Kalangalil aval vasantham 24(2)

“வாவ். நான் அவ்வளவு முக்கியமா சரண் சர் உங்களுக்கு?” என்று அவரை மையலாக பார்த்து வைக்க, அந்த பார்வை அப்படியே அவரை சுழட்டிப் போட்டது.

“இல்லையா பின்ன? உன்னை முதல்ல பார்த்தன்னைக்கே விழுந்துட்டேன். இன்னும் எந்திரிக்கவே இல்ல பேபி…” என்று ஹஸ்கி வாய்சில் பிதற்ற துவங்க,

அந்த பக்கமோ, “ஏய் இதெல்லாம் கேக்க முடியலடி. ஓவரா பெர்ஃபார்ம் பண்ணாத…” என்று கடிகடியென கடிந்தான்.

“நான் வேண்ணா தூக்கி விடட்டுமா சரண் சர்?” அதே தொனியில் அவள் கேட்க,

“ஏன் பேபி?” புரியாமல் கேட்டார் இவர்.

“இல்ல, விழுந்துட்டேன்னு சொன்னீங்களே…”

“விழுந்தது என்னோட ஹார்ட் பேபி…” என்று அவர் தன்னுடைய நெஞ்சை பிடித்து கொள்ள,

“எங்க விழுந்துச்சு சரண் சர்? நான் தேடி எடுத்து தர்றேன்…” சிரிக்காமல் அவரை கலாய்த்துக் கொண்டிருப்பது தெரிய, இந்த பக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அது வேண்டாம் பேபி. உன்னோட ஹார்ட்ட மட்டும் தா. அது போதும்…”

விட்டால் ரோமியோவாகி விடுவார் போல என்று சிரித்த ஷான், “இங்க இறங்கிக்கறேன்னு சொல்லிட்டு இறங்கு ப்ரீத்தி…” என்றான் அவளிடம்.

அதை கேட்டவள், “சர், இங்க நிறுத்துங்க. இங்க இருந்து எனக்கு பக்கம்…” என்று கூற,

“உன்னோட ஹாஸ்டலுக்கே நான் டிராப் பண்றேன் பேபி…” என்று விடாப்பிடியாக நின்றார் சரண்.

“ஹய்யோ சர். இட்ஸ் ஓகே. ஹாஸ்டல் மேட்ஸ் எல்லாம் உங்களை நேர்ல பார்த்தா, ஓ மை காட்… என்னோட நிலைமை கஷ்டம் சர்.” என்று சிரித்தவள், “நான் இங்கயே இறங்கிக்கறேன்…” என்று முடித்தாள்.

“ஓகே… அப்புறம் எப்ப பார்க்கலாம்?” வண்டியை இடது ஓரமாக நிறுத்தியபடி சரண் சிங் கேட்க,

“ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணவா சர்?” அப்பாவியாய் அவள் கேட்டாள்.

“இட்ஸ் மை ப்ளெஷர்… எப்பன்னாலும் கால் பண்ணு பேபி.” கிறக்கமாக சிரித்தார்.

“தேங்க்ஸ் சரண் சர்… தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்…” என்றவள், புன்னகையோடு காரிலிருந்து இறங்கிக் கொண்டவள், வழியில் வந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.

அவளை பிரிய மனமில்லாமல் பிரிந்தவரை பார்த்த ஷானுக்கு சட்டென யோசனை தோன்றியது.

தன்னருகே அமர்ந்து கொண்டு அனைத்தையும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் புறம் திரும்பி, “மகேஷ், சரண் ரைட்ல திரும்ப இண்டிகேட்டர் போட்டு இருக்கார். டபுள் லேன் க்ராஸ் பண்ணித்தான் ரைட் சைடு போக முடியும். லெப்ட் ஹைஸ்பீட் ட்ராக்ல ட்ராபிக் ஹெவியா இருக்கறதால வெய்ட் பண்றார். அவருக்கு பின்னாடி கொஞ்சம் தள்ளி நிக்கற நம்ம சுமோவ அவர் வண்டி மேல மோத சொல்லுங்க. டைரக்டா டிரைவர் சீட் தான் இருக்கு. அதுல பாதி கிராஷ் ஆகணும். கை மட்டும் கொஞ்சமா அடிபடற மாதிரி…” என்று கூற, அதை அப்படியே மகேஷ் பிரதிபலித்தான்.

“சேகர், டார்கெட் வெஹிக்கிள் மேல ஒரு சிக்ஸ்டி கிலோமீட்டர் ஸ்பீட்ல மோதுங்க. ரைட் சைட் மட்டும் லேசா கிராஷ் ஆகற மாதிரி. டார்கெட் உயிருக்கு எதுவுமாக கூடாது…” என்ற அவனது உத்தரவை ஏற்றவர்கள், அதே போல செய்ய, ப்ரேக் பிடிக்க முடியாமல் நேராக வந்த டாடா சுமோ, இடிப்பதை தவிர்க்க எண்ணினாலும், அது முடியாமல் சரண் சிங்கின் வண்டியை இடித்து தடுமாறி நின்றது.

அந்த விபத்தை பார்க்கும் போது, வேண்டுமென்றே அந்த சுமோ வந்து இடித்ததாக யாரும் கூற முடியாது. சுமோ, அதன் லேனில் இருந்தது. சரணின் வண்டி வலது பக்கம் திரும்பி போவதற்காக நின்று கொண்டிருந்தது. ஹைஸ்பீட் லேன் பக்கம் சற்று அதிகமாக வந்த சரணின் மேல் தான் தவறென கூற முடியுமே தவிர, சுமோவை எதுவும் சொல்ல முடியாது.

டாடா சுமோ இடித்ததில் சரண் சிங்கின் வண்டியிலிருந்த ஏர்பேக்ஸ் அனைத்தும் திறந்து கொண்டது. வலது புறம் வதங்கி அவரது கை மாட்டிக் கொண்டது. ஜன்னல் திறந்திருந்ததால் அவர் அலறியதை அனைவரும் கேட்டனர்.

இடித்ததையும் அவர் அலறியதையும் கேட்டவன், “யார் மேல கை வைக்கிறான்? ராஸ்கல்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கருவ, அதை பார்த்த ஆல்வினும் மகேஷும் தான் விக்கித்தனர். கேட்டுக் கொண்டிருந்த ப்ரீத்திக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது.

இங்கு சரண் சிங்கோ, தனது வலது கையை பிடித்துக் கொண்டவர், மயக்கமாகி சரிந்தார்!

ஆம்புலன்ஸ் வந்தது, அவரை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தது, இடித்த காரின் ஓட்டுனர் மாயமானது, அவர்கள் யாரென கண்டுபிடிக்க முயலும் போது, அது காருடைய பதிவெண் இல்லை, லாரியுடையது என்று தெரிந்தது, அனைவரும் தலையை பியைத்துக் கொள்ளப் போவது எல்லாம் தனி கதை!

கொஞ்ச தூரம் ஆட்டோவில் போன ப்ரீத்தி, ஆட்டோவை கட் செய்து அனுப்பி விட்டு சற்று தூரம் நடந்தாள்.

போர்ஸ் டிராவலர் அவளருகில் வந்து நிற்க, மெளனமாக அதில் ஏறினாள்!

உள்ளிருந்த அனைவரும் கைதட்டி வரவேற்க, ஒருவன் மட்டும் அவளை ஆழ்ந்து பார்த்தபடி நின்றான். அவனது விழிகளில் பெருமையும் தெரிந்தது, அவளை இப்படியொரு இக்கட்டில் நிறுத்தி இருக்க கூடாதெனவும் தன்னையே கடிந்து கொண்டிருந்தான்.

ஷோல்டர் பேகை அப்படியே கீழே போட்டவள், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள். பெரிய விஷயத்தை செய்திருக்கிறோம் என்பதை விட, பயம் இன்னும் அவளது உடலை நடுங்க செய்து கொண்டிருந்தது.

“என்ன மச்சான், என்னாச்சு ப்ரீத்திக்கு?” என்று கேட்ட ஆல்வினை ஒற்றை கையால் வாய் மேல் விரல் வைத்து ‘உஷ்’ என்று காட்டி அடக்கினான். அவனுக்கு கூறியது தான் அனைவருக்கும் அல்லவா! ஒருவரும் வாய் திறக்கவில்லை!

அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து இருபுறமும் கையை ஊன்றியவன், “என்னடா?” என்று பரிவாகக் கேட்க, ஒன்றுமில்லையென தலையை இடம் வலமாக ஆட்டினாள்!

“ஹேய் நீ எவ்வளவு பெரிய விஷயத்த செஞ்சுட்டு வந்திருக்க தெரியுமா? செல்லகுட்டிடி நீ…” என்று அவளது கன்னத்தை பிடித்துக் கொஞ்சப் போக, அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அதை மறைக்கத்தான் அவள் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தது!

“புஜ்ஜி…” என்று அவளது தலையை உயர்த்த முயல, முகத்தை காட்ட மாட்டேன் என அடம் பிடித்து அவனது நெஞ்சில் முகத்தை வைத்துக் கொண்டு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

“பயந்துட்டேன்டா…” என்றவள், தன்னையும் மீறி விசும்ப, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான், மற்றவர்கள் பார்க்கிறார்களே என்றெல்லாம் அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

ப்ரீத்தி எந்தளவு பயந்திருப்பாள் என்பது தெரியும். அதை போக்க வேண்டும், அது மட்டும் தான் அவனது நோக்கமாக இருந்தது. அவளது உடல் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ஓகே ஓகே…” என்று அவளது முதுகை நீவிக் கொடுத்தான்!

“அந்த வீட்ல அவன் கிட்ட தனியா… அதுவும் கெஸ்ட் ஹவுஸ் போலாம்ன்னு அவன் சொன்னப்ப…” என்று நடுங்கியவள், “எவ்வளவு பயமா இருந்துது தெரியுமா?” என்றவள், இப்போது இன்னும் விசும்பியபடி, “நீ மட்டும் பேசிட்டு இல்லன்னா, கொலாப்ஸ் ஆகி இருப்பேன்…” என்று இன்னும் அழ,

“உனக்கு எதாவது ஆக நான் விட்டுடுவேனா? எந்த லிமிட் வரைக்கும் போகலாம்ன்னு எனக்கும் தெரியும் குட்டிம்மா. கொஞ்சம் தப்பா போகுதுன்னு தெரிஞ்சு இருந்தாலும், வேலையாவது ஒன்னாவதுன்னு உள்ள வந்து அவனை சாவடிச்சுருப்பேன்…” சிறுபிள்ளைக்கு சமாதானம் சொல்வது போல கூறிக் கொண்டிருந்தவனை பார்க்க ஆல்வினுக்கும் மகேஷுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

“இன்னும் எனக்கு நடுக்கமே தீரல…” என்று அவள் இன்னும் சிறு குழந்தையாய் முறையிட, அவளது கைகளை மென்மையாக பிடித்து விட்டவன்,

“இனிமே நடுங்காது… வா ஏதாவது போய் சாப்பிடலாமா?” என்று கேட்க, அவள் தலையாட்டினாள்.

“எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.” பிடித்த அவனது கையை விடவில்லை.

“மொதல்ல நல்லா சாப்பிடறோம்… நல்லா தூங்கறோம்… ஜம்முன்னு எந்திருச்சு அடுத்த வேலைய பார்க்கறோம்… ஓகே வா?” என்று சிரித்தபடி கேட்க, அதுவும் சரிதானென பட்டது அவளுக்கு. தலையாட்டினாள்.

அப்போதுதான் ஆல்வின், மகேஷ் மற்றும் சிலர் இருப்பது தெரிந்தது அவளுக்கு. அவர்கள் முன்பு அழுது விட்டதை எண்ணி தடுமாறித் தலைகுனிய,

“சாரி கைஸ். நீங்க உங்க வேலைய பாருங்க…” என்று முடித்தான்.

“எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு ப்ரீத்தி. இவ்வளவு பெரிய விஷயத்த செஞ்சுட்டு பயப்படலாமா?” பரிவாகக் கேட்டான் ஆல்வின்.

“புரியுது. ஆனா இதெல்லாம் புதுசு ஆல்வின் சர்…” என்று திணறியபடி கூறினாள்.

“அப்படி இல்லமா. யூ வேர் ஆக்டிங் லைக் எ ப்ரோ… எவ்வளவு கஷ்டமான விஷயத்த எவ்வளவு ஈசியா கிராக் பண்ணிட்டு வந்திருக்க… இனிமே அழ கூடாது. சரியா?” ஆதரவாக கூறியவனை பார்த்து லேசாக புன்னகைத்தவள்,

“ஓகே ஆல்வின் சர்.”

“ஐயோ… சரண் சர் மாதிரி ஆல்வின் சாரா… வேண்டாம் ராசாத்தி… ஆல்வின்ன்னு கூப்பிடு இல்லைன்னா அண்ணா கூட ஓகே தான்…” என்று கூறவும், அங்கே சிரிப்பலை படர்ந்தது.

“ஓகே ஆல்வின்…” என்றவள் சிரித்தாள்.

“சரி, நம்ம கணக்குக்கு வா.” என்று அவள் முன்பு அமர்ந்த ஷான், “என்னடி சொன்ன அவன் கிட்ட என்னை பத்தி? பைத்தியம், அரைலூசு, மெண்டல், அப்புறம் என்ன…?” என்று அவன் யோசிக்க,

“புல்டாக்…” என்று கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் ப்ரீத்தி.

“சரி போனா போகுதுன்னு பார்த்தா, கன்னாபின்னான்னு திட்ற…” என்று அவளது காதை பிடித்து திருக, “ஐயோ… சாரி பாஸ்… சாரி…” என்று ப்ரீத்தி கத்த, ஷான் சஞ்சீவிடம், “அதெல்லாம் ரெகார்ட் பண்ணிருக்கு தானே சஞ்சீவ்?” என்று கேட்க,

“அஃப்கோர்ஸ் பாஸ்…” என்றான் சஞ்சீவ் சிரித்தபடி.

“விடு ஷான்… பாவம்… அதுவே பயந்து போய் வந்திருக்கு.” ஆல்வின் சப்போர்ட்டுக்கு வர,

“அதெல்லாம் விட முடியாதுடா. இந்த பக்கி பயப்படவெல்லாம் சான்ஸே இல்ல. நாம திட்டின திட்டுக்கு எப்படியும் மாட்டுவோம், இப்படி சீன போட்டு தப்பிப்போம்ன்னு தான் நடிச்சுருக்கா…” என்று சிரிக்க, அவளும் ஈஈ என்று இளித்தாள்.

“நீங்க அறிவாளி பாஸ். ஊர்ல இருக்க அறிவெல்லாம் உங்க தலைல தான் கொட்டிக் கிடக்கு. பாருங்க அப்படியே வழிஞ்சு ஓடுது…”

“எல்லாம் உங்க தயவு தலைவரே…” என்றவன், அவளது கழுத்தை இடக்கையால் கட்டி கொண்டபடி அருகில் அமர்ந்து கொண்டான்.

உண்மையில் பயந்திருந்தாள். ஆனால் ஒரே நொடியில் தன்னை மாற்றும் வித்தை இவனுக்கு மட்டுமே கை வந்த கலை என்பதை புரிந்து கொண்ட போது, மனதுக்குள் சிலீரென்று குளிர் பரவியது. வலப்புறம் திரும்பி அவனை பார்க்க, அவனும் அவளைப் பார்த்து புன்னகைத்தான்!

“யூ ஆர் ஆசம் செல்லக்குட்டி…” என்றவன், பக்கவாட்டில் இன்னுமே இறுக்கிக் கொள்ள, உண்மையில் அந்த அணைப்பும், அவனது அருகாமையும் அந்த வெப்பமும் அவளுக்கு ஆயிரம் யானை பலத்தை கொடுத்தது!

“சரி தலைவரே… நீங்க என்ன சொன்னீங்க? பேபியா?” என்றவள், அவளின் தோளின் மேலிருந்த கையை முறுக்கியபடி எடுக்க,

“தலைவரே… தலைவரே… நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க தலைவரே… பே ன்னா பேய்… பி ன்னா பிசாசு தலைவரே…” எஸ்ஜே சூர்யாவின் மாடுலேஷனில் வேண்டுமென்றே ஓட்ட, ப்ரீத்தி அவளது சட்டை காலரை ஏற்றி விடுவது போல செய்து,

“உங்களுக்கு என்னோட வால்யு தெரியல தலைவரே. என்னோட வால்யு தெரிஞ்ச ஒரே ஆள் என்னோட ஸ்வீட்ஹார்ட் மட்டும் தான் தலைவரே…” என்றதும் அனைவரும் ‘ஓஓ’ என்று சிரித்தபடி ஓட்ட,

“உங்களுக்கு இவ்வளவு ஃப்ளர்ட் பண்ண தெரியும்ன்னு இப்ப தான் தலைவரே தெரியுது…” என்று பங்கமாய் கலாய்த்தான் ஷான்.

“டேய் ஓட்டாதடா, நாளைக்கும் மேடம் ஹெல்ப் வேணும்…” என்று ஆல்வின் எச்சரிக்கை மணி அடித்தான்.

“ஹா… அது.. அண்ணனுக்கு அந்த பயம் இருக்கு. உங்களுக்கு இல்லையே…” கிண்டலாக சிரித்தாள் ப்ரீத்தி.

“ஹய்யோ… பயமா இருக்கே…” என்று நடுங்குவதை போல நடித்தவன், “இவ்வளவு பயம் போதுமா தலைவரே?” என்று கிண்டலாய் கேட்க,

“இன்னும் கொஞ்சம் தூக்கலா…” என்று ஹஸ்க்கி வாய்ஸில் கௌண்டர் கொடுத்தாள் ப்ரீத்தி.

மாற்றி மாற்றி கலாய்த்து கொண்டிருந்தவர்களை, கைகளை தட்டி, தன்னை நோக்கி கவனத்தை குவிய செய்தான் ஆல்வின்.

“ஓகே கைஸ். ஜோக்ஸ் அப்பார்ட். இப்ப இருந்து சரண் சிங்கை கம்ப்ளீட்டா டேப் பண்றோம்.” என்றவன், “உன்னோட ப்ளான் என்ன ஷான்?” என்று ஷானை பார்த்துக் கேட்டான்.

விளையாட்டுத்தனத்தை விட்டுவிட்டு, ஷான், “அந்த பில்டிங்க அக்சஸ் பண்ணனும்னா நமக்கு அவனோட பிங்கர்பிரிண்ட் வேணும். பிகாஸ் அவனோடது நம்பர்ஸ் கம்பைன்ட் பயோமெட்ரிக் லாக். அவனோட ஐபோனை ஹேக் பண்ணியாச்சு. சோ அதுல இருந்து அவனோட பிங்கர்பிரிண்ட்டை எடுத்து த்ரீ டி பிரிண்டர்ல ஃபேக் சிலிக்கான் பிங்கர் பிரிண்ட் பண்ணலாம். மெயின் டோர் அக்செஸ் பண்றதுக்கு நமக்கு சிலிக்கான் பிங்கர் பிரிண்ட் கண்டிப்பா வேணும்.

நெக்ஸ்ட் வீட்டுக்குள்ள எல்லாமே ஆடோமைஸ்ட், இன்க்ளுடிங் லாக்கர் ரூம். அதையெல்லாம் அக்சஸ் பண்ணவும், அவனோட பிங்கர் பிரிண்ட் வேணும். இதையும் தாண்டி ஃபேஸ் அன்லாக் வெச்சுருந்தா என்ன பண்றது ஆல்வின்?”

தான் ப்ளான் செய்ததை கூறியவன், ஆல்வினிடம் யோசனை கேட்க, அதற்கு அவன், “எவ்வளவு பாதுகாப்பான லாக்கிங் சிஸ்டமா இருந்தாலும் அதை ப்ரேக் பண்ண முடியும். பேஸ் அன்லாக், கார்னியா அன்லாக்ன்னு எதுவா இருந்தாலும் ஹைஜாக் பண்ண சாப்ட்வேர் இருக்கு. ஒரு குட்டி மெஷின், லாக் மேல வெச்சா போதும். அந்த மெஷின் உள்ள இருக்க பயோமெட்ரிக் லாக்கை ப்ரேக் பண்ணி ஓபன் பண்ணிடும்.

சோ அதுக்கு நாம பெருசா மெனக்கெட தேவையில்ல. ஆனா அதுல கொஞ்சம் ரிஸ்க் இருக்கு. கொஞ்சம் ஏமாந்தாலும், நாம அன்லாக் பண்ற விஷயம் மெசேஜா போய்டும். சோ கூடுமான வரைக்கும் ஹேக் பண்ணி பிங்கர் பிரிண்ட் எடுத்து, அதன் மூலமா அன்லாக் பண்றது பெட்டர். ஹைஜாக் பண்றதை ஆப்ஷனா வெச்சுக்கலாம். இன் கேஸ் வேணும்னா யூஸ் பண்ணலாம்.” என்று கூறினான்.

“வாவ். தட்ஸ் கிரேட்.” என்ற ஷான், “இன்னைக்கு நைட் அடுத்த விக்கெட். சைலேஷ்…” என்று கூறிவிட்டு, “நைட் நைன் தர்ட்டி அட் ஏ2…” என்று புன்னகைத்தான்.