KK 4
KK 4
கலியுக கல்கி – 4
ராஜலுவின் நினைவு பின்னோக்கி சென்றது…..
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடும்ப என்பதால் பாலகாவில் சுந்தர ராஜலு தந்தை ராயன் ரெட்டிக்கு செல்வாக்கு அதிகம்,தனது ஒரே மகனுக்கு வரன் பார்த்துக் கொண்டு இருந்தார்,அந்த காலத்திலே கல்லூரி சென்று படித்தவர் குடும்பத் தொழில்களைத் தந்தைக்கு உதவியாக நின்று செய்து வந்தார்.
பணக்கார குடும்பம் என்பதால் அனைத்து வரன்களும் சற்று பெரிய குடும்பமாகத் தான் இருந்தது,ராஜலுவின் தாய் தந்தை இருவரும்,குணத்தை மட்டுமே மையமாக வைத்துப் பெண் தேடினர்,அவர்கள் சமூகத்தில் வசதி குறைவாக இருந்தாலும்,பெண் நன்றாக இருந்தால் போதுமென எண்ணம்.
அப்படித் தேடிய பொழுதுக் கிட்டியது தான் கமலம்,அவர்களுக்குச் சற்று வசதி குறைவு தான் என்றாலும் குணத்தில் கோடீஸ்வரியே,அழகு தேவதையாக இருந்த கமலத்தைப் பார்த்து முடிவு செய்தனர்,அதன் பின் என்ன கோலாகலமாகத் திருமணம் முடிந்தது,அவர்களுக்குத் திருமணம் முடிந்த கையுடன் வேணிக்கும் வரன் வரவே சற்றும் சிந்திக்காமல் அவளையும் திருமணம் செய்து வைத்து விட்டார் அவர்களுது தந்தை,கமலத்தின் தாய்க்கு தான் மனம் நெருடியது,இரு கண்களும் மனிதனுக்கு முக்கியம் அல்லவா,
அதுபோலத் தான் இரு மகள்களும் அவருக்கு,மூத்தவள் மட்டும் செல்வ செழிப்போடு வாழ,இளையவளை அவசரமாகத் தள்ளி விட்டது போல ஓர் எண்ணம்,அதுதான் உண்மையும் கூட இன்னும் சிறிது காலம் பொறுத்துத் திருமணம் செய்திருந்தால் வேணியும் நன்றாக வாழ்ந்திருப்பார்,தனது தந்தை சொல்லுக்காகத் திருமணம் செய்து கொண்டு இருந்தாள்.
சிறுது காலம் சென்ற நிலையில் கமலம் கருவுற்று தாய் வீடு வர, வேணியைப் பற்றி ஒரு தகவலுமே இல்லை,பெற்ற மனம் அடித்துக் கொண்டது,கமலத்தின் தந்தைக்கே பயம் பிடித்துக் கொண்டது,தனது சொந்தத்தில் மூத்தவரான ஒருவரை கூட்டி சென்றார் அங்கே தனது மகளைப் பார்த்தவர் துடி துடித்துப் போனார்.
“அம்மாடி வேணி நானா வந்து இருக்கேன் பாருடா”,அவளது கன்னத்தைத் தட்ட அவளிடம் அசைவில்லை , கருத்து உடல் இழைத்து ஒடுங்கி இருந்த சிறிய மகளைப் பார்க்க பார்க்க தாங்கமுடியவில்லை,ஒரு வாரமாக அன்னம் தண்ணில்லாமல் இருந்த வேணியால் தனது தந்தையைக் கூட அடையாளம் காண முடியவில்லை.அக்கம் பக்கம் உதவிக்கென்று ஒரு காக்க குருவி கூட இல்லை,
கனத்த மனதுடன் கையில் அள்ளி கொண்டு மருத்துமனைக்கு விரைந்தார்,தனது மனைவிக்கு மட்டும் செய்தி சொல்லி அழைத்தவர்,ஒருவாரம் அவளது உடல் நிலையில் மட்டும் கவனம் செலுத்தி அவளை வீட்டுக்கு அழைத்து வர,அவளை பார்த்த கமலம் திகைத்துப் போனாள்.
அவளைக் கமலத்தின் பொறுப்பில் விட்டுட்டு தனது சிறிய பெண்ணுக்கு நியாயம் வேண்டி அந்த ஊர் பஞ்சாயத் தலைவர் முன்னிலையில் நின்றனர்,அடுத்து ஒரு மணி நேரத்தில் வேணியின் கணவனும்,அவனது அம்மா,அப்பா ,தங்கை அனைவரும் வந்தனர்,
வேணியின் கணவனால் நிற்க கூட முடியவில்லை,கண்ணைப் பிரிக்க முடியாமல் பிரித்துப் பிரித்து மூடினான்,அவனது நிலையில் கோபம் கொண்ட கமலத்தின் தந்தை பாய்ந்து சென்று சட்டையைப் பிடித்தார்,இரு தரப்புகளுக்கும் வார்த்தை முத்தி போய்,வேணியின் வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது,சோர்ந்த மனதுடன் கமலத்தின் பெற்றோர்கள் தங்களது ஊரை நோக்கி சென்றனர்.
—————————————————————————————————-
அங்கே,”வேணி செப்பண்டி” தனது தங்கையைப் போட்டு உலுக்கி கொண்டு இருந்தாள்,அதற்கு மேல் மௌனம் கொள்ள முடியாமல் வெடித்து அழுதாள் வேணி.
அக்கா என்னக்கா சொல்லுவேன்,கல்யாண ஆன மறுநாளே அவரு சரியில்லைன்னு தெரியும்,அதிகமா குடிக்குறதுனால அவருக்குக் கை கால் நடுக்கம் இருக்கும் போல,என்கிட்ட தள்ளி தான் இருந்தாரு,நானும் சரி பண்ணிடலாம் நெனச்சேன்,ஆனா போகப் போக ரொம்ப மோசம் திருடி குடுக்குற அளவுக்கு,கடன் வாங்கிக் குடுக்குற அளவுக்கு,
அவுங்க அம்மா,அப்பா எதுவும் கேட்கலையா?
இல்லை என்பதைப் போல் தலையாட்டியவள்,”அவுங்க அம்மா ஒரே வார்த்தையில சொல்லிட்டாங்க அக்கா,கல்யாண பண்ண பொண்ணு கெட்டிக்கார தனமா இருந்தா, இந்நேரம் அவரைத் திருத்தி நல்ல படிய குடும்ப நடத்தி இருப்பாளாம் .
கமலத்திற்கு உள்ளே கொதித்தது,”ஆமா,இந்த குடிகார நாய்களைத் திருத்தான் இருபது வருசமா பொத்தி பொத்தி வளர்த்து இருக்காங்க,அது எப்புடி முப்பது வருஷம் கூட இருந்த அவுங்களால முடியாதது,கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் கூட ஆகாத வாழவந்த பொண்ணு பண்ண முடியும்,எந்த ஊர் நியாயம்”.
அக்கா அவருக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு கிட்னி போய்டுச்சு அக்கா,வேலைக்கினு அவர் போய் நான் பார்த்ததே இல்லை,அதுவும் இல்லாம கடனுக்குப் பயந்து என்ன பணயமா வச்சுட்டுப் போய்ட்டாரு,அப்பா போட்ட நகையெல்லாம் கொடுத்து நான் மீண்டு வந்தேன்,வயசு பொண்ண,வச்சு இருக்கேனு அவுங்க அப்பா அம்மாவும் தனியா போய்ட்டாங்க.
என்னடி சொல்லுற!………..
ஆமா அக்கா நாங்க ஆறு மாசம் தனியா தான் இருக்கோம் ,அதுவும் வாடகை கொடுக்க முடியாம சுடு காடு பக்கத்துல குடிசை போட்டு இருக்கோம்.
தான் இங்கு ராணியாக வாழ தன் எச்சில் உதிரத்தை பங்கு போட்டு,தன்னுடன் உயிராக வளர்ந்த தங்கை படும் துயரத்தை தாங்க முடியவில்லை, கெட்டதிலும் ஒரு நன்மை என்றால் மானம் பங்கமில்லாமல் அவள் வந்து சேர்ந்துதான்.
அக்கா நான் அங்க போகல அக்கா எனக்குப் பயமா இருக்கு,அவர வேணாம் இந்த ஊருல கூட்டி வந்து வைத்தியம் பார்த்து வேலைக்கு அனுப்பலாம் அக்கா.
நீ இன்னும் அந்த ஆள் கூட வாழணுமா வேணி.
திகைத்து தனது தமக்கையைப் பார்த்தவள்,”அக்கா என்னிலும் கெட்டது ஆயிரம் இருக்கு,அவரு குடிய நிப்பாட்டிட்டா நல்ல ஆய்டுவாரு”,வாழ்க்கையோடு போராட துணிந்து நிற்கும் தங்கையைப் பார்க்க பெருமையாக இருந்தது.
அனைத்தையும் சொல்லிய வேணி ஒற்றைத் துணி இல்லாமல் ஒரு நாள் முழுக்கத் தன்னை இருட்டறையில் அடைத்து கொடுமை செய்ததையும்,கொதிக்கும் எண்ணையில் உள்ளங்கையை வைத்ததையும் சொல்லவில்லை,சொன்னால் மட்டும் பட்ட வேதனை குறையுமா என்ன, குடிக்கப் பணம் இல்லாமல் போனால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது, எவ்வாறு மனதுக்குள் வலியை மறைத்தலோ,அவ்வாறே உடல் காயத்தையும் துணி கொண்டு மறைத்தாள்.
குடி ,புத்தியை மழுங்க செய்து கொஞ்சம் கொஞ்சமாகச் சுயம் இலக்க வைக்கும்,பொய்,திருட்டு,என்று கொலையில் வந்து நிற்கும், உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் இழந்து அந்தப் போதையைப் பெற வேண்டுமா என்ன?குடியால் அழிந்த குடும்பங்கள் கோடி,கண்ணில் குளம் கட்ட தங்கையை அனைத்து கொண்டாள்.
வேணியால் தனது தாய் தந்தையுடன் கணவன் அற்று இருக்க முடியாது என்பது திண்ணம்,மடிந்தாலும் அவனுடன் என்று தான் அவள் யாரிடமும் உதவி கேட்டு நின்றதில்லை அவளது எண்ணம் இதுவாக இருக்க,அவளது பெற்றோர்கள் அவள் வாழ்க்கையைத் தொடங்கிய வேகத்தில் முடித்துக் கொண்டு வந்தனர்.
இரவு வந்த பெற்றோர்களின் முகத்தைப் பார்த்தே நடந்ததை ஊகித்த வேணி,எதுவும் பேசாமல் படுத்து கொண்டாள்,கமலமும் பெற்றோர்களிடம் பேசவில்லை,அனைவரும் விடியலை நோக்கி விழித்துக் கொண்டு இருக்க,வரமா சாபமா என்று தெரியாமல் விடிந்தது அந்தக் காலை.
வேணி விழித்தவுடன் அவள் காதில் கேட்ட செய்தி கணவனின் மரணம் தான், மூச்சு முட்ட கொடுத்தவன் காலையில் மூச்சிரையாகி இருந்தான் அவளை அழைத்துச் செல்ல விருப்பமில்லை என்றாலும் கடமைக்காகச் சென்று வந்தனர்,எத்தனை வேகம் இந்தக் காலத்திற்கு ஒரு வருடம் என்ன வாழ்கை வளந்தோம் யோசித்துப் பார்க்கும் அளவிற்குக் கூட ஒன்றும் புலப்படவில்லை.
அதன் பின் வேணி ஒடுங்கி போனாள்,யாரிடமும் பேசுவதில்லை,யாரு வந்தாலும் கதவுக்கு மறைவில் நின்று கொள்வாள், கமலம் பேறுகாலம் வரை வந்து வந்து சென்றவள்,வளைகாப்பிற்குப் பின் அங்கே தங்கிவிட்டாள்,கமலத்தை நன்றாகக் கவனித்துக் கொண்டது வேணி தான்.
முதல் வாரிசான ரெங்கன் பிறந்தான் அவனைச் சுற்றியே வேணியின் காலம் ஓடியது,அவனுக்கு முதல் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாட எண்ணி அனைவரையும் அழைத்தார் ராஜலு,இதுவரை கமலத்தின் தங்கையிடம் பேசிடாதவர்,முதல் முறையாக அவளையும் அழைத்தார்,கதவு மறைவில் நின்றவள் ஹ்ம்ம்……..என்று வார்த்தை மட்டும் பதிலாகக் கொடுக்க,விடை பெற்றான் ராஜலு.
கமலத்தின் மூலம் வேணியின் வாழ்க்கையை அறிந்தவன்,தனது தந்தையிடம் சொல்லி அவளுக்கு மறுமணம் செய்ய வரன் பார்க்க,கமலம் பிடிவாதமாக அதனைத் தடுத்து விட்டாள்,”வேணாம் பாவா தெரியாதவர்களுக்குக் கட்டி கொடுத்து அவ கஷ்ட படுறத விட,நீங்களே அவளைக் கல்யாணம் பண்ணிக்கோங்க,
இரண்டு திருமணம் செய்வது அவர்கள் குடும்பத்தில் நடக்கும் ஒன்று தான்,ஆனால் தனது தந்தைக்கும் சரி தனக்கும் சரி அதில் உடன் பாடில்லை,அதனால் பிடிவாதமாக மறுத்தார்,”ஏய்,லூசு அறிவு இருக்கா உனக்கு,உனக்கு என்ன உன் தங்கச்சி நல்ல இருக்கணும் அதானே,நானே நல்ல மாப்பிள்ளை பாக்குறேன்,என்ன மீறி எவனும் உன் தங்கச்சிய எதுவும் செய்ய முடியாது சரியா”.
என்ன சமாதானம் சொல்லியும் கமலம் கேட்பதாய் இல்லை (நல்ல அக்கா),ராஜலுவின் தந்தையே அவனை வற்புறுத்த அரை மனதாகச் சம்மதித்தான் .
இதைக் கமலம் தனது பெற்றோர்களுக்குச் சொல்ல,அவர்களுக்கு என்ன செய்வவது என்றே தெரியவில்லை அவர்களையும் மிரட்டி தான் சம்மதிக்க வைத்தாள்.
அழகான காலை வேளையில் பெருமாள் கோவிலில் ரெங்கனுக்கு அபிஷேகம் செய்யுது பிறந்த நாள் கொண்டாட்டத்தை இனிதே தொடங்கினர்,வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்த வண்ணம் இருக்க,எதிலும் பங்கு கொள்ளாமல் தோட்டத்தில் மரத்தின் மறைவில் உட்காந்து இருந்தாள் வேணி,காலடி ஓசை கேட்க யார் என்று பார்த்தவள் தமக்கையின் கணவன் என்றதும் பதறி மறைந்து கொண்டாள்.
அவளிடம் நெருங்கியவர் சற்றுச் சத்தமாக “வேணி இக்கடர பங்காரம்”,அவரது பங்காரமென்ற அழைப்பு அவளுக்குப் பயத்தைக் கொடுக்க இன்னும் ஒடிங்கினாள்,அவளது பயத்தை அறிந்தவர் மேலும் அவளிடம் நெருங்க,தற்காப்பிற்குக் கையை ஓங்கி இருந்தாள்,ஓங்கிய கையை முறுக்கியவர் அவளை அருகில் இழுக்க,அதற்குள் கமலம் அவளை அறைந்து இருந்தார்.
அதிர்ந்து பார்த்த தங்கையின் கை பற்றித் தங்களது அறைக்கு இழுத்து சென்றவள்,அவளுக்குத் தனது கணவனைத் திருமணம் செய்து கொள்ளும் படி சொல்ல,
அக்கா! ……….
“என்னடி எதுக்குக் கத்துற,உனக்கு என்ன வயசு இப்போ வெளில கொடுத்துட்டு திரும்ப உனக்கு எதாவது ஒன்னுனா எங்களால தாங்க முடியாது,இங்க பாவனா நல்ல பார்த்துக்குவாரு”,
“நிறுத்து எனக்குக் கல்யாணம் பண்ண நீ யாரு,அடுத்தவ வாழ்கை எனக்கு வேணாம் நான் இப்புடியே இருந்துடுவேன்”.
எத்தனை நாளைக்கி இப்புடியே இருப்ப,கணவனை இழந்து தனியா நிக்குற பொண்ணுக எல்லாம் நித்தம் நித்தம் போராடனும்,ஊர் கண்ணு உறுத்தமா வாழ முடியமா உன்னால,எப்போ எவன் வந்து கதவத் தட்டுவானு பயந்து சாகனும்,அம்மா அப்பாக்கு அப்புறம் உன் நிலைமை என்ன,இதெல்லாம் யோசுச்சு தான் இந்த முடிவு,நாளை மறு நாள் அலமேலு மங்கை சன்னிதானத்துல கல்யாணம் அத்துடன் முடித்துக் கொண்டு அவ்விடம் விட்டு சென்றாள்.
அறைக்கு வந்த கமலம் தனது கணவனின் கால் பற்றிச் “சாரி பாவா”,என்று மன்னிப்பு வேண்ட அவளைத் தூக்கி அனைத்து கொண்டார்,அவர் மனதில் என்ன பெண் இவள் என்றே தோன்றியது.
வெள்ளி விடிந்து வேணியின் வாழ்க்கையில் வெள்ளி முளைத்தது அலமேலு மங்கையின் சாட்சியாக வேணியைத் தனது சரிபாதியாக ஏற்றுக் கொண்டார் ராஜலு,கமலத்திற்கும்,வேணிக்கும் பாகுபாடு என்பதே இல்லை என்பது போல நடந்து கொண்டனர் ராஜலுவின் தாயும்,தந்தையும், வேணியால் தான் ரெங்கனை தவிர்த்து யாரிடமும் ஒட்ட முடியவில்லை,அதுவும் ராஜலுவை எங்குக் கண்டாலும் ஒழிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடினார்.
ராஜலுவிற்கு அவள் செய்கை சிரிப்பை தந்தாலும் அவளது உணர்வுக்கு மதிப்பளித்துத் தள்ளியே நின்றார்,கமலம் தன்னால் ஆனா அனைத்து முயற்சியும் எடுத்துத் தங்கையிடம் தோல்வியே தழுவினார்.
அக்காவின் வாழ்க்கைக்கு இடையூர் இல்லாமல் தங்கை போராட,தங்கை வாழ்க்கையும் மலர வேண்டும் என்று தமக்கை போராட,அவர்களது அன்பை எண்ணி ராஜலுவிற்கு வியப்பாக இருந்தது,கடவுள் கொடுத்த வரம் தான் இரு பெண்களும்,ஒருபுறம் அவருக்குப் பெருமையாக இருந்தாலும் மறுபக்கம் சற்று எரிச்சலாகத் தான் இருந்தது பின்ன ஒன்னுக்கு இரண்டு கட்டியும் ப்ரம்மசாரியாக இருந்தால்,”ஏழுகுண்டல வாடா அக்காளும் தங்கச்சியும் படுத்துறாளுகடா”என்று வாய்விட்டே புலம்பியும் தள்ளுவார்.
அன்று முக்கியமான உறவு முறை திருமணம் ,கண்டிப்பாகக் குடும்பத்துடன் செல்ல வேண்டும் அலுவலக வேலையை ராஜலு பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை,அதனால் கமலா ரெங்கன்,ராயன் ரெட்டி அவரது மனைவி அனைவரும் கிளம்பி செல்ல,வேணி மட்டுமே வீட்டினில்,அவளுக்கு ராஜலு இருப்பது தெரியாது,மதிய வேலை உணவுக்கு அவர் வரவே வேலையால் வந்து தன்னை அழைக்க யோசனையுடன் சென்றார் வேணி.
அங்கு உணவு மேஜையில் ராஜலுவை பார்த்தவர் கை ,கால்கள் சில்லிட அவருக்குத் தட்டை வைத்து பரிமாறினார்.ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல உண்டு முடித்தவர்,தனது அறைக்குச் செல்ல,வேணி அவருக்கு எதிர் திசையில் சென்றாள்,போகும் அவளை அழைத்துப் பணி பெண்.
“அம்மா ஐயாவுக்கு இனிப்புக் கொண்டு போங்க சாப்பிட்டு ஐயா இனிப்பு சாப்புடுவாரு”.
“ந….நான் எப்புடி,நீயே கொடுத்துடேன்”.
அவளை விடப் பயந்த அந்தப் பணி பெண்,”ஐயோ! நான் ஐயா அறைக்குப் போக மாட்டேன்,போங்க அம்மா இல்லாட்டி அவருக்குக் கோவம் வந்துடும்,அப்புறம் கமலாம்மா உண்டு இல்லனு பண்ணிடுவாங்க”.
வேறு வழில்லாமல் இனிப்பை வாங்கிக் கொண்டு அவரது அறைக்குச் சென்றாள்,ஏனோ வேர்த்துக் கொட்டியது,கட்டிலில் படுத்து இருக்கும் ராஜலுவின் கவனத்தைக் கவராத வாரு,தட்டுடன் இனிப்பை வைத்து விட்டு நகர்ந்தாள் வேணி.
பள்ளி செல்லும் குழுந்தை மணி அடித்தால் பறந்து கொண்டு வீட்டை நோக்கி ஓடுமே,அதே போல் ஓடி கதவை நெருங்கும் சமயம்,அந்தரத்தில் மிதந்தாள் வேணி.