Dhuruvam-9

Dhuruvam-9

துருவம் 9

       ஹோட்டலுக்கு திரும்பிய எல்லோரும், அவரவர்களின் அறைக்குள் சென்று முடங்கினர். அவளின் அண்ணிகள் இருவரும், வாட்ஸ் அப்பில் பேச தொடங்கினர்.

           “அக்கா! நீங்க பார்த்தீங்களா, அந்த ஷெய்க் அவளை எப்படி பார்த்தான்னு. அது மட்டுமா, அவளும் அப்போ அப்போ அவனையே பார்த்தாஎன்று ஷர்மிளா அவளின்(காவ்யஹரிணி) இரண்டாம் அண்ணி கூறினாள்.

           “நானும் பார்த்தேன் ஷர்மி! எனக்கு என்னமோ, இது தாத்தாவுக்கு தெரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன். ஏன்னா, இன்னைக்கு முழுசும் அவளை தானே அந்த ஷெய்க் கூட பிள்ளைகளோடு அனுப்பினார்என்று முதல் அண்ணி கங்காவதி கூறவும், பதிலுக்கு இரண்டாம் அண்ணி ஷாக் ரியாக்ஷன் கொடுத்தாள்.

              “அக்கா! அப்போ அவ இனி இங்க இருக்க போறா அப்படினா, அவர் கல்யாணத்தை முடிச்சிட்டு தான் திரும்புவார்ன்னு சொல்லுற, அப்படித்தானேஎன்று ஷர்மிளா கூறவும், அந்த பக்கம் அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

         “அவ கல்யாணம் நடக்கணும், ஆனா இங்க இல்லை மதுரை ஒரு கிராமத்தில் நடக்கணும். நம்ம சொல்பேச்சுக்கு அடங்குற மாதிரி ஒரு மாப்பிள்ளை, அவளுக்கு கிடைக்கணும்”.

            “அப்போ தான், அவ நம்ம வீட்டு பக்கம் வராம திருப்ப முடியும். நாம அங்க இருக்க, அவ இங்க இன்னும் வசதியா இருக்கிறது எனக்கு சரியா படல ஷர்மிஎன்று கங்கா கூறியதை கேட்டு மற்றவள் அதிர்ந்தாள்.

         “என்ன அக்கா இப்படி பேசுற! அவ கல்யாணம் முடிச்சு போனா போதும் தான சொன்ன, இப்போ இப்படி அவ மேல வஞ்சம் வச்சு இருக்கிற மாதிரியே வில்லியா பேசுறஎன்று மனதில் பட்டதை அப்படியே கூறினாள் ஷர்மிளா.

          “நானும் முதல அப்படி தான் நினைச்சேன், ஆனா எப்போ நம்ம அம்மாவை வச்சு வீட்டை விட்டு விரட்டினாங்களோ, அப்பாவே முடிவு பண்ணிட்டேன் அவளை எப்படி அவங்க கிட்ட இருந்து பிரிக்கிறது அப்படினுஎன்று அவள் கூறவும், அதிர்ந்தாள் ஷர்மி.

           “ஆத்தி! இந்த அக்காவுக்குள்ள இப்படி ஒரு என்னமா? அவங்களோட சேர்ந்தது தப்போ!” எந்தது முதல் முறையாக யோசித்தாள் ஷர்மிளா.

          “என்னடா, இந்த அக்காவோட சேர்ந்தது தப்போ அப்படினு தான நினைக்கிற. கொஞ்சம் நீ உங்க அம்மா கிட்ட வாங்கின அடியை, எல்லாம் நியபகப்படுத்தி பாரு ஷர்மிஎன்று அவளை நன்கு தெரிந்தவளாக, அவளை திசை திருப்பினாள் கங்கா.

             ஆம், அன்று வாங்கிய அடி கொஞ்சமா, நஞ்சமா அதை நினைத்து பார்த்தவள், உடனே அவளோடு கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்ட தயாரானாள்.

           அங்கே இருவரும், காவ்யஹரிணிக்கு சதி திட்டம் தீட்ட, இங்கு அவள் அவள் அன்னை ஸ்ரீ மஹாவிடம் பாட்டு வாங்கிக் கொண்டு இருந்தாள்.

        “ஏன் டி, இன்னைக்கு நாங்க கோவிலுக்கு போகிறோம் அப்படினு நேத்தே சொன்னேன் . அப்புறம் எதுக்கு, நீ தாத்தா கிட்ட போய் எங்க எல்லோரையும் கூட்டிட்டு, அங்க போகனும்ன்னு ஒத்த காலுல நின்ன?” என்று அவளிடம் காய்ந்தார்.

         “நான் ஒத்த காலுல நிக்கல மஹா மா, ரெண்டு காலுல தான் நின்னேன்என்று அது தான் முக்கியம் என்பது போல் கூறியவளை பார்த்து, முறைத்தார்.

             “கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு, இல்லை காலுல அடிக்கிறதுக்கு உருட்டுக்கட்டை கொண்டு வர சொல்லுவேன், ரூம் சர்வீஸ்க்கு போன் பண்ணிஎன்று மிரட்டியவரை பார்த்து தத்தையும், மகளும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

            “எம்மா மஹா! நீங்க எப்போ இங்கிலீஷ் படிச்சீங்க?” என்று அன்னையை சற்று வம்பிழுத்தாள்.

             “அதுவா! என் மூத்த பொண்ணு, பார் ஆப்பிள் படிக்கிறதுக்கு பதிலா பார் அண்ணாச்சின்னு படிச்சு எனக்கு ஷாக் கொடுத்தா பாரு, அப்போ தான் படிச்சேன்என்று இப்பொழுது அவளின் காலை வாரினார்.

               “எம்மா! அது அறியாத வயசுஎன்று கடுப்பில் கத்தினாள்.

            “யாரு உனக்கு அறியாத வயசா! அப்பாவே நீ யாரை காக்கா பிடிச்சா காரியமாகும்ன்னு, தெரிஞ்ச கேடி டி நீஎன்று அவளை நன்றாக வாரினார்.

            “எம்மா! கோவிலுக்கு எப்போ வேணும்னாலும் போகலாம், இப்படி கடல் வாழும் அரிய மீன் வகை எல்லாம், நீ இப்போ பார்க்காம எப்போ மா பார்ப்ப?” என்று அவள் கூறவும், அதில் சமாதானம் அடைந்தாலும், இன்னும் சற்று அவளை வம்பு இழுக்க முடிவு செய்தார்.

           “எப்போ கேள்வி கேட்டாலும், உடனே பதில் சொல்லாம குதற்கமா நம்மள வம்பு பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியது. இன்னைக்கு நீயா, இல்லை நானா அப்படினு பார்க்கணும்என்று மனதில் ஒரு முடிவுடன், அவளை பார்த்து அடுத்த கணை எறிந்தார்.

               “ஏன் டி, அதை தான் அந்த டிஸ்கவரி சேனல் , போடுறான் . இருக்கவே இருக்கு இப்போ யூ ட்யூப், அதுல போய் பார்த்துப்பேன்”.

           “ம்கும்! நான் என்ன உணக்காகவா சொன்னேன் தாத்தா கிட்ட, அவருக்காகவும், பாட்டிக்காகவும் தான் சொன்னேன். அதான், நாளைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போறேன் சொன்னார்கள, அப்புறம் என்ன மா இப்படி விசாரணை பண்ணுறீங்க என்னை?” என்று பந்தை அவர் பக்கம் போட்டுவிட்டு சென்றவளை, பார்த்து வாய் பிறந்தார்.

          “உன் மக, உன்னை மாதிரி தான இருப்பா! பாரு 16 அடி பாஞ்சிட்டா. இனி அவளை சும்மா இப்படி கேள்வி கேட்காத டா ஸ்ரீ, அவளுக்கு விபரம் தெரியும், பெரிய பொண்ணு ஆகிட்டாளே”.

         “நீ இன்னும் அவளை, சின்ன பாப்பாவா நினைக்கிறதை விடு மாஎன்று கூறிய கணவரை பார்த்து முறைத்தார்.

         “அவ எவ்வளவு பெரிய பொண்ணு ஆனாலும், இன்னும் அவ தான் என் செல்ல பொண்ணு, சின்ன பொண்ணு தெரிஞ்சிக்கோங்கஎன்றுவிட்டு படுக்க ஆயத்தமானார்.

            இங்கே அன்னையிடம் மல்லு கட்டிவிட்டு, அவளின் அறைக்குள் நுழைந்தவள் காதில், மனோவின் குறட்டை சத்தம் தான் அவளை வரவேற்றது.

          தம்பியின் குறட்டை சத்தத்தில், அவளுக்கு சிரிப்பு வந்தது. என்ன தான் அவன் கல்லூரி படிக்கும் பெரிய பையன் என்றாலும், அவளுக்கு எப்பொழுதும் அவன் சிறுவன் தான்.

            கைகுழந்தையாக அவன் இருக்கும் பொழுது, அவனை தன் கையில் வைத்துக் கொள்ள அவள் தாயிடம் சண்டைக்கு செல்வாள். அவனுக்கு அவள் தான் எல்லாம் பார்த்து, பார்த்து செய்ய வேண்டும் என்று அந்த சிறு வயதில் ஆழமாக மனதில் பதிந்தது.

         அன்று ஆரம்பித்த அவர்களின் பிணைப்பு, இன்று வேரூன்றி மரமாக நிற்கிறது. இவளிடம் தான் அவனும் முதலில் பகிர்ந்து கொள்வான், அதன் பிறகு தான் தாய் தந்தையிடம் செல்வான்.

           ஆனால் அவளோ, முதலில் அவளின் அத்தை மகனான அனிருத் கிஷோரிடம் தான் முதலில் சொல்வாள். இவள் எப்படி தம்பியை பேணி காத்தாளோ, அதே போல் அவனும் இவளை சிறு வயது முதல் இன்று வரை அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான் ஒரு நண்பனாகவும், அண்ணனாகவும்.

           எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவள், அங்கே ஜன்னல் அருகே சென்று அந்த நகரத்தை இரவு நேரத்தில் ரசிக்க தொடங்கினாள். இன்று நடந்த சம்பவங்கள், அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

         அவனின் பெயர் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி, அவனருகில் தன் வசம் இருந்த இதயம் மெல்ல, அவனிடம் சென்று கொண்டு இருந்ததை உணர்ந்த தருனமல்லவா.

           “அட! அப்போ ஒட்டக கறி தான்னு உறுதி ஆகிடுச்சு போலஎன்று அவளின் மனசாட்சி அங்கே ஆஜாராகவும், திடுகிட்டாள்.

            “எதுக்கு இந்த ஷாக் ரியாக்ஷன்? அது எல்லாம் என் கிட்ட வேண்டாம், அப்போ இனி நோ சண்டையா!” என்று கேட்ட மனசாட்சிக்கு, சிரிப்புடன் பதில் கூற தொடங்கினாள்.

             “இனி தான் அதிகமா, உரிமையா சண்டை போடலாம். ஏற்கனவே என் பெயரை கிண்டல் பண்ணினதுக்கு, அவன் பெயரை டேமேஜ் பண்ணி இருந்தாலும், அது பத்தாது”.

            “சோ இன்னும் பெருசா சண்டை போட, அவனே வாய்ப்பு அடுத்து கொடுப்பான் அப்போ பார்த்துக்கலாம்என்று கூறியவளை பார்த்து, மனசாட்சி ஜெர்க்கானது.

          “அப்போ மீனு கிட்ட வேண்டிய மதுரை வீரன் கதி, அம்போ தானா!” என்ற மனசாட்சியை குட்டினாள்.

             “எனக்கு என்னமோ, மீனு இவரை தான் எனக்கு பிக்ஸ் பண்ணி இருப்பாங்கன்னு ஒரு சந்தேகம். ஏன்னா, அடிக்கடி இவன் தான் உனக்கணவன் அப்படினு அடிக்கடி யாரோ என் கிட்ட சொல்லுறாப்ல இருந்தது”.

              “எனக்கு என்னமோ, இது மீனுவோட பிளான் தான் நினைக்கிறேன். எப்போவும் மீனுவுக்கு, நான் கேட்டதற்கு ஆபோஸிட்டா கொடுத்து தான பழக்கம்என்று கூறியவளை பார்த்து, மனசாட்சி சிரித்துக் கொண்டது.

        “அப்போ நீ தெளிவாகிட்ட, உன் வாழ்க்கை இங்க தான் அப்படினுஎன்று கேட்டதற்கு ஆம் என்று கூறினாள்.

          “அப்போ, இன்னும் அங்க தான் தெளிவாகனும். நீ சீக்கிரம் தெளிய வச்சுடுவியா, இல்லை இன்னும் இழுத்து அடிக்க போறியா?” என்று வினவிய மனசாட்சியிடம் குறும்பு புன்னகை புரிந்தாள்.

        “அது சரி நீ நடத்து, நான் அப்புறம் வரேன்என்று அது சென்ற பிறகு, தூக்கம் கண்களை சுழட்ட மெத்தையில் இனிமையான கனவுகளுடன் போய் விழுந்தாள்.

         இவள் இங்கே தெளிந்து இருக்க, அங்கே faiq தெளியாமல் சற்று குழம்பி போய் இருந்தான். இன்று அவளை வம்பு இழுத்ததாகட்டும், அவளுடன் ஒட்டி லிஃட்டில் சென்றதாகட்டும், அதன் பிறகு அவளின் சந்தோஷத்தை ரசித்ததாகட்டும், எல்லாமே அவன் வரையில் அது அவனுக்கு புது அனுபவம்.

            இதுவரை அவனை நெருங்க எத்தனையோ பெண்கள் முயற்சிக்க, அவர்களை எல்லாம் தன் பார்வையாலே தள்ளி நிறுத்தி இருக்கிறான். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இவள் விஷயத்தில், அவன் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறான்.

          “எப்படி, இந்த கொஞ்ச நாள் ஒரு பெண்ணால் என் மனதில் சஞ்சலத்தை உருவாக்க முடிந்தது?”.

               அதுவும் லிஃட்டில் இன்று அவள் பார்த்த பார்வையை, அவனால் மறக்க முடியும் போல் தோன்றவில்லை. அந்த பார்வையில் கட்டுண்டு, அதில் இருந்து வெளியே வர விருப்பம் இல்லாமல் அல்லவா இருக்கிறான்.

             இப்படி என்னவென்று தெரியாத குழப்பத்தில் இருப்பவனுக்கு, நாளை அவள் அண்ணிகள் மூலம் அவனுக்கு அவள் யார் என்று தெளிந்து விடும்.

         மறுநாள் காலை பெரியவர்கள் கோவில் செல்ல, இவர்கள் எமிரேட்ஸ் மாலில் உள்ள ஸ்கை துபாய் சென்று கொண்டு இருந்தனர்.

       வேனில் ஏறியதில் இருந்து, இவள் அவனை பார்க்க. அவனோ, இவளை கண்டுகொள்ளாமல் அமர்ந்து இருந்தான்.

           அதில் லேசாக அவள் முகம் வாடினாலும், அவனை அவன் போக்கில் விட்டு பிடிப்பது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

            ஸ்கை துபாய், முழுக்க முழுக்க பனிக்கட்டிகள் சூழ் உலகம். ஒரு பக்கம் விளையாட்டு திடல் என்றால், மறுபக்கம் பென்குவின் பற்றிய விளக்கமும், அதனுடன் போட்டோ எடுக்கும் செக்ஷனும்.

           முதலில், உள்ளே செல்வதற்கு முன் அதற்கான உடைகளை வாங்கிக் கொண்டு, பென்குவின் பற்றிய நிகழ்ச்சியை காண சென்றனர்.

            சற்று பயத்தோடு தான் அமர்ந்து இருக்க வேண்டி இருந்தது, அந்த இடத்தில். இளம் பென்குவின்கள் இரண்டு, துரு துருவென்று ஓடிக் கொண்டு இருந்தனர்.

           அவர்களை பற்றி சொல்லிக் கொண்டே, அவர்களுக்கு மீன் கொடுத்துக் கொண்டு இருந்தான் faiq. அவன் இங்கு அடிக்கடி வந்து செல்லும் பழக்கம், ஆகையால் இன்று அவன் தான் அந்த இரண்டை பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டு, அவைகளுக்கு சைகை மொழியில் போட்டோ போஸ் கொடுக்க சொல்லி கொடுத்து கொண்டு இருந்தான்.

             காவ்யஹரிணிக்கு, அவைகளை பார்த்த சந்தோஷம் இருந்தாலும், எங்கே தன்னை பிராண்டி விடுமோ என்ற பயத்தில் அமர்ந்து இருந்தாள்.

             அவளின் பயத்தை அதிகரிக்க, அங்கே அது அவனை பதம் பார்க்க சத்தம் எழுப்பியது. அந்த சத்தத்தில், அவள் உடல் ஒரு முறை தூக்கி போட்டது.

           அவளின் பயத்தை உணர்ந்ததாலோ, என்னவோ உடனே போட்டோ செக்ஷன் வைத்து எல்லாம் முடித்துக் கொண்டு அவர்களை அழைத்துக் கொண்டு, விளையாட்டு திடல் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்றான்.

           அங்கே சென்ற பின் தான், அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. நிறைய விளையாட்டு வகைகள் இருக்கவும், அவளின் தம்பி மனோவுடன் சேர்ந்து எல்லாவற்றையும் நன்றாக அனுபவித்தாள்.

           ஒரு கட்டத்தில், குளிர் தாங்க முடியாமல் அவள் தவித்த பொழுது, அங்கிருந்து செல்ல தம்பியை அழைக்க, அவனும் அவளின் குளிர் அறிந்து அவளுடன் பயணம் செய்ய நினைத்தான்.

         அதற்குள் கங்கா அங்கே வந்து, அவளின் இரண்டு மகன்களும் ரைடில் செல்ல அடம் பிடிக்கவும், அவனை அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு, அவள் தங்கையுடன் வேறு ரைட் செல்ல சென்றுவிட்டாள்.

         “டேய்! நீ பிள்ளைங்களை பார்த்துக்கோ, நான் மனேஜ் பண்ணி வெளியே போயிடுவேன்என்று அவனிடம் கூறிவிட்டு சிறிது தூரம் தான் சென்று இருப்பாள், அதற்குள் குளிர் உடலெங்கும் ஊடுருவது போல் வெட வெடக்க தொடங்கியது.

               அங்கே இருந்த சிறு குகைக்குள், கஷ்டப்பட்டு தன்னை உள்ளே நுழைத்துக் கொண்டாள். அந்த இடத்தில், குளிர் சிறிது குறைந்து இருந்தாலும் அவளால் தாக்கு பிடிக்க இயலவில்லை.

          அங்கு வந்து இருந்த தன் நண்பர்களோடு, அரட்டை அடித்துக் கொண்டே விளையாடியவன், தற்செயலாக திரும்பி பார்க்கும் பொழுது, குகைக்குள் காவ்யஹரிணி பலமின்றி இருப்பதை பார்த்து, நண்பர்களிடம் விடை பெறுவதாக கூறிவிட்டு அவளிடம் விரைந்தான்.

              குளிரில் அவளின் உடல் நடுங்கிக் கொண்டு இருந்ததை உணர்ந்தவன், சட்டென்று முதலில் அவள் உதட்டில் அழுந்த முத்தம் கொடுத்தான். நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு, அவள் கையை எடுத்து சூடு பறக்க தேய்க்க தொடங்கினான்.

                அதில் சற்று தெம்பு வரவும், அவனை குருகுருவென்று பார்க்க தொடங்கினாள். அவனோ, அவளின் பார்வையை சந்திக்காமல் அங்கும், இங்கும் விளையாடிக் கொண்டு இருந்தவர்களை கவனித்தான்.

            “thank you” என்று கூறி சற்று பலவீனமாக முறுவழித்தவளை பார்த்து, அவன் மீண்டும் நடப்புக்கு திரும்பினான்.

            “அண்ட் சாரி எல்லாத்துக்கும் சேர்த்து, நான் அப்படி பேசி இருக்க கூடாதுஎன்று வருத்தம் தெரிவித்தவளை சற்று நேரம் பேசவிட்டு, அவன் பேச தொடங்கினான்.

                “இப்படி குளிர் அடிக்கிறது முதல தெரிஞ்சா, அதுக்கு தகுந்த ட்ரெஸ் சரியா இருக்கான்னு செக் பண்ணனும். அப்புறம் இங்க வெளியே விளையாட வரணும், புரியுதா!”

               “நான் ஜீன்ஸ் தான் போட்டு இருக்கேன், பனி கொஞ்சம் ஓவர் தான்என்று அவள் சொல்லவும்,அவளை மெதுவாக நடந்து, வெளியேற சொன்னான்.

              அது தான் முடிய மாட்டேங்குதே, என்று புலம்பியவளை பார்த்தவன், என்ன நினைத்தனோ அவளை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான்.

               அதை கங்கா போட்டோ பிடித்து, வாட்ஸ் அப்பில் வீட்டில் உள்ள அனைவருக்கும் message அனுப்பினாள். அதனால் ஏற்பட போகும், பிரச்சனைகளை சந்திக்க காவ்யஹரிணி தயராக இருந்தாள்.

 

தொடரும்…   

error: Content is protected !!