Dhuruvam 7

Dhuruvam 7

துருவம் 7

        அன்று இரவு, காவ்யஹரிணிக்கு தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. அன்று நடந்த சம்பவங்கள் அப்படி, அவள் எதிர்பாராதது அதுவும்.

       மனதை நிலைப்படுத்தி, தூங்க முயற்சிக்க அவள் எவ்வளவோ முயன்றும் வரவே இல்லை. எப்பொழுதும் போல், அன்றைய நிகழ்வுகளை ஆசை போட தொடங்கியவள், முதல் அதிர்ச்சி நடந்த இடத்திற்கு அவள் மனம் சென்றது.

              அங்கே படுக்கையில் விழுந்த faiq கூட, இதை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தான்.

       Suv வண்டி வரிசையாக ஓரிடத்தில், அந்த மாலை நேரம் நின்றது. வண்டியை வேகமாக ஒட்டி, பழி வாங்கிய அவனை கண்டு முறைத்துக் கொண்டே இறங்கினாள் காவ்யஹரிணி.

          Faiq, அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் வண்டியின் டையரை சரி செய்ய தொடங்கினான். மனோகர், அவளை இழுத்துக் கொண்டு ஒரு மணல் மேல் ஏறி நிற்க வைத்து சூரியன் அஸ்தமிப்பதை காட்டிய பொழுது, அவள் எல்லாவற்றையும் மறந்து அதை ரசிக்க தொடங்கினாள்.

        சுற்றிலும், பாலைவனம் தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதை தவிர்த்து வேறு எதுவும் தெரியவில்லை, மணலை தவிர.

        அந்த இடத்தை, படம் பிடிக்க தொடங்கினாள் தன் செல்பேசியில். சூரியன் அஸ்தமிப்பதை தொடர்ந்து, சுற்றிலும் உள்ள பாலைவனத்தை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தவள், ஓரிடத்தில் செல்பேசியை அப்படியே வைத்து இருந்தாள்.

        அங்கே faiq, அழகாக கார் டையரை மாற்றிக் கொண்டு இருந்ததை ஏனோ விழி எடுக்காமல் பாரர்த்துக் கொண்டு இருந்ததோடு அல்லாமல், அதை செல்பேசியில் படம் பிடிக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தாள்.

         அவளின் அந்த மோன நிலையை அவளின் அண்ணிமார்கள் கலைத்து விட்டனர்.

     “மக்கும்! செல்பி எடுக்கிறது எல்லாம் நல்லா தான் இருக்கு, இதை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு எடுத்தா நல்லா இருக்கும்என்று அவர்களுக்குள் பேசிக் கொள்வது போல் இவளை வார்த்தையால் குத்த தொடங்கினர்.

         அவளோ, அவர்களை ஒரு பார்வை மட்டுமே பார்த்து திரும்பி நடக்க தொடங்கினாள். அந்த பார்வை சொன்ன செய்தி, இன்னொரு முறை இப்படி பேசினால் பதிலுக்கு நான் செய்ய வேண்டியதை செய்துவிடுவேன் என்பதாகும்.

       அந்த பார்வையின் பொருள், அவர்களுக்கு புரியவில்லை என்றாலும், அவளின் தம்பிக்கு புரிந்தது. அவன் அவர்களை எச்சரித்து விட்டு, அவள் சென்ற திசை நோக்கி சென்றான்.

       மணலில் அந்த மாலை பொழுதில், கால் புதைய புதைய நடக்க மனம் லேசாக இருந்தது அவளுக்கு. அவள் பின்னே வந்த அவளின் தம்பி, அவளை அழைத்துக் கொண்டு கார்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான், நேரமாவதை உணர்ந்து.

       அங்கே எல்லா கார்களும், கிளம்ப தயார் நிலையில் இருக்க, இவர்களும் அவர்கள் வந்த காரில் ஏறி அமர்ந்தனர்.

       Faiq, என்ன நினைத்தானோ அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து, மெதுவாகவே அடுத்து ஓட்டினான். அடிக்கடி ரியர் வியூ கண்ணாடியில் இருவரின் பார்வையும் மோதிக் கொண்டது.

     அப்படி ஒவ்வொரு முறையும், அவர்கள் பார்வை மோதிக் கொள்ளும் பொழுது, அவளின் இதயத்துடிப்பு அவள் காதுக்கு எட்டி அவளை விதிர்விதிக்க செய்தது.

       “ஹையோ ரிகா! இவனை பார்த்ததில் இருந்து, உன் மூளையும், இதயமும் உன் பேச்சை கேட்க மாட்டேங்குதே. கண் எப்போ பார்த்தாலும், அங்கேயே குடி இருக்கே!” என்று மனதிற்குள் புலம்பி தள்ளினாள்.

         “இவளுக்கு நான் துபாய் பிரின்ஸ்ன்னு தெரிஞ்சா, இப்படி பார்ப்பாளா? இவளோட இந்த ஒற்றை பார்வைக்கு, நான் ஏன் இப்படி நானாக இல்லை?” என்று இப்படி பல கேள்விகள் faiq மண்டைக்குள், ஓடிக் கொண்டு இருந்தது.

       இப்படி இவர்கள் தங்கள் மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருக்க, அடுத்த இடமான ஒட்டக சபாரி வந்தது. இவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும், இவளின் தம்பி கண்டிப்பாக இதில் சென்றால் தான் முழுமையடையும் என்று வற்புறுத்தியதால் அதில் ஏற ஒத்துக் கொண்டாள்.

       அந்த ஒட்டகத்தின் மீது சவாரி செய்யும் பொழுது, முதலில் அவள் பயந்தாள். அது ஆடி குலுங்கி சென்ற விதத்தில், அவளுக்கு முதலில் வயிற்றை கலக்கியது. அதன் பிறகு, அது சற்று பழக்கத்திற்கு வரவும், அந்த சபாரியை ரசிக்க தொடங்கினாள்.

       அவள் அதை ரசிக்கிறாள் என்று தெரிந்த பின், அவன் அவளை ரசனையுடன் நோக்கினான். அது மட்டுமின்றி, அவனின் செல்பேசியில் முதல் முதலாக ஒரு பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றது.

        அவள் ஒட்டக சபாரி செய்து முடித்த பின், அவளின் செல்பேசியில் அந்த ஒட்டகத்துடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள். அதன் பிறகு மீண்டும் பயணம் காரில், மெதுவாக இருட்டிக் கொண்டு வந்தது வானம்.    

         ஓரிடத்தில், மிக பெரிய டெண்ட் அமைத்து லைட் வெளிச்சத்துடன் பளீர் என்று தெரிந்தது. அங்கே வரிசையாக வண்டியை நிறுத்தி, எல்லோரையும் உள்ளே அழைத்து சென்றார்கள்.

          உள்ளே நுழைந்த காவ்யஹரிணி, அங்கே இருந்த சூழலை பார்த்து முகத்தை சுழித்தாள். அதுவும், அங்கே ஓரிடத்தில் ஆண்கள், பெண்கள் எந்தது எந்த வித்தியாசமும் இல்லாமல் அவர்கள் புகை பிடித்துக் கொண்டு இருந்ததை என்ன சொல்ல?.

       எல்லாவற்றிற்கும் மேல், அங்கே இரவு உணவு என்று அவர்கள் கொடுத்ததை பார்த்து அவளுக்கு வாந்தி வராத குறை தான். அங்கே அவளுக்கு ஒன்றும் ரசிக்கவில்லை, பேசாமல் வெளியே செல்லலாம் என்றால் இனி தான் கலை நிகழ்ச்சி என்று கூறி அங்கே அமர வைத்தனர்.

          நடுவில் மேடையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தரை சோபாவில், எல்லோரும் அமரவும் தானும் ஒரு sprite வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தாள்.

          சில நிமிடங்களில் மேடை ஏறிய பெண்ணை பார்த்து, அதிர்ந்து விட்டாள். வெறும் பிளவுஸ், பாவாடையுடன் ஒரு கைக்குட்டை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து பெல்லி டான்ஸ் ஆட தொடங்கவும், அவளால் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை.

          மற்றவர்கள் ஆட்டத்தை ரசிக்க, இவளுக்கு ஒரு பெரிய துணி ஏதும் கிடைத்தால் முதலில் அப்பெண்ணின் மேல் போர்த்தி விட மனம் துடித்தது. காரணம், அங்கே இருந்த சில ஆண்களின் பார்வை தான்.

      மனம் இப்படி கொதித்துக் கொண்டு இருக்க, அடுத்து ஒரு ஆண் அங்கே வந்து உடம்பு முழுக்க லைட் அமைத்த கனமான துணியை உடுத்திக் கொண்டு வந்து, வித்தை காட்ட தொடங்கினார்.

          ஆடிக் கொண்டே, மாறி மாறி வந்த அந்த லைட்களை பார்க்க பார்க்க அவர் அதில் எவ்வளவு தேர்ந்தவர் என்று புரிந்தது. ஏனோ, இம்முறை அவள் கையை தட்டி அதை அங்கீகரித்தாள்.

          அடுத்து பதினெட்டு வயதுடைய பையன்மேல்சட்டை ஏதுமின்றி கையில் இரண்டு குச்சிகள் மட்டுமே கொண்டு வந்ததை பார்த்து, இவன் என்ன செய்ய போகிறான் என்று மனம் சற்று பதறியது.

         அவள் மனம் பதைத்தது போல், அவன் தீக்களை கொண்டு வித்தை காட்ட தொடங்கினான். அதில் அவளுக்கு பயமே அதிகமாக தெரிந்தது, அந்த சிறுவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.

       மொத்தத்தில், பாலைவனத்தில் இருந்த அந்த இரவு விருந்து அவளுக்கு ரசிக்கவில்லை. பக்கத்தில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை, அந்த வாடை வேறு அவளுக்கு ஓமட்டிக் கொண்டு வந்தது.

        அங்கே அமர்ந்து இருக்க முடியாமல், அவள் தம்பியிடம் சொல்லிவிட்டு நேராக வெளியே கட்டி இருந்த ரெஸ்ட் ரூம் விறைந்தாள். அன்று சாப்பிட்ட அனைத்தும், வாந்தி எடுத்து சுத்தம் செய்துவிட்டு வந்து வெளியே நின்று இருந்த அவர்கள் வேனை பார்த்து, அங்கே சென்றாள்.

        வேனை அப்பொழுது தான் ஒருவர் மூலம், இங்கே வரவழைத்து இருந்தான் faiq. காவ்யஹரிணியின், குடும்பத்தை அழைத்து செல்ல அவன் அதை வர செய்து இருந்தான்.

          மற்ற வண்டிகளை எல்லாம், அதற்குரிய ஆட்களை வரவழைத்து எடுத்து செல்ல கூறி இருந்தான். அவர்களும் எடுத்து சென்று இருந்தனர், இந்த வேனை இங்கே நிறுத்திவிட்டு.

          வேனில் அவன் மட்டும் இருப்பதை பார்த்து, அவனை முறைத்துவிட்டு உள்ளே அவளிடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து, அவளிடம் என்னவென்று கேட்டான்.

          அவ்வளவு தான் சிக்கிவிட்டான் என்று, மடை திறந்த வெள்ளமாக எல்லாவற்றையும் கொட்டி விட்டாள் அவனிடம்.

          “சாரி! இங்க இந்த மாதிரி சாப்பாடு தான் தருவாங்க. நாம போற வழியில் ஒரு இந்தியன் கஃபே இருக்கு, அங்க போயிட்டு அப்புறம் வேணும்னா ஹோட்டல் விடட்டுமாஎன்று கேட்டான்.

            அவன் கேட்டதே போதும் என்பது போல் இருந்தது அவளுக்கு, ஆகையால் ஒன்றும் வேண்டாம் நேராக ஹோட்டல் சென்றால் போதும் என்றாள்.

           “நீங்க சாப்பிடீங்களாஎன்று அவனிடம் கேட்டாள்.

           அவனுக்கோ, என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் தாய், ரசாக் அடுத்து, அவனை இப்படி கேட்க யாருமில்லை. முதல் முறையாக, எங்கு இருந்தோ வந்த ஒருத்தி, அதுவும் அவன் இந்த நாட்களில் அதிகம் யோசித்த ஒருத்தி, தன்னை பார்த்து இக்கேள்வியை கேட்டால், அவன் மலைக்காமல் என்ன செய்வான்.

         அவன் ஒன்றும் சொல்லாமல், ஏதோ தியானத்தில் இருப்பது போல், பார்வையை அவளிடத்தில் இருந்து திருப்பாமல் அப்படியே நின்று இருப்பதை பார்த்து, அவளுக்கு அவனிடம் விளையாட தோன்றியது.    

           அவன் அருகே வந்து, அவன் காதில் பே என்று கத்திவிட்டு ஓட எத்தனிக்க, அவன் அவளை பிடித்து இழுக்கவும், அவள் தடுமாறி அவன் மேலே விழுந்து அவனையும் சேர்த்து தள்ள, இருவரும் தடுமாறி பின் சீட்டில் விழுந்தனர்.

         ஒருவர் மீது ஒருவர் விழுந்து இருந்த நிலையை, உணர்ந்த இருவரும் அதிர்ந்தனர். அவசரமாக அவள், எழுந்து கொள்ள முயன்ற பொழுது, அவள் கால் தடுக்கி மீண்டும் அவன் மேலேயே விழுந்து இருந்தாள்.

        “மெதுவா பார்த்து எழுந்துக்க வேண்டியது தான, ஷப்பா என்ன கணம் கனக்குறஎன்று அவன் சிடுசிடுக்கவும், இவள் முறைத்துக் கொண்டு வேண்டுமென்றே, அவன் மேல் கைகளை அழுத்தமாக ஊன்றிக் கொண்டு எழுந்தாள்.

         அவள் அப்படி செய்வாள் என்று எண்ணிப் பார்க்காதவன், அவளின் செய்கையில் அதிர்ந்து போனான்.

        “சர்! இன்னும் எவ்வளவு நேரம் இப்படி படுத்துகிட்டு இருக்கிறதா இருக்கீங்க?” என்று புருவம் உயர்த்தி அவனை பார்த்து, நக்கலாக கேட்கவும் அவனுக்கு சுறுசுருவென்று கோபம் வந்தது.

        “எல்லாத்தையும் நீ பண்ணிட்டு, என்னை ஏன் முறைக்குற?” என்று பதிலுக்கு எகிறிக் கொண்டே எழுந்து நின்றான்.

           “ஹலோ! நான் என்ன பண்ணேன்?” என்று கூறி அவனை முறைத்தாள்.

            “என் காதில் கத்தினது யாராம்? பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு, என்னை ஏன் முறைக்குற?” என்று எகிறினான்.

        “சரி, சாரி! தெரியாம பண்ணிட்டேன்என்று கூறிவிட்டு அவளிடத்தில் சென்று அமர்ந்தாள்.

        “எனக்கு மதுரை போகணும் உன் கூட, எவ்வளவு வேணும்னாலும் பே பண்ண நான் ரெடி, எப்போ கூட்டிட்டு போக போற?” என்று அவன் பேச்சிய பேச்சில், அவளின் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.

         அதற்கேற்றாற் போல், எழுந்து வந்து அவனை கை நீட்டி அடித்துவிட்டாள்.

        “ராஸ்கல்! என்னை என்ன நினைச்ச? இப்படி பேச உனக்கு வெட்கமா இல்லைஎன்று அவனை திட்டி தீர்த்துவிட்டாள்.

        அவனோ, அவள் அடித்த பின் தான் அவள் தான் கூறியதை தப்பாக எடுத்துக் கொண்டாள் என்பதை உணர்ந்தான். சிறிது குறும்பு தலை தூக்க, அவளிடம் விளையாட எண்ணினான்.

          அவள் கன்னாபின்னாவென்று, அவனை திட்டி தீர்ப்பதில் குறியாக இருந்தாளே தவிர, அவன் அவள் அருகே விஷமத்துடன் வருவதை கவனிக்க தவறினாள்.

        அவன் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அவள் இடுப்பை சுற்றி கை போட்டு அவளை அருகில் இழுக்க, அதுவரை திட்டிக் கொண்டு இருந்தவள், அதிர்ச்சியில் வாயை மூடினாள்.

         அவ்வளவு அருகே அவனை பார்த்தவள், மூச்சு விடவும் மறந்தாள். அவனோ, அவள் கண்களை நேராக பார்த்து அவள் காதருகில் குனிந்து பேச தொடங்கினான்.

           “நீ நினைக்கிற மாதிரி, நான் ஒன்னும் உன்னை அதுக்கு கூப்பிடல. எனக்கு அந்த ஊரில் சில ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கு, அதுக்கான ஹெல்ப் தான் உன்னை கேட்டேன்”.

           “ஆனா, நீ வேற எதுவோ நினைச்சிட்ட போல, அந்த அளவுக்கு நீ எனக்கு ஒர்த்தா தெரியல பேபிஎன்று கூறி கண்ணில் சிரிப்போடு அவளை விடுத்தவனை, பார்த்து அவன் காலில் ஒரு மிதி மிதித்துவிட்டு, அங்கே அவளிடத்தில் சென்று அமர்ந்து விட்டாள்.

     வலியில் அவன் முணங்கிக் கொண்டே, முன் பக்கம் சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

        “ராட்சசி! இவ மட்டும் சும்மா வம்பு பண்ணுவாளாம், நம்ம வம்பு பண்ணா காலை மிதிப்பாளாம், என்ன நியாயம் இது?” என்று அவளை பார்த்து முறைத்துக் கொண்டே, மனதிற்குள் வறுத்து எடுத்தான்.

      அதற்குள், எல்லோரும் வர அவர்களை ஏற்றிக் கொண்டு நேராக ஓட்டல் வந்து சேர்ந்தான். அவளின் அண்ணன்களும், தம்பியும் நாளை சுற்றி பார்க்க போகும் இடத்தை பற்றி இவனிடம் விசாரித்து கொண்டு இருக்க, இவளோ அவனை முறைத்து விட்டு உள்ளே ஹோட்டலினுள் சென்று விட்டாள்.

          அவன் அவர்களிடம் சொல்லிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு நேராக ரசாக் அலுவலகம் சென்று அங்கே நிறுத்தினான்.

         “டேய்! நீ ஏன் டா ஓட்டிக்கிட்டு வர? டிரைவர் கிட்ட சொல்லி, இங்க நிப்பாட்ட சொல்லி இருக்கலாம் என்றவனை பார்த்து, சிரித்துக் கொண்டே கட்டி அணைத்துக் கொண்டான்.

       அவனின் இந்த செயலில், அவனை அதிர்ந்து போய் பார்த்தான் ரசாக். இப்படி மகிழ்ச்சியாக, அவன் இருந்தது அவன் அன்னை இருக்கும் பொழுது தான்.

          அதன் பின் ஒரு முறை, அவன் தந்தை அவனுக்கு கார் பரிசளித்த பொழுது மகிழ்ச்சியாக இருந்தான். அதன் பின் இன்று அதீத சந்தோஷத்துடன்அவனை இப்பொழுது தான் பார்க்கிறான் ரசாக்.

           “டேய்! இன்னும் மூணு நாள் நான் தான் இந்த பேமிலிக்கு கைடா இருக்க போறேன். நீ யாரையும் போட்டு, சொதப்பிடாத புரியுதா!” என்றவனை விசித்திரமாக பார்த்தான்.

         “டேய்! நீ தான ஆட்கள் கொஞ்சம் ப்ரீயாகிட்டா அவங்களை பார்த்துக்க சொன்ன முதல, இப்போ இப்படி சொல்லுற. என்ன டா ஆச்சு உனக்கு? போய் மசூதி ஹஜித் வாப்பா கிட்ட சொல்லி உனக்கு மந்திரிச்சு விடணும்என்று கூறியவனை கொலைவெறியோடு பார்த்தான்.

         “டேய்! ஒழுங்கா இப்போ நான் சொன்னதை மட்டும் செய் டா. என்னனு உனக்கு நான் ஒரு மூணு நாள் கழிச்சு சொல்லுறேன். யாரையும் மாத்தின, நீ என் கிட்ட அடி வாங்குவ பார்த்துக்கோஎன்று கூறிவிட்டு அவனின் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தான்.

         இதை எல்லாம் நினைத்து பார்த்தவன், நாளை துபாய் மாலில் அவளை சீண்டி பார்க்க என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு படுத்து உறங்கினான்.

        அவளோ, அந்த இரவிலும் கன்னங்கள் சிவப்பதை மறைக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தாள்.

        “டேய்! நாளைக்கு மட்டும் நீ என் கிட்ட வந்து பாரு, அப்படியே கண்ணு ரெண்டையும் நோண்டி, அதை காக்காவுக்கு போட்டுடுறேன்என்று மனதிற்குள் கருவிக் கொண்டு படுக்க முயல, அவளால் அது முடியவில்லை.

       அவன் முகம் மட்டுமே கண்ணுக்குள் தெரிந்து, அவளை  தூங்க விடாமல் இம்சை செய்தது. அவன் அங்கே நிம்மதியாக தூங்க, அவளுக்கு மீண்டும் தூங்கா இரவாக மாறியது.

          மறுநாள் அவள் கிளம்புவதற்கு, சற்று நேரம் பிடித்தது. காரணம் கண்ணை சுற்றி இருந்த கருவளையத்தை மறைக்க, அவள் படாதபாடு பட்டுவிட்டாள்.

          “என்னமா காவ்யா சரியா தூங்கலையா? இன்னைக்கு வேணும்னா ரெஸ்ட் எடுத்துக்கோ, நாங்க போயிட்டு வந்திடுறோம்என்று அவளின் அண்ணிமார்கள் அவளை கழட்டி விட நினைக்க, அவளோ பதில் பேசாமல் சென்றாள்.

             என்னதான், அவள் மெனக்கெட்டு இருந்தாலும் அந்த கண்களில் தெரிந்த சோர்வு அவளை காட்டிக் கொடுத்தது. எல்லோரும் கேட்கும் கேள்விக்கு, சிரித்தே மழுப்பி விட்டாள்.

           சரியாக பத்து மணிக்கு, அவன் வந்த பொழுது அவனை பார்த்து முடிந்த மட்டும் முறைத்தாள். அவளின் முறைப்பு ஏன் என்று தெரியாமல் இருந்தவன், அவளின் கண்களை உற்று கவனித்ததில் அவனுக்கு விஷயம் புரிந்தது.

        “அடடா! இதுக்கே உனக்கு தூக்கம் வரலையா? இன்னைக்கு அப்போ நீ தூங்கின மாதிரி தான், செம பிளான் ஓட வந்து இருக்கேன் பேபிஎன்று மனதிற்குள் குஷி அடைந்தான் faiq.

        அவளோ, அவனை எப்படி பழி வாங்க என்று பலத்த சிந்தனையில் இருந்தாள். மொத்தத்தில், இருவரும் அவர்களின் ஆட்டத்தை தொடங்கி விட்டனர்.

             இந்த இரு துருவங்களுக்குள், காதல் எப்பொழுது மலரும் என்று பலத்த சிந்தனையில் மன்மதன். அவர்களுக்குள் அம்பு விட்ட பின்னும், இன்னும் தெளியாமல் இருக்கும் அவர்களை பார்த்தால் அவரும் தான் என்ன செய்வார்.

          

தொடரும்..

 

 

 

         

 

      

error: Content is protected !!