OVOV 52 FINAL

OVOV 52 FINAL

கைதி, டெர்மினேட்டர், ராம்போ படங்களை ரொம்ப பார்த்து இருப்பார்களோ என்று என்னும் விதமாய்  அந்த கோடௌனில் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் லைவ் ரிலேவாக அங்கே ஒலிபரப்பானது.

ஒரு திசையில் இருந்து ஒரு துப்பாக்கி கர்ஜிக்கும் ஒலி அல்ல அது. எல்லா பக்கங்களிலும் இருந்து முப்பதிற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒரே சமயத்தில் தங்கள் குண்டுகளை முழங்கும் ஒலி அது.

கேட்பவரின் காதில் இருக்கும் ஆரிகள்(auricle), concha, cochlea,போன்ற ஒலி கடத்தும் பகுதிகள் அதிர ஆரம்பிக்க, காதில் கை வைத்து அளவிற்கு அதிகமான அந்த சப்தத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் அந்த கோடௌனில் இருந்தனர்.இல்லை என்றால் காதில் இருந்து ரத்தம் வருவது உறுதி என்ற நிலை.

ஆயிரம் இடிகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் விழுந்தால் இப்படி தான் இருக்குமோ?கண்ணாடி உடையும் ஒலி.அவை பறந்து ஏற்படுத்திய காயம், குண்டடி பட்டவர்களின் மரண ஓலம்.அங்கு எழுந்த கந்தக வாசம். ஓடிய ரத்த ஆறு என்று அந்த இடம் ஒரு மினி சிரியா வாகி போனது.

ரோம கால்கள் பயத்தில் 90 டிகிரி அட்டென்ஷனில் நிற்க, இதய துடிக்கும் துடிப்பில் எங்கே இதய கூட்டை விட்டே வெளியேறி விடுமோ என்ற நிலையில் தான் அங்கு இருந்தவர்கள் இருந்தார்கள்.

எல்லாமே ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள்.   M249 மாடல் மெஷின் கன் அவை.துப்பாக்கியை பார்க்க மினி சைஸ் பீரங்கி மாதிரி இருந்தால் அதன் புல்லட் !

அந்த துப்பாக்கிகளுக்கு நாங்கள் சளைத்தவர் இல்லை என்று முழங்கின ஸ்டன் கிரனேட், பிளாஷ் பாங்(FLASH BANG ) தங்கள் பங்குக்கு வெடித்து அதிக ஒலியையும், நெருப்பையும் கக்க, காது மட்டும் அல்ல அந்த இடமே அதிர்ந்தது.

முழங்கிய துப்பாக்கிகள் தங்கள் ஆங்கார சத்தத்தை நிறுத்திய பின் அங்கே மயான அமைதி சூழ்ந்து கொண்டது.

சப்த நாடியும் அடங்கும் நிலை, மரண பயம்  என்ற பதத்தை அதுவரை கேள்வி மட்டுமே பட்டு இருந்தவர்கள் அப்படி ஒரு நிலை என்றால் என்ன என்று நடத்தியே காட்டியது அந்த துப்பாக்கிகள்.

‘இன்னும் உயிரோடு தான் இருக்கிறோமா, தங்கள் மேல் புல்லட் இல்லை புல்டோசர் பாய்ந்து இருக்கிறதா?’ என்ற எண்ணமே அந்த நரகத்தில் மாட்டியவர்களின் எண்ணமாய் இருந்தது.

அங்கங்கே தரையோடு நட்பை வெகு தீவிரமாக வளர்த்து இருந்தவர்கள், பெட்டிகளின் பின் மறைந்து இருந்தவர்கள் ஒவ்வொருவராய் தங்களை தடவி பார்த்து,உயிருடன் தான் இருக்கிறோம் என்று உறுதி செய்து கொண்டு தங்கள் தலையை மெல்ல தாங்கள் இருந்த மறைவிடத்தில் இருந்து தூக்கி பார்த்தனர்.

அப்படி தூக்கி பார்த்த சிலரின் நெற்றியை பதம் பார்த்தது மீண்டும் முழங்கிய சில துப்பாக்கிகள்.

மூன்று நிமிடம் ஓயாமல் ஒலித்த துப்பாக்கிகளின் முழக்கம் நின்ற போது தான் ஒளிந்து இருந்த மறைவில் இருந்து எட்டி பார்த்தான் ரணீத் ஜோகி.

‘செத்தாளுக…ஓவர் ரா ஆடினா….’என்ற எண்ணத்துடன் வெற்றி களிப்புடன் தன் தலை நிமிர்த்திய ரணீத், கண்கள் கண்டதை நம்ப முடியாமல் தெறித்து வெளியே விழும் வண்ணம் அகலமாகியது.

கண்களை பலமுறை அழுந்த துடைத்தும் கூட அவன் கண்ட காட்சி மாறவில்லை என்றதும் அவன் வாய் திகைப்பில் தானாக திறந்து கொண்டது.

‘இது எப்படி நடந்தது…?’அந்த கேள்வியே அவன் மனதில் ஓடி கொண்டிருக்க, தான் இருந்த பெட்டியின் மறைவில் பொத்தென்று அமர்ந்தவன் தலையை கைகளில் பிடித்து கொண்டான்.

மூளையே குழம்பி விடும் போலிருந்தது அவனுக்கு.அவன் கண்ட காட்சி குலை நடுங்க வைப்பதாய் மட்டும் அல்ல, எதற்குமே அஞ்சாத அவனையே உறைய வைத்து கொண்டிருந்தது.

அவன் ஆட்களும்,தீவிரவாதிகளின் ஆட்களும் அங்கங்கே கொத்து கொத்தாய், துப்பாக்கி தோட்டாக்கள் சல்லடையாய் உடலை துளைத்திருக்க  உயிர் இழந்து இருந்தார்கள்.

“சோ sad அப்பா….உங்களுக்கு இருக்கும் மூளை உங்க மகளான எனக்கு இருக்காதா என்ன? நான் என்ன இந்த ப்ரீத்தி,ஜெஸ்ஸி மாதிரி லூசா? எந்த பாதுகாப்பும் இல்லாமல் உன்னை பார்க்க வர?உன்னுடன் பேச்சு கொடுத்து கொண்டு இருந்தது கூட இந்த நாட்டு ராணுவம் பொசிஷன்னுக்கு வர தான்.” என்ற டாலி ஒரு பெட்டியின் மறைவில் இருந்தாள்.

அவளுடன் தரையில் இருந்தனர் ப்ரீத்தியும்.ஜெஸ்ஸியும்.

“துப்பாக்கி வெடிச்சா சட்டென்று கீழே படுக்கணும் என்ற அறிவு கூடவா உங்க ரெண்டு பேருக்கும் இல்லை. அப்படியே சிலை மாதிரி நிக்கறீங்க.

நான் இருந்ததால் உங்க ரெண்டு பேரையும் கீழே இழுத்து தள்ள முடிந்தது …இல்லையென்றால் துப்பாக்கி குண்டு பாய்ந்து சல்லடையாய் போயிருக்கும் உங்க ரெண்டு பேரின் உடம்பு…அறிவு இல்லாத லூசுங்க…

இங்கேயே இருங்க…ராணுவம் வரும்…ஜான்சி ராணி வேலை எல்லாம் செய்ய வேண்டாம்….”என்றாள் டாலி .

அங்கே ராணுவத்துடன் தான் டாலி வந்திருக்கிறாள்.ராணுவம் ஆடிய ருத்திர தாண்டவத்தின் பக்க இசை தான் அந்த துப்பாக்கிகளின் முழக்கம்.

துப்பாக்கிகள் முழங்கியதும் அதிர்ந்து நின்ற ப்ரீத்தியையும், ஜெஸ்ஸியையும் கீழே தள்ளி அவர்கள் உயிரை காப்பாற்றியது டாலி.

“நீ எங்கே போறே?”என்றாள் ஜெஸ்ஸி.

“ஹ்ம்ம் என் அப்பா மீண்டும் தப்பிக்க கூடாது இல்லை…அதுக்கு தான்.” என்ற டாலி அவர்கள் இருவரின் மறுப்பை கவனத்தில் கொள்ளாதவளாய் தன் தந்தையை தேடி சென்றாள்.

ஐந்து நிமிடம் தேடிய பிறகும் கூட ரணீத் காணவில்லை.

‘மீண்டும் எஸ்கேப் ஆகிவிட்டனா? இல்லை கோடௌன் ராணுவம் சுற்றி வளைத்திருக்கு. இந்த முறை தப்ப முடியாது.’என்று தனக்குள் பேசி கொண்டு இருந்தவள் திகைத்தாள்.

அவள் பின் மண்டையில் வைக்கப்பட்ட துப்பாக்கியின் முனை அழுத்தத்தால்.

“என்ன மகளே இந்த அப்பாவை காணோம் என்று ரொம்ப தவிச்சு தேடறே போல் இருக்கே. அன்று ஆறு மாத குழந்தையாய் இருந்த போது நான் தப்பிக்க உதவினே. இன்றும் நான் தப்பிக்க நீ தான் உதவ போறே.ராணுவத்தின் எந்த தோட்டா என்னை நோக்கி பாய்ந்தாலும் அது உன் உடலை துளைத்த பிறகு தான் என்னை வந்து அடையும்.”என்றவன் டாலியை கேடயமாய் பயன்படுத்தியவாறு அங்கிருந்த காரை நோக்கி சென்றான்.

“ரணீத் …சரண்டர் ஆகு…இங்கிருந்து தப்ப முடியாது. கோடௌனை ராணுவம் சரௌண்ட் செய்திருக்கு.டாலியை ரிலீஸ் செய்.” என்றான் ரஞ்சித் ஒலிபெருக்கியில்.

அதை அலட்சியம் செய்தவனாய் டாலியை இழுத்து கொண்டு காரின் அருகே சென்றான் ரணீத்.

“ராணுவம் கிட்டே சரண்டர் ஆவது தான் ஒரே வழி உனக்கு….” என்ற டாலியின் கவனம் அந்த காரை நோக்கி வந்து கொண்டு இருந்த உருவத்தின் மேல் பதிய திகைத்து போனாள்.

“இங்கே பாருங்கப்பா…உங்க மகளாய் கேட்கிறேன்….ப்ளீஸ் சரணடையுங்க…” என்றாள் டாலி குரலில் அத்தனை வருத்தம் .

“என்ன மகளே ரொம்ப பாசம் வழியுது….டோன்ட் ஒர்ரி.நீ செய்த வேலைக்கு அத்தனை சுலபமாய் எல்லாம் உன்னை சாகடிக்க மாட்டேன்.அணு அணுவாய் சித்திரவதை செய்து உன்னை கொல்வேன்….

உங்க அம்மா உன்னை பெத்தவ…பசங்க தன் கண் முன்னே இறக்கும் போது கதறி துடித்தால் பாரு…என்னை எதிர்ப்பவர்களுக்கு அந்த மனவலி தான் தண்டனை.” என்ற ரணீத் கவனம்  திசை திரும்ப, அடுத்த நொடி,

“டாலி கெட் டவுன்.”என்ற ப்ரீத்தியின் குரல் எதிரொலித்தது.

டாலி தன் தலையை குனிந்து கொள்ள ரணீத் மீது ஒரு திரவம் வந்து விழ அடுத்த நொடி அந்த கோடௌன் முழுவதும் பெர்பியூம் வாசம் நிறைந்தது.

அடுத்த நொடி ரணீத் அலற ஆரம்பித்தான் நெருப்பு அவனை சூழந்ததால்.

 

எல்லா வாசனை திரவியங்களிலும், ‘எதைல்ஆல்ககால்’ என்ற வேதி பொருள் இருக்கும். அதிலும் ஜெஸ்ஸியின் பெர்பியூம் பாட்டில் அதிகளவில் ஆல்ககால் கன்டென்ட் நிரம்பியது.

அதை ரணீத் முகத்தில் ஊற்றி நெருப்பு குச்சியினை கிழித்து போட அவன் உடையுடன்,அவன் முகமும் பற்றி கொள்ள ஆரம்பித்தது.

ப்ரீத்தி ஊற்றி இருக்க, டாலி லைட்டர் கொண்டு நெருப்பை உருவாக்கி இருக்க, அதிக ஆல்கஹால் கொண்ட அந்த பெர்பியூம் பற்றிய எரிய தொடங்கியது.

நெருப்புக்கு என்றுமே அகோர பசி இருந்து கொண்டே இருக்கும். நெருப்பின் நண்பன் பெட்ரோல், ஆல்கஹால்.பிடித்த உணவு துணி, தலை முடி.

நெருப்பின் நண்பனை ப்ரீத்தி கொடுத்திருக்க, டாலி நெருப்பை உருவாக்கி இருக்க, ரணீத் தலைமுடி, முகம், துணி என்று எல்லா இடத்திலும் நெருப்பு வெகு வேகமாய் பரவியது .

ரணீத் அலறல் சப்தம் அந்த கோடௌனில் எதிரொலிக்க அவனுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

ப்ரீத்தியின் கையில் இருந்த அந்த பெர்பியூம் பாட்டில் வாங்கிய டாலி அது தீரும் வரை பற்றி எரிந்து கொண்டிருந்த ரணீத் மீது அடித்து கொண்டே இருக்க, தீ வெகு வேகமாய் அவனை ஆக்கிரமித்தது.

அத்தனை வருடம்  தன் முகத்தை மூடி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தாயின் அந்த கொடிய நரகத்திற்கு, அவரை போல் பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தாரை இழந்து தவிக்க காரணம் ஆன ரணீத் என்ற அரக்கனின் சுவடு அங்கே அழிக்கப்பட்டது.

“பாரேன் வெறும் பெர்பியூம் தானே,வாசனை திரவியம் தானே என்று எண்ணியது எப்படி ஒரு அரக்கனை அழிக்க பயன்படுகிறது என்று.

சிறு துரும்பு கூட ஆயுதமாய் தான் மாறும்.அது பயன்படுத்தும் பெண்களின் கையில் தான் இருக்கிறது.”என்ற டாலி,

“என் அப்பாவின் நினைவு சின்னமாய் தான் இதை எப்பொழுதும் என்னுடன் வைத்திருந்தேன். ஆனால் கையில் வைத்திருந்த லைட்டர் தான் ஒரு அரக்கனை கொன்று பஞ்சாபில் தீபாவளி வரவே காரணமாய் இருக்கிறது.”என்ற டாலி அந்த லைட்டரை பற்றி எரியும் நெருப்பில் தூக்கி எறிந்தாள்.

பற்றி எரிந்து கொண்டிருந்த ரணீத் ஜோஜியின் உடலில் இருந்து உயிர் பறவை பிரிந்து சென்றிருக்க, அதன் அருகில் சென்ற ரஞ்சித் எதற்கும் இருக்கட்டும் என்று துப்பாக்கியில் சுட்டு அவன் மரணத்தை உறுதி படுத்தினான்.

அங்கிருந்த போதை மருந்து குழுவும், தீவிரவாத குழுவும் நிர்மூலமாக்க பட்டு இருக்க, மீதம் யாரேனும் உள்ளார்களா என்று அந்த நாட்டு ராணுவம் தேட, ரஞ்சித் உடன் வந்து நின்றான் அவன்.

“ரஞ்சித் இவன் தீவிரவாதி…”என்ற ப்ரீத்தியை தடை செய்த ரஞ்சித்,

“இவன் நான்கு வருடமாய் அண்டர் கவர்ரில் தான் தீவிரவாத குழுவுடன் இருக்கிறான். பஞ்சாப் ஹாஸ்பிடல் பாம், அர்ஜுன் சுடப்படுவது என்று பல தகவல் கொடுத்தது இவன் தான்.” என்றான்.

“இந்தா பிடி ரஞ்சித் ரணீத் எங்கே யாருடன் தொடர்பு இருக்கு. அவன் பேங்க் அக்கௌன்ட் எல்லாம் இந்த பென்ட்ரைவில் இருக்கு. இன்னும் நீ பிடிக்க வேண்டிய ஆட்கள் நிறைய இருக்காங்க. இந்த கோடௌனில் இருக்கும் போதை மருந்து, துப்பாக்கி எல்லாம் யார் கைக்கும் போக கூடாது.சோ இந்த இடத்தை பாம் வைத்து தகர்க்க போகிறோம்…நீங்க கிளம்புங்க.” என்றான் அவன்.

“அப்போ நீ?”என்றான் ரஞ்சித்.

“இந்த ஷூட் அவுட்டில் தப்பியது சைத்தான் மட்டும் தானே!அவனுடன் போனால் தான் இந்தியாவை தகர்க்க என்ன எல்லாம் பிளான் போட்டு இருக்காங்க என்று தெரியும்…ஒரு ஸ்மால் அடைவஸ் ….

இதற்குரிய ட்ரைனிங் இல்லாத பெண்களை துண்டில் புழுவாக பயன்படுத்தாதே… கிளம்புங்க.”என்றவனின் ராணுவ ஆட்கள் அந்த கோடௌன் தகர்க்க பாம் வைக்க,ப்ரீத்தி,ஜெஸ்ஸி டாலியுடன் கிளம்பினான் ரஞ்சித்.

இவர்களை சுமந்த கார் அந்த காம்பௌண்ட் தாண்டியதும் வெடித்து சிதறியது அந்த கோடௌன்.

பற்றி எரிய தொடங்கியது காபோஸ் என்பவனால் உருவான போதை மருந்து சாம்ராஜ்யம்.பல பில்லியன் டாலோர் மதிப்பிலான போதை மருந்து, நாட்டை துண்டாட இருந்த துப்பாக்கிகள் நெருப்புக்கு பலியானது.

பல குடும்பங்களில் மரணத்தை  ஏற்படுத்தியவனும், அவன் உருவாக்கி ஆட்டி படைத்த போதை மருந்து சாம்ராஜ்யமும்  பிடி சாம்பலாய்.

மூன்று நாள் கழித்து

தொடர்புடைய படம்

 

அந்த இரவு நேரத்தில் அந்த வீடு என்று சொல்வதற்கு பதில் மினி சைஸ் மாளிகை என்று தான் சொல்ல வேண்டும் தன் கம்பிரத்துடன் உயர்ந்து நின்று கொண்டு இருந்தது.

அழகிய பூந்தோட்டம், அலங்கார ஊஞ்சல்,பளிங்கு சிற்பங்கள் என்று அழகாய் இருந்த மாளிகை அங்கு நடந்து கொண்டு இருந்த ஒன்றிற்கு மௌன சாட்சியாய் நின்றது.

அந்த தெருவே உறக்கத்தில் இருக்க, ஒரு வித நிசப்தம் சூழ்ந்து இருந்தது. கீழே நடப்பதை காண விரும்பாத நிலா மகள் மேகம் என்னும் போர்வைக்குள் தன்னை மறைத்து கொண்டு சிறு குழந்தை போல் எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தாள்.

அந்த தெருவில் நிழலோடு நிழலாய் சிலர் நிற்க, இன்னும் சிலர் அந்த தெருவை நோட்டம் இட்டவாறு சுற்றி கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கையில் ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தங்களை நெருங்குவது ஆபத்து என்று சொல்லாமல் சொல்லி கொண்டு இருந்தன.

வீல் ….

அடுத்த நொடி இதய துடிப்பை நிறுத்தும் வண்ணம் அந்த அலறல் அந்த மாளிகையில் இருந்து எழுந்தது.அடுத்த நொடி பலர் திபுதிபுவென்று சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினார்கள்.

அவர்கள் காலடி எழுப்பிய  ஓட்டத்தின் சத்தம் அந்த மாளிகையையே கிடுகிடுக்க வைத்தது.

அறையின் கதவு உடைக்கப்பட்டது. பல துப்பாக்கிகள் அங்கிருந்தவர்கள் நோக்கி நீண்டது.எந்த கணமும் மீண்டும் கோடௌன் சிச்சுவேஷன் மீண்டும் ஒளிபரப்பாகும் சூழல் அங்கு நிலவியது.

துப்பாக்கியுடன் அறைக்குள் நுழைந்தவர்களும், உள்ளே துப்பாக்கியுடன் வந்தவர்களை கண்டு அறைக்குள் இருந்தவர்களும் ஒருவரை ஒருவர் கண்டு திகைத்து நின்றார்கள்.

“இட்ஸ் நத்திங்…அவங்க என் பிரெண்ட்ஸ்…யு கேன் கோ நௌ.” என்றான் அர்ஜுன்.

“சார் ஆர் யூ சூர்?”என்றான் அர்ஜுனின் தலைமை பாதுகாவலன்,  அவன் இருந்த நிலையை கண்டு எழுந்த சிரிப்பை மறைத்து கொண்டு.

“எஸ் …யு கேன் கோ…”என்றான் அர்ஜுன் அசடு வழிந்தவாறு.

அவர்கள் அங்கிருந்து விலக, “ஏன்டா அப்படி அலறின எருமை மாடே?” என்றான் விஜய்.

 

“நீ ஏண்டா நான் அலறுவது மாதிரி அடிச்சே பிசாசே?’என்றான் அர்ஜுன்.

“பின்னே நீ செய்து வைத்திருக்கும் வேலைக்கு உன்னை தூக்கி மடியில் வைத்து கொஞ்சுவாங்களா என்ன?”என்றான் சூர்யா கடுப்புடன்.

“சூர்யா உன் மடியில் நான்.யோசித்து பார்க்கவே படு கேவலமாய் இருக்குடா.” என்றான் அர்ஜுன்.

“அடேய்….இவனை….”என்று பாய்ந்த விஜய், சூர்யாவை வெகு சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினார்கள் மதுராவும் ரஞ்சித்தும்.

“டேய் ரஞ்சித் இவனுங்களை கூட்டி போடா…அதுவும் இன்னைக்கு என்ன நாள….மரமண்டைங்க..வச்சி செய்துட்டு இருக்கானுங்க… மூன்று நாளாய் என்னை கவனிச்சுட்டே இருந்தீங்களே போதாதா?

அந்த அமன் இந்நேரம் ஜெஸ்ஸியுடன் டூயட் பாடிட்டு இருப்பான்…பல மாசமாய் அவளை கண்ணில் கூட பார்க்கலை டா….டேய் நான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் டா… அதுக்காவது மரியாதை கொடுங்கடா…மிடிலை வலிக்குது… அழுதுடுவேன்…”என்ற அர்ஜுன் பட்டு வேட்டி சட்டையில் வெகு கம்பிரமாய் இருந்தான்.

அவர்கள் இருந்த அறை மலர்களால் அலங்கரிக்க பட்டு இருக்க அதற்கு சற்றும் பொருந்தாத வகையில் கையில் உருட்டு கட்டையுடன் நிண்டு இருந்தார்கள், ‘பாச மலர் பிரதர்’ இருவர்.

“யாரை கேட்டுடா எங்க தங்க தங்கச்சி, எங்கள் குல விளக்கு, எங்க ரத்தத்தின் ரத்தம், கழுத்தில் பஞ்சாப் அம்ரித்சர்ஸ் பொற்கோயிலில் நாங்க இல்லாமல்,வைர நகை போடறேன் என்ற பெயரில் தாலி கட்டி இருப்பே நீ..

.நீ முதலமைச்சராக இருந்தால் என்ன ப்ரைம் மினிஸ்டர்ராகவே இருந்தால் எங்களுக்கு என்ன?”என்று எம்பி அடித்தான் விஜய் .

“பஞ்சாப் பொற்கோயில் சென்ற போது இந்த திருட்டு பயபுள்ள வைர நகையுடன் கருப்பு மணியை கோர்த்து பஞ்சாப்  வழக்கப்படி, கடவுள் முன்னிலையில் திருமணம் முடித்து இருக்கிறான்.

ப்ரீத்திக்கு யாரும் இல்லை என்று உனக்கு நினைப்பா? இதற்கு உடந்தை அந்த பெரிய மனுஷன் அமர்நாத். அந்தாளு என் கையில் சிக்கட்டும்…அம்மி கல்லை அந்த சொட்டை தலையில் தூக்கி ஒரே போடாய் போடுறேன்.”என்று எகிறினான் சூர்யா.

“அடேய் பாசக்கார பிரதர்ஸ் அதான் இன்னைக்கு தமிழ்நாட்டு முறைப்படி யாகம் எல்லாம் வளர்த்து வடபழனி முருகன் கோயிலில் ஊர் அறிய உலகம் அறிய திருமாங்கல்யம் கட்டிட்டேன் தானே…இன்னும் என்னடா?

ஏற்கனவே பலமாசமாய் கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரியாய் இருக்கேன்…நான் பாவம் டா…இன்னைக்கு எனக்கு முதராத்திரி டா….என் பொண்டாட்டி வரணும்…தடிமாடுங்க நீங்க வந்து நின்னுட்டு என் உசுரை வாங்கிட்டு இருக்கீங்க.ஏண்டா “என்று அழுதுவிடும் குரலில் கேட்டான் அர்ஜுன்.

“யாரை கேட்டு?”என்று விஜய் ஆரம்பிக்க,

“அடபோங்கடா….நான் பஞ்சாப் கிளம்பறேன்…”என்று எழுந்தான் அர்ஜுன்.

“எங்க cm சார் அவ்வளவு அவசரமாய் கிளம்பறீங்க?”என்ற குரல் அர்ஜுனை தேக்கியது.

 

அங்கே சர்வாலங்கார பூஷிதையாய் நின்ற ப்ரீத்தி அர்ஜுன் மூச்சினை நிறுத்தினாள்.

விஜய், சூர்யா தொண்டை தண்ணீர் வற்ற கத்த, ப்ரீத்தியும் அர்ஜுன்னும் அதை கவனித்தால் தானே!

விஜய், சூர்யாவை இழுத்து கொண்டு வெளியே வந்த மதுரா, “டேய் ஜில்லா கேடிங்க நிறுத்துங்கடா உங்க நடிப்பை…அது எப்படி நான் அடிப்பது போல் அடிப்பேன்..நீ அழுவது போல் அழு என்று அர்ஜுனை காப்பாற்றும் உங்க கிரிமினல் வேலை எல்லாம் தெரியாது என்று நினைக்க வேண்டாம்….”என்றாள் மதுரா நக்கலாக.

“நான் சொல்லலை சூர்யா…மது எவ்வளவு புத்திசாலின்னு …பாரு க்ரெட்டா கண்டு பிடிச்சுடுச்சு என் செல்லம்..”என்று வழிந்தான் விஜய்.

“வழியுது ….ஓவர் ஆக்ட்டிங்…”என்றாள் மது அசராமல்.

“என்ன செல்லம் செய்யுறது ….பயபுள்ள என் வேலையை அப்படியே காபி அடிச்சு ப்ரீத்தி கழுத்தில் தாலி கட்டிட்டானா? உங்க கையில் சிக்குனா பபுள்ளை சிக்கன்  65  ஆகிடும் அதான் ஒரு பாசத்தில்…செல்லம் ராசாத்தி கண்னு குட்டி …பசங்க தூங்கிட்டாங்க போல் இருக்கே…”என்று விஜய் கிட்டே வந்து காதில் ரகசியம் பேச செங்கொழுந்தாகி போனாள் மதுரா.

“ஆரம்பிச்சுட்டாங்கய்யா …ஆரம்பிச்சுட்டாங்கையா…”என்று புலம்பியவாறு ஓடி போனார்கள் சூர்யாவும்,ரஞ்சித்தும்.

அதே சமயம் உள்ளே அறையில் அர்ஜுன் மார்பில் தலை வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

அவள் தலையின் மேல் தன் தலையை சாய்ந்தவாறு நின்றிருந்த அர்ஜுன் கூட அதே மனநிலையில் தான் இருந்தான்.

இருவர்க்கும் தங்கள் சரி பாதியை அடைந்து விட்ட நிம்மதி.

“கோபமா அர்ஜுன்?”என்றாள் ப்ரீத்தி.

“எதுக்குடா?”என்றான் அர்ஜுன்.

“உங்களை ரொம்ப படுத்தி எடுத்துட்டாங்களா விஜய் அண்ணாவும், சூர்யா அண்ணாவும்?”என்றாள் ப்ரீத்தி.

“பின்னே பாசக்கார அண்ணன்கள் ஆச்சே….மூன்று நாளாய் அவனுங்க அடிச்ச வேப்பிலையில் தலை சுத்தி போச்சு…ஆனா யு ஆர் லக்கி டீ… இப்படி ஒரு தோழிகளை பெற….

என்னமாய் போட்டு வறுத்து எடுத்தாங்க தெரியுமா யாரை கேட்டு உன்னை பஞ்சாபில் திருமணம் செய்தேன் என்று…உனக்கும் கோபமா?

பெண் மாறி இருக்குன்னு மாமா சொன்னதும் எனக்கு டென்ஷன் ஆகிடுச்சு…அப்போ தான் அமன்ஜீத் உன் கிட்டே லவ் சொன்னதை கேட்டேன்….பிபி எகிறி போச்சு…எனக்கும் மனசு சரியில்லை.

எதோ கெட்டது நடக்க போகுதுனு மனசு சொல்லிட்டே இருந்தது.அதான் எதையும் யோசிக்காமல் அவரை வைத்து வைர நகையில் தாலியை வைத்து கட்டிட்டேன்….சொத்துக்கு சைன் என்று சொல்லி ரெஜிஸ்டர் பண்ணிட்டேன் திருமணத்தை. சொல்லு உனக்கு கோபமா செல்லம். “என்றான் அர்ஜுன்.

‘இவன் லொள்ளை பாரேன் …மலை பாம்பு மாதிரி கட்டி பிடிச்சுட்டு கோபமா என்கிறான்’ என்று மனதிற்குள் சொல்லி கொண்ட ப்ரீத்தி,

“எனக்கு இந்த விஷயம் அப்பொழுதே தெரியும்..மாமாவை நீங்க சுவரோடு சுவராய் வைத்து அழுத்தும் போதே நான் அங்கே தான் இருந்தேன்…

எனக்கும் அப்போ நீங்க செய்தது தான் சரி என்று தோன்றுச்சு… எனக்கும் மனசு எதோ சொல்லிட்டே தான் இருந்தது.அதே போல் ஜெஸ்ஸி மேல் குண்டு பாய்ந்ததும் வெலவெலத்து போச்சு. உங்களை கொல்ல தான் ட்ரை என்றதும் உயிரே போய்டுச்சுடா.” என்றாள் ப்ரீத்தி தன் இறுக்கத்தை அதிகரித்து அவனுள் புதைந்து விடுவதை போல்.

“ரிலாக்ஸ் ப்ரீத்தி…இது சகஜம்.இது மாதிரி இன்னும் பல நடக்கலாம். இன்னும் மாநிலத்தை காக்க நாம் போக வேண்டிய பாதை அதிகம். தூரம் அதிகம்.”என்றான் அர்ஜுன்அவள் நெற்றியில் இதழ் பதித்தவனாய்.

“ஆனா சாரி டா ஸுல்பா விஷயம் உன் கிட்டே சொல்லாதது. விர்து அத்தை அவங்க இல்லை என்றதும் …”என்றவள் இதழில் விரல் வைத்து தடுத்த அர்ஜுன்,

“நம்ம குடும்பத்தை பொறுத்தவரை அவங்க விர்து அத்தை தான். அவங்களை அப்படி தான் பாட்டி பார்த்தாங்க.வன்சினி அத்தை பார்த்தாங்க.தாத்தா அப்படி தான் பார்க்கிறார்.

டாலி அவங்க மக தான் என்று நீ கண்டுபிடிக்கவில்லை என்றால் அவங்க ரெண்டு பேரின் வாழ்வும் சூனியமாய் போயிருக்கும். டாலி இத்தனை வருடமாய் தேடி கொண்டிருந்த பாசம் அவளுக்கு கிடைத்து விட்டது. அத்தைக்கும் அவங்க வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து விட்டது.அது போதும்.”என்றவன் தன் அணைப்பை நீக்கவில்லை.

அங்கே ஒரு தாய்க்கு மகளும், மகளுக்கு ஒரு தாயும் கிடைத்த நிம்மதி.

“ஹ்ம்ம் வாஸ்தவம் தான்…இனி அவங்க வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை.இது நாள் வரை பாசத்திற்காக ஏதேதோ செய்து கொண்டிருந்தாள் டாலி.

உண்மையில் அவ பாவப்பட்ட பிறவி. அவ மட்டும் இல்லை ஸுல்பா போன்ற பாலியல் அடிமைகளும் தான்.மனித மனதின் வக்கிரம் எப்படி எல்லாம் வாழ்வை அழிகிறது பாரு.

பணம், புகழ்,சதை வெறி….கடவுளே.சின்ன பசங்களை விட்டு வைக்கலியே.”என்ற அர்ஜுன் இவர்களை காக்க என்னவெல்லாம் திட்டம் போட்டு இருக்கிறார்கள் என்று விவரித்தான்.

அர்ஜுன் சொன்னதை கேட்டு அதில் இருந்த சந்தேகங்களை கேட்டு, சில ஐடியா கொடுத்த ப்ரீத்தி,

“உண்மை தான் டாலி போன வழி தவறானது என்றாலும் எல்லாத்துக்கும் பிராயச்சித்தம் செய்துடா. யோஜித் அண்ணா அவளை மணக்க கேட்டு இருப்பது ஸ்வீட் சர்ப்ரிஸ் தான் இல்லையா?”என்றாள் ப்ரீத்தி.

“யோஜித் நிறைய போராட வேண்டி வரும் ப்ரீத்தி.அத்தனை சுலபம் அல்ல அவள் மனகாயம்.எல்லோரும் இருக்கோம் இல்லை பேசி பேசி கரைப்போம்….அதுவும் மது,விஜய், சூர்யா, நீ, மயூரி என்று உன் காங்க் களம் இறங்கினால் அடுத்த வருடம் யோஜித் பள்ளிக்கூடம் வாசலில் பிள்ளைகளுக்கு சீட்காக நிற்க வைத்துவிட மாடீங்க?” என்ற அர்ஜுன் மார்பினை வலிக்காமல் குத்தியவள்,

“இப்போ நினைத்தாலும் எல்லாம் கனவு போலிருக்கு அர்ஜுன்.” என்றாள் ப்ரீத்தி.

“எதுடா பேபி?”என்றான் அர்ஜுன் ப்ரீத்தி கன்னம் என்னும் புதை குழியில் ஆழ அமிழ்ந்தவனாய்

“நடந்தது எல்லாம் தான் …”என்றாள் ப்ரீத்தி.

“ஊரு விட்டு ஊரு யார் வேண்டும் என்றாலும் போகலாம் ப்ரீத்தி.அப்படி போகும் போது அங்கே நாம் சந்திக்கும் நபர்கள், நாம் எடுக்கும் முடிவுகள் பலர் வாழ்வை மாற்றி விடும் என்று உணர்ந்தால் போதும்.சுயநலம் இல்லாத எந்த முடிவும் பலரை வாழ வைக்கும் என்பது உன்னால் நிரூபணம் ஆகியிருக்கு டா..”என்றான் அர்ஜுன்.

“இன்னொன்று கூட நிரூபணம் ஆகியிருக்கு.”என்றாள் ப்ரீத்தி வெகு சீரியஸ்சாக.

“என்னடி அது ?”என்றான் அர்ஜுன் அவள் முகத்தை கண்டு குழப்பத்துடன்.

“ஹ்ம்ம் உனக்கு மண்டையில் மசாலா சுத்தமாய் இல்லை என்பது..”என்ற ப்ரீத்தி அவனை விட்டு விலகி நின்று தன் போனை இயக்க அது ,

“முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா?

ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா?

வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா

முதல்வா!…முதல்வா!…முதல்வா!

கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்,

உலகம் வாழ நிதி ஒதுக்கு, என் உயிரும் வாழ மடி ஒதுக்கு

பள்ளிவாசல் திறந்தாய், பள்ளி திறந்தாய், பள்ளியறை வர நேரமில்லையா?

ஆசைப்பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமோ?

வேந்தனே!…வேந்தனே! உந்தன் வரம் வருமோ?

முதல்வா வா முதல்வா

முதல்வா வா முதல்வா

முதல்வா வா முதல்வா

முதல்வா முதல்வா.”என்று அது பாட,

“மண்டையில் மசாலா இல்லாத முதல்வன் தான் டா நீ…” என்றவள் புள்ளி மானாய் ஓட,அவளை துரத்தி ஆரம்பித்தான் அவளின் தலைவன்.

வளையல் ஓசை கேட்டவாறு, அங்கே முத்த நிவாரணம் வழங்க, முந்தானை கொடியேற்ற அங்கே இரு உள்ளங்கள் திருமணத்தின் அடுத்த அடியெடுத்து வைத்திருந்தன.

அவர்களின் இந்த காதல் யுத்தம்  மட்டுமல்ல, பஞ்சாப் என்ற மாநிலத்தில் போதை மருந்துக்கு எதிரான இவர்களின்  யுத்தமும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும்.

பயணங்கள் இனிமையானது.

சில  பாதைகள் முற்கள் நிரம்பியது.சில மலர் பாதை.

மற்றவர் வாழ்வில் இருக்கும் முள்ளை எடுத்து பூந்தோட்டமாய் மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

இந்த இரு உள்ளத்தின் பயணம்  காதலுடன் கடமையும் கலந்து சென்று கொண்டே இருக்கும்.

முற்றும்.

 

error: Content is protected !!