Kanmaniunainaankaruthinilniraithen4

Kanmaniunainaankaruthinilniraithen4

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.

அத்தியாயம் – 4

 

இளா , ஆரா என்ட்டிரி ஆனதும்,

“ வந்துட்டுங்க ஜோடி போட்டுக்கிட்டு காலையிலேயே கொட்டிக்க, ” கிருஷ்

“லட்டு உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு…? என்னடா இளைச்சு போயிட்ட..?” – வேதா ஜி.

“ஆமாம்.. ஆமாம்…. காண்டா மிருகம் ஒன்னு கப்பல்ல போச்சாம்… காட்டெருமையா இளைச்சி கால்நடையா வந்துச்சாம்…..….”
கிருஷ்ஷின் கேலிக்கு ஆரா முறைக்க,
அவளின் முறைப்பை கண்டுகொள்ளாமல்…

“போம்மா…….போயி வந்த வேலைய பாரு … அந்த தாய்கிழவி காலையிலேயே தவிடு , புண்ணாக்கு பருத்தி கொட்டைன்னு வித விதமா உனக்கு பிடிச்சது எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கு…. போய் கொட்டிக்க… வாரத்தில நாலு நாள் இங்க தான் திங்குது, வீட்டுக்கு போயி துணிய மாத்திட்டு வர்றதுக்குள்ள இளைச்சி போச்சாமுள்ள… ஃபண்ணி பீப்பிள்…”

“நீ வாடா லட்டு… அவன் கிடக்கிறான் …..பொறாமை புடிச்சவன்….அவன் காக்கா முட்டை கண்ணை வச்சிட்டு புள்ள மேல கண்ணு வச்சிட்டான்.அவன்
காலடி மண்ணெடுத்து முதல்ல சுத்தி போடணும் நீயும் வந்து உள்ள உட்காருடா இளா. “

“என்னை டம்மி பன்றதையே வேலையா வச்சிருக்க , ….நீ எல்லாம் எனக்கு மம்மின்னு வெளியில சொல்லிடாத….” கிருஷ்

“அதையே தான் நானும் சொல்லனும்னு நினைச்சேன். மகராசன் நீயே சொல்லிட்ட. நீயும் என்னை அம்மான்னு வெளியில போய் சொல்லிடாதடா…… தமன்னா போல இருக்கிற எனக்கு தகர டப்பா மூஞ்ச வச்சிருக்க நீதான் பிள்ளையாங்குற அதிர்ச்சியில் என் ஃபேஸ் புக் ஃபேன்ஸ் எல்லாம் செத்துற போறாங்க.”.
(ஆத்தீ…………??????. )

கர் ………..கர்………..கர். (?????அப்படி இருந்துச்சி
நம்ம கிருஷ் பய மூஞ்சு….)

“சரி…… சரி …. விடு……… டார்லிங். பாவம் என் நண்பன். அவனை எனக்கு முன்னாடி யாரும் அசிங்கமா பேசுறத பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது…”- இளா.

“ஆமா திரும்ப சொல்லி பின்னாடி பேசுங்க , மாதாஜி…” ஆரா

“எல்லாரையும் நம்புவேன், இதுக இவளோ பேசறதுக்கு காரணமே நீ தான உன்னை நம்ப மாட்டேன் டா…அதுவும் இந்த தீனிபண்டாரத்தலாம் சுத்தமா நம்ப மாட்டேன்.” கிருஷ் இளாவிடம்,

“நான் உன் ப்ரெண்டூடா, என்னையே சந்தேக படுறியா..?” இளா வேதாவிடம் திரும்பி,
“ டாலி இதுக்கு மேல கிருஷை கேவலப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்… மாட்டேன்…ட்டேன்…” எக்கோ கொடுத்தான்.

“வாடா நல்லவனே….? அந்த கிழவி…, சாணிய தெளிச்சி என் மூஞ்சிலயே முறை வாசல் பண்ணி கோலமும் போட்டு முடிச்சிடுச்சி .., இப்பதான் உனக்கு நான் கேவலப்படுறது தெரிஞ்சுதா…?”

“ உனக்காக நான் இருக்கிறேன் கிருஷ்… மீ…….என் புருஷனை நீங்க எப்படி தகர டப்பா மூஞ்சின்னு சொல்லலாம், வேணும்ன்னா என் செல்லத்த தங்க டப்பான்னு சொல்லுங்க..?”
ரோஜா சப்போர்ட்க்கு வர…..

“அவனை கூட மன்னிச்சுடுவேன்டி…. ஆனால் கூடவே இருந்துகிட்டு, இந்த ராஜமாதா சிவகாமி தேவி உத்தரவு போட்டுச்சின்னு … என் முதுகிலேயே கத்தி கத்தி குத்துற பாரு ..நீ ஒரு சொட்டையில்லா கட்டம்மாடி…”

“போனா போகுது தனியா கத்திட்டு கிடக்குறியேன்னு துணைக்கு வந்தா, என்னையே துரத்தி விடுற, போ… இனி நீ கெஞ்சி கேட்டாலும் என் ஓட்டு என்னோட மீ க்கு தான்.” ரோஜா வேதாவின் தோளை கட்டிக் கொண்டாள்.

“மம்மி ய மீ ன்னு கூப்பிடறவங்கள பார்த்துருக்கேன்…. மாமிய மீ ன்னு கூப்பிடிறவளை எங்கேயாவது பார்க்க முடியுமா..?
அய்யய்யோ ..அதுலயும் எங்கம்மா அபிநய சரஸ்வதி இருக்குதே.., ரோஜான்னு ரெண்டே எழுத்து இருக்குற பேரு…… அதையும் சுருக்கி ரோ ன்னு கூப்பிடுது. கட்டின புருஷன் நான் கூட உன்னை அப்படி கூப்பிட்டதில்லை…அடேய் இது குடும்பமா இல்ல நாடக கொட்டையாடா… “

“கோதண்டம்…. இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் அவசர அவசரமா தட்கல்ல டிக்கெட் எடுத்து அல்பாயுசிலயே போயிட்டியா, நீ.? கூடிய சீக்கிரம் என்னையும் அனுப்பிடுவாளுக… தகப்பா. நானும் ஆன் தி வே … நல்ல ஜன்னலோர ஸீட்டா புடிச்சு வை….”

கிருஷ் பாட்டிற்கு புலம்பி கொண்டிருக்க… உள்ளே போன ஆராதனா….
“என்ன அண்ணி…? நான் டயட்டில் இருக்கேன்னு தெரிஞ்சும், எனக்கு அவிச்ச முட்டை செய்யாமல் வச்சிருக்கீங்க..” ரோஜாவிடம் வந்து சிணுங்கினாள்…

“இங்க நான் ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிறதுக்கு வாக்கு மூலம் கொடுத்துட்டு இருக்கேன். உனக்கு அவிச்ச முட்டை இல்லைங்கிறதுதான் பிரச்சனையா……?
விஷம்…..விஷம்……விஷம்…விஷம் …… அம்புட்டும் விஷம்” என்றபடி ஆராவின் மண்டையிலேயே கொட்டினான்.

“பாருங்க மாதாஜி….” வேதாவிடம் சலுகைக்கு போனாள்.

“ஏண்டா வளர்ற புள்ளய தலையிலே கொட்டுற… …”

“ஆமாம் ஆமாம்… வளர்ர புள்ளை… எல்லா புள்ளையும் மேல் நோக்கி வளரும் .. இந்த தொல்லை மட்டும் சைடுல வளருது …”

“குழந்தைய ஏண்டா வந்ததிலே இருந்து இப்படி கரிச்சி கொட்டுற…..?”

“அம்மா… நீயுமாம்மா.. ….? இன்னும் குழந்தை , குழந்தைன்னுட்டு.அவளுக்கே குழந்தை பெத்துக்கிற வயசு ஆச்சு. இருபத்தி இரண்டு வயசு ‘அவளுக்கு’..”

அவளுக்கு என்று முடித்த வார்த்தையில் கிருஷ் கூடுதல் அழுத்தம் தர…, ரோஜாவும், வேதாவும் கிருஷை என்ன என்பது போல் பார்த்தனர். கண்களால் இள மாறனை சைகை காட்டினான். பின் அவர்களிருவருக்கும் ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது.

அதற்குள் இளா, “செம்ம பசி டாலி. உன் கையால சாப்பிடறதுக்காக , நேத்து ராத்திரிலேயிருந்தே வயித்தை காலியா வச்சிருக்கேன்.” (அடப்பாவி..)

“ஆமாம் , நானும் செம்ம பசி, டேய் அண்ணா போயி குளிச்சுட்டு வா, சாப்பிடுவோம். அழுக்கு மூட்டை.”

“சோறு போடுறாங்கன்னதும் காலையிலேயே மூஞ்ச கழுவி பட்டைய போட்டுக்கிட்டு வந்துட்டு என்னை அழுக்கு மூட்டை சொல்றியா,”

ஆராவின் காதைப் பிடித்து திருக,

ஆராவின் “…ஆ…ஆ.. மாதாஜி” கத்தலில் வேதா கரண்டியால் ரெண்டு போட ஓடி விட்டான்.

“தடிமாடு ….வளர்ந்து நிக்கிற புள்ளைய அடிச்சுக்கிட்டு, கல்யாணம் ஆச்சே, லட்டுக்கு இருக்கிற அறிவுல கொஞ்சமாச்சும் இருக்கா,”

“ஆமாம் மாதாஜி, அண்ணாக்கு, பண்ணி வச்சதுக்கு பதிலா இளாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா அவனாவது பொறுப்பா இருந்திருப்பான்.” விளையாட்டு போல ஆரா சொல்ல, எல்லாரும் சிரித்து கொண்டு பார்க்க, இளா அதிர்ந்து பார்த்தான்.

கிருஷ் குளித்து தயாராகி வந்ததும்,வேதா மூவரையும் அமர செய்து பரிமாறிக் கொண்டு இருந்தார். ரோஜா உதவி செய்தாள்.

“அடியே ரோசா , இத்தனை நாளாய் சமைக்கிறிங்க உங்களுக்கு இவ்வளோ ப்ரேக் பாஸ்ட் அயிட்டம் சமைக்க தெரியும்னு இன்னைக்கு தாண்டி தெரியும். பாதி ஐட்டம் , நான் கண்ணுலயே பார்க்காத ஐயிட்டமா இல்ல இருக்கு.” கிருஷ்

“ஆமாம் கிருஷ்.காண்டினெண்டல் ஐட்டம் சிலது டிரை பண்ணியிருக்கொம். நல்லா இருக்கான்னு பாரு…?” ரோஜா.

“எங்க பார்ப்போம்.” என்றபடி அனைத்தையும் திறந்து பார்த்தான்.
”இது என்னாடி சிக்கன் மேல கொழ கொழான்னு குழம்ப ஊத்தி வச்சிருக்கீங்க…?”

“அது பேரு சிக்கன் பிக்காட்டா.”

“பிச்சி போட்ட சிக்கனுக்கு பேரு பிக்காட்டாவாம் … நல்லா சொல்லுறீங்கடி டீட்டைலு….”

“எப்படியோ என்னையும் ஞாபகம் வச்சி எனக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியவாவது செஞ்சீங்களே அதுவரைக்கும் உனக்கு புண்ணியமா போகட்டும் ஆத்தா….”

“அய்யோ அது பஜ்ஜி இல்லடா க்ரஸ்டட் பன்கோ. என்ன கிருஷ் இப்படி தப்பு தப்பா டிஷ் பேர சொல்லுற…?” ரோஜா கத்தினாள்.

“ஓஹ்ஹோ ண்னானன்.. இவ்வளவு நேரமா எங்காத்தா என்னை கழுவி கழுவி ஊத்தும்போது உனக்கு தப்பாவே தெரியல…இந்த பங்கோவ …, பஜ்ஜின்னு சொன்னது பங்கமாயிடுச்சு. உங்களை எல்லாம் கும்மிப்புடுவேன் கும்மி…”

“வேலையா இருக்கும்போது காமெடி பண்ணாதிங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். போ கிருஷ்…”

“எல்லா டிஷும் செம்ம டேஸ்டியா இருக்கு ரோஸ். இந்த தடியனைத்தான் பழைய கஞ்சிய ஊத்தி காலையிலேயே வெளியில அனுப்ப சொன்னேனே. இப்ப பாரு என் வேதா டாலி எனக்காக ஆசை ஆசையா சமைச்சதை பாத்து காண்டாகிறான்.” – இளா

கிருஷ் முறைத்தான்.
ஆரா வந்த வேலைக்கு மட்டும் வாயை பயன்படுத்தி வெளுத்து கொண்டிருந்தாள். திடீரென அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் பட இருவரையும் மாறி மாறி பார்த்தான். அதை பார்த்த வேதா..,

“ஏண்டி உன் புருஷன் என்னடி….? திடீர் திடீரென கண்ணை காட்டுறான்…… முழிய உருட்டுறான்…… இப்ப வந்த….. புள்ளைகள வேற வெறிக்க….வெறிக்க….. பார்க்கிறான்.எனக்கு ரொம்ப பயம்மா இருக்குடி. காத்து கருப்பு அண்டியிருக்குமோ….போய் கருப்புசாமி கோயிலில் மந்திரிசுட்டு வந்துருவோம்மா.” வேதா ரோஜாவின் காதை கடித்தார்.

“மீ …. அவரோட ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.”

“சரி இப்ப எதுக்கு முழிக்கிறான்னு சொல்லு…?.”

“அதான் சொன்னேனே ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு அப்புறம் எப்படி ஒரு அர்த்தத்தை சொல்றது….?”
ரோஜா சமாளித்தாள்.

“இந்த வேதாவுக்கு ஏத்த சோதா டி நீ….” நெட்டி முறித்தார் வேதா..

ஆனால் கிருஷின் கவனம் இன்னும் வந்தவர்கள் மேலேயே இருந்தது.
இளாவும் , ஆராவும் வந்ததிலிருந்து பேசிக்கொள்ள வில்லையே என்பது உரைக்க. ஒருவேளை பயலை நாம குழப்பி விட்டதுல வந்த விளைவா இந்த மௌனம். என்று நினைத்தபடி.
போட்டு வாங்குவோம்… எண்ணியவனாய்,

“ஏய் லட்டு … என்னடி அமைதியா இருக்க… நீயெல்லாம் அமைதியா இருந்தா … உலகத்துல ஏதோ பேரழிவு வர்ற போகுதுன்னு அர்த்தம். ஒரு வேளை இளா கூட சண்டை போட்டியோ…? “

“நான் ஒன்னும் சண்டை போடல அண்ணா. இவன்தான் என்னை முதுகிலெயே அடிச்சிட்டான். அதுவும் காலங்காத்தால…”

“இளா அண்ணாவுக்கு .., லட்டு மேல கோபமா…? நீ என்னடி அப்படி பண்ணின எங்கண்ணன் பொங்கற அளவுக்கு…?”ரோஜா கேட்க

“ஏதோ தூக்கத்தில் காலை தூக்கி தலையில் போட்டு விட்டேனாம்…. அதை பெரிய துக்கமாக நினைத்து முதுகிலேயே ஒன்று போட்டு விட்டான் இந்த லகுட பாண்டியன்.”

“யாருடி லகுட பாண்டியன்….? காலையாடி தூக்கி போட்ட.? என் தலையில கடப்பா கல்லையே தூக்கி போட்டது போல இருந்துச்சுடி….” இளா கவுண்ட்டர் கொடுக்க…..

“இவன் , இவனோட ரூமிலேயே தூங்கி இருந்தா நான் ஏன் காலை போட போறேன்…?. என் கால்மாட்டுல தலைய வச்சி தூங்கிட்டு இருந்திருக்கான்.., அப்படியே லைட்டா டர்ன் பண்ணி, காலை ரைட் ஏறி திருப்பும் போது லேசா உரசிடுச்சி..இது ஒரு குற்றமா..

இளா, “டேங்கர் லாரி. , பைக்கை உரசினது மாதிரியே சொல்றா பாரு பெருச்சாளி”
“என்னோட பெட்லயே தூங்கிட்டு என்னையவே குறை சொல்லுறான்.” பாருங்க மாதாஜி.”

கிருஷ் கேள்வியுடன் இளாவை பார்க்க…
( வேற என்ன கேட்பான்…? அவளை அஞ்சலி பாப்பா ரேன்ஜிக்கு பில்ட் அப் கொடுத்திட்டு… அவ பெட்டுல என்ன பண்ணிகிட்டு இருந்தடா பேட் பாய்ன்னு தான்….? ???)

‘இளாவோ… அய்யோ இவன்கிட்ட இப்படி மாட்டி விட்டுட்டாளே கிராதகி…….நான் என்னவோ இவளை அவளுக்கே தெரியாமல் ரேப் செஞ்சிட்ட மாதிரி பார்க்கிறானே’ என்று நினைத்தபடி மீண்டும் சாப்பாட்டில் கவனம் செலுத்துவது போல நடிக்க..
( டேய் இளா என்னது…ரேப்….பா?…..கிருஷ் பய அப்படியெல்லாம் நினைக்கவே இல்லையேடா…உனக்கு அந்த ஐடியா வேற இருக்கா…?.)

கிருஷ்,. வேதாவிற்கும் , ரோஜா விற்கும் இளா உடைய தடுமாற்றத்தை ஜாடை காட்டினான். அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு, திரும்பவும் என்ன என்று பார்த்தனர்.

“ரோஜா அந்த பங்கமான பஜ்ஜியில ஒன்னை வை….”
முறைத்தவளை ,அருகில் சைகையில் அழைத்தவன்….

“பெரிய சீ பி சீ ஐ டி ஆஃபிசருங்க…. கண்ணை காட்டுனா புரியாம,காக்கா வடையை களவாடிறதுக்கு காத்து நிக்குற மாதிரி முழிக்கிறீங்க”

“அது ஒன்னும் இல்ல கிருஷ், அதிகமா அட்வைஸ் பண்ணி ,பண்ணி, ஆறுக்கு ஆறு ஃப்ரேம் ல ஆயா போல தெரியுறியா, அதான், வடை எதுவும் சுட்டுட்டு இருக்கியோன்னு பார்த்தோம்.”

முறைத்து விட்டு,
“அந்த குரங்கை, குழந்தை குழந்தைன்னு கொஞ்சி , தொட்டில் கட்டி ஆட்டாம, கல்யாணத்துக்கு பேசி சம்மதம் வாங்குங்க..”

“யாருக்கு கல்யாணம் கிருஷ்,?”

“ம்..எனக்குத்தான், வேற ஏதாவது நல்ல குடும்பமா பார்த்து தத்து போயிடலாமுன்னு இருக்கேன் புருஷனா….”

“போனா போகுதுன்னு உன்னைய நான் கட்டிக்கிட்டதே, அந்த நாராயணன் புண்ணியம்.இதுல.. ” வாயை மூடிய படி ரோஜா சிரிக்க,

“எல்லாம் நேரம்டி… இளாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேணாமா..?அதுக்குதான் நம்ம ஆராகிட்ட இளாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி பேசிப்பாரு பக்கி…” என கிசு கிசுத்தான்.

“இதை சொல்ல தான் இம்புட்டு முழியா” புன்னகைத்தவாறே சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவள் கண்ணசைவில் கூறிவிட்டு வேதாவிடம் சென்று கிசு கிசுத்தாள்.

“என்னா ஆச்சர்யம்….அப்பப்ப உன் புருஷனுக்கும் அறிவு வேலை செய்யுது பாரு,” வேதா கமென்ட்டில்

இருவரும் கிருஷை பார்த்து கிளிக்கி சிரிக்க, கிருஷ் தலையிலே அடித்து கொண்டான்.

எல்லாரும் சாப்பிட்டு முடிக்க…, வேதாவும், ரோஜாவும் சாப்பிட உட்கார்ந்தனர். அவர்களோட பேசியபடியே ஆரா பரிமாறிக் கொண்டிருந்தாள். இளாவும் , கிருஷும் சேர்ந்து கொள்ளவும்,.…. பேச்சு இந்த வார செல்ஃபி தீம் பக்கம் யூ டர்ன் அடித்தது…

இந்த வாரம் ரெட்ரோ வாரம் ரோஜா முடிவு செய்ய இந்த பேச்சில் கலந்து கொள்ளாத கிருஷ் , கடுப்புடன் பார்த்து கொண்டு இருந்தான். அப்போது வேதா,

“ இங்க பாரு ஆரா , ரோஜாவுக்கு உதட்டை சுத்தி ஒரே பிக்மெண்டேஷன் ஆக இருக்கு.இதை முன்னாடி பார்லர் போய் சரி பண்ணுவோம். மத்ததை அப்புறம் பார்ப்போம் செல்ஃபி எடுக்கும்போது தனியா தெரியுது.”

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த கிருஷ்,

“எருமைய எவ்வளவு தான் சிங்காரிச்சு , எத்தனை முறை செல்ஃபி எடுத்தாலும் எருமையாதான் இருக்கும்… ஏஞ்சலினா ஜோலி யா மாறாது…”
என்க அனைவரும் சேர்ந்து அவனை மொத்தி எடுத்தனர்.

எல்லாரும் அடிச்சு டயர்ட் ஆனதும்,

“ஓகே டார்லிங். லட்டுக்கு திங்கள் கிழமை தான் காலேஜ் ஓபன். அதுவரைக்கும் எவ்வளோ டிரஸ் தைக்கணுமோ தச்சிக்கோ. அதோட இவ வாயையும் கொஞ்சம் தச்சு சன்டே அனுப்பி விடுங்க. எனக்கு இப்போ டைம் ஆயிடுச்சு. வேளச்சேரி பிராஞ்சில கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்.

ஆராவைப் பார்த்து,

“ஏய் லட்டு என் டார்லிங்கையும், என் தங்கச்சியையும் இம்சை பண்ணாமல் இரு, முக்கியமா இந்தி பண்டிட்டானதை காட்டி கொன்னுறாத” என்ற இளா சிரித்தபடி கிளம்பினான்.

கிரிஷும், ஆராவை பார்த்துக்க சொல்லிவிட்டு கிளம்பினான். பெண்கள் மூவரும் அரட்டையில் அமர்ந்து விட்டனர்.

கொஞ்ச நேரம் கழித்து ரோஜா…,
“இளா அண்ணனுக்கு வயசாகிகிட்டே இருக்கு.. எப்ப கல்யாணம் பண்றது ஆரா…? “என கேட்க..

“நானும் பேசி பார்த்திட்டேன் அண்ணி. இளாதான் சீமாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டான்..”

“அட யாருடி இவ…? அந்த சீமை சிங்காரிய விட்டா வேற பொண்ணு இல்லையாடி.?”- வேதா.

“சரி அப்ப வேற பொண்ணை பார்க்கலாம் தான்… ஆனால் இளா எனக்கும் அவனுக்கும் இடையில் யாரும் வர கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான் மாதாஜி.”

“வேற யாரையும் விடக்கூடாதுன்னா … அப்ப நீயே கல்யாணம் பண்ணிக்கயென் லட்டு.” கொக்கி போட்டாள் ரோஜா.

“நானா…?” திரு திரு வென முழித்தவள். ,
“ எனக்கும் இளாவுக்கும் கல்யாணமா…… ? ஒரே காமெடியா இருக்கு… எனக்கு நினைச்சி பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது. போங்க…….அண்ணி.”

“ஆமாண்டி… சிரிப்பு தான் வரும். இன்னைக்கு நீ சிரி.., நாளைக்கு ஊரு சிரிக்கட்டும்… “குமட்டிலயே குத்தினார் வேதா.

(இவளுக்கு என்னைக்கு காதல் வர்றது…. நம்ம கதை என்னைக்கு முடியரது………????? அவளை அப்படியே ரைட்டில் வாங்கி லெஃப்ட் டில் நல்லா குத்துங்க வேதாஜி ,….,நீங்க ஒரு தொப்பியில்லா நேதாஜி)

ரோஜா, ஆராவின் அருகில் அமர்ந்து…,

”இங்க பாரு லட்டு கல்யாணம் பண்றதுங்கறது செம்ம ஜாலியான விஷயம். தினம் தினம் சண்டை, ரொமான்ஸ், பாட்டு, புருஷனை கலாய்க்கிறது , வம்பு வளக்குறதுன்னு ஒரே என்டெர்டெயின்மென்ட் தான். யோசித்து பாருடா. நீயும் உங்கண்ணிய போல ஹாப்பியா இருக்கலாம்.”

(நல்லா வாழ்றடி ரோசா….. வயிறு பர்சனல்லா எரியுது எனக்கு..கடமைன்னு வந்துட்டா சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை… மனச கல்லாக்கி கிட்டு மேல எழுதுகிறேன்..??)

“அதுக்கெல்லாம் எதுக்கு அண்ணி கல்யாணம் பண்ணிக்கணும். இப்பவே இளாவோட ஃபுல் என்ட்டெர்டெயின்மென்ட் தான்.”

“ம்..ம்க்கும்… இது ஆவுற கதை போல தெரியல.” ரோஜா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

இளா வோட இப்பவே ஃபுல் என்டர்டெய்மெண்ட்டா…?
“ கல்யாணம்கிறது , ஒரு உரிமை டா லட்டு… எப்படி உன் கிருஷ் அண்ணன் எனக்கே எனக்கோ… அது போல என்னோட இளா அண்ணன் உனக்கே உனக்குன்னு ஆகிடுவார் . இப்ப கிருஷ் அண்ணா கிட்ட நெருங்கி பழகறதுல மொத்த உரிமையும் எனக்கு தான்…”

“அது போல தான் அண்ணி , இளாவுக்கு வேற யாரும் தொட்டா கூட புடிக்காது.. என்னை மட்டும் தான் பக்கத்திலேயே விடுவான்… ரெண்டு பேரும் சண்டைய போட்டு உருளுவோம் பாருங்க. செம்ம ஜாலி தான்…..”
“ம்.. ம் க்கும் ஆட தெரியாத அக்கா….. ஆறு மணிக்கு அரங்கேற்றம் பண்ண போட்டாளாம் பரதநாட்டிய சொக்கா.” நொடித்து கொண்டாள் ரோஜா.

“ஒரு வேளை கிருஷ் பையனை எக்ஸாம்பில்லா சொன்னது நால தான் நம்ம ஆராவுக்கு புரியலையோ…?ஏன்னா அவனுக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகுற அளவுக்கு ரொமான்ஸ் ஒர்க் அவுட் ஆகாது.ரோஜா ரூட்ட மாத்து.” யோசித்து,

“நீ படம்லாம் பாத்திருக்கீல… லட்டு …? ஹீரோ என்ன செய்வார்…?”
“ஹீரோ வில்லனை எதிர்த்து போராடுவார்…கடைசில வில்லனை கொல்லுவார்…”
ரோஜாவுக்குள் “ஒதலாவா….. நேன்னு…..ஒதலாவா…லக லக லக.” ‘அய்யோ என்னை முழுசா சந்திரமுகி யா மாத்திட்டா போல இருக்கே…. கடைசியில இல்லடி நான் முதல்லயே கொன்னுடுறேன் உன்ன.
வேணாம் ரோஜா….! அவளே ஒரு சின்ன பெண் ஆரா , அவ கூட உனக்கு
போரா ….? ஓஹ்ம் சாந்தி….….டிஸ்கோ சாந்தி.’ பெரு மூச்சுடன் தொடர்ந்தாள்…

“அத சொல்லலடா லட்டு. நான் சொல்றது லவ். ஹீரோயின எப்படி லவ் பண்ணுவார் நம்ம ஹீரோ.?,”
(அதான் பாடா படுத்துறாள்ள …? அப்புறம் என்ன லட்டு….? மண்டையிலே வையி ஒரு கொட்டு….)

“கட்டி புடிச்சுகுவாங்க, முத்தம் கொடுத்துப்பாங்க..அப்புறம் பாரின் லாம் போய் பாட்டு பாடுவாங்க… நானும் இளாவும் கூட ஒரு கான்பரன்ஸ்காக சிங்கப்பூர் போயிருக்கோம்.அங்க போய் ஆட்டிகா நைட் கிளப்ல போட்டோம் பாருங்க ஆட்டம்.? ஜேகர் மெய்ஸ்டர்னு ஒரு ஐஸ் க்ரீம் குடுத்தாங்க,போற லேடிஸ்கு மட்டும் ஃப்ரீ அண்ணி… விடிய விடிய ஆட்டம் தான்.,நாம ஒரு டைம் கண்டிப்பா போகணும் அண்ணி ஆட்டிகாவுக்கு…”.

“ஆட்டிகாவா… இங்கவே எனக்கு ஆட்டம் கண்டுட்டு…இவ என்னோட பீப்பி ய ஏத்தி கூடிய சீக்கிரம் எனக்கு பீப்பீ ஊத வச்சிருவா போல இருக்கே. அப்ப கிருஷ் நீ சீக்கிரம் விதவன் ஆயிடுவ டா… சீக்கிரமா நீ வெள்ளை சட்டை போடவேண்டிய டைம் வந்துருச்சு போலயேடா.”.,-. ரோஜா மனதிற்குள்…

“அய்யோ நான் சொல்ல வர்றது வேற , நீயும் இளாவும் சிங்கப்பூர் போனது வேறடீ…”. ரோஜா வை கதற விட்டு கொண்டிருந்தாள் ஆரா.

“ரோ விடு அவளை…. எங்க போக போறா..?…. விட்டு பிடிப்போம்.”
வேதா தான் வந்து அந்த புள்ளை ரோஜா.., மேலே டிக்கெட் வாங்காமல் காபந்து செய்தார்…
( வேதாஜி நீங்க கொஞ்சம் லேட்டா ஆத்தாஜி, ரோஜா ஊப்பெர் ஜாத்தாஜி….ஹி..ஹி…ஹி. நாங்களும் இந்தி பண்டிட் தான்ஜி …)

சாஷா.

error: Content is protected !!