KKE–EPI 17

அத்தியாயம் 17

 

திரிவேந்திரம் ஏர்போர்ட் கேரளாவின் முதல் ஏர்போர்ட் ஆகும். இது 1932ல் நிர்மாணிக்கப்பட்டது.

 

மறுநாள் ஷோப்பிங்கிற்காக ஒதுக்கப்பட்டது. கால் கடுக்க கடை வீதிகளை சுற்றி வந்தார்கள் எல்லோரும். மெய் லிங் ஜம்புவை கண்களால் நிரப்பிக் கொண்டாளே தவிர அவன் அருகே போகவில்லை.

அவன் என்னுடனே இருந்து விடு என்று கேட்டுவிட்டால் சத்தியமாக சரி என சொல்லி விடும் நிலமையில் இருந்தாள். அதற்கு பயந்தே ஒதுங்கிப் போனாள். அவனும் அவள் அருகில் வர முயற்சிக்கவில்லை.

ஏர்போர்ட் கிளம்ப நேரம் வந்ததும், எல்லோரும் வேனில் வந்து ஏறினார்கள். மெய் லிங்குக்கு துடைக்க துடைக்க கண்கள் வேர்த்தது. கறுப்பு கண்ணாடியை எடுத்து அணிந்துக் கொண்டாள். கூலர்ஸ் வழியாக ரியர் வியூ மீரரில் தெரிந்த ஜம்புவைப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள்.

ஏர்போர்ட்டை அடைந்ததும் அவரவர் லக்கேஜ்களை கரேக்டாக செக் செய்து எடுத்தனர் எல்லோரும். மங்கிக்கும், ஜம்புவுக்கும் நன்றி உரைத்தவர்கள் அன்பின் பரிசாய் பணத்தையும், சில பரிசு பொருட்களையும் கொடுத்தனர். மங்கி அவர்களை உள்ளே அழைத்து செல்ல, மெய் லிங் தயங்கி தயங்கி நின்றாள்.

“வா மெய் லிங்” அவளது லக்கேஜ் பேக்கை எடுத்துக் கொண்டான் ஜம்பு.

“ஜம்ப்”

“என்னடி?” அவளின் சோகத்தை இவனால் தாங்க முடியவில்லை. தனது துயரத்தை அடக்கி வைத்தவனுக்கு அவள் துயர் காண சகிக்கவில்லை.

“ஆல் இஸ் வெல். சீக்கிரம் என்னை பர்கேட் பண்ணிருவே. டோன் வொரி, டோன்ட் க்ரை” என்றான்.

“ஐ அம் சாரி ஜம்ப்”

“சொல்லதடி, சாரி மட்டும் சொல்லாதே! நம்ம லவ் நோபடி மிஸ்டேக். நடந்துப்போச்சு, விட்டுரு. சாரி டெல், நம்ம லவ் இஸ் தப்பு மாதிரி இருக்கு. சோ நோ சாரி. ஓகேவா?”

“ஹ்ம்ம்”

“இன்சைட் போலாமா?”

“ஹ்ம்ம்”

“என்னடி சமூ?”

“ஒரு தடவை கென் வீ சிங் அவர் சாங்?”

“ஹ்ம்ம்”

“கீச்சு கீச் என்டது”

“கிட்ட வா என்றது” பதில் கொடுத்தவன் அவளை நெருங்கினான்.

அவளும் அவனை நெருங்கி கையைப் பிடித்துக் கொண்டாள். சுற்றி ஆள் நடமாட்டம் இருக்க, எதையும் அவள் கண்டுக் கொள்ளவில்லை.

“வோ ஐ நீ ஜம்ப்” எக்கி அவன் உதட்டில் தன் உதட்டைப் பொருத்தினாள்.

தன் காதலியிடம் இருந்து பெறப்படும் கடைசி முத்தமாயிற்றே! தன் முழு உயிரையும் முத்தத்தில் வைத்து அவளுக்கு ஊட்டினான் ஜம்பு.

“மெய் லிங்!” எனும் கடுங்குரல் அவர்கள் இருவரையும் நிஜ உலகுக்குக் கொண்டு வந்தது.

“பாப்பா!” கலவரமாக ஜம்புவைப் பார்த்தாள் மெய் லிங்.

“ஹவ் டேர் யூ!” பளாரென அவரின் கை அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது. ஜம்பு சுதாரிப்பதற்குள் அவனுக்கும் பல அறைகள் விழுந்தது. மெய் லிங்கின் அப்பா என்பதால் கிடைத்ததை வாய் திறக்காமல் வாங்கிக் கொண்டான் ஜம்பு.

“பாப்பா, லீவ் ஹிம் பாப்பா. ப்ளீஸ் பாப்பா. ஹீ இஸ் இன்னசண்ட். லீவ் ஹிம் பாப்பா” அவரின் கைப்பிடித்து கதறினாள் மெய் லிங்.

கோபத்தில் அவள் புறம் திரும்பியவர் அவள் மறுகன்னத்தில் இன்னொரு அறை வைத்தார். உதடு கிழிந்து ரத்தம் வந்தது. பொங்கி விட்டான் ஜம்பு.

“யோவ், என் சமூ மேல இன்னொரு முறை கை வச்ச பொழந்து கட்டிருவேன்” என அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டான். மெய் லிங்கின் கன்னத்தைப் பற்றி உதட்டில் வழிந்த ரத்தத்தை அழுந்த துடைத்தான்.

அவனை தள்ளி விட்டவள் தடுமாறி கீழே விழுந்த தன் தந்தையிடம் ஓடினாள். அவரை மெல்ல தூக்கி அமர வைத்தவள்,

“ஹவ் டேர் யூ ஜம்ப்! ஹீ இஸ் மை பாப்பா. நோபடி கென் டச் ஹீம். ஐ வோண்ட் அல்லவ் இட்” தன் தகப்பனை அடிப்பது யாராக இருந்தாலும் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என பொங்கி விட்டாள்.

 

“சாரிடி சமூ. உன்னை அடிக்கவும் பொங்கிட்டேன்”

“ஆர் யூ ஓகே பாப்பா?” அவரை எழுப்பி நிறுத்தி கண்களில் நீர் வழிய ஆராய்ந்தாள் அவள். பின் ஜம்புவின் அருகில் வந்து அவன் நெஞ்சிலேயே அடித்தாள்.

“டோன்ட் எவர் டூ தட் ஜம்ப்.” சொல்லி சொல்லி அடித்தாள். ஒவ்வொரு அடிக்கும் அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.

“அங்க அடிக்காதடி! அங்கத்தான் நீ இருக்க. உனக்குத்தான் வலிக்கும். யூ தேர். உனக்குத்தான் பேய்ன்”

“போடா, சன் சிங் பிங்(பைத்தியம்)” என அழுதுக் கொண்டே திட்டியவள் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

பின் விடுவித்தவள்,

“கமான் பாப்பா. லெட்ஸ் கோ” என தன் தகப்பனின் கையைப் பிடித்தாள். அவளுடன் நடக்க ஆரம்பித்தவர், திரும்பி ஜம்புவைப் பார்த்து,

“ஷீ இஸ் மை டாட்டார். நோபடி கென் டேக் ஹேர் ப்ரம் மீ. மைண்ட இட் யூ இடியட்” என நக்கல் சிரிப்புடன் சொன்னார்.

“யோ மாமா! கமிங் டைம் ஷீ யுவர் டாட்டர். நவ் கோயிங் பேக் டைம் ஷீ மை வைப். குங்குமம் வச்சி என் பொண்டாட்டியா ஆக்கிட்டேன்யா. அவளுக்காகத்தான் அவள விட்டுக் குடுக்கறேன். விதவுட் மீ ஷீ நோ ஹெப்பி, நோ லவ், நோ லைப். எப்படியும் என் கிட்ட திரும்பி வருவாய்யா! வில் கம் பேக். யூ மைண்ட் இட்” என கத்தினான்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள், ஏதோ நினைவு வந்தவளாக ஒரு பையை அவனிடம் கொடுத்தாள்.

“யுவர் ஜிப்பா. வச்சிக்கோ. ஐ நெவர் வாஷ். போறேன். நான் ஒன்ன காதலிக்கறேன். நவ் அண்ட் போரேவெர்! பாய் ஜம்ப்லிங்கம்.” என சொன்னவள் விடுவிடுவென உள்ளே போய் விட்டாள்.

உடல் இறுக அவள் போவதையேப் பார்த்திருந்தான் ஜம்பு.

“போகுதே போகுதே

என் பைங்கிளி வானிலே

நானும் சேர்ந்துப் போகவும்

சிறகு இல்லையே உறவும் இல்லையே”