ENE— epi 21

ENE— epi 21

அத்தியாயம் 21

செல்லக்  கிளி  என்னை  குளிப்பிக்க  வேண்டும்

சேலைத்  தலைப்பில்  துவட்டிட  வேண்டும்

கல்லு  சிலை  போலே நீ   நிற்க  வேண்டும்

கண்கள்  பார்த்துத்  தலைவார  வேண்டும்

நீ  வந்து  இலை  போட  வேண்டும்

நான்  வந்து  பரிமாற  வேண்டும்

“சொல்லு வேணு, அன்றைக்கு என்ன நடந்தது?”

விபாவுக்கு அவளிடம் எதையும் சொல்வதற்கு இஷ்டமில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

பொறுமையை இழந்த தானு எழுந்து விபாவின் முன் வந்து நின்றாள். அவனது தாடையைப் பற்றி நிமிர்த்தியவள் அவனது கண்களோடு தனது கண்களை கலக்க விட்டாள்.

அவளது கண்களை நேருக்கு நேர் சந்திக்க தடுமாறிய விபா பார்வையை தழைத்துக்கொண்டான்.

“முதல் இரண்டு நாள் எனக்கு ஏதோ கனவுல இருக்கற மாதிரியே இருந்தது வேணு.முதல்ல அந்த பாட்டு தான் ஞாபகம் வந்தது. அந்த குரலும் பாட்டும் நான் தூங்கும் போதும் முழிச்சிருக்கற போதும் என்னை சுத்தி சுத்தி வந்தது. அது உன்னோட குரல் என்கிறதை கூட என்னால கண்டு பிடிக்க முடியலை. அப்படி ஒரு மந்தப்புத்தியோட இருந்தேன்.”

“தானு, உனக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலம்மா. நடக்கவும் விடமாட்டேன். அப்புறம் எதுக்கு இந்த அலசல்?”

“எனக்கு தெரியும் வேணு. ஒன்னும் நடக்கலன்னு தெரியும். பின்னால் இருந்து என் வாயை யாரோ பொத்துன வரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு. என் வாயை பொத்துனவங்க எனக்கு ட்ரக்ஸ் குடுத்து இருக்காங்க. ட்ரக்ஸ் எபெக்ட குறைக்க இதோ, லேசா வீங்கி இருக்கே, இந்த கைல ட்ரீப்ஸ் ஏத்தப்பட்டிருக்கு.ரேப் அட்டேம்ப்ட் எதுவும் நடக்கல. அது வரைக்கும் என்னால யூகிக்க முடியுது. எப்படின்னு கேக்குறியா, இன்னும் டாக்டருக்கு படிக்கலைன்னாலும் நான் பாதி டாக்டர் தான். மருத்துவ சம்பந்தபட்ட புத்தகங்களை கரைச்சு குடிச்சிருக்கேன். இந்த மாதிரி சம்பவங்கள் நடந்தா உடல்ல என்ன என்ன மாற்றங்கள் இருக்கும் என்று ஓரளவு எனக்கு தெரியும். எனக்கு புரியாதது கரெக்டா அந்த நேரத்துல நீ எப்படி வந்த வேணு?”

“நம்மளோட கடையை அங்கேயும் திறக்க பேச்சு வார்த்தை போய்கிட்டு இருக்கு தானு. அதுக்கு தான் வந்தேன்”

விபா பேசுவதை குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் பிரேக் போட்ட மாதிரி திடீரென நின்றாள்.

“வெய்ட் வெய்ட். ஓ மை காட்! இப்பத்தான் இந்த புதிரோட ஒவ்வொரு பாகமும் சோல்வ் ஆகுது. கார்டன் சூட், பேர்த்டே பார்ட்டி, கொன்னெக்டிங் டோர் இதெல்லாம் உன் வேலையா?”

ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினான் விபா.

தொப்பென மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள் தானு. இரு கைகளாலும் தலையைத் தாங்கி கொண்டாள்.

“வேணு!!! நான் ரொம்ப கோபமா இருக்கேன். நான் பினாங்குக்கு வந்தது முதல் கிளம்புன வரைக்கும் என்ன நடந்ததுன்னு டீடெய்லா இப்ப சொல்லுற. இப்படியே மௌன சாமியார் மாதிரி உட்கார்ந்திருந்த நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.”

அப்படி மிரட்டியும் விபாவிடம் இருந்து எந்த பதிலையும் பெற முடியவில்லை.

‘என்கிட்டயேவா. இப்ப பாரு எப்படி உன் வாயை திறக்க வைக்கிறேன்’ என கறுவியவள் மெல்ல அவனை நெருங்கி அமர்ந்தாள். அவனது வலது கையில் தனது இடது கையை கோர்த்துக் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

“சொல்லு வேணு, ப்ளீஸ்”

அவள் கையைப் பிடித்த உடனே உலகத்தை மறந்து இருந்தவன், அவளது பளீரென்ற சிரிப்பில் மகுடிக்கு மயங்கிய நாகம் போல் அனைத்தையும் ஒப்பித்தான். அந்த மயக்கத்திலும், அவளுக்கு செக்குரிட்டி பாதுகாப்பு போட்டிருப்தை பற்றி மூச்சுவிடவில்லை அவன்.

அனைத்தையும் கேட்டவள் அவனது கரத்திலிருந்து மெல்ல அவளது கையை விடுவித்துக் கொண்டாள். விபா காப்பாற்றி இருக்காவிட்டால் தனக்கு என்ன நடந்திருக்கும் என நினக்கும் போதே உடல் நடுங்கியது. காலை மேலே தூக்கி முழங்கால்களில் முகம் புதைத்துக் கொண்டவள் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள்.

மெல்ல அவளது முதுகை ஆறுதலாக தடவி கொடுத்தான் விபாகர்.

“டோண்ட் டச் மீ ” குரல் மட்டும் வந்தது.

‘இவ மட்டும் என்னை தொடலாம், ஆனா நான்  தொட கூடாது. இது எந்த ஊரு நியாயம்? உட்கார்ந்து பீல் பண்ணுறத பாரு. இதுக்கு தான் சொல்ல வேணாம்னு இருந்தேன். அப்படியே மயக்கி விஷயத்தை வாங்கிட்டா ’ என மறுகினான் விபாகர்.

“ரொம்ப தேங்க்ஸ் வேணு” குரல் கம்மியிருந்தது.

“விடு தானு. எனக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம். வாய்க்கு வயிறு தேங்கஸ் சொல்லுதா, இல்ல கைக்கு வாய் தேங்க்ஸ் சொல்லுதா. நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்” என்றவனை முறைத்தாள் தானு.

“ஏன் வேணு, லோக்கல் பேங்க்ல அக்கவுண்ட் ஏதாச்சும் வச்சிருக்கியா?”

“இருக்கு தானும்மா. சொல்லு உனக்கு எவ்வளவு வேணும். இப்பவே ட்ரான்ஸ்பர் பண்ணுறேன். சொல்லுடா”

“அக்கவுண்ட் நம்பர் மட்டும் குடு”

“எதுக்கு” என சந்தேகமாய் கேட்டான் விபா.

“எனக்காக இவ்வளவு செலவு செஞ்சிருக்க. திருப்பி குடுக்கத்தான். ஒரு ஐந்தாயிரம் ஆகியிருக்குமா? என்னால மொத்தமா குடுக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமா அக்கவுண்ட்ல போட்டுருறேன்”

“தானு ! நான் உன் கிட்ட பணம் கேட்டேனா?”

” நல்லா கவனி வேணு. என்னை அவனுங்க கிட்ட இருந்து காப்பாத்தி இருக்க. அதனால தான் பொறுமையா பேசிகிட்டு இருக்கேன். இல்லைனா நீ செஞ்ச இந்த தில்லாலங்கடி வேலைக்கு ஜாக்கி சான் மாதிரி பறந்து பறந்து அடிச்சிருப்பேன்”

“நீ என்னை அடிச்சிருவியா? அதுவும் பறந்து பறந்து. நான் பூன்னு ஊதுனாலே நாலு சுத்து சுத்திருவ. இதுல உனக்கு ஏன் இந்த பில்ட் அப் பேபிமா?” என்றவாரே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் விபா.

அவன் சிரித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள் தானு. பிறகு நாற்காலியில் வைத்திருந்த மினரல் வாட்டரை எடுத்து ஒரு மிடறு குடித்தவள், மீதியை அப்படியே அவன் தலையில் கவிழ்த்தாள்.

ஜில்லென்ற தண்ணீர் தலையை நனைத்ததும் சிலிர்த்துப் போன விபா, தன்னிச்சையாக தடுக்க எழுந்த கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். அவள் ஊற்றி முடித்ததும், நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,

“இந்த அபிஷேகம் எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா தானு?” என கேட்டான்.

“அன்னிக்கு பீச்சுல என் மேல தண்ணியை அடிச்சுட்டு போனியே, அதுக்குத்தான். பழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம்”

“நான் எது குடுத்தாலும் திருப்பி குடுத்துருவியா தானு?”

“அதிலென்ன சந்தேகம் உனக்கு. டெபினட்லி திருப்பி குடுத்துருவேன்.”

மெல்ல எழுந்து அவளது வலது கையைப் பற்றியவன்,

“நீ சுயநினைவு இல்லாம இருந்தப்போ, இதோ இந்த கையில முத்தம் குடுத்தேன். அப்புறம்” அவளது கன்னத்தை ஆசையாக தடவியவன் “இங்கேயும் குடுத்தேன்.” மெல்ல அவளது உதட்டை வருடியவன் “இங்கயும் தான். நல்ல பிள்ளையா இப்பவே நான் குடுத்த எல்லாத்தையும் திருப்பிக் குடு. கமான் குவிக்”

“டேய் வேணு” என கத்தியபடியே அவனை அடிக்க கையை தூக்கினாள் தானு. அவளிடம் அகப்படாமல் ஓட ஆரம்பித்தான் விபா.

“ஒழுங்கா நின்னுரு. நானே பிடிச்சேன் ரொம்ப சேதாரம் ஆயிரும்” என்றபடியே அவனை துரத்தினாள் தானு.

அந்த லேக்கையே ஒரு சுற்று சுற்றியவர்கள் மூச்சு வாங்க பொத்தென புல்லில் அமர்ந்தார்கள்.

“நீ என்னை இவ்வளவு கேர் எடுத்து பார்த்துகிட்டதுக்கு என் ப்ரண்ட் லிஸ்ட்ல உன்னையும் சேர்த்துக்கலாம்ன்னு நினைச்சேன் வேணு. ஆனா முத்தம் கித்தம்னு என்னை கடுப்பேத்திட்ட. இனிமே உன் முகத்திலே முழிக்க மாட்டேன்.”

“தானு, சும்மா விளையாட்டுக்கு சென்னேன்டா. நீ சுயநினைவு இல்லாம இருக்கறப்போ நான் அட்வான்டேஜ் எடுத்துக்குவேனா. என்னை நம்புடா ப்ளீஸ்”

‘கையிலும் , நெற்றியிலும் ஆசையா முத்தம் குடுத்தேன் தான். உனக்கு ஒன்னும் ஆகலை, நீ பத்திரமா தான் இருக்கன்ற சந்தோஷத்துல குடுத்தேன். அதுக்கு போய் மறுபடியும் என்னை ஒதுக்குனா எப்படி தானும்மா. அதனால தான் சின்னதா ஒரு பொய். பொய்ன்னு ஏன் சொல்லனும். உண்மையை மறைத்தல்ன்னு வேணும்னா வைச்சுக்கலாம். இப்பத்தான் அதிசயமா நட்பு கரம் நீட்டுற. அதை அப்படியே கப்புன்னு பிடிச்சுகிட்டு அடுத்த லெவலுக்கு போயிடமாட்டேன்.’ என எண்ணியபடியே அவளிடம் வலது கையை நீட்டினான் விபா.

“ப்ரேண்ட்ஸ்?”

அவனது கையையே சிறிது நேரம் உற்று நோக்கியவள்,

“என்னோட ப்ரண்ட்ஷிப் பேக்கேஜா தான் வரும். உனக்கு சம்மதமா?” என கேட்டாள்.

“புரியலை தானு”

“டேனியையும் நம்ம ப்ரண்ட்ஷிப்ல சேர்த்துக்கணும். உனக்கு ஓகேவா வேணு?”

‘என்னடா இன்னும் அந்த வைட் மங்க்கி பேர் இவ பேச்சுல அடிபடலையேன்னு பார்த்தேன். ஹ்ம்ம். பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரத்துல ஏறி தான் ஆகனும். அது புளிய மரமா முறுங்கை மரமா? ஆமா இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் இப்போ.’ என நொந்து கொண்டவன் வெளியே சிரித்த முகமாய்,

“கண்டிப்பா தானு. டேனி இல்லாமலா. இனிமே நீங்க ரெண்டு பேரும் என் ரெண்டு கண்கள்.” என வசனத்தை அவிழ்த்து விட்டான்.,

தானுவின் முகம் பூவாய் மலர்ந்தது. சந்தோஷமாக தனது கரத்தை அவனது கரத்தில் வைத்து குலுக்கினாள்.

“டேனி என்னை நண்பனா ஏத்துக்குவானா தானு?” என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேட்டான் விபா.

“கண்டிப்பா. நான் எது சொன்னாலும் அவன் கேட்பான். அவன் எது சொன்னாலும் நான் கேட்பேன்” என சிரித்தாள் தானு.

விபாவின் உள்ளம் பொறாமையால் பொசுங்கியது.

‘இதே வசனத்தை எனக்காக உன்னை சொல்ல வைப்பேன் தானும்மா.’ என மனதில் உறுதி எடுத்தவன்,

“நம்ம பிரண்ட்ஷிப்பை செலெபரேட் பண்ண எங்காவது போலாமா தானு?”

“இரு வேணு, நம்ப மூணு பேருக்கும் ஒரு குரூப் கிரியேட் பண்ணுறேன். குரூப் பேரு ‘சோல் மேட்’. நல்லா இருக்கா?”

‘நாம ரெண்டு பேரு மட்டும்தான் சோல்மேட். அவனை எதுக்கு இதுல கூட்டு சேர்க்கிற?’ என பொருமியவன்,

“சூப்பர் தானு. ரொம்ப பொருத்தமா இருக்கு” என வெளியில் சொன்னான்.

“என்னோட மெடிக்கல் லீவ் இன்னியோட முடியுது. சோ நாம மூனு பேரும் இன்னிக்கு ஈவ்னிங் படம் பார்க்க போகலாம். ஓகேவா வேணு?”

“ஓகே தான் தானு.”

“சரி டிக்கட் நான் புக் பண்ணுறேன். ஏற்கனெவே நீ எனக்கு ரொம்ப செலவு பண்ணிட்ட. அதோட இன்னொன்னு வேணு, பிரண்ட்ஸ்சா இருந்தாலும், உன் பணத்தை நான் திருப்பி குடுத்துருவேன். நீயும் கண்டிப்பா வாங்கிக்கணும். இதுக்கு ஒத்துக்கிட்டா. சோல்மேட் குரூப்ல நாம மூனு பேரும் இருப்போம். இல்லைன்னா நீ மட்டும்தான் இருப்ப. எப்படி வசதி?”

‘அடியே! இந்த மாத ஃபோர்ப்ஸ் இந்தியா மெகசின்ல  என்னை பற்றி ‘எளிஜிபள் பில்லியனர் ஆப் தெ இயர்’ன்னு ஒரு ஆர்டிக்களே வெளியாக்கி இருகாங்க. என்கிட்ட இந்த பிசாத்து ஐந்தாயிரத்துக்கு கணக்கு பார்க்கறீயே. நான் எங்க போய் முட்டிக்க’ “சரி தானு. கண்டிப்பா வாங்கிக்கறேன். ஈவ்னிங் எங்க, எப்போ நாம மூனு பேரும் பார்க்க போறோம்னு மேசெஜ் பண்ணிரு. கொஞ்ச நேரம் எனக்கு ‘எலெகண்ட்”ல வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்துறரேன்.” என்றவாரே எழுந்தான்.“ஓகே டன்” என தானும் எழுந்தாள்.“தானு, மோட்டர்பைக்கை கொஞ்சம் மெதுவா ஓட்டிட்டு போ.”“மெதுவா தானே வந்தேன் வேணு. இதுக்கு முன்னே நான் ஓட்டுனதை நீ பார்த்திருக்கணும். ஹ்ம்ம். ஒரு தடவை கீழ விழுந்துட்டேன்னு டேனி ப்ராமிஸ் வாங்கிட்டான். அதான் இப்படி உருட்டிக்கிட்டு வரதா போச்சு” என பெருமூச்சு விட்டவள், பைக்கை நோக்கி நடந்தாள். ‘இதுக்கு பேருதான் உங்க ஊருல உருட்டிகிட்டு வரதா? உன் அழும்பு தாங்க முடியலைடி’மாலை ஆறு மணிக்கு மூவரும் அந்த ஷாப்பிங் காப்ம்ளேக்ஸ் வளாகத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. சில பொருட்கள் வாங்க வேண்டும் என தானு சற்று முன்னதாகவே வந்திருந்தாள். டேனி வீட்டுக்கு அம்மா வழி சொந்தங்கள் வந்திருப்பதால், ஆறு மணிக்குள் வந்து விடுவதாக சொல்லியிருந்தான். விபாவும் சீக்கிரமே வந்து விடவும், இருவரும் பேசியபடியே போப்கார்ன்னும் குளிர்பானமும் வாங்கி கொண்டு டேனிக்காக காத்திருந்தனர். மணி மாலை ஆறை நெருங்கி கொண்டிருந்தது. டேனியை இன்னும் காணவில்லை. “என்ன தானு, நம்ப பிரண்ட் ஆளையே காணோம். படம் வேற போட போறாங்க. எதுக்கும் கோல் பண்ணி பாரேன்” தானுவும் மெசேஜ் மேல் மேசெஜாக அனுப்பி கொண்டிருந்தாள். கோல் செய்தாலும் ரிங் போனது ஆனால் அவன் எடுக்கவில்லை.“தெரியலையே வேணு. போனை எடுக்க மாட்டிக்கிறான்” என சொல்லியவாறே விடாமல் முயன்றாள் தானு.ஐந்து நிமிடம் சென்று டேனியிடம் இருந்து கோல் வந்தது.“டான்யா.”“சொல்லு டேனி. நாங்க வேய்ட் பண்ணிகிட்டு இருக்கோம். நீ எங்க இருக்க?”“வர வழியிலே காருக்கு பெட்ரோல் போட போனேன். உள்ளே பணத்தை கட்டிட்டு வந்து பார்த்தா, மூனு டயர்ல காத்தை காணோம். ஒன்னுன்னா ஷ்பேர் டயரை மாத்திட்டு வந்திருப்பேன். எப்படி மூனு டயருக்கும் ஒரே டைம்ல இப்படி ஆச்சுன்னு புரியலை. காரை இழுத்துட்டு வோர்க் ஷோப் போக ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”தானுவிடம் இருந்து போனை வாங்கிய விபா,“டேனி நான் வேணும்னா வரட்டா? எந்த இடத்துல இருக்கே?” என அக்கறையாக கேட்டான்.“இல்லை வேணு. நீங்க டான்யாவை படம் பார்க்க கூட்டிட்டு போங்க. நான் இங்கப் பார்த்துக்குறேன். அவளோட பேவரேட் மூவி அது”“ஆர் யூ சோர்?” “எஸ் வேணு. டான்யா கிட்ட குடுங்க”“சொல்லுடா டேனி”“டான்யா, யூ எஞ்சாய் தெ மூவி. நான் அப்புறமா பேசுறேன்.” என போனை வைத்தான்.“சரி வா தானு. நாம உள்ள போகலாம்” என அவளை உள்ளே அழைத்து சென்றான் விபா. இருட்டில் அவளது கையைப் பிடித்து கொண்டு சென்றவன், இடத்தை கண்டுபிடித்து அவளை அமர வைத்து தானும் அமர்ந்தான்.விளம்பரங்கள் முடிந்து படம் ஆரம்பிக்கும் வரை திரையை பார்த்தவன், அவள் படத்தில் மூழ்கியவுடன், அவளையே ஓரக் கண்ணால் பார்க்க ஆரம்பித்தான். அவன் முகத்தில் ஒரு வெற்றி சிரிப்பு வந்தமர்ந்தது.‘முதல் முதலா படம் பார்க்க ஜோடியா நாம வரும் போது எதுக்கு நந்தியா அவன்? அதுக்கு தான் வைச்சேன் அவனுக்கு செக் மேட். எப்படி பிளான் போட்டு காயை நகர்த்துனேன் பார்த்தியா தானு. நீ கூப்பிடற மாதிரியே வேணு வேணுன்னு கூப்புடறான். அப்படியே பத்திக்கிட்டு வருது. இது தான் ஆரம்பம். இனிமே கொஞ்சம் கொஞ்சமா உன்னை என் கிட்ட கொண்டு வந்துருவேன் தானும்மா.’ என எண்ணியபடியே இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.திடீரென திரும்பியவள் என்ன என்பதுபோல் சைகை செய்தாள்.“பாப்கார்ன் வேணும்” என சமாளித்தான் வேணு.புன்னகைத்தபடியே பாப்கார்னை அவனிடம் நீட்டினாள் தானு.மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் அவளது அருகாமையை துளி துளியாக நெஞ்சாங்கூட்டில் சேர்த்து வைக்க ஆரம்பித்தான் விபாகர். தணலாய் கொதிப்பவன்பனியாய் கரைகிறேன்சுழலாய் அடிப்பவன்சுகமாய் வீழ்கிறேன்என் அருகில் நீ இருந்தால்!!!

error: Content is protected !!