mu-20

mu-20

சக்கரவியூகம்

ஆனைமலையில் இருந்து அந்தக் கார் வேகமாய் பயணித்துக் கொண்டிருக்க ஏனோ சூர்யாவின் மனம் கலக்கத்தில் மூழ்கியிருந்தது. அலெக்ஸ் அருகில் அமர்ந்து ஓயாமல் பேசியபடி வந்தாலும் அவள் ஒரு வார்த்தைக் கூடப் பதிலுரைக்காமலே வந்தாள்.

அபிமன்யுவைப் பார்க்க இதே ஆனைமலையில் பயணத்தைத் தொடங்கிய சூர்யா அன்று இந்த அழகான இயற்கை சூழ்நிலையை மெய்மறந்து ரசித்தாள். ஆனால் இப்போது அவள் நினைவுகள் முழுக்க ஒருவனின் முகம் மட்டுமே அழுத்தமாய் பதிவாகியிருந்தது.

அது அபிமன்யுவின் முகம்தான். அவன் மீது எத்தகைய உணர்வைக் கொண்டிருக்கிறோம் என்பதை அவளால் கணிக்கவே முடியவில்லை. அவன் கடைசியாய் உதிர்த்த வார்த்தைகள் மனதைத் துளையிட, கணவன் மனைவி என்று சொன்ன அந்த நொடி அவள் அவன் புறம் காந்தமாய் இழுக்கப்பட்டிருந்தாள்.

காதலிக்கிறேன் என்று பார்ப்பவர்கள் பழகியவர்கள் எல்லாம் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த சூழ்நிலையில் அந்த வார்த்தை அவளுக்கு சலிப்புத்தட்டிப் போனது. ஆனால் எந்த ஆடவன் மீதும் இம்மியளவு கூட அத்தகைய எண்ணம் ஏற்பட்டதில்லை. ஆனால் அபிமன்யு ஒரு படி மேல் போய் தன்னை மனைவியாகப் பாவித்ததாக சொன்ன போது தனக்கு ஏன் கோபம் வரவில்லை என்று அவளுக்குள்ளேயே ஆராய்ந்து கொண்டிருந்தாள். எங்கே சுற்றி எப்படி வந்தாலும் அவன் மீது காதலும் ஈர்ப்பும் இருப்பதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளவே செய்தது.

சூர்யா அவன் கடைசியாய் பேசிய வாக்கியங்களை ஓட்டிப் பார்த்தாள். ஒரு பக்கம் அந்த வார்த்தைகள் அளவில்லாக் கோபத்தைத் தலைதூக்க செய்த அதே நொடி காதலையும் சுரந்து அவளைத் தவிப்பில் ஆழ்த்தியது. அவன் தன் காதலையும் அழகாய் கோபத்தோடு வெளிப்படுத்திவிட்டான் என்று எண்ணம் தோன்ற, சூர்யா அந்த நொடி அவனையும் அவன் காதலையும் உள்ளூர ரசிக்கவேத் தொடங்கினாள்.

அவனை மீண்டும் சந்திக்கும் தருணம் எப்போது என்ற கேள்வி எழ வேறொரு கேள்வி அவள் மனத்தில் எழுந்தது. அந்தக் கேள்வியை அவள் அலெக்ஸிடம் திரும்பி வினவினாள்.

“அலெக்ஸ்… நாம அபிமன்யுவோட ஃபேம்லி பத்தி விசாரிக்கவே இல்லையே?” என்று அவள் தன் மௌனத்தை அப்போது கலைக்க,

அலெக்ஸ் வியப்புக்குறியோடு, “அப்பாடா… ஒரு வழியா உன் திருவாயைத் திறந்து பேசிட்டியே… திடீர்னு மேடம் ஊமையாகிட்டீங்களோன்னு நினைச்சேன்” என்றான்.

“கமான் அலெக்ஸ்! விளையாடாதே… நான் சீரியஸா கேட்டுட்டிருகேன்” என்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.

“என்ன சூர்யா? அந்தத் தாத்தா சொன்னதெல்லாம் நீ மறந்துட்டியா ?” என்றான்.

“அப்படியா?! அபி பேஃம்லி பத்தி அவர் சொன்னாரா அலெக்ஸ்?”

“அதான் அபிமன்யுவோட தாத்தா அரங்கநாதன்… அப்புறம் அவன் தாத்தாவுக்குத் தாத்தான்னு பெரிய பூர்வ ஜென்ம கதை எல்லாம் சொன்னாரே”

சூர்யா பெருமூச்சுவிட்டபடி, “அது இல்ல அலெக்ஸ்… அபிமன்யுவோட பேரண்டஸ் யார் என்னன்னு எதுவுமே விசாரிக்கலயே?” என்றாள்.

“அந்த அபிமன்யு ஆஃப்ட்ரால் ஒரு சித்த வைத்தியன்… அவங்க அப்பா என்ன பெரிய அம்பானியா இருக்கப் போறாராக்கும்… அவரும் ஏதாவது ஒரு ஊர்ல வைத்தியம் செஞ்சுகிட்டிருப்பாரு… இதைப் போய் பெரிய மேட்டரா பேசிட்டிருக்க” என்றான்.

சூர்யாவிற்கு விவரிக்க முடியாத கோபம் தலைதூக்கியது. அனல் தெறிக்கும் பார்வையோடு,

“ஸ்டாப் இட் அலெக்ஸ்! அதென்ன ஆஃப்ட்ரால் சித்த வைத்தியன்… சித்த வைத்தியம்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா? நீ நினைக்கிற மாதிரி அது ஒன்னும் சாதாரணமான விஷயம் இல்ல… இன்னைக்கு உலகமே தேடிக்கிட்டிருக்குற பல நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகள் அதுல இருக்கு…

நம்ம கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நாமளே ஊதாசீனப்படுத்தினால்… மத்தவன் எப்படி மதிப்பான்… அபிமன்யு மாதிரி இருக்கற சிலர்தான் நம்ம மொழியையும் கலாச்சாரம் பண்பாட்டையும் காப்பாத்திட்டிருக்காங்க… வீ ஹேவ் டூ சல்யூட் தெம்… வாட் டூ யூ நோ அபௌட் அபி… பார்க்கத்தான் ஹி சீம்ஸ் டூ பீ யங்…

பட் திக்கிங்ல என்ன மெச்சூரிட்டி?! என்ன மொராலிட்டி?! எவ்வளவு க்ளேரிட்டியான தாட்ஸ்… என்ன கட்ஸ்?! ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் இந்த மாதிரியான ஆளுங்க எல்லாம் பிறப்பாங்க அலெக்ஸ்… அப்படிப்பட்ட கேரக்டர் அபிமன்யு… இன்னும் சொல்லணும்னா மரம் செடிக் கொடிக்குக் கூட உயிரும் உணர்வும் இருக்குன்னு நம்ம பூமியை நேசிக்கிற யுனிக் பர்ஸ்ன்… ஆனா நீங்க எல்லாம் இந்த உலகத்தையே தன் காலடில வைச்சுக்கணும்னு நினைக்கிற அந்த ஈஷ்வர் மாதிரியான பிஸ்னஸ் மேனுக்குதான் மதிப்புக் கொடுப்பீங்க… இல்ல” என்று அவள் எரிமலையாய் வெடிக்க  அலெக்ஸ் பேச்சற்று அமர்ந்திருந்தான்.

அவளுக்கு எப்படி இந்தளவுக்கு அபிமன்யுவின் மேல் மரியாதை உண்டானது எனப் புரியாமல் வியந்து கேட்டுக் கொண்டிருந்தவன், சட்டென்று அவள் ஈஷ்வரை மட்டம் தட்டி பேசியதைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியானான்.

ரா குரூப் ஆஃப் கம்பெனியின் பலரின் இன்ஸ்பிரேஷன் ஈஷ்வர்தான். அவனின் கம்பீரம், பேச்சுத்திறமை, ஆளுமை, தோரணை இவை எல்லாம் கடந்து அவன் எவ்வளவுதான் அதிகாரம் செய்தாலும் அவனிடம் வேலை செய்பவர்கள் மத்தியில் அவன் ஹீரோதான். அவனை ஒரே ஒரு முறை பார்த்தாலே போதுமானது. அவனின் பேச்சிலும் திறமையிலும் அவர்கள் நிச்சயம் வசீகரிக்கப்பட்டுவிடுவர். அலெக்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஈஷ்வரை அப்படி அவள் அபிமன்யுவோடு ஒப்புமை செய்து மட்டம்தட்டியதைத் தாங்க முடியாமல், ” அந்த அபிமன்யுவை நீ எவ்வளவு வேணா தூக்கி வைச்சுப்் பேசிக்கோ… அதுக்காக நம்ம பாஸை மட்டம்தட்டிப் பேசாதே… நான் அதை ஏத்துக்கவே மாட்டேன்” என்று அழுத்தமாய் உரைத்தான்.

சூர்யா அலட்சியமாக, “அந்த ஈஷ்வர் ஒன்னும் நம்ம பாஸ் இல்ல… உனக்கு பாஸ்… எனக்கு அவந்திகா மேடம்தான் பாஸ்” என்றாள்.

இவள் இவ்விதம் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயத்தில் சூர்யாவின் கைப்பேசி ஒலித்து அவர்களின் சம்பாஷணையைத் தடை செய்ய அவள் அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

அந்தக் கைப்பேசியில் ஒளிர்ந்த எண்ணை பார்த்ததும் அவள் முகம் மாறுதலடைய அதைக் கவனித்த அலெக்ஸ், “யாரு சூர்யா ஃபோன்ல?” என்று வினவினான்.

சூர்யா யோசனைக்குறியோடு, “மதி இஸ் காலிங்” என்று நெற்றியில் கைவைத்துக் கொண்டாள்.

அலெக்ஸ் முகம் பிரகாசமடைய, “மதி காலிங்னா அப்போ பாஸ்தான்… ஈஷ்வர் பாஸுக்கு மூணாவது கண்ணு இருக்கு சூர்யா… வேரவர் வீ ஆர்… ஹி வில் பீ வாட்சிங்… நீ பேசினது தெரிஞ்சுக் கூட இருக்கலாம்… என்ன பயமா இருக்கா… கமான் பேபி பிக் அப் தி கால்? ” என்று வெற்றிப் புன்னகையோடு உரைத்தான்.

சூர்யா அவனை முறைத்துப் பார்த்தபடி, “நான் எதுக்குப் பயப்படணும்… நீ கொஞ்சம் ஸைலன்டா இருந்தா நான் பேசுவேன் அலெக்ஸ்” என்று சொல்லியபடி  அழைப்பை ஏற்றாள்.

மதி எதிர்புறத்தில், “சூர்யா” என்றழைக்க,

“யா மதி சொல்லுங்க” என்றாள் இவள்.

மதியை ஸ்பீக்கர் ஆன் செய்ய சொல்லிவிட்டு எதிர்புறத்தில் ஈஷ்வர் கையசைத்துப் பேசச் சொன்னான்.

“அது வந்து சூர்யா… அந்த அபிமன்யுவை நேர்ல மீட் பண்ணிப் பேசியாச்சா?” என்று மதி கேள்வி எழுப்ப, ஈஷ்வரே அவனை நூல் பொம்மையாய் ஆட்டுவித்துப் பேச வைத்துக் கொண்டிருந்தான்.

இதுவரை ஒருமுறைக் கூட ஈஷ்வர் சூர்யாவிடம் உரையாடியதே இல்லை. அதற்கான அவசியமும் ஏற்பட்டது இல்லை. என்ன விஷயமாக இருந்தாலும் மதியின் மூலமாகவே அவன் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதே வழக்கம்.

அந்த நிலையில் இப்போது தானே நேரடியாக பேசினால் சூர்யா புத்திக்கூர்மையானவள். தனக்கு இந்த அபிமன்யு விஷயத்திலிருக்கும் ஆர்வத்தை சந்தேகிக்கக் கூடும். அத்தகைய வாய்ப்பை அவன் தர விரும்பாததால் அவன் மதியையே பேசச் சொன்னான்.

அபிமன்யுவின் விஷயத்தைக் குறித்து மதி கேட்பதை அறிந்ததும் சூர்யா, “சாரி மதி… லைன் க்ளியரா இல்ல… நீங்க சொன்னது சரியா கேட்கல… வெயிட் அ மினிட்… நான் கார்ல இருக்கேன் வெளியே வந்து பேசுறேன்” என்றாள்.

உடனடியாக சூர்யா ஒட்டுநரிடம் காரை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு வெளியே இறங்கி வந்தவள் அலெக்ஸை உள்ளையே அமரச் சொல்லிவிட்டு தனியே வந்தாள்.

அவள் நின்ற இடத்தில் ஆனைமலையின் பசுமை எங்கும் படர்ந்திருந்த காட்சி கண்முன்னே விரிந்து மனதைப் பரவசப்படுத்த, சூர்யாவின் பார்வையும் எண்ணமும் அதில் லயிக்காமல் தன் புத்தியைத் தீட்டியபடி,

“யா நவ் பெட்டர் மதி… இப்ப சொல்லுங்க” என்றாள்.

“அந்த அபிமன்யுவை மீட் பண்ணீங்களான்னு கேட்டேன் ?”

“மீட் பண்ணேன் மதி… பட் மை பேட் டைம்… பேச முடியல” என்றாள்.

மதி அதிர்ச்சியடைய ஈஷ்வரோ அவளின் பதிலில் குழப்பமடைந்தான். “ஏன் என்னாச்சு?”என்று மதி வினவ,

சூர்யா சிறிதளவும் தடுமாற்றமே இல்லாமல் பொய்யுரைத்தாள்.

“ஏதோ ரிசர்ச்சாம்… மூலிகை எடுக்கணும்னு சொல்லிக் கிளம்பிப் போயிட்டார்… வீ மிஸ்ட் ஹிம்… எப்போ வருவாருன்னு தெரியல”

மேலும் மதி என்ன சொல்வது என யோசனையோடு ஈஷ்வரைப் பார்க்க அவன் கையசைப்புக்கு ஏற்ப, “எங்கே மூலிகை எடுக்கப் போனான்னு விசாரிச்சியா சூர்யா?” என்று கேட்டான்.

சூர்யா இந்தக் கேள்வியைத்தான் எதிர்பார்த்தாள். “விசாரிச்சேன் மதி… அந்த பிளேஸ் நேம் எனக்கு டக்குன்னு ஸ்டிரைக் ஆகல… சம்திங் லைக்… கொ” என்று அவள் யோசிப்பதைப் போல் நடிக்க எதிர்புறத்தில் மதி ஆர்வக்கோளாறில், “கொங்ககிரியா…” என்று கேட்டு அவள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டான்.

மதி கொங்ககிரி என்ற பெயரைச் சொல்லும் முன்பே ஈஷ்வர் வேண்டாமென தலையசைத்ததை அவன் கவனிக்கத் தவறினான்.

இப்போது சூர்யா அழுத்தமாய், “ரைட் மதி கொங்ககிரிதான்… நான் மறந்துட்டேன்… நீங்க கரெக்டா ரிமைன்ட் பண்ணிட்டீங்க… தேங்க்ஸ் மதி” என்று நிறுத்தியவள் மீண்டும் மதியை நோக்கி,

எனக்கு ஒரு டௌட்… உங்களுக்கு எப்படி மதி அந்தப் பேர் தெரியும்” என்று சந்தேகமாய் கேட்பதுப் போல் நடித்தாள்.

இப்போது மதி தன் தவற்றை உணர்ந்தவனாய் ஈஷ்வரைப் பார்த்து அசடு வழிந்தான்.

மீண்டும் மதியிடம் ஈஷ்வர் ஏதோ உரைக்கச் சொல்ல அவனும்,”அது கொங்ககிரிலதான் நிறைய மூலிகை எல்லாம் கிடைக்கும்னு நான் கேள்விப்பட்டிருக்கேனே… அதான்…” என்று சமாளிக்க,

“ஓ அப்படியா… கிரேட் மதி… நீங்க நிறைய விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க… செம நாலேஜ் உங்களுக்கு” என்று அவள் புகழ இப்போது ஈஷ்வரால் தன் சிரிப்பை அடக்க முடியாமல் விலகிச் சென்றான்.

மதி வெறும் நூல் பொம்மை என்பதால் சூர்யாவை எப்படிச் சமாளிப்பது எனக் குழப்பத்தோடு இருக்க இப்போது சூர்யாவே, “என்னாச்சு மதி? ஸைலன்ட் ஆயிட்டீங்க” என்று கேட்டாள்.

“நத்திங் சூர்யா… நீங்க எப்போ மும்பைக்கு ரிடர்ன்” என்று மதி இப்போது ஈஷ்வரின் சார்பாகக் கேட்க,

“அபிமன்யுவைப் பார்க்க முடியல… எப்போ பார்க்க முடியும்னு தெரியல… ஸோ வைத்திய சாலை விட்டுக் கிளம்பிட்டோம்… பட் எனக்குக் கொஞ்சம் பர்ஸ்னல் வொர்க் இருக்கு… வர்றதுக்கு ஒன் வீக் ஆகும்” என்றாள்.

கடைசியாய் மதியும் அவள் சொல்வதற்கு, “அப்படியா” எனக் கேட்டுவிட்டு மேலே அந்த உரையாடலை நீடிக்காமல் உரையை முடித்துத் தப்பித்தால் போதும் என அழைப்பைத் துண்டித்தான்.

ஈஷ்வர் காரணம் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருக்க மதியோ என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.

இப்போது ஈஷ்வர் சுதாரித்து படுக்கையின் மீது அமர்ந்து கொள்ள மதி, “சாரி பாஸ்” என்றான்.

ஈஷ்வர் புன்னகையோடு, “சாரிங்கிற வார்ட்டை மொத்தமா நீயே குத்தகைக்கு எடுத்து வைச்சிருக்கியா மதி” என்று சொல்லி மீண்டுமே சிரித்தான்.

மதிக்கு அவன் எப்போது எப்படி நடந்துகொள்வான் என யூகிக்க முடியாமல் மௌனமாய் நின்றான்.

ஈஷ்வர் தன் சிரிப்பை நிறுத்திவிட்டு, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா…மதி ?” என்று கேட்க

“என்ன பாஸ்?” என்றான் ஆர்வாமாக!

“எனக்கு வெளியே எல்லாம் எதிரிங்க இல்ல மதி… நான் என் கூடவே வைச்சிருக்கேன்… நீ ஒருத்தன் போதும்… என்னை காலிப் பண்ண” என்று ஈஷ்வர் உரைக்க மதி அதிர்ந்தபடி, “பாஸ்!” என்று விளிக்க,

ஈஷ்வர் இப்போது சௌக்ர்யமாய் அமர்ந்தபடி “இப்ப எதுக்கு ஷாக்காகிற… அந்த சூர்யா க்ளவரா உன்னை டிரேப் பண்றா… நீயும் அவ விரிச்ச வலையில் போய் சிக்குற… உனக்கு மதின்னு பேர் வைச்சவங்க மட்டும்  என் கையில கிடைச்சாங்க” என்று சொல்லி கோபம் கொள்வதை போல் அவனை பாவனைச் செய்ய மதியின் முகம் தொங்கி போனது.

“நான் அந்த சூர்யா இப்படி என்னை சிக்க வைப்பான்னு சத்தியமா எதிர்பார்க்கல பாஸ்”

“எதிர்பார்க்கணும் மதி… நம்மகிட்ட பேசிறவங்க மனசில என்ன ஓடுதுன்னு நம்ம யூகிக்கனும்… அவங்க பேசிற டோன் வைச்சே அவங்க உண்மை பேசிறாங்களா இல்லை பொய் பேசிறாங்களான்னு நாம கண்டிப்பிடிக்கணும்… அந்த சூர்யா ரியலி க்ளவர்… ஆனா அவ மோட்டிவ் உன்னை டிரேப் பண்றது இல்ல மதி… என்னை டிரேப் பண்றது… அவ புத்திசாலித்தனத்தை இந்த ஈஷ்வர்கிட்டயே காமிக்கிறான்னா… அவளுக்கு  என்ன திமிரு இருக்கும் ” என்று இப்போது அழுத்தமாய் கோபம் கொண்டான்.

மதி அவனின் பேச்சை கேட்டுவிட்டு, “இப்ப என்ன பண்ணலாம் பாஸ்… மேடமுக்கு இந்த விஷயம் எல்லாம் சூர்யா சொல்லிட்டா? ” என்றான்.

“நீ அந்த சூர்யா சொன்னதை சரியா கவனிக்கலயா மதி… ஒன் வீக் கழிச்சுதான் அவ மும்பை வருவேன்னு சொல்லி இருக்கா… ஸோ இன்னும் க்ளியரான டீடைல்ஸோட மாமை மீட் பன்ற ஐடியால இருக்கலாம்… அவ முந்திக்கிறதுக்கு முன்னாடி நம்ம முந்திக்கணும்” என்றான்.

“இருந்தாலும் அந்த சூர்யாவுக்கு இவ்வளவு திமிரு ஆகாது பாஸ்… உங்களயே” என்று கோபம் கொள்ள,

ஈஷ்வர் புன்னகையோடு, “விடு மதி… புத்திசாலித்தனம் இருக்கிற இடத்தில கொஞ்சம் திமிரு இருக்கதான் செய்யும்… என்ன? அந்த அபிமன்யுவை மீட் பண்ணி பேசி எல்லா மேட்டரையும் வாங்கிட்டு பேசவே இல்லைன்னு ஒரு ரீல் விட்டாளே… அதுதான் எக்ஸ்டீரீம்” என்றான்.

“அப்படியா பாஸ்… அப்போ அந்த அபிமன்யு கிட்ட சூர்யா பேசிட்டாளா ?”

“அதையே நீ இன்னும் கண்டிப்பிடிக்கலயா….. ரொம்ப கஷ்டம்… அவ எப்போ கொங்ககிரிங்கிற பேரை உன் வாயில இருந்து வாங்கணும்னு நினைச்சாலோ அப்பவே அவ சொன்னது எல்லாம் பொய்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்… ஆனா ஒரு விஷயம் மதி… தெரிஞ்சோ தெரியாமலோ அந்த சூர்யா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கா… அதுக்காக நான் அவளை பாராட்டியே ஆகணும்” என்றான்.

“என்ன ஹெல்ப் பாஸ் ”

“அந்த அபிமன்யுவை கண்டுபிடிச்சது… ரொம்ப முக்கியமான மேட்டர் கொங்ககிரி மேட்டர்ல சூர்யா நம்மல சந்தேகப்படறான்னா… அவளுக்கு அந்த விஷயம் அவன் மூலமாதான் தெரிஞ்சிருக்கணும்… மார்டன் மெடிஸன் ஸைன்ஸ் பத்தி அவன் புக் எழுதி இருக்கான்னும் போதே அவன் நிச்சயமா நம்மல ஸ்மெல் பண்ணி இருப்பான்னு தோணுது… ஹீ இஸ் தி மாஸ்டர் மைன்ட் பிகைன்ட் தட் கொங்ககிரி மேட்டர்… ஆனா எனக்கு ஒரு விஷயம் நெருடலா இருக்கு… அந்த சூர்யா நம்ம அப்போஸிஷன் கம்பெனிக்காக வேலை பார்க்கிறாளோ?!” என்று தன் சந்தேகத்தைக் கேட்க மதி உறுதியாக “சேன்ஸே இல்ல பாஸ்” என்று உரைத்தான்.

“அதென்ன மதி உனக்கு அவ்வளவு நம்பிக்கை”

“என்ன பாஸ் மறந்திட்டீங்களா… சூர்யா சுந்தர் சாரோட டாட்டர்… அப்புறம் எப்படி?” என்று கேட்க,

“ரைட் மதி… நீ எப்பவோ என்கிட்ட சொன்ன இல்ல… நான்தான் மறந்திட்டேன்” என்றான்.

இப்போது சூர்யாவை இம்மியளவும் அவனால் சந்தேகிக்க முடியாது. அவனின் தந்தை மரணத்திற்குப் பின் அவந்திகா பிள்ளைப் பேறு அடைந்தாள். அந்த விபத்தில் அவனின் தந்தையோடு சுந்தர் செல்ல முடியாமல் தடுத்ததின் பயனாக அந்த இக்கட்டான நேரத்தில் ஆபத்பாந்தவனாய் அவர்களுக்குத் துணை நின்றது சுந்தர்தான்.

அதுவும் அவந்திகாவிற்கு துணையாய் நின்ற அதே நேரத்தில் ஈஷ்வருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர். அதை எல்லாம் நொடி பொழுதில் நினைவுபடுத்தியவன் சூர்யாவினை இத்தனை நாளாய் எப்படி சந்திக்காமல் இருந்தோம் என வியப்பின் விளிம்பில் யோசித்த அதே சமயத்தில் மதி அவனை நோக்கி, “பாஸ்…….” என்றழைத்தான்.

“ம்ம்ம்… சொல்லு மதி” என்று யோசனையோடு கேட்டான்.

“அந்த அபிமன்யு நம்மல ஸ்மெல் பண்ணிட்டானா நமக்கு ரொம்ப டேஞ்சர்ஸ் இல்லயா… அவனோட அடுத்த மூவ் என்னன்னு நாம எப்படிக் கண்டுபிடிக்கிறது” என்று மதி கேட்க,

இப்போது முழுவதுமாய் சூர்யாவை பற்றிய நினைவில் இருந்து மீண்டு எழுந்து நின்றபடி, “அவனோட அடுத்த மூவ் என்னங்கிறது நமக்கு தேவையே இல்லாத விஷயம் மதி… இனிமே நான் மட்டும்தான் விளையாடப் போறேன்… எல்லோரோட மூவையும் நான்தான் டிசைட் பண்ணப் போறேன்… அந்த அபிதான் என்னோட காய்ன்… அவனை நான் பாக்கெட் பண்ண போற என்னோட ஸ்டைகர் சூர்யா… என்ன காரணத்தினாலோ என்னை அந்த சூர்யா மாட்டி விடனும்னு நினைக்கிறால்ல… ஸோ அவளை வைச்சுதான் என் பிளானையே நான் எக்ஸிக்யூட் பண்ணப் போறான்” என்றான்.

“என்ன பிளான் பாஸ்… எனக்கு எதுவும் புரியல”

“ரொம்ப யோசிக்காதே மதி…அது உனக்கு சுத்தமா வராது… நான் சொல்றதை மட்டும் நீ செஞ்சா போதும்… இப்போ உடனே நம்ம டீ7 ரிசர்ச் டீமை தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லு… முக்கியமா சலீம் அந்த டீம்ல இருக்கணும்… நாமலும் உடனே சென்னைக்கு கிளம்பிறோம்… அன் அந்த சூர்யாதான் எனக்கு அஸிஸ்ட் பண்ணப் போற… ரொம்ப முக்கியமான விஷயம்… போன தடவை என் பிளானை ஸ்பாயில் பண்ண… அந்த அபிமன்யுவும் பார்ட் ஆஃப் மை பிளானா இருக்கப் போறான்… திரும்பியும் டீ7 மெடிஸனோட டெஸ்ட்டிங்கை பண்ணப் போறோம்… திஸ் டைம்… நானே நேரடியா நம்ம டீமை வழிநடத்தப் போறேன் மதி!” என்று அவன் வன்மமாய் தன் திட்டத்தை விவரித்தான்.

மதிக்கு அவனின் பார்வையில் ஒளிர்ந்த திடமான நம்பிக்கை இம்முறை அவனுக்கு தோல்விக்கான சாத்தியக் கூறுகளே இல்லை என்பது போல் தோன்றியது.

எண்ணியதை திண்ணமாக்க ஈஷ்வர் தன்னுடைய சக்கிரவியூகத்தை யாரும் தகர்க்க முடியாதபடி பலமாய் வகுக்கத் தொடங்கினான்.

 

error: Content is protected !!