Kalangalil aval vasantham 23(2)

Kalangalil aval vasantham 23(2)

“வேலை இருந்தா கண்டிப்பா செஞ்சு தானே சர் ஆகணும். ஐ டோன்ட் மைன்ட்…”

“அதுக்காக டிரைவர் வேலை கூட பார்க்கனுமா?”

“நான் கார் டிரைவ் பண்ணா தான் சாருக்கு கம்பர்டபிளா இருக்கும். அதுவுமில்லாம எனக்கு டிரைவிங் ரொம்ப பிடிக்கும் சர். அந்த மாதிரி ஹை என்ட் காரெல்லாம் நான் வாங்கி ஓட்ட முடியுமா?” பாவம் போல முடித்தவளை, எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

“உனக்கு எந்த கார் வேணும்ன்னு சொல்லு. அந்த கார் உன் வீட்டு வாசல்ல நிற்கும்…” அவசரமாக கூறியவரை நேராக பார்த்தாள் ப்ரீத்தி.

“சர்… சும்மா சொல்லாதீங்க…”

“இல்லப்பா. சத்தியமா சொல்றேன். உனக்கு என்ன வேணும் சொல்லு…” என்று அவர் மீண்டும் அழுத்திக் கேட்க, அந்த பக்கம்,

“ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கேளு பக்கி.” என்று ஷான் கடுகடுத்தான்.

ப்ரீத்தி மெளனமாக இருந்தாள்.

“நான் சொல்றதை நம்பலையா?” ஏக்கமாக அவர் கேட்க,

“உங்களோட இந்த அன்பே போதும் சர். எனக்கு வேறெதுவும் வேண்டாம்…” என்று இறங்கிய குரலில் அவள் கூற, அவளை இன்னுமே விழுங்கினார்.

“பேர் சொல்லி கூப்பிடு ப்ரீத்தி. சர் வேண்டாம்…” என்றவரை லேசாக அதிர்ந்தது போல பார்த்தாள்.

“சர் நீங்க எவ்வளவு பெரிய ஆள்…” என்று அவள் தயங்க,

“ஐ நீட் யுவர் ஃபிரெண்ட்ஷிப்… ஃப்ரெண்ட்ஸ்னா சர்ன்னு சொல்ல கூடாது ப்ரீத்தி…” அவளை ஆழமாக பார்த்தபடி ஆழ்ந்த குரலில் அவர் கூற, “இந்த கொசு ஓவரா ரொமான்ஸ் பண்ணுதே ஆண்டவா…” என்று அந்தபக்கம் ஆல்வின் எரிச்சலானான்.

“ஐ ம் ஹானர்ட் ச… சரண் சர்…” என்று நாக்கை அவள் கடித்துக் கொண்டாள்.

“அப்பயும் சாரா?”

“அவ்வளவு சீக்கிரம் மாத்திக்க முடியாது சரண் சர்…” சிரித்தாள்.

“ஆனா மாத்திக்க ப்ரீத்தி…”

“சியூர்…” என்றவள், வொர்க் அவுட்டை முடித்து இருந்தாள். வியர்வையை துடைத்தபடி கிளம்ப தயாரானாள்.

“எப்படி வந்த?”

“ஏன் சரண் சர்?”

“பை காரா?”

“இல்ல. எப்பவும் டூ வீலர்ல வருவேன். இன்னைக்கு ரிப்பேர் அதனால கேப்ல வந்தேன்…”

“ஓகே… அப்படீன்னா நான் டிராப் பண்றேன் ப்ரீத்தி…”

“ஹய்யோ… ஏன் சரண் சர். வேண்டாம்… நானே போய்க்குவேன்…” மறுத்தாள்.

அந்த பக்கம் ஷான், “ப்ரீத் கவனமா கேளு. டோன்ட் வொர்ரி. அவனோட காரை நாம ஃபாலோ பண்ணுவோம். எப்படியாவது அவனோட போனை ஒரு அஞ்சு நிமிஷம் கைல வெச்சுருக்க மாதிரி பார்த்துக்க. ஆல்வின் ஒரு மெசேஜை அந்த போனுக்கு அனுப்புவான். அந்த டைம்ல ஃபோன் உன் கைல இருக்கணும். அந்த மெசேஜ்ல இருக்க லிங்க்கை க்ளிக் பண்ணி விட்டுட்டு அந்த மெசேஜை டெலீட் பண்ணிடு. ஸ்பை சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிடும். நம்ம வேலை முடிஞ்சுடும்…” என்று அறிவுறுத்தினான்.

“ஏன் வேண்டாம்ன்னு சொல்ற ப்ரீத்தி. நானா உன்னை சுமக்க போறேன்? கார் தானே சுமக்குது?” என்று காதலாக கேட்க, “டேய் ஹீரோவாம்டா… ஆண்டவா இந்த கொசுவ அடிச்சு கொல்ல முடியலையே!” ஆல்வின் கலாய்க்க, அங்கு மற்றவர்களும் சிரிப்பது கேட்டது. இவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. லேசாக புன்னகை பூத்தவள்,

“ஓகே சரண் சர். யுவர் விஷ்…” என்று கூற,

“தட்ஸ் குட் கேர்ள்… இப்படியே யுவர் விஷ்ன்னு சொல்லு. உன்னை வேற லெவலுக்கு கொண்டு வந்துடறேன்…” என்று அவளது கன்னத்தை தட்ட, பட்டென்று அவரது கையை தட்டிவிட போன தனது கையை அடக்கிக் கொண்டாள் ப்ரீத்தி.

‘காரியம் முக்கியம் ப்ரீத்தி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள், அவரை பார்த்து ஆச்சரியமாக புன்னகைத்தாள். அவளது ஷோல்டர் பேகை எடுத்துக் கொண்டவள், தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டாள்.

அவள் தண்ணீர் குடிக்கும் அழகை ரசித்துப் பார்த்தார் சரண். தொண்டைக்குழி ஏறி இறங்குவதை பார்த்தவருக்கு, அந்த அழகான கழுத்தில் முத்தமிட வேண்டும் போல தோன்றியது. லேசாக தண்ணீர் வழிந்து கழுத்துக்கு கீழோட, அந்த நீரை பருக வேண்டுமென தோன்றியது. ஓரக்கண்ணில் அவரது பார்வையை பார்த்தபடி இருந்தாள் ப்ரீத்தி. உள்ளுக்குள் காந்தியது.

‘உன் கண்ணை நோண்டி காக்காவுக்கு போடணும்டா சனியனே’ என்று மனதுக்குள் திட்டியவள், அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

“போலாமா சரண் சர்…”

“ஓகே மை லேடி…” என்று ஆங்கிலேய பாணியில் குனிந்து நிமிர்ந்தவரை பார்த்து சிரித்தாள்.

அந்த சிரிப்பிற்காகவே அவளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.

ஜிம் கதவை திறந்து கொண்டு காரை நோக்கி வந்தனர் இருவரும். ஷானும் மற்றவர்களும் வந்த வண்டி எங்கே என பார்வையால் துழாவினாள் ப்ரீத்தி. போர்ஸ் ட்ராவலரில் தான் அவர்களது டெக்னிக்கல் டீம் இருந்தது. அங்கிருந்தான் அவன் இவளை தொடர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் இல்லாமல் சுற்றிலும் ஐந்து கார்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் பத்து பேர் ஜிம்மை கண்காணித்தபடி மகேஷுடைய உத்தரவுக்காக காத்திருந்தனர்.

அந்த வண்டிகளையும் போர்ஸ் ட்ராவலரையும் பார்த்ததும் உள்ளுக்குள் திருப்தியாக இருந்தது. ஆனால் அவளது முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

“என்ன ப்ரீத்தி? பயமா?” அவள் சுற்றிலும் பார்ப்பதை பார்த்து கேட்டபடி கார் கதவை திறந்தார் சரண் சிங்.

“ஆமா சரண் சர். தெரிஞ்சவங்க யாராவது பார்த்துட கூடாதுல்ல…”

“இனிமே அதுக்கெல்லாம் பயப்பட கூடாது பேபி. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கறேன். ஐ ம் ஆல்வேஸ் அட் யுவர் சர்விஸ்…”

“தேங்க்ஸ் சரண் சர்…” என்றபடி கதவைத் திறந்து உட்கார்ந்தாள்.

பிஎம்டபிள்யு செவன் சீரிஸ் வண்டி. அட்டகாசமான இன்டீரியர்களோடு பிரம்மாண்டமாக இருந்தது. ஏசி இதமாக தழுவ, சுற்றிலும் எச்சரிக்கையாக ஆராய்ந்தாள்.

“என்ன பேபி?”

“செம வண்டி சர். இன்டீரியர் அள்ளுது…” என்று வியப்பாக கூற,

“உனக்கு வேணுமா?” என்று கேட்டார்.

“விளையாடாதீங்க சர்…” என்று சிரித்தாள்.

“நான் விளையாடவே ஆரம்பிக்கல பேபி…” என்று ஹஸ்க்கியான குரலில் கூற,

“ஆஹா…” என்று அதற்கும் சிரித்து வைத்தவள், “ஹய்யோ என் ஃபோன் எங்க?” என்று பதட்டமான குரலில் துழாவுவதை போல நடிக்க, சரண் சிங் அவருடைய போனை, அவரது பிங்கர் பிரிண்ட் போட்டு திறந்து அவளிடம் கொடுத்து,

“கால் பண்ணி பார் பேபி…” என்றார்.

“ஓ தேங்க்ஸ் சர்…” என்றவள், அவளது எண்ணுக்கு அழைக்க, ஷோல்டர் பேகிலிருந்து சப்தம் வந்தது.

“ஷப்பா… நல்ல வேளை… எங்கயோ மிஸ் பண்ணிட்டேனோன்னு பயந்துட்டேன்…” என்று போனை எடுத்துப் பார்த்தாள்.

அது பழைய மாடல் சாம்சங் போன். ஸ்மார்ட்போன் தான் ஆனாலும் பழையது.

“இன்னுமா இந்த போன்லாம் வருது?” ஆச்சரியபட்டார் சரண் சிங்.

“நான் முதல் முதல்ல என்னோட சம்பாத்தியத்துல வாங்கினது சரண் சர்.” என்று சிரித்தாள்.

“இன்னுமா பத்திரமா வெச்சுருக்க?”

“அஃப்கோர்ஸ்…” என்றவள், “உங்களோடது ஐபோன் 13 ப்ரோ போல இருக்கே?” என்று அவரது போனை திருப்பிப் பார்த்தபடி கேட்க, அந்த பக்கம் அனைவரும் உஷாரானார்கள்.

“எஸ்… உனக்கு வேணுமா பேபி?”

“என்ன சரண் சர்… எதை பார்த்தாலும் வேணுமா வேணுமான்னு கேட்டுட்டு இருக்கீங்க? இவ்வளவு தாராளமா இருக்காதீங்க. எல்லாரும் உங்க தலைல மிளகாய் அரைச்சுட்டு போய்டுவாங்க…” என்று சிரித்தாள்.

“ப்ரீத்தி பேபிக்குன்னா என்ன வேணும்னாலும் கொடுப்பேன்…” அவளை ஆழம் பார்த்தார் சரண் சிங்.

“இந்த ஃபோன் எவ்வளவு சர்?” ஆர்வமாக அவள் கேட்பதை பார்த்தவருக்கு, உள்ளுக்குள் உற்சாகம் பீறிட்டது.

“ஒன்னே முக்கால் லட்சம்…” ஸ்டியரிங்கை லாவகமாக வளைத்தபடியே கூற,

“ஓ மை காட்… இதை வாங்கணும்னா என்னோட மூணு மாச சம்பளத்தை கொடுக்கணும்.” என்று வாயை பிளந்தவள், “உள்ள இருக்க ஃபியூச்சர்ஸ பார்க்கலாமா சரண் சர்?” என்று ஆசையாக கேட்க, அவளை மெல்லிய சிரிப்போடு பார்த்தவர், தன்னுடைய பெருவிரல் ரேகையை பதிந்து, மீண்டும் பேசியை திறந்து கொடுத்தார்.

“தாராளமா பாரு பேபி. அப்படியே இப்ப கால் லிஸ்ட்ல இருக்க உன்னோட நம்பரை சேவ் பண்ணிடு.” என்று கூறவும், அவரை பார்த்து புன்னகைத்தாள்.

“டன் சரண் சர்…” என்றது அவருக்கு மட்டுமில்லை. மறுபுறத்திலிருந்த அவர்களுக்கும் தான்.

ஆல்வின் விரைந்து மெசேஜை அனுப்ப, சட்டென மெசேஜை ஓபன் செய்தவள், ஒரே நொடியில் லிங்க்கை க்ளிக் செய்து விட்டு அந்த மெசேஜை அடுத்த நொடியே அழித்தாள்.

“வாவ்… ஐஃபோன்னா அது தனி கெத்து தான் சரண் சர்…” என்றவள், கேமராவை ஓபன் செய்து தன்னை பார்த்துக் கொண்டாள்.

“எஸ்…”

“கேமரா வேற லெவல்…” என்றவளை பார்த்தவர், “ஒரு செல்பி எடு பேபி…” என்று கூற,

“இன்னைக்கு வேண்டாம் சர். ஜிம் போயிட்டு ஒரு மாதிரியா இருக்கு. இன்னொரு நாள் இதுக்காகவே வெளிய போறோம். செல்பி எடுக்கறோம்… ஓகே வா?” என்று புன்னகையோடு கேட்க, சரண் சிங் கள் குடித்த மந்தியாகி விட்டார்.

“டபுள் ஓகே பேபி…” என்றவர், “என்னைக்குன்னு நீயே சொல்லு…” என்று கேட்க,

“இப்ப ஆஃபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு சர். உங்களுக்கே தெரியும். மொத்த நெட்வொர்க்கும் ஹேக் ஆனதுனால எங்க லூசு பாஸுக்கு பைத்தியம் பிடிச்சுருச்சு.” என்று சிரித்தவள், “பேயாட்டம் வேலை வாங்கிட்டு இருக்கார்… பேய் மாதிரி என்ன பேயே தான்…” என்று கூற, சரண் சிங் சிரித்தார்.

“எப்படியும் நீ இங்க தான் வரணும். உனக்கிருக்கு மோளே… வா, வா…” என்று அந்தபக்கம் ஷான் கருவியதை கேட்டவளுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.

“சரி உனக்கு எப்ப ப்ரீன்னு சொல்லு. அப்ப வெளிய போகலாம் பேபி…” என்று அவளது கன்னத்தில் தட்டினார்.

இதே வேறு எதுவும் நேரமாக இருந்தால், அவளாடும் ஆட்டமே வேறு. பேயோட்டி விடுவாள். ஆனால் இப்போது அடக்கமாக இருக்க வேண்டிய நேரம் என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

அந்த பக்கம் ஆல்வின் கட்டை விரலை காட்டினான், அவரது போனை ஹேக் செய்து முடித்து விட்டதற்கு அறிகுறியாக!

“ஜாப் டன் பேபி. நீ அங்க இருந்து கழண்டுக்க பேபி… ஓகே வா பேபி?” வார்த்தைக்கு வார்த்தை பேபி என்றழைத்ததை பார்த்த ஆல்வினுக்கும் மகேஷுக்கும் சிரிப்பு தாளவில்லை. வாய்விட்டு சிரித்ததை கேட்டவளுக்கும் இதழோரம் புன்னகை மலர்ந்தது.

‘பேபியா… இருடா உன்னை வெச்சுக்கறேன்…’ ஷானை மனதுக்குள் வறுத்தாள்.

“கண்டிப்பா சொல்றேன் சர்.” என்று அவரிடம் செல்போனை கொடுத்தவள், “நான் இங்க இறங்கிக்கறேன் சர்…” என்று கூறினாள்.

“இரு பேபி என்ன அவசரம்?” என்று ப்ரீத்தியை பார்த்து கேட்ட சரண், “பக்கத்துல தான் நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. ஒரு பத்து நிமிஷம்…” என்று சாதாரணமாக கூறவும், அவரை அதிர்ந்து பார்த்தாள்.

மனதுக்குள் பக்கென்றது!

ஷானும் ஆல்வினும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

error: Content is protected !!