KanmaniUnainaanKaruthinilNiraithen5

KanmaniUnainaanKaruthinilNiraithen5

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.

அத்தியாயம்- 5

 

கிருஷின் வீட்டிலிருந்து கிளம்பும் போதே உற்சாகம்
கரைபுரண்டது… இளாவிற்கு.. இது போல் அவ்வப்போது பிடித்தவர்கள் உடன் கலகலப்பாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் என்னவோ இனம் புரியாத ஒரு இன்பமான அவஸ்தை நேற்றிலிருந்து…
எந்த வரையறைக்கும் உட்படாத ஏதோ ஒரு ஏகாந்தம் நிலவியது அவனுள்ளும் வெளியேயும்.

மனதிற்குள் சிரித்தபடியே, வேளச்சேரி ஆசிர்வாத் டெக்ஸ்டைல்ஸ்க்கு போகும் எண்ணத்தில் காரை எடுத்தவன் நிறுத்தியது, வழக்கமாக செல்லும் ஆசீர்வாத் தலைமை அலுவலக கட்டிடம் ,அசோக் நகரில்,
அவனுள் இருந்த ஏகாந்தம் செலுத்தும் திசையில் சென்றிருந்தான்.
ஒரு நிமிடம் திரு திருவென முழித்தவன்….
‘ ச்சே என்ன ஆச்சு எனக்கு..?’
செல்லில் வேளச்சேரி பிராஞ்ச் மேனேஜரை அழைத்தான்… காரில் இருந்து இறங்கியபடியே …

“முரளி..,எஸ்.., வெரி குட் மார்னிங்… எனக்கு ஒரு அர்ஜெண்ட் ஒர்க் இருக்கு…(ஆஹான்…) நம்ம பிராஞ்ச் ஒர்கேர்ஸ் மீட்டிங்கை லஞ்ச்க்கு அப்புறம் போஸ்ட் போன் பண்ணிடுங்க. ஐ வில் பீ தேர் , அட் டூ தர்ட்டி…”
இப்படி ஒருவாறாக அன்றைய அலுவல்களை முடித்து கொண்டிருந்தான் இளா. ஃபோனில் ஆராவை பற்றி கேட்டறிந்து விட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டான்.

என்னவோ மனது ஆராவைத் தேடியது. ஒரு வாரமாய் பிரிந்திருக்கும் போதும் தவித்தான் தான். ஆனால் இந்த தவிப்பு அவனுக்கே புதியதாய்.

இரவுணவிற்கு பின், படுக்கை வெறுப்பாய் இருக்க, ஆராவின் போட்டோக்களை டிஜிட்டல் ஸ்க்ரீனில் ஓட விட்டு படுத்து கொண்டான்.

அடுத்த நாளும் வேளச்சேரி செல்லும் வேலை இருக்க சென்றது அசோக் நகர் அலுவலகத்துக்கு தான்.

அலுவலகவலக வாயிலின் ஆட்டோமேட்டிக் கிளாஸ் டோர் திறக்க … உள்ளே செல்ல எத்தனித்தவனை போக விடாமல் காதை கிழித்தது சத்தம்.
பயங்கர ஹார்ன் சத்தத்தோடு ஹூண்டாய் சாண்டா ஃபே கார் வந்து நின்றது. கேட் செக்யூரிட்டியிடம் காரிலிருந்தவர் எதையோ கேட்க பதிலளித்து கொண்டிருந்தார் அவர்..

இளா ,
“ரைட்டு……… சைத்தான் .., சாண்ட ஃபேயில் வருது,
அதுதானே.. நாம சந்தோஷமா இருந்தா இவளுக்கு மூக்கு வேர்த்திருமே… நாமளே , வேளச்சேரி யா ,அசோக் நகரான்னு கண்ஃபியுஷன்ல வந்துருக்கோம், இவ கரெக்டா ஃபாலோ பண்ணி வந்துடறா..”
முணுமுணுத்தவன் உள்ளே போய் விட்டான்.

உள்ளே குட்மார்னிங்கை பெற்றுக்கொண்டு திருப்பி தந்தவன். மாலினியிடம்..,
“டோன் செண்ட் எனி படி டூ மை கேபின்.
இஃப் ஏனி ஒன் நீட் டூ சீ மீ. பிக்ஸ் அப்பாயின்மெண்ட்.., அண்ட் டெல் தெம் டூ கம் டுமாரோ..”

“காட் இட் மாலினி…?”

“எஸ் .., ஸார்.”

கேபின்னுள் சென்று விட்டான் இளமாறன்.
அவன் சென்றதும்,
‘ பிஸ்தா க்ரீன் ஷர்ட் ல பிஸ்டச்சியோ ஐஸ் கிரீம் போல இருக்கடா செல்லம் நீ’ ….என்றபடி சீட்டில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தாள் மாலினி.

இரண்டு நிமிடங்களில் பெர்ஃப்யூம் மணத்துடன்
கண் ,காது, மூக்கு ,வாய் எல்லாம் சரியாக, சமூகம்
அழகி என்று சொல்லும் அளவில் ஒரு பெண்.,
வழ வழ தேகத்தில் ,சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஆடை முட்டியை தொட முடியல …. என்று கோபித்து மேலேயே நின்று விட…,. ஃபெதேர் கட் ஹேர் ஸ்டைலுடன், டிரசுக்கு மாட்சாக ரெட் கிளிட்டர் கலரிங்கை., காதுவரை வெட்டப்பட்டிருந்த முடியில் மட்டும் ஹை லைட் செய்திருந்தாள்.
ஹீல்ஸின் டக் டக்கோடு … வந்தவள்… நேரே இளாவுடைய கேபினின் உள்ளே செல்ல முற்பட்டாள்.

‘அதானே பார்த்தேன் …..இவன் கேட் டை பூட்டுண்ணு சொன்னாலே இந்த ரூட்டில ஏதோ டிரெயின் வரப்பொகுதுன்னு இல்ல அர்த்தம்…இவளுக பாட்டுக்கு போசுக்க்குன்னு வராளுக … பொசுக்கு.., பொசுக்குன்னு உள்ளே நுழையராளுங்க. ஒஹ்ஹோ இது எக்ஸ்பிரஸ் டிரெயினோ…..நமக்கென்ன…… மாலினி..,போடுடி.கேட்டை.’

குறுக்கே சென்று தடுத்த மாலினி.
“எக்ஸ் கியுஸ் மீ…?
இப்படியெல்லாம் நீங்க எங்க பாஸ் ரூமுக்கு போக முடியாது..…
அப்பாயின்மேண்ட் இருக்கா மேடம்?”

வந்தவள்…, புழுவை போல மாலினியை பார்த்தாள்…
“ஐ டோண்ட் நீட் அப்பாயின்மெண்டு டூ சீ மை இளா…?”

‘மை இளா வா…?? அடுக்கடுக்காக எங்கேயிருந்து டி என் செல்லத்த கொத்திட்டு போக வருவீங்க.’

“எங்க பாஸ் யாரையும் உள்ள விட கூடாதுன்னு சொல்லியிருக்காரு..?” ( நேத்து தான ஒருத்தி உள்ள பிடுங்கிட்டு ஓடினா..?)

“உட்பீயையுமா…? ஐ ஆம் சீமா .. உங்க எதிர்கால பாஸ்ஸம்மா….”
………!!!?? ஆ பிளந்த படி ஆமை வடை…

“ஐ திங்க் ,ஐ கேன் கோ இன்சைட் நௌ…”
அவளே பெர்மிஷன் கொடுத்துகிட்டா… அவளே போயிட்டா…

( அவ உள்ள போயிட்டா டி…வாயை திறந்தபடி…என்ன பண்றா ஆமை வடை…? யாராவது போய் எழுப்பி விடுங்கம்மா…)
மாலினி,
‘போன தடவை வந்தவளே பரவாயில்லை, ஸ்விஃப்ட் கார் தான்… இவ ஆடி காரா இருக்காளே.. டெய்லி ஒருத்தி வர்ரா…இன்னும் எத்தனை பேரை சமாளிக்கணுமோ..நீ..மாலினி..?’
‘அது சரி…. வர்ற எவளுக்கும் நான் இங்க நிக்கறது ஏன் தெரியல….. ?’
‘என்ன காரணம்…. ? இனிமே….,பவுடர கொஞ்சம் அதிகமா போடறோம்.., பவுண்டேஷன்னை ஏத்தறோம்,… கிளாமரை …கூட்டறோம்… என்றபடி முகத்தில் பட்டி, டிங்கெரிங் எல்லாம் சரியாக இருக்கிறதா…?’ என்று கை கண்ணாடியில் பார்த்தாள்….

அதற்குள் சீமா…
கேபின் கதவை திறந்து உள்ளே போனவள்..

“ஹாய் இளா…. யூ ஆர் ஹேன்ட்ஸ்சம் இன் திஸ் ட்ரெஸ் பேபி….”

“இதுதான் மேனர்ஸ்ஸா…. படிச்சவ தான நீ…..ஒரு ஆஃபீஸ் எம் டி ரூமுக்குள்ள இப்படி தான் பெர்மிஷன் இல்லாமல் நுழைவாங்களா…..?,” இளா,

இன்டர்காமில் , “மாலினி கம் டூ மை கேபின்…”
மாலினி யோ , ‘ஏற்கனவே மனசை உடைச்சிட்டா உன் உடுப்பி..இப்ப நீ வேற என்னை உள்ள கூப்பிட்டு நீ பண்ற கில்ஃபான்ஸ்ஸை எல்லாம் லைவ் டெலிகாஸ்ட் பண்ண போறீயா..?’
‘மாமன் பொண்ணையே .., மடியில வச்சி ஊட்டி விட்டான் மாறன்… இந்த உடுப்பிய என்ன எல்லாம் செய்வானோ…? அடேய் என் பிஞ்சு மனசு தாங்காதுடா.. பேசாமல் கண்ண மூடிட்டு போவோமா…?’ சிந்தித்து கொண்டே மாலினி போவதற்குள் அவன் கேபினே வந்து விட்டது…,.

“எஸ் சார்.,”
‘நல்ல வேளை…எம் டி சாரோட மடி எம்டியாக தான் இருக்கு…ஷப்பா…!’

“மாலினி , நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்…? எதுக்கு இவங்களை உள்ள விட்டீங்க…, ? ஷோபனா ஜாயின் ஆகுற வரைக்கும்தான் நீங்கள் எனக்கு பிஏ, அதுக்கப்புறம் தான் ஜி எம் கிட்ட பீ ஏ வா கண்டினியூ பண்ணுவீங்க.. இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகிட்டீங்கன்னா …ஜி எம் கிட்ட அனுப்பாமல் நேரா வீட்டுக்கே அனுப்பிடுவேன்… மைண்ட் இட்.”

“இல்ல சார்… அவங்க உங்க உடுப்பின்னு.”.( அய்யோ, இந்த நேரம் பார்த்து வாய் , வாலிபால் விளையாடுதே…)

“வாட், பார்டன்.?”

“சார், அவங்க தான் எங்க பாஸ்ஸம்மான்னு சொன்னாங்க.”.(அப்பாடி…! வாய் கன்ட்ரொல்லுக்கு வந்துட்டு..)மென்று முழுங்கினாள்.

“பாஸ்ஸம்மாவா…?நான் எப்ப எனக்கு அம்மா இருக்காங்கன்னு சொன்னேன்..? நேத்து வந்தாலே ஆராதனா அவதான் உங்களோட இன்னொரு பாஸ், வேணும்னா அவள, பாஸ்ஸம்மா , ஆர், வாட் எவர், யூ மே கால் ஹெர்… நீங்க இப்ப போகலாம்.”

“எஸ் சார்.. சாரி சார்…இனிமே இப்படி நடக்காது…”
( அப்ப நேத்து வந்தது ஸ்விஃப்ட் இல்லையா…? அது லம்போர்கினி யா…. எப்படியோ இந்த அடிக்கிற கலர் ஆடி காரு ஆட்டதுல இருந்து அவுட்…மகிழ்ச்சியுடன் போய் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.,)

“இளா.., இப்ப எதுக்கு கண்டவங்களுக்கு முன்னாடி எல்லாம் என்னை அவமான படுத்திற..? உன் கேபின் குள்ள நான் வரக்கூடாதா…?ஹே ஐ ஆம் சீமா…… வொய் ஷூட் ஐ நீட் பெர்மிஷன்….? ஆராதனா கூட அப்படி தான் பெர்மிஷன் கேட்டு வருவாளா…?”

“ஆரா வை பத்தி நீ பேசாத…. மேனர்ஸ் நா என்னன்னு அவளை பார்த்து கத்துக்கோ. அவ இப்படி இன் டீசெண்ட் ஆ பிஹெய்வ் பண்ற ஆளு இல்ல. அவ ஒன் ஆஃப் த மேஜர் ஷெற் ஹோல்டர் ரா இருந்தாலும்…. என் அப்பொய்மெண்ட் இல்லாமல் ஆஃபிஸ் ல என்னை பார்த்ததேயில்ல..”
( நெத்துதான டா அவ தாறு மாறாக உள்ள நுழைஞ்சு ..,உன்னை தக்காளி சோறா கிண்டிட்டு போனா….)

“இப்ப என்ன நான் பெர்மிஷன் கேட்கணும் அவ்வளோ தான…?”
அவன் கேபின் கதவு அருகில் சென்றவள்…,
“மே ஐ கமின் சார்..?”
என்று கேட்க…

“சாரி ஐ டோன் ஹாவ் டைம் நௌ. நீங்க என் பி ஏ கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு நாளைக்கு வாங்க.. அது வும் ஆபீஷியல் ஆக பேசரதா இருந்தா மட்டும்.
இப்ப நீங்க போகலாம்..”

“நீ என்னை ரொம்ப அவமான படுத்துற இளா.. சரியில்லை.. நான் என்ன தப்பு பண்ணினேன்.. ? எதுக்கு இப்படி நடந்துக்கிற…?”

இளா அதற்கு…
“நான் உன்கிட்ட நல்ல ப்ரெண்ட் ஆக தான் இருந்தேன்.. நீ தான் என்கிட்ட வந்து லவ் பண்றேன்னு சொன்ன. அப்ப கூட நான் டீசெண்ட்டா , எனக்கு இன்டரேஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன். அங்கிள், ஆண்டியையும் கூட்டிட்டு வந்து நின்ன.. அப்பவும் எனக்கு உன்னை பத்தி எந்த ஐடியா வும் இது போல இல்லைன்னு சொல்லிட்டேன்.. அதோட விட்டியா.,…? எவ்வளவு டார்ச்சர் கொடுக்குற நீ..?
போற இடத்துக்கலாம் வந்து .., … பல்லை பல்லை காட்டுற…
இப்ப எதுக்கு நீ ஆரா கிட்ட அவளை பார்த்துக்கிறேன்.., கையை கோர்த்துகிறேன்னு அவ மனசை கலைக்குறே…?
நீ எப்படி வித விதமா பேச வந்தாலும் , என் முடிவு ஒண்ணுதான்.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது… அவ்வளோ தான்.”

“என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டெங்கிறதை இவ்வளவு நீளமா சொன்னியே… நீ வீட்டில வச்சிருக்கியே ஒரு அரை லூசு .. அதையும் வச்சிக்கிட்டு உன்னையும் கட்டிக்க எவ ஒத்துக்குவா..? “

“என் ஆரா வை பத்தி இதுக்கு மேல ஏதாவது பேசின… ஈ ஈ…. ஈன்னு காட்டுறியே முப்பத்தி ரெண்டு பல்லு அது இல்லாமல் போயிடும்… ரொம்ப மரியாதை வச்சிருந்தேன் சீமா உன் மேல, நீயே இறக்கிக்கிட்ட, ச்சீப்பா பிஹேவ் பண்ணி”

“அழகா இருக்கியே .., உன் வாழ்க்கை வீணாகி போயிட கூடாதுன்னு, அட்ஜஸ்ட் பண்ணி கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னேன். இதுக்கு ரொம்ப அலட்டுற”..- சீமா.

“அய்யோ தாயி நீ வாழ்க்கை கொடுத்துதான் நான் வாழனும்னா.., அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை.. அதுக்கு பதிலா தூக்கிலெயே தொங்கிடுவன். ஜஸ்ட் ஷட் அப் அண்ட் கெட் அவுட்…”

“இளா நீ ரொம்ப ஓவரா பேசுற… என்னைய விட்டா உன்னைய யாரு கட்டிப்பா…? வேற யாரும் வந்தாலும், ஒரே ஓட்டம் தான்…. அப்புறம் அந்த ஆராதனா வை தான் கட்டணும் நீ… இந்த சாமியாருக்கும் , அந்த அரை வேக்காட்டுக்கும் கல்யாணம்…. நினைச்சி பார்க்கவே ரொம்ப காமெடியா இருக்கு…ஹ ஹ ஹா….”

(இதைத் தான் அவளும் சொன்னா… காமெடி யா இருக்கும்னு)
காண்டான இளா….,
“ஹேய் சிலுக்குவார்பட்டி … ரொம்ப சிரிக்காத…. நான் என் ஆராவையே கல்யாணம் பண்ணி…. , அன்னியோன்யமா குடும்பம் நடத்தி ,அழகா ஆறு பிள்ளையும் பெத்து காட்டுறேண்…,இது சவால் …”
( ஆத்தி…. ஆராவுக்கு ஆறு புள்ளையா…? அடேய் உன் ரைமிங் கரெக்ட்., ஆனா டைமிங் தப்புடா….அவ ஆட்டிக்கா போய் ஆட்டம் போடலாமுங்கிர மூடுல இருக்காடா..)

“வாட்..? டெல் மீ அகைன்..?”- சீமா.

“ஒஹ்ஹ் .. காதுல விழலையா…? உன் காதுல இருக்குற ஒட்டடையெல்லாம் தூசி தட்டிட்டு நல்லா கேட்டுக்கோ., (டேய் அது ஒட்டடை இல்ல.. ஹை லைட் ஹேர் களரிங் )
எனக்கும் ஆராவுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும். குடும்பத்தோட வந்து நல்லா கொட்டிக்கிட்டு போ…”
“இப்ப புகையை போடாமல் கிளம்புறியா..?”
“என்னது…?”
“உன் வயித்தெரிச்சல் இங்க ரொம்ப புகை மூட்டத்த உண்டாக்குது….. சோ பிளீஸ்….. “வாயிலை காட்டினான்.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப… கூடிய சீக்கிரம்….!”
சாபத்தை விட்டுவிட்டு வெளியேறினாள் சீமா….

அவள் போனதும்… வைத்தியநாதன், சீமாவின் தந்தைக்கு ஃபோன் செய்தான்.
“ஹலோ அங்கிள்…, ….”
……………
“ஆனா எனக்கு பேட் மார்னிங் அங்கிள்…”

………….

“சீமா வந்திருந்தாள். நான் உங்களுக்காக தான் பொறுத்து போறேன். எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு..அவ அதை தாண்டிட்டா….”
………….

“இன்னொரு தடவை அவ இப்படி நடந்துகிட்டா…? நான் நம்ம பிசினஸ் ரிலேஷன்ஷிப்பையும் சேர்த்து கட் பண்ணிடுவேன்…”
….
கட் செய்து விட்டான்.

வைத்தியநாதனின் ஃபோனை கட் செய்தபின் இளாவுக்கு இருப்பு கொள்ளவில்லை…..
குறுக்கும் நெடுக்கும்மாய் நடந்தவன்….,
‘ச்சை என்ன பொண்ணு இவ..? எவ்வளவு விரட்டினாலும் காலை சுத்தின பாம்பா விட மாட்டேங்கிராளே……… அந்த அங்கிளுக்காக அமைதியா இருக்கணும்னு நினைச்ச என்னையே என்னவெல்லாம் பேச வச்சிட்டா…?’

அப்போது தான் அவன் சீமாவிடம் பேசியது ஞாபகத்திற்கு வந்தது..

‘அய்யய்யோ என்னவெல்லாம் பேசிட்டோம்….. கல்யாணம் …….., ஆரா…….., அழகா ஆறு பிள்ளைகள்’ ………….. அனைத்து வார்த்தைகளும் வட்டம் போட்டது மனதிற்குள்…..
‘அடப்பாவி ஏன்டா இளா இப்படியல்லாம் சவால் விட்ட….? அதுவும் லட்ட போய் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டியே டா… அவளை எப்படிடா இப்படி பார்க்க முடிஞ்சது உன்னால…..?’

தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தவன்…. ஏன் இப்படி பேசினோம்… ரெண்டு நாளுக்கு முன்ன வரைக்கும் நல்லா தான் இருந்தோம்.. கிருஷ் கிட்ட பேசறவரைக்கும்…

எல்லாத்துக்கும் காரணம் அந்த கிழிஞ்ச வாயன் கிருஷ் தான்…. அவனை சும்மா விடாத போய் கிழி கிழி கிழின்னு கிழிச்சிரு …. இளாவை அவன் மனசாட்சி உசுப்பி விட்டது.

“செல்லில் கிரிஷிர்க்கு அழைத்தான். டேய் மச்சான் ஃப்ரீ யாடா…? ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும் டா..”
……………!!??
“டேய் ரொம்ப பந்தா பண்ணாத… , நீ வந்தால் லஞ்சுக்கு, பான் ஏசியா போயி, பெக்கிங் டக் சாப்பிட்டுக்கிட்டே விஷயத்தை பேசிடலாமுன்னு பார்த்தேன்… சரி விடு .., முக்கியமான வேலை இருக்குன்னு வேற சொல்ற… ஒகே ட…….. “
அவன் பேசி முடிக்கும் முன்….,அந்த பக்கம்,

………………………..
“இல்லை பரவாயில்ல டா…. நான் ஈவ்னிங் பேசிக்கிறென். எனக்காக அவ்ளோ தூரம் வர வேண்டாம் மச்சான்..”
……………….
“அப்போ சரியா ஒன் ஓ கிளாக், பான் ஏசியாவில் மீட் பண்ணலாம். லஞ்சிக்கு அப்புறம் எனக்கு வேளச்சேரி பிரான்ச்சில ஒர்க்கேர்ஸ் மீட்டிங் வேற இருக்கு சீக்கிரம் வந்துடு. “(வராத கிருஷ்……. வாத்து கறி திங்கவர்ற உன்னை கொத்து கறி பண்ண பார்க்கிறான்……)
(வாத்துக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்..?,
வாத்துதான் இருக்கும்…
ஆனா இந்த பெக்கிங் வாத்தை உள்ள வச்சி வலைய போட்டா நம்ம கிருஷ் இருப்பான்.ஏன்னா அந்த சைனிஸ் டிஷ் மேல நம்ப கிருஷ்சுக்கு ஒரு கிரஷ்,…)

ஒரு வழியாக வந்த வேலை,வராத வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு , ஆமை வடைக்கு வேலை மேல வேலையா கொடுத்து அவளை உளுத்த வடையாக ஆக்கிவிட்டு,வாத்து கறி சாப்பிட, கிண்டியில் இருக்கும் பான் ஏசியா விர்க்கு கிளம்பினான் இளா.

மணி பனிரெண்டு ஐம்பது ,பான் ஏசியா வில் நுழையும் பொழுது.
ரெஸ்டாரண்ட் உள்ளே நுழையும் போதே ,
“என்னடா என்ன வர சொல்லிட்டு இவ்வளவு லேட் டா வர…? உனக்கு கொஞ்சம் கூட பங்சுவாளிட்டியே இல்லடா மாப்ள..” நம்ம கிருஷ்தான்.

“ஒரு மணிக்கு வர சொன்ன நானே பத்து நிமிஷம் முன்னாடி வந்திருக்கேன். சரி நீ எப்போ வந்த…? “

“ஜஸ்ட் உனக்கு இருபது நிமிஷம் முன்னாடி…”

“அட வெக்கங்கெட்டவனே….. ஒரு கர்ட்டேசிக்கு சாப்பிட வாடான்னா… இப்படியாடா அரைமணி நேரம் முன்னாடியே இருப்ப…”

“போடா… அங்க அந்த தாய் கிழவி வழக்கம் போல என்னை தாளிச்சு விட்டதில கொஞ்சமா நாலு கரண்டி பொங்கல், அஞ்சு இட்லி, மூணு தோசை, மட்டும்ன்னு சாப்பிட்டுட்டு அவசரமா கிளம்பிட்டேன் டா…அதோட அந்த புட் பாண்டாவைப் பார்த்ததும் என்னை கவனிக்கல, அதான் பாப்பாவுக்கு சீக்கிரம் பசி வந்துட்டு…”

“ஏன்டா பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லை…? அங்க காலை சாப்பாடு தீர்ந்துடுச்சின்னு சொல்லியும் கிளம்பாமல் …, ரோஸ் , வட்டி, சட்டிய முதல்கொண்டு கழுவி கவுத்ததுக்கு அப்புறம் ஏதாவது இருக்குதான்னு அண்டாகுள்ள எல்லாம் தலையை விட்டு பார்த்திட்டுதான் வீட்ட விட்டுட்டு கிளம்பினியாம் , .டாலி அப்டேட் பண்ணுச்சு.”

“ஓ இப்படியெல்லாம் கண்ணு வைக்குதா கிழவி. சரி சாப்பாடு மீந்துட்டா ஏன் குப்பையில் கொட்டனும், என் வயித்தில் கொட்டலாம்னு ஒரு சமூக சேவை செஞ்சேன் அது தப்பாயிட்டு…சரி அதெல்லாம் விடு… என்னை எதுக்கு இப்ப நீ உடனே பார்க்கணும்னு அடம் பிடிச்ச…? நான் அழகுதான் அதுக்காக உன் முன்னாடியே இருக்க முடியுமா..? எனக்கும் வேலை இருக்குமில்ல..? உடனே பார்க்கணும்னு ஆசையா இருந்தால் செல்ஃபி எடுத்து அனுப்பி இருப்பேனே டா….”

“அடிங்க…. எல்லாம் உன்னால தான்…டா .. என் நிம்மதியே போய்டுச்சு. என் வாயும் ,மூளையும் நான்சிங்க்கா செயல்படுது. எனக்கு நீதான் ஏதோ சூனியம் வச்சிட்ட.. உன்னை நேர்ல பார்த்து குமுறினாதான் என் மனசுக்கு சந்தோஷம் கிடைக்குமுன்னு தான் உன்ன வர சொன்னேன்…”

“அடப்பாவி .., இப்ப தெரியுதா நான் ஏன் இன்னும் அம்பானி ஆகலைன்னு….? முன்னேறதுக்குகான முன்னூறு வழிகளில், முக்கியமான வழியில போய்ட்டு இருக்கும்போது பெக்கிங்க் டக், பேக் பண்ணாத குக்குன்னு ஆசைய மூட்டி என்ன வரவச்சு , பூசைய பொடலாமுன்னு பார்த்திருக்க….?வொய் யூ கூப்பிட்டு கும்மிங் டா…? எஸ்டர்டே மார்னிங் மை ஹோம் யூ கம்மிங் நா..?”

“டேய்..,குங்ஃபூ பாண்டா…. உன் இங்கிலீஷை நிப்பாட்டு இல்ல, வாழ ஆரம்பிக்காமலே நான் தற்கொலை பண்ணிகிட்டு வாழ்க்கைய முடிச்சுப்பேன்…”

“சரி பொழைச்சு போ. இங்கிலீஷ் தெரியலன்னு சொல்ல வேண்டியது தான…இரு டிரேன்ஸ்லேஷன் பண்றேன். நேற்று காலையில கூட நல்லா சோறு போட்டு சந்தோஷமா தானே டா அனுப்பி வச்சேன். கூப்பிட்டு சோறு போட்டவனை கும்மற பழக்கம் நம்ம தமிழ்நாட்டிலேயே யாருக்கும் கிடையாதே… வொய் யூ டா…?”

இளா பல்லை கடித்தான் …., உதட்டை மடக்கி கோபத்தை கட்டுபடுத்த,

கிருஷ்.., “சரி…… , நண்பனை கும்மனும்னு நினச்சோமேங்கிற துக்கம் உனக்கு தொண்டைய அடைக்கறதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது .. இரு நானே கண்டு பிடிக்கிறேன்…..
ஒரு வேளை நான் ரோஜா கிட்ட காட்டுற முரட்டுத்தனத்தையும் போர்குணத்தையும் பார்த்து இம்ப்ரஸ் ஆகி எதாவது பொண்ணு கிட்ட சண்டை ய போட்டுட்டு, அந்த பொண்ணு உன்னை ஆடம் டீசிங் பண்ணிட்டாளா..?”

………… இளா காண்டாக

“யாருடா அவ சொல்லு…? மச்சான் நான் இருக்கேன்.. ஒரு அழகான பையன் ரோட்டில் போக முடியல…… “

இளா முறைத்தபடி, ஃபோனை கையில் எடுத்தான். ஆனால் கிருஷ் இன்னும் நிப்பாட்ட வில்லை…

“சொல்லுடா மச்சான்.. கூட்டமா போய் அவளை கையை பிடிச்சு இழுத்திடலாம்…..”அவன் சொல்லி கொண்டே போக…

“கூட்டமாகவா…..? யாரடா கூட்டிட்டு போறது…?” கேட்டது நம்ம இளா தான்.

“என் பொண்டாட்டிய தான்… அவ ஒருத்தி வந்தாளே கூட்டமாதான் இருக்கும்.. வேணுமின்னா தாய் கிழவியவும் சேர்த்துக்கலாம் தான்………கையில கல்லு இல்லாமலே வீடுகட்டி ,வாசல் வச்சி ,கிரகப்ரவசமே பண்ணிடும். நேத்து எப்படி சாம்பிள் கொடுத்துச்சு , பார்த்திள்ள..?..… ஒரு வேளை உன்னை கையை பிடிச்சு இழுத்தவ சூசைட் பண்ணிகிட்டா அப்புறம் போலீஸ் கேஸ் ஆயிடும்னு பார்த்தேன்.”

“இப்ப என்ன ஸ்னிகேர்ஸ் வேணுமா உனக்கு.…?..
பசி வந்தா நீ நீயாக இருக்க மாட்ட… லூசா மாறிடுவ தானே.”
சிடு சிடுத்தான் இளா.

“இல்லடா பெக்கிங் டக் போதும். அப்புறம் மத்ததெல்லாம் சாப்பிடுறேன். முதல்லயே ஸ்வீட் சாப்பிட்டா அப்புறம் சரியா சாப்பாட்ட சாப்பிட முடியாதுன்னு எங்க மம்மி ஸ்ட்ரிக்ட்டா சொல்லி ஃபயிங் டா.”

அதற்குள் சர்வர். “வெல்கம் டூ பான் ஏசியா,…யூவர் ஆர்டர் பிளீஸ்., வாட் டூ யூ வான்ட்…சார்?”

“இவன் வாயை ஒட்டுற மாதிரி எதாவது ஐட்டம் இருக்கா உங்க கிட்ட…?” – இளா.

சர்வர் சிரித்து கொண்டே ,
“நோ சார்.. அந்த மாதிரி டிஷ் எதுவும் நாங்க பன்றதில்லை சாரி சார்… “

கிருஷ் , இளாவை முறைத்து கொண்டே.., சர்வரிடம். , “அந்த மாதிரி டிஷ் என் பொண்டாட்டி பண்ணுவா எடுத்திட்டு வந்து தரட்டா…? “ கடுப்பாக கேட்டவன்…
“போங்க சார் போயி பெக் டக்கிங்கும்………”

“சார் அது பெக்கிங் டக் சார்…” சர்வர் திருத்த…..

“உங்க ஊரு தஞ்சாவூர் தான…?” சர்வரிடம் கிருஷ்.

“ஆமாம் சார் எப்படி கண்டுபுடிச்சீங்க…?”

“என் பொண்டாட்டி ஊரும் அதுதான்.உங்க ஊர்காரங்க டிஷ் பேர தப்பா சொன்னா…,அப்படியே பொங்கிடுவீங்களோ…,. ? பேர தப்பா சொன்னா என்னையா …? அதான் நான் சொன்ன டிஷ் உனக்கு புறியுதில்ல… போயி அந்த பெக் டக்கிங்கும்,
(அப்படி தான் சொல்லுவேன் என்று பார்த்தபடி ) டூ பிளேட் பான் கேக் ,ஸ்வீட் பீன் சாஸ்ஸும் எடுத்திட்டு வாங்க..”

சர்வர் போனதும்.
இளா , அவன் ஃபோனை கிருஷிடம் கொடுத்தான். “இந்தா டா பேசு…”
“யாருகிட்ட டா…?”

“ யாரோ ..தஞ்சாவூர்காரங்க லைன்ல இருக்காங்க பேசு…”

“அடப்பாவி ரோஜா வாடா….? அவளுக்கு எப்படா ஃபோன் பண்ணின…?”

“நீ கூட்டமா போயி ஏதோ ஒரு பொண்ணை கைய பிடிச்சு இழுக்கலாம்னு பிளான் போட்டியே.., அப்பவே பண்ணிட்டேன்…”

“போடா இவனே.., உன் தொங்காச்சி கிட்ட விசுவாசத்தை காட்ட இதுவாடா நேரம்….? அய்யோ நான் வேற வாய்ய ,வாட்டர் வாஷ் பண்ற அளவுக்கு அவளை கலாய்ச்சிட்டேனே …”

போனை வாங்கியவன்..,

“சொல்லுடா பேபிம்மா….”
….??….…..
“அய்யோ , உன்னை குண்டா இருக்கேன்னு சொல்லலடா… கும்முன்னு இருக்கேன்னு சொன்னேன்…”
……..
“அவரு பார்க்க நல்லவரா தெரிஞ்சாரு… சரி டிஷ் பெரு வேற கரெக்ட்டா சொன்னதும் உங்க ஊருகாரர்னு கண்டுபிடிச்சிட்டேன் டார்லிங்…”
…….
………..
“அய்யோ உன் சாப்பாட்டை மட்டும்தான் நான் வாயை மூடிக் கிட்டு சாப்பிடுவேன்னு சொல்ல வந்தேன்டா பேபி…”
…………
“சரி சும்மா கிண்டல் பண்ணினேன் டா..என் குட்டிம்மா. …லவ் யூ டா…. சரி மாமா சொன்ன வேலை என்னாச்சு ஆரா கிட்ட பேசினியா…?”லவுட் ஸ்பீக்கர்ரை ஆன் செய்தான்.
நேற்று வேலை பளுவில், ரோஜாவிடம் எதுவும் கேட்டிருக்கவில்லை.

“ இளா அண்ணனை பத்தி ஆரா கிட்ட பேசி, உன் வீட்டுல இழவு விழுந்திருக்கும்டா கிருஷ்.” – ரோஜா.

“ஏண்டி என்னாச்சு…? ஆரா தப்பா புரிஞ்சுசிட்டு , ஏதாவது டிரை பண்ணிட்டாளா டி…?”

“அட நீ வேற டா…
அவ சரியா.., தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு .., மாத்தி மாத்தி பேசி எனக்கு பிப்பீ வர வச்சிட்டா… கடைசியில மீ தான் என்னை அவ கிட்டயிருந்து மீட்டாங்க…”.

“நீ இளா கூட அவளுக்கு கல்யாணம் பண்றதை பத்தி அவ கிட்ட கேட்டியா…?”

“ம் …ம்.. கேட்டனே…. அவளுக்கு சிரிப்பு சிரிப்பா வருதுன்னு கடுப்பெத்துற மாதிரி காமெடி பண்றா கிருஷ்..”

“சரி கடைசியாக என்னதான் சொன்னா…?”

“சிங்கப்பூர் ல ஆடிக்கான்னு ஒரு நைட் கிளப் இருக்குதாம்… அங்க எல்லோரும் சேர்ந்து போயி கும்மாளம் போடுவோம்னு சொன்னா… டிரெஸ்ஸை எல்லாம் பேக் பண்ணிடட்டா…?”

“……அடிங்க……”

“எங்க அண்ணா கிட்ட இதை பத்தி பேசிட்டீங்களா..? அவரு என்ன சொன்னாரு…?”
“உன் அண்ணன் பக்கத்தில தான் இருக்கான். இதை பத்தி பேசதான் பான் ஏசியாவிர்க்கு அவனை வர சொன்னேன்..(.அட புழுகு மூட்டை ).. பேசிட்டு கூப்பிடிறேன் பை…”

“போனை கட் செய்து விட்டு ,இளாவிடம் எப்படியோ அவளை சமாளிசிட்டேன்… ஏண்டா உனக்கு இந்த கொலவெறி…?”

“நீ வாயை மூட மாட்டேனுட்ட..? அதோட ரொம்ப சந்தோஷமா வேற என்னை நீ கலாய்ச்சியா..? அதான் உன்ன தட்டி கேக்க ஒருத்தி இருக்கிறான்னு , அந்த ஒருத்திக்கு ,ஃபோனை தட்டினேன்… சரி ஆரா கிட்ட எதுக்குடா பேச சொன்ன…? பாவம்டா அவ…”

“என்னது ஆரா பாவமா…? பார்த்தீல்ல என் வீட்டு கட்டம்மா கதறுனதை…? உங்க ரெண்டு பேருக்கும் பாவம் பார்த்தா… நீ போடுற குண்டுக்கு , நான் எப்ப என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது….”

“அதுக்கு எதுக்குடா இப்படி ஒரு முடிவு..?”

“சரி ஆரா வை பத்தி அப்புறம் பேசலாம்… முன்னாடி நீ எதுக்கு என்னை பார்க்கணும்னு சொன்ன…? “

“எல்லாம் சிலுக்கு பண்ணின வேலைடா… ஆஃபீஸ்க்கே வந்துட்டா மச்சான்…”

“என்னடா சொன்னா அந்த ராங்கி…? அவளை…?”

“அவ எப்போதும் போல தான் உளறினா… ஆனா நான்தான் அவகிட்ட எக்ஸ்டிராவா உளறிட்டென்டா…”

“அப்படி என்னதான் சொன்ன…? “

ஆர்வத்துடன் கேட்டவன்.. ஆரா, கல்யாணம், அன்னியோன்யம், அழகா ஆறு பிள்ளைகள் சவாலை கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தான்…

“இப்ப எதுக்குடா சிரிக்கிற..?? பயம்மா இருக்குடா..?” இளா.

“நான் கூட உன்னை என்னமோ நெனச்சிட்டேன்… கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணினா , நீ புள்ள பெக்க பிளான் பண்ணியருக்க….அதுவும் ரொம்ப அட்வான்ஸ் ஸா ஆறு பிள்ளைகள்… ஃபேமிலி பிளானிங்கிரது இதுதானா..? அடேய் அயிட்டக்காரா…?”

“டேய் , நானே யோசிக்காமல் தப்பு தப்பா கோபத்தில் பேசிட்டோமென்னு ஃபீல் பண்றேன் நீ வேற.. போடா…”

“கோபத்தில் அடிச்சி ,திட்டி தானடா பார்த்திருக்கேன்… குழந்தை குழந்தைன்னு அவளுக்கு ஆறு குழந்தைய கொடுக்க டிரை பண்ணியிருக்க டா நீ காமக்கொடுரா…”

“போடா…. நான் கிளம்புறேன்…. எனக்கு மீட்டிங் இருக்கு… “

“இருடி … மாப்ள…இன்னும் அதுக்கு ஒரு மணி நேரம் இருக்கு…நீ பதில் சொல்லிட்டு தான் இங்கயிருந்து போகணும்…”

அதற்குள் ஆர்டர் செய்த உணவுகள் வந்து விட…

இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்… இளா மூஞ்சை உர்றேன்று வைத்திருந்தான்…

அதை பார்த்த கிரிஷிற்கு புரிந்தது… இளா ரொம்ப குற்ற உணர்ச்சியில் இருக்கிறான். ஆராவை பற்றி உள்ளுக்குள் இருந்த காதல் தான் அவனை அப்படி சீமாவிடம் சவால் விட வைத்திருக்கிறது , அதை அவனுக்கு புரிய வைத்துவிட வேண்டும்..என்று நினைத்தபடி…

“டேய் மாப்ள, உனக்கு ஆரா மேல உள்ளுக்குள்ள காதல் டா..
அதுதான் உன்னை சீமாகிட்ட அப்படி பேச வச்சிருக்கு… எங்க எல்லாருக்கும் தெரியும் ,நீங்க ரொம்ப அழகான ஜோடின்னு.. ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ,இன்னொருத்தர் பிறந்திருக்கீங்க டா… உன் நிம்மதி அவ கிட்ட தான் இருக்கு… அவளோட சந்தோஷம் உன்கிட்ட மட்டும் தான் இருக்கு.. இதை கூடிய சீக்கிரம் முழுசா ரெண்டு பேரும் உணருவீங்க…இப்போ அமைதியா சாப்பிடு மச்சான்.”

இளாவிற்கும் பிடித்திருந்ததோ… அமைதியாக உண்டவனின் மனதிற்குள்ளும் பேரமைதி.

சாஷா….

error: Content is protected !!