DUECP- RIYA

அத்தியாயம் 9

வெற்றி சென்றதும், கனியிடம் விசாரணை துவங்க… ‘யோவ் மாமா…. வசமா வச்சு செய்யறேன்னு சொன்னது இது தானா…?!  நா கூட, நீ தான்.. எதாச்சும் செய்வேன்னு பார்த்தா.. இந்த குரூப் கிட்ட சிக்க வச்சிட்டையே.. !!!! நல்லா வருவ ராசா.. நீ…!!! மகனே, இருடா உன்ன நைட் வச்சுக்கறேன்…’ என மனதில் வெற்றியை போதுமான வரை வருத்தவள்…

வெளியே அப்பாவியாய்.. “அத்தம்மா, மாமா எப்பவும், இப்படி சாப்பிட்டாம தான் போவாங்களா…?! இட்ஸ் டூ பேட்… சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியுமின்னு தெரியாத, மக்கு பையன பெத்து வச்சிருக்கீங்க…?!

இன்னைக்கி வரட்டும், நா போடுற போடுல.. அவரு இனி டைனிங் ஹால்லையே குடியிருப்பாங்க..!” என பேசியபடியே, “ஓகே… நா போய் நம்ம எல்லாருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன்..!” என அங்கிருந்து செல்ல போக…

“கனிம்மா நில்லு…!  அவன் டைனிங் ஹால்ல குடியிருக்கறது இருக்கட்டும், முதல்ல.. உன் கூட ரூம்ல ஒழுங்கா குடியிருக்கானா! அதாவது நா என்ன கேட்கறேன்னா… ?!” என, ‘அதை எப்படி வெளிப்படையாய் கேட்க!’ என தயங்கி நிறுத்த…  

அது புரிந்த கனி, “அதெல்லாம் நாங்க சந்தோஷமா….” என ஆரம்பித்தவளை முடிக்கவிடாது… “உண்மைய மட்டும்.. சொல்லு கனி..!” என சந்திரா சொன்ன விதத்திலேயே, ‘பொய் சொல்லாதே!’ என்ற தோணி நிறைந்திருக்க….

“ஹூம்…!!!” என்று பெருமூச்சை விட்ட கனி.. “அத்தம்மா… அவருக்கு நம்ம சொன்ன பொய் தெரிஞ்சிடுச்சு….!” என்றதும்…

‘எப்படி?! எப்போ?!” என்ற கேள்வி சந்திராவினுள் எழ, பிரகாஷ் தமிழுக்கோ ‘இனி அவள் வாழ்க்கை?!’ என்ற பயமே பிரதானமாய்  எழுந்தது.

“கனி..  நீ தான் அவன்கிட்ட சொன்னையா?!”என சந்திரா கேட்க.. மறுப்பாய் தலை அசைத்தவள்,

“அதுக்கும் முன்னாடியே அவங்களுக்கு விசயம் தெரிஞ்சிடுச்சு போல அத்தம்மா….!, மாமா தான்.. நா போனதும் உண்மையா, பொய்யான்னு கேட்டாங்க..?! நா, ஆமா உண்மை தான்னு சொல்லிட்டேன்” என சொல்லிட…

“போச்சு, போச்சு… ! உன் தலையில நீயே மண் அள்ளி போட்டுட்டுகிட்டையே!” என தமிழ் ஆதங்கத்தில் புலம்ப…

“அம்மா விழுந்த மண்ண நீ வேணுமின்னா அலசிவிடு..!” என கடுப்பாக சொன்னவள்,

“அத்தம்மா, அப்பா, அம்மா எல்லாருக்கும் தான் சொல்றேன்… நல்லா கேட்டுக்கோங்க.. திரும்ப, திரும்ப  சொன்னதையே சொல்ல கனி விரும்ப மாட்டா…. ! ஓகே..!” என்றவள்….

“வெற்றி மாமாக்கு… என் மேல ஒரு ‘இது..!’ இருக்கு… அதே மாதிரி, அவருக்கு கோபமும் இருக்கு…! பட்… ரெண்டுமே இப்ப சமஅளவா இருக்கறதால, கொஞ்சம் தடுமாறிட்டு இருக்காரூ. என்மேல இருக்கற கோபம் போய், அந்த இடத்த லவ் நிறைஞ்சா… எல்லாமே சரியாகிடும்….

என்னோட கெஸ் சரின்னா… நேத்து மதியமே, மாமாக்கு உண்மை தெரிஞ்சிக்கணும். அதை வச்சு ,உங்க யாராவது கிட்ட, மாமா எதாவது கேட்டாங்களா?! இல்லல்ல… அப்போ அவங்க எக்காரணம் கொண்டும், உங்க எல்லாரோட  மனசும் நோகற மாதிரி நடக்க மாட்டாங்க..

அவரோட கோபம் எத்தன நாளைக்கி, என்கிட்ட செல்லுமுன்னு.. நானும் பார்க்க தானே போறேன்…! நா, பண்ண போற சேட்டையில, தானா… வழிக்கு வரபோறார் பாருங்க…!” என நிதர்ஷத்தை சொன்னதோடு…

‘வெற்றியை எப்படி படுத்தி எடுக்கலாம்?!’ என்ற சிந்தனையில் கனி இறங்க…

கனி சொன்னது போல, உண்மை அறிந்தும், தங்கள் முன் வெளிப்படுத்தாமல் நாசுக்காக நடந்து கொள்ளும் வெற்றி, நிச்சயம் அவளை விட்டு விட மாட்டான்! என்பது தெளிவாக… அனைவருக்கும், அதுவே இப்போதைக்கு போதுமானதாய் இருந்தது.


****

வேகமாக வெளியேறிய வெற்றிக்கோ, கண்களின் உறுத்தல் குறையாததோடு, வெயிலின் தாக்கம் கண்ணில் மேலும் கண்ணீரை வர வைக்க, தனது கூலரை அணிந்தவன், தனது நண்பன் பணிபுரியும் மருத்துவமனைக்கு தனது வாகனத்தை செலுத்தினான்.

“எல்லாம் இந்த அராத்தால வந்தது.. நா ஒரு லூசு… உண்மை தெரியாம எவ்வளவோ ப்ளான் போட்டு இருந்தேன்… அவளோட, எப்படியெல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.. அவள் என்னோட வாழுற கடைசி நிமிஷம் வரைக்கும், எப்படி சந்தோஷமா வச்சுக்கணுமின்னு.. நினச்சிருந்தேன்! எல்லாமே நாடகமுன்னு சொல்லி, என்னை இப்படி ஏமாத்தி புலம்ப வச்சிட்டாளே!” என்ற ஆதங்கத்தோடு, வாகனத்தை மருத்துவமனை வாசலில் நிறுத்தி, தனது நண்பன் ரகுவிற்கு அழைத்தான்.


“ஹாய் மச்சான்!  புதுமாப்பிள்ளக்கு காலைல, எங்க நியாபகம் எல்லாம் வந்திருக்கு.. என்ன விசயம்.. எதாவது டவுட்டா?!” என கேலியாய் கேட்க..

“ஊம்…! டவுட் இல்ல..  என் பொண்டாட்டிக்கு டெலிவரிக்கு புக் பண்ணலாமின்னு தான்..!” என கடுப்பில் சொல்ல..

“வெற்றி..!!! நீ எதுலையும் செம பாஸ்ட் தான். உன்னோட மூவ்ஸ் அதிரடியா இருக்கும் ன்னு நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்…! அதுக்காக இப்படி…! நா எதிர்பார்க்கலடா….!” என அதிர்ந்து போய் பேசுபவனை நினைத்து பல்லை கடித்தவன்…

“டேய்… எங்கடா இருக்க இப்ப… அத சொல்லி தொல முதல்ல” என கேட்டவனுக்கு..  

“ஹாஸ்பிட்டல்ல தான் மச்சி…! ஒரு எமர்ஜென்சின்னு நேரமே வந்தேன். இப்ப வேலை முடுஞ்சுது கிளம்ப போறேன்… எதுக்கு கேட்கற..?!” என பதில் சொன்ன ரகுவிடம்….

“சரி வெயிட் பண்ணு. உன் கேபினுக்கு வர்றேன்!” என சொல்லி, கட் செய்து போனை பாக்கெட்டில் போட்டவன், நேராக அவனின் கேபினுக்கு செல்ல…

“வாடா மச்சி…! என்னடா… யூனிஃபார்ம்ல..!! நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிக்கு… இப்ப, இப்படி வந்து நிக்கற , எதாவது என்கொய்ரியா?!” என அவனின் நடவடிக்கையை பார்த்து கேட்க..

“இல்லடா..! எனக்கு தான்.. டாக்டர கண்ஷல்ட் பண்ணிட்டு போகணும்டா…” என சொல்லி, அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரந்தான்.

“டேய் மச்சான்..!! நேத்து நைட் எதாவது பிராப்பளமாடா ?! அதான் காலைலயே ‘அதுக்கான’ டாக்டர பார்க்க வந்தியா…?! இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே செக் பண்ணிக்கறதில்ல…!!”  என சொல்ல…

‘நைட், எங்களுக்குள்ள பிரச்சனைன்னு இவன் எப்படி கெஸ் பண்ணான்?! ஓ.. இவன் போட்டு கொடுத்ததால போல..! அப்ப எதுக்கு, அதுக்கான டாக்டர்ன்னு அழுத்தி….’ என புரியாது சில நொடி யோசித்தவன்.. புரிந்த நொடி.. “பரதேசி…! உன்னையெல்லாம்..!!” என எழுந்து அவனின் கழுத்தை பிடிக்க,

இருவரும் செய்த அதிரடி செயலால், அடுத்த நிமிடம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் என்ற நிலையில் நிலத்தில் கிடக்க,

“டேய்..! டேய்..! விடுடா…! உனக்கு சந்ததி வர வைக்க வேண்டி பேசினா.. என் சங்க ஒடைக்க பார்க்கலாமா ..?!” என வெற்றியை தள்ளிவிட…

“ரகு .. நானே கொலை காண்டுல வந்திருக்கேன். நீ வேற, இப்படி பேசி வெறுப்பேத்திட்டு..” என சொல்லி தரையிலேயே அமர்ந்தான் வெற்றி.

அவனுக்கு எதிரே, ஒரு கையை கன்னத்திற்கு முட்டி கொடுத்து படுத்த ரகு… “என்ன மச்சி… உன் பிரச்சன?! தெளிவா சொல்லு?” என கதை கேட்கும் எபெக்ட்டில் கேட்க…

அவனை முறைத்த  படியே, “எல்லாம் அந்த அராத்தால தான்..! சரியான ராங்கி.. லடாயீ..” என முனுமுனுக்க….

“யார சொல்லற நீ ?!”  

“எல்லாம் நா கட்டிக்கிட்டவள தான் சொல்லிட்டு இருக்கேன். பொண்ணாடா அவ… சரியான ரவுடி…!” என கடுப்பில் சொல்ல,

மெல்லிய புன்னகையோடு..
“அடி பலமோ…?!”என சம்மந்தமில்லாமல் கேட்ட ரகு, தொடர்ந்து, “விடு மச்சான்.. பொண்டாட்டின்னு வந்தாலே, அவங்க அடுச்சு விளையாடற புட்பாலா ஆகிட வேண்டியது.. கணவர்களின் தலையெழுத்து. இதுல நீ மட்டும் விதி விலக்கா… !” என சொன்னதில்,

வெற்றிக்கும் லேசாக சிரிப்பு வர, “மச்சி அவ புட்பால் போல அடிக்கலடா..! வெறும் பால் வச்சே பழிவாங்கிட்டா…!” என்றவாரே… தொடர்ந்து காலை நடந்ததை சொல்ல, ஒருக்களித்து படுத்திருந்த நிலையை மாற்றி, மல்லாந்து படுத்த ரகு “ஹா…!!ஹா…!!” என வாய்விட்டு சிரிக்க…

“ஏன்டா.. அவ புளுச்சு போன பால ஊத்தி, என் கண்ணுல பிரச்சனையாகிடுச்சுன்னு சொன்னா.. இப்படி சிரிக்கற….!”

“இல்ல மச்சி.. நீ அவளுக்கு, ‘வொஸ்ட் டே!’ சொன்னே..! பதிலுக்கு அவ, ‘குட் டே!’ சொன்னா.. நல்லா யோசி யாருக்கு எது நடக்குதுன்னு…?!”  என தத்துவம் பேசியவனை பார்த்த வெற்றி,

“டேய் ரகு முடியலடா…! உன் மொக்க.. தயவு செஞ்சு, உங்க ஹாஸ்பிடல்ல இருக்கற, ஐ ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போ.. இல்ல, ஆள விடு.. வேற பக்கம் போய் பார்த்துக்கறேன்..” என எழுந்திட…

“கோவப்படாத மச்சி..! இரு டாக்டர் வந்துட்டாரான்னு கேட்கறேன்” என்றவன், எழுந்து ரிஷப்ஷனில் விசாரித்து, வெற்றியை அதற்கான மருத்துவரிடம் அழைத்து வந்தான்.

வெற்றியை பரிசோதித்த மருத்துவர், “கண்ணுல துரும்பா விழுந்த எதையோ, தண்ணியில கழுவி எடுக்காறதுக்கு முன்னாடி, கண்ண கசக்கி இருக்கீங்க.. அதான் இப்படி… என்ன விழுந்துச்சு ?!” என கேட்க..

வெற்றி நடந்ததை சொல்ல தயங்க.. சமயோஜிதமாய் ரகு… “காலைல, ஒரு கேஸை பிடிக்க போயிருக்கான். அக்யூஸ்ட், இவன் முகத்துல, கையில இருந்த பால ஊத்திட்டான். நல்ல வேளை, பால் ஆறி போனதால முகத்துக்கு எதுவுமாகல.. அவன் ‘ஸ்ராங்கா…!’ இருக்க பாதாம பால் வச்சிப்பான் போல டாக்டர்…” என சொல்லி, வெற்றியை பார்த்து கண்ணடிக்க.. டாக்டர் அறியாத வாறு ரகுவை வெற்றி முறைக்க…

“அப்ப, அதுல இருந்த பாதாம் தூள் கண்ணுல பட்டிருக்கும்.. ஓகே, இந்த சொட்டு மருந்த, ரெண்டு நாளைக்கி கண்ணுல மூனு சொட்டு ஊத்திட்டு படுங்க, சரியாகிடும்..”என சொல்லி கொடுக்க, “தேங்க்ஸ்…” சொல்லி வெளியே வந்தனர்.

“ஓகே மச்சி! நா கிளம்பறேன்” என வெற்றி சொல்ல… “மச்சான் ஒரு நிமிஷம், உன்கிட்ட கொஞ்சமே பேசணும்… இப்ப நீ ப்ரீயா இருக்கியா.. என  கேட்ட ரகுவிடம்,

“என்ன விசயம் டா…?!” என வெற்றி கேட்க,

“கனி விசயம் தான். நா, நேத்தே சொன்னேன்.. அவ தான், உனக்கு சரியான ஜோடின்னு… அப்புறமும், நீ இன்னைக்கி காலைல நடந்தத சொல்லும் போதே, கெஸ் பண்ணிட்டேன்… உங்களோட லைப் இன்னும் ஆரம்பம் ஆகலைன்னு….! ஏன்டா…?!”

“மச்சான்.. அவ எதை சொல்லியிருந்தாலும், ஓகேடா ! ஆனா.. மரணத்த சொல்லி, என்னை ஏமாத்தினது தான் தாங்க முடியல.. உயிரோட மதிப்பு புரியாதவ..! எல்லா விசயத்திலும் விளையாட்டு… பெரியவங்கன்னு  மரியாதை இல்ல!” என அவளின் குறையை அடுக்க…

“அவ சொன்னது பொய் தான் இல்லங்கல… பட்.. அந்த பொய் சொல்ல காரணம், உன் மேல இருந்த காதல்.. அத முதல்ல புருஞ்சுக்கோ…!” எனும் போதே, அவர்கள் நின்றிருக்கும் பகுதிக்கு ஓடி வந்த நர்ஸ் சொன்ன தகவலில், எமர்ஜென்சி நோக்கி சென்ற ரகுவை தொடர்ந்தான் வெற்றி.

அங்கு கனியின் வயதை ஒத்திருக்கும் ஒரு பெண், தலையிலும், உடலிலும் ரத்தம் பெருக ஸ்ரெக்ச்சரில் இருக்க… ரகு மருத்துவனாய், அவளின் நாடியை பரிசோதித்தவனுக்கு புரிந்து போனாது அந்த பெண்ணின் மரணம் தவிர்க்க இயலாது என்பது….

இன்னும் சில மணித்துளியில், அவள் உயிர் பிரிவது உறுதி என்பதால், மேற்கொண்டு எந்த சிகிச்சையும் தொடராமல் இருந்தவனை …

நெருங்கிய வெற்றி, “என்னடா.. உள்ள கொண்டு போக சொல்லாம நிக்கற..?!” என கேட்க… வெற்றியை பார்த்தவன் பார்வையே சொன்னது, ‘இனி அடுத்து என்ன!’ என்பதை…

அந்த பெண்ணின் பெற்றோரின் கதறலோடும், உறவினர்களின் கண்ணீரோடும், அந்த பெண்ணின் சடலம் வெளியே கொண்டு செல்லப்பட…

 

ரகு தனது அறைக்கு, வெற்றியோடு வந்தவன்.. “இப்ப பார்த்தியே.. இது மாதிரி நிறைய, நீயும் சரி, நானும் சரி.. நம்ம வாழ்க்கையில பார்த்திட்டோம். அதுவே சொல்லும், மரணம் எப்போ, எப்படி யாருக்கு வருமின்னு…யாராலையும் சொல்ல முடியாதுன்னு…!

கனி சொன்னது பொய் தான்..! ஆனா.. அது நடக்கவே நடக்காதுன்னு, நீ சொல்ல முடியுமா…?! வாழ்க்கையில மரணம் வந்தே தீரும்… என்ன ஒன்னு.. காலம் நேரம் தெரியாத வரை, சந்தோஷமா இருக்கலாம்.. தெரிஞ்சா நிம்மதி போயிடும்…!

சோ, உனக்கு கிடச்ச வாழ்க்கைய இருக்கற வரை சந்தோஷமா வாழ பாரு… யார், யாருக்கு முன்னாடி போவா?! யார் சொல்ல…!

இப்ப இறந்த அந்த பொண்ணு மேல தப்பே இல்ல…  காலேஜ் போக பஸ்ஸூக்காக, அவங்க அப்பா ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு, பத்தடி கூட போகல… தண்ணி போட்டுட்டு ஓட்டுன, ஒரு பெரும் குடிமகன் ஆட்டோ, அந்த இடத்துல இருந்த அத்தன பேர் மேலையும் இடுச்சு தள்ளிட்டு போயிருக்கு…

பத்து நிமிஷம் முன்னாடி வீட்டுல இருந்து சந்தோஷமா வந்த பொண்ணு, பிணமா போறா…! உனக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டியதில்ல…!

அப்புறம்.. கனிய பத்தி நீ சொன்ன மத்த விசயங்கள்.. நீ அவகிட்ட பேசி, பழகி பாரு..! அப்ப தெரியும் அவள.  எனக்கு தெரிஞ்ச அளவில் கூட, உனக்கு அவள தெரியல… அவள புருஞ்சுக்க முயற்சி செய்!” என சொல்லி வெற்றியின் முகம் பார்க்க..

இதுவரை இருந்த கோபம் குறைந்து, ஒரு வித சிந்தனை வந்தது புரிய,’அப்பாடா..! பையன் யோசிக்க ஆரம்பிச்சிட்டான்..! இனி கரெக்ட்டா.. ரூட் பிடிச்சு வந்திடுவான்’  என மனதில் தோன்றிய சந்தோஷத்தோடு, அனுப்பி வைத்த ரகுவிற்கு தெரியவில்லையே… அங்கு கனி இவனை கடுப்பேத்தும் முயற்சியை செவ்வனே செய்து வைக்க ரெடியாக இருக்கிறாள் என்று….