Kalangalil aval vasantham 2(3)

Kalangalil aval vasantham 2(3)

“சரி.. நீ எப்படி வேணும்னாலும் இரு… ஒரே ஒரு கல்யாணாம் மட்டும் பண்ணிக்க…” ரவி தான் அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட முடியாதா என்று பார்த்தான்.

“எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்ல…”

“டேய்… நம்ம அம்மா அப்பா கல்யாணாம் பண்ணாமையா குடித்தனம் பண்ணாங்க? நானும் மாமாவும் கல்யாணாம் பண்ணாமையா இருக்கோம்?” குரலை உயர்த்தினாள் வைஷ்ணவி.

“அதனால தான் எனக்கு நம்பிக்கை இல்லைங்கறேன்…” என்றவன், டைனிங் டேபிள் நோக்கிப் போனான்.

“தாந்தோணித்தானமா இருக்காத மாப்பிள்ளை..” ரவியின் குரலில் சூடு தெறிக்க,

“கண்டிப்பா பண்ணிக்கறேன்… பொண்ணு ஸ்வேதா தான்..” என்று நிறுத்தியவன், “என்ன ஓகே வா?” என்று புருவத்தை உயர்த்தி ரவியை பார்த்து கேட்க,

“சை… அவள்லாம் ஒரு பொண்ணு? தூ…” என்று அதுவரை மௌனமாக இருந்தவர், துப்பிவிட்டு கோபமாக எழுந்த மாதேஸ்வரனை பார்த்த ரவி,

“எனக்குத் தெரிஞ்சே எத்தனையோ பேர் கிட்ட போனவடா அவ… அவளைப் போய்…” என்று தலையிலடித்துக் கொள்ள,

“நீங்க எத்தனை பேர் கிட்ட போனீங்க மாமா?” கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சசாங்கன் கேட்க,

“ஷான்…” கத்தினாள் வைஷ்ணவி.

இந்த வாக்குவாதங்களை பார்த்த மாதேஸ்வரனுக்கு தலை சுற்றியது. பிபி அதிகமாகியிருந்தது. கீழே விழ போனவரை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

“ஏன்டா தம்பி இப்படி பண்ற?”

“கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்…” என்றவன், திரும்பிப் பார்க்காமல் மாடியேறினான்.

இது போல பதில் கூறும் நேரத்திலெல்லாம் ஒரு வக்கிரமான திருப்தி தோன்றும் அவனுக்கு! கண்ணுக்கு தெரியாத பலவற்றுக்கு தான் தண்டனை கொடுப்பது போல தோன்றும். தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதை போலவும்!

அவனுக்கும் வலிக்கிறது… அவனும் அந்த வலியை அனுபவிக்கிறான்… அனுபவித்துக் கொண்டே வலிகளை கொடுக்கிறான்!

தவறுதான்… தெரிந்தே செய்யும் தவறுதான்… மன்னிக்க முடியாத தவறுதான்!

செய்வான்…

இன்னமும் செய்வான்!

****

நாள் முழுக்க இடைவிடாமல் வேலை பார்த்ததில் கண்களெல்லாம் வலித்தது. கிட்டதட்ட நான்கு கட்டுமான பிராஜக்ட்களின் வரவு செலவு கணக்குகளை அன்று முழுவதுமாக பார்த்து முடித்திருந்தான். இரவு மணி எட்டரையாகியிருந்தது.

அவன் என்ன சொன்னாலும் செய்து முடித்துவிட்டே போகும் ஒரே ஒரு அடிமையான பிரீத்தாவை தவிர அலுவலகத்திலிருந்த அத்தனை பேரும் எஸ்கேப் ஆகியிருந்தனர். பொதுவாக இது எப்போதும் நடப்பதுதான். வேலை பார்ப்பதில் கால நேரம் சசாங்கன் எப்படி பார்ப்பதில்லையோ, அது போலவே பிரீத்தியும் பார்ப்பதில்லை. எப்போது வேண்டுமென்றாலும் உட்கார்ந்து விடுவாள். அதனாலேயே அந்த கடமையுணர்ச்சி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அது போலவே அவளிடம் எதை வேண்டுமானாலும் பேச முடியும், வானத்துக்கு கீழ் எந்த விஷயத்தையும். முன்முடிவுகள் இல்லாமல் எதையும் பரந்துபட்ட பார்வையோடு அணுகுவாள். அதை விடவும் சிறந்த தீர்வுகளை மிக எளிதாக கொடுப்பாள். வேலை பார்க்கும் நேரத்தில் கூட இருவரும் நல்ல நண்பர்கள் தான், அதிலும் தன்னுடைய எல்லையுணர்ந்த அவனது மிகச்சிறந்த தோழி அவள் தான்!

சுழற்நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கைகளை உயர்த்தி நெட்டி முறிக்க, முன்னால் அமர்ந்திருந்த பிரீத்தா வாய் மூடியபடி மெல்லிய கொட்டாவியை வெளியேற்றினாள்.

“தூக்கம் வருதா ப்ரீத்தி?”

கை கடிகாரத்தை தூக்கிக் காட்டியபடி, “தூக்கம் வராம டைனோசரா வரும் பாஸ்?” என்று சிரிக்காமல் கேட்க,

“அதுக்குள்ள தூங்கி என்ன பண்ண போற?” உள்ளே சிரித்தபடி கேட்டான்.

“மனுசங்கன்னா நைட் தூங்குவாங்க பாஸ்… நீங்க தான் அதையும் தாண்டிப் புனிதமானவராச்சே… வேற எதுனா பண்ணுங்க…” என்றபடி அவளது லேப்டாப்பை மூடியபடி எழ, கால்கள் இரண்டும் மரத்துப் போய் தகராறு செய்தது.

“என்னாச்சு?” அவள் நிற்க தடுமாறுவதை பார்த்து சசாங்கன் கேட்க,

“சும்மா ஒரு வேண்டுதல் பாஸ். உங்களை பார்க்கும் போது என்னை நானே சுத்திக்கணும்ன்னு… மறந்துட்டேன்ல, அதான் கடவுள் மண்டைல அடிச்சு புரிய வைக்கறார்…” அலட்டிக் கொள்ளாமல் கூற,

“அப்பவும் புரியலைன்னா சொல்லு… நான் அதை விட சூப்பரா உன் மண்டைல கொட்டி புரிய வைக்கிறேன்…” என்று இவனும் சிரிக்காமல் கூற,

“போதும் பாஸ்… புரிய வெச்சது… இதுக்கே எட்டரையாச்சு… நாளைக்கு வேணும்னா ஓவர்டைம் பேமெண்ட் குடுக்கறேன்னு சொல்லுங்க… நான் இன்னும் ரெண்டு மணி நேரம் இங்கயே உக்காந்து உங்க கதாகாலட்சேபம் கேக்கறேன்…” என்று சிரித்தாள்.

“உன்னைய உக்கார வைக்க நான் டபுள் பேமெண்ட் குடுக்கணுமா? சான்ஸே இல்ல…” என்றபடி அவனும் எழுந்துகொள்ள,

“பின்ன… இங்க ஒரு ஈ காக்காவாச்சும் இருக்கா பாருங்க பாஸ். அப்படியும் ஒரு அழகான பொண்ணு உங்களை நம்பி, உங்க கதாகாலட்சேபத்தை கேக்க உக்கார்ந்து இருக்கேன்னா, அந்த தைரியத்துக்கே எனக்கு நீங்க தனி பேமெண்ட் குடுக்கணும்…” என்று கிண்டலாக சிரித்தாள். இருவருக்குமே தெரியும். இது கிண்டல் தான் என!

அவன் தன்னை மறக்கவெனவே பிரீத்தியோடு வம்பு வளர்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. பிரீத்தியும் வெகு இயல்பாக அவனை கலாய்ப்பதும், காலை வாருவதும் உண்டு. சீரியசாக இருக்கும் நேரங்களில் மிகவும் சீரியசாக வேலைப் பார்த்தாலும், அவ்வப்போது இவள் அவனையும், அவன் இவளையும் கொஞ்சமாவது கலாய்க்கவில்லையென்றால் உண்ட உணவு செரிக்கவே செரிக்காது என்னும் ரகம் இந்த இரண்டும்!

“அடிங்க… கதாகாலட்சேபம்ன்னு சொல்றதுக்கே, உன் மண்டையில நாலு கொட்டு கொட்டனும்…” என்றபடியே கேபினை மூடியவன், சாவியை அவளிடம் தூக்கிப் போட, எதிர்பாராவிட்டாலும், அதை கேட்ச் பிடித்தாள் பிரீத்தா. இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்! அவனது செல்பேசி அழைத்தவாறு இருக்க, அதை அவ்வப்போது மௌனிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

“நீங்க எனக்கு சம்பளம் குடுக்கறீங்க தான். ஆனா அதுக்காக மனசறிய என்னை பொய் சொல்ல சொல்றீங்களா யுவர் ஆனர்?”

“சொன்னாத்தான் என்னவாம்? இனிமே தினம் ரெண்டு பொய் சொல்வியாம்… அதுக்கு தகுந்த மாதிரி நான் உனக்கு சம்பளத்தை சேர்த்தி தருவேனாம்! எப்படி டீல்?” கண்ணை சிமிட்டியபடி சசாங்கன் கேட்க, அவனுக்கு முன் வந்தவள், பெரியதாக வணங்கி,

“பொய் சொன்னா போஜனம் கிடைக்காது பாஸ்… அதனால நான் பொய்யே சொல்ல மாட்டேன்…” அப்பாவியாக கூறியவளை பார்த்தவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

“இதுவே ஒரு மிகப் பெரிய பொய் தான் ஆபீசர்…”

“தருமரும் துரியோதனனும் நகர்வலம் போனாங்களாம்…” என்று அவள் ஆரம்பிக்க,

“பத்தாயிரத்து பதினொன்னு…”

“என்ன பாஸ்?”

“உங்க தத்துவ முத்துக்கள் ஆபீசர்…”

“உண்மை கசக்கும் பாஸ்..”

“டேஸ்ட் பண்ணி பார்த்தீங்களா ஆபீசர்?”

“பாஸ்… ரொம்ப கடிக்கறீங்க…”

“டர்ட்டி கேர்ள்…” என்று சிரித்தவனை எதுவும் புரியாமல் பார்த்தவள், சட்டென தலைக்கு மேல் மஞ்ச பல்பு எரிய, அடப்பாவி என்று வாயை மூடிக் கொண்டாள். அதற்கும் மேல் பேசுவாள்?! அவனது செல்பேசி மீண்டும் மீண்டும் அழைத்து ஓய்ந்தது. அதை பிரீத்தியும் அறிந்திருந்தாள். ஆனால் அவனிடம் பேசியை எடுக்கவா சொல்ல முடியும்?

“என்ன ஆபீசர் சைலன்ட்டாகீட்டீங்க?”

“பசி காதை அடைக்குது பாஸ்… கொஞ்சம் சீக்கிரம் போனா மெஸ்ல தோசைய பிச்சு சாப்பிடலாம். இல்லைன்னா உடைச்சுத்தான் சாப்பிட முடியும்…” என்றவள், சிரிக்காமல் அவன் முகத்தைப் பார்க்க,

“அவ்வளவுதான? வா… ஏதாவது ரெஸ்டாரண்ட் போலாம்…” என்று அவனது லேப்டாப் பேகை காரின் பின் சீட்டுக்கு கொடுத்துவிட்டு முன்னால் ஏறினான்.

அவள் தயங்கியபடி நிற்க, “என்ன ப்ரீத்தி? உள்ள வா…” என்றழைத்தான்.

“இல்ல பாஸ்… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்…” என்று தயங்க,

“எல்லாம் பார்த்துக்கலாம்… நீ வா… ரெஸ்டாரண்ட் முடிச்சு, உன்னை பத்திரமா பிஜிக்கு கூட்டிட்டு போய் சேர்க்கறது என்னோட பொறுப்பு…” என்று கூறும் போதே பேசி இடைவிடாமல் அதிர்ந்து கொண்டே இருந்தது.

பேசியை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில் கசப்பு! இதற்கும் மேல் தவிர்க்க முடியாது என்று முடிவெடுத்தவன்,

“சொல்லு ஸ்வேதா…”

“எங்க இருக்க? ஏன் இவ்வளவு நேரமா ஃபோனை எடுக்கவே இல்ல?” உச்சபட்ச குரலில் அவள் காட்டுக் கத்தலாக கத்துவது ப்ரீத்தி வரை கேட்டது.

“நான் எங்க இருந்தா உனக்கென்ன? இப்ப உனக்கு என்ன வேணும்? அதை மட்டும் சொல்லு…” நறுக்குத் தெறித்தார் போல இவன் கேட்க, மறுபுறம் அமைதியானது. அமைதியானதா? ஆற்றாமையில் பொங்கிக் கொண்டிருந்ததா?

“நான் – கால்  – பண்ணா –  ஏன் –  எடுக்க –  மாட்டேங்கற -?” ஒவ்வொரு வார்த்தையாக பிரித்து அழுத்தமாக உச்சரிக்க,

“எனக்கு – வேலை  – இருக்கு –  நான் – உன்னோட – அடிமை – இல்லை” அவளைப் போலவே நிறுத்தி நிதானமாக கூறியவனை சற்று பயத்தோடு பார்த்தாள் ப்ரீத்தி. முன்னமே அவனிடம் சொல்லிவிட்டு ஓடியிருக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய சங்கடம் அவளுக்கு!

“என்னை விட உனக்கு வேலை பெருசா?” மீண்டும் அதே கத்தல் அவளிடமிருந்து!

“என்னை விட உனக்கு உன்னோட வேலை பெருசுதானே?” அவள் கேள்வியை அவளிடமே திருப்பினான்.

“அப்படி சொல்லல சஷாங்…” என்றவளுக்கு சற்று சுருதி குறைந்தது.

“நீ எப்படி சொன்னாலும் மீன் பண்ணறது ஒரே விஷயம் தான்… யூ வோண்ட் குவிட் யுவர் ஜாப்…”

“எஸ்… ஐ வோண்ட்…” தீர்மானமாக வந்தது அவளிடமிருந்து!

“தென் கோ டூ ஹெல்…” என்றவன் அவளது மறுமொழியை எதிர்பார்க்காமல் வைத்தான்.

பேசியை வைத்து விட்டாலும் அவனது சூடு இன்னும் குறையவில்லை. இன்னும் உடலுக்குள் அந்த அதிர்வு மீதமிருந்தது. அவனது அந்த பதட்டம், சிகரட்டை காவு கேட்டது. கார் டேஷ் போர்டை திறந்தான், சிகரெட் இருக்கிறதா என்பதை பார்க்க! அப்போதுதான் ப்ரீத்தி இருப்பது அவனது புத்திக்குள் உரைக்க, அவசரமாக,

“உள்ள ஏறு ப்ரீத்தி…” அவனையும் அறியாமல் அவனது குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்ததோ? சட்டென பயந்தவள், எதுவும் கூறாமல் கார் கதவை திறந்து ஏறினாள்.

மௌனமாக காரை ஸ்டார்ட் செய்தவன், எதுவும் பேசாமல் அந்த ரெஸ்டாரண்ட் வாசலில் நிறுத்தினான்.

“எனக்கு கொஞ்ச டென்ஷனா இருந்துது ப்ரீத்தி…” என்றவன், சற்று தயங்கி, “உன்னையும் கொஞ்சம் கத்திட்டேனா?” என்று கேட்க,

“இல்ல பாஸ்…” அவசரமாகக் கூறினாள்.

“சாரி…” மெதுவாக அவன் மன்னிப்பை கேட்க,

“ஒண்ணுமில்ல பாஸ்… வேண்டாம்…” என்றவள், “ஏன் இப்படி உங்க மூடை ஸ்பாயில் பண்ணிக்கறீங்க?” என்று கேட்க, அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்,

“விணைய விதைச்சா விணையத்தான் அறுவடை பண்ண முடியும் ஆபீசர்…”

சொல்லிவிட்டு ரெஸ்டாரண்ட்க்குள் நுழைந்தவனை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்தாள்!

புரியாத புதிர் அவனோ?!

error: Content is protected !!