கனவு – 27 Final
பல தடைகளையும் தளர்வுகளையும் தாண்டி புத்துயிர் பெற்று நிற்கும் தங்கள் காதலை கண்ணீரால் பூஜித்துக் கொண்டிருந்தனர் அனேகனும் அம்ரிதாவும்.
“அ… அன்… அனேகா!” மென்மையான குரலில் அழைத்தாள் அம்ரிதா.
நீண்ட போராட்டங்களுக்கு பின் அவள் குரலில் தன் பெயரை கேட்ட அனேகனுக்கு உள்ளம் பனியை போல குளிர்ந்தது. புன்னகை மன்ன்னாய் சிரித்துக்கொண்டவன் தன் கண்களை துடைத்துக்கொண்டு,
“என் சகி எங்கே?” என கேட்டான்.
முத்து பல் தெரிய சிரித்த நங்கையோ “ஷ்யாம்!” என்றாள்.
இதை கேட்ட அனேகனுக்கு உலகையே வென்றுவிட்டதைப் போன்றதோர் சந்தோஷம். பூலோகம் கடந்து, மேலோகம் கடந்து, அண்டத்தை தாண்டி தன் சகியோடு தங்கள் காதலுக்கே உரிய தனி லோகத்தில் பிரவேசிக்க அவனது உள்ளம் துடித்தது.
“நாம ஜெயிச்சிட்டோன் சகி! உனக்கு ஒன்னுமில்ல. சந்தோஷமா வாழப்போறோம். வாழ்க்கை முழுக்க உன்ன என் கையில வச்சி தாங்கணும். எப்படி எப்படியெல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டோமோ அதவிட பல மடங்கு அதிக காதலோடு வாழப்போறோம்!” என்றான் அனேகன்.
அப்போது உள்ளே வந்த மூன்று நர்ஸ்களில் ஒருவர்,
“சார் கொஞ்சம் நேரம் வெளியில இருங்க ப்ளீஸ். அவங்கள் இப்ப ஷிஃப்ட் பண்ணிருவோம்” என்றார்.
அவரிடம் சரியென கூறிவிட்டு வெளியே வந்த அனேகன் கண்ணில் முதலில் பட்டது திரவியம் தான்.
“அச்சு எங்கே திரு?” என அவனிடம் கேட்டான் அனேகன்.
“அம்மு முழிச்சிட்டா –ல. மேடம் -க்கு கால் தரையில இல்ல. அவளுக்கு அத வாங்கவா இத வாங்கவானு பறந்துட்டு இருந்தா. வீட்டுக்கு போய் குளிச்சி ரெடி ஆகிட்டு அம்முவுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வர சொல்லியிருக்கேன்” – திரவியம்.
“குட் திரு. நீங்க ஏதாவது சாப்பிடுறீங்களா? காஃபி?” – அனேகன்.
“இட்ஸ் ஓகே ப்ரோ. ஆமா ஏதோ முகத்துல ஒரு வித்தியாசம் தெரியுதே?” – அனேகனின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டான் திரவியம்.
“சகி வந்துட்டால்ல! அதான்” – சிரித்தபடியே சொன்னான் அனேகன்.
“அம்மு கண்ணு முழிச்சப்ப தான் நான் உங்கள பார்த்தனே ப்ரோ. அதோட சேர்த்து இன்னும் ஏதோ ஒன்னு தெரியுதே!” – திரவியம்.
“அதான் சொன்னனே! சகி வந்துட்டானு!” – மந்திர புன்னகை சிந்தினான் அனேகன்.
“ப்ரோ!!! யூ மீன்…..” – ஊர்ஜிதப்படுத்த முனைந்தான் திரவியம்.
“யஸ் திரு! அம்ரிதாவுக்கு முழுசா குணமாகிடுச்சு. ஷ்யாம் யாருனு கேட்டது மட்டும் இல்ல. அவதான் சகினும் அவளுக்கு புரிஞ்சிடுச்சு. எங்களோட முன் ஜென்ம பந்தம் கூட!!” – புதுப்பொழிவுடன் இருந்த்து அனேகனின் முகம் மட்டுமல்ல மனமும்தான்.
“வாவ்… சூப்பர் ப்ரோ! அவங்க ஷ்யாம்னு கூப்பிடும்போது கூட நான் தூக்கத்துல தான் சொல்லிருப்பாங்கனு நினைச்சேன் ப்ரோ! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!” – திரவியம்.
“ஒரு ஆக்சிடண்ட் –ல ஆரம்பிச்ச பிரச்சனை, ஒரு ஆக்சிடெண்ட்னாலையே முடிஞ்சிருக்கு. கெட்டதுலையும் ஒரு நல்லது” – அனேகன்.
“ஒய்ஜா போர்ட் –க்கு இவ்வளவு பவரா ப்ரோ?” – திரவியம் ஆச்சரியத்தோடு கேட்டான்.
“வாட்? ஹாஹா! ஒய்ஜா போர்ட் பவர் –ஆ?” – அனேகன்.
“என்ன ப்ரோ சிரிக்கிறீங்க? நேத்து நாம அவ்வளவு ரிஸ்க் எடுத்ததுனால தானே அம்மு சரியாகிருக்கா? ஐ மீன் ஒய்ஜா போர்ட் மூலமா தானே அர்ஜுன் –அ டீல் பண்ணோம்?” – திரவியம்.
“யூ ஆர் கரெக்ட் திரு! ஒய்ஜா போர்ட் வச்சி நாம ரிஸ்க் எடுத்ததுனாலதான் சரியாகிருக்கா! ஆனா சரியானது அம்மு இல்ல. அச்சு!” – அனேகன்.
“என்ன?? அச்சு –வா?” – திரவியம் அதிர்ச்சியடைந்தான்.
“ஆமா ப்ரோ! அர்ஜுன் –அ என்னால தனியா டீல் பண்ண முடியாதா? நான் முன்னாடியே அர்ஜுன்கிட்ட பேசி மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் –அ க்ளியர் பண்ணிட்டேன். ஒய்ஜா போர்ட் யூஸ் பண்ணது முழுக்க முழுக்க அச்சுவோட மனசுல அர்ஜுன் பத்தி இருக்கற பயத்த க்ளியர் பண்ணதான். அன்னைக்கு அர்ஜின்கிட்ட பேசப்போறதா நான் சும்மாதான் சொன்னேன். அர்ஜுன் வருவான்னு நான் நினைக்கல. நம்மளோட எண்ண அலைகள் பவர்ஃபுல் –ஆ இருந்ததாலதான் அன்னைக்கு அர்ஜுன் அங்க வந்தான். ஸ்ப்ரிட் கூட பேசுறதுல எவ்வளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா திரு? உயிருக்கே கூட ஆபத்தா முடியும். எல்லாம் தெரிஞ்சும், அச்சு அவ்வளவு பயந்தபோதும் நான் எதுக்கு அவள கம்பல் பண்ணி நேத்து உட்கார வைக்கணும்? எதுக்கு எக்ஸ்பீரியஸ் இல்லாத உங்கள கூப்பிட்டு வச்சு நான் அர்ஜுன் –அ கான்டேக்ட் பண்ணப்போறேன்?” – அனேகன்.
“என்ன ப்ரோ சொல்லுறீங்க? அப்படீன்னா நீங்க செஞ்சதுக்கு ரீசன் என்ன?” – திரவியம்.
“அம்முவுக்கு ஃபிசிக்கலாதான் ட்ரீட்மெண்ட் தேவைப்பட்டுச்சு. ஆனா அச்சுவுக்கு தான் மெண்டலி நிறைய ஸ்ட்ரென்த் தேவை இருந்தது. பேசிக்கலி அச்சு ரொம்ப பயந்த பொண்ணு. இருந்தும் அம்முவுக்காக அவ எவ்வளவோ கஷ்டங்கள் ஃபேஸ் பண்ணியிருக்கா. இதுக்கு அடுத்து பொன்னம்மாவோட இறப்பு, அச்சுவோட உடல்நல பிரச்சனை. எல்லாம் அடுத்து அடுத்து வெளியில வந்தது உனக்கே தெரியும் திரு. இதுல அர்ஜுன் அவளோட சப் கான்ஷியஸ் மைண்ட் –ல டேரக்ட் –ஆ வந்து காண்டேக்ட் பண்ணியிருக்கான். அவளுக்கு ஹிப்னாட்டிஷம் பண்ணும் பொழுது அவ மனசுல எவ்வளவு ஸ்ட்ரெஸ் வச்சிருக்கானு தெரிஞ்சது. அத எல்லாம் சரி பண்ண நான் யூஸ் பண்ண விஷயம் தான் அந்த ஒய்ஜா போர்ட். அர்ஜுன் மேல இருந்த பயம் இப்ப அவளுக்கு போய்டுச்சு தானே?” – அனேகன்.
“ஆமா ப்ரோ!” – திரவியம்.
“தேட்ஸ் வொய்! அவ கண்ணால பார்க்கலைனா கண்டிப்பா நம்பியிருக்க மாட்டா. கரெக்ட் –ஆ?” – அனேகன்.
பதில் சொல்லாமல் யோசித்தான் திரவியம்.
“என்ன திரு யோசிக்கிறீங்க? அச்சுகிட்ட போய், அர்ஜுனுக்கு நம்ம மேல கோவம் இல்ல. அவன்தான் அம்முவ காப்பாத்தி தரப்போறான். அடுத்த பிறவில வரப்போறான், இப்படியெல்லாம் சொன்னா அவ நம்புவாளா?” – அனேகன்.
“நம்ப மாட்டா ப்ரோ. ஆனா, அவ அவ்வளவு பயந்தாளே ப்ரோ. பயத்துல அவளுக்கு ஏதாவது ஆகிருந்தா?” – திரவியம்.
“ஹாஹா… என்ன ஆகும் திரு? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். அம்முவுக்கு மூத்தவளா இருந்தாலும் பிறந்ததுல இருந்தே பயந்த பொண்ணா, அம்முவோட அரவணைப்பை சார்ந்தே இருந்த அச்சு, அம்முவுக்காக தனி ஆளா நின்னு என்னவெல்லாம் செஞ்சா? ஒய்ஜா போர்ட் ப்ராக்டிஸ் பண்ணும்போது பயந்தாள் தான். ஆனா எழுந்து ஓடலையே! அவளால எல்லாம் முடியும் திரு!” – அனேகன்.
“யூ ஆர் க்ரேட் அனேகன். எப்படி இந்தமாதிரி ஒரு ஷிட்டிவேஷன்லயும் பக்காவா யோசிக்கறீங்க? நான் கூட ஒரு நிமிஷம் யோசிச்சேன். அச்சு இவ்வளவு பயப்படுறாளே, இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா அப்படீன்னு. அன்னைக்கு என் கண்ணுக்கு நீங்க அம்முவ பத்தி மட்டும் யோசிக்கறதாதான் தோணுச்சு. ஆனா, அம்முவ இப்படி ஒரு நிலைமையில வச்சிட்டு நீங்க அச்சுக்காகதான் எல்லாம் பண்ணியிருக்கீங்கனு இப்பதான் புரியுது ப்ரோ!” – திரவியம்.
“காதல் வந்துட்டா அப்படிதான் ப்ரோ! தன் துணை -அ கஷ்டப்படுத்தற எல்லாரையும் எதிரியா பார்க்கத்தான் தோணும்!” – சிரித்துக்கொண்டான் அனேகன்.
“அய்யோ ப்ரோ!!” – திரவியம் ஸ்ருதியை கூட்ட,
“ஜஸ்ட் ஃபார் கிட்டிங் திரு! கம். காஃபி சாப்பிடலாம்” என அவனது தோள்களில் கைப்போட்டு கேண்டீனுக்கு அழைத்து வந்தான் அனேகன்.
இருவரும் காஃபி அருந்திக்கொண்டிருந்த பொழுது,
“ப்ரோ! நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவீங்களா?” – திரவியம்.
“கேளுங்க திரு!” – அனேகன்.
“அம்மு சரியாகிட்டா. அப்படீன்னா சீதாவோட குழந்தையா பிறக்கப்போறது….” – திரவியம்.
“அஃப் கோர்ஸ் அர்ஜுன்” – அனேகன்.
“அது எப்படி சாத்தியம் ப்ரோ!” – திரவியம்.
“க்யூரியாசிட்டியா திரு!” – அனேகன்.
“லைட் –ஆ!!” என சிரித்த திரவியம் மீண்டும் கேட்டான் “ப்ளீஸ் ப்ரோ! அத மட்டும் சொல்லுங்க! ஒய்ஜா போர்ட் யூஸ் பண்ண அன்னைக்கு நிஜமா அர்ஜுன் வந்ததும் எங்கள வெளிய அனுப்பிட்டீங்க. அவன்கிட்ட என்ன பேசினீங்க? என்ன நடந்தது?” என்று.
“சொன்னா புரியற விஷயம் இல்ல திரு! கண்ணால பார்த்து தெரிஞ்சிக்கோங்க!” – அனேகன்.
“வாவ்… ரியலி? சொல்ல மாட்டீங்கனு நினைச்சேன் ப்ரோ! எங்க காமிங்க எனக்கு!” – திரவியம் துள்ளி குதித்தான்.
“இப்பவே –வா?? அதுக்கான நேரம் வரும்போது நிச்சயம் காட்டுறேன்” – மர்ம புன்னகையோடு தன் காற்சாட்டையில் இருந்து கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அனேகன்.
“நேரம் வரும்போதா? அது எப்ப வந்து நான் எப்ப தெரிஞ்சிக்கறது!” – ரகசியத்தை அறியும் ஆர்வத்தில் இருந்தான் திரவியம்.
கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அனேகன் டாக்டர் பிரபாகரனுக்கு கால் செய்தான்.
“ஹலோ அனேகன். இஸ் தேர் எவ்ரிதிங் ஓகே? அம்ரிதா கண் முழிச்சிட்டாங்கனு டாக்டர் சுந்தர் சொன்னாரு” – டாக்டர் பிரபாகரன்.
“ஆமா டாக்டர். இன்னுமொரு ஹேப்பி நியூஸ். அம்ரிதா என்னோட சகியா மாறிட்டா” – புன்னகையோடு கூறினான் அனேகன்.
“ஓ… தேங்க் காட். தாட்ஸ் ரியலி அ க்ரேட் நியூஸ். காட் ப்ளெஸ் யூ அனேகன். உங்க சகி –ய ரொம்ப நல்லா பார்த்துக்கோங்க” – டாக்டர் பிரபாகரன்.
“உங்க ஹெல்ப் இல்லைனா எதுவுமே சாத்தியமில்ல டாக்டர். உங்களுக்கு எப்பவும் நான் தேங்க்ஃபுல் –ஆ இருப்பேன். பை டாக்டர்” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் அனேகன்.
பேசிமுடித்துவிட்டு அனேகன் உள்ளே வரவும் அவனை தேடி எதிரே வந்துக் கொண்டிருந்தான் திரவியம்.
“ப்ரோ! டாக்டர் கூப்பிடுறாங்க” என்றான்.
“இதோ வர்றேன் திரு!” – அனேகன்.
அனேகன், திரவியம் இருவரும் டாக்டர் சுந்தரின் அறையை அடைந்தனர்.
“எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர்?” – அனேகன்.
“வாங்க அனேகன். உட்காருங்க!” – டாக்டர் சுந்தர்.
இருவரும் அமர்ந்ததும், வாசலை ஒருமுறை எட்டிப் பார்த்த டாக்டர் சுந்தர்,
“எங்கே ஆஷ்ரிதாவ காணோம். ஒரு நிமிஷம் கூட தங்கைய பிரிஞ்சி இருக்க மாட்டாங்களே!” என சிரித்துக் கொண்டே கேட்டார்.
“அம்முவுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வர வீட்டுக்கு போய்ருக்கா டாக்டர்” என்றான் திரவியம்.
“ஓ… ஃபைன். அம்ரிதாவ ஷிஃப்ட் பண்ணியாச்சி அனேகன். நான் சொன்ன மாதிரி இன்னும் த்ரீ டேஸ்க்கு அப்பறம் அவங்க கால் –ல மைனர் ஆப்ரேஷன் இரண்டு பண்ணனும். அப்பறம் இங்கையே வச்சி பார்த்துக்கணும்னாலும் ஓகே, இல்ல வீட்டுக்கு கூட்டிட்டு போய் பார்த்துக்கறீங்கனாலும் ஓகே” – டாக்டர் சுந்தர்.
“ஷ்யூர் டாக்டர். தேங்க் யூ சோ மச். நாங்க இப்ப அம்மு –வ பார்க்கலாமா?” – அனேகன்.
“தாராளமா! எங்க மெடிசின் –அ விட உங்க காதலும், உங்க பேச்சும் தான் அம்ரிதா குணமடைய ரொம்ப வேலை செஞ்சிருக்கு” – டாக்டர் சுந்தர்.
“சைக்கியார்டிஸ்ட் ஆச்சே டாக்டர்” என கூறி அனேகனது தோளை தட்டி சிரித்துக்கொண்டான் திரவியம்.
அவனோடு டாக்டர் சுந்தரும் அனேகனும் சிரித்துக்கொள்ள, அவரிடமிருந்து விடைப்பெற்று அம்ரிதாவை காண வந்தனர் அனேகனும் திரவியமும்.
“இப்ப ஓகே –வா இருக்கியா பேபி?” – அனேகன்.
ஆம் என தலையசைத்துக்கொண்ட அம்ரிதா, அருகே இருந்த நாற்காலியை கைக்காட்டி இருவரையும் அமர சொன்னாள். பின்,
“அச்சு எங்கே?” என கேட்டாள்.
“உனக்கு ட்ரெஸ் எடுக்கதான் வீட்டுக்கு போய்ருக்கா!” என்று அனேகன் பதில் கூறவும் வாசல் வரை வந்துவிட்ட ஆஷ்ரிதா ‘நான் வந்துட்டேன்’ என சுட்டியாய் கூறி உள்ளே நுழைய எண்ணிய தருணம் அவள் காதுகளில் விழுந்தது அம்ரிதாவின் குரல்.
“அச்சு கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டாளா?” – அம்ரிதா.
அம்ரிதா கேட்ட கேள்வியில், ஆஷ்ரிதா முகத்தில் இருந்த சுட்டித்தனமும் மகிழ்ச்சியும் காணாமல் போயிருந்தது. அனேகன் மற்றும் அம்ரிதாவின் குரல் மட்டுமே மாறி மாறி ஒளித்துக் கொண்டிருக்க, அவர்கள் இருவர் மட்டும்தான் அறைக்குள் இருக்கிறார்கள் என எண்ணி அமைதியாய் நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
“அம்மு. இப்ப இது தேவையா? முதல்ல நீ குணமாகி வீட்டுக்கு வா. அப்பறம் பார்த்துக்கலாம் எல்லாம்” – அனேகன்.
“இதுவும் முக்கியம் தான் அனேகா. சொல்லு” – தன் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் முக்கி முணங்கி பேசிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.
எதர்ச்சையாக வாசலை திரும்பிப்பார்த்த அனேகன், அங்கு ஆஷ்ரிதாவின் துப்பட்டாவையும், தரையில் தெரியும் அவளது நிழலையும் கண்டுக்கொண்டான். அதை இவர்கள் இருவரிடமும் காட்டிய அனேகன், தற்பொழுது தான் மட்டும் பேசுவதாய் சைகை மூலமே தெரிவித்தான். எப்படியும் இதுவரை திரவியம் வாய் திறக்காததால் அவள் உள்ளே இருப்பதை ஆஷ்ரிதா யூகித்திருக்கமாட்டாள் என எண்ணிய அனேகன், திரவியத்தை அங்கிருக்கும் ஸ்க்ரீன்னின் பின்னால் மறைவாய் நிறுத்திவைத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தான்.
“உன் அக்காவுக்கு அவன் மேல லவ் இருந்தாதானே! திரு எப்ப பார்த்தாலும் அச்சு அச்சுனு சொல்லிட்டு இருக்கான். அவ எவ்வளவோ எறிஞ்சி விழுந்தும் இந்த நிமிஷம் வரை அவள நினைச்சு தான் துடிக்கிறான். இதுல கொஞ்சம் துடிப்பாவது அவளுக்கு இருக்கா?” – அனேகன்.
அனேகன் பேசும் விதத்தில் அதிர்ந்த அம்ரிதா, “அனேகா! என்ன பேசுற!” என்றாள்.
“கீப் சைலன்ஸ் பேபி. நான் சொல்லுறதுதான் உண்மை. இல்லைனா இத்தனை நாள் அவன கஷ்டப்படுத்துவாளா? சரியான சேடிஸ்ட்!” என்று அனேகன் சொல்ல,
“ஆமா! நான் சேடிஸ்ட் தான்!” என ஆத்திரம் பொங்க உள்ளே வந்து நின்றாள் ஆஷ்ரிதா.
“அச்சு! நீ எப்போ வந்த?” – அம்ரிதா.
“எல்லாம் வர வேண்டிய நேரம் தான் வந்தேன். உங்கள நான் என்னவோனு நினைச்சிருந்தேன் அனேகன். என்ன நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவு தானா? உங்களுக்கு என்ன தெரியும் நான் திரு மேல வச்சிருக்கற லவ் பத்தி? அம்முவ ஹாஸ்பிடல் –ல அட்மிட் பண்ண உடனேயே நான் தேடினது அவனதான். எப்படி கால் பண்ணுறதுனு துடிச்சேன். உங்க ஃபோன் –ல லாக் எடுக்க முடியலைனும் தூக்கிப்போட்டு உடைச்சேன். ஒரு நர்ஸ் வந்து என்ன திட்டிட்டு கூட போனாங்க! அவன பார்க்காம அவன்கிட்ட சொல்ல முடியாம பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டேன். என்ன பார்த்தா சேடிஸ்ட் மாதிரி தெரியுதா உங்களுக்கு?” – ஆஷ்ரிதா.
“அவன லவ் பண்ணுறன்னா எதுக்கு அச்சு இவ்வளவு கஷ்டப்படுத்துற அவன?” – அனேகன்.
“காலம் முழுக்க அவன் கஷ்டப்படக் கூடாதுனு தான் நான் வேணாம்னு சொன்னனே தவிர வேற எந்த காரணமும் கிடையாது. அவன் ஹாஸ்பிடல்க்கு வந்ததும் அவன ஓடி போய் அணைச்சிக்கிட்டேன். அதுக்கு அப்பறம் தான் எனக்கு புது தைரியமே வந்தது. நான் அவன அந்த அளவுக்கு லவ் பண்ணுறேன் அனேகன். அவன் வேற பொண்ண கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கட்டும். நான் காலம் முழுக்க அவன நினைச்சிட்டே வாழ்ந்திடுவேன்” – ஆஷ்ரிதா.
“உண்மையா லவ் பண்ணுற எந்த ஒரு பொண்ணாலையும் தான் ஆசைப்பட்டவன இன்னொருத்திக்கு விட்டு தர முடியாதே அச்சு” – அனேகன்.
“அனேகன் ப்ளீஸ்… என்ன கொல்லாதீங்க. என் காதல் உண்மை. ஐ லவ் திரு. நான் அவன கல்யாணம் பண்ணிக்க தான் ஆசைப்பட்டேன். என் காதல் உண்மை. ஐ லவ் திரு! ஐ ரியலி லவ் மை திரு” என காதை மூடிக்கொண்டு கத்தினாள் ஆஷ்ரிதா.
அவள் பேசியதை கேட்டு வெற்றி மகுடம் சூடியபடி நின்றிருந்த அனேகன் தனது கைகளை இருமுறை தட்டிவிட்டு “என்ன திரு? சந்தோஷமா?” என்கவும் திரையின் பின்னால் இருந்து இன்முகத்தோடு வெளியே வந்தான் திரவியம்.
திரவியத்தை அங்கு சற்றும் எதிர்பார்க்காத ஆஷ்ரிதா திடுக்கிட்டாள். அனேகனது திட்டம் வெற்றிக்கண்டதை எண்ணி, அம்ரிதா ஒரு சிரிப்பினை மட்டும் சிந்திவிட்டு அனேகனை நோக்கி சூப்பர் என சைகை காட்டினாள்.
கண்ணீரால் நிரம்பியிருந்த திரவியத்தின் கண்கள் தற்பொழுது தெளிவையும் சேர்த்திருப்பது தெரிந்தது ஆஷ்ரிதாவுக்கு. அவளை நோக்கி மெதுவாக நடந்துவந்த திரவியத்தை காண இயலாமல் தன் இமையோடு சேர்த்து தலையினையும் குடை சாய்த்தாள் ஆஷ்ரிதா.
அவளை நெருங்கியவன், அவளது வலது தோளை அழுந்தப் பற்றிக்கொண்டு தன் வலது கையால் அவள் தாடையை தொட்டு நிமிர்த்தினான்.
அழுகையை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்த அவளது சிவந்த கண்களை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தவன் “இனி இந்த கண்ணு எதுக்காகவும் அழக்கூடாது அச்சு” என்றான்.
“நான் உனக்கு வேண்டாம் திரு” – மீண்டும் கூறினாள் ஆஷ்ரிதா.
இதை கேட்டதும் இளகி இருந்த திரவியத்தின் முகத்தில் இறுக்கம் கூடியது. கடுத்த பாவம் கொண்டு ஏதோ சொல்ல வந்தவன் சற்று நிதானித்து “உனக்கு என்ன தான் பிரச்சனை அச்சு?” என்றான்.
“என்னால… குழ…” சொல்ல வந்தவளை “ஷட் அப் அச்சு” என்று அதட்டி அமைதியாக்கிய திரவியம்,
“இது ஒரு மேட்டரே இல்லனு தான் நானும் அம்மாவும் மாறி மாறி சொல்லிட்டு இருக்கோம்” என்றான்.
கன்னியவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“நான் உன் கண்ணுல பார்த்திருக்கேன் அச்சு. இன்னைக்கு இல்ல நேத்து இல்ல. அம்மு விஷயத்த நீ என்கிட்ட சொல்லுறதுக்கு முன்னாடியே. அந்த உரிமையில தான் நான் உனக்காக அவ்வளவு ஓடினேன். நீ சும்மா வாய் வார்த்தையில அன்னைக்கு கேட்ட, நான் இதெல்லாம் பண்ணுறதுக்கு என்ன உரிமை இருக்குனு. என்ன உரிமையில நான் செஞ்சேன்னு உன் மனசுக்கு தெரியும் தானே அச்சு? நாம ஒருத்தருக்கு ஒருத்தர் காதல சொல்லிக்கலைனா அது இல்லனு ஆகிடுமா? என்ன உரிமைனு ஒரு நிமிஷத்துல நீ எடுத்தெறிஞ்சு பேசும்போது எவ்வளவு வலிச்சுது தெரியுமா?” – உருக்கமாக கேட்டான் திரவியம்.
“எனக்கும் வலிச்சுது திரு. உன் அம்மா சொன்னாங்களே, என்ன கல்யாணம் பண்ணிக்கனு சொல்லும்போது ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் –னு நீ சொன்னதா. அது எனக்கு வலிச்சுது. அன்னைக்கு எல்லாம் சொல்லாத காதல், இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு குறை –னு தெரிஞ்சதும் சொன்னா அது அனுதாபம் தானே” – ஆஷ்ரிதா.
“அச்சு ப்ளீஸ்… மறுபடியும் அந்த வார்த்தைய சொல்லி என்ன கொல்லாத. முன்னாடி எனக்கான காதல நான் உன் கண்ணுல பார்த்திருக்கேன். அஃப்கோர்ஸ் நானும் உன்ன லவ் பண்ணேன். ஆனா நாம ரெண்டு பேரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் இத பத்தி பேசினதில்ல. பேசுற நிலைமையிலும் நீ இல்ல. என் அம்மா கேட்டப்ப நான் ஆமா –னு சொல்லியிருந்தா அம்முவோட பிரச்சனை எல்லாம் சொல்லவேண்டி வரும். அதனால தான் அன்னைக்கு அப்படி சொன்னேன். அப்பறம் ஒன்னு கேட்டியே, அன்னைக்கு எல்லாம் சொல்லாத காதல இன்னைக்கு எதுக்கு சொன்னேன் –னு? இத கேட்குறப்ப உனக்கே சிரிப்பு வரலையா அச்சு?” – திரவியம்.
அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள் ஆஷ்ரிதா.
“என்ன முழிக்கற? கெட்டவனா இருந்தா உனக்கு உடம்புல இப்படி ஒரு பிரச்சனைனு தெரிஞ்சதும் நல்லவேளை முன்னாடியே லவ் –அ சொல்லல –னு கடவுளுக்கு கோடி குப்பிடு போட்டுட்டு ஓடிருப்பான் அச்சு. ஆனா நான் அப்படி பண்ணலையே. உன்ன பத்தின உண்மை தெரிஞ்சதுமே இனியும் நாட்கள கடத்தக்கூடாதுனு யோசிச்சி, நான் உன்னதான் கல்யாணம் பண்ண நினைச்சேன் –னு தானே சொன்னேன்?” என திரவியம் கேட்கவும் தான் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்கும் பொருட்டு சட்டென அவனது மார்பில் ஒட்டிக்கொண்டாள் பெண் அவள்.
அவளை தன் கைக்கொண்டு அணைத்தவன்,
“இதெல்லாம் நீயா புரிஞ்சிக்கணும் அச்சு. நானே என்ன பத்தி சொல்லுறதுலாம் நல்லாவா இருக்கு? இனி இப்படி ஒரு தர்ம சங்கடத்துக்கு என்ன ஆளாக்காத ப்ளீஸ். இந்த ஜென்மத்துல உன்ன தவிர வேற எந்த பொண்ணையும் நான் நினைச்சு கூட பார்க்க மாட்டேன்” என்றான்.
“சாரி” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு அணைப்பை இன்னும் இறுக்கினாள் ஆஷ்ரிதா.
“பொண்ணு சம்மதிச்சாச்சு போல” என்று கேட்டவாறு கலகலவென சிரித்தாள் அம்ரிதா.
அவளின் குரலில் சட்டென பிரிந்து நின்றனர் ஆஷ்ரிதாவும் திரவியமும். திரவியம் அசடு வழிய நின்றிருந்தான். ஆஷ்ரிதாவின் முகத்தை வெக்கம் சூழ்ந்துக்கொண்டது.
“அய்யோ… அக்கா… உன்ன இப்படி சிரிச்சிட்டே பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஓடி வா இங்க, எனக்கு ஒரு ஹக் கொடு” – தன் இரு கைகளையும் நீட்டி கேட்டாள் அம்ரிதா.
நின்ற இடத்தைவிட்டு அசையாமல் சிரித்தபடியே இருந்தாள் ஆஷ்ரிதா.
“அடி பாவி! என்ன அசையாம நிக்கற? அப்போ இனி திரு மாமாவுக்கு மட்டும்தான் ஹக் –ஆ? எனக்கு கிடையாதா?” – வேடிக்கையாய் அம்ரிதா கேட்க,
“அடியே வாலு” என ஓடி வந்து அம்ரிதாவை அணைத்து அவளது கன்னத்தில் அன்பின் சின்னமாய் ஒரு முத்தம் பதித்தாள் ஆஷ்ரிதா.
அனேகனை கட்டிக்கொண்ட திரவியம் “தேங்க்ஸ் ப்ரோ! சொன்னமாதிரியே செஞ்சிட்டீங்க” என்றான்.
“தேங்க்ஸ் –ஆ? நான் உனக்காக செஞ்சேன் –னு நினைச்சியா திரு. சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்பதான் நான் என் பேபி கூட டூயட் ஆட முடியும். அதுக்குதான் இவ்வளவும் பண்ணேன்” என சிரித்துக்கொண்டான் அனேகன்.
“கொஞ்சம் லேட் பண்ணிருந்தா அம்மு –வ கடத்திட்டே போய்ருப்பீங்க போலையே” – திரவியம்.
“அதுவும் நல்லாதான் இருந்துருக்கும். நீங்கதான் அந்த சீன் –க்கு இடம் தரலையே” என்று அனேகன் கூற நால்வரும் கட்டிடமே அதிரும் வண்ணம் சிரித்தனர்.
அந்நேரம் ஐ.சி.யூ. வார்டில் அம்ரிதாவை பார்த்துக்கொண்ட அதே நர்ஸ் உள்ளே வந்து,
“என்ன இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க. அமைதியா இருங்க. இது ஹாஸ்பிடல். இப்பதான் ஐ.சி.யூ. –ல இருந்து ஷிஃப்ட் பண்ணீயிருக்கோம் அவங்கள. நியாபகம் இருக்கட்டும்” என கடிந்துவிட்டு செல்ல, அந்த சில வினாடிகள் அவர்கள் அடக்கி வைத்திருந்த சிரிப்பு மீண்டும் பொத்துக்கொண்டு வந்தது அனைவருக்கும்.
“கருமம்… கருமம்… சரியான லூசு கூட்டமா இருக்கும் போல” என தன்னிடமே பேசியபடி வெளியே சென்றுவிட்டார் அந்த நர்ஸ்.
_____________________________
திரவியம் தெரிஞ்சிக்க ஆசப்படுற விஷயத்தை நீங்களும் தெரிஞ்சிக்க வேணாமா? எபிலாக் வரை காத்திருங்க நட்பூஸ்.
இந்த கதைக்கு தொடர்ந்து கமெண்ட் செஞ்சு என்ன உயிர்ப்பா வச்சிருந்த உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு எபிலாக் –ல… அதுக்காகவும் காத்திருங்க..