kettimelam-11

kettimelam-11

                                                             11

 

மணப்பெண்ணை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். இனி அவள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் வரை மண்டபத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது தான் முறை.

வாத்தியார் முன்னமே வந்திருந்தார். அவர் பெண்ணிற்கு விரதம் செய்து வைக்கக் காத்திருந்தார்.

இவர்கள் வந்ததும் “யாராவது வந்து ஆவாசன கல்லுக்கு கோலம் போடுங்கோ.

“இதோ வந்துட்டேன் மாமா” அம்பு தான் முன்னால் ஓடினாள்.

” வாடி அம்பு நன்னா இருக்கியா? எங்க உன் ஆத்துக்காரர்” வம்பளந்தார்.

அம்புவும் அரிசிமாவில் கோலமிட்டுக் கொண்டே “நன்னா இருக்கேன். அதோ அங்க அண்ணாவோட நின்னு பேசிண்டு இருக்காரே” என்றாள்.

 

“அடடே நான் கவனிக்கல. தக்ளி திரிச்சு தரச் சொல்லிருந்தார். ரெடி பண்ணி எடுத்துண்டு வந்திருக்கேன். மாப்பிளைக்கு வேணுமோன்னோ. அதுனால நம்மாத்து மாப்பிள்ளைக்கும் சேர்த்து கொண்டு வந்திருக்கேன். அப்பறமா என்னண்ட வந்து வாங்கிக்கச் சொல்லு டீ மா” தான் கொண்டு வந்திருந்த துணிப் பைகளில் அதை தேடிக் கொண்டே அம்புவிடம் விவரம் சொன்னார்.

 

“ஆகட்டும் மாமா. அதுக்கென்ன அவசரம். கல்யாணம் முடிஞ்சு கூட வாங்கிண்டா ஆச்சு. கோலம் போட்டுட்டேன். நான் போய் அனுவ கவனிக்கறேன். புள்ளையாத்துக் காறாளாம் வந்துடுவா. அவாளுக்கு நீங்க தான் விரதம் பண்றேள் போலருக்கே!”

 

“ஆமா. அந்த மாமி அன்னிக்கு நிச்சயதார்த்தத்துலயே சொல்லிட்டா. “அசடு வழிந்தார்.

 

அவரிடமிருந்து சிறு சிரிப்புடன் அம்பு நகர்ந்து கொண்டாள்.

 

மணமேடை அழகாக மாக்கோலமிடப் பட்டு ஆங்காங்கே போட்ட செம்மண்ணால் அது பளிச்சென்று விளங்கியது.

பெருமாளும் தாயாரும் மணமேடையின் நடு சுவரில் ஓவியரின் கைவண்ணத்தால் வீற்றிருந்தனர்.

வச்சுவும் சாரங்கனும் தயாராக வந்து நிற்க, அனுவை புதுப் புடவை கட்டி நாமகரணம் செய்ய அழைத்து வந்தாள் அம்பு.

“வைஷு நீ வாசல்ல நில்லு. மாப்பிள்ளை ஆத்துல இருந்து வளர்றவாள வாங்கோ ன்னு கூப்டு. இந்த வாண்டுகளை கூட வெச்சுக்கோ” வச்சு வைஷுவை சொல்ல,

அவளும் அது போலச் செய்தாள்.

அனுவை அமர வைத்து தாயும் தந்தையுமாக அவள் காதில் அவளது பெயரைச் சொல்லி நாமகரணம் செய்து வைத்தனர்.

பிறகு மாமா மாமி அத்தை அத்திம்பேர் பெரியம்மா பெரியப்பா என வரிசை கட்டி அவளுக்கு புடவை கொடுத்து ஆசீர்வதித்தனர்.

 

முதல் சடங்கு முடிந்து அவர்கள் காத்திருக்கும் நேரம் சரியாக மாப்பிள்ளை வீட்டாரின் வண்டி மண்டப வாசலை அடைந்தது.

 

புது வாழ்வின் ஆயிரமாயிரம் கனவுகளோடு அனு காத்திருக்க, அவளை மட்டுமே மனதில் நிறுத்தி அவளைக் காணும் ஆவலோடு ரகு வாசலில் வந்து நின்றான்.

 

வைஷு அனைவரையும் கூப்பிட, அனுவின் குடும்பமே வந்து வாசலில் நின்று, மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர்.

 ரகுவிற்கு மாலை போட்டார் நாராயணன்.

மாப்பிளையுடன் ஒரு பெரிய பட்டாளமே வந்து இறங்கியது. ஒவ்வொருவராக உள்ளே செல்ல, வைஷுவின் கண்கள் ஒருவனையே தேடியது.

 

கடைசி நேரத்தில் சிலவற்றை மறந்துவிட்டதால் அவன் அதை எடுத்துக் கொண்டு பைக்கில் வருவதாகச் சொல்லி இவர்களை முன்னே அனுப்பிவிட்டான்.

 

சம்மந்தி வீட்டினர் கடைசி ஆள் வரை வைஷு பன்னீர் தெளிக்க  உள்ளே சென்று விட்டனர். அவன் மட்டும் இல்லை. யாரைக் கேட்பது!

குழம்பியபடியே சேரில் அமர்ந்துவிட்டாள். ஜானகி அருகில் வந்து,

“என்னடி வைஷு. அந்த ஹீரோ சார் மட்டும் காணும்” என்கவும்,

 

“டீ. நீ என்கிட்டே ஓத வாங்காத. அவன் ஹீரோவா ?” வைஷு கொதிக்க,

“அவனை பத்தி பேசுனாலே நீ பதட்டப் படற. என்னடி விஷயம்?” அவள் தோளை உரசிக் கொண்டு கேட்க,

 

“நீ காலேஜ் போய் கெட்டு போற. அவனை எனக்கு பிடிக்கல”

 

“இப்படி சொல்றவங்கள தான் நம்பக கூடாது.”

 

“அப்படியா. உன்ன இப்போவே நம்ப வைக்கிறேன். கூப்டு கண்ணனை. அப்பறம் நம்ம கசின்ஸ் எல்லாம் கேதர் பண்ணு. நான் சொல்ற மாதிரி செய்யணும்.” புருவத்தை உயர்த்தி சீரியஸாக சொலல்

 

“என்ன டீ பண்ணப் போறே! எதுக்கு எல்லாரையும் வர சொல்ற” குழப்பமானாள் ஜானகி.

 

இருந்தாலும் அவள் பேச்சுக்கு மதிப்புக்கு கொடுத்து அனைவரையும் ஓரிடத்தில் கூட்டினாள்.

 

“டேய் கண்ணா, இங்க பாரு அந்த அரவிந்த நாம ட்ரீட் பண்ற விதமே வேறயா இருக்கணும். இப்போ நாம தான் கல்யாணத்துல சாப்பாடு பரிமாற போறோம் . சோ அப்பப்போ அவனை அசிங்க படுத்தனும்” வைஷு கண்ணனின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு சொல்ல,

 

அவனுக்கு சரி என மண்டை ஆட்டுவதைத் தவிர வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

 

“எதுக்கு டீ இதெல்லாம் பண்ற? அவன் உன்னை என்ன பண்ணான்?” ஜானகி புத்திசாலித்தனமாக கேட்டு வைக்க,

 

“சொன்னதை செய் . இல்லனா நீ கேங் ல இருக்க மாட்ட” அசால்டாக மிரட்ட,

பொடுசுகள் அனைத்தும் வைஷு புறம் நிற்க, ஜானகிக்கு மனம் இல்லாவிட்டாலும் அவளோடு நிற்க வேண்டிய சூழல்.

சரியென ஒத்துக்கொண்டாள்.

அனைவரும் கலைந்து செல்ல எத்தனிக்க,

“அப்புறம் இன்னொரு விஷயம். எனக்குத் தெரியாம யாரும் அவன் கிட்ட அனாவசியமா பேச கூடாது. எது செஞ்சாலும் மொதல்ல என்கிட்டே சொல்லிட்டு பண்ணுங்க. நம்ம டார்கெட் அவனை அசிங்க படுத்தனும்” அலெர்ட்டாக இருக்க வைத்தாள் ரவுடி பேபி.

 

வாசலில் நிறுத்தி வைத்திருந்த வரவேற்கும் பொம்மைகள் கையில் குடம் வைத்திருக்க, அதிலிருந்து தண்ணீர் வர வைக்கச் சொல்லி அங்கிருந்த வேலையாட்களிடம் பணித்திருந்தார் சாரங்கன்.

 

வைஷுவை அனுப்பி அதை சரி பார்க்கச் சொன்னார்.

 

மாப்பிள்ளை வீட்டில் ரகுவிற்கு இப்போது விரதம் நடந்துகொண்டிருக்க, ரகு அர்விந்துக்கு போன் செய்தான்.

“வந்துட்டேன் டா. டூ மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” வண்டியில் விரைந்து வந்தான்.

 

அந்த நேரம் வைஷுவும் தண்ணீர் பைப்பை கைவைத்துக் கொண்டு அந்த பொம்மையில் நீர் வைக்க தயாராக இருந்தாள்.

 

“இதுல தண்ணி ரொப்பிவிட்ருங்க மா. போதுமான அளவு வந்ததும் அது சர்குலேட் ஆகும். அப்பறம் தண்ணீர் தேவை இல்லை. எல்லாம் ரெடி பண்ணிட்டேன். சுச்சு போட்டா போதும்.” என அவன் சென்று விட,

 

வைஷு ஆர்வமாக அந்த பொம்மை கையில் இருந்த குடத்தில் தண்ணீரை ஊற்றி ரொப்பிக் கொண்டிருந்தாள்.

 

அந்த நேரம் தனது டூ வீலரில் ஸ்டைலாக மண்டபத்தின் உள்ளே நுழைந்தான் அரவிந்தன்.

 

இவனைக் கண்டதும் அவள் முகம் மாற,

 

“ஹே பேபி! என்னை பார்க்காம ஏங்கி போயிருப்பியே! என்னை வெல்கம் பண்ண வாசல்லயே நிக்கற. தேங்க்ஸ் டியர்” என கையில் சில பொருட்களுடன் இறங்கி வர,

 

“ஆமா உனக்கு பன்னீர் தெளிச்சு வரவேற்கத் தான் நான் இங்க நிக்கறேன்” அழகு காட்டிச் சொல்ல,

 

“ஐ நோ! பன்னீர் ப்ளீஸ்” என அவள் செய்யும் வேலையை கவனிக்காமல் அவன் நிற்க,

 

தண்ணீர் பைப்பை அப்படியே அவன் மேல் பாரபட்சமின்றி தெளித்தாள்.

 

ஒரு நொடியில் தொப்பலாக நனைந்து விட்டான். சட்டென கையில் இருந்த பையை மட்டும் தூக்கிக் கொண்டு தண்ணீர் படாமல் பத்திர படுத்தி விட,

 

“ஹே! அறிவிருக்கா உனக்கு, கைல முக்கியமான திங்ஸ் இருக்கு. இப்போ போய்..” அவன் கடுப்பில் கத்தினாலும், அவள் சாதாரணமாக தண்ணீரை தெளித்த படி நிற்க,

அவனது உடமைகள் நனையாமல் காப்பாற்றி அவன் மட்டும் அவள் தன்னிடம் செய்யும் சேட்டையை ரசித்தபடி நின்றான்.

 

உள்ளிருந்து வெளியே வந்தவர்கள், இவன் நனைந்திருப்பதையும் வைஷு கையில் தண்ணீர் பைப் இருப்பதையும் கண்டு அவள் சந்தேகம் கொள்ள,

 

அவர்கள் சுதாரிக்கும் முன்பே, “பரவால்ல தெரியாம தான தண்ணி பட்டுருச்சு. இட்ஸ் ஓகே” என திடீரென அவளை பார்த்து சொன்னான். அவள் அப்போது தான் அங்கு இருப்பவர்களை கவனித்து, அவனுக்குத் தோதாக தலையை மட்டும் ஆட்ட,

 

“போப்பா போய் ட்ரெஸ்ஸ மாத்து. தொப்பமா நனஞ்சுட்டியே” வைஷுவையும் அவனையும் குறை சொல்லாமல் சாதாரணமாக விலகிச் சென்றனர்.

 

அவர்கள் சென்றதும், அவளை பார்த்து கண்ணடித்து விட்டு,

“ஐ சேவ்ட் யூ” என்று உள்ளே சென்றான்.

 

‘மொதல்ல காண்டானல எனக்கு அதுவே போதும்” ஜெயித்து விட்டதாக பெருமைபட்டுக் கொண்டு சென்றாள்.

அர்விந்த் பங்கஜம் கண்ணில் படும் முன் சென்று குளித்து உடை மாற்றி வந்தான்.

அழகிய ஜிப்பாவும் ஜீன்சும் அணிந்து கொண்டு வெளியே வர, ஜானகி அவனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவனோ அன்று போல இல்லாமல் அவளைக் கண்டதும் சினேகமாக புன்னகைத்து சென்றான்.

 ரகுவின் விரதம் செய்யும் சடங்கு முடிந்ததும், மதியம் ஆகிவிட, அனைவரும் சாப்பிடச் சென்றனர்.

அனுவின் உறவினர்களே நின்று அனைவர்க்கும் உணவு பரிமாறினர். அப்போதும் அர்விந்துக்கு ஏதோ வேலை வந்துவிட, பங்கஜம் வேணு என பெரியவர்கள் உண்டு சென்ற பின் அவன் பந்திக்கு வந்தான்.

 

அப்போது அங்கே பரிமாறியது கண்ணன், வைஷு இன்னும் சில இளசுகள்  மட்டுமே.

ரகு அரவிந்தைக் கை காட்டி , “வா டா. இங்க வந்து உட்காரு” தனக்கு எதிரே இருந்த இடத்தைக் காட்ட,

 

ரகுவிற்கு முன்னே அனைவரும் அவனுக்கு , பொரியல் அவியல் என அனைத்தும் பரிமாற, சாம்பார் சாதம் வரை ரசித்து உண்டான்.

ரகு எழுந்து சென்ற பின், வைஷு அனைவருக்கும் சிக்னல் கொடுக்க,

 

“ஜாங்கிரி போடுங்க” அர்விந்த் கேட்டான்.

 

ஜாங்கிரியை எடுத்து வந்துவிட்டு, “மூன்றாவது டேபிளில் யாரோ கூப்புட்றாங்க பாரு கண்ணா ” என வைஷு குரல் கொடுக்க,

 

“இதோ வரேன்” என அங்கே ஓடினான்.

 

அர்விந்த் ஜாங்கிரியை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அது வேறு திசையில் சென்றது. வரும் வரும் என அவனும் காத்திருந்தான். கண்ணனோ அப்படியே பக்கத்து இலை அடுத்த இலை என சென்று கொண்டிருந்தான்.

 

அரவிந்தின் முகத்தை பார்த்து “அச்சச்சோ.. ப்ச்ச்” என தள்ளி நின்று பரிதாபப் பட்டாள்.

 

‘அது வரலைனா பரவால்ல’ என மனதை தேற்றிக் கொண்டு அவன் பாயசம் கேட்க,

 

ஜானகி பாயச வாளியோடு வந்தாள். வைஷு அவளை பார்த்து , “பாயசம் அவன் இலைக்கு போச்சு உனக்கு பல்லு போய்டும் அப்டியே யுடர்ன் பண்ணி போய்டு” என மிரட்டி அனுப்பினாள்.

 

ஜானகிக்கு மனமில்லை என்றாலும், வாளியை எடுத்துக் கொண்டு அவனுக்கு எதிரே சென்று விட்டு ,

 

“ஜானு இங்க பாயசம்” கண்ணன் குரல் கொடுக்க,

 

“ஒரு நிமிஷம்” என அங்கே ஓடினாள்.

 

“ச்சே!” என வெறுத்தவன், அங்கே புடவையில் அழகாக நின்று தன்னைப் பார்த்து பரிதாபப் படும் வைஷுவைக் கண்டதும் புரிந்து கொண்டான்.

 

“உன் வேலை தான ரவுடி பேபி. இதை இப்போ சால்வ் பண்றேன்” முனகியவன்,

 

சத்தமாக, தனது பக்கத்தில் இருக்கும் பெரியவரைக் காட்டி,

“கண்ணன், இந்த மாமாவுக்கு ஜாங்கிரி வேணுமாம், இங்க வாங்க” என்றான்.

அவன் கத்தவும் அருகில் இருக்கும் இருவர், “இங்கயும் கொண்டாங்கோ”

என்று கூற,

 

வைஷுவைப் பார்த்தான் கண்ணன். அவள் வேண்டாமென தலை அசைத்தும் நிறைய பேர் கேட்டதால், வேறு வழி இன்றி ஜாங்கிரி எடுத்துச் சென்றான்.

 

அவன் அருகில் வந்ததும், அவனைப் பிடித்து, “ரெண்டு ஜாங்கிரி வை” என்று சொல்ல,

கண்ணன் வைத்தான்.

 

வைஷு முறைக்க, அவளை பார்த்துக் கொண்டே ஜாங்கிரியில் இருக்கும் சக்கரை பாகை “ம்ம்ம்ம்ம்” என உறிஞ்சி விட்டு கடித்து சுவைத்தான்.

“சூப்பர் ஜாங்கிரி” அவளை பார்த்துக் கூற,

 

அவன் தன்னை தான் சொல்கிறான் என்று நன்றாகவே புரிந்தது வைஷுவுக்கு. அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்று விட்டால்.

 

அவள் சென்றதும் ஜானகி அவனுக்கு பாயசம் ஊற்ற,

“என்ன பிளான்” என்றான் அர்விந்த் .

“என்ன கேக்கறேள்!?” ஜானகி பயந்து விழிக்க,

 

“உங்க வைஷு பிளான்?”

“அதெல்லாம் ஒன்னுமில்லையே!” தடுமாறினாள்.

 

“ஹே எனக்குத் தெரியும். சும்மா சொல்லு” அவளை போட்டு வாங்க

“யார் கிட்டயும் சொல்லிடாதீங்கோ. முக்கியமா வைஷு கிட்ட. தெரிஞ்சா என்னை பின்னி எடுத்துடுவா”

 

“அதெல்லாம் உன்னை மாட்டிவிடமாட்டேன். நான் தனியா டீல் பண்ணிக்கறேன்” என தைரியம் சொல்ல,

 

ஜானகி வைஷுவின் பிளானை உளறினாள்.

 

“தேங்க்ஸ்” சிரித்துக் கொண்டு அர்விந்த் சொல்ல,

 

அவளும் வழிந்தாள்.

 

அதைக் காண முடியாமல் அர்விந்த் சென்றான். மாலையில் நிச்சயம் நடந்து கொண்டிருக்க, அர்விந்துக்கு வைஷுவிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து, அநியாயத்திற்கு அழகாகத் தெரிந்தாள்.

 

அவனது பார்வை அவளைத் துளைக்க, வைஷுவால் வெகு நேரம் அதை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

 

‘என்ன இப்படி பாக்கறான்.’ என நினைத்தாலும் , அரை நொடி கூட அவன் பார்வை விலகவில்லை. அவளுக்கு அது அத்தனை பேர் முன்னிலையிலும் கூச்சத்தை அளிக்கவே செய்தது.

 

அவனும் சந்தன நிறத்தில் குர்தா அணிந்து சந்தனம் நெற்றியில் வைத்துக் கொண்டு அனைவரையும் வசீகரித்தான்.

 

அனுவும் ரகுவும் மிகவும் அழகிய ஜோடி என அனைவரும் பேசிக்கொண்டிருக்க, பங்கஜம் அரவிந்தை அழைத்து

“பொன்னாத்துல ஜானவாசத்துக்கு ரெடி பண்ண சொல்லு” என்றதும்

 

நேரே வைஷுவிடம் வந்தான்.

 

அவள் அவன் நெருங்கி வந்ததும் அக்கம் பக்கம் பார்த்து அவனை என்ன என்று புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். வா” என்கவும்,

 

“ஹே.. முடியாது.. என்ன நெனச்சுட்டு இருக்க..” அவளுக்கு மனது வேறு நினைத்தது. அத்தனை நேரம் அவன் வீசிய பார்வை அவளை ஏதேதோ நினைக்க வைத்திருந்தது.

 

“இப்போ நீ வரியா இல்லையா.”

 

“முடியாது. நீ கூப்பிட்டதும் வரத்துக்கு நான் ஆள் இல்ல”

 

“அப்போ இங்கயே…” என அரைகுறையாக நிறுத்த,

 

அவள் பதறிப் போனாள்.

 

“அப்போ வா” என தனியே முன்னே சென்றான்.

 

 அவளும் தொடர்ந்து செல்ல,

 

அவர்கள் தங்கி இருந்த அறைக்குள் சென்றான். அனைவரும் வெளியே இருப்பதால், யாரும் அங்கில்லை. வைஷு சற்று தயங்கி வாசலிலேயே  நிற்க,

 

“உள்ள வா” அடிக்குரலில் ரகசியம் போல அழைக்க,

 

அவனை எச்சரிக்கையோடு பார்த்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

 

அவளை இழுத்து கதவை லேசாக மூடியவன்,

 

“ஹே! என்ன பண்ற..” வைஷு பயந்து அவனைப் பார்க்க,

 

அவள் முகத்தை முழுதாக ஒரு நிமிடம் அருகில் நின்று ரசித்தான்.

 

அவளுக்கு உடல் லேசாக பதறியது.

 

“தள்ளு” என விலக நினைக்க,

 

“உன்கிட்ட ஒன்னு கேட்கணும்”

சற்று நின்றவள், “என்ன” மெலிதாக கேட்க,

 

“ஒண்ணுமில்ல, ஜானவாசத்துக்கு எல்லாம் ரெடியான்னு அம்மா கேட்க சொன்ன” என்று கேட்டுவிட,

 

தன்னை அவன் வேண்டுமென்றே பதறடித்தது புரிந்தது வைஷுவுக்கு.

 

கோப மூச்சுடன் அவனை எரிக்கும் பார்வை பார்க்க ,

 

“வேற என்ன நெனச்ச ரவுடி பேபி?” அருகில் வந்து அவளது ஜிமிக்கியை ஆட்டிவிட்டுக் கேட்க,

 

அவன் கையை தட்டி விட்டு “நான் ஒன்னும் நினைக்கல” என்று வெளியே சென்றாள்.

 

“உன் மனசுல வேற இருக்கு. ஐ நோ”

 

“ஆமா. உன்னை எப்படி விரட்டறதுன்னு மட்டும் தான் இருக்கு”

 

“அது முடியாது, ஆல்ரெடி உன் மனசுக்குள்ள நான் வந்துட்டேன்”

 

“கனவு கூட காணாத”

 

“ம்ம். பாக்க தானே போறேன். இந்தக் கல்யாணம் முடியறதுக்குள்ள உன்னை சொல்ல வைக்கறேன்.”

 

கோபத்தில் அங்கிருந்த ஆப்பிளை அவன் மேல் எடுத்து வீச, அதை லாவகமாக பிடித்து “தேங்க்ஸ்” என்றான்.

 

“ச்சீ” என்று விட்டு அங்கிருந்து சென்றாள்.

ரகுவை கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஊர்வலமாக காரில் வைத்து மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். உறவினர்கள் சீர்களை எடுத்துக் கொண்டு கூட நடந்து வந்தனர். மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருந்தது.

error: Content is protected !!