kaamyavanam13

kaamyavanam13

காம்யவனம் 13

ப்ரத்யும்னனின் காத்திருப்பை அதிகப் படுத்தாமல் ஓட்டமும் நடையுமாக ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தாள். மஹதி அவளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பொறுமையாகவே வரமாயா அங்கே கரையோரத்தில் துணிகளை வைத்துவிட்டு ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் அவனைத் தேட ஆரம்பித்தாள்.

மென்மையாக சிரித்தவன்அவளை அலையவிடாமல் சட்டென அவளது முன் வந்து நின்றான். அவனது அந்த திடீர் பிரசன்னத்தால் அவன் மேலே மோதிவிட்டாள்.
மோதியது அவன் தான் என்று தெரிந்ததும் இதயத் துடிப்பு அதிகமானது.
அதிர்ந்து அவனைப் பார்க்கஅவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நீங்களா..!” உள்ளத்தை மறைத்து சிடுசிடுப்பாக அவனிடம் கேட்க,
நீ என்னைத் தேடித் தான் வந்தஅப்புறம் எதுக்கு இந்த பொய் கோபம்?” இவளைப் போலவே கொச்சைத்த தமிழில் பேசினான்.
அவன் சொன்னதற்கு பதில் தராமல்அவன் பேசிய தமிழில் அதிசயித்து அவனைப் பார்த்தாள்.

என்னை மாதிரி பேசறீங்க. நேத்து வரைக்கும் சுத்தத் தமிழ்ல பேசிட்டு இருந்தீங்க?” அவனிடமே கேட்க,

எப்படி பேசினா உன்கிட்ட நெருங்க முடியுமோ அப்படி பேசறதுல என்ன தப்பிருக்கு மாயாஉனக்கு என்னைப் பத்தி புரியவைக்கணும். அதை விட முக்கியமா உன்னைப் பத்தி தெரியவைக்கணும்.” உண்மையைக் கூறினான்.

ம்ம்ம் சரி பார்ப்போம் எப்படி புரியவைக்கறீங்கன்னு.” அலுத்துக் கொண்டு திரும்பி நடந்தாள்.
அவனும் அவளோடு நடந்து வந்தான்.

நீங்க எங்க வரீங்கஇப்போ மஹதி வந்துடுவா.” அவசரமாக அவனைத் தடுக்க,
அவ இப்போதைக்கு வரமாட்டாஅப்படியே வந்தாலும் அவ கண்ணுக்கு நான் தெரியமாட்டேன். உனக்கு மட்டும் தான் தெரிவென்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்.சரி அதைவிடுஎன்னைப் பார்க்கத் தான இவ்வ்ளோ வேகமா வந்த?” முதல் கேள்வியில் அவளைக் கொக்கி போட்டுப் பிடித்தான்.

அவளோ,” அது..அது… நேத்து மாதிரி நீங்க எங்கயாவது இருந்தா மகதிக்கு தெரிஞ்சிடுமேன்னு பாத்தேன். அவ்ளோ தான்” அவசரமாக சமாளித்தாள்.
அதை ரசித்த ப்ரத்யும்னன் அவனது முத்துப் பல்வரிசை தெரிய அழகாகச் சிரித்தான்.
அவனது தோற்றத்தில் மெய் மறந்து போனாள். அழகு, திண்மை, ஆண்மை என அனைத்திலும் சிறந்த ஒருவனை இப்போது தான் அவள் காண்கிறாள்.

“அப்போ நான் சொன்னது உறுதியாயிடுச்சு.. ஹ்ம்ம்” என குனிந்து அவள் முகத்தை நோக்க, அவமானமா வெட்கமா எனப் புரியாமல் அவள் தவித்தாள்.

அதற்குமேல் அவளை சங்கடப் படுத்தாமல் அவளது கரம்பற்றி,

“அது ஒரு பெரிய விஷயமில்ல. நான் சொல்றத கொஞ்சம் கேளு. நான் நேத்து சொன்னது மாதிரி, உனக்கு நீ தான் ரதின்னு புரியவைக்கணும். எனக்கும் உனக்கும் இடையில இருக்கற பந்தத்தை இங்க இருக்கற சில சமையல் வஸ்துக்களோட பினச்சிருக்கேன்னு சொன்னேனே அது உனக்கு ஞாபகம் இருக்கா?” பொறுமையாகக் கேட்டான்.

“ம்ம் ஞாபகம் இருக்கு. உங்களுக்கும் ரதிக்கும் நீங்க செஞ்சுவச்ச பிணைப்பு” அவள் தன்னை ரதியென்று இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை உறுதி செய்தாள்.

அதை பிரத்யும்னன் கவனிக்கவே செய்தான்.

“ம்ம் சரி. எனக்கும் என்னோட உயிரான ரதிக்கும். போதுமா?” கோபமில்லாமல் அவள் மனதை அறிந்தே கூற,

“ஆங்..” என்றாள்.

“அந்த ரதி நீ தான்னு நான் தெரிஞ்சுக்க சில வழிமுறைல அந்த வஸ்துக்களை உன்னோட நான் சேர்க்கணும். அப்பறம் தான் அது நீயா இல்லையான்னு உறுதியா சொல்ல முடியும். அதுக்கு எனக்கு நீ ஒத்துழைப்புத் தருவியா?” நடப்பதை நிறுத்திவிட்டு அவள் முகம் பார்த்து அவளது பதிலுக்காகக் காத்திருந்தான்.

ஏனெனில் அவளுடன் அவை அனைத்தையும் சேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. அது அவளின் உடலைத் தீண்டி அவளது உணர்வுகளை தூண்டும் ஒரு விஷயம். அப்படி ஒரு விஷயத்தை அவளுக்கு விருப்பமில்லாமல் செய்வது அவளை பலவந்தப் படுத்துவதற்கு நிகராகும். அதனால் அவளிடமே முதலில் அனுமதி பெற வேண்டும் என்று மாயாவிடம் இப்போது பணிவாய்க் கேட்டான்.

அவளுக்கு இதில் இத்தனை சூட்சுமம் உள்ளது என்று தெரியாது. அப்பாவியாய், “என்ன ஒத்துழைப்பு? நான் அதை சாப்பிடனுமா?” எனக் கேட்க,

‘இவளிடம் இதை எப்படி விளக்குவது’ என்று புரியாமல் குழம்பித் தவித்தான் பிரத்யு.

“அதாவது, நான் சொல்லறத நிதானமா கேட்டுப் புரிஞ்சுக்கோ. நான் மாயாவதியை விட்டுப் பிரியும் போது அவளோட என்னை பினைச்சு வைக்கற வஸ்துக்களை அவளோட ஒவ்வொரு அங்கத்திலும் சேர்த்தேன். அது உனக்குத் தெரியும்.

இப்போ மறுபடியும் அதே மாதிரி அதை உன்னோட ஒவ்வொரு அங்கத்திலும்..” அதற்குமேல் அவளிடம் வெளிப்படையாக அவன் கூறவில்லை.

“என்ன!” மிரண்டு விழித்தாள் மாயா.

“என்னை தப்பா எடுத்துக்காத மாயா. வெளிப்படையா சொல்லணும்னா உன்னோட விருப்பமில்லாமல் நான் உன்னோட ஒரு நாளும் சங்கமிக்க மாட்டேன். அது காதலாகாது. ஆனா என்மேல உனக்கு  காதல் இருக்குன்னு இதை விட்டா நிருபிக்க வழியில்லை. அதுனால இதுக்கு நீ சம்மதிக்கிறியா?” அவன் ஒரு தேவலோக ஆடவன் என்பதையும் மறந்து மாயவிற்காக இந்த உலகில் இருப்பவனைப் போல அவளைத் தொட கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அவன் வார்த்தையின் மாய்மாலமோ அல்லது அவனது அந்த கண்ணியமோ அவளை சம்மதிக்க வைத்தது.

“சரி.” என்ற ஒற்றை வார்த்தையில் அவனது உள்ளத்தை மகிழ்வித்தாள்.

“மாயா. ரொம்ப நன்றி. ஒவ்வொரு நாளும் உனக்காக நான் காத்திருப்பேன். நீ பொழுது சாய்ந்த பிறகு இங்கே வா. நான் ஒவ்வொரு வஸ்துவோட உன்னை சந்திக்கிறேன்.” அவன் முகத்திலும் அகத்திலும் சந்தோஷம் பொங்கி வழிந்தது.

“அப்போ நான் கிளம்பறேன்” ஒரு வித மோன நிலை அவளுக்குள் இப்போதே சூழ ஆரம்பித்தது.

“அதுக்குள்ளயா?” அவன் அவளை நிறுத்த,

“பின்ன நாளைக்கு தான நீங்க எடுத்துட்டு வரேன்னு சொன்னீங்க? இன்னிக்கு ஒன்னுமில்லையே!” பிரத்யு வை இன்றும் எதாவது செய்யேன் என்பது போல இருந்தது அவளது தோரணை.

அவளது மனதை நன்றாகப் படித்தவன்,

“இன்னிக்கும் ஒரு சில முன்னேற்பாடு செய்யலாம்.உனக்கு சம்மதம் தானே” அவளது ஆர்வத்தைத் தூண்டினான்.

“என்ன?” விழி விரிய அவன் முன் ஆவலாக வந்து நின்றாள் மாயா.

அவளது அந்த துடிப்படிக் கண்டு இதழோரத்தில் சிரித்தவன்,

“உனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பாட்டு அல்லது விடுகதை சொல்லுவேன். ஆனா நீ அதுக்கு நீ விளக்கம் அல்லது விடை சொல்லணும்.” அவன் முடிக்கும் முன்னரே,

“சொல்லிட்டா..” கண்கள் மின்னக் கேட்டாள்.

“சொல்லிட்டா நீ சொல்லறதை அன்னிக்கு பூரா நான் கேட்டு நடந்துக்கறேன். ஆனா சொல்லனா நான் சொல்வதை நீ கேட்கணும்” கடைசியில் அவளுக்குக் குறி வைக்க,

ஒரு நிமிடம் தயங்கினாலும் பின் ஒப்புக்கொண்டாள்.

“அப்போ இன்னிக்கே நான் ஆரம்பிக்கறேன்.”

அவளோடு நதியில் இறங்கி அமர்ந்துகொண்டான்.

ஓடும் நதிக்கு  நடுவே இரு பாறைகள் அமைந்திருக்க, எதிரெதிரே இருவரும் அமர்ந்து கொண்டனர். காலுக்கடியில் நீர் சலசலத்து ஓடி உள்ளங்காலில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

அவளோ இன்று முக்கால் பேன்ட் அணிந்திருக்க, அவளது வாழைத்தண்டு கால்கள் நீரில் நனைந்து அவனை மையல் கொள்ளச் செய்வதாய் இருந்தது.

அவனது கண்களை மெல்ல உயர்த்தி மெல்லிதாகத் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் அவளது இடை செம்மையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்க, அவனுக்கு சோமபானத்தை பருகாமலேயே போதையை வரவைத்தது.

இன்னும் சற்று மேலே செல்ல துணிவிருந்தாலும் அவளுக்கு கூச்சத்தையோ சங்கடத்தையோ ஏற்படுத்தாமல் அவளது முகத்தைப் பார்த்தான். நேற்று இரவு முழுவதும் பார்த்தும் அவனுக்கு இப்போதும் தெவிட்டவில்லை.

அது தான் அவன் கொண்ட காதல். ஒருநாள் பார்த்ததிலேயே தீர்ந்து விடுமா! இது காலம் காலமாலும் அவள் மேல் இருக்கும் மையல் இம்மியும் அவனுக்குக் குறையாது மாறாக கூடிக் கொண்டே தான் போகிறது என்பதை அவனும் உணர்ந்தான்.

அவளோ அவனைக் கவனிக்காமல் குளிர்ந்த நீரில் ஒரு பக்கமாகச் சாய்ந்து தன் கையால் நீரினை அளாவிக் கொண்டிருந்தாள்.

அவன் எதைப் பார்க்க சங்கடப் பட்டு முகத்தை திருப்பினானோ இப்போது அதுவே அவனுக்கு என்னைப் பார்க்காமல் போகாதே என்பது போல அவளது சிறிய டீஷர்ட்டின் மூலம் அவனுக்குக் காட்சி தந்தது.

அவளது அழகை மெல்ல கண்களால் பருகினான். காமனுக்கே காமவெறி உண்டாகினாள் மாயா.

சிறிதுநேரம் தண்ணீரை தெளித்து விளையாடியவளை தன் மடியில் வைத்துக் கொஞ்ச துடித்தது அவன் மனது.

‘உன்னை நேரில் வைத்துக் கொண்டு என் கைகளை கட்டிப் போட்டுவிட்ட காலத்தை சபிக்கிறேன் ரதி.’ மனதில் இந்த ஒரு சூழ்நிலையை வெறுத்தான்.

‘உனக்கு எவ்வளவு சீக்கிரம் என்மேல் காதல் என்பதை நான் உணர்த்துகிறேனோ அவ்வளவு நல்லது உனக்கும் எனக்கும். என்னை வெறி கொள்ள வைத்துவிடாதே என்னவளே! உனக்காகவே நான். எனக்காகவே நீ!’

“ஐ தேய்ந்தன்றுபிறையும் அன்று
மை தீர்ந்தன்று, மதியும் அன்று
வேய் அமன்றன்று, மலையும் அன்று
பூ அமன்றன்று, சுனையும் அன்று
மெல்ல இயலும், மயிலும் அன்று
சொல்லத் தளரும், கிளியும் அன்று”

அவளைப் பார்த்து மெல்ல பாடினான் பிரத்யும்னன்.

அவனது குரலில் மயங்கினாள். அந்த பாடலின் வரிகள் முதலில் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“ இது உன்னைப் போல ஒரு பெண்ணை ரசித்த ஒருவன் பாடிய பாட்டு.” அவளது பார்வைக்கு பதில் சொன்னான்.

“இதை நான் படிச்சிருக்கேன்.ஆனா என்ன பாட்டுன்னு ஞாபகம் வரல.” அவள் கன்னத்தில் கை வைத்து யோசிக்க,

“இதன் பொருள்,

உன் நெற்றி வியக்குமாறு தேய்ந்தது
ஆயினும் பிறையுமல்ல!
உன் முகம் மறுவற்றுள்ளது
ஆயினும் நிலவுமல்ல!
உன் கண், மலர் போலுள்ளது
ஆயினும் மலருமல்ல!
நீ அது பிறக்கும் சுனையுமல்ல
உன் சாயல் மெல்லென அசைவதே
ஆயினும் நீ மயிலுமல்ல!
நீ சொல்லுக்குச் சொல் தளர்கிறாய்
ஆயினும் நீ கிளியுமல்ல!

உன்னை இப்போ ரசிச்ச  எனக்கும் இது தான் தோணிச்சு.” சிறிதும் யோசிக்காமல் சொல்லிவிட்டான்.

அவள் அந்த கவிதையின் பொருளை தெரிந்து கொண்டபின், இவை தன்னைக் குறித்து அவன் சிந்தித்தது என்று புரிந்தபின், வெட்கமும் புரிதலும் போட்டி போட்டுக் கொண்டு அவள் முகத்தின் அழகை மேலும் ரம்யமாக்கியது.

உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு,

“சரி சொல்லுங்க..?” எனக் கேட்க,

“ஏற்கனவே சொல்லிட்டேனே! அதுக்கு நீ விளக்கம் சொல்லல.நான் தான் சொன்னேன். அதுனால நான் சொல்வதை நீ இன்னிக்குக் கேட்கணும்.” முடித்துவிட்டான்.

“இது போங்கு. நான் ஒத்துக்கமாட்டேன். நீங்க ஆரம்பிக்கறேன்னு சொல்லவே இல்ல.” சிறிபிள்ளை போல கையை ஆட்டி அவள் பேசுவதைப் பார்க்க, அவனுக்கு அவள் மேல் மோகம் பொங்கியது.

“நான் அங்கிருந்து கூட்டிட்டு வரப்ப என்ன சொன்னேன். இங்க வந்து உட்காரு சொல்றேன்னு தான சொன்னேன்.” அவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க,

அவளுக்கு அவனிடம் அதற்குமேல் மல்லுக்கு நிற்க முடியும் என்று தோன்றவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டாள்.

“சரி சரி சொல்லுங்க. என்ன செய்யணும்.” முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டு , கோபம் கொண்டது போல் அவள் சொல்ல,

‘ஐயோ என்னை நொடிக்கு ஒரு தரம் கொல்லாதே’ என்று அவன் மனம் அவள் முன் மண்டியிட்டு வேண்டியது.

இருந்தாலும் பழைய முறுக்கை முகத்தில் பிடித்துவைத்துப் பேசினான்.

“இங்க என்ன சொல்லிட்டு வந்த.?”

“குளிக்க போறேன்னு” கேள்வியாக அவனைப் பார்க்க,

“அதை செய் போதும்” என எழுந்துவிட்டான்.

“என்ன?” அவள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க ,

“ஆமா! அதை இன்னிக்கு செஞ்சுட்டு, நீ போலாம். அது தான் இந்தப் பாட்டுக்கு பதில் சொல்லாம போனதுக்கு நீ செய்யவேண்டிய காரியம்” பெரிய எட்டுக்களை எடுத்துவைத்து நடந்தான்.

“ஹல்லோ மிஸ்டர் பிரத்யு. இதுல எதாவது உள்குத்து இருக்கா?” அவளும் எழுந்து நின்று கேட்க,

இப்போது அவன் இருந்த பாறையில் ஒரு அழகிய வெண்பட்டுச் சேலை இருந்தது.

அது அவன் கண்ணில் பளிச்சென்று பட, கையில் எடுத்துப் பார்த்தாள்.

“இதை கட்டிக்கிட்டு குளிக்கணும். அது தான் நீ சொன்ன உள்குத்து” சத்தம் வராமல் சிரித்துக் கொண்டே கூறினான்.

அவள் இதயம் படபடத்தது. இருந்தாலும் அவனிடம் சொன்ன சொல் தவற அவளால் முடியவில்லை.

அவளுக்குள் இருக்கும் அவன்மீதான காதல் மீற விடவில்லை.

ஒரு மரத்தின் மறைவில் நின்று தான் அணிந்திருந்த டீஷர்ட் பேண்டை கழட்டிவிட்டு பாரதிராஜா படத்தில் வரும் நடிகை போல ஜாக்கெட் இல்லாமல் கனுக்கால் தெரியும்படி அதே சமயம் தனது அழகு வெளியே தெரியாத படி லாவகமாக அதைக் கட்டிக் கொண்டு வந்தாள்.

பிரத்யுவின் கண்கள் அவளை நீங்க மறுத்தன. பெருமூச்சு அனல் மூச்சாக வெளிவந்தது.

அவள் குனிந்து தன்னை ஒருமுறை சரி செய்து கொண்டாள்.

பளிங்கு கைகளும் கால்களும் அவனை போதை ஏற்றிய அவளது இடையும் அவனை மீண்டும் காமனாக மாறச் செய்து கொண்டிருந்தது.

அவள் அருகில் வந்தான்.

“அங்கேயே நில்லுங்க. நீங்க சொன்ன டாஸ்க் நான் இதை கட்டிக்கிட்டு குளிக்கணும். அவ்வளவு தான். நீங்க தண்ணில இறங்கக் கூடாது.” என ஒரு கை நீட்டி அவனை நிறுத்தினாள்.

அவளின் அந்தச் செல்ல மிரட்டல் அவன் முகத்தில் அழகான புன்னகையை வரவைக்க,

தலையை மட்டும் ஆட்டினான்.

அவள் நீருக்குள் இறங்கி செல்லலானாள். அவளது பின்னழகை ரசித்தபடி அவன் கறையிலிருந்த பாறை மீது அமர்ந்து கொண்டான்.

‘நான் உன் அருகில் வரவில்லை என்றாலும் என் பார்வை ஒன்றே போதும் உன்னை தாக்க!’ சட்டமாக உட்கார்ந்தான்.

error: Content is protected !!