Kaalam Yaavum Anbe – 19

காலம் யாவும் அன்பே 19

 

வாகீசன் நீருக்குள் சென்று பல மணி நேரங்கள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள். போன முறை போல அவன் இடுப்பில் சுற்றிய கயிறும் முழுதாக உள்ளே செல்லவில்லை. அவன் நீந்திக் கொண்டிருப்பது போலத் தான் இருந்தது.

ஆனால் ஏன் இத்தனை நேரம் ஆகிறது என்று அனைவரும் குழம்பிப் போய் இருந்தனர். திடீரென கயிறு அங்குமிங்கும் வேகமாக அசைய, இயலுக்கு உள்ளே லேசான பயம் வந்தது.

“ஆகாஷ்! ஒரு வேளை அவர் கால் மறுபடியும் அந்த புதை மணல்ல மாட்டியிருக்குமா!” கண்களில் பயம் மின்ன கேட்க,

“இல்ல இயல். இந்த தடவ ரொம்ப சேஃப் ஆ தான் இருப்பாரு. கவலைப் படாத. அங்க என்னென்ன இருக்குன்னு இப்போ அவருக்கு ஐடியா இருக்கு. கண்டிப்பா எப்படி ஹான்டில் பண்ணனும்னு அவருக்குத் தெரியும். பயப்பட ஒண்ணுமே இல்ல. ” சாதாரணமாகக் கூறினான்.

ஆனாலும்  இயலுக்கு முன்பு இருந்ததை விட, இப்போது பயம் அதிகமானது.

அவன் கட்டிய தாலி இன்னும் கழுத்தில் தான் இருந்தது. அதைப் பார்க்கும் போது, ‘என்ன தான் வாக்குவாதம் செய்தாலும், நீ என் உள்ளம் கவர்ந்த காதலன், இப்போது கணவனும் கூட..’ என்ற நினைப்பு அவளிடம் தோன்றாமல் இல்லை.

முதல் முறை அவன் நீருக்குள் சென்றபோதே தவித்தவள், இப்போது தன் கணவன் என்ற நினைப்பு மேலிட, இன்னும் வருத்தம் அதிகமானது.

அனைவரும் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்க, திடீரென சிரிக்கும் சத்தம் அந்த கிணற்றுக்குள் கேட்டு, அனைவரையும் குலை நடுங்கச் செய்தது.

சிரிப்பொலி வந்த திசையை அனைவரும் பார்க்க, அந்த முதியவர் தான் மேலிருந்து அவர்களை எட்டிப் பார்த்தார்.

“ வாகீஸ்வரன் அந்தக் கற்களை வெச்சுட்டான். இனி அவன் திரும்பி வரும்போது அவனாக வருவானா…? ஹா ஹா ஹா….” அவர் வேறு அர்த்தத்தில் சொல்ல,

இயலுக்கு ஒரு அர்த்தம் புரிந்தது.

‘ஒரு வேளை அவன் உயிரோடு வரமாட்டான் என்று சொல்கிறாரோ!’ என நினைத்துப் பதறியவள்,

‘இல்ல, வாகீக்கு ஒன்னும் ஆகாது, நான் அவருக்கு எதுவும் ஆகாம பார்த்துப்பேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அனைவரும் சுதாரிக்கும் முன்பு சட்டென தண்ணீருக்குள் குதித்துவிட்டாள்.

“இயல், இயல்!” என ஆகாஷும் வந்தனாவும்  துடித்துப் போய் அழைக்க, அவளோ நீருக்குள் நீந்திக் கொண்டிருந்தாள்.

“ சுபமாக நடக்கட்டும்…ஹா ஹா” என்று  முதியவர் குரல் கொடுத்துக் கிளம்ப,

“ ஐயா! என்ன காரியம் பண்ணிட்டீங்க… இயலுக்கு நீச்சல் தெரியுமோ தெரியாதோ… நீங்க பேசுனதுல அவ பயந்து தான் இப்படிப் பண்ணிட்டா..” ஆகாஷ் கொதிக்க,

அதற்கும் அவர் சிரித்தார்.

“அவங்க காலத்தயே கடந்து  நீந்தறவங்க, இந்த குளத்துல்ல நீந்த மாட்டாங்களா…” பீடிகையாகப் பேச,

“என்ன சொல்றீங்க? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க…” ஆகாஷ்

கவலையாகக் கேட்டான்.

****

 

வாகீசன் தன் கையைப் பிடித்து இழுத்ததில் மயங்கிய நிலைக்கு செல்வதை அவனே உணர்ந்தான்.  முயற்சி செய்து மீண்டும் கண்விழித்தான். அவனது கையைப் பற்றி இழுத்தது இந்திரன் அல்ல என்பது தெரிந்தது.  அவனைப் பிடித்துக் கொண்டிருப்பது இயல்.

அவளைக் கண்டதும், ‘நான் மீண்டும் கனவு காண்கிறேனா’ என்று நினைத்து மறுபுறம் திரும்ப, இந்திரவர்மாவும் பாகிரதியும் அங்கு தான் இருந்தனர். ‘இவள் ஏன் என்னைப் பிடித்து இழுக்கிறாள்? இவள் எப்படி நீருக்குள் வந்தாள் ?’ என்று யோசிக்க முடியாமல், இது கனவாகத் தான் இருக்கும் என்ற நினைப்பில், என்ன நடந்தாலும் இந்தக் கனவை முழுதாக அறியாமல் விடக் கூடாது என்று அவளது கையை உதறினான்.

அவளோ நீருக்குள் வெகு நேரமாக நீந்தி வாகீயைக் கண்ட போது அவன் கண்ணை மூடிக் கொண்டு, நீரில் மிதந்தான். அதாவது நின்றபடியே கண்ணை மூடிக் கொண்டிருந்தான்.

அவன் அந்தக் கற்களை அடைத்த பின்பு நடந்தது அவனுக்கே தெரியாத ஒன்று.

அவனுக்கு எப்போதும் போல ஷாக் அடிக்கவில்லை என்றாலும், அந்த ஐந்து துவாரங்களில் அவன் கற்களைப் பொருத்தியதும், அங்கிருந்து ஒரு ஒளி தோன்றி எதிரே ஒரு மாயக் கதவு போல அவனுக்குத் தெரிய வைத்தது.

அந்தக் கதவைத் தொட்டதுமே அவன் மயக்கமாகி விட்டான். மீண்டும் அவனுக்கு இந்திரவர்மன் கனவு ஏற்பட, சரியாக அந்த நேரம் இயல் அவனது கையைப் பற்றி இழுத்தாள்.

பாதி விழித்த வாகீயின் மூளை, கனவையும் நிஜத்தையும் ஒருங்கே கண்டது.

அதாவது அவன் உடல் மயக்கத்தை விட்டு எழுந்தாலும், அவனது மூளை இன்னும் அந்த மாயக் கதவிற்குள் நின்றது.

அது தான் அவன் இந்திரவர்மனையும் இயலையும் ஒருங்கே காணக் காரணம்.

மனித மூளையின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று. தூக்கத்தில் கூட சில சமயம் இவ்வாறு நடப்பதுண்டு.

இயல் அவனை இழுக்கவும், அவள் ஏன் இங்கு வந்தாள் என ஒரு புறம் தோன்றினாலும், இப்போது இந்தக் கனவு தான் முக்கியம் என்று பட்டது.

அந்தக் கனவில் வருபவர்களைப் பற்றி அன்றே முழுதாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவனிடம் இயலையும் தாண்டி ஈர்க்க, வேறு வழியின்றி அவளையும் அந்த மாயக் கதவிற்குள் இழுத்து வந்தான்.

அது வரை இயலுக்கு வாகீ மட்டுமே தெரிந்தான். அவன் இழுத்ததில் நேரே அவளும் அந்த மாயக் கதவிற்குள் நுழைந்தாள். அதவாது அந்தச் சுவரில் முட்டி மயக்கமானாள்.

அந்த மாயக் கதவு ஒரு மாயச் சுழல் போன்றது. இந்த உலகத்தில் பல இடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் இந்த வாயில்கள் ஆங்காங்கே இருக்கத் தான் செய்கிறது.

அது தான் ஸ்டார்கேட். பல அண்டங்களைத் தாண்டி நம்ம அழைத்துச் செல்லும் வல்லமை படைத்த ஒன்று.

இப்போது அவர்களின் எண்ணம் இந்திரவர்மா பாகிரதியிடம் இருக்க, அந்தக் காலத்திற்குப் பயணம் செய்தனர்.

இருவரும் தங்களின் முந்தைய ஜென்ம வாழ்வை அறிய ஆரம்பித்தனர்.

வாகீயும் இயலும் இப்போது இந்திரவர்மனின் வீட்டில் இருந்தனர்.

பாகிரதி தான் இயலின் முந்தைய ஜென்மம் என்பது அவளைக் கண்ட மாத்திரத்திலேயே தெரிந்தது. அதே போலத் தான் வாகீயும். அவனே தான் இந்திரவர்மன்.

வாகீயும் இயலும் இப்போது தாங்கள் அவ்விருவரோடும் ஐக்கியமாவதை உணர்ந்தனர்.

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இருக்கலாம்.

இயலுக்குப் பிடித்த பழையக் கால வீடு. பண்ட பாத்திரங்கள், உடை, அணிகலன் என அனைத்துமே அவளுக்கு பிடித்தது போல இருந்தது.

இப்போது அவள் பாகிரதி.

அவள் அழகிய அரக்கு நிறப் பட்டுப் புடவை அணிந்து, காதில் பெரிய ஜிமிக்கி , குங்குமப் பொட்டு, நெற்றி வகுட்டிலும் தாழம்பூ குங்குமம், தலையை அழகாகப் பின்னி அதில் சரம் சரமாய் ஜாதிப் பூவும் , மல்லிகையும் சூடி,  சாயம் பூசாமலே சிவந்த உதடு, கழுத்தில் அட்டிகை, காசுமாலையுடன், புதிதாகக் கட்டப் பட்டிருந்த தாலியும் ஜொலிக்க,

சதுர வடிவமாக அமைந்த நான்கு தூண்களுக்கு நடுவே அமைந்த கட்டிலில்  விரிக்கப் பட்டிருந்த இலவம் பஞ்சு மெத்தையில் ஒரு காலை மடித்து, மறு காலின் முட்டியைக் கட்டிக் கொண்டு, தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

இல்லை. காத்திருந்தாள். அவளது இந்திரவர்மனுக்காக.

அன்று தான் அவர்களது முதல் இரவு. ரகசியமாகவே தொடர்ந்த அவர்களது காதல் , இந்திரனின் திறமையால் இப்போது பெரியவர்கள் நிச்சயித்த திருமணமாகி , அவனது அறையில் அவனுக்காக காத்திருக்கும் வரை வந்திருந்தது.

அவனின் ஆளுமையும், அவனிடம்  கொண்ட காதலும் அவன் வரவை ஆவலாக எதிர்ப்பார்க்க வைத்தது. ஏற்கனவே தன் மேல் மோகம் கொண்ட தன்னவனுக்கு இன்று தான் முழுவதும் அவனது உடைமையாகப் போவதை நினைத்து அவளது கன்னங்கள் சிவந்தன.

மெலிதான காலடி சத்தத்தை அடுத்து கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, அவளது உடல் கூசியது. தன்னவன் தான் வருகிறான் என்பதை அவன் எப்போதும் அணியும் சந்தன வாசனை திரவியம் சொல்லாமல் சொன்னது.

வந்துவிட்டான். அவளது உள்ளம் வேகமாகத் துடிக்க , அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

கதவைத் தாழிட்டு உள்ளே வந்தவன், பூக்களால் அலங்கரிக்கப் பட்ட  தன்னவளைக் கண்டான்.

இடையில் பட்டு வேட்டியும், மேல் உடலை  அங்கவஸ்திரம் போர்த்தியும் மூடியிருந்தான்.

அவனுக்கு ரசனை அதிகம். ஆகவே இரண்டு குத்துவிளக்கின் எதிரே இரண்டு புதிய பித்தளைத் தாம்பாளங்களை தூணில் மாட்டி வைத்திருதான். அந்த குத்துவிளக்கின் ஒளி அதில் பட்டு, மேலும் அந்த இடத்தைப் பிரகாசமாகியது.

அந்த ஒளியில் தான் தன் பூக்குவியலைக் கண்டான். தேவதையாகத் தெரிந்தாள்.

அவள் அருகே வந்து அமர்ந்தவன், மெல்ல அழைத்தான்.

“ரதி”,அவளது தோளைத் தொட,

அவனுக்காக அத்தனை நேரம் காத்திருந்த ரதி, அவனது மாயக் குரலிலும், அவனது அருகாமையிலும் , இப்போது அவன் அவளது கணவன் என்ற உரிமையிலும் உடனே அவனது மார்பில் சாய்ந்தாள்.

ரதியின் அந்தச் செயலால் மெல்லச் சிரித்தவன், அவனது அங்கவஸ்திரத்தை விலக்கிவிட்டு மேலும் அவளைத் தன் மார்போடு சேர்த்து  தன் கைவளைவில் இறுக்கி, மல்லிகையின் மணத்தை நுகர்ந்து,

“ என் காதலை வெகு நேரம் காக்க வைத்துவிட்டேனா?” அவளது காதுமடலை செல்லமாகக் கடித்துக் கேட்டான்.

அவனது நாவின் தீண்டல் உடல் முழுதும் வெப்பத்தைக் கொடுக்க, “ காக்க வைப்பது தங்களுக்குப் புதியதில்லையே!” அவனுக்கு மட்டும் கேட்குமாறு பதிலலித்தாள்.

அவளது பதிலில் , அவளை நிமிர்த்தி முகம் பார்த்து , “ம்ம் நீ சொல்வதும் சரி தான். புதிதாக ஒன்றைச் செய்ய உத்தேசித்துத் தான் இங்கு வந்திருப்பதே இல்லையா?” கண்ணடித்துக் கேட்டான்.

செவ்வானமாக சிவந்த அவளது முகத்தைக் கைகளில் ஏந்தினான். அவனது முகத்தைப் பார்க்க வெட்கப் பட்டு, அவனது மார்பு வரையில் கண்களை உயர்த்த, அந்தப் பரந்த மார்பும் அவளுக்குள் மோகத்தை விதைத்தது.

“ இங்கு வந்ததிலிருந்து நிறைய புதிய விஷயங்களைக் கண்டேன்” இப்போது தள்ளி அமர்ந்து அவன் முகத்தைப் பார்க்க,

“ ஹ்ம்ம் ஹூம்.. என்ன என்ன ?” தன்னை விட்டு விலகியவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“ என்ன இது.. விடுங்கள் என்னை” அவன் செயலில் துடித்து அவனை விட்டு எழ முயற்சிக்க,

அவளது இடையை இரு கைகளாலும் வளைத்துப் பிடித்து தன் மடியை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டான்.

“ என்னை விட்டு விலக உன்னால் முடியாது காதலே! இப்படியே பேசு!” ஆணையிட்டான் அவளது காதலன்.

அவனது ஆணையை ஏற்றவள் இன்னும் வாகாக அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவன், “ சொல்லு” என்றான்.

அவனது செய்கையை ரசித்தபடி , “ முதலிரவில் மெத்ததையை ஏன் அலங்கரிக்க வில்லை? பால் பழங்கள் எதுவும் இல்லை. இவை எல்லாம் புதிதாக உள்ளது!” புரியாமல் கேட்டாள்.

“இவை எல்லாம் முதலிரவில் இருக்கும் என்று உனக்கு யார் சொன்னது.?” குறும்பாக அவளைப் பார்க்க,

வெட்கம் பிடுங்கித் தின்ன, “ அது… என் தோழி மல்லிகா தான் கூறினாள்” அமர்ந்த குரலில் கூற,

“ஓ! சென்ற மாதம் திருமணம் ஆனதே அவளா..” அவளது கன்னத்தை தன் உதட்டினால் கோலமிட்டபடி கண்ணை மூடிக் கொண்டு கேட்டான்.

அவனிடம் முழுதும் மயங்கி , “ ம்ம்” என்று முனக,

“ அவளுடைது எல்லோருக்கு நடக்கும் முதலிரவு , நமக்கு அப்படி அல்ல. வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எனக்கும் அப்படியே நடத்திவிடுவேனா?”

புரியாமல் அவள் விழிக்க,

“நம் மெத்தையில் பூக்கள் தானாகவே வரும். நம் காதலைக் கண்டு உன் தலையில் இருக்கும் பூக்கள் அந்த வேலையைச் செய்யும் . பால் பழம் உண்டு பசி தாகத்தை தீர்க்காமல் உன்னை காமத்துப் பால் அருந்த வைப்பேன். இதழின் தேனை ருசிக்க வைப்பேன்!” அவனது பேச்சில் வெட்கம் வர,

முகத்தை மூடி எழுந்து நின்றாள்.

அவளைப் பிடித்து மெத்தையில் தள்ள, அவள் உருண்டு சென்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

அவளது தலையில் இருக்கும் பூக்களை ஒவ்வொரு சரமாக உருவி அதை அவள் மீதும் மெத்தையின் மீதும் வீசினான்.

அவளது பின்னங்கழுத்தை நெருங்கி , பாராமாக இருந்து அட்டிகை மற்றும் காசுமாலையை மெதுவாகக் கழட்டினான்.

அவனது கைகள் அவள் முதுகில் கோலமிட அவள் நத்தையாகச் சுருண்டாள்.தன் அழுத்தமான உதட்டினால் அங்கு முத்தமிட, அவளது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

அவளைத் தன் புறம் திருப்பியவன் அவனது முகத்தை தன் விரல்களால் அளந்தான். ரதி கண்மூடி கிறங்கி இருக்க, சிறிது இடைவெளி விட்டான். அவளளது முகபாவத்தை  ரசித்துக் கொண்டிருந்தான்.

ஏன் நிறுத்திவிட்டான் என்று பார்க்க கண்ணைத் திறந்தவள், அவனது மயக்கும் புன்னைகையைக் கண்டு சொக்கியே போனாள்.

 

குனிந்து அவளது உதட்டில் மெல்ல  முத்தமிட, முதலில் தயங்கி, பின் அவன் இதழ்களுடன் நீயா நானா என மல்யுத்தம் புரிந்தாள். நீண்ட நேரம் தொடர்ந்த முத்தச் சண்டையை மூச்சு வாங்கி ஒரு முடிவிற்குக் கொண்டு வர,

அதிரடியாக அவளது முந்தானையை விலக்கி, அவள் மேல் படர்ந்தான். அவளது இதழ் தேன் அவனை கள் குடித்த வண்டாக மாற்றியது.

முதலில் அவனது தாக்குதலை சமாளிக்கத் தினறியவள், மெல்ல அவனோடு இசைந்தாள். அவன் பலத்தை ஏற்கப் பழகிக் கொண்டிருந்தாள்.

அவளது தளிர் மேனி அவனுக்கு கட்டுப்பாட்டை இழக்க வைத்தது. மென்மையாக ஆரம்பித்தவன் அவளின் உடல் சூட்டினால் மேலும் மேலும் அவளுக்குள் சென்று கொண்டிருந்தான்.

அவன் சொன்னது போல காமத்துபாலை விடிய விடிய அருந்த வைத்தான். விடியலில் இருவரும் கண் அயர்ந்தனர்.

அவள் பூமெத்தையில் களைத்துச் சாய்ந்திருக்க, பூவை விட மென்மையான அவள் மீது அவன் சாய்ந்து உறங்கினான்.

திருவாசகம்

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

பொருள்:
அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து
சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.

 

 

 

error: Content is protected !!