல, நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு, முகம் கழுவிவிட்டு வா. நானும் ட்ரெஸ் மாத்திட்டு வரேன், எங்களுக்கு ஒரு கப் பால் சூடா கொண்டு வா சாருஎன்று இருவரிடமும் வேலை சொல்லிவிட்டு, அவனின் அறைக்குள் சென்று விட்டான்.

           தனக்கு எப்பொழுதும், நன்மை மட்டுமே தன் அண்ணன் செய்வான் என்ற நம்பிக்கை இருந்தால், அவளும் மறு பேச்சு பேசாமல், உடனே அவளின் அறைக்கு சென்று உடை மாற்றி, முகம் கழுவிவிட்டு ஹாலிற்கு வந்து அமர்ந்தாள்.

            அங்கே அனிருத், அவள் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்ததை பார்த்து, புன்னகைத்து கொண்டாள் மனதிற்குள். வெளியே, அவன் மேல் கோபம் இருப்பது போல் முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக் கொண்டாள்.

            தங்கை பற்றி அவனுக்கு தெரியும் என்பதால், அவனும் சிரித்துக் கொண்டே அன்று அவர்கள் பேசியதை பற்றி கூற தொடங்கினான்.

          “நாம என்ன உடனே, அவனை கூட்டிட்டு மதுரை போக போறோமா என்ன! நம்ம வேலை முடிக்காமல், எப்படி கூட்டிட்டு போக முடியும்?” என்றவனை பார்த்து இப்பொழுது, லூசாப்பா நீ என்பது போல் ஒரு லுக்கு விட்டாள்.

         அதில், அவன் இப்பொழுது கோபம் கொண்டு, அவளை முறைத்தான்.

           “பின்ன என்ன அண்ணா, இந்த காரணத்துக்காக தான் நான் ஆரம்பத்தில் இருந்தே, அவருக்கு முடியாதுன்னு சொன்னேன். இப்போ நீ புகுந்து, காரியத்தை கெடுதா எனக்கு கோபம் வராம என்ன செய்யும்?” என்றவளை பார்த்து, சிரித்தான் இப்பொழுது.

           “நம்ம கண்டுபிடிச்ச ஒரு இடத்துக்கு போக, அனுபவம் வாய்ந்த ஒருத்தரை தேடனும் சொன்னோமே, உனக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டதற்கு, அவள் நியாபகம் இருக்கு என்று குழப்பத்தோடு பதில் அளித்தாள்.

          “அந்த அனுபவஸ்தருக்கு இப்போ நம்ம உதவி தேவை, நமக்கு அவர் உதவி தேவை புரிந்ததா!” என்று அவன் கூறவும், அவளுக்கு அப்பொழுது தான் அண்ணனின் யுக்தி புரிந்தது.

        “யாஹூ! ஒத்துக்குறேன் டா அண்ணா, என்னை விட நீ புத்திசாலினு. ஆமா, இதுக்கு எப்படி அவரை ஒத்துக்க வைக்க போற?” என்று கேள்வி எழுப்பினாள்.

           “அது உன் சாமர்த்தியம்! நான் நாளைக்கு காலையில் பத்து மணிக்கு, அவரை இங்க வர சொல்லி இருக்கேன். இனி நீ தான் பார்த்துக்கணும், எனக்கு வேற வேலை எல்லாம் waiting” என்று கூறிவிட்டு, பால் குடித்துவிட்டு படுக்க சென்றான்.

        “ஆஹா! என்னை மாட்டிவிட்டு போக பிளான் போட்டான் போலயே, சரி நாமளே அவன் கிட்ட பேசலாம். இரு டா, உன்னை நல்லா வச்சு செய்றேன் என்னை அழ வைத்துக்குஎன்று மனதிற்குள் முடிவெடுத்தவளாய், அவளும் பால் அருந்திவிட்டு படுக்க சென்றாள்.

           யாருக்கும் காத்துக் கொண்டு இருக்காமல், அந்த விடியல் அழகாக விடிந்தது. Faiq, அவனின் அறையில் ஒரு மணி நேரமாக, கண்ணாடி முன் நின்று இந்த உடை நன்றாக இருக்குமா, இல்லை இதுவா என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

          முதல் முறையாக, அவனே அவனுக்கு சற்று வித்தியாசமாக தெரிந்தான். ஒரு முறை கூட, அவன் இப்படி உடை விஷயத்தில் தடுமாறியது இல்லை.

         இன்று மனம் கவர்ந்தவளை காண, தான் இவ்வளவு தூரம் உடையை வைத்து அல்லாடுகிறோம் என்று நினைத்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

         இங்கே இவனை போல், அவள் அல்லடாமல் அவனை இதற்கு எப்படி சம்மதிக்க வைப்பது, என்று தான் யோசித்துக் கொண்டு இருந்தாள். இவளின் யோசனையை தடை செய்வது போல், வெளியே யாரோ காலிங் பெல் அடிக்கவும், இவள் போய் கதவை திறந்தாள்.

        அங்கே, ஸ்டைலாக டார்க் ப்ளூ டீஷர்ட், லைட் ப்ளூ ஜீன்ஸில் அட்டகாசமாக நின்று கொண்டு இருந்தான் faiq. அவனை, ஆவென்று வாயை பிளந்து கொண்டு, சைட் அடிக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அவனை அப்படி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

         அவள் அப்படி நிற்கவும், தன் ஒரு மணி நேர உடை தேர்வு வீண் போகவில்லை என்று எண்ணி மனதிற்குள் சந்தோஷம் அடைந்தான்.

        அதற்குள், வீட்டினுள் இருந்த அவளின் அண்ணனும், அண்ணியும் யார் என்று பார்க்க வந்தவர்கள், இந்த காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டனர் ஒருவரை ஒருவர் பார்த்து.

         “யாரு மா ஹரி?” என்று அண்ணனின் குரலில் தான், சுய உணர்விற்கு வந்து அவனை பார்த்து முறைத்துக் கொண்டே, வாங்க என்று அழைத்து சென்றாள் உள்ளே.

            அவனோ, அவளின் அந்த செய்கையை பார்த்து மனதிற்குள் அவளை கொஞ்சிக் கொண்டு இருந்தான்.

         “வாங்க மிஸ்டர் faiq! உட்காருங்க, என்ன சாப்பிடுறீங்க? காபி இல்லைனா ஜூஸ்?” என்று வீட்டின் மனிதனாக அவனை வரவேற்று, உபசரித்தான் அனிருத்.

           “இல்லை, இப்போ தான் பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு வந்தேன். மே பி இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும், அப்புறம் வேணும்னா ஜூஸ் குடிக்கலாம்என்று எந்த பந்தாவும் செய்யாமல், அவனின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டான்.

          அவனின் அந்த செய்கையில், வீட்டின் மூன்று விக்கட்டும் அவன் புறம் விழுந்தது. அடுத்து, அவன் பேசுவதற்கு முன், அனிருத் சில விஷயங்களை கூறி, தங்கையிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி கூறிவிட்டு, அவன் அறைக்குள் சென்று விட்டான்.

          அவளும், தான் வந்ததன் நோக்கத்தை எல்லாம் கூறாமல், ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி, அந்த இடத்தை பற்றிய தகவலையும் கூறினாள்.

         “எதற்கு அங்க போகனும்ன்னு, நான் தெரிஞ்சிக்கலாமா! ஏன்னா, அந்த இடம் கொஞ்சம் ஆபத்து சூழ்ந்த ஒரு பகுதி, அதனால கேட்டேன்என்று அவளிடம் கூறினாலும், அவனுக்கு ஒரே யோசனை இவள் ஏன் அங்கு செல்ல துடிக்கிறாள் என்று.

        அவளோ, இவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தவள், அங்கே சென்று நிலைமையை தெரிந்து கொண்டு, அதன் பின் சொல்லலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

          “நீங்க அங்க கூட்டிட்டு போங்க முதலில், அப்புறம் அங்கே வச்சு சொல்லுறேன். இதை நீங்க செஞ்சு கொடுத்தா, நான் உடனே உங்களை மதுரைக்கு கூட்டிட்டு போகிறேன்என்று அவனிடம் பேரம் பேசினாள்.

          “ஆஹா! எப்படியாவது தடுக்கலாம் பார்த்தா, இவ இப்படி கறாரா இருக்காளே! அந்த இடம் ரொம்ப மோசமான இடம், உயிர் தப்பி வருவதே பெரிய விஷயம்”.

          “எடுத்து சொன்னாலும், கேட்குற நிலைமையில் அவள் இல்லை போலயே. எதுக்கும் நாம சில பாதுகாப்பு பணிகளை எல்லாம் செய்துட்டு, அப்புறம் அவளை கூட்டிட்டு போகலாம்என்று முடிவெடுத்த கையோடு, அவளிடம் அந்த இடம் பற்றிய சிறு குறிப்பை மட்டும் கூறிவிட்டு, எல்லாம் தயார் செய்துவிட்டு அழைத்து செல்வதாக கூறினான்.

        இதற்குள் அனிருத், அவன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்து, அவனுக்கு பிரெஷ் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தான். அதன் பின், இருவரும் அவரவர் தொழில் விஷயங்களை பேசிக் கொண்டு இருந்தனர்.

          அப்பொழுது தான், அவளுக்கு அவனும் ஒரு archeologist, அருங்காட்சியம் அவன் பொறுப்பில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, சந்தோஷம் அடைந்தாள்.

        அவனும், அவளை பற்றி தெரிந்து கொண்டு ஆச்சர்யம் கொண்டான். இந்த விஷயத்தில், இருவருக்கும் ஒத்த ரசனையும், சிந்தனையும் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தான்.

         மேலும், சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, நாளை அருங்காட்சியத்தில் சந்திக்கலாம் என்று கூறி விடை பெற்றான்.

        அவளும், ஒரு சந்தோஷ மனநிலையிலே அன்று முழுவதும், வீட்டில் பவனி வந்தாள். இந்த சந்தோஷம், அந்த இடத்திற்கு சென்ற பிறகு, இருக்கப் போவதில்லை.

         அங்கு நிறைய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்று தெரிந்து இருந்தால், அவன் கூறும் பொழுதே யோசித்து இருக்கலாம் என்று நொந்து கொள்ளப் போகிறாள் என்று பாவம் அவள் அறியவில்லை.  

தொடரும்

 

       

  

 

            

 

            

error: Content is protected !!