கலியுக கல்கி – 5

தன்னைத் தூக்கிய ராஜலுவை குனிந்து பார்த்தார் வேணி,கண்ணில் காதலை தேக்கி அவர் காதல் யாசகம் கேட்க,வேணி தவித்துத் தான் போனார்,அதன் பின் நடந்தவை எல்லாம் சுகமான கனவாக,மனதில் அவ்வப்போது கமலத்தை எண்ணி குற்ற உணர்வாக இருந்தாலும்,கமலத்தின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியைப் பார்த்து அவையும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டது.

யாருக்கு கிட்டும் இப்புடி ஒரு சகோதரி,ராஜலு அதிஷ்டசாலி தான். இவர்களின் ஒற்றுமையை எண்ணி பெரியவர்கள் மகிழ்ந்து போனார்கள், சகோதரிக்காகத் தனது வாழ்க்கையில் யார் பங்கு தருவார்,ஆறுதல் சொல்லி தேற்ற மட்டுமே முடியும்,ஆனால் கமலம் சிறிதும் முகம் சுணக்கம் இல்லாமல் வாழ்க்கையைப் பகிர்ந்ததை நம்ப முடியவில்லை,இவர்கள் மூவர் அன்புக்கும் ஆசி வழங்குவது போல வேணிக்கு விதுரன் பிறக்க,கமலத்திற்கு அலமேலு பிறந்தாள்.

இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்ட ராஜலு இரு மாணவிகளையும் கொண்டாடி தீர்த்தார்,இவர்கள் வாழ்க்கையில் குழந்தைகள் பருவ வயதை எட்டும் வரை எந்தத் துன்பமும் அண்டவில்லை, ராஜலுவும் அண்ட விடுவதில்லை,ஆனால் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரிவினை தனது உதிரத்தால் சந்திக்கும் பொழுது சற்று தடுமாறி தான் போனார்.

ரெங்கனுக்கு வேணி சித்தி என்றால் கொள்ளை பிரியம்,விதுரனும் கமலத்திடம் பெரியம்மா என்று ஒட்டி கொள்வான்,ஆனால் அலமேலு வளர வளர வேணியை எதிரி என்ற கண்ணோட்டத்தில் பார்க்க ஆரமித்து விட்டாள்,விதுரனும் அவளும் சில மாத இடைவெளியே என்றாலும்,விதுரனுக்கு இருக்கும் புரிதல் அலமேலுவிடம் இல்லை,சிறு வயதில் வேணியைப் பார்த்து அழுவதும்,அவள் கொஞ்ச வந்தாள் போ என்று கத்தி அடம் பிடிப்பதுமாக இருந்தாள்.

காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும் என்று பெரியவர்கள் எண்ண இன்னும் வன்மமாகத் தான் அவளது செயல் இருந்தது.

விதுரனுக்கு ஓர் அளவிற்குத் தனது தாயின் நிலை பிடி பட்டது,ஒவ்வொரு முறையும் அவனைச் செதுக்கியது வேணி தான்,அவரது கடந்த காலத்தை அறிந்த விதுரனுக்குத் தந்தை,பெரியம்மா மேல் அலாதி பிரியம்,அதனால் அலமேலு எண்ண சொன்னாலும் பொறுத்துச் செல்வான்,ஆனால் அவன் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு,என்பதை தெரிந்து கொண்டது அவனது இருபது வயதில் தான்.

அன்று கல்லூரி முடித்து வந்த அலமேலு கமலத்தைத் தேட,அவர் சிறு வேலையாகத் தனது கணவனுடன் சென்று இருந்தார் வீட்டில் இருந்தது, வேணியும் விதுரனும் மட்டுமே,வந்த உடன் அவளுக்குப் பழ சாறு வேண்டும் அதனை அறிந்த வேணி அவளுக்குத் தானே தயாரித்து எடுத்து வர,அவர் முகம் பார்க்காமல்,”தேங்க்ஸ் அம்மா “,கமலம் என்று நினைத்து அவள் உரைக்க.

வேணியின் கண்களில் கண்ணீர் தடம்,தலையை திருப்பி தாயை பார்க்க நிமிர்ந்த அலமேலு வேணியைக் காண கையில் இருக்கும் பழ சாரை அவர் மேல் விசிறி அடித்தால்,ஏனோ தனது தாயின் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டவராகத் தான் அவள் கண்ணனுக்குத் தெரிந்தார் வேணி.

இதனைக் கணவனித்த விதுரனுக்குக் கை முஷ்டி இறுக,தனது தாயை அழைத்துக் கொண்டு நொடி பொழுதில் அந்த வீட்டில் இருந்து வெளி ஏறினான்,அன்று முதல் தந்தையிடம் பேசுவதில்லை,அவருக்கு நன்றி கடன் செய்வதாக எண்ணியே விலகி இருந்தான்,இதனை அறிந்த கமலம் அலமேலுவை அடித்து நொறுக்கி வேணியின் கடந்த காலத்தைச் சொல்ல,தனது செயலின் வீரியம் அப்போதுதான் அவளுக்கு நன்கு புரிந்தது,காலம் கடந்து வந்த புரிதல் யாருக்கு எண்ண லாபம்.

அதன் பின் பல முறை ராஜலு அழைத்தும் விதுரன் பேசவில்லை ஒரு நாள் மாலையில் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நிகழ்த்தி தனது மாணவியை ஒரு மாத காலம் தன்னுடன் இருக்க வேண்டும் என்று போராடினார்,தந்தையின் செயலை எண்ணி மனதுக்குள் சிரித்து கொண்டான் விதுரன்.

அலமேலும் அதன் பின் வேணியிடம் மன்னிப்பு கேட்டு,அவர் கையில் ஒண்டி கொண்டாள்,கடவுள் கொடுத்த வாழ்க்கை,அவன் எழுதிய தீர்ப்பு இதில் வேணியும்,சரி ராஜலுவும் சரி எந்த விதத்தில் பொறுப்பு என்று தோணியது,உறவுகள் பல பட்டாலும் இடைவெளி இருப்பதே நல்லது என்று வேணியும்,விதுரனும் சற்று ஒதுங்கியே இருந்தனர்.

கடந்த காலத்தில் இருந்து வெளியே வந்த ராஜலு,ஒரு பெருமூச்சுடன் உணவு மேஜைக்குச் சென்றார்,அங்கு ரெங்கனின் மனைவி சுஜா,மகள் அலமேலு கமலம் அனைவரும் அவருக்காகக் காத்துக் கொண்டு இருந்தனர்.

“மகளின் அருகில் அமர்ந்த ராஜலு மெதுவாக யாருக்கும் கேட்காத வாரு “அலமு ராகவ் வந்து இருந்தான்”என்று நிறுத்தி விட்டு அவளது முகத்தைக் கூர்ந்து பார்க்க தலையைக் குனிந்து கொண்டாள் அலமேலு.

கண்கள் கலங்க பாதி உணவில் எழுந்து செல்ல பார்க்க அவளது கை பிடித்துத் தடுத்தவர் “சாப்பிடு, நானா இருக்கேன்”அந்த ஒரு வார்த்தையே பலத்தைத் தர,அவரது கையைப் பற்றிக் கொண்டே உண்டாள்.

உணவை முடித்துக் கொண்ட ராஜலு தட்டில் உணவை வைத்துக் கொண்டு வேணியை நோக்கி செல்ல,கமலம் ஒரு சிரிப்புடன் தனது மருமகளைப் பார்த்தார், அவளும் சிரித்து கொண்டாள்,வேணி இங்கு இருக்கும் வரையில் அவர் கையால் தான் உணவு,கமலம் கூட அவ்வப்போது கிண்டல் செய்வது உண்டு,”ஏங்க,நானும் உங்கள மாசத்துக்கு ஒரு முறை வந்து பார்த்தாள் எனக்கும் இப்புடி ஊட்டி விடுவிங்கள”,பதறி எழுந்த ராஜலு கமலத்தின் உதட்டில் இருக்கும் சிரிப்பை பார்த்து அவள் குறும்பு செய்வதைப் புரிந்து கொண்டவர் நிம்மதி பெற்று.

“ஏய்,ஊட்டி விடுன்னு சொன்னா தினமும் செய்யப் போறேன்,அதுக்கு ஏன் இந்த விபரீத முடிவு,ஒருத்தி போனதே என்னால முடியல”,அவரது கோபம் கண்டு கமலம் சமாதானத்தில் இறங்க அவரும் சற்றுத் தணிந்தார்.

அங்குத் தனது அறைக்குச் சென்ற அலமேலு ராகவுக்கு அழைத்தாள்,மறுமுனையில் போன் எடுக்கப் பட,”என்ன ராகவ் வீட்டுக்கு வந்துட்டு என்ன பார்க்காம கூடப் போயிட்டீங்க,கழட்டி விடுற ஐடியா வா என்ன?”

“ஐயோ சத்தியம் அதெல்லாம் இல்ல”

“அப்புறம்”

“ஒரு முக்கியமான வேலையா வந்தேன்,நீங்க காலேஜ் போய் இருப்பிங்கனு வந்துட்டேன்,தப்பா எடுத்துகாதேல் மண்ணி”.

அவன் அழைத்த ஒற்றை அழைப்பில் உருகி போனவள் ,”ஏன் ராகவ் உங்க அண்ணனுக்கு என்ன புடிக்கல”கண்ணீர் மல்க கேட்டவளை எண்ணி கலக்கம் கொண்டவன்,

“அதெல்லாம் இல்லை மண்ணி அவன் அம்மா பிள்ளை,கொஞ்சம் முன் கோபி கண்டிப்பா ஒரு நாள் உங்கள புருஞ்சுண்டு தேடி வருவான்,அழாதிங்கோ மண்ணி”,அதன் பின் சிறுது நேரம் பேசி அவளைச் சமாதானம் செய்து போனை வைப்பதற்குள் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.

அலைபேசியை அனைத்தவன் திரும்ப அங்கே முத்து அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்,”இவ வேற” சலித்தவன் அவளைத் தாண்டி செல்ல போக.

“யோவ் ஐயரே”,என்ன என்பது போலப் பார்த்தவனை.

“பச்ச புள்ள மாதிரி நடிக்கதையா,உங்க மனுசுல என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க,எங்களுக்குக் கேட்க ஆள் இல்லனா”,என்ன எது என்று விடயத்தைச் சொல்லாமல் அவள் பொரிந்து தள்ள அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.

“ஏய்,நோக்கு என்ன வம்பு பண்ணுலான தூக்கம் வராதா”.

“எனக்கு வேற வேலை இல்ல பாரு,வம்பு பண்ண………”.

“வாய்க்கு வாய் பேசாத,நேக்கு வேலை இருக்கு உன்னோடா வம்பு கட்ட நேக்கு தெம்பில்லை,சொல்ல வேண்டியதை சுருக்கா சொல்லு “.

“உங்க ஐயா பொன்னி புள்ளைகிட்ட நடந்துக்குற விதம் சரில்லை,ரவைக்கு அவுங்களுக்குப் பால் கொடுக்கப் போன அழுதுகிட்டே வரா,கேட்ட சொல்ல மாட்டேங்குற”.

ராகவ் ஒன்றும் பேச முடியாமல் திருத் திருவென முழிக்க,”யோவ்,என்ன முழிக்க”.

சண்டாளி இவலண்டை என்ன சொன்னாலும் நம்பி தொலைய மாட்டாளே,பெருமாளே எப்புடி சமளிக்குறது மனதுக்குள் புலம்பியவனைச் சந்தேகமாகப் பார்த்தவள் “யோவ்,இன்னக்கி ராத்திரி நீயும் கூட வர என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம்,நைசா எங்கயாவது ஓட பார்த்த,கையை வேகமாக அவனது இடுப்புக்குக் கீழ் கொண்டு செல்ல,துள்ளி விலகினான் ராகவ்,ஒரு விரல் நீட்டி எச்சரித்துச் சென்றாள் முத்து.
நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் ‘டேய்,ராகவா போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தியோ,மூணு பொண்ணுக கிட்ட மாட்டிண்டு முளிக்குற,ஒருத்தி ரவுடி,ஒருத்தி கோவக்காரி,ஒருத்தி என்ன ரகம் சொல்லவே முடியலை’,சன்யாசம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நல்ல முடிவை நோக்கி சென்றது அவனது எண்ணம் (பாவம்).

இரவு உணவை முடித்துக் கொண்டு அடுக்கலையைச் சுத்தம் செய்து கொண்டு இருந்த பொன்னியை ஓர விழியில் பார்த்துக் கொண்டு இருந்தாள் முத்து,இண்டர்காம் அடிக்க நடுங்கும் கையால் எடுத்தவள் ஹ்ம்ம்.. என்ற பதிலோட வைத்து விட்டாள்,அதன் பின் அவசரமாகப் பாலை கலந்து விதுரன் அறைக்கு எடுத்து சென்றாள்.

அவள் பின்னே ராகவ்வை இழுத்துக் கொண்டு சென்றாள் முத்து,அறைக்குள் எட்டி பார்க்க ராகவுக்குக் கூச்சமாக இருந்தது,”ஏய்,அடுத்துவா அறையை எட்டி பார்க்க கூடாது தப்பு”,

“யோவ் ஐயரே நல்ல வாயில வந்துரும் பேசாம இரு”,’ராங்கி எப்புடி பேசுற பாரு அவளை முறைக்க அவள் உடலில் ஏற்பட்ட நடுக்கமும் ,பயமும் அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவன் அடுத்த நொடி திரும்பி கொண்டான்.

அடுத்த அரை நொடியில் பொன்னி அழுது கொண்டு அவளது அறைக்கு ஓட,முத்துவும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு ராகவை தள்ளி விட்டு பொன்னியின் பின் விரைந்தாள்.

அழுகும் தோழியைக் கட்டி கொண்டு “வா புள்ள இப்பவே போலாம்,இந்த வேலையும் வேணாம்.ஒரு மண்ணும் வேணாம்”,அவளுக்கும் அழுகை முட்டியது.

இரவு முழுவதும் அழுது கரைந்த தோழிகள்,,அடுத்த நாள் பெட்டியுடன் விதுரன் முன் நின்றனர்,அவனது பார்வை பொன்னியை விட்டு அகலவில்லை,”ஒத்த கண்ண வச்சுக்கிட்டே இந்தப் பார்வை பாக்குறானே,இன்னும் இரண்டு கண்ணும் நல்ல இருந்தா ஆத்தி”நெஞ்சை பிடித்துக் கொண்டாள் முத்து.

அவர்களிடம் ஏன்,எதற்கு ? என்று ஒரு வார்த்தை கூட விதுரன் பேசவில்லை,போனை எடுத்து அழைத்தவன் ஸ்பீக்கர் ஆன் செய்ய, மறுமுனையில் “சொல்லுங்க தம்பி ” இரு பெண்களும் உறைந்து போய் நின்றனர், ஏனென்றால் பேசியது பொன்னியின் தந்தை ஆயிற்றே.

விதுரன் கண் அசைக்க ராகவன் பேசினான் ,”ஐயா,உடம்பு இப்போ பரவாயில்லையா”.

“ஐயா புண்ணியத்துல நல்ல இருங்குதுங்க சாமி,அறுவை முடுஞ்சுது இப்போ சுகமா இருக்கேன்”.

“சரிங்க உடம்பப் பாத்துக்கோங்க நான் அப்புறம் பேசுறேன்”.

“சரிங்க சாமி ஐயாவா கேட்டதா சொல்லுங்க”.

இரு பெண்களாலும் நம்ப முடியவில்லை தினமும் தந்தையுடன் பேசுகிறாள் பொன்னி,அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது கூடத் தெரியவில்லை,முத்துவின் வீட்டிலும் ஒருவரும் சொல்லவில்லையே.

நிலைமையை அறிந்த முத்து ,”எம்புட்டு காசுன்னு சொல்லுங்க நாங்க கொடுத்துறோம்” விதுரனை பார்த்து உரைக்க.

சிரிப்புடன் ராகவனைப் பார்த்தான்,அவன் தனது போனை எடுத்து அவளிடம் காட்ட வாய்யை பிளந்தாள் முத்து,பொன்னியும் அருகில் வந்து பார்க்க பல லட்சங்கள், இப்போது இருவருக்குமே கண்ணீர் வழிந்தது.

பொன்னிக்கும்,முத்துவுக்கும் கேட்க பல கேள்விகள் இருந்தாலும்,தற்போது சூழ்நிலை அவர்களுக்குப் பாதகமாக இருக்கச் சோர்ந்து போனார்கள்.

————————————————————————————————-
அன்று முழுதும் முத்துப் பலமாகச் சிந்தாள் என்றால்,பொன்னி தனது தந்தைக்கு அழைத்து அனைத்து விடயத்தையும் அறிந்து கொண்டாள்,அறிந்த விடயங்கள் குழப்பமே தருவித்தது.

முத்து ஒரு முடிவுக்கு வந்தவளாக ” இந்தப் புள்ள பொன்னி நான் சொல்லுறது ஒழுங்கா கேளு,ஒரு ஒரு வாரம் இங்க சமாளி நான் ஊருக்கு போய் அப்பன் ஆத்தாளுக்குத் தகவல் சொல்லி என்ன செய்ய முடியுதுனு பாக்குறேன்,தைரியமா இருந்துக்கோ புள்ள”கலங்கிய தோழியை அனைத்து கொண்டாள் பொன்னி.

அன்று இரவு ராகவனைப் பார்க்க சென்ற முத்து,”யோவ் ஐயரே நான் ஊருக்கு போகணும்,எனக்குப் பஸ் டிக்கெட் போட்டு கொடுய்யா”,

தனது கட்டிலில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு இருந்தவன்,அவள் பேசுவதைக் காதில் வாங்காது புத்தகம் படித்துக் கொண்டு இருந்தான்.

“இந்தத் தயிர் சாதத்துக்கு லொள்ள பாரேன்,யோவ் உன்கிட்டே தான் பேசுறேன் காது கேட்கல”.

“எதுக்கு இப்போ ஊருக்கு,புத்தகத்தைப் படித்த வாரே கேட்க”

ஹ்ம்ம்,”என்ன பொண்ணு பார்க்க வராங்க,ஒரு வாரம் ஆகும் நான் வர”,அவள் சொல்லி முடிக்கவில்லை புயலாக வந்தவன் அவள் தடையை இறுக்கப் பிடித்து,

“யாருடி வரா என் ஆத்துகாரிய பொண்ணு கேட்டு”,அவனது வலிமையான கைகள் வன்மையாக இறுக்க அதிர்ந்து போய் நின்றாள் முத்து.

ஆத்துகாரியா ஆ …………….. பிளந்த வாய்க்குள் உலகமே தெரிந்தது.

error: Content is protected !!