Kadhal- 19

Kadhal- 19

காதல் – 19

என்னை துரத்தும் உன் கண்களுக்கும்.

உன் கண்ணை துரத்தும் என் காதலுக்கும் இடையில்

என்னை பித்தம் கொள்ள வைக்குதடி உன் வெட்கம்.

அன்று இரவு மொட்டைமாடியில் அமர்ந்து பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தனர் கௌதம் குடும்பத்தினர். ஒரு பக்கம் கல்யாண வேலைகள் மிகவும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது.

பெரிய பாத்திரத்தில் சாப்பாட்டை உருட்டி ஒவ்வொருத்தருக்காக கொடுத்துக் கொண்டிருந்தார் கமலா. எல்லார் முகங்களும் புன்னகையை தழுவி இருந்தது.

இந்தர், சுபி கூட அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டிருந்தனர். நாளை மதுரை மதியின் தாய் வீட்டுக்கு செல்வதால் இன்றே வந்திருந்தனர்.

அந்த இரவை மொட்டை மாடியில் களிக்க எல்லாரும் கூடியிருந்தனர்.

மொட்டை மாடியில் காற்று சிலுசிலுவென வீசி அத்தனை பேர் உடலையும் தழுவி, தாலாட்டி சென்றது.

மதி, கெளதம் அருகில் அமர்ந்து, அவன் கையோடு கை சேர்த்து வானத்தை பார்த்து எதையோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தாள்.

கருத்தபாண்டியும், கமலாவும் மாடியின் நடுவில் பாய் விரித்து படுத்துக் கொள்ள, அவரின் இருபக்கமும் ரதியும், இந்தரும் படுத்துக் கொண்டனர்.

அசோக் தான் சுபி முகத்தை பார்ப்பதும், தலையை குனிவதுமாக அமர்ந்திருந்தான். அவன் மனம் யோசனையில் குழம்பி இருந்தது.

‘ஒரு வேளை மதி சொன்னது போல, அவளுக்கு மேல் படிப்பு மேல் ஆசை இருக்குமோ?’ பலவாறான எண்ணம் அவன் மனதில்.

‘இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் சரிவராது’ எண்ணியவன் அவளிடம் பேச எண்ணினான்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சுபி” மெதுவாக அவளை அழைத்தான் அஷோக்.

அந்த மாடியில் ரோஸ் செடிகளுக்கு, நடுவில் இருந்த பெஞ்சில் அமர்ந்துக் கொண்டனர் இருவரும். எல்லாரும் அவரவர் கதையை பேசிக் கொண்டிருந்ததால் ஒருவரை ஒருவர் கண்டும் காணாமல் இருந்தனர்.

அவன் அருகில் அமர்ந்தவள் கையை மெதுவாக பிடித்துக் கொண்டான் அவன்.

அவளின் ஒவ்வொரு விரலையும் பிடித்து மெதுவாக நீவி விட்டுக் கொண்டான் அவன்.

“என்ன பேசணும்?”

“கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி வைக்கலாமா சுபி?”

“ம்?” புரியாமல் முழித்தாள் சுபி.

“ரொம்ப நேரம் யோசிச்சுட்டேன் சுபி. மனசே கேட்கமாட்டுக்கு” மெல்ல கண்களை நிமிர்த்தி அவளைப் பார்த்தான் அஷோக்.

“உன் படிப்பு இருக்கு சுபி. அது தான் ஒரே யோசனையா இருக்கு. உனக்கு மேல் படிப்பு ஆசை இருக்கா?”

இப்பொழுது அவனை யோசனையாக பார்த்தாள் சுபி.. ‘இவன் அத்தனை நல்லவன் கிடையாதே?’

“என்ன யோசிக்கிற சுபி. நம்ம கல்யாணம் உன் படிப்பை பாதிக்க கூடாதில்ல?”

‘அட லூசு பயலே, நான் படிக்க வாரதே வீட்டுல போர் அடிகுன்னு தான். ஏதோ நான் படிப்பாளின்னதும் படிப்பு தானா வருது’ மனதில் எண்ணிக் கொண்டவள் அவனை பார்த்தாள்.

சொல்ல போனால் முதலில் அவளுக்கு, இப்பொழுது திருமணத்தில் ஆர்வம் இல்லை தான். கொஞ்ச நாள் கழித்து தான் திருமணம் செய்யலாம் என்று இருந்தாள்.

ஆனால், நேத்து சித்தி அசோக்குடன் உனக்கு அடுத்த மாதம் திருமணம் என கூறவும் அத்தனை சந்தோஷத்தில் இருந்தாள். ஆனால் இன்று அதே அவளின் மணாளன் அஷோக் தடுக்க பார்க்க கோபத்துடன் அவனை உறுத்து விழித்தாள்.

“அதில்லை சுபிம்மா. உன் படிப்பையும் சமாளிச்சு, என்னை சமாளிக்கிறது உனக்கு ரொம்ப கஷ்டம்ல?” மெதுவாக இழுக்க,

“பிராடு பயலே… தெரியும்டா உன்னை பற்றி… என்னடா ஆடு நனையுதேன்னு ஓநாயும் கூட நனையுதேன்னு நினைச்சேன். இப்போ தெரிது இந்த ஓநாய் எதுக்கு கூட சேர்ந்து நனையுதுன்னு ராஸ்கல்” அவன் தலையில் நங்கென்று கொட்டினாள் சுபி.

“அதில்லை சுபிம்மா… சின்னதா ஒரு ஹக்… குட்டியா ஒரு முத்தம்… திருட்டு தனமா ஒரு சீண்டல்… கதவுக்கு மறைவில் ஒரு இச்… சமயலறையில் ஒரு வாட்டர் இச்… இதெல்லாம் இருந்தா தான் லைப் சுவாரஸ்யமாக இருக்கும். உன் படிப்பு முடியும் வரைக்கும் நான் எப்படி உன் முகத்தையே பார்த்துட்டு இருக்கதாம்?”

“யாரு உங்களை பார்க்க சொன்னதாம்? தாலி கட்டினதும் நான் எங்க வீட்டுக்கு போறேன்”

“ஏன்டி இந்த நல்லெண்ணம்?” முறைத்தான் அஷோக்.

“டேய் பேசுனது போதும்டா? பேசாம தூங்கு” கறுத்த பாண்டி தான் ஓங்கி குரல் கொடுத்தார்.

ஓடி வந்து அவர்களுடன் ஐக்கியமாகினர் இருவரும்.

மறுநாள் அதிகாலை மூன்று மணி திடிரென விழிப்பு வர மெதுவாக கண் திறந்தாள் சுபி.

மெல்ல பார்வையை சுழற்றியவள் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் சுபி.

‘நான் எங்கே இருக்கிறேன்?’ அந்த அறையையே சுற்றிப் பார்த்தன அவள் விழிகள்.

அவளை பார்த்தபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான் அஷோக்.

“குட் மோர்னிங் சுபிம்மா” அழகாய் சிரித்துக் கூறினான் அஷோக்.

“நான் எப்படி இங்க வந்தேன். மாடில தானே படுத்திருந்தேன்?”

“நான் தான் தூக்கிட்டு வந்தேன்… நீ இன்னும் என் அறையை பார்க்கவே இல்லையே? அது தான் சர்பிரைஸா தூக்கிட்டு வந்தேன், எப்படி?” ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டான் அஷோக்.

“அதுக்கு இப்படி தான் தூக்கிட்டு வருவியா? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?”

“அதெல்லாம் யாரும் பார்க்கல, உனக்கே தெரியாம பூ போல தூக்கிட்டு வந்திருக்கேன். இதுல எப்படி அவங்களுக்கு தெரியுமாம்?” சிரித்தான் அஷோக்.

“நாலு மணிக்கு கோவிலுக்கு கிளம்பணும்னு சொன்னாங்க. இப்போ எல்லாரும் எழும்பிருப்பாங்க, இப்போ நான் எப்படி வெளிய போறதாம்? ரதியும், மதியும் பார்த்தா கிண்டல் பண்ணுவாங்க?”

“அதெல்லாம் யாரும் கிண்டல் பண்ண முடியாது. நீதான் எனக்கு பாதி பொண்டாட்டி ஆகிட்டியே”

“நேத்து என்னமோ வேண்டாம்னு சொன்ன? இப்போ எங்க இருந்து பாதி பொண்டாட்டி வருதாம்?” கேட்டபடியே வெளியில் செல்ல எத்தனிக்க,

அவளை வழிமறித்து அவள் கழுத்தில் தன் கையை மாலையாக போட்டவன் “அப்படியே ஒரு குட் மோர்னிங் சொல்லிட்டு போறது”

“கருவாயனுக்கு எல்லாம் குட் மோர்னிங் சொல்ல முடியாது போடா” அவனை தள்ளி விட்டு வெளியில் சென்றாள் அவள்.

சிரித்தபடியே அவளின் பின்னோடு வெளியில் வர எல்லாரும் இவர்களுக்காய் ஹாலில் காத்திருந்தனர். அசட்டு சிரிப்பை அவர்கள் நோக்கி வீசியவர்கள் கோவிலுக்கு கிளம்பினர்.

குலதெய்வம் கோவிலில் மூன்று பெண்களும் பொங்கல் வைக்க அவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று உபத்திரம் செய்துக் கொண்டிருந்தனர் மூன்று ஆண்மகன்களும்.

பார்க்க தான் மூன்று பேரும் அமைதியே தவிர, தங்கள் இணைகளிடம் உலகத்தில் இல்லாத அத்தனை கேப்மாரி தனத்தையும் ஒவ்வொன்றாக கைவரிசை காட்டினர்.

ஒருவழியாக பொங்கல் வைத்து முடிய, மெதுவாக அஷோக் கையை சுரண்டினாள் சுபி.

“என்ன சுபிம்மா?”

“ஓடைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்களே?”

“நான் எப்போ சொன்னேன்?”

“அங்க வீட்டுல வச்சு தான். மதி அந்த ஓடை பத்தி சொல்லும் போது, நாளைக்கு போகலாம்னு சொன்னீங்களே?”

“அது சும்மா பேச்சுக்கு சொன்னது… இந்த நேரம் அங்க யாரும் இருக்கமாட்டாங்க… சிங்கம், புலி எல்லாம் வரும்” கண்ணை உருட்டிக் கூறினான்.

அவனின் எண்ணமே வேறாக இருந்தது. எல்லாரும் அவரவர் ஜோடியுடன் டூயட் ஆட, இவன் மட்டுமே சிங்கிள் லிஸ்டில் முதல் ஆளாக இருப்பதுப் போல் தோன்றியது.

அதனால் தான்  சுபியிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்து கல்யாணத்தை பற்றி பேசினான். சுபிக்கு தன்னை இப்பொழுது திருமணம் செய்வதில் எந்த குழப்பமும் இல்லை என்பதால் அவளை தனியாக தள்ளிப் போக எண்ணினான்.

ஓடைக்கு யாரையும் அழைத்து செல்லாமல் தாங்கள் மட்டுமே ஜாலியாக செல்ல எண்ணினான். ஆனால் சுபியோ அடுத்த நிமிடம் மதியை அழைத்திருந்தாள்.

“மதி”

“சொல்லு சுபி”

“வா உனக்கு அந்த ஓடை தெரியும் தானே? போகலாமா? நான் ஓடை பார்த்ததே இல்லை”   

“அதுக்கென்ன போயிட்டா போச்சு. ஆனா ரொம்ப தூரம் நடக்கணுமே? மாத்து டிரஸ் வேற இல்லை?”

“அதெல்லாம் நடக்கலாம் மதி. குளிக்க எல்லாம் வேண்டாம் தூரத்தில் இருந்து நான் பார்த்துட்டு மட்டும் வந்திருவேன்?”

மதி யோசனையாக ரதியை பார்க்க, ரதியும் சரி என சொல்லவே மூவரும் அந்த சின்ன ஓடையை நோக்கி நடந்தனர். அவர்கள் தனியாக ஓடைக்கு செல்வதைக் கண்ட மீசை கூடவே இவர்களையும் அனுப்ப, அவர்கள் காவலுக்கு மூவரும் கூடவே நடந்தனர்.

“இங்க பாருங்க யாரும் ஓடையில் இறங்க கூடாது… குளிக்கணும், கால் நனைக்கனும் இப்படி எதுவும் சொல்ல கூடாது” அஷோக் தான் கூறினான். அவனின் பிளானை சுபியே பிளாப் ஆக்கின கடுப்பில் கூறினான்.

கௌதமும், இந்தரும் ஒன்றும் கூறாமல் நடந்து வந்தனர்.

‘என்னடா நடக்குது இங்க நான் மட்டும் தனியா பேசிட்டு வாறேன். மீதி ரெண்டு ஜோடியும் ஒன்னும் சொல்லாம வருதே? எதுனா பிளான் பண்ணுதா?’ யோசனையாக கௌதமைப் பார்த்தான் அஷோக்.

கிட்ட தட்ட இரண்டு மூன்று கிலோமீட்டர் அவர்கள் நடந்து சென்றனர். கொஞ்ச தூரத்தில் ஓடை ஓடும் சத்தமும், உடலை தழுவி சென்ற குளிர்ந்த காற்றையும் உணர்ந்தனர்.

“ஓடை பக்கத்துல வந்துட்டோமா அண்ணி”

“ஆமா ரதி… இன்னும் கொஞ்ச தூரத்தில் ஓடை வந்திரும்”

அருகில் சில்லென்ற காற்றும், ஓடை ஓசையும் அவர்கள் காதை நிறைக்க கண்ணுக்கு குளிர்ச்சியாய் அவர்கள் எதிரே ஓடை.

கெளதம், மதியின் கையை பிடித்து மெதுவாக அந்த ஓடையில் இறங்க “ஸ்… ரொம்ப சில்லுன்னு இருக்குல்ல?” கேட்டவள் கீழே குனிந்து குளிர்ந்த தண்ணீரை இருகைகளிலும் அள்ளிக் கொண்டாள்.

இயற்கை அளிக்கும் வரம் எல்லாமே அவளுக்கு அத்தனை பிடிக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த இயற்கை பிடிக்காமல் இருக்குமா என்ன?

கௌதம் கையை பிடித்துக் கொண்டே கொஞ்ச தூரம் சென்றாள் அவள்.

ரதி ஓடையில் கால் வைக்க, இந்தர் அவள் கைகளை அப்படியே பிடித்துக் கொண்டான். முதல் முறையாக ஓடையை பார்க்கிறாள்.

அவள் காலை சின்ன சின்ன மீன்கள் கடிக்க “தண்ணிக்குள்ள மீன் இருக்கா இந்தர்? நாம மீன் பிடிக்கலாமா?”

“அதுக்கென்ன பிடிச்சுட்டா போச்சு” கழுத்தை சுற்றி போட்டிருந்த டவலை எடுத்தவன் மீன் பிடிக்க ஆரம்பித்து விட்டான்.

இப்பொழுது அஷோக்கை கொலை வெறியில் முறைத்தாள் சுபி. ‘அவங்களை பாரு கருவாயாஎன கண்களால் மிரட்டினாள்.

“டேய் மச்சி நாங்க மேல போயிட்டு வாரோம்டா” என்றவன் சுபி கையை பிடித்துக் கொண்டு மேலே ஏறினான்.

அவனை பார்த்து சிரித்த கெளதம் “இன்னைக்கு உங்கண்ணன் பெர்பார்மென்சை பாரு” சிரித்தபடி மதியிடம் கூறினான்.

“மேலே ஏதாவது அருவி இருக்கா?”

“அருவியா?” கேள்வியாக இழுத்தான் அவன்.

“பிராடு என்னையே ஏமாத்துறல்ல?” போலியாக சலித்தாள் அவள். அவன் முகத்தில் குறுஞ்சிரிப்பின் தடம்.

அடுத்த கால் மணிநேரம் இருவரும் எப்படியே தட்டு தடுமாறி அந்த புதிர் படர்ந்த சிறு மலை குன்றின் மேல் ஏறினர்.

“என் கையை நல்லா புடிச்சுக்கோ சுபி. பாறை வழுக்கும், முள்ளு செடி வேற இருக்கு கவனமா கால் எடுத்து வை” ஆயிரம் பத்திரம் கூறியபடியே அவளுடன் நடந்தான்.

அருகில் செல்ல செல்ல அருவியில் இரைச்சல் ‘ஓ… ஓ…’ வென அவள் செவியில் வந்து மோதியது.

தூரத்தில் இருந்து ரசித்துப் பார்த்திருந்தாள் சுபி. அவளையே ரசனையாக பார்த்தான் அஷோக்.

அவளை, அவன் காதலித்த காலம் தொட்டு இன்னும் அவளிடம் காதலை கூறவில்லை. ஆனால் இருவரின் பார்வைகளும் காதலை பரிமாறிக் கொண்டன.

அதேபோல் அவளை அவன் இதுவரைக்கும் தனியாக எங்கும் அழைத்து வந்ததும் இல்லை. அது தான் அவளை கொஞ்சமாய் சந்தோசபடுத்த தனியாக அவளை தள்ளிக் கொண்டு வந்து விட்டான்.

“அருவிக்குள்ள போகலாமா அஷோக்”

“அருவி ரொம்ப போர்ஷா இருக்கு சுபி… வேண்டாம்டா” அவனும் இத்தனை போர்சாக இருக்கும் என நினைக்கவே இல்லை.

“ஐயோ… அதுக்கென்ன நான் உங்களை இப்படி கெட்டிய பிடிச்சுகிறேன் போதுமா? முதல்ல வாங்க?” அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அருவிக்குள் இழுத்து சென்றாள் சுபி.

அருகே செல்ல செல்ல அந்த அருவியின் சாரல் முகத்தில் மோத, அருவியின் இரைச்சல் பேரிரைச்சலாக காதில் மோதியது.

“சுபி மூச்சு முட்டினால் அருவிக்கு வெளியே வந்திராதே. அந்த பக்கம் பாறை இருக்குல்ல அதுக்குள்ள போ, வெளிய வந்தா போர்ஷா வர தண்ணீர் இழுத்துட்டு போய்டும்” அவளை தன் கைவளைவுக்குள் நிறுத்தி கொண்டு கூறினான்.

அவனின் கையை கெட்டியாக பிடித்தபடி அந்த நீரில் நின்றிருந்தாள் சுபி. சில்லென தலையில் தும் என பயங்கர அழுத்தமாக தலையில் தண்ணீர் விழ ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள் சுபி.

அது அதிகாலை நேரமாக இருந்ததால் ஆட்கள் இல்லாமல் இருக்க இருவரும் ஒரே போல் ஒரே இடத்தில் நின்று சுகமாக குளித்தனர்.  

தண்ணீர் போர்ஷா விழ அதை தாக்கு பிடிக்க முடியாமல் சுபி திணற, உடனே, அஷோக் கூறியதுப் போல் அந்த பாறைகளுக்கு இடையே நுழைய அந்த பாறையில் தன் தலையே வேகமாக முட்டிக் கொண்டாள்.

“ஆ…ஸ்” மெதுவாக தலையை தடவிக் கொள்ள, “என்னாச்சு சுபி” அவள் அருகில் போய் நின்றுக் கொண்டான் அஷோக்.

வேகமாக் அவள் தலையை தடவி விட்டுக் கொண்டவன் அப்பொழுது தான் அவள் நின்ற கோலம் அவன் கண்ணில் பட, அவஸ்தையாக நெளிந்தான் அவன்.

அவள் கட்டியிருந்த புடவை அவள் உடலோடு ஒட்டி இருக்க, அவன் பார்வையை எங்கும் திருப்ப முடியாமல் நின்றிருந்தான்.

அப்பொழுது தான் அவனின் பார்வையை உணர்ந்தவள். என்ன செய்வது என ஒரு நிமிடம் தடுமாறி மீண்டு அவனை கட்டிக் கொண்டாள்.

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் அருவிக்கு வந்தாலும் வரக் கூடும் எண்ணியவன், தன் சட்டையை கழட்டி அவளுக்கு போட்டு விட,

“நாங்க பாக்கல…. நாங்க பாக்கல” என்றபடி வந்து சேர்ந்தனர் இரு ஜோடிகளும்.

மெதுவாக அருவியில் இருந்து வெளியில் வந்து பார்க்க, எதிரில் நின்றவர்களும் சட்டையை மாற்றி அணிந்திருப்பதைக் கண்டவன் “ஆமாடா… நாங்களும் எதையும் பாக்கல தான்” அவர்களை கேலிசெய்தான் அவன்.

அங்கு இருந்த ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்தவர்கள். பிடித்துக் கொண்டு வந்த மீனை, அங்கிருந்த குச்சிகளை சேகரித்து சுட ஆரம்பித்தனர்.

பிடித்ததிலையே பெரிய மீனை மட்டுமே சுட்டு, அங்கயே உண்டு. வழியில் இருந்த சிறு சிறு பழங்களையும் சிறு சில்மிஷத்துடன் சுவைத்தபடி கோவில் வந்து சேர்ந்தனர்.

அதனை சந்தோசமாக இருந்தது அவர்களுக்கு. இனி வரும் நாளும் அத்தனை சந்தோசமாக இருக்கும் என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது. அடுத்து வரும் திருமணத்தை எதிர் நோக்கி காத்திருந்தனர். நாமும் காத்திருப்போம்.

error: Content is protected !!