varaaga 17

varaaga 17

இவர்கள் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் மற்ற மூன்று கம்பெனி ஆட்களும் வந்து விட…

அங்கிருப்பதில் ருத்ரா மட்டும் தான் பெண்ணாக அமர்ந்திருந்தாள்… அதிலும் எதிரில் அமர்ந்திருக்கும் கம்பெனியின் உதவியாளர் இவளை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தான்… அது வேறு அவளிற்கு சங்கடம் தருவதாக இருந்தது.

முகிலனும் அதனை கவனித்தான்… உள்ளுக்குள் எரிச்சல் எட்டி பார்த்ததோ… திரும்பி ருத்ராவை பார்க்க.. அப்போது தான் அவள் காலர் வைத்த வெள்ளை சுடிதார் அணிந்திருப்பதொடு நெற்றியில் குங்குமமும் வைக்கவில்லை என்பதை அவதனித்தான். கூடவே அந்த வெள்ளை உடை அவளை தேவதையாக காட்டியது.  

அதனால் எல்லாம் அவன் ருத்ரா மீது கோபப்பட்டு விடவில்லை… குங்குமம் கிடைத்திருக்காது என்றதோடு இயல்பாக எடுத்துக்கொண்டான்… அப்படியே வைத்தாலும் மரியாதையா பார்த்துட்டு தான் வேற வேலை பார்ப்பாங்க என்று ஒட்டு மொத்த ஆண்குலத்தையும் திட்டினான்.

இதற்கு முன்னால் அவன் இவ்வாறு வாழ்நாளில் நினைத்ததே இருக்கமாட்டான்… இப்பொது தான் காதலின் முதல் பாடமான பொறாமை மற்றும் உரிமையுணர்வில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தான் அவனையும் அறியாமல்…  

கடைசியில் வழக்கம் போல் டோக் டோக் என்று தன் ஹை ஹீல்ஸ் சப்திக்க… ஜீன்ஸ் மற்றும் டாப்பில் தனது உதவியாளருடன் வந்தாள் அவள்… நீங்க நினைப்பது சரி தான்… விகாஷினியே தான்… பார்ப்பதற்கு பதினெட்டு வயது பெண் போல் இருந்தாள்… ஆனால் அவளிற்கு இருபத்திஐந்து வயதிருக்கும்…

அனைவரையும் நோட்டம் விட்டே தன் இடத்திற்கு வந்தாள் விகாஷினி… அவள் பார்வை வட்டத்தில் முகிலன் முதுகுபுறம் மட்டுமே தெரிய… அவன் முகத்தை பார்க்க அவள் ஆர்வம் காட்டவே இல்லை. காட்டவே இல்லை என்பதை விட… அதற்கு அவசியம் இல்லை என்பது தான் சரியாக இருக்கும்… வந்ததும் அங்கிருக்கும் ஆட்கள் இவளை பார்க்க… இவளோ தனது பொன்னான நொடிகளை அவர்களை பார்த்து வீணடிக்காமல் தனது இடத்தில் அமர்ந்து, மடிகணினியை வைத்து பேச வேண்டிய விதத்தை மனதினுள் கோர்க்க ஆரம்பித்தாள்.  

முகிலன் இப்போது அவளை தான் கவனித்துக்கொண்டிருந்தான்… உதட்டோர ஏளன வளைவுடன்… இவள் மாறவே இல்லை… என்ற நினைவுடன்.

பின்னர் நினைவு வந்து எதிரில் இருக்கும் சைட்காரனை பார்க்க… அவன் இப்பொது விகாஷினியை பார்த்து பின் என்ன நினைத்தானோ… மீண்டும் ருத்ராவை தனது கண்களால் மொய்த்தான். முகிலனிற்கு இதயத்துடிப்பு ஏகபோகமாக எகிறியது…

அப்போது அந்த சைட்காரனின் அதிகாரி அவனை அழைத்து தொழில் பேச… அவனது கவனமும் அங்கு சென்றது.

அதன் பின்பு தான் முகிலனிற்கு மூச்சி இயல்பாக வந்தது…

சரியாக 10 மணிக்கு ஆப்பிள் கம்பெனி உயர் அதிகாரிகள் வர… முன்னுரையோடு முதல் கம்பெனியாக விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை ஆரம்பிக்குமாறு கூறினர்.

அதை கேட்டதும் விகாஷினி வழக்கமான மமதையோடு எழுந்து சென்றாள்… அவள் அந்த காணொளியை ஆரம்பித்ததும் அறையில் உள்ள விளக்குகள் அணைந்தது.

அதில் ருத்ராவின் அதிர்ச்சி கலந்த முகபாவனை மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் முகிலனிற்கு துல்லியமாக தெரிந்தது. அவன் தான் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் போட்டியில் இருக்கிறது என்று சொல்லவில்லையே..

அதனால் அவள் கையை அழுத்தி… யார் வந்தாலும் நாம நம்ம வேலைய தைரியமா, ஆத்மார்த்தமா செஞ்சா… தோல்வி நம்ம கிட்ட வர யோசிக்கும்… அதுவரதுக்குள்ள நாம் வெற்றி அடைந்துவிடலாம்… என்று முணுமுணுத்து பின் கையை எடுத்துக்கொண்டான்.

அதில் அவள் மனது பலம் பெற்றது என்றால் பொய்யில்லை… தங்கள் கம்பெனியின் முறைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

விகாஷினியும் சும்மா இல்லை… தன் ஒட்டுமொத்த திறமையையும் அதில் காட்டிக்கொண்டிருந்தாள்… ஆடம்பரம்… பிரமாண்டம்… என்ற சொற்கள் எல்லாம் சாதாரணம், அதையும் தாண்டிய வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றது அவளது பிளான்.

அடுத்தடுத்து அனைவரும் தங்கள் பிளானை வெற்றிகரமாக விளக்க… நான்காவதாக அபி கன்ஸ்ட்ரக்ஷன் வந்தது. அதுவரை மற்றவர்கள் கூறுவதை ஊன்றி கவனித்துக்கொண்டிருந்த விகாஷினி முகிலன் எழுந்ததும் அவனை பார்க்க…

அவளது அத்தனை நேர உறுதி, கம்பீரம் அனைத்தும் உள்ளுக்குள் வெடித்து சிதறியது… கூடவே அலை  அலையாய் பழைய நினைவுகளோடு “விகாஷி…” என்று காதலோடு குழையும் அந்த குரல் காதருகில் கேட்க…

இரண்டு வருடம் கடந்தும் அதன் தாக்கம் சிறிதும் குறையாததாய்… கண்களும் கலங்கியதோ… விளக்கை அப்போது அணைத்துவிட்டதால் இருட்டில் தெரியவில்லை…

கம்பெனி பற்றி விளக்கவுரையை முகிலன் முடித்து… அடுத்ததை எனது மனைவி மிசஸ் ருத்ரா விவரிப்பார்.. என்று கூறி அமர்ந்தான்.

மனைவி என்றதும் சைட்காரனிற்கு ஜெர்க் ஆகியது என்றால், விகாஷினிக்கோ ருத்ரா என்ற பெயர் மூளையில் எங்கோ குறுகுறுத்தது…

நியாயப்படி முகிலன் அப்படி சொல்ல தேவை இல்லை என்றாலும்… அந்த சைட்காரனையும் விகாஷினியையும் மனதில் வைத்தே அவ்வாறு சொன்னான்.

ருத்ராவும் மற்றவர்களுக்கு சளைத்தவள் இல்லை… அவள் பேசியதை பார்த்தவர்கள் முதல் முறை என்பதை சத்தியம் பண்ணினாலும் நம்ப மாட்டார்கள். முகிலன் சைட்காரனை மறந்தான்… விகாஷினியை மறந்தான்… சுற்றுப்புறம் மறந்தான்… இவ்வளவு ஏன் தன்னையே மறந்து அவளது பேச்சில் லயித்தான்… அவளில் லயித்தான் என்று சொல்ல வேண்டுமோ… ? தெரியவில்லை… 

அனைவரும் ஆப்பிள் கம்பெனிக்கு கட்டிடம் கட்டினார்கள் என்றால், இவள் ஆப்பிளையே கட்டிடமாக காமித்தாள்… அவர்களின் ப்ரித்யேக ஆப்பிள் சின்னத்தை கட்டிடமாக கொண்டு இரு பெரிய ஆப்பிளை எதிர் எதிரே நிறுத்தியதை போல் கட்டி… அதை இரண்டையும் நடுவில் நேர் கட்டிடம் கொண்டு இணைத்தாள்… பார்ப்பதற்கு ஆப்பிள் கட்டிடம் நடுவில் அந்தரங்கத்தில் ஒரு கட்டிடம் தொங்குவது போல் இருந்தது.

கீழே மரங்கள் மற்றும் மழை நீர் சேமிப்பு தொட்டியும் அமைத்து பூமிக்கும் சிறிது நன்மை பயக்குமாறு அமைத்திருந்தாள்.

அப்போதே விகாஷினிக்கு பொறி தட்டியது… ஒருவேளை.. இவள் நம்ம கிட்ட வேலை பார்த்த ருத்ராவா இருக்குமோ…? என்று…

ருத்ரா தனது பிளானை முடிக்கவும்அனைவரும் பிரமிப்பின் எல்லையில் இருந்தனர்அங்கிருப்பதில் இவள் மட்டுமே சுற்றுச்சூழலை சிறிதேனும் கணக்கில் கொண்டவளாக இருந்தாள். மேலும் இதுவரை உலகில் யாரும் செய்யாத வித்தியாசமான ஆப்பிள் கட்டிடத்தையும் மாதிரியில் கண் முன் நிறுத்தியிருந்தாள்.

பின் வேறு ஒரு கம்பெனியும் தனது பிளானை விளக்கி முடிக்க.. உயர் அதிகாரிகள் கலந்துரையாட தொடங்கினர்

பத்து நிமிடங்களில் முடிவெடுத்து

This contract will be given to Abi Construction from Tamil Nadu…

என்று முகிலன் ருத்ராவை பார்த்து கூறினார் ஒருவர். பின்னர் இன்னொருவர்.. மற்றவர்களை பார்த்து..

Better luck next time.. Thank you..

என்றதோடு முடித்துக்கொண்டார்.

அவர் கூறிய அடுத்த நொடி.. மற்றவர்கள் தங்கள் ஏமாற்றத்தை மறைத்து வாழ்த்து சொல்ல.. விகாஷினி முதல் ஆளாக வெளியேறியிருந்தாள்.. வெளியேறி காரில் ஏறுவதற்குள் தனது போனில் இருந்து

கார்முகிலன்

அபி கன்ஸ்ட்ரக்ஷன்

என்று யாரிற்கோ செய்தி அனுப்பி  அவனை குறித்த அனைத்து தகவல்களையும் கூடிய சீக்கிரம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டாள்.

தனது இடத்திற்கு சென்றதும் அவளிற்கு தற்போது அவர்கள் தங்கியுள்ள இடம் தெரியவந்தது…

மீட்டிங்கில் பேச வேண்டியது கையெழுத்து போட வேண்டியது அனைத்தையும் முடித்து புதுமண தம்பதிகள் கிளம்ப மதியம் ஆகியது…

டிரைவரோடு காரில் பயணம் செய்வது முகிலனுக்கு அசௌகாரியமாக இருக்கவே… அங்கு இருக்கும் வரை ஓட்டவென்று தனி காரை வாடகைக்கு வாங்கினான்.  

நேரே காலையில் சாப்பிட்ட அதே ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் பின் தனது காரில் சூர்யலங்கா நோக்கி புறப்பட்டனர்…

போகும் வழியில் துர்க்கை அம்மன் கோவில் தெரிய…

“ருத்ரா… நல்ல விஷயம் நடந்துருக்கு… கோவிலுக்கு போயிட்டு போலாமா…?”

என்றான்.

அவளும் சம்மதிக்க… இருவரும் கோவிலை அடைந்தனர்… முகிலன் மனம் ஏனோ மிக மிக திருப்தியாக இருந்தது… ருத்ரா அம்மனுக்கு நன்றி கூறி, தாங்கள் இந்த காண்ட்ராக்ட்டை நல்ல படியாக முடிக்கணும் என்றும் வேண்டிக்கொண்டாள்.

பூசாரி குங்குமம் தர… அதை அவள் நெற்றியிலும், தலை  வகிட்டிலும் வைத்தாள்… அதனை முகிலன் விழிகள் ரசனையோடு படம்பிடிக்க தவறவில்லை.

காரில் ஏறியதும் காரை கிளப்பாமல் முகிலன் எதையோ யோசிக்க… ருத்ரா…

“காட்டேஜ் கிளம்பலையா…?”

என்று கேட்டாள்.

அதில் இவள் புறம் திரும்பியவன்…

“இல்ல எங்க அம்மா குங்குமத்தை உன்னை மாதிரி நெற்றில, வகிட்டுல தென் தாலிலயும் வைப்பாங்க… நீ ஏன் வைக்கல…?”

என்றானே பார்க்கலாம். ( அடேய்… நீ ரொம்ப பண்ற… இதெல்லாம் எப்போ டா பார்த்த.. )

ருத்ரா ஒன்றும் பேசாமல் தன் தாலியை எடுத்து பேப்பரில் சுற்றிய குங்குமத்தை எடுத்து வைத்து… முகிலனை பார்க்காமல் வெளியே திரும்பி கொண்டாள்.

அவனும் உள்ளத்தில் உல்லாசத்துடனும்… உதட்டில் உற்சாக சிரிப்புடனும் காரை சூர்யலங்கா நோக்கி விரட்டினான்… 

ருத்ராவிற்கே அவன் நடவடிக்கை பார்த்தே தெரிந்தது… அவன் இன்று மிக சந்தோசமாக இருக்கிறான் என…

மாலை நான்கு மணி அளவில் இருவரும் தங்கள் அழகிய இருப்பிடத்தை அடைந்தனர்… சூர்ய உதயம் அழகென்றால்… மாலை மலைகளுக்கிடையில் சூர்யன்  மறையும் காட்சி மனதை கொள்ளை கொண்டது… மனது சந்தோசமாக இருக்கையில் காணும் யாவையும் கண்ணுக்கு விருந்தானதில் வியப்பேது…?

இருவரும் அமைதியாக உள்ளே நுழைந்தனர்… ருத்ரா அறையினுள் செல்ல போக.. அவளது கையை பிடித்து தடுத்தான் முகிலன்…

ருத்ரா கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்க்க…

“ருத்ரா… வித் யுவர் பெர்மிஷன்…”

என்று கூறி அவளின் பெர்மிஷன் இன்றியே அவளை இறுக்கி அணைத்திருந்தான்…

அவனது வாய்…

“தேங்க்ஸ்… தேங்க் யு சோ மச்…”

என்று திரும்ப திரும்ப உச்சரித்தது.

அவன் அணைத்ததும் அதிர்ந்த ருத்ரா… பின் அவன் கூறியதை கேட்டதும் தான் சிறிது சுயநினைவு அடைந்தாள்… சிறு குழந்தைக்கு மிகப்பிடித்ததை வாங்கி தந்தால் மகிழ்ச்சியில் தன்னை மறந்து அணைத்துக்கொள்ளுமே… அது போல் இருந்தது அவன் அணைப்பு.

ஆனால் அவன் என்ன சிறு குழந்தையா…? வளர்ந்த  ஆண்மகன் அல்லவா… அதனால் இயல்பான பெண்மையின் கூச்சம் ருத்ராவிற்கு தலை தூக்க… நெளிய ஆரம்பித்தாள்.

அதை உணர்ந்தவன் அவளை விட்டு…

“சாரி…” என்றவாறு விலகினான்.

அவன் விட்டதும் அவள் ஒன்றும் சொல்லாமல்… அவனை  நிமிர்ந்தும் பார்க்காமல் உள்ளே ஓடி விட்டாள்.

அவள் சென்றதும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கண்மூடி அமர்ந்துவிட்டான். இரண்டு வருட போராட்டம் இன்று முடிவு வந்த ஆயாசமோ…?

ருத்ரா ப்ரெஷ் அப் செய்து வெளியே வர… முகிலனும் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

வந்தவன் முதல் வேலையாக தன் கம்பெனிக்கு மெயில் மூலம் இந்த காண்ட்ராக்ட் பற்றிய செய்திகளை முக்கியமானவர்களுக்கு தெரிவித்து… வேலையை தொடங்க ஆட்கள் மற்றும் பொருட்கள் பற்றிய குறிப்புகளை அந்தந்த துறைக்கு அனுப்ப ஆராம்பித்தான்.     

இரவு நெருங்கும் வேளையில் ருத்ரா தன் வீட்டினர் அனைவரும் வீட்டிற்கு வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் முகிலனிடம் சென்று…

“நான் வீட்டிற்கு போன் பேச போறேன்” என்றாள் எங்கேயோ பார்த்துக்கொண்டு.

அவனும்

“பேசு..”

என்றதோடு தன் வேலையில் மூழ்க…

“எப்போ கோயம்புத்தூர் வருவோம் என்று கேட்பாங்க…”

என்று கூறி முடிப்பதற்குள்,

“நாளை காலை எட்டு மணிக்கு பிளைட்..” என்றான்.

“சரி… இப்போ நான் கொஞ்ச நேரம் கடற்கரையோரம் நடந்துட்டு வரேன்”

என்று கூறி அவனது பதிலை கேட்கும் முன் சென்றுவிட்டாள்.

அவன் அருகில் இருந்தாலே மூச்சு முட்டுவது போல் இருப்பதால் இந்த ஓட்டம்.

இங்கு வந்ததில் இருந்து இப்போது தான் கடற்கரை அருகில் செல்கிறாள். கடல் அலைகளில் கால் நனைத்தவாறு வீட்டிற்கு போன் செய்து தங்களது வெற்றிச் செய்தியை அனைவரிடமும் கூறி அளாவினாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் வேலையை முடித்தவன், வாயிற்கதவை திறந்து ருத்ராவை தேட…

அவளோ சற்று தூரத்தில் அலைபேசியில் உறவுகளோடும், கால்களில் அலைகளோடும் உறவாடிக்கொண்டிருந்தாள்.

அப்படியே வேடிக்கை பார்த்தவாறு பக்கவாட்டில் இருக்கும் வரிசையான காட்டேஜில் கவனத்தை திருப்ப…

அங்கிருந்து நான்காவது காட்டேஜில், தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் கையை விட்டவாறு, வெளியே இருக்கும் தடுப்பு சுவரில் சற்று சாய்ந்தவாக்கில் அமர்ந்து… இவனையே வைத்த கண் வாங்காமல் வாங்காமல் அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் விகாஷினி.   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!