imk-12

imk-12

13(௧௩)

விசாரணை

“நீ இந்த லேட்டா வர்ற பழக்கத்தை விடவே மாட்டியா?” என்று விஷ்வா கோபமாய் தன் மனைவியிடம் கேட்க, “சாரி சாரி… இன்னைக்குக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி… முகிலையும் ஒரு வேலை விஷயமா வெளிய அனுப்பிட்டேன்… அதான்” என்று சொல்லிக் கொண்டே தன் பேகை அறையில் சென்று வைத்துவிட்டுத் திரும்பியவர்,

“நீ சாப்பிட்டியா விஷ்வா?” என்று கேட்க, விஷ்வா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘நீ இல்லாமல் நான் என்று சாப்பிட்டேன்?’ என்று கேள்வியோடும் கோபத்தோடும் விஷ்வாவின்  பார்வை ஆதி மீது பாய்ந்தது.

“சாரி அகைன்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்… டிரஸ் சேஞ் பண்ணிட்டு வந்துடறேன்” என்று ஆதி தன் அறைக்குள் சென்றுவிட்டு உடைமாற்றிக் கொண்டு சில நிமிடங்களில் திரும்பினார்.

விஷ்வாவோ டைனிங் டேபிளில் அவர்கள் சாப்பிட உணவுகளைத்  தயார் நிலையில்  எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அதனைப் பார்த்து முகம் மலர்ந்த ஆதி, “சோ ஸ்வீட் ஆஃப் யு” என்று சொல்ல,

விஷ்வா முறைப்பாக, “உடம்புல இருக்கற சர்க்கரையே போதும்மா தாயே! நீ வேற இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டுறாதே” என்றார்.

ஆதி சிரித்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து கணவனுக்கும் தனக்கும் பரிமாறிக் கொண்டே, “எங்க உங்க பையன்… வந்தானா… இல்ல இன்னும் வரலையா?” என்று வினவ,

“அவன் மேல கோபம்னு உன் வாய்தான் சொல்லுது… ஆனா உன் கண்ணும் மனசும் அவனைத் தேடுது… இல்ல” என்றார்.

“என்ன பேசுறீங்க… கோபம் இருக்குதான்… அதுக்காக அவன் மேல எனக்கு அக்கறை இல்லாமப் போயிடுமா… அதுவும் இல்லாம நமக்கு இருக்கறது அவன் ஒருத்தன்தான்… அவன் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு ஒரு அம்மாவா நான் ஆசைப்படுறேன்… அது தப்பா?” என்றவர் கேட்க, ‘இவ்வளவு பாசத்தை வைச்சுக்கிட்டு அவன் கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுவா?” என்று எண்ணி விஷ்வா மனைவியை ஏறிட்டுப் பார்த்து உள்ளூர சிரித்துக் கொண்டார்.

“விக்ரம் வர லேட்டாகுமா?” என்று ஆதி மீண்டும் கவலையாகக் கேட்டுக் கணவனைப் பார்க்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவான்” என்றார்.

“இந்தக் கட்சி அரசியல் எல்லாம் வேணான்னு சொன்னா கேட்கறானா?” என்று ஆதி தன் புலம்பல்களை ஆரம்பிக்க, “அதை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… நீ முதல்ல சாப்பிடு” என்றார் விஷ்வா.

ஆதி சாப்பிட்டுக் கொண்டே,“ஆமா… இவான் எங்கே?” என்று கேட்க,

“சாப்பிடச் சொன்னேன்… ஏதொ முக்கியமான காலாம்.. மாடிக்குப் போய் பேசிட்டு வர்றேன்னு போனான்” என்றார்.

இவான் அந்த நேரம் சிம்மாவிடம்தான் அளவளாவிக் கொண்டிருந்தான். சிம்மாவின் பிரயாணத்தைப் பற்றி விசாரித்த இவான்  பின் வரிசை கட்டி அன்று நடந்து நிகழ்வுகளை சொல்லி முடிக்க, “நாம எது நடந்திடக் கூடாதுன்னு பயந்தோமோ… கடைசியா அதுவே நடந்திடுச்சு”என்றான் சிம்மா.

“எஸ்” என்று இவான் ஆமோதிக்க, அதன்பின் இருவரும் அடுத்து என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை மேற்கொண்டிருக்க இவான்  அப்போது ஏதோ நினைவு வந்தவனாய்,

“(சிம்மா! ஐ நீட் டு டெல் யு அன் இம்பார்டன்ட் மேட்டர்) உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் சிம்மா!” என்று ஆரம்பித்தான்.

அதற்குள் வீட்டின் வாசலில் வந்து நின்ற போலீஸ் வாகனம் அவர்கள் உரையாடலை நிறுத்தியது. இவான் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கத் தமிழச்சி அந்த வாகனத்தில் இருந்து இறங்கி விரைவாய் உள்ளே சென்றுக் கொண்டிருந்தாள்.

“இவான் வாட்… வாட் ஹப்பேன்ட்? ஸ்பீக்” சிம்மா எதிர்புறத்தில் விசாரிக்க,

“யுவர் சிஸ்டர் கேம்… ஐ ல் டாக் டு யு லேட்டர்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு வேகமாய் மாடியில் இருந்து இறங்கியவன், தமிழச்சி ஆதி பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டபடி உள்ளே நுழையாமல் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டான்.

தமிழச்சியின் உடையும் அவள் உள்ளே வந்த விதத்தையும்  வைத்தே ஆதி அவள் எண்ணத்தை யூகித்து, “அஃப்சியலா வந்திருக்கியா தமிழச்சி?” என்று தான் சாப்பிடுவதை விடுத்து எழுந்து நின்று கேட்க விஷ்வாவும் எழுந்து நின்று அவளைக் குழப்பமாய் ஏறிட்டார்.

“ரொம்ப பெரிய விஷயமெல்லாம் இல்ல… முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றவளின் பார்வை அந்த வீட்டைச் சுற்றிலும் அலைபாய, “விக்ரமைத் தேடி வந்தியா?” என்று கேட்டார் ஆதி!

அவள் தயக்கத்தோடு, “இல்ல ஆதிம்மா… நான் இவான் ஸ்மித் கிட்ட கொஞ்சம் பெர்சனலா சில விஷயம் கேட்கணும்” என்று சொல்ல, இவான் காதில் அவள் கடைசியாய் அவன் பெயரைக் குறிப்பிட்டு சொன்ன வாக்கியம் பிடிபட்டது.

இப்போது அவள் எதற்காக வந்திருப்பாள் என்பதை ஓரளவு யூகித்துக் கொண்டவன் சில நொடிகளில் அவனாகவே அவள் முன்னே வந்து ஆஜரானான்.

“இதோ… இவானே வந்தாச்சே” என்றார் விஷ்வா!

அவளுக்கு உள்ளுக்குள் எரிமலையாய் அவன் மீது கோபம் கொப்பளிக்க, அதனைத் தன் மனதோடு தேக்கி வைத்துக் கொண்டவள் முடிந்தளவு  பொறுமையாய், “ஒரு கேஸ் விஷயமா நான் உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும்” என்றாள்.

ஆதியும் விஷ்வாவும் அதிர்ந்து அவளைப் பார்க்க இவான் துளியளவும் சலனமில்லாமல்,  “ஷ்யூர்” என்றான்.

“என்ன கேஸ் தமிழச்சி?” என்று ஆதி பதட்டத்தோடு விசாரிக்க, “ஐயோ! அது அவ்வளவு பெரிய மேட்டர் எல்லாம் இல்லம்மா… நீங்க ரெண்டு பேரும் டென்ஷனாகாதீங்க என்றவள்  அவர்கள் இருவரையும் அருகில் சென்று இருக்கையில் அமர வைத்துவிட்டு,

“நான் மிஸ்டர். இவான் கிட்ட கொஞ்சம் டீடைல்ஸ் கேட்டுட்டு வந்துடறேன்… நீங்க அதுக்குள்ள சாப்பிட்டு முடிங்க… அல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சுல” என்று அக்கறையோடு உரைத்துவிட்டு அவள் பார்வை  இவானைக் கவனிக்க, அவனோ அந்த சூழ்நிலையிலும் அவள் தன் மாமியார் மாமனாரிடம் காட்டும் அக்கறையை மெச்சுதலாய் பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தான்.

தமிழச்சி அவனை முறைப்போடு அறைக்குள் வரச் சொல்லி சமிக்ஞை காட்டிவிட்டுச் சென்றாள்.

விஷ்வாவும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தங்கள் குழப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க இவான் எந்தவித பதட்டமுமின்றி அந்த அறைக்குள் நுழைந்தான். அவள் அப்போது அந்த அறையில் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தாள். ஆனால் அது என்னவென்று அவளால் அப்போது யூகிக்க முடியவில்லை.

அப்போது அவள் இவான் அறைக்குள்  நுழைவதைக் கவனித்து, “உங்க பாஸ்போர்ட் விசா எடுங்க இவான்… நான் பார்க்கணும்” என்றாள்.

“ஹ்ம்ம் ஓகே” என்றவன் தன் பேகை நோக்கிப் போக அவள் அந்த அறைக் கதவை மூடினாள். அப்போது அவள் துணுக்குற்று அந்தக் கதவு அருகே பார்க்க, எப்போதும் அங்கே இருக்கும் அவர்களின் திருமணப் புகைப்படம் இப்போது அங்கே இல்லை.

மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவளுக்கு அங்கே என்ன வித்தியாசமாய் தோன்றியது என்பது புரிந்து போனது. அந்த அறையின் திரும்பும் பக்கமெல்லாம் இருந்த அவளின் புகைப்படங்கள் எதுவும் தற்போது காணப்படவில்லை. சட்டென்று அவள் இதயத்தில் ஆழமாய் ஏதோ குத்திய உணர்வு.

‘என் போட்டோவெல்லாம தூக்கிப் போடுறளவுக்கு நான் உனக்குத் தேவையில்லாதவளா போயிட்டேனா விக்ரம்!’ என்று அளவில்லா வேதனையோடு கேட்டுக் கொண்டவளுக்கு  அவன் தன்னை விட்டு விலக அல்லது மறக்க முற்படுகிறான் என்பதைக் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரு துளி நீர் அவள் கண்களில் இருந்து இறங்கிக்  கன்னங்களை நனைத்திட இவான் பார்ப்பதற்கு முன்னதாக அவள் அவசரமாய் அந்த நீரை அகற்றினாள். அதேநேரம் இவான் தன் பாஸ்போர்ட் விசாவை அவளிடம் காட்ட அதனை அவள் ஆழ்ந்து பார்த்து கொண்டே அவன் முகபாவனைகளையும் அவ்வப்போது அவள் பார்வையிட, அவனிடம் பதட்டம் பயம் குழப்பம் என்று எந்தவித உணர்வும் வெளிப்படவில்லை.

மாறாய் ஒளிவட்டமாய் அவன் உதட்டில் ஒரு மெல்லியப் புன்னகை அடாவடியாய் நின்றிருக்க, அதனாலேயே அவளின் கோபம் தாறுமாறாய் ஏறிக் கொண்டிருந்தது. ‘யாருடா நீ?’ என்று மனதில் உதித்த வார்த்தையை வெளிப்படுத்த முடியாமல்,

“நீங்க என்ன காரணத்திற்காக இங்க தங்கியிருக்கீங்க?” என்று கேட்க, “ஐ அல்ரெடி டோல்ட் யு… ஹவ் மெனி டைம்ஸ் யு ல் ஆஸ்க்? (நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… எத்தனை தடவை அதேக் கேள்வியை நீங்க கேட்பீங்க)” என்று அவன் சலித்துக் கொண்டான்.

அவள் முகம் கடுப்பாய் மாற தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், “சரி அது இருக்கட்டும்… லாஸ்ட் ஒன் வீக்கா… நீங்க எங்கெல்லாம் போனீங்க?” என்றவள் புருவத்தை உயர்த்திக் கேட்க அவன் தன் புன்னகை மாறாமல் அவன் பார்த்த இடங்களைப் பட்டியிலிட ஆரம்பித்தான்.

அவள் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க அவன் இறுதியாய், “டிருவிடன்தை” என்று அவன் பாணியில் சொல்ல அவள் பதட்டம் எழ, “வாட் வாட் யு செட்?” என்று கேட்க,

“டி ரு வி ட ன் தை” என்று தனித்தனியே அந்த எழுத்துக்களை உச்சரிக்க, “யு மீன் திருவிடந்தை” என்று அவள் அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள்.

“யா… ரைட்” என்றவன் புன்னகை புரிய அவள் ஆழ்ந்த பார்வையோடு, “அங்கே என்ன விஷயமா போனீங்க?” என்று அவனைக் கேள்வி எழுப்பினாள்.

“டு விசிட் நிட்ய கல்யாணப் பெருமாள் டெம்பிள்… வெரி ஏன்ஷியன்ட் டெம்பிள் பில்ட் பை பல்லவாஸ்” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவளுக்கு அதிர்ச்சி உண்டானது.

இதை எப்படி தான் யோசிக்க மறந்தோம் என்று உதட்டைக் கடித்துக் கொண்டாள். இருப்பினும் அவள் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. ஒரு வேளை அவன் தன்னை திசைத் திருப்ப முயல்கிறானா அல்லது இவான்  சொன்னதுதான் உண்மையா? என்றவள் யோசிக்க,

இவானோ அந்தக் கோவிலின் அமைப்பு, பழமை, சிறப்புப் பற்றி ஒரு திருப்பதிகமே பாடிக் கொண்டிருந்தான். அதுவும் ஆங்கிலத்தில்… அவள் தாங்க முடியாமல், “போதும்” என்று அவனை நிறுத்த,

“இனிமேதான் முக்கியமான மேட்டரே” என்றவன் இடைவெளிவிட்டு, “அங்கே இருக்கற காட் கிட்ட ப்ரே பண்ணி மாலைப் போட்டு த்ரீ டைம்ஸ் சுத்துனா… சீக்கிரம் மேரேஜ் நடக்குமா?அதான்  நான் கூட அந்த டெம்பில்ல மாலைப் போட்டு சுத்தினேன்” என்றான்.

“ரொம்ப முக்கியம்” என்று அவள் கடுப்பாகி தன் குரலைத் தாழ்த்திச் சொல்ல, அவன் மேலும் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

“யு நோ வாட்… ஐ வான்ட் டு மேரி அ தமிழ் கேர்ள் லைக் யு” என்றவன் சொன்ன மறுகணம் அவள் அதிர்ந்து, “வாட்?” என்றாள்.

“லெட்ஸ் சீ தி பவர் ஆஃப் நித்ய கல்யாணப் பெருமாள் ” என்று அவன் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருக்க, ‘ஐயோ! படுத்தறானே… நான் எதுக்கு வந்தேன்… இவன் என்னத்த பேசிட்டு இருக்கான்’ என்றவள் உள்ளூரப் புலம்பிக் கொண்டே அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

ஒரு வித தோற்றுப் போன உணர்வோடு அவள் உள்ளம் சோர்ந்து போக அந்த நாள் முழுக்க அலைந்ததில் அவள் உடலும் அயர்ந்து போனது. அதற்கு மேல்  அவனிடம் என்ன கேட்பது என்று அவள் மனம் பின்வாங்க சட்டென்று அந்தப் பெரியவரின் வாக்கியம் நினைவு வந்தது.

‘இரண்டு நாள் முன்னாடி’ என்றுதானே அவர் சொன்னார் என்று யோசித்தவள், “நீங்க என்னைக்கு அந்த டெம்பிளுக்குப் போனீங்க?” என்று கேட்டாள்.

அவன் வெகுசாமர்த்தியமாக, “லாஸ்ட் ஃபோர் டேஸா… என் ரிசர்ச் புல்லா அங்கேதான்” என்க, அவன் தன்னிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க சமாளிக்கிறானோ என்று எண்ணியவள்,

“நீங்க கோவிலில் எடுத்த போட்டோஸ் எல்லாம் நான் பார்க்கலாமா?” என்று கேட்க, “ஓ எஸ்” என்று அவன் தன் கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படங்களைக் காண்பிக்க அவளுக்கு இப்போதுதான் சந்தேகம் அதிகரித்தது.

இத்தனை நேரத்தில் ஒருமுறைக் கூட தான் அவனை ஏன் இப்படிக் கேள்வி கேட்கிறோம் என்றுஅவன் ஏன் வினவவேயில்லை? அதேநேரம் அவனின் இந்தப் பொறுமையும் அமைதியும் அவளின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது.

அப்போது இவானின் செல்பேசி அழைக்க அதனை அவன் எடுத்துப் பார்த்துவிட்டு அணைத்து வைக்க அவள் மூளை உடனே தன் வீட்டில் அவனின் செல்பேசி இதே போல் அழைத்ததைப் பற்றி நினைவு கூர்ந்தது.

அவள் உடனே, “நான் உங்க செல் போனைப் பார்க்கலாமா?” என்று அவனிடம் நேரடியாகவேக் கேட்டாள். இத்தனை நிமிடங்களில் அவன் முகம் இப்போதுதான் லேசாய் பதட்டத்தைக் காட்டியது.

“சாரி இட்ஸ் மோர் பெர்ஸ்னல்” என்று அவன் மறுக்க, ‘ஒ! அப்போ மேட்டர் அதுலதான் இருக்கா?’ என்று யோசித்தவள் அந்த அரிய வாய்ப்பை நழுவ விடுவதாக இல்லை.

“அப்போ கொடுக்க மாட்டீங்க” என்றவள் அழுத்திக் கேட்க, “சாரி… நோ வே” என்றான்.

“அப்போ உங்க பாஸ்போர்ட் உங்களுக்குக் கிடைக்காது”  என்று அவள் சொல்லிக்கொண்டே  அவனுடைய பாஸ்போர்ட்டை எடுத்துத் தன் பேன்ட் பேக்கெட்டில் நுழைத்துவிட்டாள்.

“தமிழச்சி கிவ் மை பாஸ்போர்ட்” என்று அவன் அதிகாரத் தொனியில் கேட்க, “ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்கோங்க” என்றவள் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனிக்க அவன் அவளை வழிமறித்து,

“நான் ஒரு அமெரிக்கன் சிட்டிசன்… என்கிட்ட நீங்க இப்படியெல்லாம் நடந்துக்கறது  சரியில்ல… அப்புறம் நீங்க ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்கும்” என்று மிரட்டல் தொனியில் உரைத்தான்.

“டூ  வாட்எவர் யு வான்ட்(என்ன வேண்டும்னாலும் செஞ்சுக்கோங்க)” என்று அவள் அலட்சியமாய் சொல்லிவிட்டு முன்னேறிச் செல்லப் பார்க்க அவன் வழிவிடாமல் தூண் போல் கதவருகில் கைகட்டி நின்றான்.

“இவான் வழி விடுங்க” என்றவள் முறைக்க, “ஐ நீட் மை பாஸ்போர்ட் ரைட் நவ்” என்று அதிகாரத் தொனியில் தீர்க்கமாய் அவன் குரல் வெளிவந்தது.

“அப்போ உங்க செல்ஃபோனை ஓபன் பண்ணிக் கொடுங்க… நான் அதை செக் பண்ணனும்” என்றவள்  திடமாய் அவள் கரத்தை நீட்ட, அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “இன்னைக்கு திருவிடந்தைல நடந்த கொலையில உங்க மேல எனக்கு சந்தேகமா இருக்கு… சோ நான் இந்த பாஸ்போர்டை என் சீஃப் கிட்ட கொடுக்கப் போறேன்” என்றவள் சொல்ல அவன் படபடப்போடு, “வெயிட் எ மினிட்” என்று சொல்லி விலகிச்சென்று,

தன் செல்பேசியை எடுத்து ஏதோ ஒரு எண்ணிற்கு டயல் செய்து காதில் வைக்க அவள் புரியாமல் விழித்தாள்.

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “உங்க பவர் எல்லாம் என்கிட்ட காட்ட ட்ரை பண்ணாதீங்க இவான்… அதெல்லாம் என்கிட்ட செல்லுபடியாகாது” என்று சொல்லிவிட்டு அவள் அந்த அறைக்கதவைத் திறந்தாள்.

“தமிழச்சி… யூர் பிரதர் ஆன் லைன்” என்று இவான் தன் பேசியை அவளிடம் நீட்ட அவள் ஒரு நொடி ஸ்தம்பித்து அவனைப் பார்த்தாள்.

“சிம்மபூபதி” என்று இவான் அழுத்திச் சொல்ல அவள் உடனே அவன் பேசியை வாங்கிக் காதில் நுழைத்தாள். தன் தமையன் பேசுவானா என்ற காத்திருப்போடு அவள் மௌனமாய் அந்தப் பேசியை காதில் வைத்துக் காத்திருக்க,

“தமிழச்சி!” என்று சிம்மாவின் அழைப்பு அவள் விழி அணையை உடைத்துக் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒன்றாய் இருக்கும் போதெல்லாம் இருவரும் அதிகமாய் பேசிக் கொண்டது கூட இல்லை. ஆனால் அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் உண்டானத் தவிப்பு அவளை ரொம்பவும் வேதனைப்படுத்தி இருந்தது.

வேகமாய் அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் கோபத்தை மீட்டெடுத்து, “சொல்லாம கொள்ளாம எங்கடா போன நீ… இங்க அம்மா என்ன நிலைமையில இருக்காங்க தெரியுமா?” என்றவள் உணர்ச்சி பொங்க தன் வேதனையைக் கொட்டத் தொடங்க,

“தமிழச்சி ப்ளீஸ்… அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… நீ இவானோட பாஸ்போர்டை அவர்கிட்ட திருப்பிக் கொடு” என்றான்.

“ஒ! அதுக்குதான் இப்போ நீ என்கிட்ட பேசுனியோ?” என்றவள் குரலில் அத்தனை சீற்றம்!

“இல்லடி” என்றவன் ஏதோ பேச ஆரம்பிக்க, “நீ ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம்… நான் அந்த இவானோட பாஸ்போர்ட்டை கொடுக்க மாட்டேன்” என்றவள் பார்வை இவானை முறைத்துப் பார்க்க அவன் அவளைப் பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தான்.

அவள் எரிச்சலாகி, “யாருடா இந்த இவான்… உனக்கும் இவனுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று கேட்க,

“ஐயோ! தமிழச்சி… அவருக்குத் தமிழ் பேச வராட்டியும் ஓரளவுக்குப் புரியும்… நீ கொஞ்சம் மரியாதையா பேசு” என்றதும் அவள் இவானை ஒரு பார்வைப் பார்க்க, அப்போதும் அவன் முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை.

அவள் பார்வை குழப்பமாய் இவானைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சிம்மா அவள் காதோடு, “அவர் சிலைக் கடத்தல் நெட்வொர்க்கை பிடிக்க எஃப்.பி.ஐ சீக்ரெட்டா அப்பாயின்ட் பண்ணி இருக்குற இன்வஸ்டிகேஷன் ஆபீசர்”  என்றான். தன் தமையன் சொன்னதை நம்ப முடியாமல் அவள் குழப்பமாய், “என்ன சொன்ன… திரும்பச் சொல்லு” என்று கேட்க.

இப்போது இவான் அவளிடம், “நான் எஃப்.பி.ஐ சீக்ரெட் ஏஜென்ட்… இது என்னோட ஐடி கார்ட்” என்று  இவான் தன் அடையாள அட்டையை தமிழச்சியிடம் காண்பித்தான்.

அவள் முகத்தில் ஈயாடவில்லை. அவனையே அவள் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க அப்போது சிம்மா, “தமிழச்சி” என்று அழைத்து,

“நான் உன்கிட்ட அப்புறம் பேசறேன்… நீ இப்போ ஃபோனைக் கொஞ்சம் இவான்கிட்ட கொடு” என்றான்.

அவள் அதிர்ச்சி கலந்த தோரணையில் பேசியை இவானிடம் கொடுக்க அவன் சிம்மாவிடம் சில நொடிகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

தமிழச்சி அப்போது, “ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி” என்று இவானிடம் மரியாதையோடு அவன் பாஸ்போர்டைத் திருப்பிக் கொடுத்தாள்.

“நோ நீட் ஆஃப் சாரி… எனக்கு உங்களோட இந்த போலீஸ் அட்டிட்யுட்… அப்புறம் உங்களோட இந்த கட்ஸ்… என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு… ஐ லைக் இட” என்றவன் அவளை வெகுவாய் பாராட்டிக் கொண்டிருக்க அவள் எந்தவித உணர்சிகளையும் காட்டமல் சிலையென நின்றிருந்தாள்.

அவள் இன்னும் தான் கேட்டத் தகவலின் அதிர்ச்சியில் இருந்து முழுதாய் மீளவில்லை.  அவனோ தன் கரத்தை நீட்டி, “இப்பயாச்சும் ஹேன்ட் ஷேக் பண்ணிக்கலாமா தமிழச்சி!… நன்றிக்காக இல்லாட்டியும் நட்புக்காக” என்றவன் சொல்ல அவள் அப்போது தன்னிலை மீட்டுக் கொண்டு,

“ஷ்யூர்” என்று அவள் தன் கரத்தைக் கொடுத்தாள். இவான் முகம் மின்னலாய் ஒருநொடி பளீரென்றுப் பிரகாசிக்க அப்போது கதவைத் திறந்து உள்ளே நுழைந்த விக்ரமின் முகம் அந்தக் காட்சியைப் பார்த்து இருளடர்ந்து போனது.

‘என்னடா நடக்குது இங்க?’ என்றவன் அதிர்ச்சியாய் அவர்கள் இருவரையும் பார்க்க அவர்களும் அப்போது அவனைப் பார்த்தனர்.

தமிழச்சி இவானிடம், “உங்களைப் பத்தி விக்ரமுக்கு” என்று கேட்கும் போதே அவன், “நோ” என்றான்.

அதோடு இவான் அவளைப் பார்த்து, “நம்ம நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது டீடெயில்லா பேசுவோம் தமிழச்சி!” என்றான். அவளும் புரிதலோடு தலையை அசைத்துவிட்டுப் புறப்பட, அப்போது விக்ரமின் இதயமே க்ரில் சிக்கன் கணக்காய் உள்ளுர உஷ்ணமேறிக் கொண்டிருந்தது.

அதோடு அவள் விக்ரமைக் கண்டும் காணாமல் கடந்து செல்ல அவனுக்குள் எரிமலை வெடித்த உணர்வு. அந்த கோபத்தோடு அவன் இவானைப் பார்க்க, “ஷி கேம் டு மீட் மீ ஃபார் எ ஸ்மால் இன்வெஸ்டிகேஷன்…  தட்ஸ் இட் (ஒரு சின்ன விசாரணைக்காக என்னைப் பார்க்க வந்தாங்க… அவ்வளவுதான்)” என்று சுலபமாய் சொல்லிவிட்டான்.

ஆனால் விக்ரமின் மனமோ அதைக் கேட்டு உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் விரைவாய் தன் அறையை விட்டு வெளியே செல்ல அங்கே தமிழச்சி தன் மாமியார் மாமனாரிடம் ஏதோ பேசிவிட்டு விடைபெற்றாள்.

அதோடு அவள் வழியில் நின்ற விக்ரமை ஒரு பொருட்டாய் கூட மதியாமல் முன்னேறி வாசல் புறம் செல்ல, “தமிழச்சி நில்லு” என்று விக்ரம் அவள் கரத்தை அழுத்திப் பற்றி நிறுத்தினான்.

“நீ யாருடா என் கையைப் பிடிக்க?” என்று அவள் வார்த்தையைத் தீயாக அவன் மீது உதிர்க்க, “யாருன்னு கேட்கறளவுக்கு ஆயிடுச்சா?” என்று சொல்லி அவன் கோபமாய் பார்த்தான்.

“கையை விடு… அதான் என் ஞாபகமே வரக் கூடாதுன்னு ரூம்ல இருந்த என் போட்டோவை எல்லாம் கழட்டித் தூக்கிப் போட்டுட்ட இல்ல… அப்புறம் என்னடா நமக்குள்ள” என்றவள் கேட்க, அவனுக்குக் கடுப்பேறியது. இவானை மனதில் கொண்டு அவன் அந்தப் புகைப்படங்களை எல்லாம் அகற்ற அது அவனுக்கே வினையாய் முடிந்தது.

அவன் தன்னிலையை அவளிடம் புரிய வைக்க எண்ணி , “நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கடி” என்று ஆரம்பிக்கும் போதே

“ப்ளீஸ் விக்ரம்… என்னை விட்டுடு… உன் அரிசியல் வாழ்க்கையும் என் போலீஸ் வேலையும் எந்த காலத்துலயும் ஒத்துப் போகாது” என்றாள் அவள்!

“அப்படின்னா நம்ம சேரவே முடியாதா?”

“வேண்டான்னு சொல்றேன்… திரும்பத் திரும்ப ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்க வேண்டாம்” என்றவள் முடிவாக சொல்லிவிட்டு திரும்பி நடக்க,

“அப்படின்னா என்னோட ரெண்டாவது கல்யாணத்துல உனக்கு எந்தவித அப்ஜெக்ஷனும் இல்லன்னு ஒரு பான்ட் பேப்பர்ல எழுதி சைன் போட்டுக் கொடுத்தனுப்பு” என்றான்.

அவள் அதிர்ச்சியாய் அவனைப் பார்க்க, “ம்யூச்சுவலாவே இருந்தாலும் டிவோர்ஸ் கிடைக்க லேட் ஆகுமே… அதான்!” என்று அவன் ஏளனமாய்  பதிலளித்தான்.

“என்னடா மிரட்டிப் பார்க்கறியா?” என்றவள் அவனை முறைத்துப் பார்க்க, “சேச்சே! ஐம் வெரி சீரியஸ்… முடிச்சுக்கணும்னு முடிவு பண்ண பிறகு எதுக்கு அதைப் பத்தியே நினைச்சுக் கடுப்பாயிட்டு… சோ லெட்ஸ் மூவ் ஆன்” என்றவன் சாதாரணமாக சொல்ல அவளுக்குத்தான் அவன் சொன்ன வார்த்தையை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

அவனுக்கு எந்தவித பதிலும் உரைக்காமல் அவள் தன் வாகனத்தில் ஏறிப் புறப்பட்டு விட்டாள்.

அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வீசிய வார்த்தைகள் இருமுனைக் கத்தியாய் பாய்ந்து அவர்கள் இருவரையும் மட்டும் காயப்படுத்தவில்லை. அவர்கள் காதலையும் உறவையும் சேர்த்தே காயப்படுத்தியது.

 

error: Content is protected !!