KM6

KM6

 6

 

“வச்சு நம்ம வைஷு தான் டீ மாப்பிள்ளைக்கு நகை வாங்கிண்டு வந்தா” சாரங்கன் விஷயத்தை சொல்ல,

 

“நல்ல காரியம் பண்ண டீ வைஷு. கண்டிப்பா நாம போடலானா அசிங்கமாகிருக்கும். அந்த மாமி கொஞ்சம் பவுசு எதிர்பார்க்கறா.” வச்சு குடும்பத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

 

“நம்மள விட அவா தான் உசத்தின்னு காட்டிக்கணும்னு நெனைக்கறா” வைஷு முனகினாள்.

 

“மொதல்ல அவாளும் வாங்கலையாம் மா. இவர் தான் அன்னிக்கு காத்தால நெனச்சுண்டு பொய் வாங்கினாராம். ஆனா வைஷு ஆன் தி ஸ்பாட்ல பண்ணது பெரிய விஷயம்” அனு பாராட்ட,

 

“நான் சொல்றத யார் நம்புனீங்க. அன்னிக்கு பந்தீல உக்காந்துண்டு சாம்பார் கொண்டா, பாயசம் கொண்டா, இன்னும் கொஞ்சம் வடாம் போடுன்னு சொல்லிட்டு நாம்ம கிட்ட வந்து அது சொத்தை இது சொள்ளன்னு கம்பளைண்ட் பண்றா. அந்த மாமிய நான் டீல் பண்ணிக்கறேன்.என்கிட்டே விடுங்கோ” வைஷு வீம்பாக நிற்க,

 

“ஹேய் வைஷு. அப்படி எல்லாம் எதுவும் பண்ணாத. நீ அன்னிக்கு அவா கிட்ட ஸ்வீட் கேட்டேளே ன்னு சொன்னப்பவே பிரச்சனை வருமோன்னு பயந்தேன். நீ கல்யாணம் முடியற வரை கொஞ்சம் வாய மூடிண்டு இரு” வச்சு பதறினாள்.

 

“என்ன வச்சு நீயே இப்படி பேசற. எல்லார்கிட்டயும் தைரியமா பேச சொல்லி வளத்ததே நீ. இப்போ நீயே பேசாத ன்னு சொல்ற. அவ ஒன்னும் தப்பா பேசலையே. அவாளோட வீம்பு பேச்சுக்கு பதில் கொடுத்தா. அவ்ளோ தான்” சாரங்கன் மகளின் பக்கம் நின்றார்.

 

“அப்படி சொல்லு பா”

 

“ஏன் உங்க ரெண்டு பேருக்கும் அனு நன்னா இருக்கறது புடிக்கலயா?” வச்சு ஆத்திர பட,

 

“அம்மா.. நீ ஏன் மா பயப்படற. அத்திம்பேர் அப்படி எல்லாம் விட்டுட  மாட்டார். அனு அவர் பொறுப்புன்னு நான் சொல்லிருக்கேன்” வைஷு கொதிக்க,

 

“ஆமா நீ பெரிய மனுஷி. நோக்கு தெரியாது வைஷு”

 

“சரி மா. நோக்கும் வேண்டாம் நேக்கும் வேண்டாம். நான் டெரெக்டா அவா கிட்ட மல்லுக்கு நிக்க மாட்டேன். போதுமா” வைஷு எதையோ யோசித்து சொல்ல,

 

“என்ன டீ ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கு” அனு சிரித்துக் கொண்டு கேட்க,

 

“ஆமா. என்னோட டீலிங்கே தனி. டோன்ட் ஒர்ரி. கல்யாண வேலைய பார்ப்போம்” வைஷு சபையைக் கலைத்துச் சென்றாள்.

 

“ஆமா இன்னும் சரியா சொல்லப் போனா ரெண்டரை மாசம் தான் இருக்கு. மண்டபம் புக் பண்ணனும், சமையலுக்கு யாரைச் சொல்லலாம்? அவா வேற ஸ்பெஷலா சொல்லிட்டு போயிருக்கா வேற தளிகை பண்றவன வரச்சொல்லுங்கோன்னு”

 

“வச்சு என்னத்துக்கு டீ டென்க்ஷன் ஆகற. நம்ப ஸ்ரீரங்கம் கோபு வ வரச்சொல்லுவோம். இப்போ எல்லார் கல்யாணத்துலையும் அவன் தான் ஜமாய்க்கறான்.” சாரங்கன் ஞாபகப் படுத்த,

 

“ஆமா சரியா சொன்னேள். கோபு வுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கோ. அப்புறம் நேர்ல பத்திரிகை குடுத்து அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடுவோம்” கோபு வின் பெரியரைக் கேட்டதும் முகம் மலர்ந்தது வச்சுவுக்கு.

 

“பத்திரிக்கை நாளைக்கே அடிக்க குடுத்துடறேன். நாள் பாத்து வெச்சுட்டேன்” வெளி வேலைகளை தான் எடுத்துக் கொண்டார் சாரங்கன்.

 

“உங்க அண்ணாவையும் கூட்டிண்டு போங்கோ. அவருக்கு தான் எங்க யார் பேர போடணும் னு தெரியும். ஆச்சாரியன் பேரையும் மறக்காம போட சொல்லுங்கோ” வழக்கம் போல அனைத்தையும் தெளிவு படுத்தினாள்.

 

“மத்த வேலை எல்லாம் நாங்க டிவைட் பண்ணி தரோம்” வைஷு பிரஸ்தாபித்தாள்.

 

அத்தை மாமா பாட்டி தாத்தா என சொந்த பந்தங்கள் அனைவருக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக் கொண்டது.

 

வச்சுவின் தாயார் இன்னும் கிராமத்தில் தான் இருந்தார். எண்பது வயதை கடந்துவிட்டதால் அவரை நிச்சயத்திற்கு வரவேண்டாம், கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பே கூட்டி வருமாறு வச்சு தன் அண்ணனிடம் கூறியிருந்தார்.

 

பப்பி பாட்டி வந்தால் தான் என்ன என்ன க்ரமமாக செய்ய வேண்டும் என பட்டியல் போடுவாள். அவள் பெயர் பத்மினி.

பேரன் பேத்திகள் பேச்சு வரும் மழலையில் அவளை பம்மி பாட்டி என்று அழைத்து நாளடைவில் அது பப்பி பாட்டி ஆனது.

 

பாட்டி வச்சுவுக்கும் மேல். அனைவரையும் ஆட்டி வைத்து விடுவாள்.

அவளது வரவை ஆவலாக எதிர் பார்த்தாள் வைஷு.

 

வைஷுவுக்கு பாட்டி என்றால் உயிர். பாட்டி தான் அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். ஒருவரை பார்த்தவுடன் கணிப்பது, பேச்சால் மடக்குவது அனைத்தும் வைஷுவுக்கு பாட்டியின் சொத்து.

 

இதே போல பாட்டிக்கு செல்லப் பேரனாக ஒருவன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான். அரவிந்த் கிருஷ்ணா. இந்த பெயரை வைத்ததே அவன் பாட்டி தான். வேணுவின் தாயார்.

 

“உங்க அம்மா என்ன பண்ணிடுவா. நீ போய்ட்டு வா” என சொல்லியே அரவிந்துக்கு அவன் தாய் மேல் பயமில்லாமல் ஆக்கிவிட்டாள். பங்கஜமும் ஒரு காலத்தில் மாமியாருக்கு பயந்து வாழ்ந்தவள் தான்.

அவர் இறந்ததும் ஆட்சி இவள் கைக்கு வந்தது. வந்து என்ன பிரயோஜனம்?

பிள்ளைகள் பெரிதாகி விட்டனர். அவளையே அடக்கும் அளவுக்கு. அதனால் வேணுவிடம் மட்டும் தான் அனைத்தும்.

 

விசிலடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். கார் சாவியை அங்கிருந்த மேசை மீது தூக்கி எரிய, பின்னால் வந்தனர் கெல்சியும்  அவளது பாய் ப்ரெண்டும்.

 

“ஹே டூட்! ஆர் யு லீவிங் டுமாரோ?” கெல்சி கேட்க,

 

“ஆமா கெல்சி. நீங்க தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் செய்யணும்” இருவரையும் பார்த்து ஆங்கிலத்தில் பேசினான்.

 

” ஷூர். நாங்களும் வரலானு நெனச்சோம் ஆனா, ஜெர்ரிக்கு நெறய்ய வேலை இருக்கு. டோன்ட் மிஸ்டேக்” அவன் கையைப் பிடித்துக் கொண்டு வருந்தினாள் கெல்சி.

 

“வாட் டு டூ. ஐ வில் மிஸ் யூ கைஸ்” பொய்யாக வருத்தம் தெரிவித்து

‘தாயே நீ வராம இருக்கறதே நல்லது. அங்கேயும் வந்து என் கைய புடிச்சு தொங்குனா, எனக்கு ஊர்ல ஒருத்தனும் பொண்ணு குடுக்க மாட்டான்.’  ஆனந்தமாக தன் உடமைகளை எடுத்து வைக்கலானான்.

 

அண்ணனுக்காக அழகிய கோட் ஒன்றை வாங்கி இருந்தான். அத்துடன் வருங்கால மன்னிக்கு பரிசளிக்க பிளாட்டினத்தில் வைரம் பதித்த தோடு ஒன்றையும் வாங்கியிருந்தான்.

 

பத்து வருடங்கள் கழித்து இந்தியா செல்கிறான். அவன் ப்ளஸ் டூ முடித்தவுடன் அவனை இங்கு அனுப்பி படிக்க வைத்தனர். இங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆகி இருந்தான்.

 

ரகு அமெரிக்காவில் வேலை கிடைத்து சென்ற போது அங்கே இரு முறை சென்று அவனுடன் லீவைக் கழித்தான். ஆளே அடியோடு வெள்ளைக்காரன் போல மாறியிருந்தான்.

 

என்னன்னவோ ஆசைகள், மொத்தமாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான். வைஷு வேறு அவ்வப்போது கண் முன் வந்து செல்ல, ஹார்மோன்கள் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.

 

அவளை வம்பிழுக்க!

 

இரண்டு மாத விடுமுறை மூன்றாக வேறு கிடைத்திருக்க, முன்கூட்டியே கிளம்பினான்.

 

ரகுவிற்கு போன் செய்து ஏர்போர்ட் வந்து விடுமாறு சொல்லிருந்தான்.

 

இந்தியா செல்லும் விமானம் அவனை ஏற்றிச் செல்ல காத்திருந்தது.

கெல்சிக்கும் ஜெர்ரிக்கும் அணைத்தபடி விடை கொடுக்க,

 

மறுநாள் அதிகாலையில் இந்திய மண்ணில் தரையிறங்கியது விமானம்.

 

“டேய் ரகு!” ஓடி வந்து ரகுவை அனைத்துக் கொண்டான்.

 

பின்னால் பங்கஜமும் வேணுவம் நிற்க, இருவரையும் தோளோடு அணைத்துக்கொண்டான்.

 

“என்ன டா கிச்சா. அம்மா அப்பா வ பாக்க இத்தனை வருஷமா!” வேணு சற்று கண் கலங்கினார்.

 

 

“அப்பா என்ன இது கொழந்த மாதிரி” அர்விந்த் அவரை கட்டியணைத்து சமாதானம் செய்ய, அவனுக்கும் அந்த வலி உள்ளே இருக்கத் தான் செய்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

 

“நீங்க என்னத்துக்கு இப்போ கொழந்தைய கஷ்டப் படுத்தறேள்” கரகரத்த குரலில் பங்கஜமும் கேட்க,

 

“அட அம்மா நீயுமா!” அவரையும் தோளில் கை போட்டு அழைத்து சென்றான்.

 

“சரி சரி இன்னும் மூணு மாசம் இங்க தான இருக்கப் போறான். பொறுமையா அழுதுக்கலாம். இப்போ வாங்க ஆத்துக்கு போகலாம்” ரகு தன்னுடைய வண்டியில் அரவிந்தின் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சொல்ல,

 

“இந்தியா வந்தா தான் ஏதோ ஒரு உரிமை வந்த மாதிரி இருக்கு. ஹே எங்க ஏரியா டா ன்னு நெஞ்ச நிமித்தி நடக்கணும் போல இருக்கு. அங்க ன்னா எப்போ என்ன  நடக்கும் னு பாத்துக்கிட்டே இருக்கணும். என்ன தான் சொல்லு, சொந்த ஊரு சொந்த ஊரு தான்.

சும்மாவா சொன்னாங்க, அசலூருக்கு போனா அசஞ்சு குடுக்கணும், சொந்த ஊர்ல இருந்தா சோறு திங்கணும் னு”

 

 பங்கஜமும் வேணுவும் சிரிக்க,

“என்ன டா கருமம் பழமொழி இது. யார் சொன்னா!?” ரகு விழுந்து விழுந்து சிரித்தான்.

 

“இது மாதிரி நெறையா இருக்கு. எங்க ஊர்ல ஒருத்தன் எப் எம் நடத்தறான். இப்படி தான் மொக்க ஜோக் சொல்லி அப்பப்ப எல்லாரையும் சிரிக்க வைப்பான். உங்களுக்கும் ஒன்னு ஒண்ணா சொல்றேன்” சிரிக்க வைத்தே வீடு வரை கூட்டி வந்தான்.

 

ரொம்ப நாளைக்கு பிறகு வீட்டிற்குள் வந்தவன், நிம்மதியாக உணர்ந்தான்.

 

அவன் சென்ற பிறகு வீட்டை சில மாறுதல்களுடன் மாற்றி அமைத்திருந்தான் ரகு. அவ்வப்போது வீடியோ காலில் பார்த்தாலும் இப்போது தான் நேரில் பார்த்து அனுபவிக்கின்றான்.

 

 

 

“குளிச்சுட்டு வந்து சாப்டுட்டு ரெஸ்ட் எடு டா. நான் உனக்கு சூடா இட்லி பண்ணி தரேன்.” பங்கஜம் மகனுக்காக சுறுசுறுப்பாக அனைத்தும் செய்ய,

 

“அம்மா எனக்கு கொத்தமல்லி சட்னி கூடவே கொஞ்சம் மொளகாப் பொடி நல்லெண்ணெய் விட்டு கொண்டு வா” பத்து நிமிடத்தில் குளித்து ஷார்ட்ஸும் டிஷர்ட்டுமாக வந்து நின்றான்.

 

ஆவி பறக்க இட்லியும் அவன் கேட்ட மற்றவைகளும் வர, ஐந்தாறு உள்ளே தள்ளினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான டிபன்.

காபியை எடுத்துக் கொண்டு பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க,

 

பக்கத்து வீட்டு பால்கனியில் ஒரு பெண் படித்துக் கொண்டிருந்தாள்.

 

இவனைப் பார்த்ததும், அவளது கண்கள் விரிய , மீண்டும் மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள்.

 

இவனும் அதை கவனிக்க,

“ஆண்டவா வந்ததுமே கருணை காட்றியே. காட் இஸ் கிரேட்” வாய்க்குள் முனகி விட்டு,

 

“ஹாய் பேப்” என்றான் சாதாரணமாக,

“நீங்க தான் பங்கஜம் மாமி ரெண்டாவது பையனா!” அப்பெண் சற்று வழிய,

 

“ம்ம் ஆமா. உன் பேர் என்ன?”

 

” அக்க்ஷயா ” புத்தகத்தை ஒரு ஓரம் கடித்துக் கொண்டே அவனைப் பார்த்து வெட்கத்தில் நெளிந்தாள்.

 

“டேய் அரவிந்தா , வந்ததுமே ஆரம்பிக்காதா. இது இந்தியா. கொஞ்சம் ஏமாந்த அந்த பொண்ணையே கட்டி வெச்சிடுவா” ரகு பின்னால் வந்து குரல் கொடுக்க,

 

“சே சே இதெல்லாம் சும்மா டா. பக்கத்து வீட்டுல பொண்ணு இருந்தா பார்க்கணும். அப்போ தான் லைஃப் ஜாலியா போகும்”

 

“அது சரி” பெருமூச்சு விட்டு , வா உனக்கு நிச்சயதார்த்தம் போட்டோஸ் வீடியோஸ் காட்றேன். அப்புறம் கொஞ்சம் தூங்கு” அவனை அழைத்து சென்று ஆல்பம் காட்டினான்.

 

அனைத்திலும் அவன் கண்ணைக் கவர்ந்தது வைஷு தான் .

“இது தானே அந்த வாயாடி!”

 

“ஹா ஹா ஆமா!” ரகு ஆமோதிக்க,

 

“ஹே மன்னிய ஒரு இடத்துக்கு வர சொல்லு மீட் பண்ணலாம். அப்டியே இந்த பொண்ணையும் துணைக்கு கூட்டிட்டு வர சொல்லு” ஆர்வமானான் அர்விந்த்.

 

“டேய், நீ நெனைக்கற மாதிரி இந்த பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி கிடையாது அவ. சரியான ஷார்ப்பு.”

 

“அட அதையும் தான் பார்ப்போமே. எவ்ளோ ஷார்ப்பா குத்துதுன்னு. அன்னிக்கு என்னையே கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னவளாச்சே.” விஷமமாக சிரிக்க,

 

“அனு வெளில வருவாளா தெரியல. கேட்டுப் பார்க்கறேன். இல்லனா நீ அவாத்துக்கு போய் பார்த்துட்டு வாயேன்.” சற்று இடைவெளி விட்டு “அனு வ” என்றன் ரகு.

 

 

“இது கூட நல்ல ஐடியா தான். லெட்ஸ் பிளான் சம்டைம். அதுசரி நீ இன்னும் மன்னிய வெளில கூட்டிண்டு போகவே இல்லையா”

 

“எங்க டா. கூப்டா வரமாட்டேங்கறா”

 

“கரென்சிய செலவு பண்ண தெரியாதவனும்

பியான்சிய வெளிய கூட்டிட்டு சுத்தாதவனும்

நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை”

 

ரஜினி போல பேசிக்காட்ட, 

 

“பேசாம படு டா” என அவன் தலையில் செல்லமாக அடித்துவிட்டு சென்றான் ரகு.

 

உண்ட மயக்கம் ஜெட்லாக் எல்லாம் சேர்ந்து அவனை இழுக்க, நன்றாக குப்புறப் படுத்து உறங்கி போனான்.

error: Content is protected !!