Kanavu 25

Kanavu 25

கனவு – 25

“அனேகன்! ப்ளீஸ் புரியுற மாதிரி சொல்லுங்க” – ஆஷ்ரிதா.

“நாம வீட்டுக்கு போய் பேசலாம். நான் டாக்டர் சுந்தர்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க அம்முவ பார்த்துப்பாங்க. வாங்க” – அனேகன்.

“ப்ரோ… ஆக்சிடென்ட் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்??” – திரவியம் கேட்டன்.

“எல்லாம் லேகா பார்த்துப்பாங்க. வாங்க நாம போகலாம்” என்று அனேகன் அழைக்க, அடுத்த அரைமணி நேரத்தில் ஆஷ்ரிதாவின் வீட்டில் கூடியிருந்தனர் மூவரும்.

“அச்சு, அம்மு இன்னைக்கு அந்த சின்ன கட்டிடத்துக்கு அவளோட அம்மாவ பார்க்கதான் போனாள்” – அனேகன்.

“அம்மா –வா? அதுவும் இங்கயா?” – ஆஷ்ரிதாவுக்கு அதிர்ச்சி.

“யஸ். நான் ஒருநாள் உன்ன ஒரு சின்ன கோவிலுக்கு கூட்டிட்டு போனேன். நியாபகம் இருக்கா அச்சு?” – அனேகன்.

“ஆமா அனேகன். நான் கூட அம்முவ அங்க கூட்டிட்டு போனேன். அந்த பாட்டி என்னையும் அம்முவையும் ஏதோ மாதிரி பார்த்துட்டே இருந்தாங்க” – ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… அந்த பாட்டிக்கிட்ட குழந்தை பாக்கியம் வேணும்னு வேண்டிக்கிட்டு வந்திருந்தவங்க தான் சீதா. அம்முவுக்கு ஆக்சிடன்ட் ஆனா அன்னைக்கு எல்லாரும் பரபரப்பா இருக்க, அந்த பாட்டி சீதாவுக்கு அட்வைஸ் பண்ணி அங்க இருந்து அனுப்பி வச்சத நான் பார்த்தேன். அப்ப அவங்கள பத்தி மைண்ட் ஸ்டடி பண்ணும்பொழுது சில விஷயங்கள் தெரிஞ்சிது. சீதா தனக்கு குழந்தை பாக்கியம் கேட்டு முதல் முதலா அந்த பாட்டிய பார்க்கும்போது, ஐந்து வருஷத்துக்கு அப்பறம் குழந்தை கிடைக்கும்னு சொல்லியிருந்தாங்க. அதுல இருந்து தன்னோட குழந்தை கூட எப்படியெல்லாம் இருக்கனும்னு நினைச்சு, அவங்களுக்கான தனி கனவு உலகத்துல கற்பனையா ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்தாங்க சீதா. அவங்களோட எண்ணங்கள் தான் அம்ரிதாவ அவளோட அம்மாவ தேடி இத்தனை நாள் ஓட வச்சது” – அசாதாரணமான உண்மையை சாதாரணமாக கூறினான் அனேகன்.

அனேகன் கூறிய செய்தியில் திகைத்துப்போன ஆஷ்ரிதா, இத்தனை நாள் அம்ரிதா அவளது முன் ஜென்ம அம்மாவோடுதான் தூக்கத்தில் பேசுகிறாள் என்று தான் எண்ணியது தவறோ எனும் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு, “இப்படியெல்லாம் கூட நடக்குமா அனேகன்? அப்படீன்னா அவ அம்மாகிட்ட தூக்கத்துல பேசினது எல்லாம் முன்ஜென்ம அம்மா இல்லையா?” என கேட்டாள்.

“இல்ல அம்மு. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு ஜென்மத்துக்கான தேடலா ஒரே ஒரு விஷயம் தான் இருக்கும். ஆசைகள் நிறைய இருக்கலாம், ஆனால் பிறப்பின் பயன், அதாவது அந்த ஆன்மாவின் இந்த பிறவிக்கான பயணம் ஒரே ஒரு இலக்கை நோக்கிதான் நகரும். அம்முவோட போன ஜென்மத்து நோக்கம் நான், இந்த ஜென்மத்து நோக்கம் மோகன், அடுத்த ஜென்மத்து நோக்கத்தை தீர்மானித்திருப்பது சீதா” – அனேகன்.

“அது எப்படி அனேகன் அம்ரிதாவோட பிறவி நோக்கத்த சீதாவால தீர்மானிக்க முடியும்?” – திரவியம்.

“அம்ரிதா இன்னும் அடுத்த பிறவிக்குள் நுழையவில்லையே! அவள் ஜனித்த பிறகுதான் அந்த ஜென்மத்தின் வாசனை அவளைத் தொடும். அப்போது தான் அவள் எதையும் தீர்மானிக்க முடியும்!” – அனேகன்.

“அப்படீன்னா, அம்மு இத்தனை நாளா அம்மா அம்மானு தூக்கத்துல உளரினது…” – ஆஷ்ரிதா இழுக்க,

“சீதா” – அனேகன் முடித்தான்.

இதுவே நிதர்சனம் என்று அறிந்த போதிலும் அதிர்ந்துதான் போனாள் ஆஷ்ரிதா.

“அந்த சீதா எந்நேரமும் தன் குழந்தைய நினைச்சிட்டு இருக்கறதால, அவங்களோட கனவுல அடிக்கடி தன் குழந்தைய பார்த்திருக்காங்க. அந்த சமயம் தான் அம்ரிதா தூக்கத்துல தன்னோட அம்மாவான சீதாகிட்ட பேசிருக்கா” – அனேகன்.

“நோ. என் தங்கச்சிய நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். அவங்களுக்கு குழந்தை வேணும் அப்படீங்கறதுக்காக என் தங்கச்சி உயிரோட இருக்கும்போதே அவள பலியாக்கி என்கிட்ட இருந்து பிரிச்சி எடுத்துகிட்டு போவாங்களா? விடமாட்டேன். இப்பவே அந்த சீதாவ போய் பார்க்குறேன். நானா அவளானு பார்த்திடலாம்” என ஆத்திரத்தில் கொதித்தெழுந்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு. ஸ்டாப். டோன்ட் கெட் எமோஷ்னல். நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?” – அனேகன்.

“எப்படி அனேகன் சும்மா இருக்க முடியும்? இது தப்பு இல்லையா? அவங்க எப்படி அப்படி பண்ண முடியும்?” – ஆஷ்ரிதா.

“அவங்க எதுவுமே செய்யலையே அச்சு! அவங்களுக்கு நீ யாருனு தெரியாது, அம்ரிதா யாருனும் தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அவங்களுக்கு பிறக்கப் போற குழந்தை தான்” – அனேகன்.

“என்னால முடியல அனேகன். எனக்கு என் தங்கச்சி வேணும். அவள நான் யாருக்கும் விட்டு தரமாட்டேன். ஒருவேளை அம்மு என்னவிட்டு போறானா நான் நிச்சயமா என் உயிர மாய்ச்சிப்பேன்” என அழுதாள் ஆஷ்ரிதா.

“அச்சு என்ன வார்த்த பேசுற? நான் இருக்கேன் உன…” – சொல்ல வந்த திரவியம் தன் வார்த்தையை பாதியிலேயே விழுங்கினான்.

அவன் என்ன கூற வந்தான் என்பது அனேகனுக்கும் புரிந்தது, ஆஷ்ரிதாவுக்கும் புரிந்தது. இருவரும் ஒருவித பாவனையோடு திரவியத்தை காண, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவனாய் “நான் கொஞ்சம் நேரம் கார்டன் –ல இருக்கேன்” என்றுவிட்டு நகர்ந்தான்.

பேச்சை தொடர்ந்தாள் ஆஷ்ரிதா, “அனேகன்! என் தங்கச்சிய எப்படியாவது என்கிட்ட திருப்பி கொடுங்க ப்ளீஸ்” என்றாள்.

“எனக்கும் என் சகி வேணும் அச்சு” – தற்போது அனேகனும் கலங்கினான்.

“அதுக்கு வழியே இல்லையா?” – ஆஷ்ரிதா.

“இருக்கு. ஒரே இரு வழி இருக்கு” – அனேகன்.

“என்ன வழி அனேகன். சொல்லுங்க. எதுவா இருந்தாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்” – ஆஷ்ரிதா தீவிரமாய் கேட்டாள்.

“அர்ஜுன்” என்றான் அனேகன்.

“என்ன அர்ஜுன் –ஆ?” – ஆஷ்ரிதா.

“ஆமா. அர்ஜுன் நினைச்சா அம்முவ நமக்கு திருப்பி தர முடியும்” – அனேகன்.

“ஆனா அர்ஜுன் தான் உயிரோட இல்லையே! எப்படி அனேகன்??” – ஆஷ்ரிதா.

“கரெக்ட். அவன் ஆத்மா –வா தான் இருக்கான். நீங்க கனவுல பார்த்தது, கனவுல பேசினது எல்லாமே அர்ஜுன் ஆத்மா தான். போன ஜென்மத்துல உன்கிட்ட சகிய சேர விடமாட்டான். சகி உன்கூட விளையாட வரும் சமயத்துல எல்லாம் அவன் கூட்டிட்டு போய்டுவான். ஹிப்னாட்டிஷம் செய்த பொழுது இத நீயே சொன்ன நியாபகம் இருக்கா?” – அனேகன்.

“ஆமா. வீடியோ –ல பார்த்தேன்” – ஆஷ்ரிதா.

“யஸ். போன ஜென்மத்துல சகியோட இருக்கனும்னு நீ ஆசப்பட்ட. அது நடக்கல. நிறைவேறாத ஆசையோட துர்மரணம் அடைஞ்ச நீ, இந்த ஜென்மத்துல சகி கூடவே இருக்குற வரத்தோட வந்திருக்க. அதுவும் கருவுல இருந்தே நீ அவளோட இருக்குற. நானும் அவளும் கல்யாணம் பண்ணிக்க இருந்தோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உயிரா இருக்கும் போதுதான் அர்ஜுனோட பொசசிவ்னஸ் என்னையும் சகியையும் கொன்னுடுச்சு” – அனேகன்.

“என்ன சொல்லுறீங்க? அவனோட பொச்சிவ்னஸ் எப்படி?” – ஆஷ்ரிதா.

“அம்மா அப்பா இல்லாம வளர்ந்ததால அர்ஜுன் –க்கு அவனோட அக்கா சகி மேல பாசம் அதிகம். அவளுக்கு என் மேல அளவுக்கடந்த காதல் இருந்தத அந்த சின்ன பையனால தாங்கிக்க முடியல. தம்பி மேல இருக்கற பாசம் வேற, கட்டிக்கப்போறவன் மேல இருக்கற காதல் வேற –னு புரிஞ்சிக்கிற பக்குவம் அப்ப அர்ஜுனுக்கு இல்ல. போன ஜென்மத்துல என்னோட பில்டிங் கன்ஸ்ட்ரெக்‌ஷன் வர்க் ஒன்னு சகியோட வீட்டுக்கு பக்கத்துல தான் நடந்தது. அதனால சகி- அ அடிக்கடி போய் பார்ப்பேன். அப்படி போயிருக்கும் போது ஒருநாள், என்னோட டூ-வீலர் ப்ரேக் –அ அர்ஜுன் ஃபெயில் பண்ணிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டான். நானும் சகியும் சாகும்போதும் ஒன்னா சாகணும்னு எழுதியிருந்துருக்கு போல, அன்னைக்கு என்கூட சைட்டுக்கு வர்றேன் –னு சகி சொல்ல, அர்ஜுன் ப்ரேக் ஃபெயில் பண்ண வண்டில தான் நானும் சகியும் சைட் –க்கு போனோம். ஆள் இல்லாத இடத்துல தனியா நின்னு பேசலாம் –னு சைட் –ல ஒரு ஓரமா வண்டிய நிறுத்த போக, ப்ரேக் பிடிக்காம அங்க வெட்டி வச்சிருந்த குழியில நாங்க வண்டியோட விழுந்துட்டோம். நாலு ஆட்கள் நிக்கற உயரம் இருக்கும் அந்த குழி. நாங்க உள்ள விழுந்தது தெரியாம ட்ராக்டர் எங்க மேல மண் –அ கொட்ட, மூச்சுமுட்டி மண்ணுக்குள்ள உன்னாவே இறந்துட்டோம். மூனு நாள் கழிச்சு தான் எங்கள பிணமா கண்டுப்பிடிச்சாங்க. அது வேற கதை. சகி –அ இழந்த துக்கத்துல விஷத்த குடிச்சி அர்ஜுன் தற்கொலை பண்ணிக்கிட்டான். ஆனா அவனோட ஆத்மா அமைதி கிடைக்காம அலையுது. நாங்க சாகப்போறதா எனக்கு தெரிஞ்ச கடைசி மூச்சில நான் சத்தியம் பண்ணேன், திரும்ப பிறப்பெடுத்து சகியோட சேருவேன் –னு. அதனால எனக்கு கிடைச்ச வரம் தான் இந்த சைக்யார்டிஸ்ட் படிப்பும், பூர்வ ஜென்ம நினைவுகளும்” – அனேகன்.

அவ்வளவு நேரம் அனேகன் சொல்வதை வாய்பிளந்துக் கேட்டுக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, “அர்ஜுன் எப்படி நமக்கு ஹெல்ப் பண்ணுவான்? நீங்க சொல்லுறதுபடி பார்த்தா நம்ம ரெண்டு பேரையுமே அவனுக்கு பிடிக்காதே!” – ஆஷ்ரிதா.

“வி கேன் ட்ரை அச்சு. நாம அர்ஜுன் கிட்ட பேசிப்பார்க்கலாம்” – அனேகன்.

“என்னது பேசிப்பார்க்கலாமா? ஆவிகிட்டயா? அதுவும் நம்மள பிடிக்காத ஆவிகிட்ட! எனக்கு பயமா இருக்கு. நான் வரமாட்டேன் பா” – அலறியே போனாள் ஆஷ்ரிதா.

“அச்சு. நான் தான் கூட இருக்குறேனே! என்ன பயம் உனக்கு?” – அனேகன்.

“எனக்கு பயமா இருக்கு அனேகன். என்ன –னு பேசுவீங்க அவன்கிட்ட? அம்மு –வ காப்பாத்திக் கொடுனு கேட்கப் போறீங்களா? அப்படி கேட்டா அவன் உதவி செய்வானா?” – ஆஷ்ரிதா.

“அம்மு –வ காப்பாத்துறதுக்கு மட்டும் அவன கேட்கப் போறது இல்ல அச்சு. அவனோட ஆத்மா அமைதி இல்லாம இருக்கற இந்த நிலைய மாத்தி அவனுக்கு ஒரு பிறப்ப ஏற்படுத்த முடியும்” – அனேகன்.

“எனக்கு சத்தியமா புரியல அனேகன்” – ஆஷ்ரிதா.

“அம்மு –வ நாம காப்பாத்தியாகனும் –னா சீதாவுக்கு குழந்தையா அம்முவோட ஆத்மா போக கூடாது. நாம கஷ்டப்பட்டு அம்முவ நம்மளோட தக்க வச்சிக்கறோம்னே வச்சிக்க, அப்படி செஞ்சா சீதாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாம போகும். அது பாவம் இல்லையா?” – அனேகன்.

“பிறப்பு இறப்ப தீர்மானிக்கறது நம்ம கையில இல்லையே அனேகன்” – ஆஷ்ரிதா.

“நம்மாள முடியாது. ஆனா அர்ஜுன் நினைச்சா முடியும். அதனாலதான் அவன்கிட்ட உதவி கேட்கலாம் –னு சொல்லுறேன். அவன்கிட்ட அம்முவ காப்பாத்தி தர சொல்லிக் கேட்போம். அம்முவுக்கு பதிலா அர்ஜுன் சீதாவுக்கு குழந்தையா பிறந்தா எல்லாருக்கும் ரூட் க்ளியர் தானே?!” – அனேகன்.

“இது எல்லாம் சாத்தியமே இல்ல அனேகன். அர்ஜுன் நமக்காக அம்முவ காப்பாத்தி தர்றது கூட ஓகே. ஆனா அம்முவுக்கு பதிலா அர்ஜுன் எப்படி போய் பிறக்க முடியும்? இது என்ன பிஸினஸ் மீட்டிங் –ஆ, எனக்கு பதிலா நீ அட்டண்ட் பண்ணுனு சொல்லுறதுக்கு?” – ஆஷ்ரிதா.

“ஹாஹா… கிட்டதட்ட பிஸ்னஸ் டீலிங் போலதான் அச்சு. எந்த ஒரு ஆத்மாவும் சாந்தி அடையுறதுக்கு முன்ன ஒன்னொரு பிறப்பு எடுக்கறது இல்ல!” – அனேகன்.

“நீங்க என்னவெல்லாமோ படிச்சிருக்கீங்க அதனால ஈசியா பேசுறீங்க. ஆனா நான் சாதாரண பொண்ணு அனேகன். எனக்கு பயமா இருக்கு” விட்டால் அழுதுவிடுவாள் போல கூறினாள் ஆஷ்ரிதா.

“நம்ம அம்மு நமக்கு வேணாமா அச்சு? அம்முவுக்காக எதையும் செய்யுறேன் –னு சொன்ன தானே!” – அனேகன்.

சற்று உடல் நடுங்கியபடி இருந்த ஆஷ்ரிதாவுக்கு அர்ஜுனிடம் பேசுவது போல எண்ணிப்பார்க்கும் பொழுதே அதிகமாய் உதறல் எடுத்தது. சாதாரணமாக சொல்லியிருந்தாலே அவள் பயந்திருப்பாள், இதில் முன்ஜென்மத்து விரோதியாய் காட்சிப்படுத்திய ஆத்மாவிடம் பேச வேண்டும் என்கையில் அவளது உடல் முழுவது வியர்வை பூக்கத் தொடங்கியது.

“பயப்படாத அச்சு. நான் இருக்கேன் கூட. ஒன்னும் ஆகாது. நமக்கு நேரம் இல்ல. நாம வேஸ்ட் பண்ணுற ஒவ்வொரு நொடியும் அம்மு நம்மள விட்டு போய்ட்டே இருப்பா” என்று அனேகன் கூறவும் விஷயத்தின் வீரியம் ஆஷ்ரிதாவின் பிடரியில் அடிக்க வேகமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

பெருமூச்சுடன் அவளுக்கு நன்றி சொன்ன அனேகன், தோட்டத்தில் நின்றுக்கொண்டிருக்கும் திரவியத்தை அழைத்து விஷயத்தை கூறினான். அவனுக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அனைத்தையும் புரியவைத்துவிட்டான் அனேகன். காலம் கடத்தாமல் செயலில் ஈடுபட்டனர் மூவரும்.

“ஆவிகளோட பேசுறதுக்கு நிறைய வழிமுறைகள் இருக்கு. லைக் ஒய்ஜா போர்ட், கேன்டில், ஆட்டோ ரைட்டிங், சவுண்ட் ப்ராக்டிஸ் இந்த மாதிரி. நான் தனியா செஞ்சா ரிஸ்க் எடுக்கலாம். அனுபவம் இல்லாத நீங்க ரெண்டுபேரும் என்கூட சேர்ந்து பண்ணப்போறீங்க இன்னைக்கு. அதனால லெஸ் ரிஸ்க் இருக்கற ஒய்ஜா போர்ட் மெத்தேட் –அ நாம ஃபாலோ பண்ணலாம்” – அனேகன்.

அனேகன் சொல்ல சொல்ல ஆஷ்ரிதாவுக்கு பயம் கூடிக்கொண்டே போனது. இருந்தும், தன் தங்கைக்காக இதை செய்யத் துணிந்தாள் அந்த அன்பு சகோதரி.

“என் வீட்டுல ஒய்ஜா போர்ட் இருக்கு. நாம என் வீட்டுக்கு போய்டலாம். அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேருக்கும் நான் காப்பு மந்திரம், உடற்கட்டு, திசை கட்டு எல்லாம் சொல்லி தர்றேன். எல்லாம் முடிச்சிட்டு இன்னைக்கு நைட் சரியா பன்னிரெண்டு மணிக்கு நாம அர்ஜுன் கூட பேசலாம்” – அனேகன்.

“எல்லாம் ஓகே ப்ரோ. ஆனா அர்ஜுன் ஃபோட்டோ வேணும் தானே?” – திரவியம்.

“வாவ். உங்களுக்கு தெரியுமா திரு?” – அனேகன்.

“ம்ம்ம். நிறைய யூ ட்யூப், டிவி ஷ்சோஸ் –ல எல்லாம் பார்த்திருக்கேன்” – திரவியம்.

“நாட் பேட். அன்னைக்கு அச்சு என்கிட்ட அர்ஜுன் பத்தி சொல்லும்போதே இப்படி ஒரு நிலைமை வரும்னு யோசிச்சு அவனோட ஃபோட்டோ ரெடி பண்ணிட்டேன். என் வீட்டுல இருக்கு” – அனேகன்.

ஆஷ்ரிதாவுக்கு நடப்பவை எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது. அவளது பயத்தை மெல்ல மெல்ல போக்க அனேகனும் திரவியமும் பெரும்பாடு பட, ஒருவழியாக மணி பன்னிரெண்டை அடைந்தது.

எவ்வாறு நாம் இதை செயல்படுத்தப் போகிறோம் என்பதை அனேகன், ஆஷ்ரிதா மற்றும் திரவியத்திற்கு விளக்கி கூறிய பின், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்க்கொண்டுவிட்டு, அனேகனது அம்மாவின் சம்மதத்தை வாங்கிய அனேகன், ஆஷ்ரிதா மற்றும் திரவியத்தை அழைத்துக்கொண்டு தன் வீட்டின் ஒரு அறையினுள் சென்று கதவை தாழிட்டான்.

மெயின் மீடியமான அனேகன் வடக்கு திசை நோக்கியும், சப் மீடியமான திரவியம் தெற்கு திசை நோக்கியும் அமர்ந்துக்கொண்டனர். அவர்கள் அருகில் பேனா மற்றும் பேப்பரோடு அமர்ந்த ஆஷ்ரிதா ஒரு வித பயத்தோடு ஒய்ஜா போர்ட் –ல் தெரியப்பட்டுத்தப்படும் வார்த்தைகளை பேப்பரில் குறித்துக் கொள்ள தயாராய் இருந்தாள்.

மூவருக்கும் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒய்ஜா போர்ட் –ல் ஆங்கில ஆல்ஃப்பெட் ஏ முதல் ஸ்ஸட் வரை, எண்கள் பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை, யஸ், நோ மற்றும் குட் பை ஆகியவை எழுதப்பட்டிருந்தது. அந்த போர்ட் –ஐ சுற்றி மூன்று வெள்ளை மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தது.

நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் மூடப்பட்ட அந்த அறை, மூன்று மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்க, அங்கு கரையும் நிசப்த நிமிடங்கள் எல்லாம் ஆஷ்ரிதாவினுள் திக் திக் என்றே இருந்தது.

முதலில் அனேகனும் திரவியமும் கண்களை மூடிக் கொண்டு தங்கள் எண்ண ஓட்டங்களை அமைதியாக்கினர். பிறகு தங்கள் இருகைகளையும் ஒரு பத்தை பிடித்திருப்பது போல அருகருகே ஒரு உள்ளங்கை இன்னொன்றை நோக்கியபடி சிறு இடைவெளி விட்டு வைத்திருந்தவர்கள், தங்கள் உடம்பில் உள்ள காந்த சக்திகள் மொத்தத்தையும் திரட்டி, தங்கள் கைகளுக்கு இடையில் ஒரு பத்தை போல இருப்பதாய் பாவித்தனர்.

பின் அந்த காந்த பந்தை தங்கள் தலையில் வைப்பது போல, தங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, அந்த காந்த சக்தியை தங்கள் உடலில் முழுவதுமாய் பரவச்செய்து தங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

அவர்களுக்கு விருப்பமான தெய்வத்தை தங்கள் மனதில் நினைத்து வேண்டிக்கொண்டவர்கள் கண்களைத் திறந்து ஒய்ஜா போர்டின் அருகே வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுனின் புகைப்படத்தை பார்த்தனர். அவனை தங்கள் மனக்கண்ணில் பதித்தவர்கள் அந்த போர்ட் மேல் இருக்கும் ஸ்ட்ரைக்கரில் தங்கள் ஆட்காட்டி விரலை வைத்தனர். பிறகு இருவரும் கண்களை மூடிக்கொள்ள, அனேகன் பேசத்தொடங்கினான்.

“குழந்தை ஆத்மாவான அர்ஜுனுக்கு நன்றி. என்னோட இந்த அழைப்பை ஏற்று இங்க வருவீங்க –னு நம்புறேன். ப்ளீஸ் வாங்க” என்றான்.

அப்பொழுதே ஆஷ்ரிதாவின் உடலில் நடக்கம் தன் வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. பேனாவை எடுத்து குறிப்பெடுக்க தயாராய் இருந்தவளின் கைகள் நடுக்கத்தால் பேப்பரில் கோலம் போட, தன்னால் முடிந்தமட்டும் கைகளை இறுக மூடி தன் பயத்தை கட்டுப்படுத்தினாள் ஆஷ்ரிதா.

அத்மாக்களுடன் பேசும் பொழுது மிகுந்த மரியாதையோடு பேச வேண்டும். மேலும் அவர்கள் வருவதற்கு வெகு நேரம் எடுக்கலாம். அதனால் அவர்களுக்காய் காத்திருக்க மிகுந்த பொறுமை நம்மிடம் இருப்பது மிக மிக அவசியம். இவற்றை அறிந்திருந்த அனேகனும் திரவியமும் தங்கள் முயற்சியை கைவிடாது, அர்ஜுனை அழைத்த வண்ணம் அவனது வரவுக்காக காத்திருந்தனர்.

(களவாடுவான்)

error: Content is protected !!