KanmaniunainaanKaruthinilniraithen3

KanmaniunainaanKaruthinilniraithen3

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

அத்தியாயம் 3

கிருஷ் வந்ததும்,

“எவ்வளோ சீக்கிரம் வந்துருக்கடா நீயி. எப்படி இருக்க? ரோஸ் எப்படி இருக்கு?”
பார்த்து ஒரு வாரமே ஆன நண்பனிடம் , வருட கணக்கில் பிரிந்தார் போல விசாரித்தான் இளா.

“அவளுக்கு என்னடா குறைச்சல்..? தாய் கிழவி ஆக்கி போடறதை தின்னுட்டு, நல்ல ஷேமமா புல்டோசர் கணக்கா இருக்கா.., வாசப் படியை இடிச்சு பெருசா கட்டலாமான்னு பார்க்கிறேன் “- கிருஷ்.

“சை… பன்னிப் பயலே, ரோசை பார்த்து கண்ணா வைக்கிற இரு, ஃபோனை போட்டு , உன்னை வீட்டை விட்டு துரத்த வைக்கிறேன். நாலு நாளைக்கு , ரோட்டில் தூங்கினா தான் என் தங்கச்சி அருமை தெரியும் உனக்கு. ” இளா.

“ஆமாம் இப்ப மட்டும் என்னை அப்படியே கொஞ்சி குலாவுதுங்க மாமியாரும், மருமகளும்.. ஆல்ரெடி அதுக ரெண்டும் சேர்ந்துக்கிட்டு என்னை வீட்லேர்ந்து விரட்டி விட்டுட்டு குதூகலமா தான இருக்குதுங்க. இதுல அந்த தாய்கிழவிக்கு யூ ட்யூப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்லாம் சொல்லி கொடுத்து ,அதையும் கெடுத்து வச்சிருக்கா. அந்தத் கிழவியொட போஸ்ட்க்கு நான் லைக்கு போடலன்னு வீட்டுல பாதி நாளு அது சோறு போட மாட்டுது. இந்த டார்ச்சருக்கு நான் ரோட்டிலேயே நிம்மதியா தூங்கிக்குறேன். ”

“உன்னைய தண்டத்துக்கு என் டாலி பெத்ததுக்கு, ஒரு லைக்கு போட்டா உன் சொத்தா குறையுது.”- இளா சப்போர்ட் செய்தான்.

ஆமா அணுகுண்டு விஞ்ஞானிங்க, பொக்ரான்ல சோதனை பண்ணி சாதனை போஸ்ட் போடுதுங்க பாரு.,
“யூ ட்யூப் ல இது ரெசிபி எடுத்து கொடுக்க,. அதை அந்த மல்லிகா பத்ரிநாத் செய்ய,.செஞ்சதை இவ ஃபோட்டோ எடுத்து ஃபேஸ் புக்கிலிருந்து இன்ஸ்டாகிராம்,டிவிட்டர் வரைக்கும் போஸ்ட் பண்ண, அதுக்கு எல்லா பயலுகளும் கண்டதை காணாத மாதிரி , சோ ச்வீட் சோ கியூட்டு போடுறானுங்க. இதுல நான் லைக்கை போடறது ஒண்ணுதான் குறைச்சல் இப்போ”.

“நீ ஒருத்தன்டா, தொட்ட தொண்ணூறுக்கும் குறை சொல்லுவ, முக்கியமா என் டாலியையும், என் தங்கச்சியையும் கரிச்சு கொட்டலைன்னா, செரிக்காதோ உனக்கு. லேடிஸ்க்கு சமையலில் இன்டரெஸ்ட், அதை வீடியோ எடுத்து போட்டா, உனக்கு என்ன வந்துச்சு.?எருமை.”- இளா. திட்டினான்

“இதெல்லாம் கூட ஓகே. ரெண்டும் ஒரே மாதிரி டிரஸ்
போட்டுகிட்டு மூஞ்ச அஷ்ட கொணலா வச்சிக்கிட்டு ,
எல்லா வீகெண்டும் போடுங்க பாரு ஒரு செல்ஃபி….
என் ஃபேஸ் புக் அக்கௌன்டையே ஊத்தி மூடிடலாம்னு
இருக்கேன். சகிக்கலை அதுங்க கொட்டம்..நீ கூடத்தான், நான் மூஞ்சி புக்கு வர்றதே உங்க மூஞ்சி பார்க்க தான் டார்லிங்ன்னு, வழிஞ்சு வச்சிருக்க, மானம் கெட்டவனே.”

“என் டாலிக்கு என்ன குறைச்சல். முந்தின வார செல்ஃபீக்கு கவிதையே போட்டேன். போடா.” அலட்சிய படுத்தினான் இளா.

“ போட்டோவா பாக்குறப்பவாது அந்த கிழவி பரவாயில்லாம இருக்கும், இப்ப புதுசா டிக் டாக் ஸ்டார்ட் பண்ணி இருக்குங்க பாரு,. முடியலடா. நீ அதை பார்த்திருந்தா செத்திருப்ப.…”

இளாவினால் சிரிப்பை அடக்க முடியல.

“என் நிலைமையை பார்த்தியா கோதண்டம் ..?என் பொண்டாட்டிய விட உன் பொண்டாட்டி தான் என்னை அதிகமா டார்ச்சர் பண்ணுது. என்ன இப்படி தனியா இதுகள்ட்ட தவிக்க விட்டு நீ பாட்டுக்கு சந்தோஷமா போயிட்ட…” கிருஷ் மேலே கைகளை தூக்கி செத்து போன அப்பாவிடம் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தான்.
சான்சே இல்லைடா , வயிறை பிடித்து சிரித்து கொண்டிருந்தான் இளா.

அதற்குள் கிருஷ் ஃபோன்,
“ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…… உன்
பேரை சொல்லும் ரோசாப்பூ”…என்று பாடியது.
இவ்வளவு நேரமா இருந்த, புலம்பல் மோடிலிருந்து சீரியஸ் மோடில் முகத்தை வைத்து கொண்டு,

“சொல்லுடி என் ரோசா மலரே ராச குமாரி”. .
………..
“ஒஹ்…கார்லிக் பியுரி ஆ…? எதுக்கு..?”
……….
“வாங்கிட்டு வந்து தந்து தொலையுறன். அப்பவாவது ரெண்டு பேரும் சேர்ந்து வாயில் வைக்கிற மாதிரி ஏதாவது சமைச்சு தர்றீங்களான்னு பார்க்குறேன்.”
……..
“இளா கூட பீச்சில் இருக்கேன் .இதோ தரேன் பேசு .”..
ஃபோனை இளமாறனிடம் கொடுத்தான்.

சிரித்தபடியே இளா….

“சொல்லு மா ரோஸ். என் டார்லிங் எப்படி இருக்கு.?

“ காலையிலேயே வந்துட்டா லட்டு.”

“என்ன ஆச்சு..? அப்படியா…? அதான் அவ வந்துட்டாள்ள, ஃபிட்டிங்லாம் இனி கரெக்ட்டா இருக்கும். காலையில ஆஃபீஸ் பொகுறதுக்கு முன்னே லட்டுவ கூட்டி வந்து விடறேன்.சரி என் டார்லிங் கிட்ட ஃபோனை கொடுமா..”

வேதா பேச ஆரம்பித்ததும்,

“டாலி என்ன ஆச்சு உனக்கு .? . எப்படி போன
வாரம் டிசைன் பண்ணின டிரஸ் அதுக்குள்ள லூஸ் ஆச்சி. ? லட்டு வந்துட்டா. உடனே உன் டிரசையெல்லம் ஃபிட் பண்ணி கொடுத்திடுவா.”
……..
“ உனக்கு டிசைன் பண்ணத்தானே அவளை
ஃபேஷன் டெக்னாலஜியை படிக்க வைக்கிறேன் டார்லிங்.”

……………………………………

“ சரி நெக்ஸ்ட் வீக் என்டுக்கு என்ன தீம்மில் டிரஸ் போட போறீங்க..? நாளைக்கு சீக்கிரம் வந்துடறேன் . நாம நாலு பேரும் சேர்ந்து டிசய்டு பண்ணிடுவோம்.. லட்டு
நல்லதா சீக்கிரம் பண்ணி தருவா டோண்ட் வொர்ரி..”
………………….

“செய்யிற சாப்பாட ரோஸ் க்கு மட்டும் கொஞ்சமா கொடுத்துட்டு மிச்சம் எல்லாத்தையும் நீயே சாப்பிடு செல்லம்…இந்த குண்டன் கிருஷ் வெளியில கூட சாப்பிட்டுக்குவான். பாரு டிரஸ் லூஸ் ஆனத கேட்டதும் மனசு பதறுதில்ல டாலி..…?”
………
“அந்த சிகப்பு ட்ரெஸ் செல்பீக்கு “வாவ் “ எமொஜி காலைலயே கொடுத்துட்டேன். நைட் கமென்ட் போடறேன். நம்ம வேதா ஆர்மி லையும் போஸ்ட் பண்ணிட்டேன். நீ பேசாமல் என் டெக்ஸ்டைல்ஸ் க்கு மாடலிங் பண்ணலாம் ,நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளோ அழகு.யாரும் இதுக்கு முன்னாடி இவளோ அழகை பார்த்திருக்க மாட்டாங்க.”

கிருஷ் , வாயில் கை வைத்து அடங்கோப்புறானே…வாரணம் ஆயிரம் சூர்யா வா…?????

…இளா தொடர்ந்தான்,
“மறக்காம ரோஸ் கிட்ட சொல்லு ..,
நீ பேசிய அந்த நஸ்ரியா டயலாக்
சரியாவே எடிட் பண்ணல..வேதா ஆர்மி மெம்பேர்ஸ்லாம் அப்செட் ஆகிடுவாங்க பார்த்துக்கோ..”
……
“காலைல எனக்கும் லட்டுக்கும் அங்க தான் ப்ரேக் பாஸ்ட். உன் கையால சாப்பிட தான் வரேன். வழக்கம் போல பழைய கஞ்சிய ஊத்தி இந்த தடியன வெளில
துரத்திடு. இல்லைனா நம்ம ரெண்டு பேரையும் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுவான். பை டாலி. டேக் கேர்…”
இவன் பேசி முடிக்க ,

காதில் புகையுடன் கிருஷ்..
“சோ, எல்லா சதிவேலைக்கு பின்னாடியும் நீதான் இருக்கிற, த்ரோகி. எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் டா.. அதுக போடுற கிழிஞ்ச டிரசுலாம், டிசைன் பண்ணி கிழிச்சு
விட்டது போல இருக்கேன்னு பார்த்தேன். “

“அந்த கூஸ் பெரியும், நீயும்
சேர்ந்து பார்த்த வேலையா டா இது…? நான்
உங்களுக்கு என்ன டா பாவம் பண்ணினேன்.” உன்னைய இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன் டா,
கையை ஓங்கி கொண்டு அடிக்க வந்தவனிடம்…

“டேய் நான் வேதா ஆர்மி யோட தலைவன். என் மேல கை வச்சா மத்த மெம்பர்ஸ் சும்மா இருக்க மாட்டாங்க. தமிழ்நாடே கொந்தளிக்கும்…”
என்றபடி இளா ஓட ஆரம்பிக்க…

“கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ஒரு வேளை சோத்துக்கு அந்த கிழவிய போய் அழகிங்கிர… இதுல வேதாஆர்மி…..வேற… உன்னை ….” துரத்தியபடி மணலில் ஓடினான் கிருஷ்…

வேதவல்லி , கிருஷ்ணாவின் அம்மாவாக இருந்தாலும், இளாவையும் ஆராவையும் சொந்த பிள்ளையாக நடத்துவார். இளாவிற்கு மட்டும் அவர் வேதா டார்லிங். ஆராவிற்க்கு மாதாஜி. ஆராவிற்க்கும் இளாவிற்க்கும் தாங்கள் அனாதை என்ற எண்ணம் வராததற்கு, முக்கியமான காரணம் இந்த வேதா மட்டுமே. மருமகளை மகளா தாங்குறதும், இளசுங்க கூட சேர்ந்து லூட்டி அடிக்குறதுமாய் , இந்த வேதாஜி ஒரு லேட்டெஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் மாதாஜி.

ஓடி முடித்து, தண்ணீரில் உருண்டு விளையாடிய பின்
சிரித்தபடியே ஓரிடத்தில் சுட்ட சோள கதிருடன் அமர்ந்தார்கள்.
“இப்ப சொல்லு மச்சான் ஆராவிர்க்கு என்ன பிராப்ளம்?” கிருஷ் கேட்க

கண்களாலேயே ”எப்படிடா …?”என்றகேட்ட இளமாறனிடம்

“நீ உனக்காக எப்படா யோசிச்சி இருக்க..? இந்த உலகம் ஒரு உருண்டைன்னா, உன்னோட உலகம் அந்த சின்ன உருண்டை லட்டு, ரொம்ப சிம்பிள்…. ம் .. இப்ப புதுசா என்ன..?”

“சீமா தான்டா பிரச்சினை. லட்டுகிட்ட கல்யாணம் ஆச்சுன்னா உன்னை அப்படி பார்த்துக்கிறேன்… இப்படி பார்த்துகிறேன்னு தூண்டி விட்டுருக்கா..”

“லட்டு என்னையே சீமாவ கல்யாணம் பண்ண சொல்லி
கேன்வாஸ் பண்ணுது. செம்ம கடுப்பாயிட்டேண்டா.
அவளுக்கு ஃபோன் பண்ணி ஏன்டி இப்படி
பண்ணுறன்னு கேட்டா..? இதுல என்ன தப்பு. என்ன
கட்டலைன்னா நீ சாமியாராதான் போகணும்னு
நக்கலடிக்கிறா..” இளா பொரிந்து தள்ளினான்.

“சிலுக்கு திருப்பி அவ வேலைய ஆரம்பிச்சுட்டாளா…?
அவளை என்னதான் செய்யறது..? அடங்கா பிடாரி.
சரி அத்தை மாமாகிட்ட பேசி பார்க்கிறேன்.” –
கேட்டதும் கொதித்தது கிருஷிற்கு.

சீமா, கிரிஷின் முறைப் பெண். வேதவல்லி , சீமாவின்
தந்தை வைத்தியநாதனுடைய உடன் பிறந்த தங்கை . வேதா ஒரு முறை அவனிடம் திருமண பேச்சை ஆரம்பிக்கும் போது கூட ,சீமாவை உனக்கு பெண் கேட்போமா என்று கேட்டு பார்த்தார். ஆனால்
கிருஷ் அந்த பேச்சே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அதன் பிறகு தான் தூரத்து சொந்தத்தில் பெற்றோர் இல்லாமல் உறவினர் வீட்டில் வளர்ந்த ரோஜாவை கிருஷ்க்கு மணமுடித்தார்.

கொஞ்ச நேரம் யோசித்த கிருஷ்.
”ஏன்டா இளா……. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன..? அழகான வயசு பையனை வீட்டுல வச்சுக்கிட்டு, வயத்துல நெருப்ப கட்டிகிட்டு எத்தனை நாள் தான் நாங்களும் இருக்கிறது. இப்ப பாரு கண்டவள்ளாம் உன் அழகுல மயங்கி , உன்னையே டாவடிக்கிறாளுங்க…”

“எனக்கென்ன டா அவசரம்…?”

“இந்த வயசில் பண்ணாமல் இனிமே எப்போ பண்றதா
இருக்க கல்யாணம்..?”

இளா – “நான் எப்படிடா என் ஆராவ தனியா
விட்டுட்டு கல்யாணம் பண்ணுவேன்…?”

“உன்னை யாரு விட்டுட்டு பண்ண சொன்னா..?
ஆராவையே கல்யாணம் பண்ணிக்கோ.
உனக்கும் அவளுக்கும் ஆறு வயசுதான் வித்தியாசம்..
அவளையே கல்யாணம் பண்ணிகிட்டா, நீயும் அவளை பிரியவேண்டாமே…? “ – கிருஷ்
.
“ஆராவ எப்படிடா நான் கல்யாணம் பண்றது…? அவ மனசளவில் குழந்தை.. உனக்கு இது தெரியாதா..? எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படி பேசுற…? லூசா டா நீ..?” – இளா.

“நான் லூசு இல்லடா…ஆனா கூடிய சீக்கிரம்
ஆகிடுவேன். நீயே என்ன ஆக்கிடுவ. உங்க மொத்த குடும்பமும் அவ கண்ணு முன்னாடி, செத்த அதிர்ச்சியில , அஞ்சு வயசு ஆராவோட மூளை ஸ்தம்பிச்சிடுச்சி… ஆனால் ஸ்லோவா ரெகவர் ஆகிடுவான்னுதான டாக்டர்ஸ் சொன்னாங்க. அவ மூளையே வளராத குழந்தைன்னு எப்ப சொன்னாங்க…?”

“ தானா ரெக்கவர் ஆவான்னு சொன்னாங்க தான், ஆனாலும் அவ நார்மலாகுலயே இன்னும்.”

“அவ இப்போ ரொம்பவுமே நார்மல் ஆகிட்டா மத்தவங்களுக்கும் அவளுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை.”

“நீ தான் அவளை பேம்பர் பண்ணி பண்ணி…. பேபியாகவே
வச்சிருக்க.. ” கிருஷ் முடிக்கவில்லை.. அதற்குள் இளா,

“நான் என்னடா பண்றது..? இப்ப கூட டாக்டர் கிட்ட
கன்செல்ட் பண்ணி தனியா பொயிட்டுவான்னு அவளை
காலேஜ் எஜுக்கேஷனல் டூருக்கு மும்பை வரைக்கும் அனுப்பினேன். ஒரு வாரம் அவள் கூட சுத்தமா பேசவே இல்லை. என்னை போய் இப்படி சொல்ற…? நானும் அவளை இண்டிபெண்டன்ட் ஆக்க தான் டிரை
பண்ணிட்டு இருக்கேன்.”

“எப்படி…? அந்த லெக்சரர், சுரேகாவுக்கு ஒரு நாளைக்கு எட்டு தடவை ஃபோன் பேசியிருக்க.. ஆரா சாப்பிட்டாளா…. தூங்கினாளான்னு…. .., அவ புருஷன் ஃபோன்
பண்ணினப்ப எல்லாம் அவ ஃபோன் பிஸியாவே
இருந்திருக்கு…அது பத்தி அவன் கோபமா பேசியிருக்கான்
சுரேகா கிட்ட..”

“ அச்சசோ… என்கிட்ட சொல்லலையே அந்த லூசு.” இளா உச்சு கொட்டினான்.

“அவ என்கிட்ட ஃபோன் பண்ணி , ஆராதனா உங்களுக்கு அவ்வளவு முக்கியமா இருந்தால் எதுக்கு வெளியே அனுப்புறீங்க வீட்டிலேயே வச்சி பூஜை போட வேண்டியது தான…, உன் தோஸ்துக்கு மாமி வேலை பார்க்க தான் லெக்சரரா சேர்ந்தேனா..? லவ் பன்றவனெல்லாம் ஃபிரெண்ட தான் டார்ச்சர் பண்ணுவாங்கனு சொல்றது சரியா இருக்கு. உங்க கூட படிச்ச பாவத்துக்கு எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுக்காமல் விட மாட்டிங்களான்னு புலம்புறா….” என்று கிருஷ் முறைக்க…

“ஹி.. ஹி.. ஹி…! அப்ப அப்ப ஃபோன்
பண்ணி என்ன பண்றா ஆரானு கேட்டது தப்பா..? லவ்
பண்றேன்னு உன்கிட்ட சொல்லியிருக்கா அந்த
மென்டல்.” இளித்தபடியே இளா கூற..

“ரொம்ப வழியுது துடைச்சிக்க.. அதுக்குதான் சொல்றேன்.
ஆராவையே கல்யாணம் பண்ணிக்கோ. கூடவே வச்சி
கொஞ்சிக்கோ, இல்ல என்ன கருமமாவது பண்ணிக்கோ.
எங்களை ஆள விடு. இந்த சீமா, கோமான்னு எவளும்
தொல்லையும் பண்ண மாட்டா….” கிருஷ் கடித்து
துப்பினான்.

“போடா……. அத்தை என்னை நம்பி லட்டுவ
ஒப்படைசிட்டு போயிருக்காங்க. பின்ன நானே எப்படி
அவளை கல்யாணம் பண்ணிக்க..? அது நல்லாவா
இருக்கும்…?” –இளா.

டேய்… மறுபடியும் முதல்லேர்ந்தா…?

“ஆராதனாவுக்கும் கல்யாண வயசு ஆச்சு..அப்ப அவளுக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம். ஒகே..?”கிருஷ் குண்டைப் போட்டான்.

“டேய் வர்றவன் யாரோ…எவரோ….? எப்படி அவளை நல்லா பார்த்துப்பான்னு நமக்கு தெரியும்..? ஒரு வேளை என் லட்டுவ அவன் ஏதாவது செஞ்சிட்டா..? ”
இளாவால் தாங்க முடியவில்லை.

“என்னடா செய்வான் உன் லட்ட..,? புட்டு வாயில போட்டு
முழுங்கிடுவானா..? என்னடா இது கூத்து..? நீயும் ஆராவை கட்ட மாட்டெங்குற. வேற மாப்பிள்ளை கட்டிக்கவும் விடமாட்டேங்குற..?”

“அய்யோ கிருஷ்ஷு உனக்கு வந்தவதான் வாழை
மட்டைன்னா, வாய்ச்ச ப்ரெண்ட் தேங்காய் மட்டையா
இருக்கானே..” தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“போடா உன்கிட்ட ஐடியா கேட்டால் என்னையே குழப்பற.. சரி லேட்டாச்சு. லட்டு தனியா இருக்கும். நான் கிளம்புறேன் பை.. நாளைக்கு பார்ப்போம்..”
அவசர அவசரமாக இளா கிளம்பினான்.
அவன் முகம் ஏதோ யோசனையில் இருந்தது.

கிருஷ்ஷிர்க்கு புரிந்து விட்டது.. குழம்பி இருக்கான்.
சீக்கிரம் நம்ம வழிக்கு வந்திடுவான். என்று நினைத்தபடி
நமட்டு சிரிப்புடன் விடைப் பெற்றான்.

மனம் புது புது குழப்பங்களை உருவாக்க வீட்டிற்க்கு
சென்றான் இளா.

லிவ்விங் ரூம் கவுச்சில் ஷார்ட்சும் , டீ ஷர்டும் அணிந்து தூங்கி கொண்டிருந்தாள் ஆராதனா.
‘பாவி பய இந்த குட்டி பொண்ணை போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றான். அவனுக்கு தான் மூளை வளர்ச்சியே இல்லாமல் பொய்டுச்சி… மனதிற்குள் கிருஷிர்க்கு அர்ச்சனை செய்தான்.’

இளாவின் வீட்டில் சமையல்கார அம்மா வடிவு, டிரைவர் சின்னசாமி, அவரது மனைவி என மூவர் மட்டுமே வேலை செய்கிறார்கள்.
சின்னசாமியின் மனைவி தனம் வீட்டில் மேல் வேலைகள் அனைத்தும் செய்வார்.சின்னசாமி ஆராவிற்கு மட்டும் டிரைவர். வீட்டுக்கு தேவையான பொருள் வாங்க, மற்ற வெலைகள் என்று சொந்த வீட்டைபோல பொறுப்பாக கவனித்து கொள்வார்.இவர்கள் இளமாறன் உடைய பெற்றோர் காலத்திலிருந்து வேலை செய்யும் விசுவாசமான வேலைக்காரர்கள்.

வேலை நேரம் தவிர ,மூன்று பேரும் அவுட்
ஹவுஸில் தங்கியிருப்பார்கள்.

வடிவு டிஃபன் …, பால்…, எல்லாம் செய்து டையனிங் டேபிளில் வைத்துவிட்டு சென்றிருந்தார்.

இளா ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்து பாலை மட்டும் குடித்தவன்..,

ஆரா வை தூக்கி கொண்டு போய் அவள் பெட்ரூமில் படுக்க வைத்தான்…
தூங்கும் அவள் முகத்தைப் பார்த்து கொண்டே அங்கேயே நின்று விட்டான்.
என் ஆரா ஒரு அழகான தேவதை. உன்னை என் காலம்
முழுக்க பத்திரமா பார்த்துப்பேண்டா லட்டு. மனதினுள் பேசினான்.

“நீயும் கட்டிக்க மாட்டெங்கிற யாரையும் கட்டவும் உட மாட்டுற………… உன் லட்டை புட்டு சாபிட்ருவாங்களா ,….. வேற நல்ல மாப்பிள்ளை பார்ப்போம்…………“
மனதிற்குள் கிருஷின் குரல் எதிரொலித்தது.

“யாரை விடவும் என்னால்தான் இவளை நல்லா பார்த்துக்க முடியும் நானே ஆராவை கல்யாணம் பண்ணிக்கிறேன் போடா…”
வாய் விட்டு சத்தமாகவே பதிலளித்தவன், தூக்கத்தில் ஆராதனா காலை திருப்பி போட்டு படுக்கவும்…, சுதாரித்தான்..

‘டேய் இளா திடீர்னு நீயாடா இப்படி பேசின..? எல்லாம் அந்த கிருஷ் தடியன் குழப்பி விட்டது தான். கடங்காரன்…’ இளா மனதிற்குள் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

மீண்டும் ஆராவை பார்த்தான். திரும்பி படுத்ததில்
அவள் தொடையில் இருந்த அந்த தழும்பு தெளிவாக தெரிந்தது.
பழுக்க காய்ச்சிய இரும்பு .. அதன் உக்கிரத்தை நேர் கோடாக , சதை கொப்பளிப்பொடு மாற்றி இருந்தது.
இதுதான் … இந்த ரணம்தான் இளாவின் மனதிலும் ஆழமாய் விழுந்திருந்தது.

அப்படியே ஆராவின் கட்டிலின் ஓரம் தலை சாய்த்தபடி அமர்ந்துவிட்டான்..உன்னையே உலகம்ன்னு நம்பி இருந்த ஆராவுக்கு இப்படி ஒரு ரணத்தை பரிசா கொடுத்திட்டியே இளா….?
மனசாட்சியின் கேள்விக்கு அவன் கண்கள் சில துளிகளை பதிலாய் தந்தது.

இளா அப்படியே தூங்கியும் விட்டான். திடீரென தலையில் ‘ நங் ‘ என ஒரு அடி…. ஆஹ்ஹ்ஹ்……அம்மா….…தலையை தேய்த்து விட்டு கொண்டான். வீட்டுக்குள்ள தானே இருக்கோம் பின்ன எப்படி இடி விழுந்தது……….? தலை கிறு கிறுத்தது.
நிமிர்ந்து பார்த்தவனுக்கு புரிந்து விட்டது. எல்லாம் நம்ம ஆரா தான் . காலை தூக்கி தொப்பென்று அவன் தலையில் போட்டிருந்தாள் .. தூக்கத்தில் தான்.

மணி ஆறரை. எழுந்து அவள் முதுகில் சுள்ளென்று ஒரு அடி வைத்தான்.
“அம்மா …ஆ……. எதுக்கு என்னை இப்படி காலைலயே அடிச்ச..? போடா.. பன்னி..” வாரி சுருட்டி கொண்டு எழுந்தவள், கடுப்படித்தாள்.

“எதுக்குடி காலை தூக்கி தலையில போட்ட காட்டெருமை…? தலை கிர்றுங்குது “– இளா.

“நீ எதுக்குடா என்னோட ரூமில் வந்து படுத்த..?” – ஆரா.

“போனா போகுதுன்னு கவுச்சில் இருந்து கீழே விழுந்துடும்ன்னு அரிசி மூட்டைய தூக்கிட்டு வந்து பெட்டில் போட்டா , இதுவும் கேட்ப ..இதுக்கு மேலயும் கேட்ப…?”- இளா…

“அரிசி மூட்டைய பெட்டில் போட்டுட்டு அப்படியே போக வேண்டியது தான …? எதுக்கு என் ரூமில் படுத்துகிட்டு தூங்கின..?”
அன் ஃபார்ச்சுநெட்லி நம்ம ஆராவொட ஆறாவது அறிவு அகைன் ஆன் ஆயிடுச்சு.

பதில் தெரிந்தால் தானே .., நேராக சுவரை பார்த்தவனுக்கு காலண்டர் கண்ணில் பட , முகம் மலர்ந்தது.
“கூடிய சீக்கிரம் நீயும் என்னை தேடி என் ரூமுக்கு வருவ அன்னைக்கு உன்னை கவனிச்சுகிறேண்டி” – சவால் விட்டான் இள மாறன்.

என்னடா நடக்குது இங்க……….?
இன்னும் ஆரா முறைத்து கொண்டே இருக்க,

“சரி சரி தொல்லைப் பண்ணாமல் சீக்கிரம் கிளம்பு.. கிருஷ் வீட்டுக்கு போறோம். வேதாஜீ யோட டிரஸ் ஃபிட் பண்ணனுமாம். நான் உன்னை அங்க விட்டுவிட்டு அப்படியே ஆசிர்வாத் போறேன்.” – இளா.

“ஐ ..! அப்ப ப்ரேக் பாஸ்ட் மாதாஜி கையாலயா..? எனக்கு இன்னும் நாலு நாள் இருக்கு காலேஜ் திறக்க., நான் அங்கேயே தங்கிக்கிறேன். யாருக்கும் என் தொல்லை வேண்டாம்.நான் இந்தி பண்டிட்டா. வாழ முடிவு பண்ணிட்டேன் ”
வாயை ஏழு முழம் நீட்டி முழக்கியவள், தலையணையை எடுத்து மண்டையிலேயே இரண்டு அடி போட்டு விட்டு ,
“இது என் முதுகை காலையிலேயே பஞ்சர் ஆக்குனதுக்கு”
என்று சொல்லி ஓடிப் போய்விட்டாள்.

வேதா இல்லம். மணி எட்டு.

கிருஷ் அப்போதுதான் எழுந்தான். கீழிருந்து
ஒரே தாளிப்பு மணம். ‘ஆஹா …….தாய் கிழவி அடுப்ப பத்த
வச்சிடுச்சி போல இருக்கே… ஒஹ்… அந்த எழரைங்க
காலையிலேயே கொட்டிக்க வர்ரதினாலயா…?’

டூத் ப்ரஷ் , பேஸ்டை எடுத்துக்கொண்டு காரிடார் பக்கம்
இருந்த வாஷ் பேசின்க்கு பல் துலக்க போனான்.
எல்லாம் மாமியார் , மருமகளை வேவு பார்க்க தான். காரிடாரை ஒட்டித்தான் கிச்சன் இருந்தது.

கிச்சன் உள்ளேயிருந்து ஒரே பாட்டு சத்தம். காதை ஒட்டி வைத்தான் கிருஷ்…
“சரிகமா பதனிசா ….. கம்ம்மான் கம்ம்மன் ஹே ஜல்சா……. ஜலசா…”.. குரல் கேட்டதும்,
‘இது நம்ம குருவி கூவுது’… கிருஷ்

“மீ… சா வரிசைல நீங்க பாடனும்…” ரோஜா எடுத்து கொடுத்தாள்.

“சொப்பன சுந்தரி நான் தானே, சொப்பன லோகத்தின்
தேன் தானே..”- இது நம்ம வேதாஜி.

‘கிழவிக்கு லொள்ள பார்த்தியா…சொர்க்கத்துக்கு போற வயசுல, சொப்பன சுந்தரி கேட்குது,…’.கிருஷ் தலைலயே
அடித்து கொண்டான்.
“கோதண்டம் உன் பொண்டாட்டி எல்ல மீறி போகுது…”
“சே….. நம்ம ரூமிலேயே பல்லு விலக்கி இருக்கலாம்.”

அதற்குள் வெளியே வந்த ரோஜா ,
“எழுந்துட்டியா கிருஷ்.. ? எப்ப கீழே வந்த..?”

“உன் மாமியார் சூப்பர் சிங்கர் டைட்டில் வின் பண்ணும்போதே வந்துட்டேன்”.. – கிருஷ் பல்லை கடித்தான்

“அங்க என்னடா சத்தம்..? “– வேதா ஜி.

“பார்த்தியா இதுக்கு கொழுப்பை… நான் ஒருத்தன்
வந்திருக்கனே மதிக்குதா…? உங்களை ரெண்டு பேரையும் ஒரு நாள் கும்மு கும்முன்னு கும்மல.. என் பேர் கிருஷ் இல்லடி”.-

“போடா, எப்போதும் காமெடி பண்ணிகிட்டு… இரு உனக்கு டீயை கொடுத்துட்டு அப்புறம் சிரிக்கிறேன்.”- ரோஜா.

“அடீங்க, என்னைய பார்த்தா காமெடி பண்ற மாதிரி இருக்கா…?” அதற்குள் ரோஜா கிச்செனுக்கு ஓடி விட்டாள்.

“என்ன ரோ .., உன் புருஷன் வம்பு வளத்தானா.. வழக்கம் போல…?” – வேதா

“ஆமாம் மீ … உங்க பாட்டுல ரொம்ப காண்டு ஆகிட்டாரு”.
– ரோஜா

“இவனுக்கு ரொம்பத்தான் ..? என் புருஷனே என்னை கண்டுக்க மாட்டாரு… இவன் என்ன பிஸ்கோத்து…
நாம சந்தோஷமா இருந்தா மூக்குல வேர்த்துரும் அந்த தடியனுக்கு……”

“ சரி இந்த டீயை கொண்டு போய் அவன்கிட்ட கொடு.. இல்லைன்னா காலையிலேயே கோபம் வந்த கொரில்லா கணக்கா மூஞ்ச வச்சிப்பான் அப்புறம் பார்க்க சகிக்காது”…- வேதா

அதற்குள் கிச்சன் வாசலில் கிருஷ் வந்து முறைத்தபடி நிற்க..
உடனே வேதா..
“எப்ப எழுந்தாங்க என் சக்கரை கட்டி..?
ஏ …….ரோஜா …..என் குழந்தை எழுந்து இவ்வளவு நேரம்
ஆகியும் டீ கொடுக்காமல் என்னடி பண்ணுற..? உனக்கு ரொம்ப திமிரா…?”

“அம்மா , பெட் லயிருந்து அப்படியே எழுந்து வந்துட்டேன். வெளியில போக டைம் கிடைக்கல.. சாரி மா”.- கிருஷ்.

“எதுக்கு பா சாரி..?-” வேதா.

“காலையிலேயே கஷ்டபட்டு இவ்வளவு நடிக்கிறீங்க. என்னால ஒரு மெடல் வாங்கி கொடுத்து கூட பாராட்ட முடியலையே அதுக்குதான் “.- கிருஷ்.

வேதா…!!!!????

“எப்படி எப்படி ..? நேர்ல பார்த்தா குழந்தை ., பார்க்கலைன்னா கொரில்லா வா…? வர வர உங்க டார்ச்சர் தாங்க முடியல ..என்னை யாருக்காவது தத்து கொடுத்துருங்க… சாமி”.- கிருஷ்.

“இனிமே உன்னை யாருப்பா தத்தெடுப்பா..? எனக்கும் ஆசைதான்.”- வேதா.

“தாய் கிழவி … , இரு உன்னை முதல்ல முதியோர் இல்லத்தில் சேர்க்கிறேன். ,”– கிருஷ்.

“யாருடா என் டார்லிங்க போய் கிழவின்னு சொல்றது..?”- இளமாறன் வர பின்னாடியே ஆராதனா ..
“ ஹாய் அண்ணி…” என்றபடியே நுழைந்தாள்.

சாஷா…

error: Content is protected !!