Dhuruvam-8

Dhuruvam-8

துருவம் – 8

          துபாய் மாலில் aquarium விசிட் வந்து இருந்தார்கள் மொத்த குடும்பமும். ஆம் காவ்யஹரிணி மொத்த குடும்பமும், தாத்தா, பாட்டி முதற்கொண்டு.

            எல்லோரையும் பிடித்து இழுத்து வந்து இருந்தாள், காவ்யஹரிணி. அவளால் இன்று, அவளின் அண்ணிகளை சமாளிக்க முடியும் போல் தோன்றவில்லை.

           காலையில் இருந்து, அவளின் அண்ணிகள் அவளை பார்த்த பார்வை அப்படி. என்றும் இல்லாமல், இன்று அவளின் கருவளையத்தை மறைக்க, அவள் சிறிது தூக்கலாக foundation போட்டது, இப்படி மாட்டி விடும் என்று அவள் நினைக்கவில்லை.

             “உனக்கு இது தேவையா ரிகா! பாரு, எப்படி பார்க்கிறாங்க ரெண்டு பேரும். இதுக்கு எல்லாம் காரணமானவனை சும்மா விடுறதா, இரு டா இன்னைக்கு உனக்கு ஒரு பாடம் எடுக்கிறேன்என்று மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தாள்.

          “இப்போ என்ன செய்றது? அவனை வேற கவனிக்கணும், இந்த அண்ணிங்க ரெண்டு பேரும் நம்மளை கவனிச்சிக்கிட்டு இருந்தா முடியுமா?”.

             “இதுக்கு ஒரே வழி தான் இருக்கு, மொத்த குடும்பத்தையும் அங்கே பேக் பண்ணிட வேண்டியது தான், வேற வழியே இல்லைஎன்று முடிவெடுத்தவள், உடனே அதை செயலாற்ற, அவளின் தாத்தா முன் போய் நின்றாள்.

            “என்ன மா இது! இப்படி திடுத்திடுப்புன்னு எங்களையும் கூப்பிடுற, உங்க அம்மா, பெரிம்மா எல்லாம் இங்க இருக்கிற கோவில்களுக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க”.

           “நாங்களும் போறதா பிளான் போட்டோம், நீ இப்படி திடீர்னு சொன்னா என்னமா அர்த்தம்?” என்று கூறிக் கொண்டே அவளை கூர்ந்து பார்த்தார்.

          அவளோ, தலையை குனிந்து கொண்டாள். அவள் தாத்தாவிடம், அவள் இதுவரை எதையும் மறைத்ததில்லை. இப்பொழுது இதை பற்றி எப்படி சொல்வது என்று தெரியாமலும், குற்ற குறுகுறுப்பிலும் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

           இதுவரை பேத்தி, தப்பு செய்து இருந்தாலும் அதை தெளிவாக முகம் நிமிர்ந்து தான் சொல்லி இருக்கிறாள் என்பதை அறிவார். இப்பொழுது, தலை குனிந்து சொல்ல முடியாமல் தவிக்கும் அவளை, இப்பொழுது அவர் குருகுருவென்று பார்த்தார்.

        உண்மையை மட்டுமே இதுவரை தாத்தாவிடம், அவள் சொல்லி வந்ததால் இப்பொழுதும் மறைக்காமல் faiqயுடனான யுத்தத்தையும், அவள் மனதில் இது குறித்து வரும் தடுமாற்றத்தையும், ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

          “அச்சோ! பேத்தி பெரிய சிக்கல் மாட்டிக்கிட்டா போலயே! ஹ்ம்ம் இதுல இருந்து வெளியே வருவது, கொஞ்சம் கஷ்டம் தான். சுழலுக்குள் மாட்டிக்கிட்டு, யார் வெளியே வந்து இருக்கா?”.

         “எல்லோரும் அதுல மாட்டிக்கிட்டு, அதுலையே தான நீச்சல் அடிக்கிறாங்க. சிலருக்கு தப்பிக்க சான்ஸ் கிடைக்கும், சிலர் அது என்னனு தெரியாம சிக்கி சின்னாபின்னமாகி போவாங்க. ஒரு சிலர் மட்டும் தான், அந்த சுழல் புரிஞ்சு அதுலையே கரை சேர்வாங்க”.

          “இதுல இவ,  இப்படி மாட்டிகிட்டது கூட தெரியாம இருக்கா. இப்போ மாட்டிகிட்டது தப்பு இல்லை, ஆனா வேற ஒரு நாட்டுகாரன், வேற மொழி, வேற மதம்ன்னு இவளுக்கு அப்படியே எதிர்பதமா போய் மாட்டிக்கிட்டு இருக்கா”.

          “முதல, இவ கூட போய் அது யாருன்னு தெரிஞ்சிக்குவோம். அவனை நாம இங்க இருக்கிற நாட்கள் வரை, அவன் எப்படி என்னனு தெரிஞ்சிக்கலாம்என்று முடிவெடுத்தவர், பேத்தியிடம் வருவதாக கூறினார்.

           வண்டியில் ஏறியதில் இருந்து, தாத்தா faiqக்கை அவன் அறியாமல் அவனை கவனித்துக் கொண்டு வந்தார். அவனோ, இப்பொழுது எங்கு செல்ல இருக்கிறோம் என்பதை பற்றி, விரிவாக கூறிவிட்டு அவனிடத்தில் அமர்ந்து கொண்டான்.

       அவன் எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், பார்வையோ அவ்வப்பொழுது காவ்யஹரிணியை தொட்டு மீன்டதை கண்டு கொண்டார் தாத்தா.

            “இவனுக்கும் ஆசை இருக்கு போலயே! ஆனா அவனை பத்தி ஒன்னும் அவளுக்கும் தெரியல, இவனுக்கும் அவளை பத்தி தெரியல”.

                “வெறும் பார்வை மட்டும் பார்த்துகிட்டு, சண்டை போட்டுக்கிட்டு இருக்குதுங்க போல. இதுல பெயர் கூட தெரியல, ரெண்டுக்கும். இந்த காலத்து பிள்ளைங்களோட, ஷப்பா முடியலஎன்று சலித்துக் கொண்டார்.

          அவனுக்கு தமிழ் தெரியாது, என்பதை பேத்தி சொல்லி இருந்தாள். அதுவும் இருவரும், ஆங்கிலத்தில் தான் சண்டை போட்டு இருக்கின்றனர், என்று அவள் கூறியதில் தான் விஷயம் அவளுக்கே புரிந்தது, என்று சொல்லவும் தலையில் அடித்துக் கொண்டார் மானசீகமாக.

           வண்டியில் எத்தனையோ பேர் இருக்க, அவர் பேத்தியை அருகில் அழைத்து அவனிடம் பெயர் என்னவென்று கேட்குமாறு கூறவும், அவள் திகைத்தாள்.

        “தாத்தா! என்னது இது? சும்மாவே அண்ணிங்க என்னை எப்படி எல்லாம் மட்டம் தட்டலாம்ன்னு பார்க்கிறாங்க, நீங்க அவங்களுக்கு அப்படியே தட்ட சான்ஸ் கொடுகிறீங்கஎன்று சலித்துக் கொண்டே, தாத்தாவை எச்சரித்தாள்.

          அவரோ, அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீ தான் கேட்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். வேறுவழியில்லாமல், அவள் அவனிடம் அவன் பெயரை கேட்டாள்.

           அவனுக்கு புரிந்தது, அவளின் தாத்தா கேட்க சொன்னதால் மட்டுமே தன்னிடம் கேட்கிறாள் என்று. இல்லையென்றால், தன்னை பற்றி அறிய எந்த முயற்சியும் செய்து இருக்க மாட்டாள் என்று.

           அவள் மட்டும் தனியாக இருந்தால், அவளை கவனிக்கும் விதமே வேறு. இப்பொழுது அவளின் மொத்த குடும்பமும் இருப்பதால், அடக்கி வாசித்தான்.

          “என்னுடைய பெயர் முஹமத் faiq, உங்கள் பெயர் என்ன?” என்று அவள் தாத்தாவின் முன்னிலையில் அவளிடம் கேட்டான்.

             இப்பொழுது கையை நெஞ்சில் வைக்காத குறையாக, அவனின் கேள்வியில் அதிர்ந்தாள். தாத்தாவிற்கு, ஆங்கிலம் புரியுமே தவிர சரியாக பேச வராது. ஆகையால் தான் பிசினஸ் மீட்டிங்கில், அவர் தன்னுடைய மகனை அழைத்து செல்வது அப்பொழுது.

          அதுவும், இருபது வயதில் அழைத்து செல்ல துவங்கினார் மூத்த மகன் ஸ்ரீதரனை. அதன் பின், அவருக்கு தொழில் சூட்சமங்களை கற்றுக் கொடுக்கவும், பிடித்து போய் அப்பொழுதே கல்லூரி முடித்து, தொழிலை பார்க்க தொடங்கினார்.

              அவர் தொழிலை கையில் எடுக்கவும், அவரின் புத்திக்கூர்மை கண்டு, இனி மகன் பார்த்துக் கொள்வான் என்று அவ்வப்பொழுது நடக்கும் விஷயங்களை கேட்டுக் தெரிந்து கொள்வதோடு நிறுத்திக் கொண்டார்.

         அதன் பின், இரண்டாவது மகன் கிரிதரன் மேலும் பல தொழிலை விரிவாக்க சில யோசனைகளை கூறி, அதை செயல்படுத்தி வெற்றி காணவும், இனி பிள்ளைகள் பார்த்துக் கொள்வர் என்று, அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் விலகிக் கொண்டார்.

        மகள் சரண்யாவுக்கு, மகன் தொழிலில் இறங்குவதற்கு முன்பே வரன் பார்த்து, திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தி முடித்து இருந்தார். மூத்தது மகள் பிறக்கவும், அவருக்கு வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.

       ஆகையால், மாப்பிள்ளை தேடும் பொழுது கூட பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தார். அதன் பின் மகன்களுக்கு, தேடும் பொழுது அவர்களின் குணத்திற்கு ஏற்ற குணவதியை தேடிக் கொடுத்தார்.

       மருமகள்களை போல் நல்ல குணவதியை, பேரன்களுக்கு அவர் தேட நினைக்க, பேரன்களே தங்களுக்கு இணையை தேடி கண்டுபிடித்து, தாத்தாவிடம் கொடுத்தனர்.

      இந்த காலத்து பிள்ளைகள், அவ்வாறு இருப்பது ஒன்றும் தப்பில்லை என்று எண்ணியவர் குடும்பத்தை விசாரித்தார். கட்டுக்கோப்பான குடும்பம், அவர்களுக்கு ஏற்ற விதத்தில் இருக்கவும், உடனே சரி என்றார்.

      ஆனால், பெற்றவர்கள் போல் பிள்ளைகள் இல்லை என்று அவர்கள் வந்த ஒரு மாதத்திலே தெரிந்தது. பேரன்கள் பாடு இனி, என்று விட்டு விட்டார்.

       ஆனால், அவர்கள் காவ்யஹரிணியை பந்தாடும் பொழுது, அவரால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. உடனே அவர்களின் வீட்டிற்கு தான், இந்த தகவல் சென்றது.

          அவர்களின் தாய்மார்கள், கண்டிப்புக்கு பெயர் போனவர்கள். தப்பு செய்தவர்களை அவ்வளவு எளிதில், மன்னிக்க மாட்டார்கள் அது பிள்ளைகளே ஆனாலும்.

        ஆகையால் தான், அன்று அவர்களே தாத்தாவிடம்  அவர்களை தனியே அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். அதுவும் பக்கத்திலே வைத்துக் கொண்டு, கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த யோசனையை அவர்கள் தான் கூறினர்.

          இதை அறிந்த மகள்கள் இருவரும் தயாதக்கா, என்று குதித்தனர். அவர்களை ஒரே பார்வையில் அடக்கிவிட்டு சென்றனர், அவர்களின் தாய்மார்கள் இருவரும்.

        இப்பொழுது, பேத்தி வேறு மொழி, வேறு மதம், வேறு நாட்டுகாரன் மேல் ஈர்ப்பு இருப்பதை அறியவும், அவர் உடனே களத்தில் குதித்து விட்டார்.

             “என்னமா, உன் பெயரை தான கேட்குறார், சொல்லு மாஎன்று அவன் கேட்டதை புரிந்து கொண்டு, பேத்தியை அவனிடம் பேச வைக்க முயன்றார்.

            தாத்தாவின் சொல்லை இதுவரை மீறியது இல்லை என்பதால், அவனிடம் தன் பெயரை கூறினாள். முகத்தில் குறும்பு கூத்தாட, அவளை வம்பு வளர்க்க நினைத்தான் அப்பொழுது.

         “ அப்போ உங்க பெயர் காவி இல்லையா, அப்புறம் ஏன் உங்க தம்பி அப்படி கூப்பிட்டான்என்று ஒன்றும் தெரியாத நல்லவன் போல் கேட்டான்.

           அவன் அப்படி கேட்டதில், எல்லோருக்கும் சிரிப்பு எட்டி பார்த்தது. அவளோ, அவனை விட்டு தம்பியை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

           Faiq, இப்படி கேட்பதற்கு காரணம் இருந்தது. அவள் பெயரை காவி என்று, அவள் தம்பி அழைக்கவும் அவன் முதல் வேலையாக கூகிள் சென்று அதற்கு அர்த்தம் தேடியது தான்.

            அவனின் நேரம், அவனுக்கு காவி உடைகளை பற்றி அது விளக்கம் அளிக்கவும், அவன் அதை பார்த்து முதலில் அதிர்ந்தான். அதன் பின் தான் சற்று யோசித்து பார்த்ததில், அவன் கிண்டல் செய்கிறான் அவளை என்று புரிந்தது.

          இப்பொழுது, அவளின் பெயரை தெரிந்து கொண்ட பின், நிச்சயம் அவளை வெறுப்பேத்துவதற்கு தான் அவன் அவ்வாறு கூறுகிறான் என்று தெரிந்த பின், அதை உடனே செயலாற்றி விட்டான்.

           அவனை முறைத்துவிட்டு, பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள். அவனோ, வெற்றிகரமாக அவளை கடுப்படித்ததில் சந்தோஷம் அடைந்தான்.

          “அது சரி, இவனுக்கு அவளை எப்படி சமளிக்கன்னு தெரியும் போல. பையனும், நல்லா தான் இருக்கான், ஆனா நம்ம ஊர்காரனா இருந்து இருக்கலாம்என்று எண்ணிக் கொண்டே பெருமூச்சு விட்டார் தாத்தா.

         அதற்குள் துபாய் மால் வரவும், எல்லோரும் இறங்க தொடங்கினர். அவன் கண்களோ, இவளை மொய்க்க, அவள் இவனை கண்டு கொள்ளாமல் தாயுடன் சென்றாள்.

          துபாய் மாலில் ஷாப்பிங் செய்யலாம், விண்டோ ஷாப்பிங். அந்த அளவிற்கு ஏகப்பட்ட கடைகள் அங்கே இருக்கின்றது, ஆனால் அவர்கள் இங்கே வந்தது கடலில் வாழும் சில அரிய வகை மீன்களை காண அல்லவோ.

          உலகிலே, மிக பெரிய aquarium என்று பெயர் பெற்ற இடம் அல்லவா இது. ஒவ்வொன்றையும் பார்க்க, பார்க்க அவ்வளவு அழகு.

            மிகப்பெரிய aquarium என்பதால், நடந்து கொண்டே இருப்பது வயதானவர்களுக்கு ஒத்துக் கொள்ளுமோ என்று சந்தேகம் இருந்தது, அவளின் அண்ணன்களுக்கு.

          “தாத்தா, ரொம்ப நேரம் நடக்கிற மாதிரி இருக்கும், உங்களால முடியுமா?” என்று கேட்டனர்.

        “டேய்! இது எல்லாம் இப்போ பார்க்காம, நாங்க எப்போ பார்க்கிறது? அது எல்லாம் எங்களுக்கு ஒன்னும் இல்லை, நாங்க சந்தோஷமா எல்லாம் பார்க்கிறோம்என்று கூறி அதற்கு முற்றுபுள்ளி வைத்தார்.

         ஒவ்வொரு உயிரினம் பற்றியும், faiq விளக்கம் கொடுக்க அதை எல்லாம் ரிகா, அண்ணன் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளக்கம் கூறிக் கொண்டு வந்தாள்.

           மேலே முதலை பெரியது ஒன்றும், தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் பென்குவின் வகைகளும் இருக்கவும், பெரியவர்கள் லிஃட்டில் ஏறி வந்தனர்.

       மற்றவர்கள் எல்லாம், எஸ்கலேட்டார் வழியாக வருவதாக கூறி அதில் ஏறினார்கள். இவளுக்கு பின் புறமாக தான் faiq, நின்று கொண்டு இருந்தான்.

            “மிஸ் காவி! நீங்க எப்போவும் இப்படியா! இல்லை இப்போ தான் இப்படியா?” என்று அவன் கேள்வியில் புரியாமல் விழித்தாலும், அவன் தன்னை அழைத்த விதத்திற்கு அவனை முறைத்தாள்.

         “இன்னொரு தடவை காவின்னு கூப்பிட்டு பாரு, அப்படியே அந்த பீங்கான் ஜாடியை எடுத்து, உன் மண்டையில் உடைக்கிறேன்என்று அவனிடம் கத்திவிட்டு எஸ்கலேட்டாரில் வைக்கும் பொழுது, தடுமாறினாள்.

        அவளின் தடுமாற்றத்தை பார்த்து, அவன் பின்புறமாக நின்று இருந்ததால், அவள் விழாமல் இருக்கா சற்று அனைத்து பிடித்தான். அதில் அவளுக்கு பாதுகாப்பு உணர்வு தோன்றினாலும், அவன் மேல் ஏற்கனவே இருந்த கோபத்தில், வெறும் நன்றி உரைத்துவிட்டு, முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.

          அவளின் கோபம் எதனால் என்று புரிந்தாலும், அவளை இப்படி சீண்டிக் கொண்டே இருப்பது, ஏனோ பிடித்து இருந்தது அவனுக்கு.

         அடுத்து முதலைக்கு சாப்பிட உணவு, கொடுப்பதை காண அங்கே ஒரு கூட்டமே இருந்தது. அவர்கள் மத்தியில் பெரியவர்களுக்கு பார்க்க, சற்று சிரமமாக இருந்தது.

        ஆகையால், இவன் அங்கு உள்ள பொருப்பாளரிடம் என்ன சொன்னனோ, எல்லோருக்கும் தெரியும்படி அந்த பொறுப்பாளர், அவர்களை விலக்கி நிறுத்தினான்.

         அவன் மேல் கோபம் இருந்தாலும், பெரியவர்களை அவன் பார்த்துக் கொண்ட பாங்கு அவளுக்கு பிடித்து இருந்தது. இம்முறை விதவிதமாக செல்பி எடுத்துக் கொண்டு இருந்தாலும், அவ்வப்பொழுது தம்பியையும் எடுக்க கூறினாள்.

        அவனும், அவளின் கைபேசியில் போட்டோ எடுத்து தள்ளிவிட்டான். முதலில் எல்லாம் தர்செயலாக போட்டோவில் விழுபவன், இப்பொழுது அவள் எடுக்க தொடங்கினால் உடனே அங்கு வேலை இருப்பது போல் வந்து, அதில் தானும் இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.

          முதலை குளத்தை பார்த்துவிட்டு, அடுத்ததாக சிறியவர்கள் பயணம் செய்ய, ஒரு சிறிய submarine விட்டு இருந்தனர். தண்ணீருக்கு அடியில் வாழும் மீன்களை, அதில் இருந்து பார்க்கும்படி செய்து இருந்தார்கள்.

        பிள்ளைகளோடு, பிள்ளையாக அவளும் faiqயும் நின்று இருந்தார்கள். இதுவும், தாத்தாவின் உத்தரவுப்படி தான் இங்கே அவள் அவனுடன் இருப்பது.

        ஒரு பெரிய submarine ஒன்று வரவும், அதில் எல்லோரும் ஏறிக்கொண்டனர். இது ஒரு புது அனுபவமாக இருக்கவும், பிள்ளைகளோடு அவளும் ரசித்தாள்.

       அவனோ, அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் அந்த மெல்லிய வெளிச்சத்தில். ஒரு மீன் அதில் சற்று வித்தியாசமாக இருக்கவும், அதை பற்றி கேட்க அவள் அவனை பார்க்க, அவன் அவளை பார்த்த பார்வையில் அவளுக்கு குளிர் எடுத்தது.

         “இவன் ஏன் இப்படி பார்த்து வைக்கிறான், சரியில்லையே!” என்று எண்ணிக் கொண்டு, அவனிடம் கேட்காமல் திரும்ப நினைக்க, அவன் ஒரு உந்துதலில், அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

          அதிர்ச்சியில் அவள் கத்த நினைக்க, அவளால் அது முடியவில்லை. காரணம், அவள் வாயை அவன் அடைத்து இருந்தான் அவனின் கை கொண்டு.

         “உங்க தாத்தா கிட்ட, மதுரைக்கு நீ என்னை கூட்டிட்டு போக அனுமதி கேட்க போறேன். ஒழுங்கா என் கூட வந்து, எனக்கு வேண்டிய விபரம் கொடுக்கிற புரியுதா!” என்று இந்த முறை அவன் சற்று சீரியசாக கூறவும், அவளும் பொறுமையாக பதில் கூற தொடங்கினாள்.

         “பாருங்க மிஸ்டர் fake!” எனவும் அவன் முறைதான். அவளோ, எனக்கும் இப்படி தான டா இருக்கும், என்னை நீ காவின்னு கூப்பிடும் பொழுது, என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள்.

            “எனக்கு இங்க அரசு அருங்காட்சியம் ஒரு வருஷ ஒப்பந்தம் போட்டு, வேளையில் சேர வந்து இருக்கேன். இங்க வேறு சில வேலையும் எனக்கு இருக்கு, அதனால தாத்தா கிட்ட நீங்க ஹெல்ப் கேட்டா, அவங்களே உங்களுக்கு எல்லா ஏற்பாடும் செய்து தருவாங்க, என்னை விட்டுடுங்கஎன்று அவள் கொடுத்த பதிலில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.

        “என்னது! இங்க தான் வேலை செய்ய போறாளா? நான் கூட ஏதாவது பியூட்டி ஷாப், அப்படி வேலை செய்ய போறா போல நினைச்சேன்”.

          “ஓகே! இத்தனை நாள் பொறுத்தாச்சு, இனி கொஞ்ச நாள் பொறுக்கலாம். அதுவரை, மிஸ் காவி கூட கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டான்.

          அதற்குள், அவர்கள் இறங்க வேண்டிய இடம் வரவும் அவர்கள் இறங்கி கொண்டனர். அதன் பிறகு, எல்லோரையும் அழைத்துக் கொண்டு, அங்கே மாலில் ஒரு இந்திய உணவகத்திற்கு அழைத்து சென்றான் faiq.

        அங்கே மதிய உணவை உண்டு முடிக்கவும், சற்று களைப்பு தீர அங்கே இருந்த மசாஜ் குஷன் சோபாவில், அவள் அமர வைத்துவிட்டு குட்டிசை அழைத்துக் கொண்டு விண்டோ ஷாப்பிங் செய்ய தொடங்கினாள்.

           இந்த முறை, மனோவுடன் நட்பு பாராட்டி அவனுடன் சேர்ந்து அவளை கலாய்க்க தொடங்கினான். அதில் அவளுக்கு கோபம் வந்தாலும், அப்பொழுது ஏதும் காட்டவில்லை அவள்.

          அதன் பின் மாலை நேரம் நெருங்க, அவன் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றான். அது அங்கு இருந்து, பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு மாலுக்கு செல்லக் கூடியது.

          அவர்கள் இப்பொழுது அங்கே சென்று பார்க்க போகிறது, உயரமான புர்ஜ் கலீபாவை. முதல் லிஃட்டில் முதலில் 85 மாடி வரை சென்று, அதன் பின் வேறு லிஃட்டில் 135ஆம் மாடி வரை செல்ல வேண்டும்.

          நிமிடத்தில் செல்லும் அந்த லிஃட்டில், வயதானவர்களால் அவ்வளவு எளிதாக செல்ல முடியாது. ஆகையால் அவர்களை வெளியே சோபாவில் அமர வைத்துவிட்டு, அங்கே அடுத்து நடக்கவிருக்கும் வாட்டர் fountain ஷோ பார்க்க உட்கார வைத்துவிட்டு, இவர்களை அழைத்து சென்றான்.

            லிஃட்டில், அந்த நெருக்கடியில் அவள் கிட்டத்தட்ட அவன் மேல் சாய்ந்த நிலையில் தான் வர வேண்டி இருந்தது. அதில் அவளுக்கு, மூச்சு முட்டுவது போல் இருந்தாலும், ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வை அவனிடம் அவள் உணர்ந்தாள்.

            மேலே வந்த பின், அங்கு இருந்தே fountain ஷோவை ரசித்தனர். தண்ணீர் ஆடும் அழகை பார்த்து, மெய் மறந்து நின்றவளை, ரசித்துக் கொண்டு நின்றான் faiq.

              இதுவரை கவனத்தில் இல்லாமல் இருந்த, இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம், இப்பொழுது அவளின் இரண்டு அண்ணிகளின் கண்ணில் பட்டு, கருத்திலும் பதிந்தது.

         இதை வைத்து அவர்கள் ஒரு திட்டம் தீட்ட, விதி வேறு ஒரு திட்டம் போட்டு வைத்து காத்து இருந்தது.

 

தொடரும்

       

      

error: Content is protected !!