Kalki 7

கலியுக கல்கி – 7

இன்றோடு மேலும் ஒரு மாதம் ஆகிவிட்டது,இதில் பொன்னியும் முத்துவும் தலைகீழ் இருந்து தண்ணீர் குடித்துப் பார்த்துவிட்டார்கள் அந்த வீட்டை விட்டு ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.

இதில் கொடுமை என்னவென்றால் அவர்களை பெற்றவர்களே அவர்களுக்கு எதிரியாகி போனது தான் அய்யோ! பாவம்! முத்து ஒருமுறை கோபமாகத் தனது தாயிடம் சண்டையிட்டுத் தன்னை அழைத்துப் போகுமாறு சொல்ல.

‘ஏண்டி கழுத அந்த ராகவ் தம்பி எம்புட்டு மரியாதையா பேசுது நடக்குது,தினமும் போன் போட்டு விசாரிக்குது.அதுக்கு என்ன தலையெழுத்தா வேல செய்யுற நமக்குச் சலுக தர சொல்லு.

பேசாம அங்கேயே இருப்புள்ள இன்னும் கொஞ்சம் நாள் தான்,அப்புறம் உனக்குக் கல்யாணம் பண்ணிடலாம் என்ன’.மேலும் ராகவ் மற்றும் விதுரன் புராணம் பல பாடி தான் வைத்தார்.

இவரே இப்புடியென்றால் பொன்னியின் தந்தை இருவருக்கும் கோவில் காட்டாத குறை தான்.அட கடவுளே என்று இரு பெண்களும் கையைத் தலையில் வைத்து கொண்டனர்.

பொன்னிக்கு மனம் இருவேறு மனநிலையில் இருந்தது விதுரன் எட்டாக்கனி அதுவுமில்லாமல் அவன் தன்னை ரசித்துப் பார்தாலும் இதுவரை விருப்பம் என்று கூறவில்லை, ‘ஆனால்’ இந்த ஆனால் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. விதுரனிடம் முயல் குட்டியாகத் துள்ளி ஓடும் தன் மனதினை பிடித்து வைக்க முடியவில்லை.

“ஏப்புள்ள பொன்னி அம்புட்டு தான இனிமே,நம்மளும் வெளில போக என்ன முயற்சி பண்ணாலும் இந்தத் தயிர் சாதமும்,உன் ஆள் அந்த ஒன்றை கண்ணும் கண்டு புடுச்சு தூக்கிட்டு வந்துரானுக என்னதான் பண்றது”.கோபமாகத் தன்னைப் பார்த்த பொன்னியை “என்னபுள்ள முறைக்குற”.

“என்னாத்துக்குடி அவர ஒன்றை கண்ணு சொல்லுற,சப்ப மூக்கி வரிந்து கொண்டு பொன்னி சண்டைக்கு வர”.“அடிப்பாவி மவளே முத்தி போச்சா உனக்கு.என்ன தைரியத்துல இந்த முடிவு எடுத்த பொன்னி.உனக்கே இது சரியா படுதா”.
முத்துவின் நியாயமான கேள்வியில் தலை குனிந்தாள் பொன்னி.முத்து சொல்வது சரி தானே. சில காலமே கண்ட அவர் மீது அப்புடி என்ன ஈர்ப்பு. மனதிற்கும் மூளைக்கும் அப்புடி ஒரு போராட்டம்.

இவர்கள் பேசுவதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.விதுரன் கூட்டி வந்த பெண்.இந்த ஒரு மாதத்தில் இரு பெண்களும் அவளைப் பேசி பேசி ,அவர்கள் அன்பை மழையாய் தூவி அவளை முழுமையாக மாற்றி விட்டனர்.

இப்போது அழகாக இருந்தாள் அந்தப் பெண்.அவளை பற்றி விடயங்கள் பொன்னியிடமும்,முத்துவிடமும் பகிர்ந்து கொண்டாள் அந்த அளவுக்கு மூவரும் நெருக்கம்.அவளின் கதையைக் கேட்ட பெண்கள் அதிர்ந்து தான் போனார்கள்.

என்னடா இது கல்யாண ஆனா பெண்களுக்கு ஒரு விதம் என்றால்,கன்னி பெண்களுக்கு ஒரு விதம்,வயதான பெண்களுக்கு ஒரு விதம்.ஆக மொத்தம் எந்தப் பருவத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்புக்கும் இல்லை,சுந்திரமில்லை. போற்றப்பட வேண்டாம்,துயர படுத்தாமல் இருக்கலாம் அல்லவா அதற்கும் வழியில்லை என்றால்….
எப்போது பெண் பாதுகாப்பாக வாழ்வது? விடையில்லா கேள்வி, தொடரும் கேள்வி, விடை யார் இடமோ?

மதிய வேளை உணவுக்கு வேணி மெனு சொல்லிவிட.வேலை வெகுவாக நடந்தது.இன்று விதுரன் வீட்டில் தான் இருந்தான் அதிசயமாக.இன்று முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப் பட இருக்கிறது அதற்கு ராஜலு மற்றும் கமலம் பிள்ளைகளோடு இங்கு வருகை அதற்குத் தான் வேணி மெனு சொல்லி இருக்கிறார்.

பொன்னிக்கு அடிவயிற்றில் ஒரு பிரளயம்,முத்துவும் கிட்டத்தட்ட அதே நிலை. இருவரும் தங்களுக்குத் தான் எதுவோ நடக்கப் போகிறதோ என்று அழுகாத குறையாக வேலை செய்த கொண்டு இருந்தனர்.

தனது அன்னை முன்னிலையில் நல்ல பிள்ளையாகத் திரியும் விதுரன் அவர் சற்று நகர்ந்தாலும் பொன்னியை போற எற வைத்தான். ராகவ் குரு எவ்வழியோ அவ்வழி என்பதற்கு ஏற்ப சேட்டை பண்ணி கொண்டு இருந்தான். அவர்களின் தவிப்பு புரியாமல்.
———————————————————————————————-

ராஜலு கம்பிரமாக வந்து இறங்கினார் ,வெளியில் வந்து வரவேற்றான் விதுரன்,”வாங்கப்பா,வாண்ணா,வாங்க வதனா,வாடா என்று தங்கையை அனைத்துக் கொண்டான் வேணியும் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

அனைவருக்கும் வெயிலுக்கு இதமாக வெள்ளரி பழ குளிர் பானம் குடுத்தாள் பொன்னி.விதுரனிடம் வரும் பொதுக் கை சற்று நடுக்கம் கொடுக்க,அவளது கை பற்றி இறுக்க வாங்கிக் கொண்டான்.எந்த எதிர் வினையும் இல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டாள்.

ரெங்கனின் மனைவி சீதாவின் பார்வை அங்கு ஒடுங்கி இருக்கும் பெண்ணைத் தான் பார்த்தது .அந்தப் பார்வையில் ஏன் இத்தனை ஏக்கம்.இப்போது தான் அந்தப் பெணின் அழகு தெரிந்தது உடல் சற்று தேறி சதை கொஞ்சம் பிடிப்பாக எடுப்பாக இருந்தாள்.சீதாவின் பார்வையை உணர்ந்து அந்தப் பெண் பொன்னியின் பின் ஒடுங்கி கொண்டாள்.

பொன்னியே யார் பின் ஒளிவது என்று தீவிர சிந்தனையில் இருந்தாள்.முத்துவோ ஜூட் சொன்னால் பி டி உஷாவை விடப் படு வேமாக ஓடுபவள் போல் நின்று கொண்டு இருந்தாள்.ஓர் சிங்க குடும்பமே சேர்ந்து மூன்று புள்ளி மான்களை வளைத்தது போல மருண்டு மருங்கி இருந்தனர் முக்கண்ணிகள்.
ராஜலு வேணியை தன் பக்கத்தில் அமருமாறு செய்கை செய்ய,மறுத்துவிட்டார் வேணி அவருக்கு வலப்பக்கம் கமலம் அமர்ந்து இருந்தார்.கோபமாக வேணியை முறைத்து வரியா இல்லையா என்று மிரட்ட மௌனமாக அப்போதும்.இனி அவர் சொல்லுவதை மறுக்க முடியாது என்று தனது மகனிடம் சென்று அமர்ந்து கொண்டார்.இப்போது ராஜலுக்கு இன்னும் கோபம் வந்தது.

விதுரன் அவரது அடாவடி காதலை பார்த்து எப்போதும் போல் இன்றும் மனதுக்குள் ரசித்துக் கொண்டான் . அனைவரையும் கலைத்தது கமலம் தான் மெதுவாக விடயத்தை ஆரம்பித்தார்.

சோபாவில் இருந்து எழுந்தவர் மூன்று பெண்களை நோக்கி சென்றார்.அவர்களோ திக் திக் திகில் படம் பார்ப்பது போல நின்று இருந்தனர் மனமெல்லாம் போர் முரசு கொட்ட பயத்தில் உடலெல்லாம் வேர்த்து வழிந்தது.வந்தவர் பொன்னி பின் மறைந்து இருக்கும் மிருதுளாவை அழைத்து வந்தார்.

பெயருக்கு ஏற்றார் போல மென்மையான பெண்ணோ. விதுரனை பார்த்தவரே அவருடன் சென்றாள்.அவளை சீதாவிற்கும் தனக்கும் நடுவில் அமரவைத்த கமலம், நேரடியாக ” என் மகன கட்டுகிரியா மிருதுளா”,என்று கேட்க சர்வமும் அடங்கியது பொன்னிக்கு.

அவள் அதிர்ச்சியொடு விதுரனை பார்க்க அவனோ ஓர் கள்ள சிரிப்பு சிரித்து வைத்தான்.முத்துவுக்கும் கோபம் தான் ஆனால் காட்ட தைரியம் வராமல் ராகவ்வை முறைத்து வைத்தாள். ராகவ், “என்ன ஏண்டி முறைக்குற” வாய் அசைக்கக் கழுத்தை வெட்டி திரும்பி கொண்டாள் முத்து.

இப்போது சீதா,”என் பாவவா கட்டிக்கோ உன்ன நான் நல்ல பார்த்துக்குவேன்”.அடுத்த அதிர்ச்சி அந்த மூன்று மான்களுக்கும்.இப்போது பொன்னி கூடக் கோபம் கொண்டாள் அக்குடும்பத்தின் மேல்.

எத்தனை தைரியம் ஒரு மனைவி கணவனுக்குப் பெண் கேட்பது.என்ன கொடுமை இவர்கள் குடும்பத்தில் அனைவரும் இப்புடித்தானோ. இதற்கு அந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் இருந்து இருக்கலாம் பொன்னியின் மனம் கொந்தளித்துக் கொண்டு இருந்தது.

மிருதுளவோ நொந்து போனாள் நன்றி கடன் அவளை வதைக்க என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை,அதுவும் ரெங்கன் திருமணம் ஆனவன்.உண்ட வீட்டுக்கு ரெண்டகமா.நான் எதுவும் செய்யவில்லையே அவர்களைத் தானே கேட்கிறார்கள். மனம் புலம்பி தவிக்க.

ஐயோ திருமணம், குடும்பம்,குழந்தை இவையெல்லாம் என்னால் முடியாதே வாய்விட்டு சொல்ல முடியவில்லை.பயம் கொண்டு மருண்டு விழிக்க.
விதுரன் பேசினான் “அம்மாடி எங்க அண்ணன் உன்ன நல்ல பார்த்துக்குவான் சீதா வதனாவும் நல்ல பார்த்துக்குவாங்க.நீ பாதுகாப்பா இருக்கலாம் உங்க அம்மாக்கும் பேசிட்டோம்”.

முத்துப் பொன்னியிடம் காதில் “பார்த்துக்கோ இதுங்க குடும்பத்த என்னமா பிளான் பண்ணி காய் நகர்த்துதுங்க.இப்போவாவது புரியுதா.பொழச்சுக்கோ பொன்னி இது நமக்குச் சரி பட்டு வராது.இதுங்க மாதிரி கேடு கேட்ட குடும்பத்த பார்த்தது இல்லை போ.நம்ப ஊற இருந்துச்சு வகுந்துடுவேன் வகுந்து”.

அவளும் கோபத்துடன் விதுரனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் நீயும் இந்த ரெத்தம் தானே அவளது பார்வையின் கேள்விக்கு. ‘ஆமாண்டி’ என்று திமிராகப் பதில் கொடுத்தது விதுரரின் பார்வை.கண்கள் கலங்க அடுக்கலைக்குள் பதுங்கி கொண்டாள்.

இங்கு அனைவரும் மாறி மாறி சம்மதம் கேட்க மிருதுளா வாயையே திறக்கவில்லை. இது வேலைக்கு ஆவது எண்ணிய ராஜலு செருமி பேச தொடங்க.அவர் செருமாளுக்கே மிருதுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.அதுவரை மௌனமாக அழுதவள் ஓவென்று கத்தி அழுக ஆரமித்துவிட்டாள்.
விதுரனுக்கும்,ரெங்கனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை,ராகவ் ‘ஐயோ பாவம் அடுத்த அடிமை,உன்னையும் அன்பால அடுச்சுச்செ கொன்னுடுவானுக வெரி பேட் பேமிலி’,மனதுக்குள் செல்லமாக அலுத்து கொண்டான்.அவர்களுடைய இருந்த முரட்டு தனமான அன்பு தானே அவனைக் கட்டி போட்டு வைத்திருக்கிறது.

இப்போது சீதா,கமலம்,வேணி மூவரும் ராஜலுவை முறைக்க அந்தச் சிங்கம் அப்பாவியாக விழித்தது.அது அவரது வழக்கம் அவர் செருமாளுக்கே இந்த பெண் அழுதாள் அவர் என்ன செய்வர் பாவம்.வேணி தான் சீதாவிடம்,”சீதாம்மா,அந்த பொண்ணுக்குப் பயம், நீ பேசி புரியவை என்ன” என்று தனது அறையைக் காட்ட,மிருதுளாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.

செல்லும் வழியில் தான் ரெங்கன் இருந்தான்.மிருதுளா அவனைக் கடக்கும் பொது அவன் அவளை முறைத்துக் கொண்டே மீசையை முறுக்கினான்.

விதுரனுக்குக் குறையாத ஆண் அழகன்.உடல் கட்டு முறுக்கேறி நல்ல உயரமாக இருப்பான்.இவளோ சுண்டெலி போல் இருக்க மீண்டும் பயம் வந்தது.அவன் செய்யும் சேட்டையைப் பார்த்த சீதா செல்லமாக அவனைத் தோளில் அடித்துச் சென்றாள்.
உள்ளே சென்றவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசி வெளி வரும் பொது அனைவரும் ஆவலுடன் பார்த்தனர்,குனிந்த தலை நிமிராமல் அனைவருக்கும் பொதுவாக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்குறேன் என்று சொல்லிவிட்டுத் தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.

முத்துவும்,பொன்னியும் அதிர்ந்தனர் அவர்களும் தங்கள் அறையை நோக்கி சென்றனர்.அறைக்கு வந்த முத்துக் கோபமாக “ஏண்டி பணத்தைப் பார்த்த உடனே சரினு சொல்லிட்டியா,பயம் காட்டுனாங்களா இது பொன்னி”.

“வாப்புள்ள போலீசுக்குப் போலாம் நாங்க இருக்கோம்” என்று முத்து அழைக்க,வேண்டாம் என்பது தலை அசைத்த மிருதுளா . “அவுங்களுக்கு நான் நன்றி கடன் பட்டுருக்கேன் அக்கா”.

லூசு மாதிரி பேசாத மிருது முத்து வாப்புள்ள போலாம் நானும் வரேன் சொன்னது நமது பொன்னியே தான்.அவளுக்கே இது நியாமாகப் படவில்லை.

“நாங்க இம்புட்டு சொல்லுறோம் அசைரிய பாரு படுக்கையைப் பங்கு போட பொண்டாட்டியே வந்து கேட்பாளாம்.என்ன கருமம் இது.உடம்பெல்லாம் கூசுது பொன்னி கோபமாகக் கத்த”.பாய்ந்து சென்று அவள் வாய்யை பொத்தினாள் மிருதுளா.

கண்ணீருடன் அக்கா நான் சொல்லுறத கேளுங்க அக்கா அப்புறம் திட்டுங்க,அடுத்த கதை யா என்று முத்துச் சலித்துக் கொள்ள,பொறுமை எடுத்தால் பொன்னி.

சொல்லு மிருது.அங்கு ஒரு மணி நேரம் தன்னுடன் பகிர்ந்ததை இவள் இரு பெண்களிடம் சொல்ல அதிர்ந்தனர் இருவரும்.என்ன மாதிரி சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை எண்ணி கிலி பிடித்தது.

அப்புடி என்ன நடந்தது சீதாவிற்கும் ரெங்கனுக்கும்……………