KM-7

KM-7

                                                7

 

“டேய் ரகு, நீ பைக் யூஸ் பண்றதே இல்லையா?” ஷெட்டிலிருந்து பழைய வண்டியை வெளியே எடுத்தான் அர்விந்த்.

“இல்ல டா. நம்ம ஊர் வெய்யிலுக்கு கார் தான் செட் ஆகும்.” ஒரு பாக்கெட்டில் தண்ணீரும் ஒரு துணியும் கொண்டு வந்தான் ரகு.

 

“என்னவோ போ. ஸ்டைலா பைக்ல போவியா, அத விட்டுட்டு வயசானவன் மாதிரி கார்ல போறேங்கற. இங்க குடு நான் தொடைக்கறேன்” அவனிடமிருந்து துணியை வாங்கி தூசி தட்டி துடைக்க ஆரம்பித்தான்.

 

ரகு தண்ணீர் ஊற்றி கழுவ, அண்ணன் தம்பி இருவரும் ஊர் கதை எல்லாம் பேசிக்கொண்டே வண்டியை தயார் செய்தனர்.

 

தாங்களும் சென்று தயாராகி, பங்கஜத்தின் வத்தல் குழம்பும, மிளகு ரசம், வெண்டைக்காய் பொரியலை  ஒரு கை பார்த்துவிட்டு, ஊர் சுற்றக் கிளம்பினார்கள்.

 

அவனுக்கு வேண்டிய உடைகள், ரகுவிற்கு வேண்டியவை என தனித் தனியாக எடுத்தான்.

 

“இந்த கலர் ட்ரை பண்ணுங்க சார்” கடையில் ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் பெண்களில் ஒருத்தி அரவிந்தின் ஸ்டைலில் மயங்கி வேண்டுமென்றே பேச்சுக்கு கொடுக்க,

 

“தேங்க்ஸ். இது எனக்கு நல்லா இருக்கும். நீங்க சரியா சூஸ் பண்ணிருக்கீங்க” என அவனும் விடாமல் பேச,

 

அவள் அவனை விடுவதாகவே இல்லை. அவன் எங்கு சென்றாலும் அங்கு வந்து உடைகளை அவனுக்கு மேல் வைத்துக் காட்ட,

 

ரகு மலைத்துப் போனான்.

 

“எங்க போனாலுமா டா?” பெருமூச்சு விட,

“நான் என்ன டா பண்றது. அதுவா வந்து பேசுது. திரும்ப பேசாம போன மனசு கஷ்டப் படுமில்ல.” இறக்கப் பட்டு பேசுவதை போல காட்டிக்கொண்டான்.

 

“நீ திருந்த மாட்ட டா. சரி வா” அவனை இழுத்துக் கொண்டு செல்ல,

பில் போடுமிடத்தில் அரவிந்தைப் பார்த்து “கல்யாணமா சார். நெறய ஷாப் பண்ணிருக்கீங்க. நாங்க டிஸ்கவுண்ட் தரோம்” என்றால் மற்றொரு பெண்,

 

 “கல்யாண மாப்பிள்ளை இவர் தான். ஆனா டிரஸ் எனக்கு” என ரகுவைக் காட்டி சிரிக்க,

 

“அடப்பாவி அப்போ கூட நீ ஹீரோ நான் காமெடியானா. தொலை” என கடையிலிருந்து அவனை இழுத்துச் சென்றான்.

 

இரவு களைத்துப் போய் வீட்டிற்கு வந்தவர்களை,

“ஏன் டா. என்னையும் கூட்டிண்டு போயிருக்கலாமோன்னோ” பங்கஜம் கேட்க,

 

“அவன் பண்ண லீலை எல்லாம் நீ பாத்திருந்தா நீ என்னை விட்டுட்டு மொதல்ல அவனுக்கு கல்யாணம் பண்ணிருப்ப” ரகு போட்டுக் கொடுக்க,

 

“என்ன டா ஆச்சு” பதறினாள் பங்கஜம்.

 

” நான் நெறையா டிரஸ் வாங்கிண்டேன். அத சொல்றார் அண்ணா” பல்கலைக் கடித்தான்.

 

“சரி சரி சாப்டேளோனோ போய் தூங்குங்கோ.” அனுப்பிவிட்டு தானும் உறங்கச் சென்றாள்.

 

அறைக்குள் வந்து அவன் உடைகள் வைக்குமிடத்தில் கவரைப் பிரித்து அடுக்கியவன், தான் வாங்கி வந்த வைரத் தோடு கண்ணில் பட,

 

“இது தான் நான் மன்னிக்கு வாங்கின ப்ரெசென்ட்” ரகுவிடம் காட்ட,

 

“ரொம்ப நன்னா இருக்கு டா அரவிந்தா”

 

“அதெல்லாம் இருக்கட்டும். எப்போ மன்னிய பாக்கலாம்”

 

“நாளைக்கே போயிட்டு வா. யார் உன்னை தடுத்தா?” அசால்ட்டாக சொல்ல,

 

“ஓ அப்படியா. சரி அப்போ மன்னிக்கு போன் பண்ணி சொல்லிடு. நாளைக்கு வரேன்னு, அந்த வாயாடிய பாத்தே ஆகணும்.”

 

அனு விற்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.

அவளோ அம்மாவிடம் கேட்டு சொல்வதாகச் சொல்லிவிட்டு,

 

“அம்மா அவரோட தம்பி ஊர்லேந்து வந்துட்டாராம். நம்மாத்துக்கு சும்மா பாக்க வரணும்னு கேட்கறார். என்ன சொல்லட்டும்” அனு தயங்கி நிற்க,

 

“என்னடி இது இப்படி கேட்கற. தாராளமா வரச்சொல்லு. எப்போ வாரானு கேட்டு சொல்லு. ஏதாவது செஞ்சு வைக்கணுமோன்னோ” வச்சு அனுமதி கொடுத்தாள்.

 

உடனே அனு, ரகுவிற்கு போன் செய்து சொல்ல, எதிர்பார்ப்போடு உறங்கினான் அர்விந்த்.

அழகாக உடையணிந்து கொண்டு தன் பைக்கில் கிளம்பினான்.

தைரியமாகவே பங்கஜத்திடம் வருங்கால மன்னியை பார்க்கப்போவதாக கூறிவிட்டு சென்றான்.

முதல் முறை என்பதால் அவளும் தடுக்க வில்லை.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

அனுவும் வச்சுவும் எப்போதும் போல சீக்கிரம் எழுந்து வேலை செய்ய, சனிக்கிழமையும் இரவு பதினோரு மணி வரை வேலை செய்துவிட்டு வந்த வைஷு தூங்கி கொண்டிருந்தாள்.

 

ரகுவிடம் கேட்டு அரவிந்தனுக்குப் பிடித்த அக்காரவடிசலுடன் சமையல் செய்து கொண்டிருந்தனர் தாயும் மகளும்.

 

சாரங்கன் அவனுக்காக காலையிலிருந்து காத்திருந்தார்.

 

“வைஷு வ எழுப்புங்கோ” என்றாள் வச்சு.

 

“அம்மா அவ தூங்கட்டும். பதினோரு மணிக்கு தான் வந்தா. பாவம். அவ இப்போ என்ன பண்ண போறா. அரவிந்த் தப்பா நினைக்கற டைப் இல்ல” அனு வழக்கம் போல அவளுக்காகப் பேசினாள்.

 

இருந்த வேலையில் வச்சுவும் அவளை பற்றி கண்டுகொள்ளாமல் விட,

 

ஒரு பத்து நிமிடத்தில் பைக்கை அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிறுத்தினான் அர்விந்த்.

 

ஆறடி  உயரத்தில் வெள்ளைக்கார தோரணையுடன் வந்து இறங்கியவனை சாரங்கனுக்கு பிடித்து விட,

 

“ஹலோ மாமா. நான் அர்விந்த் கிருஷ்ணா.ரகுவோட..” ஆரம்பிக்க,

 

“தெரியும் பா. உள்ள வாங்கோ. அனு…” என அழைத்தபடியே உள்ளே சென்றார்.

 

அனு சற்று உடையை சரி செய்து கொண்டு பவ்யமாக வெளியே வர,

 

“ஹாய் மன்னி.” என கைகுலுக்கினான்.

 

“எப்படி இருக்க.ஜெட்லாக் எல்லாம் போயிடுத்தா” சாதாரணமாக பேசினாள்.

 

ஊரிலிருந்து வந்த பிறகு ரகு பேசும்போதெல்லாம் அவ்வப்போது இவனும் வாங்கி பேசுவான். இருவரையும் ஓட்டுவதே அவன் வேலை. அதனால் அனுவும் சற்று சகஜமாகவே பேச முடிந்தது.

 

“ஜெட்லாகா.. அதெல்லாம் நான் கண்டுக்கறதே இல்லை. எப்போ தூக்கம் வருதோ அப்பப்போ தூங்கிடறேன்.” அவளுக்காக வாங்கி வந்திருந்த ஸ்வீட்பாக்ஸும் பூவும் பழமும் கொடுத்து பேச,

 

“என்ன இது பார்மாலிடீஸ் “அனு சலித்துக் கொண்டாள்.

 

“இது அம்மா வாங்கிண்டு போக சொன்னா” அழகாக சிரித்தான்.

 

“வேலை எல்லாம் அங்க எப்படி இருக்குப்பா உனக்கு?” சாரங்கன் பேச்சுக்கு கொடுக்க, வச்சுவும் வந்தாள்.

 

“வா பா. சௌக்கியமா இருக்கியா?” சிரித்த முகத்ததுடன் வரவேற்க,

 

“நன்னா இருக்கேன். நன்னா சமைப்பேள் போலிருக்கே. ஆகம் முழுக்க வாசனை.” ஐஸ் வைத்தான்.

 

“சாப்பிட்டு பாத்துட்டு நீயே சொல்லு” வச்சு மகிழ்ந்தாள்.

 

“கண்டிப்பா”

 

“அனு கொஞ்சம் வரியா.நீ மாமா கூட பேசிண்டு இருப்பா, கொஞ்சம் வேலை இருக்கு. இதோ வந்துடறோம்” என அழைத்துச் செல்ல,

 

சாரங்கன் சற்று வளவளத்தார்.

 

அவரிடம் ஒரு பார்வை வைத்துக் கொண்டே அந்த வீட்டை கண்களால் அலசினான். வைஷு எங்கே என்று தான் அவனது தேடல்.

 

‘என்னையா நீயும் எங்கப்பா மாதிரி ரம்பமா இருக்க. எங்க உன் ரெண்டாவது பொண்ணு. என்னையே கடத்தறேன்னு சொன்னாளே..!’ மனதுக்குள் தனியே பேசிக்கொண்டிருந்தான்.

 

அவனுக்கு ஏற்றார் போல் சாரங்கனுக்கு போன் வரவும் எடுத்து பேசலானார்.

 

“ஓ அப்படியா! இதோ வரேன்” என்றவர், பத்திரிகை வந்துடுத்தாம். போய் வாங்கிண்டு வந்துடறேன். இங்க தான் பக்கத்துல என்றுவிட்டு வச்சுவிடம் ஒரு குரல் கத்திவிட்டு கிளம்பினார்.

 

அனு வெளியே வந்து, “அரவிந்த் நீ வீட்டையெல்லாம் சுத்திப் பாரு. நான் உனக்குப் பிடிச்ச அக்காரவடிசல் பண்ணிண்டு இருக்கேன். பக்கத்துல இல்லன்னா அடி புடிச்சுடும்” கெஞ்சும் குரலில் கேட்கவும்,

 

“நோ ப்ராப்ளம் நீங்க பொறுமையா பண்ணுங்க. நான் இந்த போட்டோஸ் எல்லாம் பாத்துண்டு இருக்கேன்” என அங்கே சுவரில் வரிசையாக இருந்த போட்டோக்களை காட்டிச் சொல்ல,

“சரி” என்றாள்.

அனுவின் தலை மறைந்ததும் அங்கிருந்த போட்டோக்களை பார்த்துக் கொண்டு ஒரு அறையின் வாசலை கடக்க,

கால்கள் அங்கேயே ஒட்டிக் கொண்டது.

ஏதோ ஒன்று அவனை உள்ளே பார்க்கச் செய்தது. ஆர்வத்தில் அவனும் எட்டிப்பார்க்க,

அழகுப் பொற்சிலை ஒன்று முகம் மட்டும் காட்டி, போர்வைக்குள் மொத்த அழைகையும் சுருட்டிக் கொண்டு படுத்திருந்தது.

 

அந்த நேரம் அனு வர, அவன் அரை வாசலில் நிற்பதைக் கண்டு,

 

“என் தங்கை வைஷ்ணவி தான் தூங்கறா அர்விந்த். அவளை எழுப்ப தான் வந்தேன்.”

 

“ஓ! நீங்க போங்க நான் எழுப்பறேன்” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,

 

“ச்ச ச்ச .. அது நல்லா இருக்காது. நானே எழுப்பறேன்.”

 

“என்ன மன்னி, நான் என்ன வேற ஆளா? நீங்க போங்க, அக்காரவடிசல் தான் முக்கியம். நான் அவளை எழுப்பறேன்” ஏதோ சொல்லி அனுவை அனுப்ப நினைக்க,

 

“உங்க வாயாடி தங்கச்சிய பத்தி அண்ணா சொல்லிருக்கான். சும்மா ஒரு ஜெர்க் இண்ட்ரோவா இருக்கட்டுமே” சிரித்துக் கொண்டே சொல்ல,

 

அவளும் சிரித்து, ” எழுப்பினா கொஞ்சம் டென்சன் ஆயிடுவா.. அதான்” தயங்கி நிற்க,

 

“மன்னி. நான் பாத்துக்கறேன்” அவளை அனுப்பி வைத்தான்.

 

மெல்ல அடியெடுத்து வைத்து அறைக்குள்  செல்ல, வைஷு நிம்மதியாகத் தூங்கி கொண்டிருந்தாள். ஃபேன் காற்றில் அவளது கூந்தல், முகத்தில் படர்ந்து அசைந்தாடிக் கொண்டிருக்க முகம் சரியாக அவனுக்குத் தெரியவில்லை.

 

அவளது கூந்தலை மெல்ல விலக்க நினைத்து அவளை நோக்கிக் குனிந்தான்.

 

காற்றை மறைத்துக் கொண்டு அவன் அருகில் வர, அவனது சென்ட் வாசம் அவளது நாசியைத் துளைத்தது. அதை தூக்கத்திலேயே மேலும் நன்றாக இழுத்து நுகர்ந்தாள்.

 

அதைக் கண்டு மெல்லச் சிரித்தவன், தன் கையைத் பேண்ட்டில் துடைத்து கொண்டு, அவள் முகத்தில் கை படாமல் ஆள்காட்டி விரலின் நுனியால் அவளது நெற்றியில் இருந்து விழுந்த முடிக்கற்றையை மெல்ல விலக்கினான்.

 

பால் போன்ற முகம், நீண்ட இமைகளைக் கொண்டு மூடிய கண்கள், கூரான நாசி, வரைந்து வைத்தது போன்ற பஞ்சு உதடுகள் அனைத்தும் பளிச்சென அவன் கண்களில் விழ, அசந்து நின்றான் அர்விந்த்.

 

“இந்த வாய் தான என்ன அப்படி பேசுச்சு” முனகிக் கொண்டே ஆர்வத்தில் மெல்ல அதன் மேல் கை பட்டுவிட, அவள் சிணுங்கி விட்டு மீண்டும் மறு பக்கம் திரும்பி உறங்க,

அது அவனுக்கு மேலும் துணிவை வரவைத்தது. ‘என்ன செஞ்சிடுவா’ என்ற நினைப்பில் அவளது கன்னத்தில் மெலிதாக விரலை வைத்து சீண்டினான்.

 

அவளோ கன்னத்தை சொரிந்து கொண்டு விட, மீண்டும் அதையே செய்தான்.

 

இம்முறை, “என்ன புதுசா கொசு கடிக்குது” என லேசாக கண்விழிக்க,

 

கையை எடுத்துக்கொண்டு பளிச்சென சிரித்தபடி , “ஹலோ டியர், குட் மார்னிங்” என்றான் அசால்டாக.

 

ஒரு புதியவனை கண்டதும், அதிலும் தன் அறையிலேயே வந்து கன்னத்தை சீண்டியவன் என்று புரிய, பதறி எழுந்து,

 

“யார் டா நீ? இங்க எப்படி வந்த? என்ன தைரியம் இருந்த என்னை டச் பண்ணிருப்ப. பொருக்கி.” என அவள் ஆரம்பிக்கும் போதே,

 

“ஹே ஹே நிறுத்து. ஐம் அர்விந்த். அர்விந்த் கிருஷ்ணா” கையை உயர்த்தி சொல்ல,

 

“எவனா இருந்தா எனக்கென்ன. என் ரூம் க்கு எப்படி டா வந்த?” கடுப்பில் கத்தினாள்.

 

“ம்ம்ம். உங்க அக்கா தான் எழுப்ப சொன்னாங்க.” கூலாகச் சொன்னான்.

 

“வாட்? என்ன உளர்ர? அனுனு.” என கூப்பிட,

அது அனுவிற்கு கேட்டு அவள் வரும்முன்,

 

“ஹே நான் ரகு பிரதர்.”

 

“யாரு!?” கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

 

“உன் வருங்கால அத்திம்பேரோட தம்பி” புருவத்தை உயரத்திச் சொல்ல,

 

“ஓ” ஒரு நொடி தயங்கியவள்,

 

“அப்பா.. என்ன கத்து கத்துற” என அவன் பெட்டில் அமர,

 

இருந்தாலும் அவன் தன்னை சீண்டியது பொறுக்காமல்,

 

“உங்க ஊர்ல இப்படி தான் எழுப்புவாங்களா. அதுவும் முன்ன பின்ன தெரியாத பொண்ண” கலைந்திருந்த தலையை சுற்றி முடிந்துகொண்டே கேட்க

 

அவள் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையும் பேண்ட்டுமான இரவு உடை அவள் கை உயர்த்தியதால் அவளது சிறு இடையை இரவு நேரத்தில் அடித்த டார்ச் வெளிச்சம் போல பளீரென காட்டியது.

 

அரவிந்தின் கண்கள் தானாக அங்கே தஞ்சமடைய, அதை கவனித்தவள், சட்டென கூந்தலை விட்டாள். சட்டையை இழுத்து வீட்டுக் கொண்டு அவனை முறைக்க,

 

“எங்க ஊர்ல வேற மாதிரி தான் எழுப்புவாங்க. ஆனா நீ பயந்துடக் கூடாதுல. அதான் கம்மி பண்ணிக்கிட்டேன். நெக்ஸ்ட் டைம் அந்த மெதட்ல எழுப்பறேன்.. ஓகே?” நாக்கை வாய்க்குள் சுழற்றி நக்கல் பேச்சை உணர்த்தினான்.

 

“இந்த ரோமியோ வேலை எல்லாம் என்கிட்ட வேணாம். என்ன பத்தி உனக்கு தெரியாது” எரிச்சலாக அவனிடம் பேசினாள்.

 

“நல்லாவே தெரியுமே! என்னை கடத்தி கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ண போறேன்னு சொன்னவ தான நீ!” அவன் அன்று கேட்டதை சொல்லி விட,

 

வைஷு அதிர்ந்தாள். ‘இவனுக்கு எப்படி தெரிஞ்சுது. அத்திம்பேர் சொல்லிருக்க மாட்டார்’ என யோசித்துக் கொண்டிருக்க,

 

“அது..உனக்கு எப்படி தெரியும்” அவனிடமே கேட்க,

 

“அன்னிக்கு வீடியோ கால் கட் பண்ணாம பேசுனது கூட தெரியல ல” எழுந்து அவள் முன் வந்து நிற்க,

 

“நீ தான் வீடியோ கால் பண்ணினதா. அன்னிக்கு உன்னை பார்க்கவே இல்லை.”

 

“பார்த்திருந்தா..?”

 

“ம்ம்ம் பார்த்திருந்தா. அப்போவே சொல்லிருப்பேன். இது கடத்துறதுக்கு வொர்த்த இல்லன்னு” எகத்தாளமாக கூற,

 

“ஏய்” சற்று கோபமாக அவள் முன் வர,

 

வைஷு அசராமல் நின்றாள்.

“உனக்கு தைரியம் ஜாஸ்தி தான். என்கிட்டயே வா. பாக்கலாமா?”

 

“இந்த மூஞ்சியெல்லாம் பாக்க முடியாது” முகத்தை திருப்பிக் கொள்ள,

 

“பாக்க வைக்கறேன் டீ.”

 

“உன் மனசுல என்ன பெரிய ஆணழகன்னு நெனப்பா.உன்ன பாத்ததும் நான் மயங்கி விழ.”

 

அவளது முகத்தை திருப்பி, “மயங்க வெக்கறேன் டீ” சிரித்துக் கொண்டே சொல்ல,

 

“அது உன்னால முடியாது”

“ஹா ஹா, நான் லேசா தொட்டதுக்கே நீ தூக்கத்துல சிணுங்கின, அப்போ என் டச் உன்ன டிஸ்டர்ப் பண்ணுதுல்ல”

“லூசா நீ! தூங்கும் போது யார் சீண்டினாலும் டிஸ்டர்பா தான் இருக்கும்” அவள் சொல்லி முடிக்க

 

அவளை நெருங்கி வந்து உதட்டைப் பிடித்து பேசவிடாமல், “இப்போ டிஸ்டர்ப் ஆகாம எப்படி இருக்கன்னு பாக்கறேன்”.

 

அவனது வாசமோ, அல்லது தொடுகையோ ஏதோ ஒன்று அவளை நிதானமாக இருக்க விடாமல் செய்ய,

அவனை தள்ளி விட்டவள்,

“நீ இப்படி எல்லாம் தொட்டு பேசுனா அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்”  முறைக்க,

 

“அப்போ டிஸ்டர்ப் ஆகுது”

 

“இல்ல”

 

“சரி போக போக பாப்போம்.”

 

“பாக்கலாம்.” அவளை விட்டு தள்ளி நின்றான்.

 

“வைஷு” அனுவின் குரல் கேட்க,

 

“எங்க அக்கா கிட்ட சொல்றேன் இரு. உன்னோட கேவலமான பிஹேவியர” வேகமாக நடக்க முயன்றவளை, ஒரு கையால் பிடித்து தடுக்க,

 

“அப்போவே நெனச்சேன். நீ சின்ன பிள்ளை மாதிரி  அப்பா கிட்ட சொல்றேன் அக்கா கிட்ட சொல்றேன்னு கெளம்புவனு. உங்கிட்ட சேலன்ஞ்  பண்ணது தப்பு. நீ எனக்கு ஈகுவல் இல்ல. போ வாபஸ் வாங்கிக்கறேன்” அவன் அப்படி சொல்லவும் அவளுக்கு ஈகோ இடிக்க,

 

“ஹே யாரு சின்ன பொண்ணு. உன்ன நானே ஹேண்டில் பண்ணிடுவேன். அப்பறம் அம்மா அப்பா ன்னு அழுதுட்டு ஓடிடுவ.” அவன் கையை உதறிவிட்டு சொல்ல,

 

“அப்படியா. அப்போ இது நமக்குள்ளயே இருக்கட்டும். ஜென்டில் மேன் அண்ட் வுமன் அக்ரீமெண்ட்” எனவும்,

 

சாதாரணமாக தோளைக் குலுக்கி, “டீல்” என்று விட்டு சென்றாள்.

 

அதற்குள் அனு வந்துவிட, “எழுந்துட்டியா, போய் குளிச்சு ரெடியாகி வா, சாப்பிடலாம். வா அர்விந்த் எல்லாம் ரெடியா இருக்கு”.

 

“எல்லாரும் வரட்டும் சாப்பிடலாம்” பொதுவாக கூறினாலும் வைஷுவைத் தான் குறிப்பிட்டான்.

 

“அப்பா வர லேட் ஆகும். நீ வா” அனு சாரங்கனை சொல்வதாக நினைத்து சொல்லி  அழைத்துச் சென்றாள்.

 

வைஷுவைப் பார்த்து கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தத்தை தந்தவன் அனுவின் பின்னே சென்றான்.

வைஷுவும் கையை தூக்கி அடிப்பது போல செய்தவள், அன்று அவன் செல்லும் வரை அவனை கோபப் பார்வையால் எரித்தாள்.

அவனோ பெயருக்கு ஏற்றார் போல கிருஷ்ணனாக சிரித்துக் கொண்டே அவளை எதிர்கொண்டான்.

 

“உன்னை கல்யாணத்துல வெச்சு செய்யறேன் டா. அழுதுட்டு ஆஸ்திரேலியாக்கே ஓடனும். அது வரை விட மாட்டேன். வைஷுவ தொட்டுட்ட. உன் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்..” கிளம்பும் முன் அவனை எச்சரிக்க,

“பேபி, எந்த பொண்னும் என்கிட்டே மயங்காம இருந்ததே இல்ல. நீயும் அப்படி தான். உன்ன என் பின்னால சுத்த வைக்கறேன். இந்த கல்யாணம் முடியறதுக்குள்ள.” ஸ்டைலாக தன் பைக்கை ஓட்டிச் சென்றான்.

தன்னிடம் வழியும் பெண்களை விட எதிர்த்து நிற்கும் பெண்ணைத் தான் அவனும் தேடிக் கொண்டிருந்தான். கேல்ஸி மற்றும் அந்த பக்கத்து வீட்டுப் பெண்ணை போல் அல்லாமல் இவள் வழியாமல் மல்லுக்கு நிர்ப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அவளை இன்னும் சீண்ட வேண்டும் என்று ஆவல் வந்தது. 

error: Content is protected !!