KK 2

KK 2

கலியுக கல்கி – 2

இன்றோடு தோழிகள் பாலாக வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிவிட்டது,இரு தினங்களுக்கு ஒரு முறை பெற்றவர்களிடம் பேசினர்,இந்த ஒரு வார காலமே அவ்வீட்டை அறிந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது,ஒருவராக அந்தக் குடும்பத்தைப் பத்தி அறிந்தாயிற்று,அறிந்த விடயங்கள் தான் ஈர குலையை நடுங்க செய்தது,என்ன தான் அவர்கள் நல்லது செய்தாலும் ,அவர்கள் செய்யும் விதம் தோழிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,நமக்கு ஏன் பொல்லாப்பு வேலை மட்டுமே நமது குறிக்கோள் என்ற நிலைக்கு வந்த பின் இருவரது மனமும் சற்றுத் தெளிந்தது.

வீட்டை சுற்றிக் குறைந்தது 30 காவலாளிகள் இருந்தனர்,அதில் முக்கிய அதிகாரிகள் மட்டுமே வீட்டின் நடுக் கூடத்தில் அமர்ந்து விதுரனிடம் பேசி கொண்டு இருந்தனர்,அவர்கள் பக்கவாட்டில் அந்த நான்கு வயது குழந்தை இடுப்பில் ஒரு வெள்ளை துணி சுற்றி தனது தாயின் மடியில் துயில் கொண்டு இருந்தது,குழந்தையின் முன் உச்சியை வருடியவரே அமர்ந்து இருந்தாள் அந்தத் தாய்,முகத்தில் அத்தனை நிம்மதி,காளியாக நின்று வதம் செய்த பின்,சாந்தச ரூபிணியாக அம்பாள் காட்சியளிப்பது போல் இருந்தது,அந்த தாயின் முகம்.
————————————————————————————————-
அடுக்கலைக்குள் வந்த ராகவன்,”ஏம்மா காப்பி ரெடி ஆயிடுத்தா எல்லாரும் வெயிட் பண்ணுறா சீக்கிரமா வாங்கோ”,அவன் சொல்லவே முத்து அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.

அவள் பார்வையை எதிர் கொண்டவன்”என்ன நீ எப்போ பார்த்தாலும் என்ன முறைச்சுண்டே இருக்கச் சரியில்லை,சொல்லிட்டேன் ஆமா”.

“என்னய்யா பண்ணுவா”,கட்டி இருக்கும் பாவாடையை ஏற்றி இடுப்பில் சொருகிவரே கையில் கரண்டியுடன் வந்தவளை பார்த்து மிரண்டு தான் போனான் ராகவன், அவனது பயம் கண்டு பொன்னிக்குச் சிரிப்பு வந்தாலும்,தோழியின் கையை இறுக்கப் பற்றி அவனிடம் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினாள்.

“அண்ணே நீங்க போங்க நான் கொண்டு வரேன்”,விட்டால் போதுமென ஓடியே விட்டான்.

“ஏண்டி! எப்போ பாரு அந்த அண்ணாகிட்ட வம்பு பண்ற பாவம் அவரு”,அவளிடம் முறைத்துக் கொண்டே கையில் காப்பித் தட்டை திணித்தவள்,”இந்த வீட்டுல உள்ள யாரையும் பாவமுன்னு சொல்லிப்புடாத புள்ள,நமக்கு தான் பாவம் புடிக்கும், என் வாய்யா கெளரமா போயிடு”,அவள் கோபம் கண்டு பொன்னி விலகி கொண்டாள்.

கூடத்தில் உள்ள அனைவருக்கும் காப்பியை கொடுத்த பொன்னி ,விதுரனுக்குக் கொடுக்க அவள் நிமிர்ந்து பார்க்கும் வரை,அவன் அதனை வாங்கவில்லை,நேரம் செல்ல என்ன செய்கிறார் காப்பியை எடுக்காமல் அவனது கண்ணைப் பார்க்க,அவளை பார்த்துக் கொண்டே அந்தக் கப்பை எடுத்து கொண்டான்,ஏனோ பொன்னிக்குக் கை காலெல்லாம் உதறியது,பின்பு வாட்ச் மேனிடம் தட்டை கொடுத்து,மீதம் உள்ளவர்களுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

அனைவரையும் நன்றி கூறி அனுப்பி வைத்த விதுரனிடம் வந்த அந்தத் தாய் கை எடுத்து கும்பிட அவரது கையை இறுக்கப் பற்றிக் கொண்டு தலையை இடமும் வளமும் ஆட்டினான்,அவர்கள் தெலுங்கில் பேசி கொள்ள சற்று தள்ளி வாசலில் நின்றுருந்த தோழிகளுக்குப் புரியவில்லை,ஆனால் எதோ அவன் நல்லது செய்து இருக்கிறான் என்பது மட்டும் திண்ணம்.

இருவருக்குப் பயத்தை மீறிய ஆவல்,என்னவென்று தெரிந்து கொள்ளப் முத்து பொன்னியின் கையைச் சுரண்ட, அவளும் என்ன என்பது போல் பார்த்தாள்,”அந்த ஐயரை இங்க கூப்புடு புள்ள,என்ன செதினு கேப்போம்”,
“வேணாம் முத்து எதுக்குத் தேவை இல்லாத வேலை,பேசாம வா”,

“உங்கிட்ட சொன்னே பாரு”,ராகவனைக் கண்களால் துளாவியவள் அவன் சிக்கவே சுற்றி முற்றி பார்த்து யாரும் அங்கில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு அவனை நோக்கி சென்றாள்.

அப்போதுதான் அவனது வீட்டில் இருந்து அவனது அத்தை மகள் ரம்யா குறுந்செய்தி அனுப்பி இருந்தாள் ,அதனை பார்த்துக் கொண்டு சுவரோடு சாய்ந்து நின்று ரம்யாவிற்குப் பதில் அனுப்பும் முன் அருகில் சென்ற முத்து,மீண்டும் ஒரு முறை யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு,அவனது கை பற்றி அருகில் உள்ள அறைக்கு இழுத்து சென்றாள்,

இதனை எதிர்பாராத பொன்னி தனது கை கொண்டு வாய் மூடி அதிர்ச்சியில் நிற்க,விதுரன் ஒரு புண் சிரிப்புடன் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான்,அவனுக்கு ராகவன் மீது கொள்ளை நம்பிக்கை உண்டு அதனால் தவறாக எண்ண முடியவில்லை.

பொன்னியை விட ராகவனுக்குத் தான் அதிர்ச்சி பயத்தில் பேச்சே வரவில்லை முயன்று “ஏய்,என்ன நெனைச்சுண்டு இருக்க,நான் அந்த மாதிரி பையன் இல்லையாக்கும்,நன்ன குடும்பத்து பிள்ளை கையை விடு,ஒரு பொம்மனாட்டி இப்புடியெல்லாம் பண்ண பிடாது”,பயத்தில் அவன் உளறி கொட்ட.

“யோவ்,நான் என்ன உன்ன கற்பழிக்கவா போறேன்,இந்த கத்து கத்துற ரொம்பத் தான்,அது என்ன நல்ல குடும்பம்,அப்போ நாங்க என்ன நாரி போன குடும்பத்துலையா பொறந்தோம்,பிச்சு புடுவேன் பிச்சு,சரி மேட்டருக்கு வா”.

“என்னது!……….”கிட்டத்தட்ட ராகவன் அலற,அவனது கையில் இரண்டு அடிகளைப் போட்டவள்,”யோவ் ஐயரே கொண்ணே புடுவேன்,நான் என்ன பேச வந்த,நீ என்ன புருஞ்சுக்குற,உன்ன……..”,தனது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இரு நிமிடம் கண்ணை மூடியவள்,தன்னை சமாதானம் பண்ணி கொண்டு,அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டாள்.

அவனும் ஒரு நிம்மதி மூச்சுடன் நடந்ததைச் சொல்ல,அவளுக்குக் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“சும்மாவையா விட்டீங்க அந்தத் தடியனை”,அவளை பார்த்து மென்னகை புரிந்தவன்.

“சும்மா விடுவாரா அண்ணா,அவனை அசுரனை வதம் பண்ற மாதிரி பண்ணிட்டார்”,அரபு நாடுகளில் ஏற்ற படும் சட்டத்தைப் போலவே,விதுரனும் தக்க தண்டனையைக் கொடுத்து விட்டான்,”இந்த மாதிரி ஆளுங்கள சும்மா விடக் கூடாது தான்,நாய்ங்க”,அத்தனை கோபம் அவள் முகத்தில்.

“நம்ப வந்த அன்னைக்குத் தான் அவன் கிடைச்சான்”,ராகவன் சொல்லவே இப்போதுதான் புரிந்தது அன்று விதுரன் கையில் உள்ள ரெத்தமும், ஓர் ஆணின் மரண ஓலத்திற்கான காரணமும் விளங்கியது.

முத்து ஏதோ யோசனையில் வெளியில் செல்ல,கசங்கிய தனது சட்டையைச் சரி படுத்தியவரே அவள் பின் வந்தான் ராகவன்,இதனை பார்த்த வேலை ஆள் ஒருவன் ராகவனைப் பார்த்துக் கண் அடிக்க, பல்லை கடித்தான் ராகவன்,’எல்லாம் இவளல ராட்சசி ராட்சசி’,முனு முனுக்க மட்டுமே அவனால் முடிந்தது.

பொன்னியிடம் வந்த முத்து நடந்த அனைத்தையும் சொல்ல,”என்ன இருந்தாலும் அவுங்க செய்யுறது தப்பு தான் முத்து,அவர் யாரு தண்டனை கொடுக்க”,

“லூசு இதே நம்பக் குடும்பத்துல நடந்தது இருந்தா,இதே தான் சொல்லுவியா”,முத்து சற்றுக் காட்டமாக கேட்கவே பதறியது பொன்னிக்கு.

அவளது நடுக்கத்தை உணர்ந்தவள்,” கேட்கவே உனக்குத் தூக்கி வாரி போடுது,அதை அன்புவச்ச அந்தப் பையனுக்கும்,அவுங்க அம்மாவுக்கும்”,

“இங்க பாரு புள்ள இந்த சம்பவம் காலத்துக்கும் அந்தப் பையன தொடரும்,அந்த பிஞ்சுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது ஆனா அந்தப் பைய வளர வளர அதுக்கு உண்மை தெரிஞ்சு,அது மனச தேத்தி அதில் இருந்து விடு பட்டு யோசிக்கவே எனக்குக் கண்ண கட்டுது புள்ள,

நாலு வயசு பையனுக்கு என்ன தெரியுமுன்னு யோசிக்காத புள்ள,அதுங்களுக்கு எல்லாத் தெரியும் ஆனா புரிதல் கிடையாது,நம்பலாவது வெளில சொல்லி ஆறுதல் பட்டுக்குவோம்,அதுங்க மனசு குள்ளையே வச்சுக்குங்க,அதுவும் இப்போ இருக்கப் புள்ளைங்க சொல்லவே வேணாம்,அதுங்க அறிவும் வேகமும் ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும்,மறு பக்கம் பயந்து வருது புள்ள.

நானெல்லாம் மக்கு மண்ணாந்தைய இருந்தேன் புள்ள,துவரம் பருப்பையும்,பசி பருப்பையும் கொடுத்துப் பிரிக்கச் சொல்லிப்புட்டு எங்க அம்மா வேலைய பாக்கும்,இப்போ என்னடானா கைல செல்ல கொடுத்துப்புட்டு எல்லாம் வேலைய பாக்குதுங்க,அந்த அளவுக்குத் தெளிவா இருக்குங்க,இருந்தும் இந்த மாதிரி நடக்குது,போற போக்க பாத்த நாமளே கைல கத்திய கொடுத்து தான் அனுப்பனும் போல,நீயே உன்ன காப்பாத்திக்கணு.

முத்துவின் கூற்றிலும் நியாயம் உள்ளது,நாட்டு நடப்பை பார்த்தால் விதுரன் செய்தது தப்பில்லை என்று தான் தோன்றுகிறது,அவளது எண்ண போக்கை எண்ணி வேகமாகத் தலையை உலுக்கிய பொன்னி பேச்சை மாற்றும் பொருட்டு ,”வா புள்ள வீட்டுக்கு பேசலாம்,அப்பா நேரமான தூங்கிடும்”,

“ஆமா வா புள்ள “,முத்துவும் அவளுடன் விரைந்தாள்.

இங்கே விதுரன் ராகவனைத் தனது ரூமுக்கு அழைத்துப் பேசினான்,அவன் சொன்ன விடயங்களைக் கேட்ட ராகவனுக்குத் தலையைச் சுற்றியது,மறுக்கவும் முடியவில்லை ஏற்கவும் முடியவில்லை,அதுவும் விதுரனின் தந்தையை எண்ணி நெஞ்சு கூடு விம்பி தணிந்தது,’பெருமாளே இது என்ன புதுச் சோதனை,இதெல்லாம் நடக்குற காரியமா என்ன’அவனது எண்ணவோட்டத்தைக் கண்டு கொண்டவன்.

“நடக்கும் ராகவா நடக்கணும்,ஆனா இப்போ இல்ல நானும் கொஞ்சம் யோசிக்கணும் உங்கிட்ட சொல்லணும் தோணுச்சு அதான்”,ராகவன் கடினமாகத் தனது இதழை பிரித்துப் புன்னகை புரிய விதுரனுக்குச் சிரிப்பு வந்தது.
————————————————————————————————-
அறையில் இருந்து வெளியே வந்த ராகவன் “ஐயோ,நான் ரம்யாக்கு என்ன பதில் சொல்லுறது,அவ தான் என் ஆத்து மாட்டு பொண்ணு எங்க அம்மா சொல்லிட்டா,பெருமாளே நீதான் என்ன காப்பாத்தணும்”,உண்மையில் அவனுக்குக் கவலையாக இருந்தது விதுரனை எதிர்த்து பேச முடியாது,இந்த வேலை வேண்டாம் என்றாலும் விதுரன் விட்டுவிடுவான் ஆனால் அவனது தந்தை,புலி வால் பிடித்த கதையாக ஆகிவிட்டதே என்று மருங்கியரே பசியை மறந்து படுக்கச் சென்றான்.

இரவு உணவிற்கு அவன் வராததைப் பார்த்த விதுரன் முத்துவை அழைத்து அவனைச் சாப்பிட வருமாறு அழைக்க , பொன்னியை பரிமாறச் சொல்லிவிட்டு,அவனது அறையை நோக்கி சென்றாள்.

கை வைத்தவுடன் ராகவன் அறை கதவு திறந்து கொள்ள அங்கே அவன்……………..

error: Content is protected !!