KanmaniUnainanKaruthinilNiraithen1

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

அத்தியாயம் – 1

ஒரு வாரம் ஏஜுகேஷனல் டூர் முடித்து மும்பையிலிருந்து நேராக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வந்தவள், அவளை அழைத்து செல்ல வந்த டிரைவர் சின்னச்சாமி யை கண்டதும்,

வீட்டிற்க்கு கூட போகாமல் அசோக் நகரில் இருக்கும் ஆசிர்வாத் கட்டிடத்திற்குள், காரை செலுத்த சொன்னாள் ஆராதனா.

“அந்த இளா என் கையில கிடைக்கட்டும் அவனை இன்னைக்கு இடியாப்பம் புழிஞ்சு சாப்பிடுடறேன்…”
பற்களின் ஊடே கோபத்தை கடித்து துப்பியவளை பார்த்த டிரைவர் சின்னசாமி,
“பாப்பா உங்களை பிக் அப் பண்ண சொல்லிட்டு , நீங்க வர்ற வரைக்கும்,போனில் அக்கறையா, நீங்க பத்திரமா வந்துட்டீங்களா, விசாரிச்சுட்டு தான் இருந்தார்மா தம்பி.”

“வேணாம் அங்கிள், நீங்க அவனுக்கு சப்போர்ட்டுக்கு வராதீங்க. , என்னைய தனியா மும்பை துரத்தி விட்டுட்டு அவன் ஜாலியா இங்க கும்மாளம் போட்டுருப்பான். ஊருக்குள்ள நான் வந்துட்டேன்னா, எங்க அவன் உசுருக்கு பங்கம் வந்திடும்மோனு, உஷாரா இருக்க, போனை போட்டு விசாரிச்சுருப்பான் உங்க கிட்ட.”

காரை விட்டு இறங்கியவள், டிரைவரிடம் சொல்லிவிட்டு செல்ல,
“இதுங்க அடிச்சிக்கிறத இன்னைக்கு நேத்தா பாக்குறோம். நல்ல புள்ளைங்க…” சிரித்து கொண்டே வெளியில் நின்று கொண்டார்.

கொடூரமாய் அவனை கொலை பண்ணும் மோடில்,
டங் டங்க் டான் சொர்ணாக்கா நடையோடு ஆசிர்வாத்திற்குள் நுழைந்தாள் ஆராதனா.

கேபினில் எழுதியிருந்த,
இளமாறன் , மெனேஜிங் டைரக்டர் ஆஃப் ஆசிர்வாத் குரூப்ஸ்.
பார்த்ததும்…, மாறனாம் மாறன் , பேரை பாறேன்.. வெவ்வ்வே,… பழுப்பு காட்டி,

திட்டியபடி கேபினுக்குள் செல்லும் முன் ,
“எக்ஸ்கியுஸ் மீ ”
பெண் குரல் தடுத்தது.

‘எவ அவ?’ லுக்குடன் திரும்பிய ஆராதனா ஒரு புதியவள் அங்கிருந்ததை அப்போதுதான் கவனித்தாள் .பெண்களுக்கான பிரத்யேக ஃபார்மல் டிரசும் அவளுடைய அதீத மேக்கப்பும் அவளை பி ஏ என்று சொன்னது.

“ எஸ்” ,என்றபடி நோக்கிய ஆராதனாவிடம்

“ஐ எம் மாலினி , எம்டி சாரோட பீ ஏ… வாட் கேன் ஐ டூ ஃபார் யூ.”

“நீங்க எதுவும் டூ’ வ வேணாம் மேடம். நான் உள்ள போயி எல்லாத்தையும் டூயிக்கிறேன்.” சொல்லிய ஆரா,

திரும்பி அவள் கோபத்தை, வெளியில் இருந்த பெயர் பலகையில் காட்டியவளாக,

“மவனே , உனக்கு போர்டு ஒரு கேடு.”
இடையில், ஹைட் பிராப்ளம் குறுக்கிட, எம்பி இளமாறன், பெயரில் குத்தி,
“ மவனே… ஏக் மாறா …மே அந்தர் ஆரா , ஆப் தோ துக்கடா…சாலா…” முணுமுணுத்தாள்.
விந்தி விந்தி ஹிந்தி பேசினாலும் ,அவளும் மும்பை லாம் போனால்ல, கத்துக்கிட்ட நாலு வார்த்தை ஹிந்திய காட்ட வேணாமா…?

‘மேனர்ஸ் தெரியாத பொண்ணா இருக்கும் போலயே…’
அவளின் செயலில் முகம் சுளித்தவளாய்,
“மேடம், கொஞ்சம் இருங்க,உங்க கிட்ட சார பார்க்க அப்பாயின்மெண்ட் இருக்கா?” என்றாள்.

“நோ…. ஐ டோண்ட் ஹாவ்”, என்க .

“அப்ப சாரி நீங்க இளமாறன் சாரை பார்க்க முடியாது.” – பதிலளித்தாள் மாலினி.

“ஐ வான்னா சீ ஹிம் நௌ.”
பிடிவாதம் பிடித்தவளிடம்,

“என்ன விஷயமா பார்க்கணும் நீங்க.?”.

“ஏன் நான் அப்பாயின்மெண்ட் வாங்கித்தான் அவனை பார்க்கணும்னு உள்ள உக்கார்ந்திருக்கிறவன் சொன்னானா.?”

“ஹலோ… யாருங்க நீங்க..? சும்மா எங்க எம் டி யை பார்த்து அவன் இவன்னு சொல்றீங்க. அவரு எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா…?”

“ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாலும் வீட்டுல அவன் துடைப்ப கட்டை அது தெரியுமா மாலினி…உங்களுக்கு.? சீ… எனக்கு உங்க கிட்ட வெட்டி நியாயம் பேச நேரம் இல்லை. ஐ வாண்ணா சீ ஹிம் நவ்வ்..” பல்லை கடித்தாள் ஆரா.

“அதுக்குத்தான் கேட்டேன் எதுக்கு நீங்க இவளோ அவசரமா பார்க்கணும்னு …?”
உதடு பிதுக்கினாள் மாலினி. உன்னை உள்ள விடவே மாட்டேன். என்ற உறுதி அதில் இருக்க,

அவ்வளவுதான் விழித்து கொண்டது ஆராவிற்க்குள்
தூங்கி கொண்டிருந்த பிசாசு.

“எனக்கு காலையிலிருந்து ஒரே
வயித்தெரிச்சல் அதான் உங்க சார் கிட்ட கேட்டு கொஞ்சம் மோர் வாங்கி குடிக்கலாம்னு வந்தேன்.
அவர்கிட்ட கேட்டு சொல்றீங்களா?”

அவளை முறைத்தபடி,
“வெயிட் பண்ணுங்க கேட்டு சொல்றேன்.”
‘மைண்ட் வாய்சில், யார் கிட்ட, எங்க சாருக்கே மோரா, கிங்பிஷெருக்கே பீரா…. ? நீ எல்லாம் ஒரு பச்சா மா.’

என்றபடி இன்டர்காமில் அழைத்து கொண்டே , அவன் கேபினின் ஒரு பக்க கண்ணாடி வழியே இளா என்ன செய்கிறான் என்று பார்த்தாள் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமே ஆன மாலினி.

இளமாறன் டேபிளில் சாய்ந்தபடி யாருடனோ செல்லில் பேசி கொண்டிருக்கவும், ‘ஒவ்வொரு போசிலயும் இம்ப்ரெஸ் பன்றானே….’ , பெருமூச்சுடன் அவன் ஃபோன் எடுப்பதற்கு காத்திருந்தாள்.

அதற்குள் எதிரில் இருந்தவள்,
“ஹலோ மேடம், என்ன போகலாமா உள்ள?
ஆராதனா வந்திருக்கேன்னு தெளிவா சொல்லுங்க உங்க எம் டி கிட்ட” .

“வெயிட் பண்ணுங்க , ஆ…ரா….த…னா……”..
‘பேரைப் பாரு’ முனகியபடி காதுக்கு ரிசீவரை மீண்டும் பொருத்தி ஆராவை ஆராய தொடங்கினாள் மாலினி.

மாநிறத்தில் வழு வழு இந்திய சருமத்துடன் கூர்மூக்கு,
லிப் பாம் பூசி மின்னும் உதடுகள், பெரிய விழிகளில் மை மட்டும் தீட்டியிருந்தாள். காதில் ப்ளாக் மெட்டல் ஜிமிக்கி அதற்கு மேலே இன்னும் குட்டி குட்டி ஸ்டட்ஸ் இரண்டு வேறு போட்டிருந்தாள்.

களம்காரி ஒர்க்கில் இடுப்பில் கட்டியிருந்த இராப் அரவுண்டு லாங் ஸ்கர்ட்டும் அதற்கு மாட்சாக முழங்கை வரை அணிந்திருந்த கருப்பு நிற ரோல் அப் ஸ்லீவ் ஷார்ட் டியூனிக்கும் அவளின் சற்றே கொழுக்மொழுக் உடலமைப்பிற்கு பொருத்தமாக இருந்தது.
‘என்ன ஒரு நாலடி உயரம் இருப்பாளா ? குள்ள கத்திரிக்காய்..’

ஆராய்ச்சியின் முடிவில் எதுவோ அளித்த பொறாமை இருபத்திஇரண்டு வயது ஆராவின் புசு புசு குட்டி பெண் தோற்றத்தை நக்கலடித்தது.

அதற்குள் நம்ம ஹீரோ ஃபோனை அட்டெண்ட் செய்துவிட ,

“சார் உங்களை பார்க்க ஆராதனான்ற பொண்ணு வந்திருக்காங்க. அப்பாய்மெண்ட் இல்ல, ஆனா எடக்குமடக்கா பேசி பிடிவாதம் பிடிக்கிறாங்க சார். அதோட, மேனர்ஸ்க்கு மீனிங் என்னன்னு கூட தெரியாது போல சார்.” கடைசி வரியை ரகசியமாய் சொன்னாள்.

அந்த பக்கம் அவனளித்த பதிலில் ‘அப்படி சொல்லுடா என் செல்ல குட்டி’
என்று குஷியானவள்,

“ஓகே சார்” என்றபடி,.

ஆராதனா விடம் “ஸார்க்கு டைம் இல்லையாம் உங்களை போக சொன்னாரு.”

‘யார்கிட்ட எங்க கிட்டயேவா? பார்த்தீள்ள எங்க பாஸ்ஸை…’ என்ற விதத்தில் எள்ளி நகையாடியது மாலினியின் குரல்.

“உங்க சாருக்கு டைம் இல்லையா? இல்ல டயமே சரி இல்லையான்னு இப்ப தெரியும்..” .

வெறியோடு கேபினுக்குள் நுழைந்த ஆரா, சீட்டில் அமர்ந்து சிரித்தபடி

“ஓய்… லட்டு…எப்ப வந்த, ?”

இளமாறன் கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே அவன் மேல் பாய்ந்து கீழெ தள்ளி குமுற தொடங்கியிருந்தாள். அதிரடி தாக்குதலை கண்டு சுதாரித்து கொண்டவனாக, அவள் கைகளை இறுக்கி பிடித்துக்கொள்ள ,
“ கொய்யால யாருக்கிட்ட?”,
இப்போது சராமாரியாக காலால் உதைக்க தொடங்கினாள். எவ்வளவு ஃபோர்ஸ் கொடுத்தும், சிரித்தபடியே சமாளித்த இளாவின் முகம் கடுப்பேத்த,
அவன் விலாவில் இருந்து காலை எடுத்து உதைக்க ஆவேசமாக கிளம்பியவளின், அடுத்த டார்கெட்டை உணர்ந்தவன்..,
“ அய்யோ… ஏய் இட்லி குன்டான்… என் குடும்பத்துக்கு நான் ஒரே வாரிசுடி எனக்கு வாரிசு இல்லாம பண்ணிடாதடி. சாக்லேட் ஒரியோ வாங்கி தரேன்… ”
அவள் கையை விடுவித்து கொண்டு தலையால் முட்டினாள்..

“ஏய் வலிக்குதுடி ஆ ..ஆ ! எருமை”.

அவன் கையையும் காலையும் லாக் செய்திருந்தாலும், “என்னது நான் எருமையா , இந்தா வாங்கிக்க, எருமை இப்படித்தான் பண்ணும்”, தோளினால் இன்னும் மோதி தள்ளினாள்.

“காட்டெருமை யொட சண்டை போட்டு ஜெயிக்க நான் என்ன பாகுபலி ராணா வா… பாவமான இளமாறன்டி”.

“யாரு நீ பாவமா…? என்னைய அனுப்பிட்டு ஒரு போனாவது பண்ணினியா, ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் கூட அனுப்ப முடியல…நான் அனுப்பினாலும் ரிப்ளை இல்ல, போ , எனக்கு கோபம் தீர்ற வரை நான் அடிப்பேன் தான். மரியாதையா வாங்கிக்க, இல்லைன்னா கூலிப்படை வச்சு அடிப்பேன்,”

“சித்தெறும்பை நசுக்க கூலிபடையா..?நம்ம ஆஃபீஸ் ஸ்டாப்ஸ் எல்லோரும் பார்க்கிறாங்கல . ஒரு உயர் அதிகாரிய அடிச்ச பாவம் உனக்கு வேண்டாம்… விட்டுடி…
வீட்டுக்குள்ள வச்சு குமுறு குமுறு னு குமுறுவியாம். ஏன்னு கேக்காம எல்லாத்தையும் வாங்கிப்பேனாம். பிளீஸ் டா லட்டு.”

இன்னும் கோபம் அடங்காமல் , “உன்னை பார்க்க எனக்கு அப்பாயின்மெண்டு வேணுமா …?
புதுசா ஒருத்திய வாசலில உட்கார வச்சிருக்கியே, டபுக்கு டபுக்குண்ணு தலைய வெளில நீட்டிக்கிட்டு, உன் கேபினையே எட்டி எட்டி பார்த்துக்கிட்டு , ஒரு ஆமை வடை , அவ சொல்றா.” – ஆரா.

“அடிப்பாவி அவ ஆமை வடையா…?” வயிறை பிடித்து சிரித்தவன்,

“ அவங்க மாலினி , நம்ம ஜீ எம் மோட பீ ஏ வேலைக்கு புதுசு . செகரெட்டரி ஷோபனா மெட்டர்நிட்டி லீவில இருந்து வரும் வரை இங்கதான் இருப்பாங்க…”

“ புதுசா, அதான் தெரியல இந்த ஆராவை…சொல்லி வை இளா.அடுத்த டைம் குறுக்க நின்னா, முதல் கடி அந்த பீ ஏக்கு தான்.”.

“ சரி சொல்லிடுறேன், இங்க வந்து உட்காரு. எப்படி வேர்த்து இருக்கு பாரு.”
என்று அவளது வியர்வையை அவனது ஹான்கீயால் துடைத்து விட்டபடி எக்சிகியுட்டிவ் சேர் சீட்டில் அமர்ந்து ஆரா வை சேர் கைப்பிடியில் அமர்த்தி ,

“இப்ப சொல்லு எப்படி இருந்தது உன் டூர்?.”

“ஏன் சுமாரா இருக்குன்னு சொன்னா , திரும்ப டிரெயின் ஏத்தி விட்டு அம்போன்னு துரத்தி விடலாமுண்னு பார்த்தியா..?”
மீண்டும் முறுக்கி கொண்டவளை பார்த்து சிரித்து
கொண்டிருந்தான் இளா. நிமிர்ந்தவன்,

‘ஆ ..!’ வென்று வாயை பிளந்தபடி அங்கே நின்றிருந்த மாலினியை அப்போது தான் பார்த்தான்.

மாலினி வந்த நாளில் இருந்து அவனை சைட் அடித்து கொண்டிருப்பது தெரியும். அதனாலேயே ,அவளிடம் எக்ஸ்ட்ரா கடுமை காட்டுவான்.

அவளின் அதிர்ந்த தோற்றம் சிரிப்பை வரவைக்க, குறும்பாக “என்னடி ஒரே புகை. எதையாவது பத்த வச்சிட்டியா லட்டு.? என்று கேட்டபடி சுற்றும் முற்றும் பார்க்க , விஷயம் தெரியாத ஆராவும் சுற்றி துழாவியபடி,

“இல்லையே. உன் தலையில் தீ வைக்கிற ஐடியாவில் தான் வந்தேன். ஆனா மேச் பாக்ஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன்.” சொல்ல,

“அடிப் பாதகத்தி” இளா.

திடீரென்று ஓட துவங்கிய ஆராவை துரத்திய படி வந்தவள், அங்கு நடந்த கூத்தை பார்த்து அப்படியே அதிர்ச்சியில் கேபின் வாசலிலேயே நின்றுவிட்டாள்.

‘இளமாறனை பார்த்து, இந்த பூனையும் பால் குடிக்குமா ? போல மூஞ்சை வச்சிகிட்டு பால் பூத்தையே மொத்தமா காலி பண்ணுவான் போலிருக்கே.. உனக்கு
இப்படியெல்லாம் கொஞ்ச தெரியுமா ராசா?

சரியா சர்வீஸ் பண்ணாத புல்லட் மாதிரி, உர் உர்ருண்ணு மூஞ்சொட, ஒன்னு ரெண்டு எழுத்து பிழைக்கே, நீ பொறந்ததே பிழைன்னு எங்களுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளை அர்ச்சனையா அள்ளி தெளிப்பியே இளமாறா ?.

இப்படி சிக்கி சின்னாபின்னமாகியும் பக்கி போல சிரிச்சுட்டு
இருக்கியே என் தங்கம் ?’ அவளோட கிரஷை கொஞ்சவும் முடியாம, திட்டவும் முடியாம மனதினுள் ‘கொ’த்திட்டு லுக்கியவளை..,

“மாலினி , இவ ஆராதனா என் மாமா பொண்ணு ,” என்று
இன்ட்ரோ கொடுக்க ஆரம்பிக்க, “ஃபிரீஸர்ல ஐஸ்கிரீம் வைக்கலையா இளா”, என்று ஆரா குறுக்கிட,

ஒரு வழியாக கையசைத்து , மாலினியை அனுப்பி வைத்து விட்டு ஆராவிற்கு ஐஸ்கிரீமை எடுத்து கொடுத்தான்.…,

“ஏன்டி, அடி அடின்னு அடிச்சுட்டு ஐஸ் கிரீம் கேக்குறியெடி..?”

“ஐஸ்கிரீமை கொடுத்து எஸ்ஸாகுலாமுன்னு நினைக்காத, ரொம்ப பசி அதான் தப்பிச்ச, நான் தின்னு முடிச்சு வரும் போது, ஏன் என்கிட்ட பேசாம டிமிக்கி கொடுத்த நீயின்னு சொல்லணும். இல்லைன்னா, என்கிட்ட பேசாத உன் போனும் , என் குயில் குரல் கேட்காத உன்னோட காதும் ஏன் இருக்கணும்னு உன் ஃபோனில் பாம் வச்சு ,ஒரே நேரத்தில் ரெண்டையும் காலி பண்ணிடுவேன் பார்த்துக்க.”

“அடிங்க, ராஸ்கல், விளையாட்டை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு, ஒரு உடம்பு சரியில்லாத குழந்தைய அடிக்கிறியே..?அந்த குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா உனக்கு யாரு வேளா வேளைக்கு பார்த்து பார்த்து, பூவா தருவா..? ”.
உண்மையை சொன்னா ஊற வச்சு அடிப்பான்னு உடம்பு சரியல்லைன்னு பொய்யை சொல்ல,…
உன்னைய பார்த்தா நம்பவே முடியலை….யே ஆராவிற்க்கு டவுட்.

எப்போதும் மந்திச்சு செயல்படும் ஆராவின் ஆறாவது அறிவு அதிரடியாக ஆன் ஆனதில், இளாவிர்க்கு மண்டை காய்ந்தது.

“இது வரைக்கும், உன்னை விட்டுட்டு இப்படி இருந்திருக்கேனா…? என்னைய போயி டவுட்டா பாக்குறியே லட்டு, எனக்கு ரெண்டு நாளா ஃபீவர். உன்கிட்ட சொன்னா நீ எப்படி அங்க நிம்மதியா இருப்ப, உடம்பு முடியாததொடயே ஒரு எக்ஸ்போர்ட்டர்ஸ் கான் ஃப்ரன்ஸ், வேற அட்டெண்ட் பண்ணினேன். .
ரொம்ப வேலை . இப்ப கூட சாப்பிடாமல் தான் வேலைய பார்த்திட்டு இருக்கேன். காலை லயும் பிரேக் பாஸ்ட் சாப்பிடல தெரியுமா..?. நீ இல்லாத வீட்டில் வெறிச்சோடி பார்க்கமுடியாம , வெறும் வயிற்றில் வந்துட்டேன்டா லட்டு.” என்று அள்ளி விட்டான்.

இருந்தாலும் மனதிற்குள் குற்ற உணர்வு குறு குறுக்க,, ஒரு நிமிடம் ஃபிளாஷ் பேக் ஓடியது,
காலைல ஏழு மணிக்கே டையனிங் டேபிளுக்கு வந்து உட்கார்ந்தவன்,
“காட்டெருமை தொல்லையில்லாமல் நிம்மதியாக சாப்பிட்டு என்ஜாய் பண்ற ஆஃபர்க்கு இன்னைக்கு காலையோட வேலிடிட்டி முடியுது. சென்னைய ஆபத்து வேகமா நெருங்கி கிட்டு இருக்கு… சீக்கிரம் இன்னும் கொஞ்சம் கார சட்னி ஊத்துங்க ஆயா” என்று சொல்லி, அவர்கள் வீட்டு சமையல்காரர் அம்மா வடிவிடம் கேட்டு கேட்டு , எட்டு இட்லியும் , மூன்று முறுகல் தோசையும் முழுங்கி இருந்தான்..

மீண்டும் நடப்புக்கு வந்தவனாக, முழுப் பொய்யையும் முறுகல் தோசையில் மறைத்த மாறன். ‘ஒர்க் அவுட் ஆச்சா….?’
, ஓரக் கண்ணால் அவளை பார்க்க ,
ஆராவின் முகம் குழைவதை கண்டதும்.
எஸ்! எஸ்! என்று முழங்கையால் மனதிற்குள்ளேயே வெற்றி குறி போட்டு விட்டு முகத்தை பாவமாக வைத்து கொண்டான்.

“இளா நீ இன்னும் சாப்பிடல யா? எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ ஏன்டா இப்படி பட்டினி கிடந்து உடம்ப கெடுதுக்குற? பட்டினியா கிடக்கிற பரம்பரையாடா நாமெல்லாம்…? புடுங்கித் தின்னாவது வயித்தை நிரப்பிடனும். சோறு முக்கியம் மாறா…”

“சரி வா சாப்பிடலாம்” என்று அவனுக்கு ஹாட் பாக்ஸில் பேக் செய்யப்பட்ட உணவை பிரித்து தட்டில் வைத்து விட்டு, அவன் பக்கத்திலேயே பச்ச புள்ள போல மூஞ்ச வச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டா நம்ம ஆரா.

‘டிரெயின்லயே லஞ்சை முடிச்சு, டெசர்ட்டுக்கு ஐஸ்கிரீமை யும் முடிச்சுட்டு, இப்ப மறுபடியும்! முதல்ல இருந்தா,’

அவள் முகத்தை பார்த்த இளமாறனுக்கு சிரிப்பை அடக்கமுடியாமல்,

“இப்படி நீ புட் பாண்டாவா இருக்கிற வரைக்கும், ஒரு பொய் என்ன ..? ஓராயிரம் பொய் சொல்லி சமாளிப்பென்டி உன்னை,” சாதத்தை பிசைந்து அவளுக்கு ஊட்ட,

“உண்மையிலேயே பொய் சொன்னியா நீயி…?” அடிக்க போனவளிடம்,

“உடம்பு சரியில்லைன்னு சொன்னதும் மட்டும் தான் பொயி, மத்தபடி நான் பிஸி பிசினஸ் மேன்டா லட்டு, இந்தா ஆ காட்டு”, மீண்டும் ஊட்ட போனவனிடம்,

“போ. உன் கையால பச்ச பாணி கூட, நான் இனி குடிக்க நஹி டா..” முறுக்கி கொண்டாள். ஆரா.

“ அதான் தெரியுதே… எவ்வளவு நேரம் தாக்கு பிடிப்பன்னு பார்ப்போம்,…ஹிந்தி லாம் அள்ளுது…”

“நாங்களும் மும்பைக்குலாம் போனோம்.” வாய் கோபத்தில் கொணியது.”

சிரித்தபடியே சாப்பிட ஆரம்பித்தான் இளமாறன்.

உணவைப் பிரித்ததும் வாசம் , மூக்கைத் தொட,

“இளா அது என்ன உருளை கிழங்கு வருவலா…?
யப்பா…! வடிவு ஆயா சாப்பாட்ட சாப்பிட்டு எத்தனை நாளாச்சு…?
மும்பைல ரொட்டி, தாலை தின்னு தின்னு, என் நாக்கு செத்து போச்சி. நாக்கை நாலா மடிச்சு அங்கேயே அடக்கம் பண்ணிட்டு தான் வந்தேன். நான்தான் டிரெயின்லயே லஞ்ச் சாப்பிட்டுட்டேனே… பரவாயில்ல நீ சாப்பிடு. உனக்கு தான் என்னை பத்தி கவலையே இல்லையே, .”..– ஆரா.

‘அதானே பார்த்தேன்.’

சிக்னல் கிடைத்ததும் , “சரி சாரி லட்டு…, நீயும் தனியா உலகத்தை பார்க்கணுல, எவ்வளவு நாளு என் கைபிடிச்சும் என் கண் பார்வையிலும் இருப்ப, அதான் நீ இண்டிபெண்டெண்ட்டா இருக்க கொஞ்சமா ஒதுங்கி இருந்து பார்த்தேன். கோபத்தை சாப்பாடில் காட்டாம ஒரு வாயாவது சாப்பிடு லட்டு” என்று இளா மீண்டும் ஊட்ட முயன்றான்., இதுவரை ஒளிவு மறைவு இல்லாமல் வாழ பழகியதில், கொஞ்சம் உண்மையை கூறி விட்டான் இளா.

“ஒதுங்கியே இருந்துக்கொ. நான் உன்னை டிபெண்ட் பண்ணி இனி தொந்தரவு செய்யல, இந்தி பண்டிட்டா மும்பைக்கு போயிடுறேன். மிஸ்டர் இளமாறன்.”

நாற்காலியின் கைப்பிடியில் இருந்து கோபமாய் இறங்கி கொண்டவள், செல்ல,

“நில்லு லட்டு ,சாரி … பிளீஸ் , தப்புதான்…”

இளா கெஞ்சி கொண்டிருக்கும் போதே டேபிளில் இருந்த உணவை தானாக அள்ளிப் போட்டு தின்ன ஆரம்பித்தாள்.

இதுதான் ஆரா.

அவளைப் பொறுத்த வரை, ரோஷம் கோபம், நேஷன்னா, சோறு தான் இமோஷன்.

அவனுடைய உணவில் முக்கால் வாசி சாப்பாடு தீர்ந்தும் முடிப்பதாக இல்லை.
“இதானாடி உன் டக்கு .” குபீர்ன்னு சிரிக்க ஆரம்பித்தான்.

சாஷா……