Kaliyuka kalki 10

கலியுக கல்கி – 10

ராஜலுவின் பண்ணை வீடு கலை கட்டியது.இன்று காலையில் தான் மிருதுவிற்கும் ரெங்கனுக்கும் திருமணம் முடிந்தது. சொந்தங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விருந்து நடந்து கொண்டு இருந்தது.அதுவே நூற்றி ஐம்பது பேருக்கு மேல் இருந்தனர் அனைவரையும் கமலமும் விதுரனும் வரவேற்றனர்.

ராஜலு ஒரு வித கோபத்துடன் அனைவரிடமும் புன்னகை முகமாகப் பேசிக்கொண்டு இருந்தார்.வேணி வழக்கம் போல் பண்ணை வீட்டின் கோடியில் உள்ள ஓர் அறையில் இருக்க, அவரைப் பின் பற்றி மிருதுவும்.

ஆம் அவர் கோபத்துக்கு இது தான் காரணம்.ரெங்கன் தாலி கட்டியதோடு சரி சீதாவின் பின்னே தான் சுற்றி திரிந்தான். அவள் கவலை கொள்ளக் கூடாது என்று எண்ணி ரெங்கன் செயல் பட, அனைவர் முன்னும் அவனைக் கடிந்துக் கொள்ள முடியாமல் ராஜலு மருகினார்.

விதுரன் தனது தாயை தேடி செல்ல அங்கு மிருதுவை பார்த்ததும் “சாப்பிட்டீங்களா பாபி ” என்று கேட்க திருத் திருவென முழித்தாள் மிருது.அவள் முழிப்பில் சிரிப்பு வர,அதனை அடக்கியவன் தனது தாயையும் மிருதுவும் சாப்பிட அழைத்துச் சென்றான்.

வேணியைப் பார்த்ததும் கமலம் அருகில் வர அதே போல் ராஜலுவும் வர வினை தொடங்கியது “வேணி நீ போய்ச் சாப்பிடு”எதார்த்தமாகத் தான் கமலம் சொன்னார் பாவம் சொன்னது தான் தாமதம் பிடித்துக் கொண்டார் ராஜலு.

“ஏன் அவள தனியா சாப்பிட சொல்லுற,அவளும் இந்த வீட்டு மருமக தானே என் பொண்டாட்டி தானே என்கூட உட்காந்து சாப்பிட கூடாதா,அதுக்குக் கூடவா தடா”.

இருக்கும் நிலை மறந்து மனிதன் பொங்கிவிட்டார்.நல்ல வேலை அங்கு உள்ள சந்தை இரைச்சலில் இவரது குரல் கேட்க வில்லை.கமலம் அழுது கொண்டே பேசவர. அவர் சத்தத்தை அருகில் இருந்து கேட்ட ரெங்கணும் சீதாவும் பதறிக் கொண்டு ஓடி வந்தனர்.வழக்கம் போல் வேணியின் பின்னால் மிருது.விதுரனுக்கு இன்று விடியல் தனக்குச் சரி இல்லை என்பது போலத் தான் தோன்றியது.

தங்கை ஒரு புறம் பெற்றவர்களை ஏமாற்றிப் படிப்பதற்காக என்று சென்னையில்,காதலித்த பெண் கம்பி நீட்டிவிட்டு பொள்ளாச்சியில்,இங்கு ரெங்கன் ஒருபுறம் என்றால் தனது தந்தை ஒருபுறம்,

சத்தியமாக வேறு ஒருவனாக இருந்தால் எங்காவது ஓடிவிடலாம் என்று தான் தோன்றும்.நம் ஆளோ அனைவரும் அவரவர் பங்குக்குச் செய்யுங்கள் எத்தனை தூரம் செல்ல முடியுமோ செல்லுங்கள் என்ற ரீதியில் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தான்.

என்ன நானா என்று வந்த ரெங்கனை “எதாவது பேசுனா என்ன பண்ணுவேன்னு தெரியாது, எதுக்குடா இந்தப் பொண்ண கல்யாணம் பண்ண”.

“இந்தம்மா சீதா உனக்குக் குழந்தை வேணுனா நிறைய அநாதைக் குழந்தைங்க இருக்கு தத்து எடுத்துக்க வேண்டியது தானே,இந்த இழுச்ச வாய் பொண்ணு தான் உனக்குக் கிடைச்சுதா” என்று சீதாவையும் ஒரு காட்டுக் காட்டினார். இடையில் பேச வந்த வேணிக்கு அடியே விழுந்து இருக்கும் கை ஓங்கிவிட்டார்.அப்பொழுதும் நம் விதுரன் அசைய வில்லையே.

மிருதுவிற்கு ‘என்ன டா இது’ என்று கொடுமையாக இருந்தது.போன இடமெல்லாம் புலி புகுந்த காடாக இருந்தால் அந்தச் சிறு பெண் என்ன தான் செய்வாள்.

மேலும் அனைவரையும் ராஜலு தீட்டி எடுக்க எங்கிருந்தோ வந்த தொட்டா வேணியின் இட கையில் பாய்ந்தது.அனைவரும் சுதாரிக்கும் முன்னே அடுத்தத் தொட்டா சொல்லி வைத்தார் போல் மிருது,விதுரன் எனச் சரமாரியாகத் தாக்கியது.

இதனை யாரும் எதிர் பார்க்கவில்லை பாதுகாப்பிற்கு வழமை போல் நிறுத்தப் பட்ட ஆட்களால் கூட நிலையைக் கணிக்க முடியவில்லை கண் இமைக்கும் நொடி பொழுதில் நிலைமை கை மீறி சென்று விட்டது.

இப்போது விதுரரின் ஆட்களும் எதிர்க்க.புழுதி பறக்க ஒரு கோர தாண்டவம்.சுமார் அரை மணி நேரத்தில் அந்த இடத்தைச் சூடு காடாக மாற்றி வீட்டு சென்றனர்.

ஒருநாளும் இது போல் நடந்ததில்லை.அவர்கள் பார்க்கும் கட்ட பஞ்சாயத் தொழிலில் இவை சத்தியம் தான் என்றாலும் பெரிய ஆட்களின் பழக்கமும், குடும்பப் பாரம்பரியமும் அவர்களைக் காத்து வந்தது. முதல் முறை சறுக்கல்,ராஜலு தெரியாமல் செய்து வந்த சேவையை விதுரன் பகிரங்கமாகச் செய்வதை முதலில் ராஜலு எதிர்த்தார் என்பது தனிக் கதை.எதை எண்ணி அவர் பயந்தோரோ அது இன்று நிகழந்து விட்டது.

பாதிக்கப் பட்ட எவனோ ஒருவன் தான் என்பது திண்ணம்.ஆனால் என்றுமே விழித்து இருக்கும் விதுரனை குடும்பச் சூழ்நிலை முடக்கி விட்டது.அடுத்து ஒரு மணி நேரத்தில் போலீஸ் சூழ்ந்து கொண்டது.அடையாளம் காண முடியாத அளவிற்கு உயிருக்கு போராடிய அனைவரையும் அள்ளி போட்டு கொண்டு மருத்துமனை விரைந்தனர்.

“ஏப்புள்ள பொன்னி என்ன வெறிக்க வெறிக்க உட்காந்து இருக்க,நான் சொல்லி கொடுத்த மாதிரி தானே உங்க அப்பா கிட்ட சொன்ன”.

“ஆமா முத்து”.

“அப்பாடி நான் பயந்து கிடந்தேன் எதாவது உளறி வச்சுடிவியோனு பரவாயில்லை”.

ப்ச்…. எனக்கு மனசு கஷ்டமா இருக்கு முத்து.
“வேணாம் பொன்னி எதையும் நினைக்காத நமக்குத் தேவ இல்லாத எதையும் அழுத்தமாகச் சொன்ன முத்து.முதல வேலைக்குக் கிளம்பு நம்பச் சம்பாரிச்சா தான் சோறு.தேவையில்லாத பேச்சு வேணாம்”.

முத்துவின் நியாயம் புரிய அமைதியாக வேலைக்குக் கிளம்பி சென்றாள் பொன்னி.மணம் முழுவதும் விதுரரின் வசம்.அவன் தேவைகளின் நினைவு,தினமும் கள்ள தனமாகக் கிடைக்கும் அணைப்பின் நினைவு, இன்னும்…. எண்ணம் முழுவதும் அவனே.

அங்கு இருந்து தந்திரமாக வந்த இரு பெண்களும் பொள்ளாச்சி வந்து தான் பிடித்து வைத்து மூச்சை வெளியிட்டனர்.அதன் பிறகு பெற்றவர்களிடம் அங்கு வேலை செய்ய முடியவில்லை சாப்பாடு சரியில்லை என்று சொல்லி சமாளித்தனர்.மதியமே முத்து அலைந்து திரிந்து சோடா கம்பெனியில் பொன்னிக்கும் சேர்த்து வேலை வாங்கி விட்டு தான் ஓய்ந்தாள்.

பின்னே அன்றாடம் பிழைக்கும் குடும்பம்.நடந்ததை எண்ணி பொன்னி வருந்த.பெற்றவர்களின் வயிற்றை எண்ணி முத்து வருந்தினாள்.பொன்னியின் மென்மையான குணம் அறிந்து அவளுக்கும் சேர்த்து வேலை வாங்கிக் கொண்டாள்.இதோ இரு பெண்களும் தங்கள் கடமைக்குச் சென்றுவிட்டனர்.
இங்கு நடந்தவை தெரியாமல் பெண்கள் தங்களின் வாழ்க்கை சக்கரத்தை சுழட்டி கொண்டு இருந்தனர்.

அங்குச் சென்னையில் அரை மயக்கத்தில் தனது வீட்டில் தனது மகன் அறையில் படுத்து இருக்கும் பெண்ணைக் கோபமாக முறைத்துக் கொண்டு இருந்தார் ராகவ்வின் தாய்.

“என்ன கருமம்டா இது. பெரியவனே அவ ஆத்து மனுஷாளு கூப்புட்டு இந்தப் பொண்ண அனுப்பி வைடா .நேக்கு கோப கோபமா வருது”.

“பேசாம இருங்கோ. டேய்! அண்ணா நோக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிக்கோ நான் இவங்களை அவா ஆத்துல சேர்த்துடுறேன்,நன்னா வசதியா வளர்ந்த பொண்ணுடா”. ஆதங்கமாகக் கூறினான் ராகவ்,தனக்கு உயிர் கொடுத்து வாழ வழி செய்த விதுரனுக்கு விஸ்வாசமாகப் பேசினான் ராகவ்.

“பாலாஜி பார்த்தியாடா உன் தம்பிய பெரியவா கிட்ட சரிக்கு சரி பேசுறத,கொஞ்சமாவது மரியாதை இருக்கா பாரு,அது மட்டுமில்லை ஏதோ பொண்ண கல்யாணம் செய்துக்கப் போறானாம்,நம் இனமில்லை.இவன் என் பிள்ளை ராகவ் இல்லடா” என்று ஜானகி புலம்ப.சோமு நடப்பதை கவலையாக பார்த்தார்.
தனது தாயின் ஓப்பாரியில் கண் விழித்த அலமேலுவை நோக்கி சென்றான் பாலாஜி. அவள் அவனைப் பார்த்தது ஒரே முறை தான் இன்று தான் அவனை நேரில் பார்க்கின்றாள் அவனுமே.பார்த்துக் கொண்டே அவளை நெருங்கும் நேரம் ராகவ்விற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது ஆந்திராவில் இருந்து.

அழைத்து டிரைவர் அவன் மட்டுமே வேலையாக வெளியில் சென்றதால் தப்பித்தான்.அவன் தான் ராகவ்வை அழைத்து நடந்தவை பற்றி சொல்ல இங்கே பேச்சே எழவில்லை.அவன் முகத்தைப் பார்த்த அலமேலு “என்ன ராகவ் என்ன ஆச்சு” பயம் கவ்வ கேட்க.

“மன்னி கிளம்புங்கோ”.

“டேய் அவா ஆத்துல இருந்து வராம நான் இவளை அனுப்புறாத இல்லை” ஜானகி நிலை தெரியாமல் போர் கோடி பிடிக்க.

“இனி அவா யாருமே வர மாட்ட, நீயே உன் பையன வச்சுக்கோ” என்று கத்தியவனைப் பார்த்த அலமேலு பதறி “என்ன சொல்லுற ராகவ் என்ன ஆச்சு”.

“எல்லாமே போச்சு மன்னி ரெங்கன் அண்ணா கல்யாணத்துல கலவரம் ஆகிப்போச்சு,அங்க எல்லாரும் உயிருக்கு போராடிட்டு இருக்கா மன்னி”.

அய்யோஓஒ! …….. என்று கண்ணில் நீர் வர கதறியவளை பார்க்கும் தாரணி அற்றுப் பாலாஜி நெருங்க.அவனைத் தடுத்த ராகவ் மன்னி வாங்கோ போலாம் என்று அவளை கை பற்றி அழைத்துச் சென்றான்.

“டேய்! பொம்மனாட்டிய ராத்திரி நேரத்துல அழைச்சுண்டு போற இருடா நானும் அப்பாவும் வரோம்”.

ஒன்னும் வேண்டாம் நீங்க செஞ்சதே போதும் என்றவன் யாரையும் பார்க்காமல் பணத்தை மட்டும் அள்ளி கொண்டு சென்றான்.அலமேலு புலம்பி கொண்டே சென்றாள் நானும் அவுங்க கூடவே இருந்து இருக்கணும் ராகவ், சுயநலமா யோசிச்சுட்டேன்.

ச்ச…. எனக்கு இந்தக் காதல் கரு மாந்திரம் எதுவும் வேண்டாம் அம்மா, அப்பா, அண்ணா தான் வேணும் என்று சிறு பிள்ளை போல் அழுது புலம்பியவளை கவலையோடு பார்த்தான் பாலாஜி.

அவனைக் கண்டு கொள்ளாமல் போனில் புக் செய்து காரை வர செய்தவன் ஏற,அவனோடு பாலாஜியும் ஏறிக்கொண்டான் இப்போது ஜானகி எதுவும் பேசவில்லை பாலாஜிடம் மட்டுமே “டேய் போய்ப் போன் போடுடா நேக்கு பயமா இருக்கு”

“சரிம்மா அப்பா பார்த்துக்கோங்க நான் வந்துடுறேன்”.யார் காரில் ஏறினார் என்று கூடத் தெரியாமல் அழுது கரைந்தாள் அலமேலு.

நேற்று தான் வயிற்றைச் சுத்தம் செய்கிறேன் என்று தொண்டை வரை ட் யூப் விட்டு உயிர் வதை செய்து இருந்தனர், அது வேறு அவளின் பலத்தைக் குறைத்து இருந்தது.அழுக கூடத் தெம்பு இல்லாமல் அழுதவளை பார்க்க திராணியற்று அவளை இழுத்து இறுக்கி அணைத்தான் பாலாஜி.

ராகவன் துடித்துக் கொண்டு இருந்தான் டிரைவர் மூலம் அவன் அறிந்தவற்றை முழுதாகச் சொன்னால் அலமேலு பயம் கொள்வாள் என்று மேலோட்டமாகச் சொல்லி வைத்தான்.இதில் பொன்னியும் முத்துவும் சென்றது வேறு அதிர்ச்சி.பின்பு சென்றதே நன்மை என்று எண்ணியவன் கடவுளிட ம் வேண்டி கொண்டே பயணித்தான்

எதிர்ச்சியாகத் தனது பக்கத்தில் அழுது கொண்டு இருக்கும் அலமேலுவை பார்க்க, அவளோ பாலாஜியின் அணைப்பில்.

ஆ …. என்று வாய் பிளந்த ராகவ் பின்பு பாலாஜியை முறைத்துக் கொண்டு அந்தப் புறம் திரும்பி கொண்டான்.தீமையிலும் ஓர் நன்மை.

விடியும் தருவாயில் மருத்துவமனை அடைந்தவர்கள் அங்குக் கண்ட காட்சியில் மூச்சடைத்து. தப்பித்த நான்கு ஜீவன்களும் துடி துடித்து அழுது கரைய, உயிருக்கு போராடிய நிலையில் மூன்று ஜீவன்கள் உள்ளே.

இனி தான் கல்கியின் ஆட்டம்…..