Kandeepanin Kanavu-6

Kandeepanin Kanavu-6

                    காண்டீபனின் கனவு 6

 

வீர் அன்று முழுவதும் வருனோடு நன்கு பழகி விட்டிருந்தான். வா டா போடா எனும் அளவிற்கு நெருக்கம் வந்தது. வீராவிற்கு இப்படி ஒருவனோடு இத்தனை நாள் பழகமுடியாமல் காலம் சதி செய்து விட்டதே என்று கூட தோன்றியது.

அந்த அளவு இருவருக்கும் விஷயங்கள் ஒத்துப் போனது, அத்தோடு அந்த இடத்தில் தாய் மொழியில் ஒரு துணை கிடைத்தால் யாரும் அதைத் தவற விடமாட்டார்கள்.

 

“வீர் டின்னர் ப்ளான் என்ன?” அவனும் தன்னைப் போல தனியாக வசிக்கிறான் என்ற எண்ணத்தில் கேட்டான் வருண்.

“வீட்டுக்கு தான் வருண். என்னை நம்பி ஒரு ஜீவன் இருக்கே!” தலையில் கைவைத்துக் கூற,

“வாட்? ஆர் யூ மேரீட்? சொல்லவே இல்ல..” அவனது தோளைத் தட்ட,

“டேய் டேய்.. அப்டி எல்லாம் இல்ல. என் அத்தை பொண்ணு. அவளும் என்கூட இந்த ஊருல படிக்கணும்னு வந்திருக்கா.” அலடிக்கொள்லாமல் சொன்னான் வீரா.

“அத்தை பொண்ணா..?!” வருண் கண்ணடித்துக் கேட்க,

“ஹே! நீ நெனைக்கற மாதிரி அத்தை பொண்ணு இல்லை. இவளும் நானும் ஒன்னாவே தான் இருக்கோம் சின்ன வயசுலேந்து. நாங்க ஜாயின்ட் ஃபேமிலி. எப்போதும் என்கூட அவளுக்கு போட்டி தான். இப்பையும் போட்டி போட்டு யூஎஸ் வந்தா. சோ வீட்ல அவள பாத்துகற பொறுப்ப என் தலைல கட்டிட்டாங்க. தட்ஸ் ஆல். அவளும் நம்ம கூட கேனியன்க்கு வருவா” என்றவன், தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“ஒ! இஸ் இட்! கூல். சேப்ஃடி மெஷர் எல்லாம் பாத்து எடுத்துக்கோ.” அக்கறையோடு சொன்னான் வருண்.

இருவரும் பார்கிங் வரை ஒன்றாக வர,

“ நீ எங்க தங்கிருக்க? டின்னெர்?” வீரா கேட்க,

“இங்க தான் ஒரு ரூம் எடுத்து ஸ்டே பண்ணிருக்கேன். ரெண்டு நாள் முன்னாடி தான் இந்த ஊருக்கு வந்தேன். ப்ராஜெக்ட் எங்கல்லாம் வருதோ அங்க போக வேண்டியது தான. இங்கயே எதாவது சாப்ட்டுட்டு கெளம்ப வேண்டியது தான். நீ கெளம்பு. நாளைக்கு பாப்போம்.” வருண் கிளம்பினான்.

கில்பர்ட் ஏற்கனவே சம்மதித்திருக்க, சம்ரக்ஷாவையும் உடன் அழைத்துச் செல்வது என முடிவு செய்திருந்தான் வீரா. ஆனால் அதற்காக அவளுக்கும் தனக்கும் என்னவெல்லாம் தேவை என்பதைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லை.

இப்போது வருண் சேஃப்டி பற்றிக் கூறியதும் தான் அவனுக்கும் உரைத்தது, உடனே அவளுக்குப் போன் செய்தான்.

காரைக் கிளப்பிக் கொண்டு ப்ளூடூத்தில் கனெக்ட் செய்த ஸ்பீக்கரில் பேசிக் கொண்டே சென்றான்.

“சாம், எங்க இருக்க?”

“பஸ் ஸ்டாப் வந்துட்டேன். பஸ் வந்ததும் ஏறி வீட்டுக்கு வர வேண்டியது தான். ஏன் டா?” என்னவோ என்று அவள் கேட்க,

“சரி அங்கேயே இரு நான் வந்து பிக் பண்றேன்.” என கட் செய்தான்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவள் காலேஜ் அருகில் இருக்கும் பஸ்ஸ்டாப்பில் வந்து நிறுத்தினான். அவளும் ஏறிக்கொள்ள,

“என்ன டா. பிக் அப் எல்லாம் பண்ற? என்ன இன்னிக்கும் டின்னர என் தலைல கட்டலானு பாக்கறியா?” புருவத்தை ஏற்றிக் கேட்க,

“த்தூ.. அல்ப. ஷாபிங் போறோம் டி.” அவளின் எண்ணத்தை நினைத்துத் துப்பினான்.

“ஹே..வாவ்..! அதுசரி.. சும்மலாம் நீ ஷாபிங் கூப்டுட்டு போக மாட்டியே!. எவளையாவது கரெக்ட் பண்ணிட்டியா? வீட்ல பேசணுமா? தைரியமா சொல்லு. அத்தை மாமா கிட்ட நான் பேசி ஓகே பண்றேன்.” பெரிய மனுஷியாக அவனிடம் உரைக்க,

“அடடா.. நீ சப்போர்ட் பண்ணி என் கல்யானமா? ஏன் என் அப்பா அம்மா கிட்ட எனக்கு பேசி சம்மதம் வாங்கத் தெரியாதா. நான் என்ன ஊமையா? அத விட முக்கியம், இந்த ஊர் பொண்ணெல்லாம் எனக்கு வேண்டாம்பா. எனக்கு லட்சணமா நம்ம ஊர் பொண்ணு தான். புடவை கட்டி, பூவெச்சு.. பொட்டு வெச்சு..” அடுக்கிக் கொண்டே சென்றான்.

அவன் சொல்வதைக் கேட்டு அவள் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

“ஐய.. நீ அந்தக் காலம் டா.” தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“உங்கிட்ட போய் சொன்னேன் பாரு.” வேகமாகச் சென்றான்.

“சரி அது உன் இஷ்டம். உங்க கம்பனில கேட்டியா? நானும் உன்கூட வரேன்ல. சொல்லு..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அதற்குள் அவன் ஒரு ஷூ கடைக்கு முன் வண்டியை நிறுத்த, அவன் சொல்லாமலே அவளுக்குப் புரிந்தது.

“ஐயா.. தேங்க் யூ தேங்க் யூ வீர்.” வண்டியை விட்டு இறங்கி குதித்தாள்.

“எப்போ போறோம்?”

“நாளானிக்கு”

இருவரும் ஷூ வைத் தேர்ந்தெடுக்க, வீர் அதற்கு பில் செட்டில் செய்தான்.

பிறகு அவளோ அங்கிருந்த ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி டிஷர்ட், லெக்கின் பேன்ட்ஸ், கூலர்ஸ், சில பபிள்கம்கள்  என அனைத்தும் வாங்க, அவனுக்கும் சேர்த்தே சில டிஷர்ட் எடுத்தாள்.

பிறகு இருவரும் சேர்ந்து சில எளிய உணவு வகைகளை வாங்கிக் கொண்டனர். ப்ரெட், ரெடிமேடு சப்பாத்தி சில ஜூஸ் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள, பிரஷ் பேஸ்ட் போன்ற சில அத்தியாவசிய தேவைகளையும் வாங்கினர்.

“நூட்லஸ் கூட எடுத்துக்கோ வீர். அப்புறம் சின்ன காபி பவுடர் கூட.எனக்கு காபி இல்லனா தல வலி வரும்.” சாம் சொல்ல,

“சரி.. மறக்காம நம்மகிட்ட இருக்கற அந்த வயர்லஸ் அடுப்பு எடுத்துக்கணும்.ஞாபகப் படுத்து” என்றான்.

ட்ராலியை தள்ளிக் கொண்டு சாம் வர, வீரா அனைத்தையும் எடுத்து போட்டுக் கொண்டான். அடுத்து நாப்கின்ஸ் இருக்கும் செக்ஷன் வர,

“சாம்.. வீட்ல ஸ்டாக் வெச்சிருக்கியா?”  இயல்பாகக் கேட்க,

“இருக்கு இருக்கு.” என்றாள்.

 “சரி இது எதுக்கும் இருக்கட்டும்.” என எடுத்துக் கொண்டான்.

“நாம ஒன் வீக் தான இருக்கப் போறோம். இப்போ எனக்கு அந்த டைம் இல்ல” அவன் காதில் சொல்ல,

“சொன்னா கேளு. மலை எல்லாம் ஏறனும். சோ நாம இதெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணும்.” அவள் பேச்சை அலட்சியம் செய்து எடுத்து வைத்தான்.

அவனது இந்த கவனிப்பு அவளுக்குப் புதிதல்ல. இங்கு வந்த பிறகு வெகு ஜாக்கிரதையாகவே அவளைப் பார்த்துக் கொள்கிறான். இருந்தாலும் இன்று அவனது செயல் அவளுக்கே தெரியாமல் இதமளித்தது.

இருவரும் அருகில் இருந்த ஒரு இத்தாலி உணவகத்தில் சாப்பிட்டு முடிக்க,

“வீர்..” ஒரு பக்கமாக உதட்டை இழுத்து சிரித்தாள்.

“என்ன?” முகத்தை சுருக்கி அவளைப் பார்த்தான்.

“இத்தாலி ரெஸ்டாரென்ட்…” இழுத்தாள்.

“அதுகென்ன..புடிக்கலையா? அப்டீனா வேற கடைல போய் மறுபடியும் மொதலேந்து சாப்பிடுவோமா?” கையை மடக்கி டேபிளின் மீது வைத்துக் கொண்டே கேட்டான். அவனுக்கு அடுத்து அவள் என்ன கேட்பாள் என நன்றாகவே தெரியும்.

“இல்….ல..ல….. வீரா.. ஒரே ஒரு…” இழுவை ஜாஸ்தியாக இருந்தது…

“ஒரே ஒரு..?” முறைத்தான் வீரா.

“ப்லடி மேரி..ஈஈஈ….” பல்லைக் காட்டி இளித்தால்.

“மூடிட்டு வா டி..” பில் கட்ட எழுந்து சென்றான்.

“ஆம்பள நானே சும்மா இருக்கேன். உனக்கு சரக்கு கேக்குதா?” சட்டையை முட்டி வரை இழுத்து விட்டுக் கொண்டு காரை நோக்கி சென்றான்.

“ஏன் பொம்பளைங்க சரக்கு அடிக்கக் கூடாதா? ஆம்பளைங்க தான் அடிக்கணுமா. நான் என்ன புல் பாட்டிலா கேட்டேன். ஒரே ஒரு பெக். அதுவும் காக்டேயில். அது கூட கூடாதா. ரொம்ப அல்டிகர.ஹ்ம்ம் க்கும்..” முகத்தை தூக்கிக் கொண்டு நடந்தாள்.

“யாரு நீ ஒரு பெக்ல நிறுத்தரவளா? இந்த ஊருக்கு வந்து நீ ரொம்ப கெட்டு போயிட்ட. அன்னிக்கு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வீட்டுக்கு வந்து வோட்கா பார்ட்டி வெச்சீங்க. நீ மட்டுமே ஆறு ரவுண்ட். அதுக்கு அடுத்த நாள் பூரா வாந்தி வேற. இப்படி போனா கம்பனிக்கு கட்டுப்படி ஆவாது. அப்புறம் வீட்ல சொல்ல வேண்டியது தான்.”

“அன்னிக்கு மட்டும் தான் அப்படி ஆச்சு. இங்க வந்து நான் மொதல்ல குடிச்சதே அப்போ தான. அது கூட நீ இருக்கும் போது தான்.” அவனது நடைக்கு ஈடுகொடுத்து ஓடி வந்தாள்.

“ஏன் டி..நீ குடிச்சதுக்கு நான் காவலா உனக்கு.போதுமடி. நான் தான் உன்ன குடிக்க வெச்சேன்னு சொல்லுவ அப்பறம். இதோட நிறுத்து. எனக்குத் தெரியாம நீ குடிக்கவே கூடாது. ரெண்டு நாள்ல ஊருக்கு போகணும். அப்பறம் வாந்தி கீந்தி னு இருந்த விட்டுட்டு போய்டுவேன்” மிரட்டி கூட்டிக் கொண்டு வந்தான்.

இருவரும் சகஜமாக பேசி வீட்டிற்கு வந்தனர்.

ஒரு ஹால், இரண்டு படுக்கையறை எதிரெதிரே இருந்தது அவர்கள் வீட்டில். சிறிய இடம் என்பதால் ஒரு அறையிலிருந்து பேசினாலும் நன்றாகக் கேட்கும்.

“யாரெல்லாம் வராங்க. எத்தன பேர் போறோம்?” அவளது படுக்கையில் அறையில் இருந்து கேட்டாள்.

“உன்னோட சேந்து ஆறு பேர். வருண்ன்னு புதுசா ஒருத்தன் வந்திருக்கான்.” என அவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

“வருணா.. இந்தியனா?” சாம் ஆர்வமாக,

“ஆமா. ஆளு பாக்க நல்லா இருக்கான். அதுக்கு மேல அவன்கிட்ட இந்த வேலைக்கான நெறைய ஸ்டஃப் இருக்கு. நிறைய விஷயம் சொல்றான். இன்னிக்கு அத விட முக்கியமா வேற ஒன்னு நடந்துச்சு.” ஒரு நொடி அவன் பார்த்த படங்கள் கண் முன்னே வந்தது அவனுக்கு.

“என்ன வீர்? அவனும் உன் கனவுல வந்தானா?” ஓரளவு கணித்தாள்.

“அவன் வரல, அவன் காட்டின அந்த இடத்தோட படங்கள் என் கனவுல வந்த மாதிரி இருக்கு.” அவனது குரல் அவன் சொல்வது உண்மை எனக் கூறியது.

“நிஜமாவா வீர். அப்போ அந்த இடத்துக்கு போனா உனக்கு அங்க என்ன இருக்கு..ஏன் உனக்கு அந்த கனவு வருதுன்னு தெரிஞ்சிருமா?” எழுந்து வந்தாள்.

“அப்படித் தான் நெனைக்கறேன். என்ன கனவுன்னு தெரிஞ்சுக்கலாம் ஆனா ஏன் வருதுனு எப்படி தெரிஞ்சுகறது.இதுல நான் என்ன பண்ணனும்.அது தான் புரியல.”

“நான் ஒரு யோசனை சொல்றேன். நீ நல்லா தூங்கு. பாதில முழிக்காம நல்லா தூங்கிப் பாரு. அப்போ ஒரு வேளை அங்க என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.” அதி புத்திசாலியாக ஐடியா கொடுத்தாள்.

“சரிங்க அறிவாளி. போய் படுங்க. நாளைக்கு வீட்ல இரு. காலேஜ் போக வேண்டாம். நானும் சீக்கிரம் வந்திருவேன். எல்லாம் எடுத்து வெச்சுட்டு மறுநாள் கிளம்பனும்.” சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவனது போன் ஒலித்தது.

எழுந்து பார்க்க, வீட்டிலிருந்து வந்தது.

அவசரமாக எடுத்தான்.

“காண்டீபா.. தாத்தா பேசறேன். எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?” நீண்ட நாட்களுக்குப் பிறகு தாத்தா பேசியது வீராவிற்கு கண் கலங்கியது.

கண்ணை மூடித் திறந்து நீரை வெளியே விடாமல் பார்த்துக் கொண்டான்.

“நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க. எப்போ வந்தீங்க? யாத்திரை எல்லாம் நல்ல இருந்துதா?” அவனும் விசாரிக்க,

“நல்லா இருந்துச்சு பா. சின்ன பாப்பா எப்படி இருக்கா?” சம்ரக்ஷாவை அவர் எப்போதும் அப்படித் தான் அழைப்பார்.

“நல்லா இருக்கா தாத்தா. இங்க தான் இருக்கா. பேசறீங்களா?” கேட்கவும், உடனே மறுத்தார் தாத்தா.

“இல்ல பா அவ கிட்டா அப்பறம் பேசறேன். நாளைக்கு நீங்க ஏதோ மலை குகைக்கு போறதா அம்மா சொன்னா. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. அங்க நீ பார்க்கறது, யோசிக்கறது எல்லாத்தையும் குறிப்பெடுத்து வெச்சுக்கோ.” ஏதோ உள்ளர்த்தத்துடன் கூறினார்.

“ஏன் தாத்தா? என்ன விஷயம்.?” வீராவிற்கு ஏதோ அவர் சொல்ல வருவது போலத் தோன்ற,

பக்கத்தில் மோகன் இல்லையென்றதும், தாத்தா சற்று அவனிடம் பேசலானார். அவன் மலைக்குச் செல்கிறான் என கேள்விப் பட்டதும், நிச்சயம் அது அவனது வாழ்வின் தேடலாகத் தான் அமையும் என அவருக்குப் பட்டது. அத்தோடு அல்லாமல், தமா வேறு கனவில் அவனுக்குப் பலவற்றை எடுத்துறைப்பதாகக் கூறியது அவர் நினைவில் நன்றாக இருந்தது.

அவனது இருபத்து ஏழு வயதில் அவன் அனைத்தும் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமென்பது விதி. அதுவும் குகைப் பயணம் அவனை நிச்சயம் இலக்கு நோக்கி அழைக்கும் என அறிந்தார். மலையும் குகைகளும் தானே இன்றும் பல அமானுஷ்யச் ஆச்சரியங்களைத் தனக்குள் கொண்டிருக்கிறது.

இரண்டும் இரண்டும் நான்கு எனக் கணக்குப் போட்டுத் தான் பேசினார் தாத்தா.

இருப்பினும் முழு விவரமும் இப்போது அவனுக்கு வேண்டாமெனத் தோன்றியது.

“வீரா, நான் கேட்கறதுக்கு மொதல்ல பதில் சொல்லு. உனக்கு எதாவது கனவு தொடர்ந்து வருதா?

தாத்தாவுக்கு எப்படித் தெரிந்தது என அவன் யோசித்தாலும், தாத்தாவை அவன் எப்போதுமே ஞானியாகத் தான் பார்ப்பான்.

“ம்ம். ஆமா தாத்தா. ஆனா ஒன்னும் புரியல. எதுவும் சரியா தெரியல.எல்லாம் அரை குறையா இருக்கு.ஏதோ குகைக் குள்ள போற மாதிரி தெரியுது. ஒரு ஒளி. யாரோ பேசற மாதிரி இருக்கு.” வீரா விளக்கினான்.

“இந்தப் பயணம் உன்னை உன் இலக்கு நோக்கி கூட்டிப்போகும். நான் சொன்னத செய். எல்லாம் உனக்கே புரியவரும். அங்க பாக்கறது எல்லாம் குறிச்சு வெச்சுக்கோ.” மொட்டையாகக் கூறினார் தாத்தா.

“இதுலாம் என்ன தாத்தா. எனக்கு புரியல. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.” அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கேட்டான்.

“இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது பா. நீ இங்க வரப்ப நான் எல்லாம் சொல்றேன். சின்ன பாப்பாவ பத்திரமா பத்துக்கோ. போயிட்டு வந்து எனக்கு போன் பண்ணு.” என்றார்.

வீராவிற்கு தன் வாழ்வின் இலக்கு என்ன? என்ற பெரிய கேள்வி முன்னால் வந்து நின்றது.

அன்று இரவு கனவில் அவன் பலவற்றைக் கண்டான்.

தாத்தாவும் முருகன் இறந்ததிலிருந்து, தங்கள் குடும்பத்திற்குச் சம்மந்தம் இல்லாதவர்கள் உள்ளே வர நினைத்தால், அவர்கள் இறந்து விடுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டார். முருகனுடன் இருந்தவனுக்குக் கண் பார்வை மட்டும் தான் போனது என’ அவனைச் சென்று பார்த்து பேசிவர முடிவு செய்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!