KKE–EPI 12

அத்தியாயம் 12

 

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது

 

இரவெல்லாம் தூக்கம் பிடிக்காமல் கண்கள் செவ செவ என சிவந்திருந்தது ஜம்புவுக்கு. குளிர் நீர் அடித்து முகத்தைக் கழுவியவன், மங்கி வாங்கி வைத்திருந்த காபியை அருந்தினான். கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்தது. இன்றைய பயணம் சற்று நீண்ட பயணம்தான். இவன் இருக்கும் மனநிலையில் திருச்சியை எத்தனை மணி நேரங்களில் அடைய முடியும் என தெரியவில்லை.

மெய் லிங்கின் மலர்ந்த முகத்தைப் பார்த்து விட்டால் மனதின் களைப்புப் பறந்து விடும் என நினைத்தவன், அவர்களின் வருகையை ஆவலாக எதிர்ப்பார்த்தான். எல்லோரும் வர, குளிருக்கு இதமாய் முகத்தை மூடி முக்காடு போட்டுக் கொண்டு வந்தாள் மெய் லிங்.

‘குளிரா இல்ல முகத்த என் கிட்ட இருந்து மறைக்கிறாளா?’

இந்த முறை ஓடி கடைசி இருக்கையில் அமராமல் இவன் பின்னாலேயே அமர்ந்துக் கொண்டாள். கண்கள் தடித்து வீங்கி இருந்தன. இரவெல்லாம் அழுதிருப்பாள் போல. ஜம்புவுக்கு மனதை பிசைந்தது. அவனை ஓரப்பார்வையாகக் கூட பார்க்காமல் கண் மூடி படுத்துக் கொண்டாள் அவள்.

கோபம் வரவில்லை ஜம்புவுக்கு. நெஞ்சு நிறைய வருத்தம் தான். தன்னைப் பற்றி எல்லாவற்றையும் இவன் சொல்லி இருந்தாலும், பட்டும் படாமல் தானே தன்னைப் பற்றி தெரிவித்திருந்தாள். மனசுக்கு நெருக்கமாக நினைத்திருந்தால் எல்லாவற்றையும் சொல்லி இருப்பாள் அல்லவா என காலம் கடந்து தான் யோசித்துப் பார்த்தான் ஜம்பு. மனம் வெறுமையாய் இருக்க, பழக்க தோஷத்தில் கைகள் ஸ்டீரிங் வீலை லாவகமாக கையாண்டன.

இந்த முறை ஹோட்டலுக்குப் போகாமல் வேன் நேராக உச்சிப் பிள்ளையார் கோயிலை சென்றடைந்தது. கையில் வைத்திருந்த வாட்டர் போட்டலில் முகம் கழுவி தூக்கத்தை விரட்டியவர்கள் அண்ணாந்து அக்கோவிலைப் பார்த்தனர்.

உச்சி வரை ஏற வேண்டுமா, மூட்டு வலி இருக்கிறதே இப்படி பலவாறு சலசலத்துக் கொண்டே படிகளில் ஏற ஆரம்பித்தனர். மெய் லிங்கும் அவர்களுடன் படிகளில் காலை வைத்தாள். மனதின் களைப்பு, உடலைப் பாதிக்க மெல்லவே எட்டு எடுத்து வைத்தாள். பாதி வழியில் எல்லோரும் ஏறி இருக்க, இவள் கொஞ்ச நேரம் நின்று ஒய்வெடுத்தாள்.

“யூ ஓகே?” அருகில் கேட்ட குரலில் கண் மூடி உணர்சிகளைக் கட்டுப் படுத்தினாள் அவள். பின் வலுக்கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் திரும்பி ஜம்புவைப் பார்த்தாள் மெய் லிங்.

“ஐம் ஓகே ஜம்ப். ஜஸ்ட் டயர்ட்” என புன்னகைத்தாள். படி ஏற எத்தனித்தவள் லேசாக தடுமாறினாள். அவளின் கைகளைப் பற்றி கொண்டான் ஜம்பு.

“கம்” கையை விடாமல் இழுத்தான்.

“ஐ கென் க்ளைம்ப்” பிடிவாதமாக அந்த இடத்திலே காலை ஊன்றி நின்றாள்.

“இப் யூ நோ கம், ஐ தூக்கு. ஒகேவா?” குரலை கோபமாக கொண்டு வந்தான் ஜம்பு.

“ஓகே கூல். ஐல் கம்” என அவன் இழுத்த இழுப்புக்குப் போனாள். அவள் நடைக்கு ஈடு கொடுத்து மெல்ல படி ஏறினான் ஜம்பு.  கடைசி படியை அடைந்ததும் தான் அவள் கைகளை விட்டான் அவன். அவர்களை ராணியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஏற்கனவே என் நண்பன் என சொல்லி மெய் லிங் அவருக்கு பல்பு கொடுத்திருந்ததால் வாயை இறுக மூடிக் கொண்டார் அவர்.

பிள்ளையாரை வணங்கிவிட்டு அப்படியே மலையில் நின்று கீழே பரந்து தெரிந்த திருச்சியை கண் குளிர கண்டனர்.

கீழே இறங்கும் போதும் அவள் அருகில் வந்தான் ஜம்பு. அதற்குள் ராணியின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு சலசலத்தவாறே அவருடன் படி இறங்கினாள் மெய் லிங்.

‘மனுஷன பைத்தியம் ஆக்கி ரோடு ரோடா அலைய விட போறா இந்த சீனா பூட்டு’ முனகிக் கொண்டே அவர்களின் பின்னால் வந்தான் ஜம்பு.

பகல் உணவை சாப்பிட ஒரு ஹோட்டலில் நிறுத்தினான் ஜம்பு. மற்றவர்கள் இறங்க, இவள் மட்டும் தலை வலி என வேனிலேயே இருந்துக் கொண்டாள். மங்கியுடன் மற்றவர்களை அனுப்பியவன், இவளுக்கு காவலாக அங்கேயே இருந்தான்.

இவன் சாப்பிடவில்லை என்பதை கூட கண்டுக்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. கண்ணை மூடி சீட்டில் சாய்ந்துக் கொண்டாள். அவளை சிரித்த முகமாகவோ, கோப முகமாகவோ மட்டுமே பார்த்திருந்த ஜம்புவுக்கு இந்த சோக முகம் மனதை பிசைந்தது. சாம்பார் சாதம் வாங்கி வந்து கொடுக்கும் படி மங்கிக்கு ஒரு மேசேஜை தட்டிவிட்டு காத்திருந்தான் ஜம்பு. அவனும் கொண்டு வந்து கொடுத்து விட்டு உள்ளே மற்றவர்களிடம் விரைந்து விட்டான். பின் சீட்டின் கதவைத் திறந்து ஏறி அவள் அருகில் அமர்ந்தான் ஜம்பு.

“மெய் லிங்!” மெல்ல அழைத்தான்.

கண் திறக்காமலே,

“ஹ்ம்ம்” என்றாள்.

“ஈட்”

“டோண்ட் வாண்ட்”

“ப்ளிஸ் ஈட்”

“காண்ட் யூ அண்டர்ஸ்டேண்ட் தட் ஐ சே நோ! ஷூகாய்(போய் தொலை)” என கோபமாக கத்தினாள் மெய் லிங்.

“யப்பா, என்ன கோபம் வருது உனக்கு! முகம்லாம் சிவந்துப் போச்சுடி. கோபத்துல அழகா இருந்து வேற தொலைக்கிற.” முணுமுணுத்தான் ஜம்பு.

“வாட்?” அதற்கும் கத்தினாள்.

“நத்திங்!”

“போடா” வெளியேற சொல்லி கதவை காட்டினாள்.

“போறேன், ஈட். மார்னிங் நோ ஈட், நவ் ஈட்”

என்ன சொன்னாலும் உனக்குப் புரியாதா என்பது போல பார்த்தவள், கண்களை இறுக மூடி ஜன்னலில் சாய்ந்துக் கொண்டாள். சில நிமிடங்களில் மூக்கின் அருகில் சாப்பாட்டு வாசனை. கண்ணைத் திறந்துப் பார்த்தாள் மெய் லிங். கரண்டியில் சாதத்தை அள்ளி அவள் வாயருகே வைத்துக் கொண்டு காத்திருந்தான் ஜம்பு. முகத்தில் கெஞ்சல் நிரம்பி வழிந்தது.

“சாப்பிடு ப்ளிஸ்”

“யூ ஆர் சோ ஸ்டபர்ன் ஜம்ப். ஐ டோனோ ஹவ் ஐம் கோன மேனேஜ் யூ” பெருமூச்சொன்றை விட்டவள், வாயைத் திறந்தாள்.

“என்னை என்னா வேணும்னாலும் திட்டிக்க. ஆனா சாப்பிடாம மட்டும் இருக்காத”

அவள் வாயைத் திறக்கவும், உணவை அள்ளி அள்ளி ஊட்டினான். சாப்பிட போனவர்கள் வந்து விடுவார்களோ என்ற அவசரம் ஒரு புறம், எங்கே போதும் என சொல்லி விடுவாளோ என பயம் ஒரு புறம் உந்த அவரமாக ஊட்டினான்.

“வாயை நல்லா தொறயேன்டி. சிட்டுக்குருவி மாதிரி கொஞ்சமா திறந்தா எப்படி ஊட்டி முடிக்கறது?”

“என்னா?”

“ஒன்னும் இல்லை. சாப்பிடு!”

“இனாப்! யூ ஈட் ஜம்ப்” என சொல்லியவள் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

உதட்டில் கரண்டியை வைத்து திறக்க சொல்லி முயற்சி செய்தான் ஜம்பு. அதுவோ அலிபாபா குகை மாதிரி இறுக்கமாக மூடிக் கொண்டது. வேறு வழி இல்லாமல் மீத உணவை அள்ளித் தன் வாயில் திணித்துக் கொண்டான் ஜம்பு.

மற்றவர்கள் திரும்பி வரும் நேரம் ஆகவும் அவசரமாக வேனில் இருந்து இறங்கியவன் கையைப் பற்றினாள் மெய் லிங்.

“ஜம்ப்”

“என்னம்மா?”

“கம் டு மை ரூம் டுநைட்!” என அழைத்தாள்.

அதிர்ந்துப் போய் நின்றான் ஜம்பு. பின் கஸ்டப்பட்டு குரலை வெளிக் கொணர்ந்தவன்,

“நோ மெய் லிங். அது ரோங்” என்றான்.

“யூ ஆர் கமிங்!” அவன் கண்களை நேராக நோக்கி ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி சொன்னாள் மெய் லிங். மறுப்புக்கு இடம் கொடுக்காத தொனி.

இருந்தாலும் தைரியத்தைக் கூட்டி மறுக்க வாய் திறந்தவனை அவளின் ஒற்றை முறைப்பு அடக்கியது. போய் உட்காரு என்பது போல அவள் காட்டிய ஜாடையில் அமைதியாக போய் ட்ரைவர் சீட்டில் அமர்ந்தான் அவன். மெய் லிங் கையில் ஜம்பு ஒரு ஜிம்மியாகவே மாறிப்போனான்.

மற்றவர்கள் வந்ததும் வேன் ஹோட்டலை நோக்கி பயணப்பட்டது. எல்லோரும் பெட்டியை எடுத்துக் கொண்டு களைப்புடன் இறங்கினார்கள். குளித்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் மீண்டும் வேனில் இருந்தார்கள்.

ஜம்பு வேனை ஜம்புகேஸ்வரர் ஆலயத்துக்கு ஓட்டி சென்றான். ஆலயத்தின் பெயரை இவன் சொல்லும் போது ஆச்சரியமாகப் பார்த்தாள் மெய் லிங். எல்லோரும் இறங்கியதும்,

“யூவர் நேம் ஜம்ப்?” என அவனிடம் அதிசயமாகக் கேட்டாள்.

“ஆமா, மை அம்மா கம் ஹியர் ஒன்லி தெரியும் ப்ரெக்னென்ட்னு. அதான் மீ ஜம்பு. லிங்கம் பேமிலி நேம்”

“இண்டெரஸ்டிங்” என புன்னகைத்தவள், அந்த கோயிலில் மட்டும் விழுந்து விழுந்து கும்பிட்டாள். அவள் செய்கை ஜம்புவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு, ஹோட்டலுக்குப் போனார்கள். மறுபடியும் ரூமுக்கு வருவதைப் பற்றி அவள் பேசாததால் ஒரு வகை நிம்மதியில் இருந்தான் ஜம்பு. அதற்கு ஆப்பு வைப்பது போல, அவன் கையில் ஒரு துண்டு சீட்டை திணித்து விட்டுப் போனாள் மெய் லிங்.

மங்கி பார்க்காத போது, கை நடுங்க அதைப் பிரித்தான் ஜம்பு. ரூம் 103, டைம் 12 என எழுதி தந்திருந்தாள்.

‘பேய் நடமாடற நடுநிசி நேரத்துல ரூமுக்குக் கூப்பிடறாளே சீனா புட்டு. கடவுளே என் கற்புக்கும் அவ கற்புக்கும் எந்த சேதாரமும் வராம காப்பாத்துப்பா. டெம்பள் டூருக்கு வந்த மனுஷனுக்கு நீ இந்த மாதிரி சோதனையெல்லாம் வைக்கக் கூடாதுப்பா. அவ கண்ணசைச்சாலே நான் கவுந்துடற அளவுக்கு வீக்கா இருக்கேன். ப்ளிஸ் கருணை காட்டி என்னை காப்பாத்து’ என வேண்டிக் கொண்டான் ஜம்பு.

மங்கி தூங்கும் வரை இவனும் தூங்குவது போல பாசாங்கு செய்தான். மணி பதினொன்று ஐம்பது ஆனதும் மெல்ல வேன் கதவைத் திறந்துக் கொண்டு வெளியேறினான். அவள் ரூமை அடைந்த போது கரெக்டாக மணி பனிரெண்டு. கதவுக்கே வலிக்கும் என்பது போல மெல்ல தட்டினான்.

பட்டென திறந்துக் கொண்டது கதவு. அவனை உள்ளே இழுத்து அவசரமாக கதவை மூடினாள் மெய் லிங். உள்ளே கைப்பிசைந்தபடி நின்றவனை தன் கூர் விழிகளால் பார்த்து நின்றாள்.

“ஜம்ப்”

“ஹ்ம்ம்”

அவளைப் பார்க்காமல் ட்ரெசிங் டேபிளைப் பார்த்து பதிலளித்தான்.

“லுக் அட் மீ ஜம்ப்”

பார்வையை கஷ்டப்பட்டு அவள் மேல் நிறுத்தினான். அன்று போல் கை இல்லாத சின்ன டீ சர்ட் அணிந்திருந்தாள். நல்ல வேளையாக அவனை சோதிக்காமல் முழு பைஜாமா பேண்ட் அணிந்திருந்தாள்.

“எதுக்கு கூப்பிட்ட மெய் லிங்? வை?” என அவள் விழிகளைப் பார்த்து கேட்டான் ஜம்பு.

இரண்டே எட்டில் அவனை நெருங்கியவள், இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டாள். அதிர்ச்சியாகி போனான் ஜம்பு. மனம் அதிர்ந்தாலும் கைகள் தானாகவே நீண்டு அவளை வளைத்துக் கொண்டது.

அவளின் தலை உச்சியில் கன்னத்தை வைத்துக் கொண்டு அப்படியே நிலை மறந்துப் போய் நின்றிருந்தான் ஜம்பு. அவளும் பிடியை இறுக்கினாளே தவிர அவனை விட்டு நகரவில்லை.

“ஐ லவ் யூ டி மெய் லிங்”

அவனின் காதல் எனும் வார்த்தையைக் கேட்டவளின் உடல் விறைத்தது. மெல்ல அவன் அணைப்பில் இருந்து விலகியவள், கட்டிலில் போய் அமர்ந்து கொண்டாள்.

“கம் சிட் ஜம்ப்” என கட்டிலைக் காட்டினாள்.

நடந்துப் போய் அவள் அருகில் அமர்ந்தான் ஜம்பு. கைகளைப் பிசைந்தபடி அமைதியாக இருந்தாள் அவள். ஏதாவது பேசுவாள் என அவனும் அமைதியாக இருந்தான். வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை ஒரு மிடறு விழுங்கினாள். அது உதட்டின் ஓரம் வழிந்தது. கை நீட்டி நீரைத் துடைத்து விட்டான் ஜம்பு. அவன் கையை அங்கேயே அழுத்திப் பிடித்துக் கொண்டவள் அப்படியே கண்களை மூடிக் கொண்டாள். தன் கையை அவளிடம் கொடுத்து விட்டு அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான் ஜம்பு.

“திஸ் லவ் பிட்வீன் அஸ், காண்ட் பீ ஹேப்பனிங் ஜம்ப். கரெக்ட் இல்ல” அதை சொல்லும் போது கண்ணீர் வழிந்தது அவள் கண்களில்.

அவனுக்குமே அது புரிந்து தானே இருந்தது. ஆனாலும் மனதில் பேயாட்டம் போடும் உணர்வுகளை எப்படி அடக்குவது என தெரியாமல் நொந்தான். அவள் அழுவதைப் பார்க்க முடியாமல், அவளின் கைகளைப் பற்றினான் ஜம்பு.

“யூ நோ லவ் மீ, இஸ் ஓகே! யூ டோண்ட் க்ரை மெய் லிங். எனக்கு கஸ்டமா இருக்கு. ப்ளிஸ் நோ க்ரை. நான் மட்டும் லவ் பண்ணிட்டுப் போறேன், விடு” அவளை சமாதானப்படுத்தினான்.

தலையை இடம் வலமாக ஆட்டினாள் மெய் லிங்.

“என்ன? நானும் நோ லவ்வா? அத நீ சொல்லக் கூடாது. எனக்கு உன் மேல சோ மச் லவ். அத யாராலும் தடுக்க முடியாது. ஈவன் யூ நோ தடுக்க முடியாது” அவள் கைகளை விட்டு விட்டு தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

அவன் கண்களை நேராகப் பார்த்தவள்,

“வோ ஐ நி ஜம்ப்!” என்றாள்.

“வாட்?”

ஒன்றும் இல்லை என தலையாட்டினாள். முகத்தில் மெல்லிய வெட்கப் புன்னகை.

“சொல்லுடி வாட்?” அவளின் திடீர் வெட்கப் புன்னகை அவனை புரட்டிப் போட்டது. மெல்ல அவளை ஒட்டி அமர்ந்தான். இன்னும் முகம் சிவந்தது அவளுக்கு.

“ஏய், என்னன்னு சொல்லுடி. இப்படி வெட்கப் படற! ப்ளீஸ் டெல்”

“க்ளொஸ் யுவர் ஐஸ்”

கண்களை மூடிக் கொண்டான் ஜம்பு. அவள் அருகில் நெருங்குவதை உணர முடிந்தது அவனால். பவுடர் வாசமும், மெல்லிய பர்பியும் வாசனையும் அவன் நாசியுள் நுழைந்து அவன் சிந்தையை மயக்கியது. அவன் காதின் அருகே குனிந்தவள்,

“நான் ஒன்னை காடலிக்கிறேன்” என்றாள். பட்டென கண்ணைத் திறந்தான் ஜம்பு.

“என்ன சொன்ன, மறுபடி டொல்லு, சை சொல்லு. டெல் அகைன்”

புன்னகை இப்போது சிரிப்பாக மாறியது மெய் லிங்குக்கு.

“ஐ லவ் யூ ஜம்ப்”

“நெஜமாவா? சத்தியமாவா? காட் ப்ராமிஸ்?”

“யெஸ் ஜம்ப். ப்ராமிஸ், காட் ப்ராமிஸ்.”

அவனுக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை. நடக்குமா, எனக்கு கிடைக்குமா இவளின் காதல் என மனதில் போட்டு மறுகிய நொடிகள் அப்படியெ கரைந்து விலகி போயின. மனம் முழுக்க சந்தோஷம், முகம் முழுக்க சந்தோஷம். அவனால் நம்பவே முடியவில்லை. பட்டென தன் முகத்தில் தானே அறைந்துக் கொண்டான்.

“ஹேய் ஜம்ப்! வாட் ஆர் யூ டூயிங்?” அதிர்ச்சியாக கேட்டாள் மெய் லிங்.

“ட்ரூவா பொய்யா டோ நோ! அதான் டெஸ்டிங்”

சிரிப்பு வந்தது அவளுக்கு.

“இட்ஸ் ட்ரூ மை ஜம்ப்.” அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். அவளின் ஈர முத்தம் தான் காண்பது கனவு இல்லை என நிரூபித்தது. முகம் முழுக்க சந்தோஷத்தில் அம்முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தான் ஜம்பு.

(திக்கித் தவித்து ஜம்புவுக்கு புரியும்படி அவள் சொன்ன காதல் வரிகள் உங்களுக்காக தமிழில்)

“மனசு முழுக்க வலியோட இந்த நாட்டுக்கு வந்தேன் ஜம்ப். ஆனா இப்போ இந்த உலகத்துலேயே நான் மட்டும் தான் சந்தோஷமா இருக்கேன்ற மாதிரி ஃபீல் பண்ணுறேன். என்னடா பண்ண என்னை? எப்படி மயக்கின? இந்த கறுத்த நிறமா? நேசத்த மட்டுமே காட்டுற இந்த கண்களா? கூரா நீட்டிகிட்டு குத்தவா குத்தவான்னு கேக்குதே இந்த மூக்கா? என்னைப் பார்க்கறப்ப மட்டும் மலர்ந்து ஆசையா சிரிக்குதே இந்த வாயா? ஆம்பளைடி நானுன்னு முறுக்கிக் கிட்டு இருக்கே இந்த மீசையா? என் கூட இருந்தா ஈ, எறும்பு கூட உன்னைத் தீண்டாதுன்னு பாதுகாப்பா உணற வைக்கிற இந்த ஆளுமையான உருவமா? தெரியல ஜம்ப், இதுல எதுலயோ நான் உன் கிட்ட விழுந்துட்டேன்.”

அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்துக் கொண்டாள் மெய் லிங்.

“சிங்கப்பூருல எனக்கு நிறைய ப்ரேண்ட்ஸ் இருக்காங்க. இந்தியன், மலாய், சைனிஸ் இப்படின்னு. ஆம்பளைங்க, பொண்ணுங்க எல்லாமே எனக்கு ப்ரேண்ட்ஸ். ஆனா இவங்க யாருகிட்டயும் இந்த பாதுகாப்பு உணர்வ நான் அனுபவிக்கல. தொட்டு அடிச்சு விளையாடிருக்கேன் பாய்ஸ் கூட. எதுவும் வித்தியாசமா தோணுனது இல்ல ஜம்ப். நீ தொடறப்போ மட்டும் ஒரு கூச்சம், என்னோட ஸ்கின்ல நெருப்பு வச்சிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அது ரொம்ப சுகமா இருந்துச்சு.”

அவன் நெஞ்சில் இருந்து தலை நிமிர்த்தி,

“ஏன்டா என் மேல உனக்கு இவ்வளவு ஆசை? இந்த ரெண்டு கண்ணால பாத்து பாத்து என்னைக் கவுத்துட்ட. ப்பா, என்ன பார்வைடா அது! எப்போ பாரு அந்த ரியர் வியூ கண்ணாடி வழியா உயிரை ஸ்ட்ரோ போட்டு உரிஞ்சுற மாதிரி ஒரு பார்வை. எங்க நான் போனாலும், வந்தாலும் இந்த ரெண்டு கண்ண வச்சுப் பார்த்துட்டே இருக்கறது. கண்ணாலயே காதல எனக்குள்ள கடத்திட்டடா. எனக்குன்னு ஒன்னுனா உன்னோட பதட்டம், நான் சீக்கா இருந்தப்ப நெஞ்சுல சாய்ச்சு பார்த்துகிட்ட பாங்கு, சாப்பிடலனா துடிச்சுப் போய் ஊட்டுவிட துடிக்கறது, என் கண்ணுல தண்ணிய கண்டதும் தடுமாறனது, என்னை செக்சியா பார்த்துட்டு வெட்கப்பட்டது எல்லாமே பிடிச்சது. ரொம்ப ரொம்ப பிடிச்சது. ஐ லவ் யூ ஜம்ப்.”

“நானும் தான். ஐ லவ் யூ சோ மச் சமூ”

“சமூவா?”

“ஆமா என்னோட சப்பை மூக்கி” என்றவன் அப்படி என்றால் என்ன அர்த்தம் என அவளின் மூக்கைத் திருகி விளக்கினான்.

“ஓஹோ! உனக்கு மூக்கு நீட்டிக்கிட்டு இருந்தா மத்தவங்க மூக்க கிண்டல் அடிக்க சொன்னுச்சா?” என கேட்டவள் தன் மூக்கை வைத்து அவன் மூக்கைத் தேய்த்தாள்.

“விடுடி சமூ. லேசா தெரியற மூக்கு இன்னும் தேஞ்சிற போது”  இதுதான் சாக்கு என அவன் மூக்கை வைத்து அவள் மூக்கை நன்றாக உரசினான் ஜம்பு. உதடும் உதடும் சண்டை போடுவதுதான் சுகம் என யார் சொன்னது? மூக்கும் மூக்கும் சண்டை போடுவது கூட சுகம்தான், பரம சுகம். அந்த சுகத்தை ஆழ்ந்து அனுபவித்தான் ஜம்பு.

“போதும் போ, வலிக்குது!” என அவனைப் பிடித்து தள்ளிவிட்டவள்,

“ரூமுக்கு கூப்பிட்டப்போ, என்னம்மோ நான் பாஞ்சு உன்னை ரேப் பண்ணிருவேன்ற மாதிரி லுக் குடுத்துட்டு இப்போ ஓவரா ஒட்டாத. தள்ளியே நில்லு!” என கட்டிலில் அவன் உட்கார்ந்திருக்க நாற்காலி எடுத்து வந்து அவன் முன்னே அமர்ந்தாள்.

“நிஜமா என்னைக் காதலிக்கறியாடி? என்னால இன்னும் நம்ப முடியல”

“நம்பு ஜம்ப். எனக்கே முதல்ல இது லவ் தான்னு தெரியல. ஆனா உன்னைப் பார்க்கறப்போ, உன் கிட்ட பேசறப்போலாம் ஒரு குட் பீலிங். ஒரு ஸ்ட்ரேஞ்சர பார்த்தா எப்படி பயந்து, ரொம்ப யோசிச்சுப் பேசுவோம், அந்த மாதிரிலாம் உன் கிட்ட எனக்கு ஸ்ட்ரேஞ்சர் பீல் வரவே இல்ல. நான் சாப்பிட்டத நீ சாப்பிட்டப்போ என்னடா இவன்னு ஆச்சரியம் தோணுச்சே தவிர அருவருப்பு தோணல. சோ ஸ்வீட் நீ ஜம்ப்.”

“அப்புறம் ஏன்டி நான் கொஞ்சம் நெருங்குனா முறைச்சுகிட்டே சுத்துன?”

“நான் என்ன பண்ணட்டும்? உன் அருகாமை எனக்கு இதம் தருதுன்னு நினைக்கறப்போ எவ்வளவு பயம் வந்துச்சு தெரியுமா? பெரிய தப்பு பண்ணுற மாதிரி கில்ட்டி பீலீங். அது வரைக்கும் நட்பையும் தாண்டி உன் மேல ஒரு ஈர்ப்புன்னு தான் நினைச்சேன். ஆனா இது காதல் தான்னு நான் எப்போ கன்பர்ம் பண்ணேன் தெரியுமா? ஆஸ்ரமத்துல உட்கார்ந்து தியானம் செய்யறப்போ தான். கண்ணு முன்னுக்கு உன் முகம் தான் வந்து வந்து போச்சு. மறுபடி மறுபடி மனச ஒரு நிலைப்படுத்த ட்ரை பண்ணறேன், அப்பவும் உன் சிரிச்ச முகம்தான் வருது ஜம்ப். அதான் அன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டேன்.”

சற்று நேரம் அமைதியாக அவனையே ஆழ்ந்து நோக்கியவள்,

“மனச ஒரு நிலைபடுத்தி ஒரு விஷயத்துல எண்ணங்களை கொண்டு வந்து செய்யறதுதான் தியானம். சிலர் கடவுள் மேல எண்ணங்களை நிலைப்படுத்தி செய்வாங்க, சிலர் மந்திரங்கள் மேல மனத குமிச்சு தியானம் செய்வாங்க. நான் நெத்தியில ஆரஞ்சு நிறத்துல வர வட்த்துல என் சிந்தனைய குவிச்சு தியானம் செய்வேன். ரொம்ப நாளா செய்றேன் ஜம்ப். எப்பவுமே என் மனம் தடுமாறனதே இல்ல. அன்னிக்கு அந்த ஆரஞ்சு வட்டத்துல நீ சிரிச்சப்படி வந்து நிக்கற. எனக்கு உடம்பெல்லாம் ஆடிப்போச்சு. என் ஆழ் மனசுல நீ ஆழமா பதியாம இது நடக்க சான்ஸ் இல்ல ஜம்ப்.” சொல்லும் போதே குரல் உடைந்துப் போனது அவளுக்கு.

நாற்காலியில் இருந்து எழுந்தவள் அவன் மடியில் அமர்ந்து கொண்டாள். அவன் கன்னத்தை தன் இரு கைகளாலும் தாங்கியவள்,

“இது தப்பு ஜம்ப். இந்த காதல் தப்பு. நீயும் நானும் இப்படி ஒட்டிகிட்டு உட்கார்ந்து இருக்கறது தப்பு” என சொல்லியபடியே அவனின் முரட்டுக் கன்னத்தை வருடினாள்.

“தப்பு மாதிரிதான் இருக்குடி. நம்ம காதல சொல்லல. நீ இப்படி ஆசையா தடவறத சொன்னேன்.” அவன் நெளியவும் இவளுக்கு சிரிப்பு வந்தது.

“இன்னொரு தப்பும் சேர்த்து செஞ்சிறலாமா ஜம்ப்?”

“இல்ல, இல்ல நீ இறங்கு கீழ!” என சொல்லி தொடையில் இருந்து தள்ள முயன்றான் ஜம்பு. அப்பொழுதுதான் இன்னும் உடும்பு போல ஒட்டிக் கொண்டாள் மெய் லிங்.

“இப்போ பாரு உம்மா குடுக்கப் போறேன்!” என அவனை விளையாட்டாய் மிரட்டியபடியே தன் பிங்க் அதரங்களை அவனருகில் கொண்டு வந்தாள்.

“நோ, நோ. தப்புடி இது!” என அவன் சொல்லவும், விளையாட்டாய் அருகே வந்தவளுக்கு கொடுத்தால்தான் என்ன என தோன்றி விட்டது.

“சரியா செஞ்சா எதுவும் தப்பு இல்லை” என்றவள் அவன் உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தினாள். வேண்டாம் என தலையாட்டியவனை விடவே இல்லை மெய் லிங். தைரியமாக இதழணைத்து விட்டாலும், அதற்கு மேல் போக முடியாமல் அப்படியே அவன் உதட்டோடு தன் உதட்டைப் பொருத்தியபடி அமர்ந்திருந்தாள்.

“என்னை கொல்ல வந்த ராட்சசிடி நீ” என்றவன் இவனாகவே அவளை வளைத்து உதட்டை முற்றுகையிட்டான். குறும்பு சிரிப்பு நெளிந்தது அவள் உதட்டில்.

“செய்யறதையும் செஞ்சு உசுப்பேத்தி விட்டுட்டு சிரிக்கிறியா சீனா லட்டு!’ என்றவன் மீண்டும் மீண்டும் முத்தமிட்டான். ஒரு வழியாக மூக்கு யுத்தமும், முத்த யுத்தமும் முடிந்து ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.

“ஜம்ப்!” என அழைத்தவள் அவன் பரந்த மார்பில் ஒண்டிக் கொண்டாள்.

“என்னடி சமூ!”

“என்னை இப்படியே உன் நெஞ்சுக்குள்ள பொத்தி வச்சிக்கிறியா? வெளிய விட்டா நான் காணாமல் போயிருவேன்”

அவள் சொன்னதின் அர்த்தம் புரிய இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ஜம்பு.

“கவலையா இருக்குல்ல ஜம்ப்! இது, இந்த லவ் சரிப்பட்டு வராதுன்னு நான் முடிஞ்ச அளவு உன்னை விட்டு தள்ளி நின்னேன். நீ தொடறப்போ தட்டி விட்டேன். உன்னை கிறுக்குப் பிடிக்க வச்சேன். ஆனாலும் தள்ளி இருக்க முடியாம எப்படியாவது உன் கிட்ட பேசி பழக வந்துடுவேன். அப்புறம் என்னையே திட்டிகிட்டு ராணி ஆன்ட்டி பின்னால போய் ஒளிஞ்சிக்குவேன். ஆனா முடியல ஜம்ப். என்னால போராட முடியல. உன் நினைப்பாவே இருக்கு. நீ வேணும்னு மனசும் உடம்பும் துடிக்குது. அதனாலத்தான் இப்போ சொல்லிட்டேன். என் மனச திறந்து சொல்லிட்டேன்” என்றவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

இவ்வளவு நேரம் ஆசை ஆசையாக உள்ளத்து காதலை எல்லாம் உதட்டு வழி அவனுள்ளே அனுப்பியவள், மடிந்து தேம்பி அழவும் ஜம்புவுக்கு சர்வமும் பதறியது.

“நோ க்ரை மெய் லிங், ப்ளிஸ்டி நோ க்ரை” அணைத்து தேற்ற முயன்றான். அவனைத் தள்ளிவிட்டாள் அவள்.

“டோண்ட் டச் மீ”

“என்னது நோ டச்சிங்கா? நீதான்டி நாற்காலி மாதிரி என்னை நினைச்சு என் மடியில உட்கார்ந்திருக்க. இவ்வளவு நேரம் வேணா வேணான்னு சொல்ல நீதாண்டி என் மேல விழுந்து பிராண்டன! இட்ஸ் யூ! நவ் வை நோ டச்சிங்? டால்க் மீ டி” முசுமுசுவென கோபம் ஏறியது ஜம்புவுக்கு. அவள் நிமிர்ந்து பாவமாக அவன் முகத்தைப் பார்க்கவும் புஸ்சென கோபம் வடிந்தது.

‘அடைச்சை! இவ கிட்ட கோபப்பட கூட முடியலியே. இப்படியே போனா வாழ்நாள் முழுக்க என்னை வச்சி செய்வாளோ?’ திகில் அடித்தாலும் அதுவும் சுகமான திகிலாகவே இருந்தது.

“நான் உன்னைக் காதலிக்கறேன். ஆமா நான் ஒத்துக்கறேன். ஆனா அதுக்கு எதிர்காலம் இல்ல ஜம்ப். நீயும் நானும் சேர முடியாது. அது தான் விதி”

“வை வை? நான் இந்தியனாலயா?”

ஆமென தலையாட்டினாள் மெய் லிங்.

“இந்தியன்னா அவ்வளோ கேவலமா? நாங்க வைப்ப ஐஸ் கலங்காம பாத்துக்க மாட்டோமா, இல்ல உட்காரவச்சி நூடுல்ஸ் போட மாட்டோமோ? வை யூ சீ ஜாதி, மதம், கண்ட்ரீ ஆல்? நோ மெய் லிங். யூ சீ ஒன்லி மை ஹார்ட். கோல்ட் டீ இது. சொக்க கோல்ட். உன்னை நெஞ்சுக்குள்ள மட்டும் இல்ல இந்த ரெண்டு கண்ணுக்குள்ளயும் வச்சு தாங்குவேன்டி சமூ”

விரக்தி புன்னகை ஒன்று அவள் உதடுகளில் நெளிந்தது.

“என்னோட கதைய சொன்னத்தான் உனக்குப் புரியும் ஜம்ப்” என்றவள் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். பின் அவன் கன்னத்தைப் பற்றி மீண்டும் உதடுகளில் முத்தமிட்டாள்.

“விடுடி! நான் வேணாமாம், என் காதல் வேணாமாம், என் முத்தம் மட்டும் வேணுமாம். லீவ் லீவ்!” என முனகினாலும், அவளுக்கு வாகாக வாயைக் காட்டியபடி தான் அமர்ந்திருந்தான் கேடி ஜம்பு. அவளுக்கு கவலையிலும் சிரிப்பு வந்தது.

“மை ஸ்வீட் ஜம்பு” என கொஞ்சிக் கொண்டாள் மெய் லிங்.

“இதுதாண்டி ஐ வாண்ட். தினமும் இப்படி நீ என்னை கொஞ்ச, மீ உன்னை கொஞ்ச லைப் ஹேப்பியா போகும்டி. என்னை மேரி பண்ணிக்கடி” கெஞ்சினான் ஜம்பு.

அவன் வாயிலே ஒன்று போட்டாள் மெய் லிங்.

“நோ மேரேஜ் ,வெடிங் ஆல்!” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

“சரி டால்க் மீ. உன் கதைய டெல். நாம சேர ஏதாச்சும் வேய்(வழி) இருக்கா பார்க்கலாம். லெட்ஸ் சீ”