Kaalam Yaavum Anbe 2

Kaalam Yaavum Anbe 2

                            காலம் யாவும் அன்பே 2

 

“ அடி தின்னதுபோதும் சீக்கிரம் வாடி !” கையில் இருந்த ஸ்போர்ட்ஸ் வாட்சை இருபதாவது முறையாகப் பார்த்து விட்டு , வந்தனாவை வசை பாடிக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

“ ஏன் டா சாப்பிடும் போது என்னை டிஸ்டர்ப் பண்ற , இந்தியா வந்த பிறகு தான் நல்ல டேஸ்ட்டா  சாபிட்றேன். அதுவும் அடுத்த வாரத்துலேந்து உன் சமையல் தான் சாப்டாகனும்னு தலைல எழுதிருக்கு. இப்பயாச்சும் நல்லத அனுபவிக்க விடு , மணி அண்ணா, இன்னும் கொஞ்சம் மசாலா அப்டியே இன்னொரு பூரி” காலையிலேயே நான்கு பூரியை உள்ளே தள்ளிவிட்டு ஐந்தாவது பூரி க்காக காத்திருந்தாள்.

“ இங்க பாரு , ஏற்கனவே மணி ஒன்பதரை. அங்க ஹெட் அல்ரெடி வந்திருப்பாரு. இன்டர்வியூ முடிஞ்சதும் நம்மள தான் தேடுவாரு. எங்க போனாலும் உனக்கு நான் செட்டிநாட்டு சமையல் காரன் மாதிரி சமைச்சு போடறேன். இப்போ வா மா தாயே , இன்னிக்கும் திட்டு வாங்க வைக்காத. அவர பத்தி உனக்குத் தெரியாதா” அவளிடம் கெஞ்சாத குறையாக புலம்ப,

“ சரி சரி வரேன், அழாத. அண்ணா , பூரி கேன்சல். “ சாப்பிட்ட தெம்பில் கத்திவிட்டு அங்கிருந்து இருவரும் தங்களின் ஹெட்-ஐ பார்க்கச் சென்றனர்.

ஆகாஷ் , வந்தனா இருவரும் ஒரே கல்லூரில்யில் அதாவது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் யுனிவர்சிட்டியில் படித்தவர்கள் , இருவரும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். தமிழ் என்கிற மந்திரச் சொல் அவர்களை கல்லூரியிலேயே இணைத்தது (லவ்வு தான் ). முழுவதும் ஆங்கிலம் பேசியே பழகியவர்கள் என்றாலும் இருவரின் வீட்டிலும் தமிழ் மட்டுமே பேசவேண்டும் என்பது எழுதப் படாத சட்டம். ஆகையால் தாய் மொழி மீது இயல்பாகவே பற்று வந்தது.

தொல்லியல் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தது இருவருக்கும். புத்திசாலிகளும் கூட! படிப்பு முடிந்ததும் அந்தத் துறையில் பணிபுரிய அவர்களின் ப்ரொபசருடன் இப்போது இந்தியா வந்திருந்தனர்.

இருவரும் வெளிப்படையாக எப்போதுமே தங்களின் காதலைக் காட்டிக் கொண்டதில்லை. ஆனால் பிறரிடம் விட்டுக் கொடுத்ததும் இல்லை.

இவர்களின் ப்ரொபசர் தான் வாகீஸ்வரன். வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் , என்ற வெறி எப்போதுமே அவனிடம் உண்டு. இந்தியாவில் பள்ளியை முடித்துவிட்டு , தன்னுடைய மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றான். தொல்லியல் துறையில் நான்கு ஆண்டுகள் படித்து பின் அதில் பி ஹெஜ்டி யும் முடித்து அந்தக் கல்லூரியிலேயே ப்ரொபசராக சேர்ந்தான்.

அதிபுத்திசாலி, மறந்தும் சிரித்துவிட மாட்டான். எப்போதும் நேர்த்தியாக உடை அணிவது அவன் வழக்கம். அவனது உயரமும் , ஒரே ஒரு கண் பார்வையுமே மற்றவர்களை அவனை விட்டு இரண்டடி தள்ளியே நிறுத்தும்.

தன்னிடம் இரண்டு வார்த்தை பேச மாட்டானா என்று பல பெண்களை ஏங்க வைத்தவன்.

அனாவசியமான ஐந்து நிமிடப் பேச்சு ஒருவரின் பாதி நாள் உழைப்பைக் கெடுக்கும் என்பது அவன் கருத்து. அவன் இது நாள் வரையில் அதிகமாகப் பேசியது என்றால் அவனது ப்ரோபெசர் மற்றும் ஆகாஷிடம் மட்டும் தான்.

படிக்கும் போது அவனது ஆசிரியர் அவனுக்கென்று ஒரு ப்ரொஜெக்டைக் கொடுத்திருந்தார். அந்த ஆராய்ச்சியைத் தொடங்கி இருபது வருடங்கள் கழித்தே அவருக்கு ஒரு சிறு துப்பு கிடைத்தது.

அதை முழுமையாக முடிக்க தன்னால் முடியாது என்று தெரிந்த பின், அவர் வாகீசனை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

ராப் பகலாக அவருடன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டான். ஆரம்பத்தில் அது ஏதோ ஒரு சிறிய விஷயம் என்று நினைத்தவன் போகப் போக அதனுள் மூழ்கி விட்டான்.

ஒரு கட்டத்தில் இதுவே அவனை நிரூபிக்க சரியான பாதையாக ஏற்றுக் கொண்டான்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பே அவனது ஆசிரியர் இறந்தார். சாகும் நிலையில் கூட, அவனை அழைத்து ,தனக்குத் தெரிந்த  பல அதிசய விஷயங்களைச் சொல்லிவிட்டுத் தான் கண்மூடினார்.

அப்போது தான் அவனது மாணவர்களான ஆகாஷும் வந்தனாவும் சில விஷயங்களில் சிறந்தவர்களாகத் தெரிய அவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டான். பல விதமான தேர்வுகளுக்குப் பிறகே அவர்களைச் சேர்த்தது.

இன்னும் அவனது ஆராய்ச்சி எதைப் பற்றியது என்று அவர்களுக்கும் முழுமையாகத் தெரியாது.

அவன் கொடுக்கும் பல குறியீடுகளை மொழி பெயர்ப்பது, சில கற்களின் காலம் அறிவது , என்கோடிங் செய்யப் பட்ட சில வார்த்தைகளை புரியும் வகையில் டீகோடிங் செய்வது என்பது போன்ற வேலைகளை மட்டுமே கொடுப்பான்.

அவனது ஆராய்ச்சியில் ஒரு நாள் , அவனைத் திடுக்கிட வைத்த ஒரு சம்பவம் நடந்தது. அது….

“ ஆகாஷ் , நான் டீகோடிங் செஞ்சு முடிச்சுட்டேன். நீ இதோட காலத்தை மட்டும் சொல்லிட்டா , நாம ஹாஸ்டலுக்குக் கிளம்பலாம்” வந்தனா அவளது வேலையை முடித்து ஒரு செராமிக் கப்பில் இன்ஸ்டன்ட் டி பேக்கை பாலில் நனைத்த படி ஆகாஷின் அருகில் வந்தாள்.

“ ம்ம்.. நீ டீ குடிச்சு முடிக்கறதுக்குள்ள என் வேலையும் முடிச்சிடும் பேபி. கிவ் மீ சம் டைம்” அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கூற ,

“ டைம் இப்போ ஒன் தேர்ட்டி. லேசி டாக், குவிக், ஐ ஃபீல் ச்லீபி  “ அவனது தலையில் தட்டி அவனை உற்சாகப் படுத்திவிட்டு அங்கிருந்த ஒரு குஷன் நாற்காலியில் முதுகைச் சாய்த்து அமர்ந்தாள்.

அவர்கள் இருந்தது வாகீசனின் ஆராய்ச்சி அறையில். கல்லூரியில் அவனுக்கென்று இந்த இடத்தைக் கொடுத்திருந்தனர். ஆசிரியர் என்பதால் சில சலுகைகள் உண்டு. மொத்தம் இரண்டே அறை தான். அதில் ஒன்றை ஆராய்ச்சிக்காக ஒதுக்கி விட்டு, மற்றொன்றில் அவன் தங்கியிருந்தான்.

ஆகாஷிடம் ஒரு சிறு கல்லின் காலத்தை துல்லியமாக கணிக்கச் சொல்லி விட்டு , வந்தனாவிடம் புரியாத சில குறியீடுகளைக் கொடுத்து மொழிபெயர்த்து தரும்படி பணித்திருந்தான்.

அவன் ஒரு பழைய , பாதி எழுத்துக்கள் மங்கிய புதத்தகத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு , பூதக் கண்ணாடி வழியாக சில எழுத்துக்களைத் தேடி  தனது நோட்டில் எழுதிக் கொண்டிருந்தான்.

இரவு எட்டு மணியிலிருந்து மூவரும் , குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு தங்கள் வேளையில் ஆழ்த்திருன்தனர்.

தன் வேலையை ஒரு பத்து நிமிடத்தில் முடித்த ஆகாஷ் , கைகளை நெட்டி முறித்து , முதுகை வளைத்து தன்னை சரி செய்து கொண்டு எழுந்தான்.

வந்தனா வை அழைக்க அவள் அங்கேயே உறங்கி விட்டதைப் பார்த்துச் சிரித்தான்.

லேசாக கண்கள் திறந்தபடி , தலையும்  குஷனின் ஒரு புறம் தொங்கிக் கொண்டிருக்க , அருகில் இருந்த காலி கப்புடன் அவள் உறங்குவதைக் கண்டவன், உடனே தனது மொபைலில் அப்படியே படம் எடுத்தான்.

அதை அவர்களது நண்பர்கள் இருக்கும் வாட்சாப் க்ரூபில் , அஸ் ஐ டிடின்ட் அக்செப்ட் ஹெர் கிஸ் , ஷி கம்மிட்டேட் சுய்சைட், (அவளது முத்தத்தை நான் ஏற்காததால் தற்கொலை செய்து கொண்டாள்) என்ற தலைப்போடு, மெசேஜெய் தட்டி விட்டு ,

“ புவர் பேபி “ என்று அவளது அருகில் சென்று ஆள்காட்டி விரலால் அவளது உதட்டைத் தொட்டு தன் உதட்டில் வைத்துக் கொண்டான்.

உடனே அவள் சிணுங்கவும் , “ வந்தனா, கமான் எந்திரி , ஹெட் கிட்ட குடுத்துட்டு ரூம்ல போய் தூங்கு” கரிசனையுடன் அவளை எழுப்பினான்.

உடனே கண்விழித்தவள் வாய்க்குள் அவன் விழுங்கிய சிரிப்பைக் கண்டு , ஏதோ செய்திருக்கிறான் என்று யூகித்தாள்.

“ என்ன டா பண்ண பிராட் , ஒழுங்கா சொல்லிடு “ மிரட்டிக் கேட்க,

“ நத்திங் பேப், நீ தூங்குற அழகைப் பார்த்தேன் அதன் சிரிப்பு வந்துடுச்சு “ அவள் தோளில் கை போட, அதை தட்டி விட்டு

“ ஐ டோன்ட் பிலீவ் யூ லையர் “ என திரும்பி தனது வேலையை வாகீசனிடம் காட்டச் சென்றாள். அந்த அறையிலேயே ஒரு டேபிள் லாம்பின் அருகில் அமர்ந்திருந்தவனை மெதுவாக அழைத்தாள்.

“ ஹெட், என் வேலை முடிஞ்சுது. “ அவனது டேபிளில் அந்தக் குறிப்பை வைத்தவளைத் தொடர்ந்து ஆகாஷும் தன் நோட்சை வைத்தான்.

“ குட் வொர்க் , ரெண்டு பெரும் நாளைக்கு ஈவினிங் வந்தா போதும். ஆகாஷ், கேன் யூ மேனேஜ் டிரைவிங் ?” அவர்களின் களைப்பைப் பார்த்துக் கேட்க,

“ அப்கோர்ஸ் ஹெட், நான் பாத்துக்கறேன், உங்களுக்கு டி குடுத்துட்டு போகட்டுமா ?” அவனது களைப்பை அறிந்து ஆகாஷ் கேட்க,

“ எஸ் ப்ளீஸ். ஃஇப் யு கேன்” என்றுவிட்டு  மீண்டும் புத்தகத்தில் மூக்கை நுழைத்தான்.

அவனின் குறிப்பறிந்து செய்வதில் ஆகாஷ் மிகவும் கெட்டிக்காரன்.

அவர்கள் சென்ற பிறகு , குனிந்து கொண்டே இருந்தவனது கழுத்து லேசாக வலிக்க, அருகில் இருந்த ‘டீ’யின் வாசனை  அவனை அழைத்தது.

அதை எடுத்து உதட்டில் வைத்துக் கொண்டே எழுந்தவன், அவர்கள் கொடுத்த குறிப்புகளைப் பார்த்தான்.

அடுத்த நிமிடம் அவனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. தனது லேப்டாப்பில் ஏற்கனவே இருந்த பைல்களை திறந்து பார்க்க,

வந்தனா குடுத்த குறியீட்டோடு ஒத்துப் போனது. அதன் காலம் இடம் என்ற இரண்டையும் ஆகாஷின் நோட்டில் பார்க்க,  அவனது தாய்நாட்டில் தான் இனி அவனது வேலை என்று சொல்லாமல் சொல்லியது.

அவனது ப்ரொபசர் அவனிடம் சொன்ன கடைசி வார்த்தைகள் :

“ கோ டு யுவர் ஹோம்டவுன் “ என்பது தான். ஒரு வருடம் கழித்தே அவர் சொன்ன வார்த்தைக் காண அர்த்தம் அவனுக்குப் புரிந்தது.

அதன் விளைவாகவே இப்போது இந்தியா வந்திருந்தான். வந்தவன் என்னி நாலே நாள் பெற்றவர்களுடன் கழித்துவிட்டு , மீண்டும் இந்தியப் பல்கலைக் கழகம் கொடுத்த அவனது குவாட்டர்ஸ் வந்து தங்கி விட்டான். அதற்குக் காரணம் அவன் தாய் அவனுக்கு திருமணம் செய்ய நினைப்பது தான்.

“ அம்மா இன்னொரு டூ இயர்ஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க “ ஸ்டிரிக்டாகச் சொல்லிவிட்டு மூட்டையைக் கட்டிவிட்டான்.

அடுத்த இரண்டு வாரத்தில் அவனது தேடுதல் பயணம் தொடங்கப் போகிறது. ஆகாஷ் வந்தனாவிற்கு நிறைய வேலைகள் இருக்கும் என்பதால் அவனுக்கு உதவி புரிய இன்னொரு ஆள் தேவை என்று கேட்டிருந்தான்.

பல்கலைக் கழகம் அவனுக்காக ஏற்பாடு செய்த பல நேர்காணல்களில் சென்னையிலிருந்து ஒருவரும் அவனுக்கு சரிப்பட வில்லை. அடுத்து தஞ்சைக் கல்லூரி பற்றி சொல்ல,“இங்கேயே ஒன்னும் செட் ஆகல, கிராமத்துல இருந்து சரிப்படுமா “ என்று முதலில் யோசித்தவன் , அங்கிருந்த தஞ்சை  கோயில் வேலைபாடுகள் அதன் தொன்மை பற்றி அறிந்திருக்கவே முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒத்துக்கொண்டான்.

அங்கே தான் அவனுக்கு இயல் கண்ணில் பட்டாள். அவளைக் கண்டதுமே நல்ல அபிப்ராயம் வர, அவள் பேசியது அவனுக்கு வியப்பைத் தர , அவளது ப்ரோஜெக்ட் என அனைத்தையும் அவள் பேசும் போதே அங்கிருந்தவர்கள் அவனுக்கு அனுப்பி வைத்தனர்.

உடனே அங்கிருந்தவர்களிடம் , இயலை தேர்வு செய்ததாகச் சொல்லிவிட்டான்.

நிச்சயம் அவளால் தனக்கு உதவ முடியும் என்று அவனுக்குத் தோன்றியது.

அவள் பெயரை ஈமெயிலில் டைப் செய்து , விவரங்களை அவளுக்கு அனுப்பினான். அதியசத்திலும் அதிசயமாக அவன் உதட்டில் சிறு புன்னகையை தோற்றுவித்தது அவள் பெயர்.

*********

 “ அப்பா, ப்ளீஸ் பா . உங்களுக்கேத் தெறியும்ல எனக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும்னு. சென்னைக்கு தானேப்பா போறேன், வேற கிரகத்துக்கா போறேன் ” திருக்குமரனின் தாடையைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள் இயல்.

“ என்னோட ஒரே பொண்ணு நீ, ஏதோ இங்க இருக்கற நம்ம பெரிய கோவில்ல ஏதாவது தான் வேலை தருவாங்க, காலைல போயிட்டு சாயந்திரம் வந்திருவன்னு பாத்தா, எங்கயோ சென்னைக்கு போறேன்னு சொன்னா நான் எப்படி இருக்கறது உன்னை விட்டு.  அதெல்லாம் வேணாம்.” முறுக்கிக் கொண்டு நின்றார்.

முகத்தை தூகிக் கொண்டு “ சரிப்பா, உங்க ஆபீசுல , பழைய பொருளை துடைச்சு வைக்கற வேலை இருந்தா வாங்கிக் குடுங்க, அதை செஞ்சு கிட்டு உங்க கண் பார்வைலையே இருக்கேன் ,போதுமா?” கோபமாக வெளியே சென்று வீட்டு வாசல் படியில் அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் யோசித்தவர் அவள் அருகில் வந்து அமர்ந்து,

“ சரி டா, பத்திரமா போகணும். அங்க ஜாக்கிரதையா இருக்கணும். அனாவசியமா பேசக் கூடாது. அப்புறம் இன்னொரு கண்டீஷன்!” இருவரும் ரோட்டில் போகும் வண்டிகளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவரது கண்டீஷன் என்ற வார்த்தை அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

“ என்னபா அது?!” அவரது கையப் பற்றிக் கொண்டு சிறு குழந்தை போல் ஆர்வமாகக் கேட்பவளைப் பார்த்து,

“ உன்னை நான் தான் கூட்டிட்டுப் போய் விடுவேன். அந்த வாகீஸ்வரனைப் பார்த்து எனக்கு நம்பிக்கை வந்தா தான் சம்மதிப்பேன்” அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிக் கூற,

“ வாவ்!! சூப்பர் பா. தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் “ அவரது நீண்ட மீசையைப் பிடித்து முறுக்கி விட்டுச் சொன்னாள்.

தன் தந்தை நம்பும்படியாக அவன் இருக்க வேண்டும் என்று மீண்டும் அந்த ஈஸ்வரனை மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.

அவள் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது..

திருவாசகம் :

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

 

 

 

 

error: Content is protected !!