kaamyavanam11

kaamyavanam11

                                             காம்யவனம் 11

 

“நீ என்ன சொல்ற தேவ்? இந்தக் காட்டோட கதையா? யார் சொன்னது? ” மாயா அவனை விடாமல் கேட்டாள்.
மூச்சை ஒரு முறை நன்றாக இழுத்துக் கொண்டு தனது கவலையை உள்ளே தள்ளினான். மனதின் பாரம் அவனை அழுத்தியது. அவளிடம் எப்படிச் சொல்ல போகிறோம் என யோச்சித்தான்.
“சொல்லு” மாயா கலவரமானாள்.

“நேத்து உடுக்கை அடிச்சாரே ஒருத்தர். அவர் தான் இந்தக் காட்டோட கதையை சொன்னாரு. மன்மதனோட அவதாரம் ..பேர் கூட.. ஆங் …ப்ரத்யும்னன். அவன் இந்தக்காட்டுல பல ஆயிரக் கணக்கான வருஷமா அதாவது போன யுகத்துலேந்து இப்போ வரைக்கும் அவளோட காதலிக்காக காத்திருக்கானாம்.” நிறுத்தி நிறுத்திக் கூறிக் கொண்டிருந்தான்.
கதையை சுருக்கமாகச் சொல்லியவன் ,

“அந்த ரதி அதாவது மாயாவதி..நீ தான்னு இங்க இருக்கறவங்க நம்பறாங்க. அதுனால தான் அவங்க சொன்ன மாதிரி அந்தத் தண்ணிய உன் மேல தெளிச்சுப் பார்த்தேன். கதைல வந்தது போல அதை உன் உடம்பு உள்ளிழுத்து என் சந்தேகத்தை உறுதியாக்கிடுச்சு”. என்று முடித்தான்.

“என்ன சொல்ற தேவா? நான் மாயா தான். ஆனா நான் வேற, இவங்க சொல்ற ஆள் வேற. அப்படி அந்த கதைல வர மாயாவா இருந்தா இங்க வந்ததுமே என்னைப் பத்தி நான் உணர்ந்து , இவங்க சொல்ற அந்த பழைய ஞாபகம் வந்திருக்கணுமே!” மாயா தான் அவள் இல்லை என்பதை அவனுக்கு உணர்த்த நினைத்தாள்.

ஆனால் அவளுக்கே அது உறுதியாகக் கூறமுடியுமா என்பது அடி மனதில் சந்தேகம் தான் .

“உனக்கு இப்போ நினைவில்லாம இருக்கலாம். ஆனா அந்தப் பிரத்யும்னன் உனக்கு நினைவு படுத்த உன்னைத் தேடி வருவான் மாயா.” தோழியை நினைத்து தேவா வெகுவாகவே பயந்தான்.

அவன் கூறியபோது தேவாவிடம் ஏற்கனவே அவனைச் சந்தித்து விட்டதைப் பற்றி கூற ஏனோ தெம்பு வரவில்லை. காரணம் அவனது அக்கறை!

அவன் பேசப் பேச வாய் திறக்காமல் இருந்தாள்.

“இந்த மாதிரி மாய மந்திரம், பூர்வ ஜென்மம் இதெல்லாம் கதையா கேட்க வேணா சுவாரசியமா இருக்கும், ஆனா அதுல நாம பங்கெடுத்துகிட்டா  நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதா இருக்கும். அதை தாங்க உன்னால முடியாது மாயா. அதுனால…” அவன் முடிக்க முடியாமல் திணற,

“அதுனால?!” அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு யூகிக்க முடியவில்லை.

“அதுனால, நாம இங்கிருந்து போய்டலாம் மாயா. உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்.” அவளது கையைப் பிடித்து அவளைப் பத்திரப் படுத்தும் தோரணையில் நின்றான்.

தேவா சொன்னதை கிரகித்துக் கொள்ளவே அவளுக்கு சில நொடிகள் தேவைப் பட்டது.

‘என்ன இவன் என்னை இங்கிருந்து ஓடச் சொல்கிறானா!’ அவனது கையை தன் கையிலிருந்து பிரித்தாள்.

“தேவா நீயா இப்படி பேசற? எதுவா இருந்தாலும் துணிஞ்சு நிக்கணும்னு சொல்லுவ. ஒரு கதையக் கேட்டு இப்படி ஒரு முடிவேடுப்பன்னு நான் கனவுலையும் நெனைக்கல.” திரும்பி நின்று கொண்டாள்.

அவன் கூறியதை ஒரு சதவிகிதம் கூட அவளால் ஏற்க முடியவில்லை.

“மாயா! பீ பராக்டிகல். இதெல்லாம் ஒரு அட்வென்ச்சர்ன்னு நெனைக்கரியா. இதுக்குள்ள இறங்கி பாக்க போனா அதுக்கு விலையா நீ உன்னையே தரனும். உன்ன நீயே பலியாக்கிகாத.” குரலில் சற்று கண்டிப்பு இருந்தது போல தோன்றியது.

“என்னை மன்னிச்சிடு தேவா. நான் உன்னோட கருத்த அக்செப்ட் பண்ண மாட்டேன். என் வாழ்க்கைல இது வரை நடந்த எதுக்குமே நான் காரணம் இல்ல, ஆனா அது எல்லாத்துக்குமே வலிய அனுபவிச்சது நான் தான். எல்லாருமே என்னைத் தான் விலையா கேட்டாங்க, விதி உட்பட..

அப்படி ஒரு சூழ்நிலைல கூட நான் தெளிவா நின்னேன். ஆனா இது ஒரு சாதாரண விஷயம். இதுக்குபோய் …ச்சே . நோ என்னால கண்டிப்பா முடியாது.” மிகவும் தெளிவாக அவள் கூறினாள்.

தேவாவிற்கு மாயா இன்று புதிதாகத் தெரிந்தாள். எப்போதும் அவன் கூறுவதை சரியென்று அவள் ஆமோதித்திருக்கிறாள். குறைந்த பட்சம் அவன் சொல்ல வருவதில் இருக்கும் கருத்தைப் பற்றி வாதம் செய்தாவது தெளிவு படுத்திக் கொள்வாள், அல்லது அவனுக்குத் தெளியவைப்பாள்.

இன்று எடுத்த எடுப்பிலேயே அவனது வார்த்தையை தூக்கி எறிந்துவிட்டாள்.

தேவா அதற்காக வருத்தப் படவில்லை. அவளுக்கு மேலும் எப்படி சொல்லி எடுத்துரைப்பது என சிந்தித்தான். ஒரு நல்ல நண்பனின் கடமை அது.

எந்த நேரத்திலும் நட்பிற்கு நல்லது எது என்று எடுத்துக் கூறுவது. அடுத்து தவறு எதுவும் நேர்ந்துவிடாமல் அருகிலேயே பாதுகாப்பாக நிற்பது. இப்போது தேவா இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருந்தான்.

“அப்போ அந்த பிரத்யும்னனை சந்திக்க தயார்ன்னு சொல்றியா?” நேரடியாகக் கேட்டான்.

“ரெண்டு விஷயம் சொல்றேன் தேவா. முதல் விஷயம், என்னைப் பொறுத்தவரை நான் அந்த மாயா இல்லை. அதை என்னால முடிஞ்ச வரை எல்லாருக்கும் புரியவைக்கறேன்.

ரெண்டாவது, அப்படியே நான் தான் அந்த மாயான்னா அதை நான் கண்டிப்பா ஏத்துகிட்டு அந்த வாழ்வை தொடருவேன். என்னுடைய வாழ்வை நான் வாழறதுக்கு நான் ஏன் பயப்படனும், தயங்கணும்!?” அவனிடமே கேள்வியை வைக்க,

அதற்கு மேல் அவளிடம் வாக்குவாதம் செய்வதில் பலனில்லை என்பதை புரிந்துகொண்டான் தேவா. அவள் சொல்வதிலும் ஒரு ஞாயம் இருக்கவே செய்தது. அப்படியே அவள் தான் அந்த மாயா எனில், அவளை இத்தனை காலம் பிரிந்து துயரப்பட்ட அவளது காதலனிடமிருந்து பிரிக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவனது மனசாட்சி கேள்வி கேட்டது.

சிறிது நேரம் யோசித்தவன், ஒரு முடிவுடன் அவளைப் பார்க்க அவளும் அவனது பதிலுக்காகத் தான் காத்திருந்தாள்.

“சரி மாயா. நீ சொல்றதும் எனக்கு ஞாயமாகத் தான் தெரியுது. சோ நான் சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன். ஆனா, உனக்கு என்ன நடந்தாலும் என்கிட்ட உடனே நீ சொல்லணும். சப்போஸ் அந்த பிரத்யும்னன் நேர்ல வந்தா கண்டிப்பா எனக்கு நீ சொல்லணும். சரியா?” சிரித்தபடி கேட்க,

இப்போது அவளுக்கு மனம் உறுத்தலாக இருந்தது. தனக்காக இவ்வளவு பார்க்கும் தனது உயிர் தோழனிடமா தான் மறைக்கின்றோம் என்று ஒரு ஓரத்தில் கசந்தது. இருந்தாலும் இப்போது சொல்வது அவனக்கு மேலும் பயத்தைக் கொடுக்கும் என்று யோசித்து பிறகு பொறுமையாக சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அவளும் சிரித்து, “டன்” என அவனுக்கு ஹை பைவ் கொடுத்தாள்.

அதற்குள் அங்கே மகதியிடம் அனைத்தையும் குரு ஒப்பித்தான். நண்பர்களுக்குள் ஒளிவு மறைவு வேண்டாமென அவன் எப்போதோ முடிவு செய்திருந்தான். கதையின் சிறு பகுதியைக் கூட மிச்சம் வைக்காமல் அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான்.

எல்லாவற்றையும் கேட்டு ஆச்சரியப் பட்டாள் மகதி.

“அதானா.. மாயா இந்தக் காட்டுக் குள்ள ரூ ஆறு இருக்குன்னு கரெக்டா என்னை கூட்டிட்டு போனா! பாரேன் அவளுக்குள்ள இது இல்லாமயா அவ அப்படி நடந்துக்குவா! அன்னிக்கும் கனவு வந்து கத்தினா. அப்புறம் அந்த பூஜைல அவள உட்கார வெச்சது. எல்லாமே ஒரு காரணத்தோட தான்னு எனக்கு பட்டுச்சு. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு லவ் ஸ்டோரி இருக்கும்னு நான் நெனச்சே பார்க்கல டா.” அவளுக்கு பிரமிப்பை அளித்தது மாயாவின் கதை.

“ஹே லூசு. ஓவரா எக்சைட் ஆகி, அவகிட்ட எதையாவது ஏடாகூடமா கேட்டுத் தொலைக்காத. தேவா எல்லாம் பக்காவா அவ கிட்ட பேசுவான்.பாப்போம் என்ன நடக்குதுன்னு”. குரு அவளை அடக்க,

“இவன் பெரிய டேஷ்..போடா” கையில் கிடைத்ததை எடுத்து அவன் மேல் வீசினாள்.

அதை லாவகமாகப் பிடித்தவன், “பண்ணி. உன்னையெல்லாம் கூட்டிட்டு வந்தோம் பாரு. அரவேக்காடு” அவனும் பதிலுக்கு சொல்லிகொண்டிருக்க, மாயவும்  தேவாவும் உள்ளே வந்தனர்.

“மாயா..!” மகதி ஆர்வமாக,

“ஹே ஹே! லிசென். நான் அந்த மாயாவா இல்லையான்னு யோசிச்சு என்னை வேற்று கிரக வாசி மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க. நான் எப்பவும் உங்க ப்ரென்ட் தான். நடக்கறது போக போக பாப்போம்.” தெளிவாக அனைவர்கும் கூறிவிட்டாள்.

அவளது மனநிலையை நண்பர்களான அவர்களும் புரிந்து கொள்ள, அதை அத்தோடு விட்டனர்.

குருவும் தேவாவும் தனியே தண்ணீர் கொண்டு வர வெளியே சென்றனர். சகஜாமாக மற்ற விஷயகளைப் பேசிக்கொண்டிருக்க,

“நீ என்ன நினைக்கற குரு?” என மாயவைப் பற்றி இடையில் கேட்டான்.

“என்னக்கென்னவோ இவ அந்த மாயா தான்னு உறுதியா தெரியுது டா.” பளிச்செனக் கூறிவிட்டான்.

“எப்படி டா அவ்வளோ தெளிவா சொல்ற?”

“இங்க வந்த பிறகு அவகிட்ட நிறைய மாற்றம் இருக்கு தேவா. இது தான்னு குறிப்பிட்டு சொல்ல முடியல ஆனா நான் பர்சனலா பீல் பண்றேன்.” அவன் உணருவதை அப்படியே சொன்னான்.

அதே நிலை தான் தேவாவிற்கும். அவளிடம் சில மாற்றங்கள் இருப்பதை அவனும் தான் பார்க்கிறான்.

“நீ சொல்றது சரி தான். ஆனா இந்த பிரத்யும்னன் எப்படி திடீர்னு வருவான்? மாயாவ எப்படி அப்ரோச் பண்ணுவான்? இதெல்லாம் தான் புரியல. அவன் இந்தக் காலத்துக்கு தகுந்த மாதிரி இருப்பானா? மாயாவுக்கு அவன புடிக்குமா?” அவனது மண்டைக்குள் ஓடிய அனைத்தையும் வெளியே கொட்டிக் கொண்டிருந்தான். பிரத்யும்னனை ஏதோ மாயாவிற்கு பார்த்த மாப்பிள்ளை வரன் போல் நினைத்துப் பேசினான்.

“டேய் டேய்.. நிறுத்து டா.. அவர் யாருன்னு தெரியும்ல..நமக்கு வர லவ்வெல்லாம் சும்மா ஜுஜூபி மா. அவரு காதலுக்கே கடவுள். சிவனுக்கே காதல் வர இவரு கிட்ட தான் ரெக்கமெண்டேஷன் கேட்ருக்காங்க. நீ என்னடான்னா சர்வ சாதரணமா சொல்லிட்ட. எனக்கு இனிமே தான் அவர் வருவாருன்னு தோனல, அல்ரெடி மாயாவ அவர் நெருங்கி இருக்கணும்.”

அப்போது தான் மாயாவை தன் தோழியாக நினைத்து இவ்வளவும் பேசிவிட்டோம் என்பதே தேவா உணர்ந்தான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவனது நட்பின் நெருக்கம் அப்படி தோன்ற வைத்தது.

“ஆமா டா. நான் சாதரணமா நெனச்சுட்டேன். மாயா இனி அவரோட பொறுப்பு. இனி எல்லாமே தேவ ரகசியம் இல்ல..” மனதில் மாயா தொலை தூரம் தள்ளி நின்றாள் இப்போது. அதனால் அவனது கண்கள் அவனையும் மீறி கண்ணீர் சிந்தப் பார்த்தது.

அதை கவனித்த குரு, அவனது தோள் பற்றினான்.

“டேய் மச்சான். பீல் பண்ணாத டா. அவ எப்போதுமே நம்ம மாயா. சரி இப்படி வெச்சுக்குவோம். பிரத்யும்னனை கடவுளா பார்க்க வேண்டாம். நம்ம மாப்பிளையா பார்ப்போம். அப்போ உனக்கு மாயாவை வேற ஒருத்தியா நினைக்கத் தோன்றாது.என்ன சொல்ற!” ஐடியாவை சொன்னாலும், அது ஒரு வகையில் மனதை தேற்றும் விதமாகத் தான் குரு நினைத்தான்.

“ம்ம் பாப்போம். உடனே அப்படி நினைக்க முடியுமா?” தேவா கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டான். அவனுக்கும் இதை விட்டால் வேறு வழி இல்லையே. அவளது விதி அதுவாக இருப்பின், அதை மாற்ற இவன் என்ன கடவுளா!

மாயா அன்று மாலை வரை எப்படியோ பொழுதை போக்கிவிட, இருட்டத் தொடங்கியதும் அவளது மனம் பிரத்யுவை நினைக்கவும் தேடவும் செய்தது.

அவனது பேச்சும், அழகும் அவன் தனது கால் வலியைக் கூட யோசித்து இதமாகப் பிடித்து விட்டது என அவனுடன் கழிந்த பொழுதை அசை போடலானாள்.

‘ஒருவேளை நான் தான் அவனுடைய மாயா அப்படீனா, எனக்கு அவன் எப்படி நினைவு படுத்தப் போறான்? மறுபடியும் கதை சொல்வானா? இல்லை கதைய செயல் படுத்துவானா?’ அவள் மனது கண்டதையும் நினைத்து காதல் சேற்றில் மெல்ல இறங்க தயாரானது.

இது ஒன்று போதுமே பிரத்யும்னனை செயலில் இறங்க வைக்க. ஏழு மணியளவில் அந்த கிராமமே அடங்கிவிட, இவர்களும் இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கைய விரித்தனர்.

பிரத்யும்னன் மாயாவை மீண்டும் சந்திக்க தயாரானான்.

காதல் பாடம் ஆரம்பிக்க நேரம் வந்ததென அவனது மாயவை தேடி புறபட்டான்.

error: Content is protected !!