Kandharva loga 21

Kandharva loga 21

kl.jpgகந்தர்வ லோகா – 21

அன்றிரவு பௌர்ணமி. வைத்தி யாகம் செய்வதற்கும், அங்கு கோடி முறை சொல்லும் மந்திரத்தையும் மனதில் ஒரு முறை சொல்லிப் பார்த்தார். அதை குருஜி க்கும் சொல்லிவைத்தார். இருவரும் சேர்ந்து அதை செய்வது என்று முடிவு செய்தனர்.

குருஜியோ தனது மூளையைக் கசக்கி, அதீந்த்ரியனை எப்படியும் லோகாவின் பக்கம் நெருங்காமல் பார்த்துக் கொள்ள நினைத்தார். விதியை யாராலும் மாற்ற முடியாது , ஆனாலும் அதன் தாக்கத்தை குறைத்து விட நினைத்தார். இப்போது அதீந்த்ரியனிடமிருந்து லோகாவைக் காக்க, அவனே வரம் கொடுத்தால் தான் உண்டு.

வைத்தி , “அவனை முழுதும் அவள் வாழ்விலிருந்து விலகும்படி கேட்க வேண்டும், இல்லையென்றால் லோகாவின் மனம் பக்குவப் பட்டு அவளே சுயமாக சிந்தித்து முடிவு செய்யும் வரையாவது அவனை தள்ளி நிறுத்த வேண்டும்” என்று வைத்தியிடம் கூற,

“ நாம இவ்வளவு செஞ்சும் நம்மால ஆளுக்கு ஒரு முறை தான் அவனிடம் வேண்ட முடியும். அதை தெளிவா யோசிச்சு செய்யணும் ஷண்முகா” வைத்தியும் சொன்னார்.

இரவுக்காக காத்திருந்தார்.

*************************************************

பாட்டி இரண்டு நாட்களும் விளக்கேற்றி அதை அணையாமல் பார்த்துக் கொண்டார். அந்த இரண்டு நாட்களும் லோகாவிற்கு கந்தர்வனால் தொல்லை ஏற்படவில்லை. அவள் நிம்மதியாவே உறங்கினாள்.

அதற்கு அதீந்த்ரியன் கடவுளை மதித்தது ஒரு காரணம்.

இரண்டு நாளும் கண்விழித்துப் பார்த்துக் கொண்டதால் அன்றிரவு தூங்கியே ஆகவேண்டும் என்று அவரது உடல் அவரைக் கேட்காமலே தூங்கவைத்தது.

ஆனால் லோகாவிற்கு அது அதீந்த்ரியனுடனான இரவாக மாறிப் போனது.

வீட்டில் அனைவரும் அன்று சீக்கிரம் உறங்கச் சென்றுவிட , லோகாவும் தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள். இது தான் தகுந்த சமயம் என்று அதீ அவள் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவள் தூங்காமல் தனது கைபேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள். மெத்தையில் குப்புறப் படுத்து சுவாரசியமாக விளையாடும் அந்தக் குழந்தைக் குமரியை அள்ளிக் கொள்ளும் அளவிற்கு அவனுக்கு ஆவல் எழுந்தது.

அவள் அருகில் வந்து அமர்ந்துகொள்ள , அவளோ கவனம் முழுதும் விளையாட்டில் செலுத்தி, ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் அறியாமல் அவளது அருகில் அவனும் படுத்துக் கொண்டு அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தான். அவளுக்குத் தொடும் உணர்வு ஏற்படவில்லை என்றாலும், ஏதோ ஒன்று அவளுக்கு சுகத்தை அளித்தது.

கைப்பேசியில் விளையாடுவதை நிறுத்தி விட்டு , அதில் நேரத்தைப் பார்க்க, “இவ்வளவு சீக்கிரம் தூங்கணுமா?!” என்று அவள் வாய் சொன்னாலும், அவளுக்கு ஏனோ தூக்கம் வந்தது ; வர வைத்தானோ?!

போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் , அவளது போர்வைக்குள் அவனும் இருந்ததை அறியாமல்!

அவனோ அவள் கண்ணுக்கு எதுவும் தெரியாததால் , இப்போது அவளிடம் தனது விளையாட்டை ஆரம்பித்தான். சிறிது நேரம் அவள் அருகில் இருக்கும் சுகத்தை அனுபவித்தான். அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனது கைகள் தானாக அவளது பஞ்சுப் போன்ற கண்ணத்தை வருட ஆரம்பித்தது.

“ அன்று உன்னை விட்டுச் சென்றேன்! இன்று என்னை உனக்குக் காட்டிவிட்டே செல்வேன் என்னவளே!”

அவனுக்குள் இருக்கும் உணர்வுகள் மெல்ல மெல்ல அவனை அவளோடு பிணைத்துக் கொண்டிருந்தது. கண்ணம் தாண்டி காது மடல் நெருட, அவளுக்கு கண்ணை சொருகியது. அந்த சுகமான தீண்டலில் கனவு என்னும் கடலுக்குள் இழுத்துச் சென்றான்.

தன் தீண்டலில் மயங்கித் தூங்கும் அந்தப் பதுமையை பூப்போல அள்ளி தனது மார்பில் சாய்த்துக் கொண்டான்.

அவளும் அந்த இடத்தை தனது மெத்தையாக நினைத்து மேலும் புதைந்து, தலையணை போல அவனைக் கட்டிக்கொண்டாள். அதை ரசித்த அதீந்த்ரியன் அவளை இடையோடு அனைத்துக் கொண்டு தன்னுடையவள் என்ற உணர்வில் லயித்துவிட்டான்.

கனவுலகில் அவளுக்கு மிகவும் இன்பமான சூழலைக் கொடுத்தான் அவன். இம்முறை மீண்டும் காட்டிற்கு அவளை இழுத்துச் செல்ல அவன் விரும்பவில்லை. வேறு வழியில் தன்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பினான்.

ஒரு அழகிய நந்தவனம். வழியெங்கும் பூக்களால் நிரம்பி வழிந்தது. அதில் அவள் நடக்க நடக்க அந்தப் பாதை நீண்டுகொண்டே சென்றது.

அப்போதுதான் தன்னையே அவள் கவனித்தாள். அதீ , கனவில் அவளை தேவலோகப் பெண் போல் மாற்றியிருந்தான். அவளின் நீண்ட கூந்தலில் ஆங்காங்கே பல வண்ண மலர்கள் சூடப்பட்டிருந்தது. ஒரு மெல்லிய நீண்ட ஆடை அவள் மார்பிலிருந்து கணுக்கால் வரை மறைத்து அதையும் தாண்டி புரண்டது. கழுத்துப் பகுதியை பூக்களால் ஆன மாலை மறைத்து தோள்கள் மட்டும் வெளியே தெரிந்தது.

கைகளிலும் பூக்களால் ஆன வளையல் அணிந்து அழகுப் பெட்டகமாக இருந்தாள். அவளே அவளை இந்தக் கோலத்தில் ரசிக்க வேண்டுமென்று அவள் சென்ற பாதையில் ஒரு மரத்தில் ஆளுயரக் கண்ணாடி போல் ஒன்றைப் பதித்திருந்தான்.

அந்த மரத்தை நோக்கி மெல்ல நடந்து சென்றவள் அதிலிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்க்க, பிரமித்து விட்டாள். இப்படி ஒரு ஆடையை அவள் எங்கும் கண்டதில்லை. இள நீல நிறம் அவள் உடலெங்கும் பூசினாற்போல இருக்க, அவளது பச்சைக் கண்கள் மேலும் ஒளிபெற்று ஜொலித்தது. தன் அழகை நினைத்து அவள் என்றும் வியந்ததில்லை. ஆனால் இன்று அவளுக்கே புதிதாகத் தோன்றியது அவளது தோற்றம். வயதிற்கே உரிய உணர்ச்சிகள் வெள்ளம் போல பாய்ந்தது.

சிவக்க ஆரம்பித்த தன் கண்னத்திலேயே கைவைத்து மறைத்துக் கொண்டு ரசித்தாள். சுற்றிப் பார்க்க , அந்த இடம் அவளைக் கவர்ந்தது. மேலும் தொடர்ந்து நடக்க, அங்கே ஒரு தாமரைத் தடாகம் இருந்தது. இரவும் முழு நிலவும் அந்த இடத்தை ரம்யமாக மாற்றியது. இனிமையான இசை காற்றில் மிதந்து வந்து அவள் காதுகளுக்கு இதமளித்தது.

அந்த சிறு குளத்தை ஒட்டி , தாழ்வாக சாய்ந்து வளர்ந்த மரங்கள் இருந்தன. அதில் படுத்துக் கொண்டு நிலவை ரசித்தால் எப்படி இருக்கும் என நினைத்து , அதில் சென்று அமர, அவளது தோளைத் தொட்டது ஒரு கரம்.

திடுக்கிட்டுத் திரும்ப, அவள் அசந்தே விட்டாள். அங்கு ஒரு வசீகரமான வாலிபன், வலிமையான கைகளால் அவளைத் தொட்டுக் கொண்டு அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான். அவனது கண்கள் காந்தம் போல அவளை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. அவனது கூரான நாசியும் எடுப்பான கண்ணமும் , புன்னகையை ஒட்டவைத்த இதழ்களும் அவளை மயக்கியே விட்டது.

‘யாரிவன்?! இப்படி ஒரு அழகனா?! அவனது திண்மையான மார்பில் அவளைப் போலவே மலர்மாலை அணிந்து, செய்துவைத்த உடற்கட்டுடன் , இடையில் பட்டாடை உடுத்தி , கம்பீரமாக அமர்ந்திருந்தான்.

“ யார் நீங்க?!” அவளுக்கே கேட்காமல் மெல்லப் பேசினாள்.

“ நான் உனக்கானவன். உன்னுடையவன்.” குரலில் கிறக்கம் உண்டானது.

“ அப்படீனா? எனக்குப் புரியல!” அவளது இதயம் ஆவலில் துள்ளிக் குதித்தது.

“ மெதுவாக புரியும். இப்போ அவசரமில்லை. நீ என்னுடைய லோகா”

அவள் ஏதோ பேச வாய் திறக்க, பேசாதே என்று ஒருவிரல் கொண்டு அவளது உதட்டை மூட,

அவனது ஸ்பரிசம் அவளுக்குக் கூச்சத்தை உண்டாக்கியது.

அவன் கண்கள் அவளுடன் காதல் மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தது. அந்த வயதில் அவளுக்கு அதைத் தாங்கும் வலிமை இல்லை. அதனால் வெட்கம் தாங்காமல் முகத்தை தாழ்த்திக் கொள்ள,

அவனது கைகளால் அவளது முகத்தை ஏந்தினான். அவனது மனம் முழுதும் காதலுடன், தன்னவள் என்ற உரிமையுடன் அவனைப் பார்க்க, புதிதாகப் பூத்த பெண்மை அதில் மயங்கி நின்றது. உடலில் புது வித நடுக்கம் , மனம் தடதடக்க செய்வதறியாது கண்ணை மூடிக்கொண்டாள்.

அதற்கு மேல்அவனால் பொறுக்க முடியாமல் அவளைத் தன்னுடன் அனைத்துக் கொண்டான். அந்த சாய்வான மரத்தில் சாய்ந்து படுக்க, அவள் அவனது மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

கனவில் அங்கு அவள் அவன் மேல் படுத்திருக்க, நிஜத்திலும் அப்படித் தான் என்று அவள் உணரவில்லை.

அந்த ஏகாந்த இன்பத்தை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான் அதீந்த்ரியன்.

“ லோகா! உனக்கு கொஞ்சம் கொஞ்சாம என் காதலை புரிய வைக்கறேன்!” அவளது தலை மீது தனது முகத்தை வைத்துப் படுத்திருந்தவன் அவளது காதுகளில் மெதுவாகச் சொல்ல,

அவளிடமிருந்து பதில் இல்லை. வெட்கமோ!

மேலும் அவளை இறுக்கி அனைத்துக்கொண்டான். ஆனால் அவனுக்கு மனதில் எங்கோ தன்னை அழைப்பது போலத் தோன்றியது.

அவள் கண்மூடிய நிலையிலும் தீவிரமாக அவனது முகத்தை நினைவு படுத்திப் பார்க்க, அவளுக்கு நினைவு வரவில்லை. அவன் எப்படி இருந்தான் என்று சிறிதும் ஞாபகமில்லை. அவனது முகத்தைப் பார்க்கும் ஆவல் எழ, சட்டென விழித்துப் பார்க்க, அவள் வீட்டில் தான் படுத்திருந்தாள்.

அவளது மெத்தையில் தான் இருந்தாள். “ச்சே! கனவா! ஐயோ!” தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் புரண்டு படுத்தாள். ஐந்தே நிமிடத்தில் உறங்கிப் போனாள். இம்முறை அதீந்த்ரியன் கனவுளைக் கொடுக்கவில்லை. ஏனெனில் அவனே இங்கில்லை! வைத்தியும் குருஜியும் அவனை அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

*****

நள்ளிரவு! மயானத்தில் இருவரும் அமர்ந்திருந்தனர். ஆங்கங்கே சில இடங்களில் நெருப்பு எரிந்துகொண்டிருக்க, ஷண்முகம் தான் முகத்தை சுளித்தார். வைத்திக்கு இது பழக்கப் பட்ட ஒன்று தான்.

நிறைய முறை மந்திரங்களை சித்தி பெறுவதற்கு இது தான் ஏற்ற இடம். அதனால் விடிய விடிய சுடுகாட்டில் யாகம் செய்திருக்கிறார். இன்றும் அதே போல யாகம் வளர்க்க இடம் தேடிக் கொண்டிருந்தார்.

நடு மயானத்திற்கு வந்தார்கள். அங்கே செடிகள் இல்லாமல் பார்த்து அமர்ந்து, யாகத்திற்கு செங்கல்லை அடுக்க ஆரம்பித்தார். குருஜியும் அவருக்கு உதவ, இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.

சுற்றிலும் பாதுகாப்பு வளையமாக எலுமிச்சம் பழத்தை தங்களைச் சற்றி வட்டமாக வைத்தனர்.

போட்டிருந்த மேல் சட்டையை அவிழ்த்து விட்டு, வேட்டியோடு அமர்ந்து உடலெங்கும் திருநீறு இட்டுக்கொண்டு , நெற்றியில் குங்குமத்தால் திலகம் வைத்துக் கொண்டனர்.

“ ஆரம்பிக்கலாம் வைத்தி” குருஜி சொல்ல,

“ குரு வணக்கம் சொல் ஷண்முகா!”

முதலில் தங்கள் குருவை மானசீகமாக வணங்கிவிட்டு, வழக்கம் போல மந்திரத்தால் தீ மூட்டி, யாகம் வளர்த்தனர்.

தாங்கள் பேச விரும்பும் கந்தர்வனான அதீந்திர்யன் பெயரைச் சொல்லி , மேலும் தீ வளர்த்து, இன்பத்தின் கடவுளான மன்மதனை ஓலையில் குறிப்பிட்ட படி கோடி முறை ஜெபிக்க ஆரம்பித்தனர்.

இருவரும் சேர்ந்தே மந்திரத்தை உச்சாடனம் செய்து அழைக்க ஆரம்பிக்க, உச்சியில் நிலவு வந்தது. சரியான நேரத்தில் ஆரம்பித்தனர். போகப் போக தங்கள் நினைவையே மறந்து மந்திரத்தில் லயித்திருந்தனர் இருவரும்.

அந்த மயானக் காட்டில் இருவரின் குரல் அங்கிருந்த உயிரற்ற பிணங்களையும் எழுப்பிவிடும் அளவிற்கு கணீரென ஒலித்துக் கொண்டிருந்தது.

விடிய விடிய கோடி முறை ஜெபித்தனர். முடிவில் ரத்தம் சிந்த வேண்டும். இருவரும் சற்றும் யோசிக்காமல் உள்ளங்கையைக் கீறி யாகத்தில் சொட்டு சொட்டாக விட்டனர்.

அடுத்த நொடி, மன்மதன் அதீத்ரியனை அழைத்து, அவர்களிடம் செல்லப் பணித்தான்.

தான் எரித்தது தன்னை கட்டுப்படுத்தும் ஓலை என்றும் , அவர்கள் கையில் இருந்த ஓலையின் படி, அவர்களின் முன் தோன்றியே ஆகவேண்டும் அவர்கள் கேட்பதை சொல்லியே ஆகவேண்டும் என்றும் அவரிடமிருந்து அறிந்தான்.

வேறு வழியின்றி , அவர்களது யாக குண்டத்திலிருந்து வெளியே வந்தான். இருவரது பார்வையும் அவனைக் கண்டு வியப்பில் விரிந்தது.

Comments

கருத்துக்களை தெரிவிக்க 

Leave a Reply

error: Content is protected !!