Kathiruntha kathaladi 12

Kathiruntha kathaladi 12

12

ஹர்ஷி மயங்கிச் சரிந்ததும் அதிர்ந்தவர்கள் அவளை மருத்துவமணை தூக்கிக் கொண்டு ஓடினர். டாக்டர்கள் அவளை உள்ளே பரிசோதித்துக் கொண்டிருக்க மற்ற மூவரும் வெளியில் தவிப்புடன் காத்திருந்தனர்.

தர்ஷி இரு கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, ஆதி சுவரோரமாய் சாய்ந்து நின்றிருந்தான். ஆருஷ், கதவில் இருந்த அந்த சிறு இடைவெளியில் உள்ளே படுத்திருந்த ஹர்ஷியை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பரிசோதனை முடிந்து மருத்துவர் வெளியே வந்தார். “டாக்டர், ஹர்ஷி எப்படி இருக்கா?” ஆருஷ்

தர்ஷியும் ஆதியும்கூட அருகில் வந்து அவரையே பார்த்திருக்க, “நீங்க?” என அவர்கள் பேஷன்டுக்கு யார் எனக் கேட்டார்.

“நான் சிஸ்டர், இவங்க ரெண்டு பேரும் ஃபேமிலி ஃபிரண்ட்ஸ்” என அறிமுகப்படுத்த, ஆதி தன் பிஸினஸ் கார்டை நீட்டி அறிமுகம் செய்து கொண்டான்.

“பேஷன்டோட பேரன்ட்ஸ் வரலயா?” அடுத்த கேள்வி கேட்க, “அவங்க வீட்ல இருக்காங்க, நாங்க வெளில வந்திருந்தோம், வந்த இடத்துல இவ மயங்கிட்டா” என கூறினாள் தர்ஷி.

“ஓ” என புருவம் தேய்த்தவர், “சரி என்னோட கேபினுக்கு வாங்க” என முன்னேச் செல்ல மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு பின் தொடர்ந்தனர்.

மூவரும் வந்ததும், “பேஷன்டோட பேர் ஹர்ஷி, ரைட்” என கண்ணாடியைச் சரிசெய்தவாறு கேட்க “ஆமா டாக்டர், எனி ப்ராப்ளம்?” என தர்ஷி கேட்டாள்.

“ம், அப்படிதான் தோணுது! அவங்களுக்கு தலைல அடிபட்டு ட்ரீட்மெண்ட் பண்ணீங்களா?”

“நோ டாக்டர்! ஆனா ” என்று நிறுத்தியவள் ஆரூஷை பார்த்து மீண்டவாறு, “அவளுக்கு வேற ஒரு ப்ராப்ளம்” என்றவள் ஹர்ஷியின் மனநிலை பாதிக்கப்படது. அதற்கு எடுக்கப்பட்ட சிகிச்சை அனைத்தையும் கூறினாள்.

அனைத்தையும் கவனமுடன் கேட்டவர் “ஓ, நான் நினைச்சது சரி அவங்க உடல் எதுக்கும் ரெஸ்பான்ட் பண்ண மாட்டிங்குது! அதான் என்ன பண்றதுன்னு தெரியல” என நிறுத்தினார்.

“டாக்டர் ரெஸ்பான்ட் பண்ணலன்னா கோமா மாதிரியா” ஆருஷ் பதற்றமாக கேட்க,

“நோ நோ கோமா இல்ல, ஆனா, சீ! நாம பண்ற ட்ரீட்மென்ட்ட அவங்க பாடி அக்செப்ட் பண்ணாதான் ரெகவர் ஆக முடியும். இதுதான் அங்க பிரச்சனை. அவங்க உடல் எதுக்கும் ஒத்துழைக்க மாட்டிங்குது. கரெக்டா சொல்லனும்னா நௌ ஷி ஈஸ் இன் டீப் ஸ்லீப்பிங்” என நிறுத்தினார்.

“டாக்டர் அப்ப உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல்ல” ஆதி

“அப்படியும் சொல்ல முடியாது, எதுக்கும் நீங்க அவங்களோட ரிப்போர்ட்ஸ் எடுத்து வாங்க, அப்படியே அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் யாருண்ணு சொல்லுங்க நான் அவங்ககிட்ட பேசறேன்” என முடித்துவிட்டார்.

மூவரும் பேயறைந்தது போல வெளியே வந்தனர். மூவருக்கும் இருந்த எண்ணம் இதுதான் ‘ அவசரப்பட்டு விட்டோமோ!’

தர்ஷி தந்தைக்கு அழைத்து மேலோட்டமாக விபரம் சொல்லி, ஹர்ஷியின் ரிப்போர்ட்ஸ் எடுத்து வருமாறு கூறினாள். அவர்களை நினைத்து ஆத்திரமாக வந்தது. ஹர்ஷியின் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் அவர்கள்தானே!

ஆருஷ் தன்னால்தான் இப்படி என உள்ளம் குமைந்து போனான். காதல் என்ற பெயரால் இரண்டாம் முறையாக அவள் உயிருக்கு போராட வேண்டுமா? என தளர்ந்து அமர்ந்து விட்டான்.

தர்ஷி அழுது கொண்டிருக்க, ஆதி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஹர்ஷியின் பெற்றோர் வர, அவளின் ரிப்போர்ட்ஸ் ஆராயப்பட்டது. அவளுக்கு மருத்துவம் செய்த மருத்துவரை பல மணி நேரங்களுக்குப் பின் தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறப்பட்டது.

அடுத்த சில மணி நேரங்கள் பரபரப்பாய் கழிந்தன. இன்னும் ஹர்ஷியின் பெற்றோருக்கு இவன் ஆருஷ், மகளின் காதலன் எனத் தெரியாது. யாரோ ஒருவன். ஆதியின் நண்பன் என்ற ரீதியில் மட்டுமே கண்டனர்.

தர்ஷியைத்தான் மருந்துகளை கொடுக்காமல் விட்டதற்காக கடிந்து கொண்டனர். ஆதியை எதுவும் சொல்ல முடியாத பாட்டிற்கு அமைதி காத்தனர்.

ஆனால் ஆருஷோ அவர்களைக் கண்டதும் வந்த அத்தனை ஆத்திரத்தையும் சூழ்நிலைக் கருதி அடக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

‘ஆனால் அவர்கள் வெறும் அம்புதானே! ஹர்ஷியின் இந்த நிலைக்கு காரனம் நீதான்! உன்மேல் கொண்ட காதல்தான். அப்படி தண்டிப்பது என்றால் உன்னை நீயே தண்டித்துக் கொள்’ என மனம் வாதம் செய்ய, ‘ஆமாம் என்னாலதான் என்னோட ஹர்ஷிக்கு இந்த நிலை. அப்பவும் சரி, இப்பவும் சரி! ஏன்டி! என்மேல இத்தன காதல் வச்ச? சேரவும் முடியாம, இப்ப எட்டி நின்னு பாக்கவும் முடியாம நரக வேதனையா இருக்கே! வந்துடு ஹர்ஷி! இத்தன நாள் எப்படியோ ஆனா இனியும் உன்னைப் பிரிஞ்சு என்னாலமுடியாது. சாகாம இருப்பேனே தவிர வாழமாட்டேன்!’

‘பார்த்தியா இப்பவும் உனக்காக மட்டுமே பாக்கற, உன்னைப் பார்த்ததுக்கே இப்படி வந்து கெடக்கறா, திரும்பவும் உன்னை பாத்து அவ சாகனுமா?’

‘அடக் கடவுளே! இதை எப்படி மறந்தேன். வேண்டாம், என்னோட ஹர்ஷிக்கு நான் வேண்டாம். இனி நான் அவ கண்ணுல படக் கூடாது. போயிடு ஆருஷ் அவ இனியாவது சந்தோஷமா வாழனும். காதல்ங்கற பேர்ல அவள சாகடிச்சுடாத’

ஆருஷ் உறுதியாக எண்ணினான், இனி அவள் கண்ணில் படக்கூடாது என்பதை. ஆனால் இப்போது அவள் சரியாக வேண்டுமே என மனம் அடித்துக் கொண்டது.

மருத்துவர் மீண்டும் அவர்களை அழைக்க, ஐவரும் சென்றனர். ஹர்ஷியின் பெற்றோர் கூட இவன் யார்? ஏன் இன்னும் இங்கு இருக்கிறான்? என நினைத்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

“நீங்கதான் பேஷன்டோட பேரன்ட்ஸா”

“ஆமாம் டாக்டர்”

“ஏன் நீங்க பேஷன்ட்டுக்கு இப்படி ஒரு ட்ரீட்மென்ட் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“அவளோட லவ்வர் இறந்துட்டான்னு இவ பைத்தியம் மாதிரி ஆகிட்டா டாக்டர், அதனாலதான் டாக்டரோட சஜெஷன் படி இந்த ட்ரீட்மென்ட் பண்ணோம்”

இதைச் சொல்லும்போது கொஞ்சம்கூட நெஞ்சம் குறுகுறுக்கவில்லையா! என தர்ஷியும் ஆதியும் அருவருப்பாக பார்த்தார்கள் என்றால், ஆருஷோ விரக்தியாக ஒரு புன்னகையை சிந்தினான். ‘உண்மையாகவே நான் இறந்திருக்கலாம்!’

“ம், இப்படி இதுக்கு முன்னாடி மயங்கியிருக்காங்களா?”

“நோ டாக்டர்”

“ஓ, ஆனா டாக்டர் சொல்றபடி பார்த்தா! அவங்களுக்கு இத்தன வருஷம் இல்லாம இப்ப இந்த மாதிரி ஆகுதுன்னா, தன்னோட பழைய நினைவுகள தூண்டற மாதிரி எதையோ கண்டிருக்காங்க, கேன் யூ கெஸ் என்ன அது? அது தெரிஞ்சா யூஸ்ஃபுல்லா இருக்கும்”

மயான அமைதி அங்கு, ‘அப்போ என்னால்தான் இப்படியா?’ என துடித்த ஆருஷ் தன்னுடைய பிரிந்து செல்லும் முடிவை உறுதியாக்கினான்.

“எனக்கு தெரியும் டாக்டர்” என்ற தர்ஷி அனைவரையும் பார்த்தவள் ஆருஷிடம் சம்மதம் கேட்க, தலையசைத்தான் சம்மதமாக.

“இவர் ஆருஷ். இறந்துட்டதா சொல்லப்பட்ட ஹர்ஷியோட லவ்வர். இவரப் பார்த்துதான் ஹர்ஷி மயங்கினா”

டாக்டர் குழப்பமாக பார்த்தார். தர்ஷி கடகடவென நடந்ததைக் கூற, அவள் பெற்றோரோ கடுகடுத்த முகத்துடன் ஆருஷை பார்வையால் எரித்தபடி அமர்ந்திருந்தனர்.

இவற்றைக் கேட்டப்பின் டாக்டர் திட்டித்தீர்த்து விட்டார் அவள் பெற்றோரை. “ஏங்க நீங்க படிச்சவங்கதான? உங்க பொண்ண எந்த நிலமைல கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க தெரியுதா? ஈஸியா மறக்கடிச்சிட்டீங்க, மூளை என்ன கம்ப்யூட்டரா டெலிட் பண்ணி ரீஸ்டோர் பண்ண” என வேண்டும் மட்டும் வாட்டி விட்டார்.

“இல்லனா அவ பைத்தியமாகியிருப்பா டாக்டர்” எனக் கூறியவர்கள் அவர் முறைத்த முறைப்பில் அடங்கினர். “பேஷன்ட் எங்களோட ட்ரீட்மென்ட் ஏத்துக்கிட்டு ஒத்துழைச்சாதான் எங்கனால எதுவும் பண்ண முடியும். அவங்க முதல்ல கண்முழிக்கனும். அதுவரை ஒன்னும் சொல்ல முடியாது” என முடித்து விட்டார்.

“டாக்டர் நாங்க ஹர்ஷியப் பாக்கலாமா?” தர்ஷியின் கேள்விக்கு, “தாராளமா! அவங்ககிட்ட பேசுங்க அதனால அவங்க கண்ணு முழிக்கவும் சான்ஸ் இருக்கு”

அனைவரும் வெளியே வர, ஹர்ஷியின் தந்தை, “நீ எதுக்குடா இங்க வந்த, எம்பொண்ண கொல்லவா? உன்னப் பாத்துதான் இப்படி வந்து கெடக்கறா! என்ன பணம்தான வேணும் உனக்கு! எவ்வளவு வேணும் சொல்லு ஆனா வாங்கிட்டு என் பொண்ணு முன்னாடி வரக்கூடாது” என ஆருஷிடம் ஆவேசம் வந்தவராய் ஆட,

“நிறுத்துங்க முதல்ல” என கத்தியது ஆருஷ் இல்லை, அவன்தான் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டானே! அதைத்தானே இவரும் கூறுகிறார் அதனால் அமைதியாய் இருந்தான்.

இப்போது கத்தியது தர்ஷி. “நீங்கலாம் என்ன மனுஷங்க”

“ஏய் என்ன வாய் நீளுது” என அவர்கள் எகிற

“ஆமா! இனியும் பேசாம இருந்தா அக்காவ இழந்துட வேண்டியதுதான். அவளோட நிலமைக்கு காரனமே நீங்களும் உங்களோட பணமும், அதுக்கும் மேல அவ இவர்மேல வச்ச பாசமும்தான்”

“பாரு இப்ப நீயே சொல்லிட்ட, அவனாலதான்னு! அவன முன்ன வெளிய போகச் சொல்லு. பணக்கார பொண்ணு கண்ணுல படற கூடாது இவனுங்களுக்கு” இவர்களது பேச்சில் இன்னும் ரணமாய் வலித்தது ஆருஷிற்கு. இங்கு நிற்க விருப்பமில்லாமல் ஹர்ஷியின் அறையினுள் சென்றான்.

இன்னும் தன் போக்கில் இருந்து மாறாமல் பேசும் பெற்றோரை பார்த்த தர்ஷி, “சொன்னேன்தான், ஆனா அதுல நிறைய வித்தியாசம் இருக்கு உங்களோடது வெட்டி கௌரவம் அதுதான் அவள இந்த நிலமைக்கு கொண்டு வந்தது, ஆனா! அவர் மேல அவ வச்சிருக்கற பாசம் அவள மீட்டுக் கொண்டு வந்துடும். குழப்பமா இருக்கா பாசம் மட்டும்தான் நோய்க்கு காரனமாகவும் இருக்கும்,மருந்தாகவும் இருக்கும். ஆனா இதெல்லாம் உங்களுககு புரியாது. அதனால இந்த விஷயத்துல தலையிடாதீங்க. இல்ல அவளுக்கு டார்ச்சர் குடுக்கறீங்கன்னு போலிஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிடுவேன்” என கடுமையாக மிரட்டிவிட்டு ஆருஷின் பின் செல்ல, ஆதியும் அவர்களை துச்சமாக பார்த்தவாறே சென்றவனை, “என்ன மாப்பிள்ள உங்களுக்கு பார்த்திருக்கற பொண்ண எவன் எவனோ பார்க்க போறான், நீங்க பார்த்துட்டு சும்மா நிக்கறீங்க அவன தடுங்க” என அவளது அன்னை ஆவேசம் வந்தவராய் கத்தினார். எல்லாம் கை மீறி போகிறதே என்ற இயலாமை அவரை போட்டு வாட்டியது.

“ஓ” என்றவாறு தாடையைத் தடவியவன், ” வெளிய துரத்தனுமா, அப்ப உங்களத்தான் முதல்ல துரத்தனும். எங்கப்பா அம்மா இந்த மாதிரி பண்ணியிருந்தா அவங்கள” சுடுவது போல சைகை செய்து, “சுட்ருப்பேன்… போங்க இங்கயிருந்து” என கர்ஜித்துவிட்டு இவனும் அறையினுள் சென்றான்.

தர்ஷி அறையினுள் சென்ற போது ஆருஷ் ஹர்ஷிக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்து இருந்தான். அதைப் பார்த்த தர்ஷிக்கு ஏழு வருடங்களுக்கு முன் நடந்த காட்சியைதான் நினைவுப் படுத்தியது. என்ன ஆட்கள் மட்டும் இடம் மாறியிருந்தனர். சரித்திரம் திரும்புகிறதோ?

ஆருஷின் கைகள் அதன் போக்கில் அமைதியாய் உறங்குபவளின் தலையை வருடிக் கொடுத்து, “என்ன ராசிடா நம்மளோடது? மனசு நிறைய காதல் இருக்கு ஆனா சேர முடியல. கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன். ஆனா, நீ அதுக்கு குடுத்து வைக்கலடா மடையான்னு! விதி இன்னொரு தடவ எனக்கு புரிய வச்சிடுச்சு. அன்னைக்கு என்னோட நல்லதுக்காக நீ பிரிஞ்ச, இப்போ உன்னோட நல்லதுக்காக நான் போறேன். நான் பண்றது சரியா? தப்பா? தெரியல, ஆனா உனக்கு நல்லதுன்னு மட்டும் தெரியுது. சாரி ஹர்ஷி, ரியல்லி சாரி. இனியும் நான் உன் கண்ணு முன்னாடி வந்தா மொத்தமா உன்ன இழந்துடுவேனோன்னு பயமா இருக்குடா. அதனாலதான் இந்த பிரிவு. நீ ஆதிய கல்யாணம் பண்ணிக்கோ அவன் உன்ன நல்லா பார்த்துப்பான்.” அவனது கூற்றில் அதிர்ந்த ஆதி, “டேய் என்னடா” எனப் பதற, தர்ஷியும் ஆதியை திகைப்பாக பார்த்தாள். ஆதியைப் பார்த்து, “ஷ் ” என அடக்கியவன் மீண்டும் அவளிடம் பேசத் தொடங்கினான். ” ஆனா அந்த கடவுள்ட்ட ஒன்னே ஒன்னு வேண்டிக்கறேன்” என்றவன், “இனி எப்பவும் உனக்கு என்னை ஞாபகம் வரக்கூடாது” என்றவன் “சாரி ஆதி வித் யுவர் பர்மிஷன்” எனக் கூறி, ஹர்ஷியின் நெற்றியில் அழுந்த முத்தம் வைத்தான் “சீக்கிரம் குணமாகிடுடா” எனக் கூறி விடுவிடுவென சென்று விட்டான். இவர்களிடம் விளையாடியது போதும் என விதி நினைத்தது போலும். அவன் சென்றதும் ஹர்ஷியின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. இவள் மீண்டு வருகையில் விட்டுச் செல்பவனை என்ன செய்வது.

தர்ஷி அனைத்தும் முடிந்தது என நினைத்து தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். ஆதி என்ன செய்வது என அறியாது திகைத்து நின்றான்.

இரண்டு வருடங்கள் கழித்து ஆருஷ் வழக்கம் போல ஜாகிங், தியானம் முடித்தவன் குளித்து தயாராகி ஹர்ஷியின் புகைப்படத்தின் முன் நின்று, “ஹாய் நான் எப்படி இருக்கேன்!”

“ம் நல்லாவே இல்ல என்னடா குட்டி” அதில் சிரித்தவன் திரும்பி பார்த்தான் கலைந்த தலை,இன்னும் தூக்கம் கலையாமல் சொக்கும் விழிகளுடன் மேடிட்ட தன் வயிற்றை அணைத்துப் பிடித்தவாறே நின்றிருந்தாள் ஹர்ஷி.

“ஆஹா! மேடம் முழிச்சாச்சா” என அவள் அருகில் செல்ல, “போங்க போங்க போய் அந்த போட்டோ கூடவே பேசுங்க நான் எதுக்கு?” என நொடித்துக் கொண்டு நகர்ந்தாள் ஹர்ஷி.

அவளை விடாமல் பிடித்தவன் பின்னிருந்து அணைத்தவாறு, ” என்னடா! அது அப்படியே பழகிடுச்சு, அதுவும் நீதான” என சமாதானம் பேச, “இல்ல அது போட்டோ” என முகத்தைச் சுருக்கினாள்.

“பார்றா பொறாமையா! அப்ப நம்ம குட்டி வந்தா?” என அவள் வயிற்றைத் தடவ,

“அவன் ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் சிம்பிள்”

“அப்பவும் விட்டுத்தர மாட்ட”

“நோ! நான்தான் முதல்ல, அப்பறம் தான் யாரா இருந்தாலும்”

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “பார்டா குட்டி உங்கம்மா இப்பவே உன்கூட சண்டைக்க வரப் பாக்கறா” என வயிற்றில் முத்தம் வைக்க, “என்னதான் முத்தம் குடுத்து கரெக்ட் பண்ணாலும் அவன் உங்ககூட சேர மாட்டான்” எனக் கூறியவாறே பாத்ரும் நோக்கிச் சென்றாள். தேர்போல அசைந்து மெதுவாக செல்லும் ஹர்ஷியை புன்னகையோடு தொடர்ந்த ஆருஷ் அவளுக்கு ஹீட்டர் போட்டுவிட்டு, மற்ற உதவிகளை செய்து சில தொந்தரவுகளையும் செய்து விட்டே வெளியில் வந்தான்.

வெளியில் வந்தவன் முகத்தில் அத்தனை புன்னகை. வாழ்க்கை இவ்வளவு அழகாக, கெஞ்சலோடு, கொஞ்சலோடு, சின்ன சின்ன சீண்டல்கள், அழகான கூடல்கள் இப்படிச் செல்லும் என நினைக்ககூட இல்லை.

அன்று மருத்துவமணை விட்டு வந்தவன் மீண்டும் ஹர்ஷியின் நலம் அறிய மட்டுமே தொடர்பு கொண்டான். அவள் நலம் அறிந்தபின் அவர்களை எதற்கும் நாடவில்லை, அவர்களும்!

இரண்டு மாதங்கள் கழித்து ஆதியின் திருமணப் பத்திரிக்கை அவனை வந்தடைந்தது. அதில் தேதி மட்டுமே பார்த்தான். ஆதியின் பெயரோடு ஹர்ஷியின் பெயரை சேர்த்து பார்க்கக் கூட துணிவில்லை. ஆதி இவனிடம், “நீ கண்டிப்பா வர, இல்லன்னா இந்தக்க ல்யாணம் நடக்காது” என மிரட்டி இருக்க மனதைக் கல்லாக்கிக் கொண்டு திருமணத்திற்கு சென்றான்.

அங்கு ஆதியின் தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது, அவன் தாய் தந்தையால். அதனால் பக்கத்தில் இருந்த ஹர்ஷியின் பெற்றோரைக் கண்டுகொள்ளாமல் அவன் செல்ல அவர்கள் இவனைக் கண்டு புகைந்து கொண்டிருந்தனர்.

முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டான் ஆருஷ். மனம் எதையும் சிந்திக்கவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தான். முதலில் மணமகன் வந்து அமர, ஆதி இவனைத் தேடி கண்டதும் வரவேற்பாய் தலையசைத்துப் புன்னகைத்தான். “அடுத்து பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரலில் கண்கள் கலங்கியது. இவனும் மனிதன் தானே? ஹர்ஷிக்காக! ஹர்ஷிக்காக! என சொல்லிச் சொல்லி அழுகையை அடக்கினான். அட்சதை தட்டு அவனிடம் நீட்டப்பட நடுங்கும் கரத்தால் அதை வணங்கியவன் தன் கையை எங்காவது அடித்துக் கொள்ளும் எண்ணத்தைப் புதைத்து சிரித்த முகமாக அட்சதையை எடுத்துக்கொண்டான்.

சிறிது நேரத்தில் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்றதில் வாத்தியங்கள் முழங்க கையில் அட்சதையை வைத்துக் கொண்டு வலிக்க வலிக்க ரணத்தைத் தாங்கி அமர்ந்திருந்தான்.

அப்போது மென்கரம் ஒன்று இவன் கரத்தோடு இனைந்து அட்சதையைத் தூவி, “உங்க வாழ்த்து அவங்களுக்கு கண்டிப்பா வேணும் ஆருஷ்” என்ற குரலில் வேகமாக நிமிர அது ஹர்ஷியேதான். அப்ப கல்யாணம் நடத்தது என மேடையைப் பார்க்க ஆதி தனது சரிபாதியான தர்ஷிக்கு குங்குமம் இட்டுக் கொண்டிருந்தான்.

நடப்பவை அனைத்தும் கனவோ! என இவன் குழம்பி நிற்க, இல்லையென அவன் தோள் சாய்ந்தாள் ஹர்ஷி. இன்று இரண்டாவது முறையாக செத்தொழிந்த செல்களுக்கு புத்துயிர் அளித்த பெண்ணவளை கண்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடி அமர்ந்திருந்தான் ஆருஷ்.

சந்தோஷமும் கண்ணீருமாய் காட்சி தருபவனை மணமேடையில் இருந்த தம்பதியினர் அங்கிருந்தே இவர்களை வாழ்த்த, தன் தோள் சாய்ந்த பெண்ணவளை தானும் வளைத்துக் கொண்டவன் நெற்றியில் உதட்டைப் பொருத்தி அழுத்திக் கொண்டான். பெண்ணவளும் கண்ணீருடன் வாகாய் அவனுடன் பொருந்தினாள்.

இருமுறை கைத்தவறி மூன்றாவது முறையாக கிடைத்திருக்கும் பொக்கிஷத்தைப் பாதுகாப்பவன் போல கைகளுக்குள் அடக்கிக் கொண்டான். அங்கு அவர்களின் மௌனமே பலநூறு கதைகளைப் பேசிக் கொண்டிருந்தது. அனைத்தும் நேசக் கதைகள் என கூறவும் வேண்டுமோ!

அடுத்து வந்த முகூர்த்தத்தில் ஆருஷ், ஹர்ஷியின் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. அதிசயம் என்னவென்றால் ஹர்ஷியின் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர். சபரிநாதன் தனது கம்பெனியை ஆருஷிற்கே கொடுத்துவிட்டு மகளுடன் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக சென்று விட்டார். தீப்தி இவர்களது திருமணத்திற்கு வந்தவள் மனமுவந்து இவர்களை வாழ்த்த, அதில் ஆருஷ் மகிழ்ந்தாலும் அவள் முகத்தில் வருத்தத்தின் சாயல் எதாவது தென்படுகிறதா எனப் பார்த்தான். அப்படி எதுவும் இல்லை என்றதும்தான் நிம்மதியானது அவனுக்கு.

“என்ன ஆருஷ் இவ நிஜமாவே சந்தோஷமா வாழ்த்தறாளான்னு பாக்கறயா?” என்றவள், ஹர்ஷியைப் பார்த்தவாறே, ” இந்த ஜோடியப் பார்த்ததுக்கு அப்பறம்தான் நான் எவ்ளோ சரியான முடிவு எடுத்திருக்கேன்னு தோணுது” என தன் மனதை வெளிப்படுத்தினாள்.

அதில் கலக்கம் மறைந்தவன், “கூடிய சீக்கிரம் நீயும் உன்னோட ஜோடியக் காட்டனும்”

“கண்டிப்பா…உங்களப் பார்த்து எனக்கும் இதே மாதிரி லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஆசை வருது”

“என்னது இதே மாதிரியா?” என ஆதி, தர்ஷி இருவரும் கத்த,

“டேய் ஏன்டா கத்தற” என இவர்களின் சத்தத்தில் ஆருஷ் பதற, “பின்ன உங்கள மாதிரியா? வேணாம் வேணாம் உங்கள விட நாங்கதாண்டா இதுல அவ்ளோ கஷ்டப்பட்டோம். அதனால இன்னொரு ஜோடி உங்கள மாதிரி தாங்காதுப்பா” என அங்கலாய்க்க ஹர்ஷி கலகலவென சிரித்தாள். அவளது சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்திருந்தனர் மற்ற நால்வரும்.

பிறகு தனிமையில், “எப்படா உனக்கு நினைவு வந்தது” என ஆருஷ் கேட்க, “ரொம்ப நாளாவே கனவுல ஒரு உருவம் வரும். ஆனா அத தெளிவா பார்க்க முடியாது. அப்பறம் ஒன்னொன்னா நிழலா தெரிய ஆரம்பிச்சது. அது ஏதோ கனவுன்னு நினைச்சிருந்தேன். அப்பறமா இந்தியா வந்து உங்களப் பார்த்த அன்னைக்கு கனவுல நீங்க வந்தீங்க நிழலோட பொருந்தின நிஜமா! அது என்னை ரொம்பவே டிஸ்ரப் பண்ணுச்சு, உனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு இது தப்புன்னு என்ன நானே திட்டிக்கிட்டேன். இனி உங்களப் பார்க்ககூடாதுன்னு நினைச்சா அன்னைக்கே ஹோட்டல்ல வந்து நிக்கறீங்க. உங்களப் பார்த்ததும் எனக்கே தெரியாம அவ்ளோ சந்தோஷம். ஆனா அடுத்த நொடி நிதர்சனம் புரிய உங்கள பார்க்கவும் முடியாம, பாக்காம இருக்கவும் முடியாம நான் தவிச்சது எனக்குதான் தெரியும்” என அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

அவனும் அதை நினைத்தவாறே, அன்று செய்ய முடியாததை இன்று செயல்படுத்தினான். அதூதான் அவள் கன்னத்தை தொட்டுப் பார்ப்பது. அதை அவளிடம் கூறவும் இன்னும் வாகாக கன்னத்தைக் காட்ட கள்ளன் முத்தத்தைப் பதித்தான். அவன் முத்தத்தில் சிலிர்த்தாலும், “இப்படிதான் தொட்டுப் பார்க்க நினைச்சீங்களா”

“ஹிஹி… என அசடு வழிந்தவன், அது அன்னைக்கு இது இன்னைக்கு என நியாயம் பேசினான். சரி மேல சொல்லு. ”

“அப்பறம் என்ன அந்த டேன்ஸ் அது நாம காலேஜ்ல ஆடினத அப்படியே எனக்கு காட்டுச்சு. கொஞ்சம் கொஞ்சமா உங்கள, என்னை, நம்ம சந்திப்பு, காலேஜ் மொட்டை மாடி, கோவில், ஆச்ஸிடன்ட் எல்லாம் ஞாபகம் வந்தது.

“என் லைஃப்ல ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்ட நிமிஷம் அதுதான்! ஆனால் அடுத்த நிமிஷம் தலைல பயங்கர வலி மயங்கிட்டேன். கண்ணு முழிச்சப்ப உங்களத்தான் தேடினேன்” என குறைபட்டுக் கொள்ள,

“சாரிடா…சாரிடா என்னாலதான் உனக்கு இப்படி ஆச்சோன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்பறம் மனச கல்லாக்கிட்டுதான் நான் உன்னை விட்டு வந்தேன்.” என அணைப்பை இறுக்கினான்.

“தெரியும் நானும் அப்படி கல்லாக்கிட்டுதான் ஏழு வருஷம் முன்னாடி பிரிஞ்சு போனேன்” என அன்றைய நினைவில் கண் கலங்கினாள்.

கண்ணைத் துடைத்தவாறே, “ச்சு இப்ப என்ன அழுகை, அதான் எல்லாம் சரியாகிடுச்சே”

“ம், ஆனா அப்ப செம கோவம் உங்க மேல, அதான் உங்ககிட்ட எனக்கு நினைவு திரும்பினத சொல்லக் கூடாதுன்னு ஆதிகிட்ட சொல்லி வச்சேன். ஆனா அதுவும் கல்யாண வீட்ல உங்களப் பார்த்ததும் போச்சு, பார்த்ததும் வந்து கட்டிக்கனும்னுதான் தோணுச்சு” எனவும் இப்படியா? என இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“ம்ஹீம், விடுங்க என்னை” என அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டவள் “ஆனா நீங்க என்ன பண்ணீங்க என்னோட கல்யாணத்துக்குன்னு நினைச்சுவந்து முதல் வரிசைல உட்கார்ந்திருக்கீங்க?” என இடுப்பில் கைவைத்து முறைக்க, சின்னக் குழந்தை அதட்டுவது போல தெரிந்தவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன், “ஏய் பூனைக் குட்டி இவ்ளோ நாள்தான் தவிக்க விட்ட இப்பயுமா? முப்பது வருஷ விரதம்டி! என்னோட விரதத்தை முடிக்க விடு” என கிறக்கமாய் கேட்க, சரிந்த மனதை இழுத்துப் பிடித்தவள், “முடியாது எனக்கு பதில் சொல்லுங்க, மீதிய அப்பறம் பாத்துக்கலாம்” மீண்டும் ஒரு சண்டையை தொடங்க ஆரம்பிக்க, “பதில்தான விடிய விடிய சொல்றேன்டி என் பூனைக் குட்டி” என்றவன் அவனது நேசத்தை கரைத்து பதிலாய் அவள் மேல் செலுத்த, அது சரியான பதிலில்லை, இதில் தெளிவில்லை, இது மிகவும் மோசமான பதில் என பல பதில்களை வாங்கி களைத்துப் போனாள். விடாது பதில் சொல்பவர் களைத்துப் போக வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இங்கு விதியை மாற்றி பதில் வாங்கியவள் களைத்துப் போனாள்.

அவன் நினைத்துப் பார்த்து முடிக்கவும், ஹர்ஷி வெளியே வரவும் சரியாக இருந்தது. அவளை காதல் பொங்கும் பார்வை பார்க்க, “என்ன பார்வைலயே பொங்க வைக்கறீங்க?” என புருவத்தை உயர்த்தி பாவனையாக கேட்டாள்.

“ம், பூனைக் குட்டிக்கு பதில் சொல்லலாம்னு நினைச்சேன்” என மயக்கும் பார்வை பார்க்க, அதில் வெட்கம் வந்தாலும் “ம்க்கும், நீங்க பதில் சொன்ன லட்சனம்தான் இங்க தெரியுதே” என மேடிட்ட வயிறை காட்டினாள்.

அதில் சிரித்தவன் முன்பை விட சதை போட்டு உப்பிய கன்னத்தை பிடித்து ஆட்டியவாறே, “இல்ல இந்த குட்டிப் பொண்ணுக்கு என்னை ஏன் அவ்வளவு பிடிக்குதுன்னு திங்கிங்”

“அப்படிலாம் யோசிக்காதீங்க! ஏன்னா அதுதான் எனக்கே தெரிய மாட்டிங்குது. என்னதான் இவன்கிட்ட இருக்குன்னு பார்க்க ஆரம்பிச்சேன்… இன்னும் பார்த்துட்டே இருக்கேன் ஆனா, என்ன இருக்குன்னுதான் தெரியல” எனக் கூறும் அவளை புன்னகையோடு பார்த்திருந்தான் ஆருஷ்.

காத்திருந்த அவனது காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் நாமும் விடைபெறுவோம்.

நன்றி.

error: Content is protected !!