Varaaga-19

பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியவள்.. தன் பெட்டியில் எப்போதும் இங்கு வந்தால் தன்னை மறைக்க பயன்படுத்தும் பர்தாவை எடுத்தாள்.

அதை காரினுள் இருந்தே அணிந்தவள்.. பின் வெளியே வந்து அனைத்தும் மறைந்துவிட்டதா என்று சரி பார்த்தாள்கண்களை மட்டும் வெளிக்காமித்தவாறு பக்கவாட்டில் உள்ள மின்தூக்கியில் நுழைந்தாள். அம்மருத்துவமனையில் விஐபி காக பிரத்தியேகமாக உள்ள.. மற்றவர்கள் சாதாரணமாக நுழைய முடியாத பத்தாவது மாடிக்கு செல்ல பொத்தானை அமுக்கினாள்.

பத்தாவது மாடியை அடைந்ததும்.. அங்கிருக்கும் செக்குரிட்டியிடம் 6 ஆவது அறையை காண வேண்டிய அடையாள அட்டையை காட்டியவள்பின் அந்த 6 ஆம் எண் அறையினுள் நுழைந்தாள்.

அதுவரை தன் முகத்தை அவள் எங்கும் காமிக்கவே இல்லை.. தான் இங்கு வருவது தந்தையை தவிர யாருக்கும் தெரியவருவதில் உடன்பாடில்லைதனக்காக தந்தை பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொன்றையும் நினைத்தவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.

அந்த தந்தையை, முன்னால் தான் தந்தையாக மதிக்காததற்கு இந்த இரண்டு வருடத்தில் இரண்டு கோடியாவது முறையாக தன்னை நிந்தித்தாள்.

உள்ளே வந்ததும் கதவை மூடி தன் வேசத்தை கலைத்தவள்… அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த கட்டிலை நெருங்கினாள்.

அங்கு அவன் உறங்கி கொண்டிருந்தான்… உறக்கம் தானா அது…? ஆம் மிக நீண்ட கால உறக்கம் அவனது… அவனின் உறக்கத்திற்கு வயது இருபத்தொரு மாசம்…

அவனருகில் வந்தமர்ந்த விகாஷினி அவனின் ட்ரிப்ஸ் ஏறாத கையை தனது இரு கைகளுக்குள் வைத்து…

“இன்னக்கி உன் முகில்ல பார்த்தேன் ரிஷி…”

என்றாள்.

மனமோ

“என் முகில்…”

என்று அவன் அடிக்கடி கூறும் கல்லூரி காலத்திற்கு சென்றது.

மும்பை ஐஐடி கல்லூரி…   

கார்முகிலனின் நண்பன் என்று ஒருவன் என்றால் அது ரிஷி மட்டும் தான்… இந்த நட்பு இன்று நேற்று உருவானதில்லை…முகிலனின் தம்பி தங்கை வந்ததும் தன்னை பெரியவனாக எண்ணி வீட்டில் இருந்து விலக ஆரம்பித்த புதிதில் முளைத்த நட்பு தான் ரிஷி.

ஏனோ ரிஷிக்கு அமைதியாக இருக்கும் முகிலனை பிடித்துவிட… அவன் பேசாவிட்டாலும் அவனுடன் பேசிக் கொண்டிருப்பதை வேலையாக வைத்திருந்தான். காலப்போக்கில் இருவரும் நெருங்கியிருந்தனர்.

முகிலனும் ரிஷியுடன் பேசிய அளவு யாரிடமும் பேசாததால் அத்துடன் முடிந்தது அவன் நட்பு வட்டம்.

பள்ளிப்படிப்பு பிரச்சனையின்றி கழிய… கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க இவர்கள் பிரிய வேண்டி வந்தது… முகிலன் கணினி எடுக்க… ரிஷி சிவில் எடுத்தான்… ஏனெனில் ரிஷியின் குடும்ப தொழில் கன்ஸ்ட்ரெக்ஷன் அல்லவா…?

பின்னர் மேல் படிப்பிற்காக இருவரும் எம்பிஏ படிக்க ஐஐடி வந்திருந்தனர்.

நான்கு வருடம் கழித்து ஒரே வகுப்பறையில் நண்பர்கள்.. கேட்கவா வேண்டும்..? கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

அதே கல்லூரியின் செக்ரெட்ரி தான் விகாஷினி… பிடெக் சிவில் மூன்றாம் ஆண்டு…

முதல் ஆறு மாதம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது… ரிஷி வழக்கம் போல் தன் பேச்சால்… அழகால் அனைவரையும் கவர…

அந்த வருட கல்லூரி தேர்தலில் ஏக மனதாக ப்ரெசிடென்ட் ஆக்கப்பட்டான்.   

ப்ரெசிடென்ட்டும் செக்ரெட்ரியும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் வர… சண்டி ராணி விகாஷினியும் காதலில் விழுந்தாள். அதே தான் ரிஷியும்… இதுவரை இல்லாத உணர்வில் இருவரும் திளைக்க… ரிஷிக்கு முகிலனுடன் பழகும் நேரம் குறைந்தது… அப்படியே வந்தாலும்… அதிலும் விகாஷினி போன் செய்து நேரத்தை பறித்தாள்.

பொறுக்க முடியாத முகிலன்.. ஒரு நாள், முக்கிய விசியம் என்று வெளியே சென்ற ரிஷியை பின்தொடர்ந்து கையும்  களவுமாக பிடித்து விசாரிக்க தொடங்கினான்…

ரிஷியோ சமாளித்தான்…

“ஹே… விகாஷி.. நான் சொல்லிருக்கேன்ல.. என்னோட முகில்.. அது இவன் தான்”

என்றான். அதில் சிறிது கோபம் தணிந்த முகிலன்.. கேள்வியாக விகாஷினியை பார்க்க…

“ஹாய்… ஐ அம் விகாஷினி.. ரிஷியோட லவர்…”

என்று கூறி ரிஷியின் கையோடு கை கோர்த்துக்கொண்டாள்.

யார் கூறியது.. காதலுக்கு மட்டும் தான் பொறாமை வரும் என்று…? இப்பொது  முகிலனிற்கும் பொறாமை துளிர்த்தது… ஆண் நட்பு என்ன…? பெண் நட்பு என்ன…? நட்பு… நட்பு தானே..

“ஒஹ்…”

என்றவன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டான்… தன்னிடம் அவன் சொல்லவில்லை என்ற சுணக்கத்தில்… நிறைய நட்பு இருந்தது என்றால், இந்த மாதிரி உணர்ந்திருக்க மாட்டானோ.. ஒரே ஒருவன்… அவனும் விலகி போக… முகிலனிற்கு தாங்கவில்லை.

“முகில்… டேய் முகில்…”

என்று பின்னாடியே போக பார்த்த ரிஷியை அவனின் காதலி கைப்பிடித்து இழுக்க…

“விகாஷி… விடு… நாம நாளக்கி பேசலாம்… ப்ளீஸ் டா…”

என்றதோடு அவள் கையை விளக்கி சென்றுவிட்டான்.

இங்கு விகாஷினி முகிலன் மேல் எரிச்சல் கொள்ள… அங்கு முகிலனும் அதை தான் செய்து கொண்டிருந்தான்… இருவருக்கும் ரிஷியின் மேல் இருக்கும் உரிமை உணர்வில் முதல் நாளே முட்டிக்கொண்டு சென்றனர்.

ரிஷி தான் முகிலனை படாதபாடு பட்டு சமாதானம் செய்தது.

பின் விகாஷினியை அலைபேசியில் அழைக்க… அவளும் அப்போது முறுக்கிக்கொண்டாள்.

ஆக மொத்தம் நட்பிற்கும் காதலிற்கும் இடையில் சுகமாக  சிக்கி தவிக்க ஆரம்பித்தான் ரிஷி.

விகாஷினி எப்பொதும் போல் தானுண்டு தன் கன்ஸ்ட்ரக்ஷன் உண்டு என்று இருந்தவள் இப்பொது தன் காதலும் உண்டு என்று வாழ பழகினாள்.

விக்னேஸ்வரி தன் மகளிற்கு தொழிலை சிறுவயதில் இருந்தே பழக்கி விட்டிருந்தார். அவளின் கணவர் கிருஷ்ணகுமார் நல்ல மனிதர்… தன் ஒற்றை மகளை அவர் வளர்க்க முற்பட… அவளை உங்களை போல் விளங்காதவளா ஆக்காதீங்க என்று பறித்து… சிறு வயதில் இருந்தே தொழிலில் தன்னுடன் வைத்து சொல்லி தர… பிசினஸ் என்றால் அப்படி தான்… மிரட்டுவது… பிடுங்குவது… முதுகில் குத்துவது என்பதெல்லாம் அவளிற்கு இயல்பான விசியங்களாக மனதில் பதிந்தன.

ஆனால் விகாஷினி ஒன்றை அறியவில்லை.. தன் தாய் அதற்கும் மேல் போவாள் என்று… ஏனோ மகளிடம் தன் கோரமுகம் வெளிப்படுவதை விக்னேஸ்வரி விரும்பவில்லை… அதற்கு அவள் சொந்த வாழ்க்கையில் தன் தந்தையை தன்னை அறியாமல் பின்பற்றுவதும் காரணமாக இருக்கலாம்.

அதில் தான் அவள் ரிஷியையும் காதலித்தாள்… பிடித்தால் உடும்புபிடி தான்… காதலிலும் கூட…

ஆக அவள் வாழ்க்கையில் தந்தையையும்… தொழிலில் தாயையும் ஒத்து… புரியாத புதிராக இருந்தாள்.

அதுவும் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் என்றால் விகாஷினியின் உயிர் என்று சொல்லலாம்… கூடவே அந்த உயிரில் ரிஷியும் பங்கு கொண்டான்.

ஆனால் நீதி, நேர்மை, உண்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று உளரும்…( ஆம் அவர்களை பொறுத்தவரை அதெல்லாம் உளறல்… ) தந்தையை கண்டால் விகாஷினிக்கு இளக்காரமே…

தந்தையும் தொழில் நடத்தினாலும்… அது தாயை போல் பிரமாண்டமானதில்லை என்பதால் அவள் அதில் கவனம் செலுத்தவும் இல்லை.

காதலர்கள் இருவரும் காதல் வானில் சிறகடித்து பறக்க… கல்லூரி நாட்களும் முடிவிற்கு வந்தது.

இறுதி நாளில் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள் பார்ட்டிக்கு… அதில் முகிலனும் அடக்கம்… இவளாக சென்று அழைக்கவில்லை… ரிஷிக்காக.. அவன் வருந்தக்கூடாது என்பதற்காக அழைத்தாள்… அதே காரணம் தான் முகிலனிற்கும் தான் வரவில்லை என்று கூறியும் ரிஷியின் பிடிவாதத்திற்கு முன் தன் பிடிவாதம் எடுபடாமல் கிளம்பினான்.

இதற்கிடையில் மகளின் போக்கில் பல வித்தியாசங்கள் கண்டுபிடித்த விக்னேஸ்வரி அதனை என்னவென்று கண்டுபிடிக்க ஆள் ஏற்பாடு செய்தார்.

மகளிடம் மனம் விட்டு பேசினால் அவளே தன் சொல்லியிருப்பாள்… ஹ்ம்ம்… அதற்கு எங்கே மனசிருக்கு…

சரியாக பார்ட்டிக்கு முந்தய தினம்… விக்னேஸ்வரிக்கு மகளின் காதல் தெரிய வந்தது.

மகளின் எண்ணப்போக்கை எண்ணி தலையில் அடிக்காத குறை.. போயும் போயும் எதோ ஒரு தம்மாதுண்டு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்குற குடும்பத்தில் போய் இவளை கட்டித்தர முடியுமா…? என்று..

அவளுக்காக பலகோடிகளில் புரளும் மாப்பிள்ளைகள் காத்திருக்க… அப்போதே மகளை அழைத்து கேட்டாள் விக்னேஸ்வரி…

மகளும் சாதரணமாக…

“ஆமாம்.. நாளக்கி உங்க கிட்ட அறிமுகப்படுத்த தான் பார்ட்டியே… அப்படியே ஊருக்கும் அறிமுகப்படுத்துவேன்”

என்று குண்டை தூக்கி போட்டாள்.

இதை எதிர்பார்க்காத விக்னேஸ்வரி…

“நான் சம்மதிக்கல என்றால் என்ன பண்ணுவ…?”

என்று வினவ…

“நோ… மாம்… நான் உங்ககிட்ட கேட்டு காதலிக்கல… அதே மாதிரி கல்யாணம் பண்ணவேணாம்னு நினைச்சேன்… நீங்க இப்படி சொன்னா அடுத்து அதுதான் நடக்கும்”

என்று உறுதியாக கூறி சென்றுவிட்டாள்.

அதை கேட்ட விக்னேஸ்வரிக்கு வெறி வெறியாக வந்தது… “நான் உன்னை பெத்தவடி..” என்று மனதிற்குள் கருவியவர்… நன்கு யோசித்து ஒரு திட்டம் தீட்டினார்.

அதன்படி… அடுத்த நாள் பார்ட்டி ஆரம்பிக்கும் முன் விகாஷினியை அழைத்தவர்…

“நீ இன்னைக்கு அவனை கூட்டத்துல அறிமுகப்படுத்த கூடாது..”

என்று கட்டளை இட்டார்.

அவளோ…

“என்ன மாம்.. அதெல்லாம் முடியாது… வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க…”

என்று மறுக்க..

“அப்போ உனக்கும் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன்க்கும் இனி  எந்த சம்பந்தமும் இருக்காது… பரவால்லையா…?” என்று இத்தனை நாள் மற்றவர்களிடம் செய்ததை தன் பெண்ணிடமே செய்தார்.

விகாஷினிக்கு உயிர்நாடி அதிர்ந்தது…

“வாட்… ?”

என்று மீண்டும் கேட்க…

“எல்லாம் நல்லா தான் கேட்டுச்சு… இப்போ நீ அவனை அறிமுகப்படுத்துனா அது தான் நடக்கும்…”

என்றார்.

தாயல்லவா… ? மகளின் நாடியை புரிந்து வைத்திருந்தார்.     

“இல்லை நீங்க என்னை மிரட்டுறீங்க… சட்டப்படி நான் தான் உங்களுக்கு அடுத்து வாரிசு…”

என்று நொடியில் சமாளித்து பதில் கூறினாள்.

அதற்கு சத்தம் போட்டு சிரித்த விக்னேஸ்வரி…

“ஹாஹா… இது என்ன உங்க தாத்தா சொத்தா… அப்படியே உனக்கு வர… உங்க தாத்தா சொத்தை விற்று நான் உருவாக்குன சாம்ராஜ்ஜியம்… நான் நினைச்சா தான் உனக்கே குடுக்க முடியும்”

என்றார்.

இத்தனையும் ஹாலில் நடந்ததால் அப்போது வந்து இது அத்தனையும் கேட்ட கிருஷ்ணகுமார்க்கு மகள் இடிந்து நின்ற தோரணை கலங்க வைத்தது… உடனே மனைவியிடம் சென்றவர்…

“நீ பண்றது தப்பு ஈஸ்வரி… மகள் காதலித்த பையன் கெட்டவனா இருந்தா நீ சொல்றதுக்கு நான் அமைதியா இருந்திருப்பேன்… ஆனா அவன் அக்மார்க் நல்ல பையன்… தேடினாலும் அப்படி ஒரு பையன் கிடைக்காது… பணம் என்ன நம்ம கிட்ட இல்லாததா… அவங்களும் வசதியானவங்க தான்… அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு தான்…”

என்று மனைவியை சமாதானம் செய்ய பார்த்தார்.

அப்போது தான் விகாஷினிக்கு ஒரு கண்திறப்பு எனலாம்… இத்தனை நாள் பாசம் காட்டிய தாய் கீழிறங்க… தன் தந்தை அனைத்தும் அறிந்தும் அமைதியாக இருந்து… இதோ இப்பொது இக்கட்டிலும் வந்து தோள் குடுத்து உயர்ந்தார்…

ஆனால்… விக்னேஸ்வரி யார் சொன்னதையும் காதில் வாங்கவில்லை… தன் பிடியில் உறுதியாக இருந்தார்…

“நான் ஒன்னும் இவளை கல்யாணம் பண்ண வேண்டாம்னு சொல்லல… கம்பெனி வேணுமா இல்லை கல்யாணம் வேணுமானு.. அவளை சூஸ் பண்ண சொல்றேன்… கல்யாணம் வேணும்னா அவள் திரும்ப இங்க வர கூடாது… கேட்டு சொல்லுங்க..”

என்று தன் அறைக்கு திரும்ப…

‘எனக்கு கன்ஸ்ட்ரக்ஷன் தான் வேணும்… நான் அவனை அறிமுகப்படுத்த மாட்டேன்”

என்று கூறினாள் மனதில் வேறு ஒரு கணக்கோடு…

ஆனால் அதை தெரியாதவளா விக்னேஸ்வரி…

“கம்பெனி வாங்கிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு கனவுல கூட நினைக்காத… பிகாஸ் உனக்கு நான் சொல்ற மாப்பிள்ளை கூட கல்யாணம் ஆகுன பிறகு தான் சொத்து…” என்று மடக்க…

எனக்கு உங்க சொத்தே வேண்டாம் என்று கத்த போனாள்… அதற்குள்…

“தாராளமா கல்யாணம் பண்ணி வையுங்க…”

என்ற ஆவேசக்குரல் கேட்டது…

வந்தது ரிஷி தான்… முன்னே வந்து இன்பஅதிர்ச்சி குடுக்க நினைக்க.. அவளோ துன்பஅதிர்ச்சி கொடுத்திருந்தாள்.

ரிஷி.. அவன் பின்னே முகில் என்று இருவரும் விகாஷினியை முறைத்துக்கொண்டிருந்தனர்…

“ரிஷி…”

என்று இவள் முணுமுணுக்க… தான் அவனை விட்டு விலக நினைக்கவில்லை என்று இனி கூறினாலும் நம்புவானா என்று உள்ளே தவித்தாள்.

அவளிற்கு ரிஷியும் வேண்டும்.. கம்பெனியும் வேண்டும்… இரண்டில் எது இல்லையென்றாலும் அவளால் வாழவே முடியாது… கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதி தான்…

இப்போது காதலையாவது காப்பாற்றிக்கொள்ள பார்க்க… அவன் பார்வையே இவளிடம் அதற்கு வாய்ப்பே இல்லை என்றது…

அவன் சே… என்று வெளியேறிவிட… இவள் தளர்ந்து போய் சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

பார்ட்டிக்கு வர வேண்டிய நேரம் முன்னதாகவே முகில் மற்றும் ரிஷி வந்துவிட்டதால் இவர்களின் பிரிவு தவிர்க்கமுடியாததாகி விட்டது.

தாய் ஏளன பார்வையோடு பார்ட்டி ஏற்பாடு செய்ய சென்றுவிட…தந்தை அவளை கையணைப்பில் எழுப்பி  அவளது அறைக்கு கூட்டி சென்றார்.

உள்ளே நுழைந்ததும் கேவலோடு… சிறு மழலையாய் தந்தை மடி சாய்ந்தாள் விகாஷினி…

தன் காதலன் மீது இருக்கும் நம்பிக்கையில் தாயிடம் வார்த்தை விட… ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள்… அந்த காதலனிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டும் என்பதை.. அவளிற்கு தான் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையே…

யோசித்து… நாளைக்கு சொல்கிறேன் என்று கூறி ரிஷியிடம் பேசியிருக்கலாம்… இந்த யோசனை இப்போது தோன்றியது அவளிற்கு… காலம் கடந்த யோசனை யாரிற்கும் பயனின்றி வீணானது.

தந்தையும் அதை தான் கூறினார்…

“ஏன் மா… கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்ல.. நான் எத்தனை வாட்டி சொன்னேன்… கம்பெனிய கம்பெனியா பாரு… உயிரா நினைக்காதனு… கேட்டியா…”

என்றார் ஆதங்கமாக…

“நான் வேணும்னா ரிஷிக்கிட்ட பேசவா… ?”

என்றார்.

அப்போது தான் அவள் கண்ணில் சிறிதாக நம்பிக்கை ஒளி வீசியது…

அவள் மனதை புரிந்தவர்…

“நான் பார்த்துக்குறேன்… நீ சாப்பிட்டு தூங்கு”

என்றார் பாசமாக.  

அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்ட விக்னேஸ்வரி…

“அப்பா மக ஒன்னு சேர்ந்தாச்சா… சரி இல்லையே…”

என்றவாறு தன் அறைக்கு கிளம்பினார்.

அடுத்த இரு நாளில் விக்னேஸ்வரி தன் கைவண்ணத்தை காட்டியிருந்தார்.

நேற்றைய இரவு பாலம் வழியாக சென்ற போது லாரி இடித்ததால்… வண்டியோடு பாலத்தில் தூக்கி அடிக்கப்பட்டு கடலில் விழுந்து இறந்துவிட்டான் ரிஷி என்ற செய்தி மூன்றாவது நாள் காலையில் விகாஷினியை அடைந்தது.

முகிலன் இங்கு வந்து சாமியாடிப் போனான். விகாஷினி கூற வருவதை கேட்கும் நிலைமையை தாண்டி இருந்தான்.

கூடவே நான்கு நாளாக துக்கம் தாங்காமல் அழுது கரைந்தாள் விகாஷினி.. அதுவும் அதற்கு காரணம் தன் தாயென்று அறிந்திருந்தாள் தந்தையின் மூலம்.

ஒரு வாரம் கழித்து…. தந்தை செவேன்ஹில்ஸ் மருத்துவமனை அழைத்து செல்ல… அங்கு தலையில் கட்டுடன் கோமா நிலைக்கு சென்றிருந்தான் விகாஷி உயிர்க்காதலன் ரிஷி.

தன் உயிரே தன்னிடம் திரும்பி வந்ததை அறிந்தவள்… சந்தோஷமிகுதியில் தந்தையை கட்டிக்கொள்ள… அவன் நிலைமை தெரிந்தும்…

“எனக்காக அவன் திரும்ப வருவான் பா…”

என்றாள் நம்பிக்கையாக…

விபத்து என்று தெரிந்ததும் ரிஷியின் பாதுகாப்பிற்கு இருந்த கிருஷ்ணகுமாரின் ஆள் மருத்துவமனையில் அனுமதித்து இவரிற்கு தகவல் சொல்ல… இவர் தான் அவனின் நல்லதிற்காக இறந்துவிட்டதாக போய் சொல்ல கூறியது…

வண்டியை தூக்கி கடலில் போட்டு… அவன் பிழைத்த பின் அவன் வீட்டிற்கு தகவல் சொல்ல எண்ணியிருக்க… அவன் பிழைப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் மாட்டிக்கொண்டான்.

இவர்களும் அவன் மீண்டு வந்த பிறகு உண்மை தெரிந்தால் தான் மகிழ்ச்சி.. என்று அவனின் நினைவை தட்டி எழுப்ப போராடினர்… போராடிக்கொண்டிருக்கின்றனர் இன்று வரை…

விகாஷினி அவனது புறங்கையில் அழுத்தி முத்தமிட… அவளது விழி நீர் கன்னத்தில் இறங்கி அவனது கையில் தெறித்தது…

விழியிலே என் விழியிலே…

கனவுகள் கலைந்ததே…

உயிரிலே நினைவுகள் தழும்புதே…

கன்னங்களில்… கண்ணீர் வந்து உன் பெயரை… எழுதுதே…

முத்தமிட்ட.. உதடுகள் உலருதே…