Jeevan 23(1)

உன்னோடு தான் … என் ஜீவன் ..

பகுதி 23

இரவு நேர நிலவின் குளுமை போல, மனதில் இருந்த ஒரு வித இதமான சூழலை ரசித்தபடி, கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தான் கௌதம்.

நேற்று ஆரன் வீட்டிற்கு வந்த பிறகே, தனது இல்லம் வந்தவன், ஆரன் நிலைக்கு காரணமானவர்களுக்கான தண்டனையையும் அளித்து முடித்திருக்க, இதுவரை இருந்த ஒரு வித இறுக்கம் தளர்ந்த நொடி முதல், தன் செல்லம்மாவை காண வேண்டும் என தவித்தவன், இன்று விரைவாக சென்றுவிட முயற்சித்துக் கொண்டிருந்தான்.

காயத்ரியை பார்த்து, இன்று எப்படியும் எல்லா விசயத்தையும் சொல்லிட வேண்டும் என நினைத்தவன், பெரிய ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்து, இரவு டின்னருக்கான டேபிளை புக் செய்தவன், கல்லூரி முடிந்தவுடன் தன் செல்லம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, மேலும் பல ஏற்பாடுகள் செய்தவனுக்கு தெரியவில்லை, எல்லாமே கனலாய் போக போகிறது என்பது….

கௌதம் பற்றி அறிந்து கொண்ட தகவல்களை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் வழியில்லாமல் தவித்தவளுக்கு, அதை சுமி அறியாமல் மறைப்பதே பெரும்பாடாகி போனது. முதலில் இருந்தே, நல்ல தோழியாய் எச்சரித்தவளின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் போனோமே! என்ற எண்ணமா?! அல்லது தனது சோகம் தன்னோடு போகட்டும் பிறர் அறிய கூடாது என்ற எண்ணமோ?! ஏதோ ஒன்றினால், முடிந்த வரை சுமியை தவிர்த்து தனியே கல்லூரி செல்வதும், கல்லூரி முடிந்தாலும் விரைவாக ஹாஸ்டல் வராமல், நேரம் கடத்துவதுமாக  கௌதம் பற்றி அறிந்த நாள் முதல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள்.

இன்றும் அது போலவே சுமி கல்லூரி கிளம்பும் முன்பே, ரெடியாகி சாப்பாட்டு அறைக்கு சென்றவள், எப்போதுமே போல ‘சாப்பிட்டேன்’ என பேர் செய்துவிட்டு, தனது இருப்பிடமாம் கல்மேடைக்கு சென்றவள், தினமும் தோன்றும் அதே சிந்தனையோடு அமர்ந்தாள்.

சுற்றி நடக்கும் யாவும் கவனித்தில் இல்லாது, தனி உலகில் சஞ்சரித்தவளை தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட கௌதமிற்கு, ஏற்கனவே இருந்த உற்சாகம் மேலும் அதிகமாயிற்று.. காரணம் அவள் அமர்ந்திருந்த இடம்.

அதே உற்சாகத்தோடு வண்டியை நிறுத்தி வந்தவனின் கண்களுக்கு, அப்போது தான், அவளின் வாடிய தோற்றம் பதிய, ‘மடையா! பாரு உன் செல்லம்மா எப்படி ஆகிட்டான்னு.. ?! ஒரு போன் பண்ணினா, பார்க்க தோணுமின்னு யோசிச்ச நீ, மெசேஜ் செஞ்சாவது சொல்லியிருக்கலாம். உன்னையெல்லாம்..!’ என மனசாட்சி சொல்லியதற்கு, ‘நான் தான் வந்துட்டேனே, இனி என் செல்லம்மா இப்படி இருக்க மாட்டா! நா சரி செஞ்சிடுவேன்’ என உறுதி அளித்தவன், அதே நினைவோடு காயத்ரி அருகே சென்று அமர..  

தன்னருகே யாரோ வந்து அமர்ந்தது கூட அறியாமல், தனது சோகத்தில் மூழ்கி இருந்தவளை, சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டே இருந்தவன், அவள் தனது நிலையை மாற்றி, தன்னை பார்க்க போவதும் இல்லை! தனது வரவை உணர போவதும் இல்லை! என்பது தெளிவாக,
தனது ஒட்டுமொத்த காதலையும் சேர்த்து, மென்மையாக, அவளின் அருகே நெருங்கி, “செல்லம்மா…. !!” என அழைத்திட..

அதுவரை இருந்த வாடிய முகம் பிரகாசமாய்  மாறி, கண்ணில் தேங்கி வடிய காத்திருக்கும் நீரையும் துடைக்காது, நிமிர்ந்து அருகே பார்த்தவளுக்கு, கலங்கலாய் தெரிந்த நிழல் உருவத்திலும், தன்னவனை கண்டு கொண்டவள் இதழ்கள், மெல்ல புன்னகைக்க முயன்று முடியாது, அடுத்து தனது கரம் கொண்டு முகம் மூடியவள் அழுகையில் கரைய,

அவளை, தான் அழைத்த நொடி முதல், அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளை பார்த்திருந்த கௌதமிற்கு, தனது பிரிவு அவளை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை உணர்த்த, தனது தவறின் வீரியம் புரிந்து, “சாரி செல்லம்மா! அழாத.. நா தான் வந்துட்டேனே… ப்ளீஸ் டா… சொன்னா கேளும்மா” என சொல்லியபடியே அவளை மேலும் நெருங்கி, ஒரு கையால் அணைத்து ஆறுதல் சொல்ல விளைந்தவனை, மறுகணம் அவனின் கரத்தை தட்டிவிட்டு எழுந்தவள், எதையும் சொல்லாது விலகி ஓட..

அவள் செய்த செயல் புரியவே கௌதமிற்கு சிறிது நேரம் தேவைபட்டது.
“செல்லம்மா நில்லு…! ப்ளீஸ், நா சொல்றத கேளுடா… ” என சொல்லியபடியே, பின்னால் வந்தவனை திரும்பியும் பாராது, தனது பிரிவிற்குள் சென்றவளை பார்த்தவன்,

தன் மீதான கோபத்தால் விலகி செல்கிறாளா?! அல்லது தனது அணைப்பை தவிர்க்கவா?! என யோசித்தவன், ‘ச்ச ! ச்ச ! கண்டிப்பா முதல்ல சொன்னது தான் காரணமா இருக்கும்… அவகிட்ட சொல்லாம விட்டுட்டு, இப்ப வந்து கட்டிபிடிச்சு சமாதானம் செய்ய பார்த்தா?! …. விடு கௌதம், மதிய லன்ச் டைம்ல பார்த்து பேசிடலாம். அப்புறம் வெளிய போனா செல்லம்மா சரியாகிடுவா!’  என முடிவு செய்தவன், தனது பிரிவை நோக்கி சென்றான்.


அன்று மதியவேளையிலும் சரி, மாலையும் சரி அவளை பார்க்க முடியாது, அவள் பிரிவு இருக்கும் பகுதிக்கு வர, சுமி மூலமாக, காயத்ரி காலையிலேயே உடல்நிலையை காரணம் காட்டி ஹாஸ்டல் சென்றுவிட்டதை அறிந்தவன், ‘அவளை காண வேண்டும், தான் அவளுக்காய் செய்திருக்கும் ஏற்பாடுகளை காட்டி, தன்னை பற்றி சொல்லி, என அவளை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க நினைத்தால் இப்படி உடல்நிலை சரியால்லாது போயிற்றே!’ என்ற வருத்தம் வந்தாலும்,

‘இன்று மட்டும் தானே, நாளை எப்படியும் பார்த்து அழைத்து செல்லலாம்!’ என்ற முடிவோடு, தனது அலுவலகம் வந்தவன் முதல் வேலையாக, அவளின் நலம் அறிய வேண்டி, அஸவளின் போனுக்கு முயல அதுவோ, “ஸ்விட்ச் ஆஃப்” என்ற தகவலையே தந்தது… ‘ரொம்ப டையர்டுல கவனிக்காம விட்டுட்டா போல!’ என நினைத்தவனுக்கு தெரியாதே, கௌதம் தன்னை அழைப்பான் என்பதாலேயே அவள் அதை அணைத்து வைத்திருக்கிறாள் என்று…..

******

ஸ்வேதா வீட்டிலோ,நேற்று இரவு, கௌதம் போட்ட வெடி, அனைவரும் அடங்கி போகும் விதமாய் இருக்க, ஸ்வேதாவோ, காலை முதல் வேலையாக துஷ்யந்திடம் வந்தவள், “அண்ணா! அவன் இப்படி எல்லா விதத்திலையும் லாக் பண்ற வரை எப்படி விட்டு வச்ச?!”  என காய..

“குட்டிம்மா! அவன் இப்படி சட்டுன்னு நம்ம தான் காரணமின்னு கண்டுபிடிப்பான்னு யோசிக்கலடா… இதுல நம்ம சிக்காத மாதிரி ப்ளான் பண்ணி தான் செஞ்சேன், பட்! எப்படி ன்னு புரியல?!” என சொல்லி யோசிக்க,

“ஆமா! புரியல புரியலன்னு சொல்லிட்டே இரு. அவன் இப்படி எதையாவது செஞ்சிட்டு போகட்டும்” என்று சொன்னவளிடம்,

“குட்டிம்மா! இப்பவும் சொல்றேன், இந்த மாதிரி புத்திசாலி மட்டும் நம்ம கூட இருந்தா நம்ம இருக்க போற லெவலே வேற.. சோ கொஞ்சம் பொறுமையா இரு. அவன விட்டு விலகி இருக்கோமிங்கற மாதிரி காட்டிக்க. எப்ப அவன அடிக்கனுமோ, அப்ப சரியா அடிக்கலாம்?!”  

“அப்ப, அவன் அந்த பெக்கர் கூட கூத்தடிக்கறத பார்த்தாலும், சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்கன்னு வாழ்த்த சொல்லறையா?!” என ஆத்திரத்தோடு கேட்க,

“ஆத்திரகாரனுக்கு புத்திமட்டுன்னு கேள்விபட்டதில்லையா குட்டிம்மா.  நீ, அவன் கல்யாணம் ஆனவனா , இருந்தாலும், எனக்கு வேணுமின்னு சொன்னது மறந்திடுச்சா…

பணக்காரன் டைம் பாஸ் பண்ண, கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறது இல்லையா?! அது மாதிரி சுத்தறான்னு விட்டு கொடு… நேரம் வரும் போது அந்த காயத்ரிய தூக்கிடலாம். அதோட கௌதம் ஆட்டத்தையும் அடக்கிடலாம். அவள பணையமா வச்சே, நம்ம திட்டத்தையும் நிறைவேத்திக்கலாம்.


அதுவரை, நீ எந்த விதத்திலையும் அவங்கள நெருங்கவோ, அவங்கள கண்காணிக்கறதையோ செய்யத.. நா அதுக்கு வேற ஆள ரெடி பண்ணிக்கறேன். நீ, அவன் போட்ட போட்டுக்கு, பயந்து விலகிட்டதா, அவன் நம்பணும் புரியுதா?!” என கேட்ட தமையனுக்கு, ‘புரிந்தது…’ எனும் விதமாய் தலையசைத்தவள்,

துஷ்டந்தின் திட்டப்படி செயல்பட முடிவு செய்து கல்லூரி கிளம்பினாள். அழகாய் கௌதம், காயத்ரிக்கான வலையை பின்னி காத்திருக்கும், அவர்களுக்கு, நேரமும்..  கை கொடுக்குமா?! கை விடுமா?! திட்டத்தில் வெற்றி பெற….

********

கௌதமோ, அன்றைய நாளை தொடர்ந்து வந்த, இரு தினங்களும், அவளை பார்த்தாலும், பேசிட முடியாத வகையில் எதாவது செய்து, விலகி செல்பவளை பார்த்த போது தான், அவள் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பது புரிய… ‘என்ன காரணமாய் இருக்கும்?!’ என யோசித்தவன்,

அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற உறுதியோடு, அன்று அவளை விடாபிடியாய் நிறுத்தி பேச, “என்ன விட்டுடுங்கோ… நேக்கு இதெல்லாம் இஷ்டமில்ல… நீங்க நினைக்கற மாதிரியான பொண்ணும் நா கிடையாது. அதோட நா உங்க தகுதிக்கானவா கிடையாது” என சொல்லி, கண்ணீரோடு விலகி போனவளின் வார்த்தையில் …

‘என்ன சொல்லிட்டு போறா இவ… ?! அந்த மாதிரி பொண்ணு இல்லங்கறா..! தகுதிங்கறா…! எதனால இப்படி…?!’ என யோசித்தவனுக்கு, ‘கௌதம், உன்ன பத்தி எதோ அறைகுறையா தெரிஞ்சிட்டு, பயந்து போறான்னு நினைக்கிறேன். இதுக்கு தான் முதல்லையே சொல்லிட சொன்னேன். கேட்டையா?!’ என மனது சொல்லிட..

தான் காலம் தாழ்த்தியதற்கு வருந்தியவன், அவளின் வகுப்பிற்கே சென்று, வம்படியாக வெளியே வரவைத்து, தாங்கள் எப்போதும் அமரும் மேடையில் அமர வைத்தவன், “செல்லம்மா! நா சொல்ல வர்றத பொறுமையா கேளு. ப்ளீஸ்!” என ஆரம்பிக்க…

“சார்… நீங்க.. போய் எங்கிட்ட… அதற்கு எல்லாம் நா தகுதியாவா கிடையாது. நீங்கெல்லாம் வசதியானவா.. அதோட உங்க பழக்க வழக்கம் வேற.. அந்த மாதிரியான உலகத்தில வாழ எனக்கு விருப்பம் இல்ல.. என்ன விட்டுடுங்கோ… உங்க தகுதிக்கு தக்க மாதிரி ஒருத்தங்கள தேடிக்கோங்கோ… ” என்றதில், ‘சார்’ என்ற அழைப்பு அவனுக்கு வெறுப்பை கொடுத்தாலும், அவள் பேசும் போது வந்த கரகரப்பு அவளின் வேதனையின் அளவை கௌதமிற்கு உணர்த்திட…


அவளிடமிருந்து உண்மையை வரவழைக்க, அதுவரை செல்லம்மாவின் கௌதமாக பேசியவன், கௌதம் சக்கரவர்த்தியாய் மாறி, “இப்ப முடிவா என்ன சொல்ல வர்ற காயத்ரி… !” என அழுத்தமாய் கேட்க, அவனின் கேள்வியின் தோனியிலேயே அவனின் முகம் பார்க்க முடியாமல், வேறு புறம் பார்த்துக்கொண்டே ,

“நேக்கு இது வேணாம்… விலகிடுங்கோ..”  என சொல்லிய நொடி, அவளின் இரு கன்னத்தையும் ஒரே கரத்தில் பிடித்து, தன்னை நோக்கி, அவளின் முகத்தை திருப்பியவனின் இரும்பு பிடியில் வலித்த கன்னத்தை, அவன் கரத்திலிருந்து விடுவிக்க முடியாமல் கண்ணில் நீர் வர பார்த்தவளின் பார்வையை சட்டை செய்யாது, “இப்ப நீ முதல்ல சொன்ன எல்லாத்தையும், என்னோட முகத்த பார்த்து, திக்காம சொல்லிடு, நா உன்ன விட்டு போறேன்… ஹம்… சொல்லு!”  என ஆணையாக சொல்லிட…

அவனின் கோபத்திலும், கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை சொல்லிட முடியாது தடுக்க, “ப்ளீஸ்  . சா…. !” என ஆரம்பித்தவள், ‘சார் !’ என அழைக்கும் முன்பு, தன் இதழ் கொண்டு அவளின் வார்த்தைக்கு தடை போட்டவன், அவளின் கண்ணில் வழிந்த நீருக்கும், உடலின் நடுக்கத்திற்கும் இறங்காது போனாலும், இருக்கும் சூழலுக்காய் சட்டென விலகியவன், “இனி, உன் வாயில என்னை விலக்கி  அந்நியபடுத்தி நிறுத்தற மாதிரியான ஒரு வார்த்தை வந்தாலும் இதவிட மோசமான விளைவ சந்திக்க வேண்டி வரும்…. ” என அதட்டலாக சொல்ல, அதில் அவனின் காதலை உணர்வதற்கு பதிலாக காமத்தை மட்டுமே உணர்ந்தவள், “இது தான் நீங்க.. உங்க தேவை தான் முக்கியம்.. மத்தவா மனசு பத்தி தெரியாத மிருகம் நீங்க” என வார்த்தையை விட அதிர்ந்து போய் அவளை விட்டு விலகியவன்.. அடிபட்ட பாவனையோடு காயத்ரியை பார்த்தவன் “செல்லம்மா! நா சொன்னது….” என மீண்டும் தன் நிலையை உணர்த்திட முயல…

“உங்க வசதிக்கும், தகுதிக்கும் எத்தனையோ பேர் இருக்கா… நீங்க நினச்சா எதையும் செய்ய முடியும்… நேக்கு, நன்னா தெரியும் நீங்க யாருன்னு ப்ளீஸ் விட்டுடுங்கோ..?!”  என கை கூப்பி கேட்டவளை பார்த்தவன் பார்வையில் வந்து போனது என்னவோ… !!! ஆதங்கமா?! ஆத்திரமா…?!

‘பலரும் நடந்து செல்லும் பாதையில், இதுவரை நடந்த விசயமே போதும். இனியும் எதையும் தொடரும் நிலையில், இப்போது அவளும் இல்லை! புரிய வைக்க தன்னாலும் இங்கே, இப்போது இயலாது’ என முடிவு செய்தவன், அடுத்த நொடி அவளை விட்டு விலகி, தனது வண்டியை எடுத்தவன், புயலைவிட வேகமாய் அவ்விடம் விட்டு மறைந்தான்.

கௌதம் இருக்கும் போதும் அவனை பேசும் போதும் தோன்றாத வெறுமையும், தவிப்பும் இப்போது காயத்ரியை படுத்த, ‘சாரின்னா! என்ன மன்னிச்சிடுங்கோ… நீங்க தப்பானவரா என்னால நினைக்க முடியாட்டியும், எனக்குள்ள அவங்க விதச்ச சந்தேக விதை, நம்ம வாழ்க்கைய நாசமாக்கிட கூடாதேன்னு பயமா இருக்குன்னா… வேணாம் இந்த விபரீத பரிச்சை… நா விலகினது அப்படியே இருக்கட்டும். உங்கள புரிஞ்சுகிட்ட யாராவது வந்தா தான், உங்க வாழ்க்கை நன்னா இருக்கும். பார்த்த சில நாள் பழக்கத்த மறக்கறது உங்கள மாதிரியானவங்களுக்கு சுலபம் தானேன்னா… ‘ என மனதால் கௌதமிடம் பேசியவள், மனமோ, ‘அப்போ நீ..?!’  என கேட்க, தனது நிலை இனி கண்ணீரில் தானோ?! என எண்ணி கலங்கி அமர்ந்தவள், சுற்றிலும் இருள் சூழ்ந்ததும் அறியாது இருக்க, அவளை தேடி வந்தவரின் கைகளுக்கு, காரியத்தை நிகழ்த்த ஏதுவாகி போனது.

என்னவென உணர துவங்கும் முன்பே, கண்கள் கட்டப்பட்டு, வாயை மூடி, அருகே இருந்த காரில் ஏற்றப்பட்ட காயத்ரி, சில நிமிடத்தில் அந்த கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறி இருந்தாள் யாரும் அறியாமலேயே….

   

error: Content is protected !!