Dhuruvam15
Dhuruvam15
துருவம் – 15
மறுநாள் காலை எழும் பொழுதே, தன் உடம்பு கணப்பதை உணர்ந்து கண் திறந்து என்னவென்று பார்த்தான் faiq. அங்கே, அவள் தான் அவன் மேல் ஏறி படுத்து இருந்தாள்.
நேற்று நடந்ததை நினைத்து பார்த்தவன் முகத்தில், அவ்வளவு மகிழ்ச்சி. இருக்காதா பின்னே, இருவரும் ஆராய்வது வெவ்வேறு என்றாலும், சென்று கொண்டு இருக்கும் பாதை ஒன்று தான் என்று அறிந்த தருணமல்லவா.
ஒரு நாள் முன்பு, அந்த கும்பலை விரட்டிய பிறகு, அவளின் குளிரை போக்க நெருப்பு மூட்டி வெளியே அமர்ந்து இருந்த பொழுது, குளிர் போக அவள் எடுத்துக் கொண்ட முயற்சி யாவும் தோல்வியில் முடிய, இவன் உடனே அவள் அருகே வந்து, அவளின் குளிரை போக்க முயன்றான்.
ஏற்கனவே இருந்த ஈர்ப்பு, அந்த எகாந்த வேளையில் இருவரின் கண்களும் ஒன்றோடு, ஒன்று கலந்து கதை பேசியதோடு நிறுத்தாமல், அங்கே உதடுகளும் கவி எழுத தொடங்கியது.
Faiq, அவளின் உதடுகளை சுவைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே, ஏனோ அவன் கைகள் அவன் அனுமதியின்றி, அவளின் இடுப்பை சுற்றிக் கொண்டதோடு நிறுத்தாமல், அவளின் இடுப்பு அளவை அளக்க தொடங்கியது.
அதில் பெண்ணவள் மேனி சிலிர்க்க, கூச்சத்துடன் அவனிடம் இருந்து விலக எத்தனிக்க, அவனோ இதுவரை உணராத உணர்வில் சிக்கி தவிக்க அவளை இன்னும் தன்னுள் புதைக்க எண்ணினான்.
அவனின் பிடி இறுக இறுக, அவள் மண்டையில் எச்சரிக்கை மணி ஓங்கி ஒலித்து, அவனை சற்று தள்ளிவிடவும் செய்தது. கீழே விழுந்த பிறகு, சுய உணர்விற்கு திறும்பியவன், அவள் முகத்தில் இருந்த தவிப்பு சற்று அவனை நிதானதிற்கு கொண்டு வந்தது.
“சாரி! இது .. இது.. plz இப்போ வேண்டாம் என்று திக்கி திணறி அவள் கூறவும், அவன் புரிந்து கொண்டான்.
“நான் சாரி எல்லாம் கேட்க மாட்டேன், தப்பு உன் மேல தான். நீ தான் என்னை, இப்படி உன் மேல மயக்கம் வர வச்சது?” என்று அவளிடம், சிரிப்புடன் வம்பு வளர்த்து கொண்டு இருந்தான்.
“பாவி! நீ என்னை வந்த முதல் நாளே மயக்கி வச்சு இருக்க, தப்பு எல்லாம் உன் மேல தான். நீ இதுல நான் உன்னை மயக்கி வச்சு இருக்கேன் சொல்லுற, போடா லூசு” என்று இப்பொழுது அவள் கோபத்தில் தன் தாய் மொழியான தமிழில், இன்னும் பல வசவுகளை எல்லாம் அவன் மீது பொழிந்து கொண்டு இருந்தாள்.
அவனோ, அவள் தன்னை திட்டுகிறாள் என்ற அளவில் மட்டுமே புரிந்து கொண்டான். என்ன சொல்லி தன்னை திட்டுகிறாள் என்று தெரியவில்லை, ஆனாலும் அவளின் முக பாவனைகளை ரசித்து மகிழ அவனுக்கு பிடித்து இருந்தது.
பதிலுக்கு ஏதும் அவன் பேசாமல் இருக்கவும், சட்டென்று நிறுத்தி அவனை பார்த்தாள். அவன் அவளை ரசித்துக் கொண்டு, கண்களில் குறும்பு மின்ன சிரிப்பதை பார்த்து, கோபம் குறையாமல் அவனிடம் என்னவென்று கேட்டாள்.
“கோபம் வந்தா, உன் தாய் மொழி ல தான் திட்டுவ போல. எப்படி, இவ்வளவு நேரமா தொடர்ந்து திட்ட முடியுது உன்னால?” என்று அப்பொழுதும் சிரித்துக் கொண்டே கேட்டான்.
அவன் கூறிய பிறகு தான், அவள் அதை உணர்ந்தாள்.
“ஆத்தி! இவ்வளவு நேரம் தமிழ் ல யா திட்டினோம். நல்லவேளை, அவனுக்கு தமிழ் தெரியல. அசிங்க அசிங்கமா ல திட்டிட்டேன்”.
“இவன் கூட இது ஒன்னு, அப்போ அப்போ இங்கிலீஷ் ல தான் பேசனும்ன்னு, மைண்ட் அலாரம் வைக்க வேண்டி இருக்கு” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள்.
அவனோ, அவள் தனக்குள் சிந்தனை வயப்பட்டு இருக்கிறாள் என்று உணர்ந்து, அவளை சீண்டும் நோக்கத்தில், அவள் இடுப்பை கிள்ளி விட்டான்.
“அறிவு கெட்டவன்” என்று தமிழில் திட்ட போனவள், அவன் சிரிக்கவும், கோபத்தில் அவனை அடிக்க அருகே ஏதும் கிடைக்குமா என்று தேடினாள்.
சிறு குச்சிகள் அங்கே ஓரிடத்தில் இருக்க, அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனை அடிக்க அவள் அவனை தேட, அவனோ அதற்குள் மாயமாகி இருந்தான்.
“எங்க போனான்? எப்படியும் இங்க தான வரணும், வரட்டும் அப்போ கவனிசிக்குறேன்” என்று கருவிக் கொண்டு அவனின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
அவனோ, இவளிடம் சற்று விளையாடி பார்க்க எண்ணி, கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தான். அப்பொழுது பார்த்து, அங்கே ஒரு மலை பாம்பு மெதுவாக ஊர்ந்து வர, இவள் அதை பார்த்து பயத்தில் faiq என்று கத்திவிட்டாள்.
அவள், முதல் முதலாக இவன் பெயரை அதிக சத்தம் கொடுத்ததோடு, அழுகையில் கூப்பிடவும், அவன் அதை உணர்ந்து உடனே அவள் அருகே வந்தான்.
அவள் கண்கள் சென்ற பாதையை பார்த்து, அவன் அவளிடம் சற்று அசையாமல் இருக்கும் படி கூறினான். அதோடு, அதை திசை திருப்ப அவன் எதிர் திசையில் கட்டைகளை தூக்கி எறிந்துவிட்டு, அங்கே அப்பொழுது அவன் கையில் சிக்கி இருந்த ஒரு பெருச்சாளியை தூக்கி எறிந்தான்.
அதன் சத்தம் காதை பிளக்க, உணவை தேடி அது அந்த பக்கம் சென்ற பின்னர், அவன் உடனே நெருப்பை அனைத்து, அவளை அழைத்துக் கொண்டு, உள்ளே டென்ட்டிற்குள் நுழைந்தான்.
சுற்றி நிறைய கட்டைகளும், வேறு எந்த பூச்சியும் வராமல் இருக்க சில பொடிகளையும் தூவிவிட்டு, அங்கே மெத்தையில் படுக்க ஆயத்தமானான்.
அவளோ, பயத்தில் அவன் சொல்லாமலே அவனை ஒட்டியே படுத்துக் கொண்டாள். வெளிச்சமும் அங்கே மொபைல் டார்ச் சிறிதாக இருக்க, அந்த குளிரிலும், எங்கே மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்திலும் அவனை ஒட்டியே படுத்துக் கொண்டாள்.
அவனோ, அவளின் பயத்தை பார்த்து அவளை சீண்டாமல், தான் பார்த்துக் கொள்வதாக கூறி, அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான். அவள் சற்று கண் அயர்ந்து தூங்கவும், அவள் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு, அவன் காவல் காக்க தொடங்கினான்.
வேறு எதுவும் வராமல் இருக்க, என்ன ஏற்பாடு செய்தாலும், சில நேரங்களில் ஒன்று ரெண்டு சேர்ந்தால், மோப்பம் பிடித்து கொண்டு வருவதும் உண்டு.
ஆகையால், எப்பொழுதும் கழுகை கையில் வைத்தே திரிவான் இங்கே வந்தால். இப்பொழுது, இவளுக்கு இப்படி பறவை, மிருகம் என்றால் பயம் என்று தெரிந்ததும் அவன் அவனுடைய கழுகு மிஸ்பாவை எடுத்துக் கொண்டு வரவில்லை.
இன்னும் இரண்டு நாள் வேலை இருக்கிறது இங்கே, ஆகையால் இவளின் பயத்தை பார்த்தால் தானும் தூங்க முடியாது என்று உணர்ந்து, உடனே தன் சிறு டிரான்ஸ்மிட்டர் மூலம் அவனின் நண்பனுக்கு தகவல் அனுப்பினான்.
அதன் பின், அவளை ரசித்துக் கொண்டே அன்றைய இரவை அவன் கழிக்க, அடுத்த நாள் காலை அவன் டென்ட் அருகே ஒட்டகம் ரெண்டு, கழுகு ஒன்றும் நின்று கொண்டு இருந்தது.
அவள் ஆச்சர்யமாக, அவனை பார்க்க அவனோ, இங்கு வர போகிறோம் என்று தெரிந்து செய்த ஏற்பாடு தான் என்று கூறி, அவளை ஒட்டகத்தில் ஏற கூறினான்.
“ரிகா! கடைசி ஒட்டக சவாரி தான் பண்ணனும் போல இருக்கே, இதுல ஏற கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கொண்டு வந்தது என்ன? இப்போ பாரு இரண்டாவது தடவை, இது மேல சஃபாரி” என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.
அதன் பின் அன்று காலை ஆரம்பித்த இந்த, ஒட்டக சஃபாரி மதிய வேளை ஒரு முடிவுக்கு வந்தது. அங்கே சிறிய மிக சிறிய டென்ட் ஒன்று இருந்தது, அதன் முன் தான் இப்பொழுது ஒட்டகத்தை நிறுத்தி இறங்கினர்.
அவன் கையில் சமர்த்தாக அமர்ந்து இருந்த கழுகு, இப்பொழுது ஒரு ஸ்டாண்டில் அமர்ந்து இருந்தது. இவளை அழைத்துக் கொண்டு, அங்கே அந்த டென்ட் உள்ளே சென்றவன், அவளிடம் map ஒன்றை காண்பித்தான்.
அதை பார்த்தவள், கண்களில் மின்னல் வெட்ட தான் சேகரித்த விஷயங்களை அங்கே கடை பரப்பினாள். அதை எல்லாம் பார்த்துக் கொண்டே, அவன் கொடுத்த வரைபடத்தை வைத்து, அவள் ஒரு இடத்தை கூறவும், அது இவர்கள் டென்ட் அருகிலேயே இருந்தது.
“இங்க பக்கத்துல ஏதும், பழங்காலத்து கட்டிடம் இருக்கா?” என்று அவனிடம் வினவினாள்.
“இம்.. இருந்தது, கொஞ்சம் தள்ளி. இப்போ அது இடிஞ்சு போய் இருக்கு, அங்கேயா உன் ஆராய்ச்சி சம்பந்தம் பட்டது இருக்கு?” என்று கேட்டான்.
“ஆமா! என்னை அங்க கூட்டிட்டு போறீங்களா” என்று அவள் கேட்கவும், அவனும் சரி என்றான்.
அருகில் என்பதால், எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு, இவர்கள் கவனமாக அங்கே நடந்து சென்றனர்.
அவன் கூறியது போல், கட்டிடம் இடிந்து அதனுள் ஏதும் கிடைக்காதது போல் காட்சி அளித்தது.
இவ்வளவு தூரம் வந்துவிட்டு, உள்ளே சென்று தேடாமல் இருக்க கூடாது என்று எண்ணியவள், கையில் சிறு டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவளை தொடர்ந்து, உள்ளே சென்றவன் அவள் அங்கு இருந்த ஒரு இரும்பு பீரோவை நகட்ட, இவனை அழைத்தாள்.
அவனும் அதை அவளோடு சேர்ந்து நகற்றி வைக்க, அதன் அடியில் இருந்த ஒரு தகடு மின்னிக் கொண்டு இருந்தது.
அதை எடுத்து பார்த்தவள், அதில் கூறி இருந்த குறிப்பை எடுத்து வைத்து பார்த்தாள். அதில் சொல்லப்பட்ட செய்தி, அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.
வேகமாக அதை சரி பார்க்க, அவனுடன் டென்ட் உள்ளே சென்று அவள் எடுத்து வைத்து இருந்த குறிப்புடன் ஒப்பிட்டு பார்த்தாள்.
அவள் நினைத்தது போல், அது காட்டிய இடம் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதை அருகில் இருந்தவனுடன் பகிர, அவனை அனைத்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
அவன் திகைத்து விழிக்க, அவளோ எதையும் உணராமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று, திட்டமிட தொடங்கினாள்.
கன்னத்தில் பதித்த முத்தம், உதட்டிற்கு கிடைக்காதா என்று அவன் நினைக்க, அவளோ அப்படி ஒருவன் இல்லாதது போல், அடுத்த அடுத்த வேளைகளில் மூழ்கிக் கொண்டாள்.
வயிற்றில் மணி அடிக்கவும் தான், அவனுக்கு உணவு சாப்பிடாத உணர்வு வந்து, சமைக்க தொடங்கினான். சிம்பிளான பருப்பு சோறும், பப்பெட் வகையும் வைத்து இருந்தான்.
சாப்பிட அவன் அவளை அழைக்க செல்ல, அப்பொழுதும் குறிப்பு எடுத்துக் கொண்டு இருப்பவளை பார்த்து, தனக்குள் சிரித்து அவளுக்கு தானே சாப்பாடு எடுத்து ஊட்ட தொடங்கினான்.
“ரொம்ப தேங்க்ஸ் பா! சரியான பசி. நானே வந்து சமைத்து இருப்பேன், ஆனா என் ஆராய்ச்சி முக்கால்வாசி முடிஞ்ச சந்தோஷதுல இருக்கேன்”.
“அதான் நான் சமைகவில்லை, தப்பா நினைக்காதீங்க” என்றவளை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் திணறினான் ஒரு நிமிடம்.
பின்னர் சுதாரித்து, அவளிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டும் என்று நினைத்தவன், இப்பொழுது கேட்க தொடங்கினான்.
“எத்தனை நாளா, இந்த ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்க?” என்று அவன் வினவவும், அவள் சிரித்தாள்.
“இது எங்க தாத்தா எப்போதோ ஆரம்பிச்சது, இன்னைக்கு நான் படிச்சு முடிச்சு வந்ததுக்கு அப்புறம், இரண்டு வருஷமா இதை தான் செய்துகிட்டு இருக்கேன்” என்று கூறியவள் இனி மதுரைக்கு செல்லலாம் என்று அவள் கூறவும், அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
“என்ன அதிசயமா இருக்கு!” என்று வியந்தவணை, விநோதமாக பார்த்தாள்.
“நீ தான சொன்ன, இந்த trip success பண்ணினா, உன்னை மதுரை கூட்டிட்டு போகனும்னு அதான் கொடுத்த வாக்கை காப்பாத்த இப்போ கூப்பிடுறேன் உன்னை” என்று அவள் கூறவும், அவளை சிரித்துக் கொண்டே நம்பாத பார்வை பார்த்தான்.
“சரி சரி! உண்மையை சொல்லுறேன், இப்போ எனக்கு கடைசி கட்ட ஆராய்ச்சி, அங்க தான் இருக்கு. குறிப்பு கொடுத்து இருக்காங்க, இப்போவே போகலாமா இங்க இருந்து” என்று பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தவளை, இறுக அணைத்தான்.
இன்று இரவு இங்கு தான் தங்க வேண்டும், நாளை தான் செல்ல முடியும் இங்கு இருந்து எனவும், உடனே முகம் வாடினாலும், அவன் அருகே தனித்து இருக்க போகும் இரவுக்காக, படபடவென்று காத்துக் கொண்டு இருந்தாள்.
இரவும் வந்து, வானில் முழு நிலா இருக்க, குளிருக்கு இதமாக நேற்று விட அதிக நெருபு மூட்டி, அவளுக்கும் குளிரில் இதமாக அணியும் ஜாக்கெட் ஒன்றை அணிவித்தான்.
நேற்று போல், இன்றும் முத்தம் தருவானோ என்று அவள் தவிக்க, அவனோ மதுரைக்கு செல்லலாம் என்று அவள் சொன்னதில் இருந்து, அவன் ஆராய்ச்சிக்கு தாவி விட்டான்.
அவன் எதோ சிந்தனையில் இருப்பது புரிந்தும், வெட்கம் விட்டு அவனிடம் இதை கேட்க அவளின் பெண்மை இடம் தரவில்லை.
சிறிது நேரத்தில் குளிர் காற்று பலமாக வீச, இவளை அழைத்துக் கொண்டு அந்த டென்ட் உள்ளே சென்றான். மூடும் வசதி கொண்ட பிளாஸ்டிக் டென்ட் அது, ஆகையால் உள்ளே நுழைந்து அந்த டென்ட்டை பூட்டிய அடுத்த நிமிடம், மெத்தையில் விழுந்தான்.
நேற்றும் சரியான தூக்கம் இல்லாததால், உடனே உறங்கியும் விட்டான். அவளோ, அவன் அருகில் படுத்துக் கொண்டு, அவனை தான் சைட் அடித்துக் கொண்டு இருந்தாள்.
“உன்னை நான் விட போறது இல்லை டா, எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நீயும், என்னை விரும்புற அப்படினு தெரியும் எனக்கு, ஆனா நீ இன்னும் முழுசா உன் காதலை சொல்லாம நான் சொல்ல போறது இல்லை” .
“உனக்கு லவ் பண்ணவே தெரியல டா சரியா, முதல அதுக்கு வகுப்பு எடுக்கணும். அப்புறம், என்னால தமிழ் ல தான் அதிகமா பேச முடியும், சோ மதுரை போன உடனே முதல் வேலை உனக்கு தமிழ் கத்துக் கொடுக்கிறது தான்”.
“ஹ்ம்ம்.. நீ நேத்து பண்ண வேலைக்கு, கொஞ்சம் இன்னைக்கும் முத்தம் கிடைக்கும் அப்படினு எதிர்பார்த்தேன், இப்படி ஏமாத்திட்ட போ டா” என்று செல்லமாக சலித்துக் கொண்டு, அவனை கட்டிபிடித்துக் கொண்டே படுத்து விட்டாள்.
மறுநாள், அவள் எழும் பொழுது அவன் மீது படுத்து இருந்ததை பார்த்து, பதறிக் கொண்டு விலகினாள். அவனோ, அவளை பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்தான்.
“எவ்வளவு வெயிட் நீ? இந்த கணம் இருக்க! கொஞ்சம் என்னை மாதிரி, சுறுசுறுப்பா இருந்தா இப்படி எல்லாம் வெயிட் போதாது என்ன” அவன் சொல்லிவிட்டு, சென்ற தினுசில் அவளுக்கு கோபம் வந்தது.
“கொழுப்பு, உடம்பு முழுதும் கொழுப்பு. ராஸ்கல்! என்னை சீண்டி பார்கிறதே முழு நேர வேலையா வச்சு இருப்பான் போல” என்று அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே, எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு, தேவையானதை எடுத்து வைத்தாள்.
அதற்குள், அவன் சொல்லி இருந்த ஹெலிகாப்டர் அங்கே வரவும், அவள் எடுத்த குறிப்பும் வேறு சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு முதலில் மேலே ஏணியில் ஏறி ஹெலிகாப்டர் உள்ளே சென்றாள்.
அதன் பின் அவனும் சில பொருட்களை, ஹெலிகாப்டரில் தூக்கி போட்டு அங்கு இருந்து கீழே போட்ட கயிற்றை, தன் மீது கட்டிக் கொண்டான். அதன் பின், மேலே ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்த அவன் ஏற்பாடு செய்தவன், உடனே கயிற்றை மெஷின் மூலம் மேலே இழுத்தான்.
ஹெலிகாப்டரின் உள்ளே வந்த உடன், அந்த கயிற்றை உருவி விட்டு, நேராக துபாய் palace செல்லுமாறு, அவனிடம் கூறினான்.
கேள்வியாக பார்த்த அவளிடம், உடனே எல்லா ஏற்பாடும் செய்தால் தான், சீக்கிரம் மதுரை நாளை செல்ல முடியும் என்றான்.
“அது சரி! அவன் தான் என்னை விட ரொம்ப தீவிரமா இருக்கான் போல, சீக்கிரம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லோரையும் பார்க்க போகிறோம்”.
“ஹையோ நாளைக்கு மதுரைக்கு அப்படினா, இங்க அண்ணா கிட்ட எல்லாத்தையும் சொல்லி, அவங்களுக்கும் லீவு சொல்லி, கையோட கூட்டிட்டு போக வேண்டும்” என்று எண்ணி, அவனுக்கு அழைத்தாள்.
அந்த பக்கம் அவன் செய்தி கேட்டதும், முதலில் அவளை செல்லுமாறு பணித்தான். அவன் இங்கு இருக்கும் வேறு சில வேலைகளை எல்லாம், முடித்துக் கொண்டு வருவதாக கூறினான்.
“அருங்காட்சியகம் ல, இன்னும் எனக்கு ஒப்பந்தம் படி இன்னும் 6மாத வேலை இருக்கே” என்று faiqயிடம் கூறி யோசனை கேட்டாள்.
“அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ மதுரைக்கு போக திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு. உன் பாஸ்போர்ட், விசா எல்லாம் கொடு பிரைவேட் பிளேன் ல நாளைக்கு போகனும் அங்க” என்று கூறியவனை காதலாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவனோ, அதன் பிறகு இவளை பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல், அவனின் ஆராய்ச்சி பற்றி எண்ணிக் கொண்டு இருந்தான்.
துபாய் மாளிகை மேலே, அந்த ஹெலிகாப்டர் நிற்கவும், முதலில் இவன் இறங்கி, அதன் பின் அவளை இறக்கிவிட்டு, அங்கு நின்று இருந்த ஒருவனிடம், இவளை அவள் வீட்டில் விடுமாறு கூறினான்.
அவளிடம், இன்று இரவு பாஸ்போர்ட் எல்லாம் தயார் செய்து வைத்து இருக்கும்படி கூறினான். அவனே வீட்டில் வந்து வாங்குவான் என்று எண்ணி, அவள் அன்று அவனை எதிர்பார்க்க அவனோ வரவே இல்லை.
அவனுக்கு பதில், அவனின் நண்பன் ரசாக் வந்து வாங்கி சென்றான். மனதில் ஏனோ ஏமாற்றம் வந்து, அவளை சற்று சோர்வடைய செய்தது.
மறுநாள் மதியம் ஏர்போர்ட்டில், அவள் இவனை ஆசையாக பார்க்க, அவனோ தன் நண்பன் ஆதிலுடன் தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான்.
“இவனுக்கு லவ் பண்ணவே தெரியல, தத்தி” என்று மனதிற்குள் அவனை திட்டிவிட்டு, அங்கே அமர்ந்து வாட்ஸ் ஆப் பார்க்க தொடங்கினாள்.
ஸ்டீஃபன் அனுப்பிய மெசேஜ் ஒன்று இருக்கவும், உடனே அதை ஓபன் செய்து பார்த்தாள். அதில் அவன், இவள் குறித்து கொடுத்த குறிப்புகள் எல்லாம் வைத்து, அடுத்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை கண்டுகொண்டதை பற்றி கூறி இருந்தான்.
மேலும், அதில் அவன் அடுத்து அனுப்பிய செய்தி அவளை யோசிக்க வைத்தது. அதற்குள், faiq இவளை அழைக்க, இவளோ யோசனையில் ஆழ்ந்து இருந்ததால், அவன் கூப்பிட்டதை கவனிக்கவில்லை.
சற்று குறும்பு தலை தூக்க, அவன் சத்தமாக காவி, ஹே காவி டிரஸ் போட்ட காவி என்று அழைக்கவும், இவள் காதில் அது விழுந்து, கோபத்துடன் அவனை மொத்த உடனே எழுந்து அவனை பிடிக்க ஓடினாள்.
அவனோ, இவளுக்கு ஆட்டம் காட்டி கொண்டு நேராக பிரைவேட் பிளேன் நோக்கி ஓட தொடங்கினான். பின்னால், அவளை துரத்திக் கொண்டு வந்தவள், அவன் ஏறிய பிளேனை பார்த்து அசந்து நின்றாள்.
“ஹே காவி! ஒட்டகத்துல ஏறி உட்கார்ந்து தூங்கின மாதிரி, இங்கேயும் தூங்கிடாத. அதுல நீ கீழே விழாம இருக்க, கயிற்றை வச்சு கட்டினேன்”.
“இங்க இந்த belt தாங்குமா, என்னனு தெரியல. அதனால நாலு மணி நேரம், என் கூட பேசிகிட்டே வா” என்று அவன் கூறவும், இவள் வேகமாக அதில் ஏறி, அவனை பிடித்து மொத்த தொடங்கினாள்.
மதுரை வரும்வரை, அவன் சளைக்காமல் இவளை ஹே காவி என்று வம்பு வளர்க்க, அவளோ போடா fake என்று கூறியதோடு, தமிழில் திட்ட தொடங்கி விட்டாள்.
மதுரையில் அவர்கள் கால் பதித்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர்களை சுற்றி வளைத்தனர் எதிரிகள்.
தொடரும்..