IM 7

IM 7

சத்தியமாய் மயூரிக்கு இப்படியெல்லாம் பேச முடியும் என்பது அந்த வீட்டில் யாருக்கும் இதுவரை தெரிந்திருக்கவில்லை!

குருமாவின் வெட்டி பேச்சில் அவள் மனதில் எழுந்த ஆங்காரம், ‘திஸ் இஸ் தி லிமிட்’ என்ற கொதிநிலையை எட்டிவிட்டிருந்தது!

“கோணலாய் யோசிக்கிறவங்க பிரச்சனையே இது தான்! எல்லாரையும் அவங்களை மாதிரியே மட்டமா நினைச்சுக்க வேண்டியது!”

சற்றும் யோசியாமல் பதிலடி தந்தாள் குரு மாமாவுக்கு!

அவர் முகமெல்லாம் அவமான நிலைக்கு போய் மீண்டு வந்தது!

“பெரியவங்களை இப்படித் தான் எடுத்தெறிஞ்சி பேசுறதா வள்ளி! வளர்ப்பு சரியில்லை! என் பொண்ணா இருந்திருந்தா இந்த பேச்சுக்கு அவ தோலை உரிச்சிருப்பேன்!”

“மிஸ்டர் குரு…” கனகவேல் அங்குள்ள நிலைமையை

சமாளிக்க எதையோ சொல்ல வர,

“நீ வாயை மூடு யா, எங்க வீட்டு பொண்ணை எனக்கு எதிராவே திருப்பி விடுறியா! உன்னையெல்லாம்…!”

“மாமா மரியாதையா பேசுங்க! நீங்க நிக்கிறது அவங்க வீட்டில்!” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விவேக் பிரவேசமானான் வீட்டினுள்!

நடந்துக் கொண்டிருந்த ரசாபாசங்கள் அவன் கண்ணிலும் பட்டிருக்கிறது!

கண்ணுக்கு லட்சணமாய் ஒரு ஆண்மகனை அந்த இடத்தில் பார்த்த குருமாவிற்கு இன்னுமொரு விஷயம் கிடைத்தது, மயூரவள்ளியை கிழித்து குதற!

“இந்த பசங்களும் இதே வீட்டில் ஒண்ணா தான் இருக்கானுங்களா!”

வேண்டுமென்றே நீட்டி முழக்கினார் அவர்!

“அவங்க பெத்த அந்த இரண்டு பசங்களும், அவங்க வீட்டில் தான் இருப்பாங்க! என்ன கேள்வி இது!”

பதில் பேச முயன்றவரை கைக்காட்டி தடுத்தாள்!

“பதிமூணு வயசில் இங்க என்னை விட்டீங்களே அப்பவே இங்க இதே இரண்டு பேர் தான் இருந்தாங்க! தொல்லை விட்டா போதும்னு திரும்பி பார்க்காம ஓடினீங்களே, அந்த அவசரத்தில் மறந்துட்டீங்க போல!”

அவள் கண் முன் அந்த நாட்கள் சட்டென்று வந்து போனது! பழைய நடுக்கம் இப்போதும் அவளுள்!

“அதெல்லாம் இருக்கட்டும், நீ தான் மொத்த குடும்பத்துக்கும் படியளக்குற போலவே!

ஆளுக்கு ஒரு வேலையில் தான் இருக்காங்களே பின்ன ஏன்?”

குருவின் எண்ணம் ஒன்றே ஒன்று தான்! ஏதேனும் பேசி கனகவேல் தம்பதியினரை கலங்கடிக்க வேண்டும், அதனால் அவர்கள் மயூரியின் பொறுப்பை விட்டு விலகிவிட வேண்டும்!

அவர் எண்ணம் அறியாதவளா மயூரி!

“நீங்க யாரு! உங்க கிட்ட நான் எதுக்கு அதையெல்லாம் சொல்லணும்! எனக்கு என்ன செய்யணும்னு தெரியும்!”

இதற்கு மேலும் அதே இடத்தில் அசராமல் அமர்ந்திருந்த அந்த குருமா,

“என் கிட்ட இப்படி பேசலாம் மயூரி! நாளை பின்ன கல்யாணம் காட்சின்னு வந்தா உனக்கு மாப்பிள்ளையா வரவன் இதையெல்லாம் கேள்வி கேட்பான், பார்த்துக்கோ!”

அவர் சொன்ன விதமும், அநாகரிகமான உடலசைவும் விவேக்கின் கோபத்தை ஏகத்துக்கு கூட்டி விட அவன் கை முஷ்டி இறுகியது!

முகத்துக்கு

அவன் முழு எரிச்சலையும் கொண்டு வந்திருந்தான்!

குருமா திரும்பத் திரும்ப அதைப்பற்றியே பேசியதில் மயூரவள்ளியும்,

“நல்ல கேட்டுகோங்க மாமா! இவங்க இரண்டு பேர் தான் எப்போவும் என் மாமனார் மாமியார்! எனக்கு இந்த வீட்டை வீட்டு வேற எங்கேயும் போற யோசனை அறவே இல்லை!”

மாமனின் வாயை அடைக்க வேண்டி அந்த குடும்பத்தினரிடம் கூட சொல்லாத விஷயத்தை அங்கே உடைத்து சொல்லிவிட்டாள்!

அவள் பேச்சில் அதிர்ந்தாலும் அதைக் காட்டி கொள்ளாது,

“அப்படியா விஷயம்? இரண்டு பசங்களில் யார்?” என்றார் மிஸ்டர்.குருமா!

தேவையில்லாத கேள்வி!

“சின்னவன் கூட தான் முழுசா சுத்திகிட்டிருக்கா! அநேகமா அவனா தான் இருக்கும்!”

அந்த தெருவாசி தன் மாமனின் காதில் கிசுகிசுத்தது அவளுக்கும் கேட்டது!

“ஹலோ சார் நாங்க எங்க குடும்ப விஷயம் பேசிகிட்டிருக்கோம்! வீடு கேட்டு தானே வந்தீங்க, அதை கொடுக்குற ஐடியா இல்லை! நீங்க இப்ப கிளம்புங்க!”

என்றாள் அவரின் கேவலமான பேச்சில் கடுப்பாகி!

குருமா ஏதேனும் அவர் துணைக்கு வருவார் என்று அவரை திரும்பி பார்த்தவருக்கு அதிர்ச்சியே!

மாமா எதுவும் நடக்காததை போல் அப்படியே அமர்ந்திருக்க, குரு மாமாவை முறைத்த படி அந்த புதியவர் எரிச்சலுடன் எழுந்து சென்றார்!

பாவம் அந்த ‘குருமாவே’ அங்கே வாங்கி கட்டிக் கொண்டிருக்க கூட வந்தவருக்கு எப்படி தன் ஆதரவு கரங்களை நீட்டுவார்!?

“நான் முன்ன சொன்னது தான், பணக்கார புள்ளையை வளைச்சு போட்டு இவங்க…”

அவர் வாக்கியத்தை முடிக்கவில்லை,

“இதுக்கு மேல உங்களுக்கு மரியாதை இல்லை! நீங்க கிளம்பலாம் மாமா!”

“வள்ளி” அமுதாவும் கனகவேலும் ஒன்றாய் சொல்ல, விவேக் தன் லாப்டாப் பையை சோபாவில் வைத்து விட்டு, தன் முழுக்கை சட்டையின் கை பகுதியை மடித்துவிட்டுக் கொண்டான், ‘சண்டைக்கு நான் தயார்’ என்ற தோரணையில்!

விட்டால் அடித்தே விடுவான் போல! அவன் மீது ஒரு பார்வை வைத்துக் கொண்ட மயூரவள்ளி,

“அத்தை மாமா, இப்ப என்னை தடுக்காதீங்க!” என்றுவிட்டு, குருமாவிடம் திரும்பி,

“இன்னும் இங்கே நிக்காதீங்க! கிளம்புங்க மாமா!” என்றாள்!

அக்காள் மகளின் பேச்சில் கொஞ்சம் ஆடித் தான் போயிருந்தார் மனிதர்! கூடவே அந்த நெடியவனின் தோரணையிலும்! வாயில் சொல்லத் தோன்றிய வசவு சொற்களை எல்லாம் மாத்திரை விழுங்குவது போல் முழுங்கியவர், மயூரியை எரித்துவிடுவது போல் பார்த்தபடி வெளியேறிவிட்டார்!

அவர் அந்த இடத்திலிருந்து மறைந்த அடுத்த நொடி அமுதா மயூரியிடம்,

“நீ அவர்கிட்ட நிஜமாத்தான் சொன்னியா?”என்றார்!

“ஆமா” என்றவள் தயக்கமாய் விவேக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

இத்தனை நேரம் சண்டை சச்சரவு நடந்த இடம் போல் இல்லை அது!

சூழ்நிலை சட்டென்று மாறிவிட்டிருந்தது!

மகனும் தாயும் ஒருவரையொருவர் சிரித்த முகத்துடன் பார்ர்துக் கொண்டிருக்க, போன் வந்தது அமுதாவிற்கு!

எதிர்முனையில்,

“அமுதாவாங்க பேசுறது!”

 “ஆமா. யார் பேசுறது?”

“உங்க பையன் ஜாதகம் பார்த்தோம், எங்களுக்கு ஒத்து வருது! அதைப்பத்தி மேற்படி உங்ககிட்ட பேசலாமுங்களா?”

அமுதா திரும்பி தந்தையிடம் பேசிக்கொண்டிருந்த தன் மைந்தனை பார்த்தார்!

முகம்கொள்ளா புன்னகையில் அவள் இதுவரை கண்டிராத சிரித்த முகமாய் இருந்தான்!

கனகவேல் அவனை வாழ்த்துவதை போல் மகனின் கையை பற்றியிருந்தார்!

பெற்றவளின் மனம் இந்த காட்சிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது!

மயூரி சொன்ன சொல்லின் உறுதி அமுதாவுக்கு தெரியும்! அதில் இனி மாற்றம் இராது! அதற்காய் இன்னும் எத்தனை வருடங்கள் விவேக் காத்திருந்தாலும் தகும்!

அதே எண்ணத்துடன்,

“இல்லைங்க, பையனுக்கு வேற இடத்தில் முடிவாயிடிச்சு!”

 முகத்திலும் மனதிலும் சந்தோஷம் பொங்கி வழிய, அந்த போனை வைத்தார். அவ்விடத்தை விட்டு அகல மனமில்லை அவருக்கு!

மயூரிக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு உணர்வுகள் ஆட்கொண்டிருந்தது!

தன் அறையில் நடைபயின்றுக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு

கதவை திறந்தாள்! அவனை அங்கு பார்த்து திகைத்தாள்!

“உள்ளே வரலாமா?”

“யெஸ், வாங்க விவேக்!”

அவன் அமர ஒரு இருக்கையை எடுத்துத் தந்தவளுக்கு,

அந்த சூழ்நிலையின் விதிமுறைகள் தெரியவில்லை! குழப்பமாய் தயக்கமாய் இருந்ததோடில்லாமல், அவனை பார்க்க இப்போது புதிதாய் வெட்கமாய் கூட உணர்ந்தாள்!

“ஏன் மயூரி இந்த திடீர் முடிவு! வீட்டு சூழ்நிலைக்காக யோசிச்சு அப்படி சொன்னையா!”

இந்த கேள்வி அவன் கேட்பான் என்று தெரியும், விடைக்காக தான் யோசித்துக் கொண்டிருந்தாள்!

“இல்லை…அப்படியில்லை!”

அவன் பார்வை அவள் முகத்தை விட்டு அகலவில்லை, தயக்கமாய் தொடர்ந்தாள்!

“எனக்காக நிறைய தியாகம் செஞ்ச குடும்பம் இது! திஸ் இஸ் மை டர்ன் டு பே இட் பேக் விவேக்!”

மனதிலிருந்து வந்தன அவ்வார்த்தைகள்!

“அப்போ இது அவங்களுக்கும் உனக்குமான டீலிங் மட்டும் தான் இல்லையா?”

ஏமாற்றமாய் ஒலித்தது அவன் குரல்!

“ஹாங்… அதுவும் ஒரு காரணம்னு சொல்ல வந்தேன்!”

பேச்சு முடிந்தது போல் எழுந்து கொண்டான் அந்த இடத்திலிருந்து!

“நான் கூட எனக்காக ஏதோ யோசிச்சியோன்னு கொஞ்ச நேரம் சந்தோஷபட்டுட்டேன் மயூரி”

அவள் பதில் பேசவில்லை! அவன் சொன்னதை

மறுக்கவுமில்லை!

விஷ்ணுவுக்கு விஷயம் தெரிந்து அவளை சற்று நேரத்தில் அழைத்திருந்தான்!

“என் கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்னு தெரியும்! ஆனா என் குடும்பத்துக்கு கூட முதலில் சொல்லாம, உன் ஓடுகாளி மாமன் கிட்ட போய் ஒரு நல்ல விஷயத்தை முதலில் சொன்னே பார்த்தியா, அங்க நிக்கிற நீ!”

“ஆமா உன் கிட்ட எதையும் சொல்றதில்லை நான்! மறந்து போயிருந்ததை  நினைவுபடுத்தினதுக்கு நன்றி! இப்ப போனை வச்சிடு!”

“ஹேய் வள்ளி அப்படியெல்லாம் சட்டுன்னு சொல்லக் கூடாது! என் கிட்ட எதையும் சொல்லாம இருக்க முடியுமா உன்னால? ஒரு ரெண்டு செகண்ட் சிந்திச்சு பாரு டி என் தங்கம்!”

இவன் வேற அடிக்கடி இவள் மனசாட்சி போல் பேசி தொலைக்கிறான்!

“உன் அண்ணனை கல்யாணம் செய்துக்க எனக்கு சம்மதம் விஷ்ணு! அத்தை மாமாவின் சந்தோஷத்துக்காக நான் எடுத்த முடிவிது! விவேக் முன்னே எப்படிபட்டவனோ எனக்கு தெரியலை, ஆனா இப்ப மாறியிருக்காருன்னு நம்புறேன்!”

“ஆஹாங்!” அவனின் நமுட்டு சிரிப்பு அந்த போனிலும் புரிந்தது அவளுக்கு!

“நீ எனக்காக சிலதை செய்யணும்!

பர்ஸ்ட், எனக்காக தானே அவர் கூட நீ சண்டை போட்டே? இப்ப எனக்காக அவர் தம்பியா சமாதானமா நீ நடந்துக்கணும்! செய்வியா?”

“சட்டுன்னு என்னால நீ நினைக்கிற மாதிரி மாற முடியாது வள்ளி!

உனக்காக வேணும்ன முயற்சி செய்து பார்க்கிறேன்!

இதைத்தவிர வேற எதுவும் விஷயமிருக்கா?”

“செகண்ட் பாயிண்ட், என்னை இனிமே வள்ளி அண்ணி, வாங்க அண்ணிங்க, போங்கங்கன்னு மரியாதையா கூப்பிடணும்!”

“சரி டி!”

“டேய் தடியா, எத்தனை பொறுமையா சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன், கேட்க மாட்டியா நீ!”

“இன்னிக்கு உனக்கு ஏதோ நட்டு கலண்டு போச்சு! அடிக்கடி அவன் கூட நீ பேசும் போதே எனக்கு தெரியும்! ஒரு ஆபத்தை நோக்கி நீ போய்கிட்டிருக்கேன்னு! தயவு செய்து இப்ப போனை வை தாயே!”

“நான் சொல்றதை…”

“இப்ப கேட்கவே முடியாது! ஆல்ரெடி மண்டை காஞ்சி போயிருக்கேன் நான்! பத்திரமா இரு! நல்லா படி! அப்புறம் பார்க்கலாம்!”

வைத்துவிட்டான்!

‘கொய்யாலே அண்ணியாம்ல!’

வைத்துவிட்ட போனை பார்த்தபடி நகைத்துக் கொண்டான் விஷ்ணு!

error: Content is protected !!