jeevan 17(2)

jeevan 17(2)

தங்களுக்குள் பேசிக்கொண்டே உணவை சுவைத்துக்கொண்டிருந்த கௌதம்,  ஆரன் இருவரையும் கடந்து சென்ற பல பெண்களை கண்ட கௌதமோ முகத்தை சுழிக்க,  ஆரனோ ஆர்வமாய் அவர்களை கண்களால் பின் தொடர்ந்தான்.“அடேய்! உன் வாட்டர் பால்ஸ்ஸ கொஞ்சம் க்லோஸ் பண்ணு.  வெள்ளம் வந்து காம்ப்ளக்ஸ் மூழ்கிட போகுது” என கௌதம் கூற,“கௌதம், இந்த வயசுல அழகான பொண்ணுங்கள பார்த்தா ரசிக்கனும். நீ இந்த சப்ஜெக்ட்ல ரொம்ப வீக். அது நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னதுலையே தெரியுதே. உனக்கு படிப்பும், தொழிலும் தெரிஞ்ச அளவுக்கு பொண்ணுங்க மேட்டர் தெரியல பாரேன்!” என கலாய்க்க,“அப்பா ராசா!  எனக்கு பொண்ணுங்க மேட்டரே வேணாம்டா சாமி. நீயே ஒரு மடத்த ஆரம்பிச்சு அவங்களோட கும்மியடி. நா வரல இந்த ஆட்டத்துக்கு,  அவங்க பின்னாடி சுத்தி டைம்ம வேஸ்ட் பண்றத விட, எனக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு ” என நக்கலாய் கூறியதில், அவன் சொன்ன மடம் மட்டுமே கேட்டது போல,


“டேய் செம ஐடியாடா! ஆனா..!” என ஆரம்பித்தவனை பார்த்து, ‘நிறுத்து!’ என்பதாய் கை காட்டியவன், “முதல்ல பேசாம திங்கறத வேலைய பாரு! அதுக்கப்புறம் பொண்ணுங்க விசயத்தை பத்தி நீ லெக்சர் அடி!” என அதோடு அது சம்மந்தமான பேச்சிற்கு முற்றப்புள்ளி வைத்தான்.


இவர்கள் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நேரம், தங்களின் இருக்கையை தாண்டி சென்று அமர்ந்த அந்த குழுவிலிருந்த பெண்களில் ஒருத்தி, “உன்ன எப்ப வர சொன்னோம். நீ என்ன இவ்வளவு நேரம் கழிச்சி வர்ற. ஸ்வே க்கு வேற வேலையில்ல. அவ உங்களுக்காக காத்திருக்கணுமா?!” என தனது ஜால்ராவை நல்லவிதமாய் துவங்கி வைக்க,

“சாரி, ஸ்வேதா! ட்ராபிக்ல மாட்டிட்டோம்!” என்ற மற்ற பெண்ணின் பதிலில், அருகே நடக்கும் பேச்சுவார்த்தை கேட்கும் தொலைவே என்பதால் தன் காதில் விழுந்த குரலில், ‘அட இது அந்த மாமி கூட பேசின பொண்ணு வாய்ஸ் தானே ! அப்ப அவளும் இங்க தான் இருக்காளோ?!’ என்ற ஆர்வம் தோன்ற, அவர்களின் பேச்சை உற்று கவனிக்க துவங்கினான் கௌதம்.


அதே நேரம், வாயிலை நோக்கி அமர்ந்திருந்த ஆரனின் கண்களுக்கு, வாயிலை தாண்டி நடைபாதையில், அன்று கௌதமையும், தன்னையும் சேர்த்து வைத்து வம்பு செய்தவன் செல்வதை பார்த்தவன், சட்டென எழுந்து, “கௌதம், ஒரு முக்கியமான கால் பண்ணனும். இங்க சவுண்ட்ல பேச முடியாது. நா வெளிய போய் பேசிட்டு, நம்ம எப்பவும் போற ஜென்ஸ்வேர் வந்திடுறேன். நீ மிச்சத்த சாப்பிட்டு போய் செலக்ட் பண்ணிட்டு இரு!” என சொல்லி, அவசரமாக அங்கிருந்து விரைந்தான்.

அவனை தடுத்து என்ன, ஏது என விசாரிக்கவோ, திடீரென அதென்ன முக்கிய கால் என யோசிக்கவோ வழியில்லாமல், கௌதமின் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது பக்கத்திலிருந்த பெண்களில், ‘அந்த குறிப்பிட்ட பெண் இருக்கிறாளா?!’ என அறியும் ஆர்வம்.

அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம், அந்த பெண்ணே பதில் சொல்லி கொண்டிருக்க, “ஏய்! நிறுத்து. ஆமா இங்க வர சொன்னது இந்த தயிர்சாதத்த தானே! நீ கூட வந்ததே தப்பு. இதுல கேக்கற கேள்விக்கெல்லாம் நீயே பதில் சொல்லிட்டு இருக்க? ஏன் இந்தமாமி இன்னைக்கு மௌனவிரதமோ?!”  என்று கேட்ட பெண்ணின் குரலில் வெளிப்பட்டது அப்பட்டமான நக்கல் தோனியோடு கூட திமிர்…

“இல்ல ஸ்வேதா!” என மீண்டும் அந்த பெண்ணே ஆரம்பிக்க, “ஸ்டாப் இட்! கெட் அவுட் பிரம் திஸ் ப்ளேஸ்!” என்று கத்தியவள், “வந்த வேலை முடிஞ்சுதில்ல, போயிட்டே இரு. இவள ஹாஸ்டல்ல விடறத நா பார்த்துக்கறேன்” எனவும், சுமிக்கோ காயத்ரியை நினைத்து கவலை அதிகரித்தது, அவர்களிடம் மாட்டிக்கொண்டவளின் நிலையை நினைத்து…

இதற்கு மேல் இங்கு தன்னை இருக்க விடமாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்தவள், தனதருகே அமர்ந்திருந்த காயத்ரியின் கையை ஒருமுறை அழுத்த, சுமியை கண்கள் கலங்க பார்த்தவளின், ‘ப்ளீஸ் விட்டுட்டு போகாத!’ என்ற இரஞ்சல் நன்கு புரிந்தாலும், ஸ்வேதாவின் ஆங்காரம், அவளின் பின்புலம் இரண்டும் நன்கு அறிந்த சுமியால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில், “சாரி காயூ! டேக் கேர்” என அவளும் காயத்ரியின் கையில் தட்டி கொடுத்துவிட்டு, கண்களால் விடை பெற, சிங்கத்தின் குகையில் மாட்டிக்கொண்ட சிறு முயலாய் தவித்து நின்றாள் காயத்ரி.

“அப்புறம் மாமி, என்ன சாப்பிடற?” என ஸ்வேதா கேட்க, ‘வேண்டாம்’ என்பதை போல தலைகுனிந்தவாரே தலையசைத்த காயுவை பார்த்து, “ஓய்! நாங்களும் பொண்ணுங்க தான். நிமிந்து எங்கள பார்த்து பதில் சொல்லு!” என சொல்லிய நொடி , அவளை பார்த்தவள் மீண்டும் தலைகவிழ… “என்னடீ இவ, பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிளைய பார்க்கற மாதிரி, சடனா இப்படி பார்த்துட்டு குனிஞ்சிட்டா!” என ஸ்வேதா சொல்ல, ஏதோ இது தான் உலகத்தின் மிக சிறந்த காமெடி என்பது போல கூட இருக்கும் அல்ல கைகள், கை தட்டி சிரிக்க… கேட்டு கொண்டிருந்த கௌதமிற்கு கடுப்பின் அளவு கூடிக்கொண்டே சென்றது.

“மாமி, ஷாப்பிங் மால் வந்திருக்க, கையில ஒன்னுமே இல்லையே?!” என கேட்ட பிறகே கீழே நடந்ததும், அதற்கு சிறிது நேரம் முன்பு, சுமி, “காயத்ரி நீ, உன் பர்ஸ் போன் ரெண்டையும் என்கிட்ட கொடுத்துடு. அவளுங்க எதாவது செஞ்சு செலவு வைக்க பார்த்தா, வெறும் ஹேண்ட்பேக் மட்டும் இருக்கறத பார்த்திட்டு விட்டுடுவாங்க. இங்க வர வச்சா வேற என்ன பனிஷ்மெண்ட் கொடுத்திட போறாங்க!”  என சொல்லி, தன் பர்ஸ் மற்றும் போனை அவள் வாங்கியதும், இப்போது அதனை அவள் கொண்டு சென்றதும் நினைவு வர, இப்போது கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையில், தன்னை இங்கே இவர்கள் விட்டு சென்றாள் கூட ஹாஸ்டல் செல்லா முடியாத தனது நிலை புரிய கண்கள் மேலும் பனித்து, உடலும் நடுங்க துவங்கியது.

“சொல்லு ! வெறும் கையோடவா வந்த?!” என மீண்டும் கேட்க, ‘இப்போது இவர்கள் மனது வைத்தால் மட்டுமே தான் செல்ல முடியும்!’ என்பதால், சுமியிடம் கொடுத்ததை சொல்லாமல், கீழே தனது ஹேண்ட்பேக் திருடப்பட்டதை மெல்லிய குரலில் சொல்ல, மீண்டும் அந்த கும்பலின் சிரிப்பொலியில் அந்த இடமே அதிர்ந்தது.

 

“ என்னதூ! உன் பேக்க அடுச்சானா? லூசா அவன்?! போயும் போயும் அந்த திருடனுக்கு உன் பேக் தான் கிடச்சுதா?! சோ சேட் ஆப் ஹிம்..” என நக்கலாக உரைத்த ஸ்வேதா, “அப்ப நீ சாப்பிடறதுக்கும் சேர்த்து நாங்க தான் பே பண்ணனுமா? விடு நம்ம இங்க பேரருக்கு கொடுக்கற டிப்ஸ்ஸ விடவா இவ சாப்பிட போறா?!” என்றதும் மீண்டும் அவர்களின் சிரிப்பொலி நிறைந்தது அந்த இடத்தில்…

அவர்கள் பேச ஆரம்பித்த உடனே அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்த கௌதமிற்கோ, அந்த பெண்ணை கேலியும், கிண்டலும் செய்து கலாய்க்கும் அந்த கூட்டத்தையே அடித்து தும்ஷம் செய்யும் அளவு கோபம் வந்தது.

என்ன தான் இருந்தாலும் தங்களை நம்பி வந்த பெண்ணிடம், அவளின் இயல்பையும், தகுதியையும் கொண்டு கிண்டல் செய்வது தவறு என கருதிய கௌதமிற்கு, அந்த பெண்ணின் முகம் இதை கேட்கும் போது என்ன மாதிரி இருக்கும்,  வேதனையை காட்டுமா?! இல்லை கண்ணீரில் தவிக்குமா?!’ என தன் எண்ணத்திலேயே பயணித்தவன், அவளை பார்த்தே தீர வேண்டும் என்ற உந்துதலில், சற்று நிமிர்ந்து அவர்கள் இருக்கும் திசையில் பார்க்க, அதில் அவன் சொன்ன வெள்ளை சுடி பெண்ணின் முதுகு மட்டுமே தெரிந்தது. அதைவும் கூனிகுறுகி தலையை குனிந்து அமர்ந்திருப்பதை பார்க்க,


மனதுக்குள்ளேயே, ‘நீ ஏன் தலைய குனுஞ்சு இருக்க?! இதுல உன் தப்பு என்ன?! தைரியமா இரு. உனக்கு எல்லாமுமா நா இருக்கேன். அவளுங்க என்ன உனக்கு செய்யறது?!  எங்கிட்ட இல்லாத பணமா?! நா நெனச்சா இப்ப, இந்த காம்ப்ளக்ஸ் உன் பேருக்கு மாறும்!’ என தன்போக்கில் எண்ணி கொண்டிருந்த கௌதமிற்கே ஒரு கணம் தன் மனதின் ஓட்டத்தை நினைத்து அதிர்ந்து தான் போனான்.


‘தானா இது! இதுவரை சரியாக பார்க்காத, அவளை பற்றி சிறிதும் தெரியாத, ஒரு பெண்ணிற்காக  எதையும் செய்ய நினைப்பது எவ்வளவு பெரிய அபத்தம்! அவள் ஏழ்மையை குத்தி காட்டி பேசுவதால் வந்த கழிவிறக்குமிது. இதை தொடர கூடாது!’ என உடனடியாக முடிவெடுத்தவன், அதன் பிறகு அவர்களை கவனிக்க கூடாது என்று தீர்மானித்து, தன் உணவில் கவனத்தை செலுத்தினான்.ஆனாலும், ‘நில்’ என்றால் நிற்கும் மனம் கொண்ட அந்த கௌதமா புத்தரா இந்த கௌதம்! ஆசைகள் நிறைந்த மனிதனாயிற்றே… !

 

தங்களுக்கான  உணவை வாங்கி சென்ற அந்த குழுவில் இருவரின் பேச்சை கேட்டவன், மனம் கொதிநிலையை தாண்டி சென்றிருந்தது. ‘ஆம் !’ அவர்கள் சொன்னது அப்படி!

“எனக்கு ஸ்வேதா செய்றது ஒண்ணுமே புரியலடீ. அவள பணிஷ் பண்ண தானே இங்க வரவச்சா. ஆனா இப்ப எதுவும் செய்யாம சைலண்ட்டா சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட சொல்லிட்டு இருக்கா?!” என ஒருத்தி கேட்க…

“ஸ்வே பத்தி உனக்கு தெரியாதா?! அவ எது செஞ்சாலும் அதுல ஒரு விசயம் இல்லாம இருக்காது. இப்ப மாமிய சாப்பிட சொல்லி ஆர்டர் செஞ்சது என்ன தெரியுமா?!”

 

“ஏன் தெரியாது? சேனைகிழங்கு கட்லெட் தானே!” என்றதும், தனது வாயை கரத்தால் மூடி சிரி்த்தவள், “அய்யோ! அய்யோ! அது சேணைகிழங்கு கட்லெட் இல்ல. அது சிக்கன் கட்லெட்!” என்றதும்…“ஏய் என்னடீ சொல்ற? வேணாம்டீ. அவ பாவம், அவ இதெல்லாம் கண்ணுல பார்த்தாலே ரெண்டு நாள் சாப்பிடமாட்டா. அவளுக்கு போய் இத.. தப்புடீ!” என கூற…


“என்னடீ! மாமிக்கு ஓவரா சப்போர்ட் பண்ற, நீ கம்முன்னு இரு நாங்க பார்த்துக்கறோம் சரியா?! அவ என்ன தான் பண்றான்னு நாங்க நேருல பாக்கனும் ” என்க,


“என்னமோ சொல்லறீங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குடீ ” என்ற அவர்களின் பேச்சை கேட்டவன், அவர்கள் வைத்திருந்த ப்ளேட்டை தான் தருவார்கள் அதை தட்டிவிடலாமா?! என யோசிக்கும் போதே…


“ஏய்! இந்த ப்ளேட்டா அவளுக்கு?!” என்ற கேள்விக்கு, “மாமிக்கு ஏற்கனவே சிக்கன் பார்சல் போயாச்சு. அங்க பாரு ஸ்வே அத கொடுத்திட்டு இருக்கா” என்றதும்,


அதை அனைத்தையும் கேட்டவன், இவர்கள் செய்யும் செயல் அவளை எவ்வளவு பாதிக்கும் என்பதை உணர்ந்தவனாக,  சட்டென தன்னிருக்கையிலிருந்து எழுந்து அவர்கள் அருகே செல்லவும், அவர்கள் கொடுத்த உணவு மாமிசம் என்பதை அறியாது, அவர்களின் பேச்சில் கண்களில்  கண்ணீர் வருவது போல இருந்தாலும், இவர்கள் அழைப்பை ஏற்று வந்த பிழைக்கு இது தேவை தான் என்பதை போல, தன்னையே சமாளிக்க திணறிய படி வாயில் வைத்தவள், ஒரு நொடியில் உணவின் மாற்றத்தை உணர்ந்து கொண்டாள்.

அடுத்த நொடி கலங்கிய கண்கள் கண்ணீர் மழையை பொழிய, தன் வயிற்றை பிரட்டும் உணர்வுக்கு ‘எங்கே செல்ல!’ என்ற பதட்டமும் கூட, தன் கையால் வாயை மூடியவள் அங்கிருந்து எழ எத்தனிக்க,


அவளை ஓட முடியாத படி பிடித்த ஒருத்தியோ, “ஏன் மாமி!  சிக்கன் டேஸ்ட் நல்லா இருக்கா?!” என கண் சிமிட்டி கேட்க,  மற்றவர்கள் ஆரவார சிரிப்பை உதிர்த்தனர். பெண்ணவளின் வேதனையை அவர்களுக்கு உணர்த்துபவர் தான் அங்கு எவருமில்லை.

இது அனைத்தும் கௌதம் அவர்களுக்கு அருகே வரும் நேரத்திற்குள் நடந்திருக்க, வேகமாக அவர்களை நெருங்கியவன், நொடியில் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டு, காயத்ரியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர எத்தனிக்க,

யாரோ ஒருவன் இப்படி அவளை சட்டென இழுத்து சென்று காத்தால், தாங்கள் எப்படி அவளின் தவிப்பை ரசிக்க முடியும் என எண்ணிய ஒருத்தி, “ஏய் மிஸ்டர் ஹூ ஆர் யூ?! யார கேட்டு அவ கைய பிடிக்கற?! இடியட் கைய விடு” என கத்த,கௌதம் பார்த்த அக்னி பார்வையில் அந்த பெண்ணுக்கு இருந்த துணிவு ஆட்டம் கண்டது நிஜம். ” அதோடு, என்ன கேட்ட நா யாரா?! ம்ம்ம்! இந்த மாமியோட புருஷன் போதுமா?!” என கேட்டவன், அதிர்ந்து பார்த்த அனைவரையும் சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவன், அவளின் கரம் பற்றி,  அழைத்து சென்றான் வாஸ்ரூமை நோக்கி.


ஆரனின் கரம் பற்றிய போது எழுந்த அதே உரிமை உணர்வை,  அவளிடமும் கொண்டவன், பிடித்த கரத்தை விட்டது விதியின் சதியோ!


கௌதம், அவளின் கரம் பற்றி மற்றவரை பொருட்படுத்தாது, வாஸ் ரூமைக்கு அழைத்துச்செல்ல, அவள் அதை அடையும் முன்பே தன்னையும் மீறி வெளிவந்த வந்த வாந்தி அவளின் வெண்ணிற உடையை பாழாக்கியது. பெண்கள் பகுதிக்குள் செல்ல முடியாத தன் நிலையை நொந்தவாரே அவளை மட்டுமாய் உள்ளே அனுப்பியவனுக்கோ தங்கமுடியா வேதனையாய் இருந்தது.


அவன் அவளின் கரம் பற்றியதும், அன்னிய ஆடவன் என்ற எண்ணத்தில் அவள் கண்கள் காட்டிய விலகல், பின் தன்னை கண்ட நொடி அந்த விழியில் வந்த அதிர்வு, அடுத்து ஒருவித யாசிப்பு, ஒரு நிம்மதி என அனைத்து உணர்வையும்  இப்போதும் தன் கண்களில் வலம் வரும் போது அவனும் தான் என்ன செய்வான்?!


சில நிமிடமெனினும் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் கண்ட நொடி வெளிப்படுத்திய பாவங்கள், ஏதோ ஜென்ம பந்தமாய் தோன்ற, முதன் முறை இப்போது தான் பார்க்கிறோம் என்ற எண்ணம் இருவருக்கு உள்ளேயும் இல்லை என்பதே உண்மை போலும்!


அவனின் தவிப்பை கூட்டும் வண்ணம், அவளின் ஒக்கரிப்பு நேரத்திற்கு நேரம் அதிகமானதே ஒழிய குறைவதாய் காணோம். அந்த நேரத்தில், ‘அது பெண்கள் பகுதி என்பதையும் மீறி உள்ளே செல்லலாமா?! அவளை அணைத்து ஆறுதல் படுத்தலாமா?!’ என்ற எண்ணம் தான் அதிகரித்து கொண்டே சென்றது.

அவனுக்கு உதவ வந்தது போல ஒரு மத்திய வயது பெண் அங்கே வர… “சிஸ்டர்…”  என்று அழைத்தவன் நடந்த நிகழ்வை மேலோட்டமாக கூறி, அவளை பார்த்து அழைத்து வர சொல்ல, அவரும் அவனின் சூழல் புரிந்து, அதனுள் அவசரமாக சென்று அவளுக்கு உதவி, அவளை கை தாங்கலாக அழைத்தும் வந்தார்.. வாடிய கொடியாய், இன்னும் தெளிவு பெறா நிலையில், துவண்டு போய் வந்தவளை கண்டவனுக்கோ தன் இதயம் கணத்து தான் போனது.


காலையில் கூட, ஒரு பெண்ணுக்காக இப்படி துடிப்போம் என்று யாராவது சொல்லியிருந்தால், அவர்கள் பைத்தியம் போல ஒரு பார்வை பார்த்து வந்திருப்பான். இப்போதும் சிறிது நேரத்திற்கு முன் ஆரனிடம் தான் சொன்னதை நினைத்தால், தான் இப்படி மாறி போய் இருப்பதை அவனாலேயே நம்ப இயலவில்லை தான். ஆனால் நடப்பது யார் கையில்! ‘விதி ஆடும் ஆட்டத்தில் யாவரும் கை பொம்மை தான்!’

“தேங்க்ஸ் சிஸ்டர், உங்க  டைமிங் ஹெல்ப்ப எப்பவும் மறக்க மாட்டேன்!” என்றவன், அவரிடமிருந்து அவளின் கரத்தை பற்றி தன்னருகே நகர்த்தியவன் மெல்ல அவளின் தோளோடு சேர்த்து அணைத்தான்.

அவன் அவளை நெருங்கி அணைத்ததும் அவள் உடல்,  ஏற்கனவே இயலாமையால் கொண்டிருந்த நடுக்கம், இப்போது இன்னும் அதிகமாக மாறி போயிற்று. அவளின் உடையும் அங்காங்கே நனைந்திருக்க, அந்த வெள்ளை உடை வேறு அவளின் அங்கங்களை படம் போட்டு காட்டும் படி இருந்தது அவளின் கூச்சத்தை வெளிப்படுத்த,

மெல்ல அவளை விட்டு விலகியவன் தான் அணிந்திருந்த ப்ளேசரை கழட்டி அதை அவள் மேல் போடு, அவளை ஒரு பக்கமாய் தோளோடு சேர்த்தணைக்க, அவனின் கண்ணியம், அவன் மேல் நம்பிக்கையை விதைத்தது அவளுள். அவளின் உடல் நடுக்கமும் குறைந்தது. தன் தந்தையிடம் தோன்றும் பாதுகாப்பும், ஆறுதலையும் தந்த அந்த அனைப்பு, இப்போது அவளுள் பெரும் மாற்றத்தை கொடுக்க, நிம்மதியாக அவன் கைகளுக்குள் சரணடைந்தாள். தன் தொடுகையில் இப்போது அவள் கொண்ட மாற்றம் உணர்ந்தவன் மனம் நிம்மதி கொண்டது.

*********

யாரோ ஒருவன் வந்து தங்களிடமிருந்து அவளை மீட்டு சென்றது அந்த குழுவில் இருந்தவர்களால் பொறுக்க முடியாமலும், அந்த கோபத்தை வெளிப்படுத்த முடியாமலும் நின்றனர்.


ஒரு காரணம் கௌதமின் பார்வை தந்த எச்சரிக்கை எனில், மற்றொன்று ஸ்வேத்தாவின் அதிர்ந்த நிலை. அவளின் அதிர்ச்சிக்கான காரணம் சிலருக்கு புரிய, புரியாத ஒரிருவர் அவளை நெருங்கி, அவள் அந்த மனிதனின் உக்கிர பார்க்கை பயந்ததாய் எண்ணிக்கொண்டு,  

“விடு ஸ்வே! அந்த தயிர் சாதம் எங்க போயிடும்?! எப்படியும் காலேஜ் வந்து தானே ஆகனும். அப்ப எந்த ஹீரோ வந்து காப்பாத்துவாறூ ?! அவள அங்க வச்சு பார்த்துக்கலாம்” என்றதும்,
அவளின் அதிர்ச்சிக்கு சரியான காரணத்தை உணர்ந்த ஒருத்தி, “ஸ்வே இது அவன் தானே?! இவன பத்தின டீட்டெயில் தானே நீ கேட்ட! அவன் எப்படி இந்த மாமி கூட?!”  என கேட்க,

அப்போது தான் தனது அதிர்ச்சியிலிருந்து மீண்ட ஸ்வேதா, ‘தெரியவில்லை!’ என்பது போல தனது உதட்டை பிதுக்கி காட்ட, “சரி! இப்ப இங்கையே இருந்து அவங்கள கண்காணிக்கலாமா?! இல்ல….?” என கேட்டு முடிக்கும் போதே..

“நோ ! நம்ம போகலாம். அந்த பெக்கர் தயிர்சாதத்த அவன் தொட்டு பேசறத பார்த்தாலே, செம கோவம் வருது. இங்க இருந்து மறுபடியும் அத பார்க்க வேணாம். நாளைக்கு அவ அங்க தனியா தானே மாட்டுவா. என்னன்னு விசாரிக்கலாம். ஒருவேளை அவன பத்தின தகவல் அவளுக்கு தெரியுமின்னா, நமக்கு நல்லது தானே. அப்புறமா மாமிக்கு அவனோட போனதுக்கும் சேர்த்து தண்டனைய முடிவு செய்யலாம். வாங்கடீ போலாம்”  என ஆங்காரமாய் ஆரம்பித்து, அலட்சியமாய் அங்கிருந்து கிளம்பியவளை தொடர்ந்தது, அவளின் ஜால்ரா கும்பல்.

அவளின் வன்மம் தங்கள் வாழ்வில் ஏற்படுத்த போகும் விளைவை உணராத இளம் மனங்கள், நிம்மதியாக தங்கள் உலகத்தில் சஞ்சரித்திருந்தனர்.


**********

ஸ்வேதா கும்பல் வெளியேறிய பின்பு,  அங்கே மெல்ல அவளை அழைத்து வந்தவன், அமர வைத்து சூடாய் ஒரு காபி வாங்கி தர, அதன் வாடையும் ஏனோ அவளுக்கு குமட்டலையே தந்தது. அவளின் தவிப்பை அவளின் கண்களில் கண்டவன், “இங்க பாரூடா! முடியலைன்னா விடு. கொஞ்சம் வெளிய போனா நார்மலா பிகேவ் பண்ணுவ, வா போலாம்” என்று மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு வெளியே செல்லும் லிப்ட்டை நோக்கி சென்றவன், ஆரன் தனக்காக ஆண்கள் பகுதியில் காத்திருப்பான் என்பதை கூட மறந்து தான் போயிருந்தான்.

லிப்ட் வேறு வர தாமதிக்க, அவளின் மனதின் அருவருப்பு மீண்டும் அவளுக்கு ஒரு மாதிரியான உணர்வை தர, அவளுக்கோ, ‘என்ன செய்ய ‘ என புரியாத நிலை மீண்டும்  அழுகையை தந்தது. அதுவரை அவளை அணைத்து பிடித்திருந்தாலும், லிப்ட் வருவதை எதிர் பார்த்திருந்தவன், அவளை கவனிக்காமல் இருக்க, அவளின் அழுகையில் பதறி “என்னம்மா! என்ன பண்ணுது. ஏன் அழறடா? எதாவது சொல்லு?!” என அவளின் முகத்தை நிமிர்த்தி கேட்டவன்.


அவள் கண்கள் காட்டிய இயலாமையை உணர்ந்து, முதலில் இவளின் மனதை திசை திருப்பாது, இந்நிலை மாறாது என்பதை புரிந்து கொண்டு, அந்த நேரம் சரியாக அங்கே வந்த லிப்டில் அவளை நுழைத்து தானும் நுழைந்தான்.


அதனுள் செல்லும் போதே கண்காணிப்பு கேமிராவை பார்த்தவன், கதவு மூடிய சில நொடியில், அந்த காமிராவிற்கு எதிர்புறமாக அவளை திருப்பி, அவளின் இதழ்களை தன் இதழால் மூடியிருந்தான்.

அவளுடைய இயலாமையை பயன்படுத்தும் நோக்கமில்லாது இருந்தாலும், இப்போது செய்வது தவறு என புரிந்தும், அவளுக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாய் இருக்கும் என்று நன்கு தெரிந்தும், அவளின் மனதை திசை திருப்ப வேறு வழி தெரியாது தன் முத்தத்தை அழுத்தமாய் அவளின் இதழில் பதித்திருந்தான்.

அவன் நினைத்தது போல, அழுகையில் கரைந்திருந்தவள், அவனின் நெருக்கத்தில் பயந்து, அவனின் அதிரடியில் அதிர்ந்து நின்றாள். அதுவரை அவள் மனதில் இருந்த அருவருப்பு போய் அந்த இடத்தை பதட்டமும் பயமும் ஆக்கிரமிக்க, ஒரு புறம் அவன் கண்களில் கண்ட தன் மீதான அக்கரையும், காதலும், நம்பிக்கையும் சேர, அவனை தடுக்காது அமைதி காத்தாள்.


அவள் அதிர்ந்த நிலையை திறந்திருந்த அவளின் கண்களில் கண்டவன், அடுத்து அதில் பயமும், பிறகு ஒரு வித அமைதியும் வந்ததை பார்த்தவன், அதில் ஒரு போதும் அருவருப்பு தோன்றாததை குறித்து கொண்டான்.

சிறிது நேரமே நீடித்த முத்ததில், அவளுடைய உணர்வுகள் உயிர்த்ததோ இல்லையோ, ஆணவன் தன் மனதையும் தன் தேவையையும் உணர்ந்து கொண்டான். இவளுடனான எனது இந்த பந்தம் என்றும் தொடர வேண்டும் என்ற எண்ணமும் வலுத்தது அவன் மனதில்! இனியும் இதை தொடர்வது தவறாய் முடியும், என தெளிந்தவன், அவளை விட்டு விலகி திரும்பி நின்றான்.

நல்ல வேளையாக அவர்கள் லிப்ட் பயணமும் முற்று பெற நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவன், அவளுடன் அந்த லிப்ட்டிலிருந்து வெளியே வந்தான். அவளுக்கோ அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்க முடியா நிலை, இருவருக்கும் இடையே மௌனமே மொழியாகியது அக்கணம்.


அவளை அங்கே இருக்க வைத்தவன் அவனின் வாகனத்தை எடுத்து வர, அவளுக்கோ அடுத்த அதிர்வு, ‘அந்த வண்டியில் எப்படி தான்?! அதுவும் இப்போது தங்கள் நெருக்கம் சரியா?!’ என குழப்பத்துடன் பார்க்க..


அவளின் பார்வையில் அவளின் தயக்கத்தை உணர்ந்தவன்,
“இத தவிர வேற வழி? உன்னால தனியா ஆட்டோல போக முடியுமா?!” என கௌதம் கேட்க, அடுத்த அடுத்த அதிர்வில் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னால் வேறு யாருடனோ செல்ல முடியுமா?! யோசித்தவள், ‘முடியாது’ என்பதாய் தலையசைத்து  சொல்ல, அடுத்து அவன் வாகனத்தில் தன் இருப்பிடம் நோக்கி சென்று கொண்டுருந்தாள்.

” மாமி! ”  என கௌதம் அழைக்க.. ‘என்னது இவருக்கும் நா மாமியா?!’ என்பதாய் ஒரு கோப பார்வை பார்க்க, கௌதமோ,  அவள் வாயே திறக்காவிட்டாலும் அந்த கண்களின் பாஷையை தான் புரிந்து கொள்ளும் விதம் கண்டு மெச்சியவனாய்,

“உன்னோட பேர சொன்னா தானே, அத சொல்லி கூப்பிட முடியும்” என விளக்க,


தன் தவறுக்கு நாக்கை சிறிது கடித்து ஒரு கண்ணை சிமிட்டியவளின் பாவத்தை கண்ணாடியில் கண்டவன் கைகளில் வண்டி சிறிது தடுமாறி தான் போனது.

“சாரி! நேக்கு இருந்த குழப்பத்துல.. மன்னிச்சிடுங்கோ! என்றவள்…. “என்னோட பேரூ காயத்ரி” என்றவள், ஏதோ கேட்க வந்து தயங்க, “என்ன காயத்ரி! ஏதாவது கேட்கனுமா?!” என்றதும்,

 

‘இவரு என்ன வண்டிய முன்னாடி பார்த்து ஓட்டறாரா?! இல்லையா?! நா நினைக்கறத பார்க்காமலே கெஸ் பண்ணறாரே!’ என சிந்திக்க, அவளின் முகபாவத்தை கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு வந்தவன்,

 

“நா, எப்படி கரெக்ட்டா கெஸ் பண்றேன்னு அப்புறமா சொல்லி தர்றேன். இப்ப கேட்க வந்தத கேளு?” என்றதும், அதையும் கண்டு கொண்டானே! என்று தன் முகம் சிவக்க தலைகுனிந்தவள் மெல்ல,  “நேக்கு ..உங்க..” என அவள் இழுத்து தயங்க… அவளுக்கு தன் பெயர் தெரிய வேண்டும் என்பதை உணர்ந்தவன்,

“என்ன, என் பேர் தெரியணுமா?! இல்ல என்ன பத்தி எல்லாமே தெரியணுமா?!” என்றவன், “என்னோட பேரு கௌதம். சக்கரவர்த்தி க்ரூப்ஸ்…” என அவன் சொல்லும் போதே இடையிட்டவள்,

 

“அந்த கம்பெனியிலயா வெர்க் பண்றேள். வாவ்! ரொம்ப பெரிய கண்ஷன் அது. என்னோட ட்ரீமே அதுல நா வேலைக்கு சேரணுமின்னு தான் !” என்றவளுக்கு மறுத்து,  தன்னை பற்றி கூறாமல் அவளின் பதிலில் சிரித்துக் கொண்டவன், எங்கே உணர்ந்தான் தன்னை பற்றிய முழு தகவலையும் அவளிடம் சொல்லாததால் வரப்போகும் சிக்கலை பற்றி….

அடுத்து அவன் கேட்ட கேள்விக்கு, அவள் சொன்ன பதிலில் “வாட்..???!!! ” என்றவன், வண்டியை ஓரமாக நிறுத்தியே விட்டான்.

error: Content is protected !!