KK6

KK6

கலியுக கல்கி – 6

“என்ன முத்து உன்ன பொள்ளாச்சில பார்த்தேன்”,பொன்னி நக்கலாகக் கேட்க,தேங்காய் துருவி கொண்டு இருந்த முத்து அவளை முறைத்து ,”உனக்கு நக்கலா புள்ள,உனக்கும் சேத்து நான் இங்க தவிச்சு போய் இருக்கேன்,உனக்குக் கொழுப்புக் குத்துதாடுது”,கண்ணீர் மல்க பேசிய முத்துவை பார்த்து பயந்து போனாள் பொன்னி.

“என்ன புள்ள அழகுற,நீ இருக்குற தைரியத்துல தான் நான் உசுர கைல புடுச்சுட்டு ஒவ்வொரு நாள் இரவையும் கடத்துறேன்,நீயே அழுதினா”

“முடியல பொன்னி நல்ல வந்து மாட்டிகிட்டோம்,இந்த இரண்டு தடியனுகளும் எதோ சதி பண்ற மாதிரி இருக்கு புள்ள,காச காட்டி கட்டி போட பாக்குறானுக,எப்புடியாவது பணத்தைப் புரட்டி கொடுத்துறணும்,நம்பச் சம்பருச்சு அடைச்சுக்கலாம்,இந்த இடம் நமக்கு வேணாம் புள்ள”.

எனக்கும் அதே தான் தோணுது அதுவும் நேத்து அவரு…………………….. வார்த்தை முடிக்க முடியாமல் பொன்னி தேம்ப

அப்போதுதான் நியாபகம் வந்தவளாக ,” ஏன் புள்ள அந்த ஆளு உன்ன கட்டிக்கிட்டு மடில உரிமையா புருஷன் மாதிரி படுத்துக்கடக்கான் ஓங்கி ஒரு அரையமா அழுதுகிட்டு இருக்க.

“அவர பார்த்தா பயமா இருக்கு முத்து,முதல் நாள் அவரு எதுவுமே பேசாம என்ன கட்டிகிட்டப்போ பயந்து செத்துப் போய்ட்டேன் தெரியுமா,இனிமே நம்ப வாழ்க்கை அம்புட்டுதான் நெனச்சப்போ,அவரு போகச் சொல்லிட்டாரு அடுத்து வந்த நாளல்ல இருந்து இதே கதைதான் எல்லையா கடகமா இதோட விட்டாரேன்னு கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன்,நமக்கு மானம் தான் புள்ள எல்லாமே”,இரு பெண்களும் தவித்து நின்றனர்.

“ஏன் முத்து நம்ம வேணாம் ராகவ் அண்ணாகிட்ட உதவி கேட்டா என்ன,அவரு ரொம்ப நல்லவரு,அப்பாவியும் கூட நம்மள மாதிரி அவரும் இங்க வந்து மாட்டிகிட்டாருனு நினைக்கிறேன்”.

“யாரு அப்பாவி அந்த ஐயரா,அந்த ஆளு அப்பாவி இல்ல புள்ள அட பாவி”,

“என்ன முத்து சொல்லுற”,என்னத்த சொல்ல என்று நேற்று நடந்ததைத் தோழிக்கு சொல்ல அவளும் வாய்யை பிளந்தாள்.

என்ன முத்து ………..

இதுக்கே ரொம்ப அதிர்ச்சி ஆகாத புள்ள இன்னும் நம்பப் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு.

தோழிகள் இருவரும் பேசியவாறே மதிய உணவை செய்து முடித்தனர்,மனதில் இருந்த மன உளைச்சலும்,நேற்று இரவு தூக்கம் இன்மையும் ஆட்டி படைக்கச் சற்றுக் கண் மூடினர்,அவர்கள் உறங்கி கால் மணிநேரத்தில் அய்யோ அம்மா என்று வீடே அதிரும் படி சத்தம் கேட்டது,தோழிகள் இருவரும் அடித்துப் பிடித்து எழுந்து சென்று பார்க்க,அங்கே ராகவனைச் சுவற்றோடு சேர்த்து தூக்கி நிறுத்தி இருந்தான் ஒருவன்.

முத்துவுக்கு ஏக குஷி ,ஐ ….என்று கூவலுடன் கை தட்டியவளை அடக்கினாள் பொன்னி.

இருப்புள்ள என்ன கண்கொள்ளா காட்சியா இருக்குது ரசிக்க விடு புள்ள, தயிர் சாதம் இன்னக்கி காலி……………

அண்ணா என்ன கீழ இறக்கி விடுங்கோ ப்ளீஸ்,நேக்கு என்ன ஜோசியமா தெரியும் இப்புடியெல்லாம் நடக்குமுன்னு.

சா…….என்று அவனைக் கீழ விட்டவன் பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டான்,வந்து இருக்கும் புதியவன் யாருமில்லை ஜானகி,சோமுவின் புதல்வன்,ராகவ்வின் சொந்த அண்ணன்.

அவனிடம் நெருங்கி அவனது தோளில் கை வைத்த ராகவ்வை பார்த்தவன்,”என்னடா இதெல்லாம் அவாளுக்கும்,நமக்கும் சுட்டு போட்ட கூட ஒத்துவராது,புருஞ்சுக்காம என்ன படுத்தி எடுக்குறா,நீயாவது சொல்லி தொலையேன்,இந்த கருமம் எல்லாம் உன்னாலதானே எதாவது பண்ணுடா,நேத்து அம்மாவ கூப்டு மிரட்டி இருக்கா,அம்மா அழராடா,நான் அவள பார்த்தேன் என்ன பண்ணுவேன்னு தெரியாது”,எண்ணையில் இட்ட தண்ணியாகப் படப் பட வெனப் பொரிந்தான் கேசவன்.

அண்ணா நேக்கு ஒரு வாரம் டைம் கொடு,நான் பேசுறேன்.

பேசணும்,பேசி இதுக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு எடுக்கணும்,அவன் அழுத்தமாகச் சொல்ல தலையைக் குனிந்தான் ராகவ்.

இந்தக் கருமத்தை தூக்கி போட்டுட்டு வாடா,நமக்கு இதெல்லாம் ஒத்துவராது,அதற்கு மேல் அவனிடம் பேச புடிக்காமல் சென்று விட்டான் கேசவன்.

அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்த தோழிகளுக்குத் தலையும் ,புரியவில்லை வாலும் புரியவில்லை,சோபாவில் அமைதியாக அமர்ந்த ராகவ் கலைந்த தலை முடியை சரி செய்தவாறு,”முத்து ஸ்டராங்கா ஒரு காபி கொண்டாடி தலை வலிக்கிறது”, ஒன்றும் நடவாதது போல் உரிமையாக கேட்க.
கொந்தளித்தது அந்த குட்டி தீவு ,”எம்புட்டு ஏத்தம் பாத்தியாடி இந்த ஆளுக்குச் சிலிர்த்து எழுந்த முத்து, அவன் முன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க முறைத்து நின்றாள்.

எதுவோ காட்டமாகப் பேசவர அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கி கொண்டான் ராகவ்.

அதிர்ச்சியில் இரு கைகளையும் கொண்டு வாய்யை மூடி கொண்டாள் பொன்னி,முத்துவோ அதிர்ந்து போய் அவனுள் ஒடுங்கி இருந்தாள் முத்து சில வினாடிகள் மௌனமாக கழிய,வாயிலில் கால் அடி ஓசை கேட்க,மெதுவாக முத்துவை பிரித்து அருகில் அமர்த்தி விட்டு தனது அறைக்குச் சென்றான் ராகவன்.

இங்குத் தனது அண்ணகளின் அறைவனைப்பில் அழுது கொண்டு இருந்தாள் அலமேலு,”என்னடா என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா கொஞ்ச நாள் டைம் கொடு,மாப்பிள்ளைய சரிபண்ணி உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்”,அது வரை அழுதவள் விதுரன் முகம் பார்த்து,”சாத்தியமா” சிறு குழந்தை போலக் கையை நீட்டியவளை இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.

ரெங்கணும் அவள் தலையை வருடி கொடுத்தான்,வீட்டின் செல்ல மகள் அல்லவா,அவள் ஆசை பட்டுக் கேட்ட ஒன்றை,இருவரும் செய்து தர வேண்டும்,அதுசரி அவள் ஆசை பட்டது உயிர் அற்ற பொருயென்றால் பரவாயில்லை,உயிர் மற்றும் உணர்ச்சி உள்ள பொருள் அல்லவா,அவனது உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் அதே சமயம் தங்களின் பெண் வாழ்க்கையும் செழிக்க வேண்டும் என்று நியாயமாக யோசித்தனர் அண்ணன்,தம்பி இருவரும்.

ஒருவராக அவளைச் சமாதானம் படுத்தி உணவு கொடுத்து தூங்க வைத்து நிமிரும் போது,விதுரனுக்குப் போன் வந்தது,அதனை காதுக்குக் கொடுத்தவன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை எதிர் முன்னையில் ஒரு பெணின் அழு குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவளை ஒருவன் மிரட்டுவதும் கேட்டது,போனை அணைக்காமல் ரெங்கனை ஜாடையாக அழைத்துப் போனை ஸ்பீக்கர் மோடுக்கு போட்டான்,அதற்குள் ரெங்கன் அந்த நம்பரை எடுத்து அதனை ட்ரெஸ் செய்யத் தனுக்குத் தெரிந்தவர் மூலம் பணிந்தான்,அடுத்த பத்தாவது நிமிடம் வந்து சேர்ந்தது அந்தப் பெணின் முழு ஜாதகமும் உடனே நேரம் கடத்தாமல் அங்கு விரைந்தான் விதுரன்.

கண்ணில் அத்தனை கனல்,ராகவனுக்கு முயன்று கொண்டே காரில் பயணம் செய்தான்,எங்கே அவன் எடுத்தால் தானே,மிகுந்த மன உளைச்சலில் அவன் தூங்கி போனான்,போன் கரடியாகக் கத்தி ஓய்ந்து போனது,”என்ன விதுரா ராகவ் எங்க”,

தெரியல அண்ணா போனை எடுக்க மாட்டேங்கிறான் அவன் அண்ணன் வந்தாக விட்டில் இருந்து தகவல் வந்தது,

அதன் பின் இருவரிடம் மௌனம் மட்டுமே,அங்கு என்ன நடந்து இருக்கும் என்று யூகிக்க முடிந்தது, முதலில் கண் முன் நிற்கும் கடமையை முடிப்போம் என்று அண்ணனும் தம்பியும் அதில் கவனம் செலுத்தினர்,தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் ,அந்தப் பெண்ணை மீட்டு தனது வீட்டுக்கு கூட்டி வந்தான் விதுரன்.

வெள்ளை சட்டை முழுக்க ரெத்தம் படிந்து வந்த விதுரனை பார்த்து பொன்னிக்கு அழுகையாக வந்தது,ஏன் என்று தெரியவில்லை இன்று பயம் பின்னுக்குச் செல்ல,பாசம் முன்னுக்கு வந்து அவளைத் துவள செய்தது.

முத்துவும் பார்த்துக் கொண்டு இருந்தாள்,அவளது பார்வை விதுரன் பின் அழுதுக் கொண்டு வந்த பெண்ணிடம் சென்றது,அவளது நடையில் ஒரு மாறுதலை கண்டு கொண்டாள்,பொன்னியின் கலங்கிய கண்களைப் பார்த்த விதுரன் சிறு முறுவலுடன்,” இந்த பொண்ணுக்கு உங்க டிரஸ் எதாவது இருந்தா கொடு,குளிச்சுட்டு சாப்பிட வை,உங்ககூடத் தங்க வச்சுக்கோ,எதுவும் பேச வேணாம்”என்று கட்டளையிட்டு சென்றுவிட்டான்.

அவன் சொன்னதை இரு தோழிகளும் மறுக்காமல் செய்தனர்,வேகமாக உண்ட அந்தப் பெண்ணைப் பார்க்க பாவமாக இருந்தது,என்ன நடந்து இருக்கும் என்ற யூகத்தில் பெண்கள் இருக்க,உண்டவுடன் அந்தப் பெண் உறங்கிவிட்டால்,ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை,பேச சக்தியும் இல்லை என்பதே உண்மை.

பொன்னியும்,முத்துவும் இரு வேறு மனநிலையில் இருந்தனர்,முத்துவின் எண்ணம் ராகவன் அறைக்குள் என்ன செய்கிறான் உணவு கூட உண்ணாமல்,யார் அந்த புதியவன்,அண்ணனாக இருந்தாலும் ஏன் இத்தனை கோபம் எதுவும் புரியவில்லை,அதை விடச் சாதுவாக இருப்பவனின் அதிரடி தாக்குதலை எண்ணி சற்றுப் பயமாகத் தான் இருந்தது,பார்க்க தயார் சாதம் போல் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருந்தவன்,நான் எல்லாம் குடிப்பேன் என்று நடந்து கொண்டதை நம்ப முடியவில்லை.

பொன்னியோ அவன் சட்டையில் உள்ள ரெத்தத்தைப் பார்த்துத் துடித்துப் போனாள்,காயம் பெரியதாக இருக்குமோ என்ற பயம்,அவனுக்கும் உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்,வழக்கமாக அழைக்கும் அழைப்பும் இல்லை என்றவுடன் சோர்ந்து போனாள்,பாவி மனதுக்கு இது தவறு என்று தெரிந்தாலும்,மனம் அதில் தான் சிக்கி தவிக்கின்றதே என்ன செய்ய…

தினமும் அவன் அழைக்கக் கூடாது என்று வேண்டி தவிப்பவள்,இன்று அழைக்க வேண்டும் என்று தவித்தாள் எதனால்? அறிய விரும்பாத விடை,அவள் எண்ணத்தைக் கலைப்பது போல் அடித்தது இண்டர்காம்,பாய்ந்து சென்று எடுத்தால் பொன்னி,அவன் சொல்லும் முன்பே இதோ வருகிறேன் என்று பால்லை எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினாள்.

வெற்று மார்புடன் தனுக்குத் தானே முதல் உதவி செய்து கொண்டு இருந்த விதுரனை பார்த்துக் கை நடுங்கியது,கூர் முனை கொண்ட சிறிய கத்தி அங்கு அங்கு அவனது உடலை பதம் பார்த்து வைத்தது,ஒரு சில காயங்கள் ஆழமாகத் தான் இருந்தது,கண்ணில் இருந்து வற்றாத ஜீவா நதியாகக் கண்ணீர் பெறுக,அவனை நெருங்கினாள்,தன்னை நெருங்கியவளிடம் இன்னும் நெருங்கி குனிந்தவன் அவளிடம் எதுவோ சொல்ல,முதல் முறையாகத் தைரியம் பெற்று முறைத்தாள்,கூடவே எப்படித் தான் இதழ் பிறக்காமல் பேசிக்கிறானோ என்ற எண்ணம் தோன்றியது.

தனது அறைக்குள் வந்தவள் எதுவும் பேசாமல் மூணு முனுத்துக் கொண்டே படுத்தாள்,”இன்னும் என் பங்குக்கு இரண்டு அடி கொடுத்து இருக்கணும்”,சாதுவாக எதையும் பொறுத்து போகும் பொன்னியவே பொங்கா வைத்து விட்டான் நம் விதுரன்.

  1. ———————————————-
error: Content is protected !!