kalki-1

kalki-1

கலியுக கல்கி – 3

முத்து கதவை திறந்தவுடன் அவள் கண்டது வெறும் ஜட்டியோடு நிற்கும் ராகவனைத் தான்,அப்போதுதான் குளித்திருப்பான் போலும்,ஈர உடம்புடன் இருந்தான்,அவனது வெண்மை நிறத்திற்கும் ,அவன் ஈர உடலுக்கும்,கவ்விய சிகப்பு நிற ஜட்டிக்கும் சொல்லவே வேண்டாம்,அது மட்டுமா,புஜங்களின் வலிமையையும்,அகன்ற தோளும், குறிகிய இடுப்பும்,நீர் பூத்த கால்களும் அவனது ஆண்மைக்குச் செருக்காக இருந்தது.

அவனை ஆதி முதல் அந்தம் வரை முழுதாகப் பார்த்தவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு,கருமம் கன்றாவி தலையில் அடித்து திரும்பி நின்றாள்,அவளது குரலை கேட்ட ராகவன் அதிர்ந்து திரும்பினான்,”ஏய்,இங்க என்ன பண்ற நீ”,அவசரத்தில் அண்டாக்குள் கை விட்டால் கூடப் பொருள் கிட்டாது என்பதைப் போல,கட்டில் பக்கத்தில் இருக்கும் துணியைக் கவனியாது பதட்டத்தில் தேடி கொண்டு இருந்தான்.

“ஹ்ம்ம்….ஐயா தான் சாப்பிட கூப்புட்டாங்க,இல்லனா நான் ஏன் வரேன்,எனக்கு வேண்டுதல் பாருங்க இந்தக் கொடுமை எல்லாம் பாக்கனுன்னு”,முத்து அவளது தோளில் இடித்துக் கொண்டு செல்ல,பல்லை கடித்தான் ராகவன்.

“இவளுக்குக் கொழுப்பை பாரேன்,பொம்மனாட்டியா இவ ராட்சசி ஒரு நாள் வசமா என்னடா மாட்டுவ அன்னக்கி இருக்குடி நோக்கு,அவளை வறுத்தெடுத்த வாரு உணவு மேஜைக்குச் சென்றான்.

விதுரன் முன் தலை குனிந்து அமர்ந்தவன் தட்டை எடுத்து வைக்க,முத்து அவனுக்குப் பரிமாறினாள்,அவளது கை வைத்தே அவள் தான் என்று கண்டு கொண்டவன்,அவளை பார்க்க சங்கட பட்டுக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் உண்டான்,முத்துவுக்குத் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதற்குள் விதுரன் உணவை முடித்துக் கொண்டு ,”ராகவா சாப்டுட்டு மேல வா”,விதுரனை பார்த்து தலையை மட்டும் அசைத்தவன் மீண்டும் குனிந்து கொண்டான்.

பொன்னி அடுக்கலைக்குள் புகுந்து கொள்ள,முத்து ராகவனிடம் நெருங்கி,”யோவ் ஐயரே பார்க்க கூடாதது எதுவுமே நான் பார்க்கலையா,நான் என்ன பார்த்தேனா…..,”அவள் நமுட்டு சிரிப்புடன் சொல்லவர.

அவளை முறைத்து பார்த்தவன் கையைக் கழுவி கொண்டு விதுரன் அறை நோக்கி சென்றான்,ஏனோ முத்துவுக்குச் சிரிப்பாக வந்தது,அவனிடம் வம்பு செய்வது என்றால் அல்வா உண்டது போலத் தித்திப்பாகத் தான் உள்ளது என்று எண்ணி கொண்டாள்,அவள் எண்ணத்தை கலைப்பது போல் முதுகில் அடித்தாள் பொன்னி.
“ஆ……….ஏண்டி பக்கி அடுச்ச சுள்ளுனு வலிக்குது”,முதுகை தேய்த்தவரே பொன்னியை முறைத்தாள்.

எப்போப்பாரு அந்த அண்ணன் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்க,இப்போ என்ன பண்ணி வச்ச ஒழுங்கா சாப்புடாம போய்ட்டாங்க,என்னாடி சொன்ன அந்த அண்ணன் முகமே சரியில்லை ?……

தான் அணிந்து இருக்கும் ஜாக்கட்டை தூக்கி விட்டு “உண்மைய சொன்னேன்” என்று அசால்ட்டாக நடந்து சென்றவளை,”இவ…… திருந்தாத கேசு”,தலையில் அடிக்காத குறையாகப் புலம்பி சென்றாள் பொன்னி.
—————————————————————————————————
அங்கு ராகவன் குடுத்த காகிதத்தை உற்று பார்த்துக் கொண்டு இருந்தான் விதுரன்,ஒரு கண் பார்வை குறைவு என்பதால் சற்று தூக்கி பிடித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்,ஒரு நொடி அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளைப் பார்த்த ராகவன் எச்சில் கூட்டி விழுங்கினான்,இந்த முறை வந்த பஞ்சாயத்து சற்று விசித்திரமாகத் தான் இருந்தது.

விதுரன் பதிலை எதிர் நோக்கி அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவன்,படித்து முடித்தவன் அந்தக் காகிதத்தை ராகவனிடம் கொடுத்து தனது தந்தையிடம் கொடுக்கச் சொன்னான்,இதுக்கு அவரால் மட்டுமே தீர்ப்பு சொல்ல முடியும் என்பதை ராகவனும் அறிந்தே இருந்தான்.

“ராகவா,நாளைக்கி காலைல நானா கிட்ட கொடுத்துடு,அவர் பார்த்துக்குவாரு ,அப்புறம் பெத்தா (பெரியம்மா) கிட்ட போன் பேச சொல்லு”,அவன் சரியென்று விடை பெற,தனது உடைகளைக் களைத்துக் கட்டிலில் விழுந்தான் விதுரன்.

படுத்துக் கொண்டே இண்டர்காம் எடுத்து தனக்குப் பொன்னியை பால் எடுத்து வருமாறு பணிந்தான்,போனை எடுத்தது முத்து என்பதால் பொன்னிக்குப் பதில் அவள் எடுத்து வந்துவிட்டால் என்று சிந்தித்தவன் ராகவனுக்கு அடித்து விடயத்தைச் சொல்ல,கையில் உள்ள போனை வெறித்துப் பார்த்தான் ராகவன்,”நேக்கு வேணும்,இதெல்லாம் ஒரு பொழப்பு அவளைப் பார்க்க பயந்துண்டு தான் நானே சுத்திண்டு இருக்கேன்,விதி என்ன அவகிட்டியே சிக்க வைக்குதே கடவுளே”.

விதுரன் எண்ணியது போல முத்துதான் பாலை எடுத்து சென்றாள்,அவள் செல்வதைப் பார்த்து வேகமாக அவளைத் தடுத்த ராகவன்,”ஏய்,அண்ணன் பொன்னிய தானே பால் எடுத்துண்டு வர சொன்னார்,நீ ஏன் போற அவ எங்கே”,

“யோவ்,யாரு பால் கொண்டு போன என்ன,குடிக்கத் தானே போறாரு,அவரை பாத்தாலே பொன்னி பயந்துக்குது நானே கொண்டு போறேன்,வழிய விடுங்க”.

“சொன்னதையே கேட்க மாட்டியா நீ,உன்னெல்லாம் உங்க ஆத்துல எப்புடித்தான் சமளிக்குறனு நேக்கு தெரியலை,பொம்மனாட்டியா அடக்க ஒடுக்கமா இருக்கியா எப்போ பாரு சேட்டை பண்ணிண்டு”,அவள் மேல் இருக்கும் கோவத்தை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து வைத்து தீட்டி தீர்த்து விட்டான் ராகவன்.

கண்ணில் கண்ணீர் வழிய அவனை நிமிர்ந்து பார்த்தவள்,எதுவும் பேசாமல் பொன்னியை அழைத்துப் பாலை அவளிடம் கொடுத்து விட்டு அறைக்குச் சென்றுவிட்டாள்.

ராகவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது,,”ரொம்பப் பேசிட்டோமோ முயல் குட்டியா சுத்திண்டு இருப்பா,பாவம் நன்னா திட்டிட்டேன்”,அவனும் தனது அறைக்குச் சென்றான் புலம்பி கொண்டே, (முயல் குட்டியா?).

நடுங்கும் கரங்களைக் கட்டுப் படுத்திக் கொண்டு பால் எடுத்து சென்றாள் பொன்னி,விதுரரின் பார்வையும் தானே அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டுமென்று அவன் எண்ணுவதையும் கண்டு கொண்டவளுக்குப் பயமாக இருந்தது,உள் மனம் போர் முரசு கொட்ட,நடக்கக் கூட அவளால் முடியவில்லை, முயன்று கால்களை நகர்த்தி அவனது அறைக்குச் சென்றாள்.

அவள் வரவை உணர்ந்தவன் கை நீட்டி அந்தப் பால் லோட்டாவை பெற்று கொண்டான்,அப்பாடா என்று செல்ல போன பொன்னியை ,”எங்க போற”,

அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் நின்றவளை பார்த்துக் கொண்டே பாலை குடித்து முடித்தான்,எழுந்து வந்து அவளது கை பற்றிக் காலி லோட்டாவை திணித்தவன்,அவள் காதுக்கு மிக அருகில் சென்று எதுவோ சொல்ல அவள் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

உள் பனியன் அணிந்து இருந்தாலும் அகன்ற தோள்கள் பீமனை அல்லவா நினைவு படுத்திக் கின்றது,அவனது தோற்றம் பயத்தை அளிக்க முயன்று “நா………..நா……….நான் மாட்டேன்”,அவளது மறுப்பை ரசித்தவன்.

“என்ன மாட்ட”

“என்னால முடியாது ப்ளீஸ் விட்டுருங்க”

ஹே….இக்கடரா,வர மறுத்தவளை கோபம் கொண்டு இழுத்து அமர வைத்தான்,பற்றிய கைகள் வலி கொடுக்கக் கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.

“எனக்கு எதிர்த்துப் பேசுனா புடிக்காது ,நான் சொன்னா நீ செய்யணும்”

தலையை ஆட்டி தன் மறுப்பைத் தெரிவிக்க,அதற்கு மேல் பொறுமையற்று அவனே செயலில் இறகினான்.

அவசரமாக அவனைத் தடுத்தவள் தானே அதைச் செய்தாள்,இரண்டு கண்களையும் இறுக்க மூடி கொண்டு அவன் சொன்னதைச் செய்தவள் சிறிது நேரம் கழித்து அவன் உறங்கவும்,அழுது கொண்டே தனது அறைக்குச் சென்றாள்.

கத்தி அழுதாள் முத்துவிற்குக் கேட்டு விடக் கூடும் என்று முயன்று தலையணையில் முகம் புதைத்து அழுக, மறுபுறம் ராகவன் பேசியதை எண்ணி முத்துவும் பொன்னிக்கு தெரியாமல் அழுது கொண்டு இருந்தாள்.

இந்தக் காலம் என்ன வைத்திருக்கிறது இரண்டு பெண்களுக்கும் என்று யார் அறிவார்…அறிந்தவன் அமைதி புரிய நாமும் காலத்தை நோக்கி.

————————————————————————————————–
மறு நாள் காலையில் இரு தோழிகளும் தங்கள் வேலையை மட்டும் கடமையாக கொண்டு செயல் பட,ஆண்கள் உண்டு வெளியில் சென்று விட்டனர்.தனித்திருக்கும் தோழிகள் இருவரும் அப்போதுதான் ஒருவருக்கு ஒருவர் முகத்தைப் பார்த்து கொண்டு திகைத்து நின்றனர், இருவருக்கும் கண் இமைகள் வீங்கி போய் இருந்தது.

“ஏன் புள்ள பொன்னி என்னாச்சு”,பொன்னி உடைந்து போய் அவளைக் கட்டி கொண்டு அழுதாள்.

ஏய்,அழுக்காத புள்ள முத்து சொல்லுவதைக் காதில் வாங்காது அழுது கரைந்தவள்,நடந்தவையை மறைத்து விட்டு,” அப்பா நியாபகம் புள்ள” என்றால், நம்ப மறுத்தது முத்துவின் மனம்.
————————————————————————————————–
அங்கு ராகவனை அருகில் அமர்த்திக் கொண்டு பேசினார் விதுரனின் தந்தை,என்ன ராகவா எங்க இருக்கான் அந்தப் பரதேசி முதல்ல இழுத்துட்டு வா,”

அவர் சொல்லவே விதுரனின் ஆட்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்தனர்,வந்தவனுக்கு வயது சுமார் அறுபது இருக்கும்,திகைத்துப் போய்விட்டார் சுந்தர ராஜலு,பின் சிரித்து கொண்டே (அவர்கள் தெலுங்கில் பேசியதை நாம் தமிழில் பார்ப்போம்), “ஏன்யா என்ன வயசாகாது,உனக்கு பதினெட்டு வயசு பொண்ணு கேட்குதா,பார்த்தா படுச்சவன் மாதிரி இருக்க,பேத்தி வயசு பொண்ண கட்டிக்கிட்டு இருக்க”,

அவுங்க அப்பா அம்மாவே அதைப் பத்தி கவலை படல,நீங்க ஏன்?

ராஜலுக்குக் கோபம் வந்தது இருந்தாலும்,பெற்றவர்கள் மீதும் தவறு இருப்பதால்,பொறுமையாகக் கையாண்டார்,

ஓ…………… சுரேஷ் அவர் உரக்க அழைக்க,அவரது பணியாள் ஒருவன் மற்றொருவனை அடித்து இழுத்து வந்தான்,அவன் முகமெல்லாம் ரெத்தம் அவன் கருப்பா,சிகப்பா என்று தெரியாத அளவிற்கு வெளுத்து விட்டனர்.

இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த பெருசுக்கு வேர்த்துக் கொட்டியது,இத்தனை வயதுக்குப் பின் இப்புடி அடிவாங்கினால் சத்தியமாகச் சிவலோக பதவி தான் என்பதை அறிந்தவன்,ராஜலுவை நோக்கி,”ஐயா,அந்த பொண்ணு எனக்கு வேணாம்”, அவசரமாக அந்த பெரியவர் மறுக்க,மீசைக்குள் பதுங்கி இருக்கும் உதடு சிரிப்பில் துடித்தது ராஜலுக்கு,அவனிடம் கையெழுத்து பெற்று அவனை அனுப்பி வைத்தனர்.

பின்பு அந்தப் பொன்னையும்,பெற்றவர்களையும் அழைத்தவர்,”யோவ்,உனக்கு கேவலமா இல்ல,பணத்துக்காகப் பொண்ண ஒரு கிழவனுக்குக் கட்டி கொடுத்து இருக்க,பொண்ணுக்கு நகை போட வக்கு இல்லாதவன் எதுக்குடா குழந்தை பெத்துக்கிட்ட”, கோபத்தில் கண்கள் சிவந்தது.

ஐயா,வசதி இல்லங்க இந்தப் புள்ளைக்குப் பின்னாடி இன்னும் இரண்டு பொட்ட புள்ள இருக்கு,அதான் வேற வழில்லாமா”,

பவுன் போட்டு கட்டிக்கிறேன்னு சொன்னாரு,முக்கியமா மூணு வேல அது நிம்மதியா சோறு சாப்புடும் அதான்”,

“கொடியது கொடியது வறுமை கொடியது ,அதிலும் கொடியது இளமையில் வறுமை”,ஒரு ஜான் வயிற்றுக்காக உடம்பை விற்கும் பெண்களுக்கும்,இவ்வாறு வறுமையில் தனக்குத் தகுதி இல்லாத திருமண வாழ்க்கையில் சிக்கும் பெண்களுக்கும் பெரிதாக வேறு பாடில்லை,என்ன சமுதாயம் இது?, தனது கம்பிர குரலால் சுந்தர ராஜலு,

“இனி உன் பொண்ணுக வாழ்க்கைக்கு நான் பொறுப்பு,இந்த பொண்ணுக்கு வேற வரன் பார்த்து வைக்குறேன்,உனக்கும் வேலை போட்டு தரேன் நீயும் உன் பொஞ்சாதியும் வேலை பாருங்க,கமலம்”தனது மனைவியை அழைத்தவர் அந்த அம்மாளுக்கு ஏதாவது வேலை குடு என்று சென்று விட்டார்.

கமலமும் அன்பாக அனுசரித்து அவருக்கு வீட்டு வேலையைப் பகிர்ந்து கொடுத்தார்,ஒரு குடும்பத்தை ஆக்கவும் தெரியும்,அளிக்கவும் தெரியும் என்பதைக் கண்டு கொண்டான் ராகவன்,அந்த கிழவனை உயிரோடு விட மாட்டார்கள் என்று தான் எண்ணினான்,ஆனால் அதற்கு எதிர்மறையாக நடந்ததை எண்ணி வியந்து போனான்.

அவனுக்கு யார் சொல்லுவது நியாயத் தராசை நிறுத்தி பார்த்தே தீர்ப்பை வழங்கும் வள்ளல்கள் என்று, பெரியவர் மட்டும் தவறு செய்யவில்லை,பெற்றோர்களும் தான் படிப்பை பாதியில் நிறுத்தி அந்தப் பெண்ணை வறுமைக்காகத் திருமணம் செய்து வைத்து விட்டனர்,இதனை அறிந்த அப்பெண்ணின் தோழி ஒருத்தி அவள் தந்தையிடம் சொல்ல,அவர் விதுரன் காதுக்குக் கொண்டு சென்றார்,பாலகாவின் காவல் தெய்வம் அல்லவா அவன்,அவர் எண்ணியது போல நல்ல தீர்ப்பே வழங்க பட்டது.

தனது கணவன் வழங்கும் தீர்ப்பை அறையில் இருந்து பார்த்த வேணிக்கு விதுரன் நியாபகம் வந்துவிட்டது,ஆசையாக ஆசையாகக் கூடி பெற்ற மகன் தான் உயிரோடு இருப்பதற்கு அவனும் ஒரு காரணம்,ஒரு மாதம் மட்டுமே கணவனின் வசம் இருந்தாலும்,அவரது காதலை இன்றளவும் அணு அணுவாகப் பருகி கொள்வார் வேணி,கமலத்தை விட அழகில் குறைவு என்றாலும்,ராஜலுக்கு வேணியின் மீது தனிப் பிரியம்,அதனை கமலம் அறிந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை,அன்பையும்,காதலையும் மூவரும் போட்டி போட்டு பகிர்ந்து கொண்டனர்.
கடந்து வந்த பாதையை எண்ண கண்ணில் இருந்து நீர் நிற்காமல் வழிந்தது,வேணி குலுங்கி அழுக அவரது இடையை இறுக்கி கோபத்தைக் காட்டினார் சுந்தர ராஜலு,அவரது கை மீது கை வைத்து ஒரு புண் சிரிப்புடன் அவரைத் திரும்பி பார்த்தார் வேணி.

கண்களைத் துடைத்து கொண்டவர்,”அது எப்புடி பாவா நான் அழுதா நீங்களும்,உங்க பையனும் அடுத்த நிமிஷம் என் முன்னாடி வந்துறீங்க”, சிரிப்புடன் அவர் கேட்கவே.

அவரது கேள்வியை அலட்சியம் செய்தவர்,”வேணி போனதடவைய விட இந்தத் தடவ இடுப்பு பெருசா ஆயிடுச்சு,ஜம்முக்கு போறியா”, அத்தனை குறும்பு அந்த கண்களில் ,அவரை முறைத்த வேணி அவர் கையைத் தட்டிவிட்டு சென்றாள், இருவரும் பேச்சை மாற்றிக் காயத்தைத் தீண்டாமல் இருந்து கொண்டனர்,

போகும் அவளை வாஞ்சையாகப் பார்த்தார் ராஜலு கடந்த காலம் கருப்புத் துகள் போல் கண் முன் பறந்தது.

வதம் தொடரும்……………….

error: Content is protected !!