KKRI 1

கண்ணனின் குரலோசை!
ராதையின் இதழோசை!

அத்தியாயம் – 1

“தீயில்லை புகையில்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே..” என்று அவளுக்குப் பிடித்த பாடலோசைக்கு தோதாக இதழை அசைத்தப்படியே லண்டன் சிட்டில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள் மதுமதி..

அவளின் கண்கள் சாலையில் மீதிருக்க அவளின் மனமோ பாடலின் வரிகளில் தன்னை தொலைக்க ஸ்டீரிங்கில் தாளம்போட்டவண்ணம் காரைப் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு நிறுவனத்தின் உள்ளே நுழைந்தாள்.

அவள் நேராக மீட்டிங் ஹாலிற்குள் நுழைய அங்கிருந்த அனைவருமே அவளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த அறை முழுவதும் அமைதி நிலவியிருக்க, ‘எல்லோரும் வந்தாச்சா?’ என்று கேட்டாள்.

“யெஸ் மேம்..” என்றாள் ஸ்டெல்லா.

அதன்பிறகு மீட்டிங் தொடங்கியது. அனைவரின் பார்வையும் அவளின் மீது நிலைத்திருக்க, அந்த ஹாலில் அமைதி நிலவியது.

நடுஹாலில் கம்பீரமாக நின்றிருந்த மதுமதி அவளைச் சுற்றிலும் அமர்ந்திருந்த ஸ்டாப் மெம்பர்களுக்கு டீம் லீடரான அவள் சில விஷயங்களைத் தெளிவு படுத்தினாள். அந்தக் கம்பெனியின் வேலைகளைப்பற்றித் தெளிவாக விளக்கம் கொடுத்தாள்.

அங்கிருந்த அனைவரும் அவளிடம் அடிக்கடி கேள்விகள் கேட்கவே அவளும் அவர்களின் சந்தேகத்திற்கு பதிலளித்தாள். தன்னுடைய கவனத்தை துளியும் சிதறவிடாமல் அவள் தெளிவாகப் பேசுவதைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.

ஜீன்ஸ் பேண்ட், மெரூன் கலர் டாப் அணிந்திருந்தவள் கூந்தலை ஒரு லப்பர் பேண்டில் அடக்கியிருந்தாள். வில்லென்று வளைந்த புருவமும், மின்னலை தேக்கிய விழிகளும், நேரான நாசியும், சிப்பி போன்ற இதழசைவில் இதயம் இடமாறித் துடித்தது.

அவள் தன்னை கவனிப்பதை உணர்த்தும் குறுஞ்சிரிப்புடன் அவனின் விழிகள் அவளை அளவெடுக்க அவனை வெட்டும் பார்வை பார்த்துக்கொண்டே மீட்டிங்கை தொடர்ந்தாள்..

‘இன்றோடு என்னோட ப்ராஜெக்ட் வொர்க் முடிந்தது.. சோ இது என்னோட கடைசி மீட்டிங்..’ என்றாள் மது

“வாட் என்ன சொல்றீங்க மது.. நீங்க இந்தியா போறீங்களா? அப்போ அடுத்த ப்ராஜெக்ட் நீங்க இங்கே பண்ண மாட்டீங்களா..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் சர்மிளா..

அவஇல்லையெனத் தலையசைக்க,

“இட்ஸ் ஓகே மேடம்..” என்றவள் அந்த அறையைவிட்டு வெளியேறினாள்..

‘மேம் உங்களோட திறமை இங்கே யாருக்கும் இல்ல.. உங்களை நாங்க மிஸ் பண்ணுவோம்..’ என்றாள் ஸ்டெல்லா நுனிநாக்கில் இங்கிலீஷ்யுடன்..

மது புன்னகைக்க, “ஹாப்பி ஜெர்னி மது..” என்றவள் அங்கிருந்து வெளியேறக் கார்த்திக் மட்டும் அமர்ந்திருந்தான்..

அவள் அவனைக் கேள்வியாக நோக்கிட, “வாவ் மதுமதி செம டேலன்ட். எவனாவது உன்கிட்ட பேசமுடியுமா? செம ஸ்பீச்டா..” என்ற கார்த்திக் அவளின் அருகில் அமர்ந்தான்.

‘நீ என்ன கவனிச்ச?’ என்றவள் இதழசைக்கவே, “நான் எதுவுமே கவனிக்கல. அதுதான் கார்த்திக்..” கெத்தாக காலரைத் தொக்கிவிட அவளின் பிபி ஏறியது

‘ஐயோ இனி இவனுக்குப் புரிய வைப்பதற்கு நான் என்ன பாடுப்பட போகிறேனோ..’ அவள் தலையில் கைவைத்து அமர்ந்திவிட்டாள்.

“சீக்கிரம் ரிலாக்ஸ் ஆகிட்டு வாம்மா. எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு..” என்றவன் அவளிடமிருந்து அறையைவிட்டு வெளியே சென்றான்.

‘இந்த ஜந்துவுக்கு என்னை டீம் லீடராக நியமித்த அந்த இத்திபோன நெல்சன் பையன் மட்டும் என்னோட கையில் கிடைத்தால் அவ்வளவுதான்..’ என்று நினைத்தவள் அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

வாழ்க்கை என்று வந்தாலே எல்லோருக்கும் ஒரு குறை இருக்கும். அவளுக்கு வாய் பேச வராது.

அவளை எல்லோரும் அனுதாபமாகப் பார்க்கவே அவளும் கொஞ்சம் கொஞ்சமாக நத்தை கூட்டிற்குள் சுருங்கும் மகளைக் கவனித்தார்.

ஒரு தாயான நிர்மலா மகளிற்கு முதலில் சொல்லிக் கொடுத்த ஒரே பாடம் யாரோட அனுதாப பார்வைக்கும் நீ அடிபணிந்து நத்தை கூட்டிற்குள் சுருங்க கூடாது.

அவரின் அந்தப் பேச்சுதான் அவளின் மனதில் விதையென விழுந்து விருச்சமானது. தன்னை அனுதாபத்துடன் பார்க்கும் நபர்களை முற்றிலுமாக வெறுத்த மதுமதி தனித்து நிற்கக் கற்றுக்கொண்டாள்.

அவர்கள் ஒரே இடத்தில் இருப்பதால் அவளிடம் இருக்கும் குறை அவனின் விழிகளுக்குப் பெரிதாக தெரியவே இல்லை என்ற காரணத்தினால் அவளுடன் இயல்பாக பழகினான்.

ஆறுமாதம் பழக்கம் என்றாலும் அவளிடம் ஏதோவொரு ஈர்ப்பை உணர்ந்தான்..

ஊமை என்ற ஒரே காரணத்தை மையமாக வைத்தவள் எதற்கும் தயங்கி நின்றது இல்லை.

அவளுக்குப் பேச மட்டுமே முடியாதே தவிர, வேலையில் அவளை மிஞ்சிவிட யாரும் இல்லை. அவள் மறுநாள் மீட்டிங்கில் என்ன பேச நினைக்கிறாளோ அதைத் தயார் செய்துவிடுவாள்.

மறுநாள் மீட்டிங்கில் அவள் சைகையில் பேசுவதை மற்றவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுவார்கள். அவளின் திறமை கண்ட நிறுவனம் அங்கே வரும் பணியாளருக்கு முதலில் கொடுக்கும் பயிற்சி சைகை பாசையே.

அவள் அன்றைய வேலைகள் ஈடுபடவே அவளின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரவே அதன் திரையைப் பார்த்தாள் மது. ‘சீக்கிரம் வீட்டிற்கு வா..’ என்று அனுப்பபட்டிருக்க, ‘சரிம்மா..’ பதில் அனுப்பிவிட்டு அவள் அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று வீட்டிற்குள் கிளம்பினாள்.

அவள் பார்க்கிங் சென்று காரை எடுக்க, “மது..” என்ற குரல்கேட்டு நின்று திரும்பிப் பார்க்க அவளை நோக்கி வந்தான் கார்த்திக்..

அவள் சிந்தனையுடன் அவனின் முகம் நோக்கிட, “ஹாப்பி ஜெர்னி மது..” என்றவன் குறும்புடன் சொல்ல அவளும் புன்னகைத்தாள்..

“நாளை நான் ஏர்போர்ட் வருவேன்..” என்றதும், ‘வா உன்னை யார் வரவேண்டாமென்று சொன்னது..’ என்றாள் சாதாரணமாகவே..

“சரி நீ வீட்டிற்கு கிளம்பு ஆண்ட்டி தேடுவாங்க..” என்று அவளை அனுப்பிவைத்தவன் தன்னுடைய காரில் வீட்டிற்குள் கிளம்பினான்..

அவளும் காரில் ஏறி வீட்டை நோக்கிப் பயணிக்க மனதில் ஏதோவொரு நெருடல். இனம்புரியாத வகையில் அவளின் இதயத்துடிப்பு அதிகரிக்க சீரான வேகத்தில் காரைச் செலுத்தினாள் மதுமதி.

தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்க அவளின் கவனம் முழுவதும் சாலையின் மீதே நிலைத்தது. மெல்ல வீடு வந்து சேர்ந்தவள் காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

“இப்போ எதுக்கு இங்க வந்திருக்கீங்க..” என்ற தாயின் குரல்கேட்டு அவளின் நடை தளர்ந்தது. அவள் வாசலில் நின்றபடியே ஹாலில் நடப்பதைக் கவனித்தாள்..

தாயின் கேள்விக்கு அவனிடம் அசைவு இல்லாமல் இருக்க, ‘ஐயோ இவரு என்னை மறந்திருப்பார் என்று நினைத்தேனே..’ என்றவளின் மனதில் கலக்கம் சூழ்ந்தது..

வீட்டின் நடுஹாலில் கம்பீரமான வீற்றிருந்தவனை நொடியில் அடையாளம் கண்டு கொண்டது விழிகள். அவனின் கருமை நிறத்திற்கு ஈடாக அவன் அணிந்திருந்த சிவப்பு சட்டை அவனின் கம்பீரத்தைப் பறைசாற்றியது.

ஆறு மாதங்கள் அவனை நேரில் காணாத விழிகள் அவனின் உருவத்தை மனப்பெட்டகத்தில் சேகரிக்க, “நான் மதுவை அழைச்சிட்டு போக வந்திருக்கேன் அத்த..” என்றான் கிருஷ்ணா..
அவனை ஆழ்ந்து நோக்கிய நிர்மலா,

“இத்தனை நாளாக இல்லாத கரிசனம் இப்போ வரக் காரணம்..” என்று அவர் மனத்தின் ஆதங்கத்தை வெளிபடுத்தவே அவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது..

அடுத்த சிலநொடிகள் அமைதியாகக் கழியவே, “நான் இங்க வரவே கூடாதுன்னு சொன்னேன்.. ஆனாலும் அவள் ஆசையோடு கேட்கும்பொழுது என்னால் மறுப்பு சொல்லவும் முடியல.. அதன் போயிட்டு வா என்று அனுப்பினேன்..” என்றவன் அவரிடம் உண்மையைக் கூறினான்..

“ரொம்ப அழகா பொய் சொல்றீங்க கிருஷ்ணா..” தந்தையைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஹாலில் அமர வைத்தவன் நிமிர்ந்து அவனை முறைத்தான்.

கிருஷ்ணாவை எரிப்பதுப் போல பார்த்தவன் வேற யாரும் இல்லங்க நம்ம மதுவின் அண்ணா விஷ்ணுதான்..

அவனின் பேச்சிற்கு வேறு அர்த்தம் கற்பித்தவன், “நீங்க என்னை தவறாகப் புரிஞ்சிகிட்டு பேசறீங்க..” என்று கிருஷ்ணா பொறுமையுடன் கூறிவே, மது செய்து வைத்த வேலையில் அவனின் வார்த்தைகளே அவனுக்கு வினையாகிப் போனது.

அவர்கள் தங்களை குற்றம் சாட்டுவதை உணர்ந்தவனுக்குள் எரிமலை வெடிக்க தன்னவள் முகத்தை மனதிற்குள் கொண்டு வந்தவன் அமைதியாக காத்தான்..

“பிறந்த வீட்டிற்கு போகதன்னு சொன்னவர் தான் அவளை ஒரே அடியாக எங்க வீட்டிற்கு அனுப்பி வெச்சிட்டிங்களே..” என்ற விஷ்ணுவின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது..

‘நான் சொன்ன பொய் மட்டும் தெரிந்தால்..’ என்றவள் கணவனின் முகத்தைப் பார்த்தபடியே வாசலில் நின்றிருந்தாள். அவள் வந்ததை அங்கே யாரும் கவனிக்கவில்லை..

விஷ்ணுவின் கோபத்தை உணர்ந்த நிர்மலா, “எதுவாக இருந்தாலும் மது வரட்டும் கேட்டுக்கலாம்..” என்றார்.

தாயின் சொல்லிற்கு கட்டுபட்டு அவன் அமைதியாகிவிட வாசலில் நிழலாடக் கண்டு நிமிர்ந்தான் கிருஷ்ணா.

அவனின் பார்வை அவளின் மீது நிலைக்கவே, “என்ன மேடம் ஆபீஸ் வொர்க் எல்லாம் ஓவரா?” என்ற ராம்குமார் மகளிடம் இயல்பாக வினாவினார். மதுவின் தந்தை.

அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நின்றிருந்த மதுவின் பார்வை அவனின் மீதே நிலைத்தது.

அவள் என்ன பதில் சொல்ல முடியும். அவன் அவளைத் தேடி வருவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அவள் தன்னைப் பார்த்துச் சிலையாக நிற்பதைக் கண்டு அவனின் முகத்தில் குறும்பு புன்னகை மலர, ‘என்னை விட்டுட்டு வந்துட்ட இல்ல..’ என்றவனின் பார்வைக்கு பதில் சொல்லத் தெரியாமல் வாயடைத்துப்போய் நின்றாள் மது..

மகள் வாசலில் நிற்பதைக் கண்ட நிர்மலா, “ஏன் மது அங்கேயே நின்னுட்ட.. நீ உன்னோட ரூமிற்கு போய் மற்ற வேலைகளைக் கவனி..” என்று அவளை அதட்டியவர் குரல்கேட்டு இருவரின் கவனமும் கலைந்தது..

“என்னம்மா கிருஷ்ணா வந்திருப்பது உனக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா?” என்று நிர்மலா மகளிடம் கேட்க அவள் பதில் பேசத் தடுமாறினாள்.

தமையனும் தங்கையின் தடுமாற்றத்தைக் கவனித்தான்.
அவள் நேராக அவளின் அறைக்குள் சென்று மறையும் வரையில் அவனின் பார்வை அவளைப் பின்தொடர்வதை உணர்ந்தாள் மது.

அந்த அறைக்கு வெளியே தாய், தந்தை இருவரும் பேசுவது அவளின் காதுகளில் தெளிவாக விழுந்தது..

“மாமா நான் மதுவை அழைச்சிட்டு போறேன். என்னால் அவளைவிட்டு இருக்க முடியாது..” என்றான் அவன் தாழ்ந்த குரலில்..

“இவ்வளவு பாசம் வெச்சிருக்கீங்க.. அப்புறம் எதுக்குத் திருமணமான ஒரே வாரத்தில எங்க வீட்டிற்கு திருப்பி அனுப்ப உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு..” என்று ராம்குமார் கேட்டதும் அதிர்ந்து நிமிர்ந்தான் கிருஷ்ணா.

திருமணம் ஆன ஒரே வாரத்தில் மகளை வாழவெட்டியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டானே என்ற கோபம் அவரின் வார்த்தையில் வெளிப்பட்டது. அவரும் ஒரு சராசரி தந்தைதானே? அவருக்கும் அந்த ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்..

விஷ்ணு அமைதியாக நின்றிருக்கவே மருமகனின் முகம் பார்த்தே மகள் தங்களிடம் கூறியது பொய் என்று உணர்ந்த நிர்மலா அமைதியாகக் கணவனின் முகம் பார்த்தார்.

“என்ன நான் அவளை அனுப்பி வைத்தேனா? உங்களிடம் அப்படி பொய் சொல்லி அவ நல்லவளாகிட்ட இல்ல..” சுறுசுறுவென்று கோபம் தலைக்கு ஏறியது..

அவனின் எரிச்சல் கண்ட ராம்குமார் தன்னருகே நின்றிருந்த மனைவியைக் கேள்வியாக நோக்கிட, “எனக்கும் ஒன்னும் புரியலங்க..” என்றார் நிர்மலா.

விஷ்ணுவின் பேச்சிற்கு இப்பொழுது தெளிவாக அர்த்தம் புரியவே, ‘ஏன் இப்படியொரு பொய் சொன்னா..’ என்றவன் மூவரையும் ஒரு பார்வை மட்டும் பார்த்த கிருஷ்ணா தன்னுடைய கோபத்தைக் கட்டுபடுத்த வெகுவாகப் போராடினான்.

ஆனால் அவன் செய்யாத பிழைக்கு அவனின் காதல் மனையாள் கொடுத்த அன்பு பரிசை அவனின் மனம் ஏற்க மறுத்தது.

அதே கோபத்துடன் இருக்கையை விட்டு எழுந்தவன், “அவகிட்ட நான் பேசணும்..” என்று பொதுவாகப் பேசிவிட்டு எழுந்து அவளின் அறைக்குச் சென்றான்.

அவன் அறைக்குள் நுழையும் வரை வெளியே நடந்த உரையாடலைக் கேட்டுகொண்டே படுக்கையில் அமர்ந்திருந்தவளின் விழியோரம் பவளம் மினுமினுத்தது அவளின் கண்ணீர் துளிகள்.

அவனின் அழுத்தமான காலடி ஓசை தன்னை நெருங்க அவளின் மனம் பந்தைய குதிரையின் வேகத்தில் ஓடத் தொடங்கியது. அவளின் அருகே சென்றவனின் கைகள் அவனின் அனுமதியின்றி அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது..

“பாளர்” என்ற சத்தம் அங்கிருந்த அனைவரையும் கதிகலங்க செய்தது.. அவனின் கைகள் தன் கன்னத்தைப் பதம் பார்க்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.

அவளோ கைகளால் கன்னத்தைப் பிடித்தபடியே சிலையென நின்றிருந்தாள்.

அந்தச் சத்தம்கேட்டு நிர்மலாவும், விஷ்ணுவும் அவனின் அறைக்கு வந்தனர். அவனிடம் இப்படியொரு கோபத்தை எதிர்பார்க்காதவன்,

“என்னோட கண் முன்னாடியே என்னோட தங்கச்சியை அடிக்கிற..” என்று அவனிடம் சண்டைக்கு வந்தான்.

அவனின் பேச்சைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. அவனின் கவனம் முழுக்க அவளின் மீதே நிலைத்தது. அவன் அடித்த அடியில் அவளின் கன்னங்கள் சிவக்கவே விழிநீர் முத்துகள் விழியிலிருந்து உதிர அவனையே இமைக்காமல் பார்த்தாள் மதுமதி..

அவளை அடித்தபிறகு தன்னோடு கையில் வலியை உணர்ந்தான் கிருஷ்ணா. விழிநீரோடு நிற்கும் மனையாளைப் பார்க்கும்பொழுது அவனின் மனமும் கலங்கத்தான் செய்தது. ஆனால் அதற்காக அவன் அமைதியாக இருந்தால் இத்தனை நாள் பிரிவிற்கும், காத்திருப்பிற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே என்றது அவனின் மனம்!

“என்னோட ஊரில் இருக்கிற எல்லோருக்குமே தெரியும்.. நீ தான் என் மனைவின்னு. அம்மா, அப்பாவைப் பார்க்கணும். அவங்கள பார்த்தும் வரேன்னு சொல்லிட்டு வந்தவ இன்று வரை வரல..” என்றவன் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நானாகத் தேடி வந்தபிறகு தானே தெரியுது.. நீ என்னைக் குற்றவாளி ஆக்கிருக்கிறன்னு..” மனம் பொறுக்காமல் கேட்டவனின் கேள்வியில் மற்றவர்கள் அதிர்ந்தனர்.

நிர்மலா தன் மகளைக் கேள்வியாக நோக்கிட, “நான் உன்னைத் தேடி வந்ததும் போதும் நீ எனக்கு வாங்கிக் கொடுத்த நல்ல பேரும் போதும்.. நான் கிளம்பறேன் குட் பாய்..” என்றவன் நொடிபொழுதில் அங்கிருந்து வெளியேறினான். மது திக்குபிரம்மை படித்தவள் போல நின்றாள்.